ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்பெக்டரம் விவகாரம் : சுப்பிரமணியசாமிக்கு கருணாநிதி நோட்டீஸ்

5 posters

Go down

ஸ்பெக்டரம் விவகாரம் : சுப்பிரமணியசாமிக்கு கருணாநிதி நோட்டீஸ் Empty ஸ்பெக்டரம் விவகாரம் : சுப்பிரமணியசாமிக்கு கருணாநிதி நோட்டீஸ்

Post by சிவா Sun Feb 06, 2011 8:52 pm

சென்னை : ஸ்பெக்ட்ரம் வழக்கில் கருணாநிதியையும் எதிரியாக சேர்க்க வேண்டும் என்று ‌கோரிய ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமிக்கு முதல்வர் கருணாநிதி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் நாட்டுக்கு ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படுத்தியதாக மத்திய கணக்கு தணிக்கைக்குழு அறிக்கை அளித்தது. இதனை தொடர்ந்து எழுந்த எதிர்ப்பு அலைகளால் ராஜா, அமைச்சர் பதவியை கடந்த நவம்பர் 14ம் தேதி ராஜினாமா செய்தார். இதையடுத்து ராஜா எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என்ற சூழல் நிலவி வந்தது. எதிர்பார்க்கப்பட்டது போலவே கடந்த 2ம் தேதி ராஜா கைது செய்யப்பட்டார். அவருடன் தொலைதொடர்பு துறை மாஜி அதிகாரிகள் ஆர்.கே.சந்தோலியா, பெஹீரியா, ராஜாவின் சகோதரர் கலியபெருமாள் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். அவர்களை சிபிஐ போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகிறார்கள்.

இந்நிலையில் ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி, ஸ்பெக்டர் வழக்கில் முதல்வர் கருணாநிதியையும் எதிரியாக சேர்க்க வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டார். இதுதொடர்பாக, மனு ஒன்றைத் தாக்கல் செய்ய உள்ளதாகவும் கோர்ட்டில் அவர் தெரிவித்தார். ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி சுப்பிரமணியசாமி அளித்த புகார் மீதான விசாரணை கடந்த 5ம் தேதி நடைபெற்றது. விசாரணையின் போது, "2-ஜி அலைக்கற்றை முறைகேடு தொடர்பான தனது புகார் மிகவும் விரிவானது என்றும் இதில் தேச பாதுகாப்பு சம்பந்தப்பட்டுள்ளது. இந்தப் பிரச்னையில் சி.பி.ஐ.யின் விசாரணை சிறிய கோணத்திலேயே உள்ளது' என்று சுப்ரமணியசாமி தெரிவித்தார். இந்த முறைகேட்டில் தமிழக முதல்வர் கருணாநிதி உள்ளிட்ட அரசியல் தலைவர்களுக்கு உள்ள பங்கு குறித்தும், தேசத்தின் பாதுகாப்பு பாதிக்கப்படுவது குறித்தும் தனியாக மனு தாக்கல் செய்ய உள்ளதாகவும் சுப்ரமணியசாமி தெரிவித்தார்.

சுப்பிரமணியசாமியின் இந்த வாதம் நாடு முழுவதும் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், முதல்வர் கருணாநிதி, சுப்பிரமணியசாமிக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். கருணாநிதி சார்பில் அவரது வக்கீல் ராமன் அசோசியேட்ஸ் மூலம் அனுப்பப்பட்டுள்ள நோட்டீசில், தமிழக முதல்வர் கருணாநிதி 70 ஆண்டுகளாக பொதுச் சேவையிலும், தமிழக சட்டமன்றப் பணியில் ஏறத்தாழ 50 ஆண்டுகளாகவும் பணியாற்றி வருகிறார்; ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தேசத்தின் பாதுகாப்பு சம்பந்தப்பட்டுள்ளது குறித்து எனக்கு தெரியும் என்றும், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் கருணாநிதிக்கு தொடர்பு உள்ளது என்றும் நீங்கள் கூறியதாக செய்தி வெளியாகியுள்ளது. இது அரசியல் பகை, தனிப்பட்ட விரோதம், மலிவான விளம்பரம் ஆகியவற்றின் அடிப்படையில் உங்களால் வெளியிடப்பட்டுள்ளது. முதல்வரின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உங்கள் கருத்து அமைந்துள்ளது. எனவே, 24 மணி நேரத்திற்குள் உங்களின் முந்தைய கருத்துக்கு பகிரங்கமாக மறுப்பு வெளியிட வேண்டும். இல்லையென்றால் முதல்வர் கருணாநிதியின் பெயருக்கு களங்கம் விளைவிக்க முயன்றதற்காக உங்கள் மீது சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு நடைமுறைகள் மேற்கொள்ளப்படும்.என்று கூறப்பட்டுள்ளது.

தினமலர்


ஸ்பெக்டரம் விவகாரம் : சுப்பிரமணியசாமிக்கு கருணாநிதி நோட்டீஸ் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஸ்பெக்டரம் விவகாரம் : சுப்பிரமணியசாமிக்கு கருணாநிதி நோட்டீஸ் Empty Re: ஸ்பெக்டரம் விவகாரம் : சுப்பிரமணியசாமிக்கு கருணாநிதி நோட்டீஸ்

Post by கலைவேந்தன் Sun Feb 06, 2011 8:59 pm

சபாஷ் ...!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஸ்பெக்டரம் விவகாரம் : சுப்பிரமணியசாமிக்கு கருணாநிதி நோட்டீஸ் Empty Re: ஸ்பெக்டரம் விவகாரம் : சுப்பிரமணியசாமிக்கு கருணாநிதி நோட்டீஸ்

Post by T.N.Balasubramanian Mon Feb 07, 2011 8:30 am

இது விஷயம் சுவாமியின் கவனத்துக்கு கொண்டுவந்தபோது, " கோர்ட்டில் கோர்ட்டுக்குக்காக கூறிய சிறப்பு செய்தி / ஊடகங்களுக்கு ,கோர்ட்டில் கூறிய செய்தி என்றே கூறி உள்ளேன். சட்ட ரீதியாக என் மீது கேஸ் போடமுடியாது. கோர்ட்டுக்கு அவர் போனால் எனக்கு சந்தோஷமே" என்று கூறி உள்ளார்.
(தகவல் : டைம்ஸ் ஆப் இந்தியா /சென்னை பதிப்பு 7 பிப் 2011 )

ரமணீயன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஸ்பெக்டரம் விவகாரம் : சுப்பிரமணியசாமிக்கு கருணாநிதி நோட்டீஸ் Empty Re: ஸ்பெக்டரம் விவகாரம் : சுப்பிரமணியசாமிக்கு கருணாநிதி நோட்டீஸ்

Post by தமிழ்ப்ரியன் விஜி Mon Feb 07, 2011 10:08 am

விசாரணை அறிக்கை அளித்த நீதிபதி சர்காரியா மீது மான நஷ்டவழக்கு தொடுக்கவேண்டியதுதானே!!!!


தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

ஸ்பெக்டரம் விவகாரம் : சுப்பிரமணியசாமிக்கு கருணாநிதி நோட்டீஸ் Empty Re: ஸ்பெக்டரம் விவகாரம் : சுப்பிரமணியசாமிக்கு கருணாநிதி நோட்டீஸ்

Post by SK Mon Feb 07, 2011 12:21 pm

அரசியல் களம் சூடுபிடிக்கிறது


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

ஸ்பெக்டரம் விவகாரம் : சுப்பிரமணியசாமிக்கு கருணாநிதி நோட்டீஸ் Empty Re: ஸ்பெக்டரம் விவகாரம் : சுப்பிரமணியசாமிக்கு கருணாநிதி நோட்டீஸ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» 10 பேருக்கு பார்வை போன விவகாரம்: அசினுக்கு நோட்டீஸ்!
» கூவத்தூரில் ஜாமர் கருதி பொருத்தப்பட்ட விவகாரம் - உள்துறை அமைச்சகம் நோட்டீஸ்
» ஒரே மாதத்தில் 106 விவசாயிகள் உயிரிழந்த விவகாரம்: தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
» அரசு பேருந்து நடத்துனரை தாக்கிய விவகாரம்.. நெல்லை எஸ்.பிக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்..
» சுப்பிரமணியசாமிக்கு ஜாமீனில் வரமுடியாத பிடிவாரண்ட்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum