புதிய பதிவுகள்
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm

» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jun 06, 2024 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jun 06, 2024 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
Netaji - நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 5 Poll_c10Netaji - நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 5 Poll_m10Netaji - நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 5 Poll_c10 
69 Posts - 58%
heezulia
Netaji - நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 5 Poll_c10Netaji - நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 5 Poll_m10Netaji - நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 5 Poll_c10 
41 Posts - 34%
T.N.Balasubramanian
Netaji - நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 5 Poll_c10Netaji - நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 5 Poll_m10Netaji - நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 5 Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
Netaji - நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 5 Poll_c10Netaji - நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 5 Poll_m10Netaji - நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 5 Poll_c10 
5 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
Netaji - நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 5 Poll_c10Netaji - நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 5 Poll_m10Netaji - நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 5 Poll_c10 
111 Posts - 59%
heezulia
Netaji - நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 5 Poll_c10Netaji - நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 5 Poll_m10Netaji - நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 5 Poll_c10 
62 Posts - 33%
T.N.Balasubramanian
Netaji - நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 5 Poll_c10Netaji - நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 5 Poll_m10Netaji - நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 5 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
Netaji - நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 5 Poll_c10Netaji - நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 5 Poll_m10Netaji - நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 5 Poll_c10 
7 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்


   
   

Page 5 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 27, 2008 2:12 am

First topic message reminder :

Netaji - நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 5 Netaji10

பிறப்பு:  ஜனவரி 23, 1897

மறைவு: ஆகஸ்ட் 18 1945


#நேதாஜி #சுபாஸ் #சந்திரபோஸ் #சுதந்திரம் #இந்திய_சுதந்திர_போராட்டம் #நேதாஜி_சுபாஸ்_சந்திரபோஸ் #சுபாஷ்_சந்திர_போஸ் #Subhash_Chandra_bose #Netaji

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 18, 2015 12:59 am

கல்கத்தா காங்கிரஸ்

1920 ஆகஸ்ட் 1ம்தேதி நள்ளிரவு 12.40க்கு திலகர் மறைந்தது இந்திய அரசியல் வானில் ஈடு செய்ய முடியாததோர் இழப்பை ஏற்படுத்தியது.

செப்டம்பர்(1920) 4 -9 தேதிகளில், கல்கத்தாவில் காங்கிரஸின் சிறப்பு மகாநாடு நடைபெற்றது. இந்த மகாநாட்டுக்கு லாலா லஜபதி ராய் தலைமை வகித்தார். இந்த மகாநாட்டில்தான் ஒத்துழையாமை இயக்கத்துக்கான முன்மொழிவு வரையப்பட்டது. காந்தி எழுதிய தீர்மானம், பஞ்சாப், மற்றும் கிலாபத் (துருக்கி கலிபாவின் அதிகாரப்பறிப்பு) அநீதிகளுக்கு எதிராகவே இந்த ஒத்துழையாமையைக் குறிப்பிட்டது. அன்னி பெசண்ட், மாளவியா, விஜயராகவாச்சாரியார், மோதிலால் நேரு, ஜின்னா ஆகியோர் சுயராஜ்யக் கோரிக்கையை முன்வைக்க வேண்டும் என்று குரல் எழுப்பினார்கள். இது ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்த ஒத்துழையாமையை முழுமனத்துடன் கடைப்பிடித்தால், நிச்சயம் ஒரு வருஷத்துக்குள் சுதந்திரம் கிடைத்துவிடும் என்று காந்தி கூறினார். தீர்மானம் நிறைவேற்றுவது மட்டும் போதாது, நாளுக்கு நாள் அதிகமாக, அதைக் கடைப்பிடிக்க வேண்டும். இதற்கு அபரிமிதமான கட்டுப்பாடும், தன்னல மறுப்பும் தேவை. வெல்லப்பட்ட தேசத்துக்கு வென்றவர்கள் தரும் சலுகைகள் எதுவும் முன்னவர்கள் நலனுக்காக அல்ல என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றார் அவர்.

கவுன்சில் நுழைவு பற்றி இப்போது அவர் சொன்ன கருத்து:

இப்போது நம் முன்னுள்ள கேள்வி, நாம் சுயராஜ்யம் பெறுவதற்கு, கவுன்சிலில் நுழைவது உதவுமா, உதவாதா என்பதே. பிரிட்டிஷார் மீது நமக்கு அவநம்பிக்கை இருக்கிறது, அவர்கள் தங்கள் அராஜகச் செயல்களுக்கு வருந்தவில்லை, என்று வைத்துக்கொள்வோம். அப்போது, கவுன்சிலில் பிரவேசித்து அவர்களுடன் ஒத்துழைத்தால் மட்டும் நமக்கு அவர்கள் சுயராஜ்யம் பெற உதவுவார்கள் என்று எப்படி நம்புவது? உள்ளபடியே, கவுன்சிலில் நாம் நுழைவதனால் நம் மீது அவர்கள் பிடி இறுகினாலும் இறுகலாம

காந்தியின் கருத்துக்களைக் கொண்ட இந்தத் தீர்மானத்தை பிபின் சந்திர பாலரும் தேசபந்து சித்தரஞ்சனதாசும் எதிர்த்தார்கள். அவர்கள் கொண்டுவந்த திருத்தத் தீர்மானப்படி, காங்கிரசின் கோரிக்கைகளை வைத்து இங்கிலாந்துக்கு ஒரு தூதுக்குழு அனுப்ப வேண்டும். இதற்கிடையில் தேசியக்கல்வி நிலையங்கள், தீர்ப்பாயங்கள் (arbitration courts)அமைக்க வேண்டும். அவர்கள் எண்ணம், கவுன்சில்களில் பிரவேசித்து அங்கு முட்டுக்கட்டைகள் போடுவது என்பது ஆகும். இதன் உண்மையான விளைவு போராட்டம் அடுத்த தேர்தல் வரை ஒத்திவைக்கப்படும் என்பதே ஆகும். காந்தியின் தீர்மானம் 1855:873 என்ற வாக்கு விகிதத்தில் வெற்றி பெற்றது.

ஒத்துழையாமையை ஏற்றுக்கொண்டு வாக்களித்த அத்தனை பேரும், அகிம்சை, தன்னல மறுப்பு மற்றும் கட்டுப்பாடு என்ற கொள்கைகளை ஏற்றுக்கொண்டிருக்கிறோம். எனவே,எதிர்ப்பாளர்களிடம், மரியாதையாகவும், நியாயமாகவும் நடந்துகொள்ள வேண்டும் என்றார் காந்தி.. வாக்கெடுப்பில் தோற்றவர்களோ, நேர்மையான முறையில் தோல்வி அடைந்திருக்கிறார்கள். அவர்கள் இந்த ஒத்துழையாமை இயக்கத்தை அதி தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். ஒத்துழையாமை இயக்கத்தின் அனைத்துக் கட்டங்களையும், வக்கீல்களோ, மெத்தப் படித்தவர்களோ கடைப்பிடித்து நடத்தவேண்டுமென்று நம்பவில்லை. போராட்டத்தின் இறுதிக் கட்டங்களில் அதிக அளவில் பாமரர்கள் கலந்து கொள்வார்கள் என்றே நம்புகிறேன். என்றார் திட்டத்தின் விவரங்களை விளக்கிய காந்தி.



Netaji - நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 18, 2015 4:11 pm

நல்ல பகிர்வு சிவா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 18, 2015 4:12 pm

M.Saranya wrote:மிக அருமை.
எவ்வளவு அறிந்தாலும் அவருடைய இறப்பு குறித்த தகவல் மர்மமாகவே உள்ளது.
அவர் உயிரோடிரிந்திருந்தால் தன்னை மீண்டும் இந்தப்போராட்டத்தில் ஈடுபடுத்தி கொண்டிருப்பார்.
அவர் நிலை என்ன ஆனது என்றே தெரிய வில்லை.
மேற்கோள் செய்த பதிவு: 1089273


நிஜம் சரண்யா.....ஆமாம் சரண்யா எங்கே?................கொஞ்சநாளாய் ஆளைக்காணலை ? சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34992
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon May 18, 2015 4:41 pm

krishnaamma wrote:
M.Saranya wrote:மிக அருமை.
எவ்வளவு அறிந்தாலும் அவருடைய இறப்பு குறித்த தகவல் மர்மமாகவே உள்ளது.
அவர் உயிரோடிரிந்திருந்தால் தன்னை மீண்டும் இந்தப்போராட்டத்தில் ஈடுபடுத்தி கொண்டிருப்பார்.
அவர் நிலை என்ன ஆனது என்றே தெரிய வில்லை.
மேற்கோள் செய்த பதிவு: 1089273


நிஜம் சரண்யா.....ஆமாம் சரண்யா எங்கே?................கொஞ்சநாளாய் ஆளைக்காணலை  ? சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1137182

அவருடைய 20/9/2014 பதிவுக்கு,  இன்று பின்னூட்டமிட்டுவிட்டு , இன்று அவரை தேடுகிறீர்கள்

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை நீங்கள் உடனே  பின்னூட்டம் இடாததால் , உங்கள் மேல் கோபமாம் !  

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 18, 2015 5:10 pm

T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:
M.Saranya wrote:மிக அருமை.
எவ்வளவு அறிந்தாலும் அவருடைய இறப்பு குறித்த தகவல் மர்மமாகவே உள்ளது.
அவர் உயிரோடிரிந்திருந்தால் தன்னை மீண்டும் இந்தப்போராட்டத்தில் ஈடுபடுத்தி கொண்டிருப்பார்.
அவர் நிலை என்ன ஆனது என்றே தெரிய வில்லை.
மேற்கோள் செய்த பதிவு: 1089273


நிஜம் சரண்யா.....ஆமாம் சரண்யா எங்கே?................கொஞ்சநாளாய் ஆளைக்காணலை  ? சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1137182

அவருடைய 20/9/2014 பதிவுக்கு,  இன்று பின்னூட்டமிட்டுவிட்டு , இன்று அவரை தேடுகிறீர்கள்

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை நீங்கள் உடனே  பின்னூட்டம் இடாததால் , உங்கள் மேல் கோபமாம் !  

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1137188

இல்லை ஐயா, நான் நேதாஜி பத்தி படிக்கவே உள்ளே வந்தேன், வந்த இடத்தில் சரண்யா பதிலும் பார்த்தேன், உடனே அவங்க நினைவு வந்தது, அது தான் காணுமே என்று கேட்டேன் புன்னகை .ஆமாம் 1 வாரமாகவே நம் ஈகரை இல் "ஈ" அடிக்கிறதே ஏன்? அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை போட்ட கதைக்கு பின்னுட்டம் போட கூட ஆள் இல்லை சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34992
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon May 18, 2015 5:30 pm

நான் ஏற்கனவே உங்களுக்கு சொல்லி இருக்கிறேனே
கதைகள் பக்கம் நான் வருவதில்லை என்று .புன்னகை புன்னகை புன்னகை

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 18, 2015 6:00 pm

T.N.Balasubramanian wrote:நான் ஏற்கனவே உங்களுக்கு சொல்லி இருக்கிறேனே
கதைகள் பக்கம் நான் வருவதில்லை என்று .புன்னகை புன்னகை புன்னகை

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1137202

ம்.. தெரியும் ஐயா, அது தான் மற்றவர்களை எதிர்பார்த்திருக்கேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 12, 2015 11:56 pm

 ஒரே ஆண்டில் சுதந்திரம்!

சுயராஜ்யமா? ஒரு வருஷத்திலா? ஹெஹே என்று பலரும் எள்ளி நகையாடினார்கள்தான். காந்தி சொன்னார்:If என்று சொல்லி நான் போட்ட நிபந்தனையை கண்டு கொள்ளவில்லை அவர்கள். அவர்கள் சொல்கிறார்கள்- If களை எல்லாம் கணக்கில் எடுத்துக்கொண்டால் எந்த அபத்ததைக் கூட சாத்தியமானது என்று நிரூபித்துவிட முடியும் என்று.. நான் சொல்லுவது துல்லியமான கணக்கு. நான் சொன்ன நிபந்தனைகள் இல்லாமல் சுதந்திரம் அடைய முடியாது.. சுதந்திரத்தை அடைவதற்கு முதலில் நமது கையாலாகாத்தனத்தைக் கைவிட வேண்டும். 10000க்கும் குறைவான வெள்ளைக்காரர்கள் 35 கோடி மக்களை ஆட்சி செய்கிறார்கள் என்பது ஆச்சரியமானது மட்டுமல்ல, அவமானகரமானது. அதிகாரபலத்தால் அவர்கள் இப்படி ஆள்கிறார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அதைவிட அதிகமாக ஆயிரம் வழிகளில் நமது ஒத்துழைப்பைப் பெற்றுக்கொண்டு, நம்மை மேலும் மேலும் கையாலாகாதவர்கள் ஆக்குகிறார்கள். நாள் போகப்போக நாம் மேலும் மேலும் அவர்களை நம்பியிருக்கும்படி செய்து விடுகிறார்கள். சீர்திருத்தப்பட்ட கவுன்சில்கள், அதிகமான நீதிமன்றங்கள், கவர்னர் பதவிகள் இவையெல்லாம் உண்மையான சுதந்திரம் என்றோ அதிகாரம் என்றோ நம்பிவிட வேண்டாம்.

உண்மையில் நான் ஒத்துக்கொள்கிறேன், நான் சொன்ன மூன்று நிபந்தனைகள் இல்லாமல் சுதந்திரம் இல்லை. காலேஜ் பட்டங்கள் பெற்றுக் கொண்டே போகக்கூடாது. ஐந்தே நிமிஷத்தில் முடிக்கக் கூடிய வழக்குகளுக்கு ஆயிரக்கணக்கில் கட்டணம் வாங்கக் கூடாது. கவுன்சில் அரங்கில் நேரத்தையும் சுயமரியாதையையும் விரயம் செய்து கொண்டிருக்கக் கூடாது.

இதற்குத் தேவை, தன்னல மறுப்பு, தியாகம், அமைப்புத்திறன், நம்பிக்கை, தைரியம். இது பொறுப்புள்ளவர்களிடம் இருந்து, அவர்கள் பொதுக் கருத்தைத் திரட்டினால், ஒரு வருஷத்தில் சுதந்திரம் நிச்சயம்.. தலைமை தாங்குபவர்களிடமே இவை எல்லாம் இல்லையே என்றால், நமக்கு சுயராஜ்யம் கிடைக்காது. அதற்கு பிரிட்டிஷாரைக் குறை கூறிப் பயன் இல்லை. நமது விடுதலையும் அதற்கான நேரமும் நம் கையில்தான் இருக்கிறது.

அக்டோபர் முதல் இயக்கம் சூடு பிடிக்க ஆரம்பித்து விட்டது. தலைவர்கள் சுற்றுப் பயணங்கள் மேற்கொண்டார்கள். குஜராத்தில் தேசியப் பல்கலைக்கழகம் ஒன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அரசியல் போராட்டத்தின் கூடவே, தேச நிர்மாணத்திட்டப் பணிகள் நடைபெறத் தொடங்கின. மதுவிலக்குப் பிரச்சாரம், மத ஒற்றுமை, தீண்டாமை ஒழிப்பு, கிராமத்தொழில் வளர்ச்சி போன்ற திட்டங்கள் அவை. சுயராஜ்யம் என்பது பூரண சுயராஜ்யமாக இருக்க வேண்டுமானால், அதன் பலன் அனைவரையும், குறிப்பாக கடையனையும் சென்று அடைய வேண்டும் என்பது காந்தியின் தீர்மானம். இதனால்தான் அரசியல் விடுதலையைவிட, சர்வோதயம் என்ற அனைவர் நலன் பற்றிய சிந்தனைக்கு அவர் முதலிடம் கொடுத்தார். அரசியல் விடுதலைக்கு மட்டும் போராடலாமே, மற்றதுக்கெல்லாம் இப்போ என்ன அவசரம் என்ற மற்ற தாலைவர்கள் பலரின் கருத்தை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. நாட்டின் சாதாரண மக்கள், காந்தியின் கட்டளைகளுக்கு மந்திர சக்தி போலக் கட்டுண்டதால், தேசப்பற்றுக் கொண்டு, விடுதலைப் போரில் ஈடுபட்ட மற்ற தலைவர்கள் பலருக்கும் என்னதான் கருத்து வேறுபாடு இருந்தாலும், அவர் சிந்தனைக்குப் பெரும்பாலும் கட்டுப்பட வேண்டியதாயிற்று. இதை காந்தியின் சர்வாதிகாரம் என்பாரும் உளர்.

டிசம்பர் 26ல் நாக்பூரில் காங்கிரஸ் மகாநாடு கூடியது. இதற்கு விஜயராகவாச்சாரியார் தலைமை வகித்தார்.

பலத்த விவாதங்களுக்கிடையே இந்த மகாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்: காங்கிரஸின் நோக்கம் இந்திய மக்கள் அமைதியான நியாயமான வழிகளில் (by peaceful and legitimate means) சுயராஜ்யம் பெற வேண்டும் என்பதாகும்.

தேசபந்து சித்தரஞ்சன் தாசின் வேண்டுகோளுக்கிணங்க கல்கத்தாவில் 3000 கல்லூரி மாணவர்கள் வேலைநிறுத்தம் செய்தார்கள். ஆயிரக்கணக்கில் மாணவர்களும் மாணவிகளும், கல்லூரிப் படிப்பை விட்டார்கள். வங்காள இளைஞர்களைப் பாராட்டினார் காந்தி.. காங்கிரஸ் மகாநாட்டில் ஒத்துழையாமைத் தீர்மானத்தை எதிர்த்திருந்த போதும், நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை உறுதியாகக் கடைப்பிடித்து வெற்றிகரமாக நடத்திய தேசபந்து சித்தரஞ்சன் தாஸ் காந்தியாரின் அன்புக்கு மட்டுமல்ல, நாட்டுப்பற்று கொண்ட அனைவரின் பாராட்டுக்கும் உரியவர் ஆகிறார். இவரை அல்லவா சுபாஷ் தமது மன நாயகராக வரித்துக்கொள்ளப் போகிறார்?

மோதிலால் நேரு, சித்தரஞ்சன் தாஸ், வல்லபபாய் படேல், ராஜேந்திரபிரசாத், ராஜகோபாலாச்சாரி போன்ற பிரபல வழக்கறிஞர்கள் தங்கள் ராஜ போக வாழ்வை உதறி எறிந்து விட்டு தேசப்பணியில் முழுமையாக ஈடுபட்டார்கள்.

நமது காவியநாயகன், ஐ.சி.எஸ்.பணியைத் துச்சமென உதறித் தள்ளிவிட்டு தேசப்பணியில் ஈடுபடும் ஆர்வத்துடன் இந்தியா வந்ததைப் பார்த்தோமே?



Netaji - நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 12, 2015 11:56 pm

 மாமனிதர்கள் சந்தித்தார்கள்!

Greek meeting Greek என்று சொல்லுவார்கள். அப்படிப்பட்ட இரு மாமனிதர்களின் சந்திப்புதான் பம்பாயில் ஜுலை 1921 ல் நடந்தது.

லட்சிய வெறியோடும், இளமைத் துடிப்போடும், காந்தி தங்கியிருந்த மணி பவனத்துக்குள் பிரவேசிக்கிறார் சுபாஷ். சுதந்திர தேவியின் கோவிலுக்குள் பிரவேசிப்பது போன்றதோர் உணர்வு, மெய்சிலிர்ப்பு.

பரபரப்பும் சுறுசுறுப்புமாக, கதராடை அணிந்தவர்கள் நூற்றுக்கணக்கானவர்கள் வருவதும் போவதுமாக இருந்த சூழ்நிலை அவரைப் பிரமிக்க வைத்துவிட்டது. காந்திஜியைக் கண்டதும் அவரது நெஞ்சில் இனம்புரியாத பயபக்தி. காந்திஜிக்கோ, வீரத் திருவிழிப் பார்வையும், கம்பீரமான நடையுமாக வந்து நின்ற சுபாஷைப் பார்த்ததும் ஒரு மதிப்பு. ஐ.ஏ.ஏஸ். பதவியை உதறி எறிந்துவிட்ட தகவல் அறிந்து பூரிப்பு.

அந்தச் சந்திப்பைப் பற்றி சுபாஷ் என்ன சொல்கிறார்?

"அன்றைய மாலைக் காட்சி என் மனத்தில் மிகத் தெளிவாக இருக்கிறது. இந்தியக் கம்பளங்கள் விரிக்கப்பட்ட அந்த அறைக்குள் என்னை அழைத்தார்கள். அந்த அறையின் மத்தியில் கதவைப் பார்த்தபடி மகாத்மா உட்கார்ந்திருந்தார். அவரைச் சுற்றிலும் அவரது தொண்டர்கள் இருந்தார்கள். அத்தனை பேரும் கதராடையே அணிந்திருந்தார்கள். அந்த அறைக்குள் நான் நுழைந்ததும் எனக்கென்னவோ அன்னிய உடையில் இருப்பது பொருத்தமில்லாதது போல் தோன்றியது. மன்னிப்புக் கேட்டுக் கொண்டேன். மகாத்மா அவருக்கே உரிய புன்னகையுடன் என்னை வரவேற்றார். என்னை சகஜமான, சௌகரியமான நிலைக்குக் கொண்டு வந்தார். உரையாடல் உடனே தொடங்கிவிட்டது. அவரது திட்டங்களின் விவரங்கள் பற்றி, அடுத்தடுத்த கட்டங்கள் பற்றித் தெளிவாகத் தெரிந்துகொள்ள விரும்பினேன். அன்னிய ஆட்சியின் பிடியிலிருந்து படிப்படியாக அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்வதற்கு என்ன திட்டங்கள் வைத்திருக்கிறார் என்று அறிந்து கொள்ள விரும்பினேன். அந்த நோக்கத்துடன், அவரிடம் கேள்விக்கு மேல் கேள்வியாகப் போட்டுத் துளைத்தேன். அத்தனைக்கும் அவர் வழக்கமான பொறுமையுடன் பதில் அளித்தார்"

சுபாஷ் ஐ.ஏ.எஸ். பதவியைத் துச்சமெனத் தூக்கியெறிந்துவிட்டு, காந்தியடிகளின் காலடியில் சுதந்திர வேள்வியில் தம்மை ஆகுதியாக அர்ப்பணித்துக் கொள்வது என்ற திடமான தீர்மானத்துடன் வந்திருக்கிறார். தனக்கு என்ன பணி என்று ஆவலுடன் கேட்டுக்கொண்டு அதனை உடனே மேற்கொள்ள வேண்டும் என்ற பரபரப்பு. ஓர் ஆண்டுக்குள் சுதந்திரம் கிடைத்துவிடும் என்று காந்திஜி சொல்லியிருக்கிறார் அல்லவா? நிச்சயமாக அவர் மனத்துக்குள் ரகசியமான ஒரு திட்டம் வைத்திருக்க வேண்டும். அதில் தாம் பங்கு கொள்ள வேண்டும் என்ற வெறி, வேகம் சுபாஷ¤க்கு. ஓராண்டில் சுதந்திரம் என்று காந்திஜி சொன்னது ஏதோ புரட்சித் திட்டத்தை மனத்தில் கொண்டுதான் என்ற நம்பிக்கை சுபாஷ¤க்கு. ருஷியப் புரட்சி போல ஒரு புரட்சித் திட்டத்தை வைத்திருக்கிறார் காந்திஜி என்ற திட நம்பிக்கை அவருக்கு. ராய் என்ற நண்பரிடம் அவர் சொல்லியிருக்கிறார், "இந்தியாவில் ஒரு புரட்சி வரப்போகிறது. ருஷியர்கள் கூட புரட்சியை இப்போதுதான் கற்றுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இந்தியப் புரட்சி இதற்குள் முழுமை அடைந்துவிட்டது. இப்போது, புரட்சிப் பறவை குஞ்சு பொறிக்கத் தொடங்கிவிட்டது. விரைவில் வானில் பறக்கத்தொடங்கி விடும் புதுப் பறவை... அப்போது, புதிய உதயத்தின் இனிய பூபாளத்தை கேட்பீர்கள்" என்று.

இப்படிச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே அவரது முகம் உணர்ச்சி மேலீட்டால் சிவந்து போனது. "புரிகிறதா, புரிகிறதா, கொஞ்சம் பேரே கொண்ட, பிஞ்சுப் பருவத்தில் உள்ள ஒரு அமைப்பு, மகாசக்தி வாய்ந்த பிரிட்டிஷ் அரசுக்கு விடுக்கும் சவால்... எவ்வளவு அழகான விஷயம்! உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா?" சுபாஷின் மனத்தில் மட்டும் இத்தகைய எதிர்பார்ப்பு இல்லை. பிரிட்டிஷ் அதிகாரிகள் உட்பட, அந்தக் காலகட்டத்தில் பலரும் , காந்திஜி அகிம்சை, ஒத்துழையாமை என்று சொன்னதையெல்லாம் நம்பவில்லை. இந்தக் குஜராத்திக் கிழவர் ஏதோ ரகசியத் திட்டம் வைத்திருக்கிறார், எடுத்து விடப்போகிறார், என்றே நம்பினார்கள்.

ஆக, சுபாஷ் , காந்திஜி மனத்துக்குள் ஒரு புரட்சித்திட்டம் வைத்திருக்கிறார், அதன் விவரங்கள் என்ன அதில் தன் பங்கு என்னவாக இருக்கப்போகிறது என்று அறிந்துகொள்ளும் ஆவலோடும் துடிப்போடும் இருக்கிறார்.

காந்திஜியோ, தென் ஆப்பிரிக்காவில் சத்தியம், அகிம்சை ஆகியவற்றின் அடிப்படையிலான அறப்போர் நிகழ்த்தி வெற்றி கண்ட அனுபவத்துடன் வந்திருக்கிறார். கேடா, அகமதாபாத், சம்பரான் போன்ற இடங்களில், சத்தியாக்கிரக அடிப்படையில் சிறிய போராட்டங்களை நடத்திப் பரிசோதனையில் வெற்றி கண்டிருக்கிறார். இந்தியா முழுதும் மக்களை ஈடுபடுத்தி, சத்தியாக்கிரக வழியில் போருக்குத் தயார்ப்படுத்த வேண்டும் என்பது அவரது நோக்கம். அனைத்து மக்களும் ஒன்று திரண்டு, ஒரே அணியாக நின்று, அன்னிய ஆட்சியுடன் ஒத்துழைக்க மட்டோம் என்று உறுதி பூண்டு செயல் புரிந்தால், இந்த ஆட்சி ஒருநாள் கூட நிற்க முடியாது என்பது அவரது தீர்மானமான முடிவு. அந்த உறுதியை, ஒற்றுமையை பட்டி தொட்டி உட்பட நாடு நெடுகிலும் கொண்டு வரும் முயற்சியில்தான் அவர் ஈடுபட்டிருந்தார்.

அவருக்குக் குறிக்கோளில் தெளிவு இருந்தது. சத்தியத்தை அடிப்படையாகக் கொண்ட அஹிம்சை முறையிலேயே குறிக்கோளை அடைய வேண்டும் என்று வழிமுறை பற்றிய தெளிவும் இருந்தது. என்றாலூம் அவர் நீண்டகாலத் திட்டங்கள் வகுத்து step by step logical end வரை திட்டம் போட்டுக் கொண்டே செல்பவர் அல்லர். One step is enough என்ற கொள்கை அவருக்கு. அவ்வப்போது அந்த அந்த அடிகளைக் கவனத்துடன் வைத்துக்கொண்டு போனால் பாதை தானாகத் தெளியும் என்று நம்பிச் செயல்படுபவர் அவர். அவர் எடுக்கும் முடிவுகளோ அந்தராத்மாவின் குரல் என்று, இறைவனின் கட்டளைகள் என்று அவர் கருதுபவற்றின் அடிப்படையில் அமைபவை. நாடு தழுவிய ஹர்த்தால் ஆனாலும் சரி, உப்பு சத்தியாக்கிரகம் ஆனாலும் சரி, வெற்றிகரமாக நடந்துகொண்டிருக்கும் போராட்டத்தின் போது எங்கோ வன்முறை கலந்து விட்டது என்பதற்காக தம் மீது இமாலயத் தவறு இருப்பதாகப் பொறுப்பைத் தூக்கிப் போட்டுக்கொண்டு, போராட்டத்தையே கைவிடுவதானாலும் சரி, அது அப்படித்தான். துடிதுடிப்பாக வந்த சுபாஷ¤க்கு, திடுக்கிடவைக்கும் செயல் திட்டங்களை எதிர்பார்த்து வந்த சுபாஷக்கு, சப்பென்று போய்விட்டது. ‘என்னது இந்த மனிதர் நாம் நினைத்தது போல் புரட்சித் திட்டங்கள் எதுவும் வைத்திருக்கவில்லையே, வழவழ கொழகொழ ஆசாமியாக இருக்கிறாரே‘ என்று ஏமாற்றம் அடைந்தார்.

இந்தச் சந்திப்பு பற்றி அவர் சொல்லுவது: "மகாத்மா காந்தியின் இயக்கத்தில் அவர் நடத்த நினைக்கும் திட்டங்களால் சுதந்திரம் கிடைக்குமா என்ற சந்தேகம் எற்படுகிறது. அவரது திட்டங்களை என்னால் முழு மனதாக ஏற்க முடியவில்லை. ஏற்க முடியததாலேயே, அதன் மீது நம்பிக்கை தோன்றவில்லை."

எந்த அணுகுமுறை சரி, எது தவறு என்பதில் அவரவர்கள் மனப்போக்குக்கு ஏற்பக் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். இது பற்றி நூலாசிரியன் தன் சொந்தக் கருத்தை கூற முயல்வது, காய்தல் உவத்தல் அற்ற முறையில் வரலாற்றை எழுதிச் செல்வதற்குத் துணை புரியாது. ஒன்று மட்டும் சொல்லலாம். இருவருமே அப்பழுக்கற்ற தேசபக்தர்கள். இருவரது குறிக்கோளுமே, இந்திய விடுதலைதான். காந்தியவாதிகள் என்று சொல்லிக்கொள்ளும் சிலரும், நேதாஜியின் ஆதரவாளர்களாகக் கருதிக் கொள்ளும் சிலரும் ஏதோ இவர்கள் இருவருக்குள்ளும் பரஸ்பர விரோதம் போலக் கருத்துகளைக் கூறிக்கொள்வது துயரம் அளிப்பதே. வரலாற்றை முன்னெடுத்துச் செல்கையில், இவர்கள் இருவரும் எதிர் எதிராக செயல்பட்ட கட்டங்கள் வரத்தான் போகின்றன. திறந்த மனத்துடன் அந்த நிகழ்ச்சிகளை அணுகுவதே இந்தத் தொடரின் நோக்கம்.

இறுதியில் காந்திஜி, சுபாஷக்கு, தேசபந்து சித்தரஞ்சன் தாசைச் சந்தித்து அவரது அறிவுரைப்படி நடக்கும்படி சொல்லி அனுப்பினார். இது சுபாஷக்கு ஏற்புடையதுதானே? சுபாஷ¤ம் சித்தரஞ்சன் தாசும் இணைந்து பணியாற்ற்¢ய இனிய நாட்களைப் பற்ற்¢த் தொடர்ந்து வரும் அத்தியாயங்களில் பார்க்கப் போகிறோம்.



Netaji - நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 15, 2015 4:50 pm

நல்ல பகிர்வு சிவா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 5 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக