புதிய பதிவுகள்
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 12:17

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 12:14

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 12:09

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 12:08

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 12:04

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 9:20

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 9:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Today at 1:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:11

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:04

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 0:51

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 0:04

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:13

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:40

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:21

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:13

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 20:38

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:34

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:07

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:37

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 18:19

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 4 Oct 2024 - 17:52

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:39

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வடிகால் - முகில் தினகரன் Poll_c10வடிகால் - முகில் தினகரன் Poll_m10வடிகால் - முகில் தினகரன் Poll_c10 
73 Posts - 60%
heezulia
வடிகால் - முகில் தினகரன் Poll_c10வடிகால் - முகில் தினகரன் Poll_m10வடிகால் - முகில் தினகரன் Poll_c10 
32 Posts - 26%
mohamed nizamudeen
வடிகால் - முகில் தினகரன் Poll_c10வடிகால் - முகில் தினகரன் Poll_m10வடிகால் - முகில் தினகரன் Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
வடிகால் - முகில் தினகரன் Poll_c10வடிகால் - முகில் தினகரன் Poll_m10வடிகால் - முகில் தினகரன் Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
வடிகால் - முகில் தினகரன் Poll_c10வடிகால் - முகில் தினகரன் Poll_m10வடிகால் - முகில் தினகரன் Poll_c10 
3 Posts - 2%
Abiraj_26
வடிகால் - முகில் தினகரன் Poll_c10வடிகால் - முகில் தினகரன் Poll_m10வடிகால் - முகில் தினகரன் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
வடிகால் - முகில் தினகரன் Poll_c10வடிகால் - முகில் தினகரன் Poll_m10வடிகால் - முகில் தினகரன் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
வடிகால் - முகில் தினகரன் Poll_c10வடிகால் - முகில் தினகரன் Poll_m10வடிகால் - முகில் தினகரன் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
வடிகால் - முகில் தினகரன் Poll_c10வடிகால் - முகில் தினகரன் Poll_m10வடிகால் - முகில் தினகரன் Poll_c10 
1 Post - 1%
Guna.D
வடிகால் - முகில் தினகரன் Poll_c10வடிகால் - முகில் தினகரன் Poll_m10வடிகால் - முகில் தினகரன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வடிகால் - முகில் தினகரன் Poll_c10வடிகால் - முகில் தினகரன் Poll_m10வடிகால் - முகில் தினகரன் Poll_c10 
67 Posts - 60%
heezulia
வடிகால் - முகில் தினகரன் Poll_c10வடிகால் - முகில் தினகரன் Poll_m10வடிகால் - முகில் தினகரன் Poll_c10 
29 Posts - 26%
mohamed nizamudeen
வடிகால் - முகில் தினகரன் Poll_c10வடிகால் - முகில் தினகரன் Poll_m10வடிகால் - முகில் தினகரன் Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
வடிகால் - முகில் தினகரன் Poll_c10வடிகால் - முகில் தினகரன் Poll_m10வடிகால் - முகில் தினகரன் Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
வடிகால் - முகில் தினகரன் Poll_c10வடிகால் - முகில் தினகரன் Poll_m10வடிகால் - முகில் தினகரன் Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
வடிகால் - முகில் தினகரன் Poll_c10வடிகால் - முகில் தினகரன் Poll_m10வடிகால் - முகில் தினகரன் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
வடிகால் - முகில் தினகரன் Poll_c10வடிகால் - முகில் தினகரன் Poll_m10வடிகால் - முகில் தினகரன் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
வடிகால் - முகில் தினகரன் Poll_c10வடிகால் - முகில் தினகரன் Poll_m10வடிகால் - முகில் தினகரன் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
வடிகால் - முகில் தினகரன் Poll_c10வடிகால் - முகில் தினகரன் Poll_m10வடிகால் - முகில் தினகரன் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
வடிகால் - முகில் தினகரன் Poll_c10வடிகால் - முகில் தினகரன் Poll_m10வடிகால் - முகில் தினகரன் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வடிகால் - முகில் தினகரன்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 9 Feb 2011 - 11:03

தொலைக்காட்சியில் செய்திகள் பார்த்துக் கொண்டிருந்த பிரம்மநாயகத்தை அந்தக் கூச்சல் இடைïறு செய்ய, தன் கவனத்தை மாற்றி அதைக் கூர்ந்து கேட்கலானார்.

'அய்யோ... வேண்டாங்க... அடிக்காதீங்க... வலிக்குதுங்க!'' பக்கத்து வீட்டுப் பெண்மணியின் குரல்.

'வசுமதி...வசுமதி'' மனைவியை அழைத்தார் பிரம்ம நாயகம்.

கைகளைத் துடைத்தபடியே அடுக்களையிலிருந்து வந்தவள், 'என்னங்க?.. என்ன வேணும் உங்களுக்கு?''

'அதென்ன சத்தம்?... வழக்கம் போல பக்கத்து வீட்டுல ஆரம்பமாயிடுச்சா?''

'ஆமாங்க... அதேதான்!.. பாவம் அந்தப் பெண்... எப்படித்தான் புருஷன்கிட்ட தெனமும் அடி வாங்கிட்டு... அத்தனையையும் பொறுத்துக்கிட்டிருக்காளோ?''

அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே அதிகபட்ச ஓசையுடன் ஒரு `படார்'. தொடர்ந்து அப்பெண்மணியின் உச்சஸ்தாய அழுகுரல்.

'அந்த ஆளுக்கு கிட்டத்தட்ட அம்பது... அம்பத்திரெண்டிருக்கும்... அந்தப் பெண்ணுக்கும் ஒரு நாப்பத்தியேழு... நாப்பத்தியெட்டிருக்கும்... இத்தனை வயசுக்கப்புறம் இதுகளுக்குள்ளாற இப்படியெல்லாம் சண்டை அவசியமா?'' வசுமதி அங்கலாய்த்தாள்.

'கொழந்த குட்டின்னு ஏதாச்சும் இருந்திருந்தா... இதுக அடங்கியிருக்கும்... அதுவுமில்லியா... அதான் இதுக ஆடிக்கிட்டிருக்குதுக!''

'அந்தப் பெண்மணியக் குத்தம் சொல்ல முடியாதுங்க... நானும் அப்பப்ப வெளிய.. தெருவுல போகும் போது.. வரும் போது பார்த்திருக்கேன்... ரொம்ப அமைதியான... சாந்தமான முகம்... யாருகிட்டேயும் இரைஞ்சு கூடப் பேசாத குணம்!... எனக்கென்னவோ அந்தாளுதான் ரொம்ப முசுடா இருப்பான் போலத் தெரியுது!''

மறுநாள் காலை.

வாக்கிங் போய் விட்டுத் திரும்பிக் கொண்டிருந்தார் பிரம்ம நாயகம். கையில் டிபன் கேரியருடன் வேக வேகமாகத் தன்னைக் கடந்து போன அந்தப் பக்கத்து வீட்டு மனிதரைக் கண்டதும், அவரை அழைத்துப் பேச்சுக் கொடுத்துப் பார்த்தால் என்னவென்று தோன்றியது அவருக்கு.

'சார்... சார்!''

அவர் நின்று திரும்பிப் பார்க்க,

'சார்... நான் பிரம்ம நாயகம்... உங்க பக்கத்துல வீட்டுலதான் குடியிருக்கேன்... வந்து நாலு மாசமாச்சு... உங்க கூடப் பேசவோ... அறிமுகப் படுத்திக்கவோ முடியலை...! சார்... எங்க வேலை பார்க்கறீங்க?'' வெகு சிநேகிதமாய்க் கேட்டார்.

முகத்தில் ஒருவித வெறுப்போடு அவரை கர்ண கடூரமாகப் பார்த்த அந்த மனிதர், 'அய்யா பக்கத்து வீட்டுக்காரரே.. நான் ஏழரை மணிக்குள்ளாற பாக்டரில இருக்கணும்... அறிமுகம் பண்ணிக்கிட்டு அரட்டை அடிக்கவெல்லாம் எனக்கு நேரமில்லை...!'' என்று அவசரமாய்ச் சொன்னவர், நடையைத் துரிதப்படுத்திக் கொண்டார்.

'வசுமதி சொன்னது சரிதான்... ஒண்ணாம் நெம்பர் முசுடுதான் இந்தாளு!''

அடுத்த வாரத்தில் ஒரு நாள்,

எலக்ட்ரிக் பில் கட்டுவதற்காக ஈ.பி.அலுவலகம் சென்றிருந்த வசுமதி, அங்கு காத்திருந்த வேளையில் அந்தப் பக்கத்து வீட்டுப் பெண்மணி வர, சன்னமாய்ப் புன்னகைத்தாள்.

பதிலுக்கு அப்பெண்மணியும் புன்னகைக்க, தைரியமாய்ப் பேச ஆரம்பித்தாள். 'உங்களுக்கு ஈ.பி.பில் எவ்வளவு வருது?''

அப்பெண்மணி தன் கார்டைப் பார்த்து விட்டு, 'நூத்திப் பத்து'' என்றாள்.

'அட... பரவாயில்லையே... எங்களுக்கு நானூறுக்கும் மேலல்லவா வருது!''

'எங்க வீட்டுல மின்சார உபயோகம் ரொம்பக் கம்மி... அதுவுமில்லாம நூறுக்கும் மேல போனா போச்சு... அவ்வளவுதான்... எங்க வீட்டுக்காரர் என்னைக் கொன்னே போட்டுடுவார்!''

அவள் வாயிலிருந்தே அவள் வீட்டுக்காரரைப் பற்றிப் பேச்சு வந்து விட, இன்னும் கொஞ்சம் தைரியமான வசுமதி, நீண்ட நாட்களாகத் தன் மனதில் அடக்கி வைத்திருந்த அந்தக் கேள்வியைக் கேட்டே விட்டாள்.

'ஒரு நாளல்ல.. ரெண்டு நாளல்ல.... தினப்படியும் நாங்க எங்க வீட்டுல இருந்து கவனிச்சிட்டுத்தான் இருக்கோம்... எதுக்கு உங்க வீட்டுக்காரர் தினமும் உங்களை அந்த மாதிரி அடிக்கிறார்... என்ன காரணம்?''

மெலிதாய் முறுவலித்த அப்பெண்மணி, 'காரணத்துக்கா பஞ்சம்?... ஏதாவதொரு காரணம் அவருக்குன்னு கெடைச்சிடுது... அடிக்கறார்!'' சொல்லிவிட்டு அமைதியாய் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொள்ள, வசுமதியும் அமைதியானாள்.

ஒரு சிறிய இடைவேளைக்குப் பின், வசுமதியே தொடர்ந்தாள், 'உங்களால எப்படி இந்த அளவுக்குப் பொறுத்துக் கொள்ள முடியுது? எதிர்த்து ஒரு வார்த்தை கூடப் பேசாம... வரம் வாங்கிட்டு வந்த மாதிரி அவர் குடுக்கற அடிகளை வாங்கிக்கறீங்களே... ஏன் இப்படி?.. சொல்லிப் புரியவைக்கக் கூடாதா?''

பதிலேதும் பேசாது மெல்லப் புன்னகைத்தாள் அந்தப் பெண்மணி.

'என்னடா இவ..நம்ம குடும்ப விஷயங்கள்ல தலையிடறான்னு நெனைக்காதீங்க... திரும்பி ஒரு வார்த்தை கூடவா எதிர்த்துப் பேச முடியாது உங்களால?... எனக்கென்னமோ நீங்க எதிர்த்து பேச மாட்டீங்க அப்படிங்கற தைரியத்துலதான் அவர் தொடர்ந்து அடிச்சுட்டே இருக்கார்ன்னு தோணுது!''

அவள் 'குறு..குறு'' வென்று வசுமதியின் கண்களையே பார்க்க,

'அய்யய்யோ... புருஷன் பொண்டாட்டிக்குள்ளாற பகையை மூட்டி விடணும்கறதுக்காக நான் இதைச் சொல்லலே... ஒரு பொம்பளை அனுபவிக்கற சித்ரவதையை இன்னொரு பொம்பளையால தாங்க முடியாததால் சொல்றேன்!''

அவள் இப்போதும் வசுமதியின் முகத்தையே ஊடுருவிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

பொறுமையிழந்த வசுமதி மறுபடியும் எதையோ சொல்ல வாயெடுக்க, அவளைக் கையமர்த்திய அப்பெண்மணி, 'அம்மாடி... முன்ன பின்ன தெரியாத எம்மேல நீ இத்தனை அக்கறை காட்டுறதுக்கு ரொம்ப நன்றியம்மா.. நான் எம்புருஷனோட அடிகளையும்... அதோட வலிகளையும் பொறுமையாகத் தாங்கிக்கிட்டு ஒரு சகிப்புத்தன்மையோட இருக்கிறதுக்கு ஒரு மாபெரும் காரணம் இருக்கும்மா!... அது உன்னைய மாதிரி வெளிய இருந்து பார்க்கிறவங்களுக்குப் புரியாதும்மா!''

'காரணமா?'' வசுமதி ஆர்வமாகக் கேட்டாள்.

'ஆமாம்மா... ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி வரைக்கும் என் கணவர் ஒரு கம்பெனிக்கு முதலாளியா... கிட்டத்தட்ட நூறு... நூத்தம்பது பேருக்கு வேலை குடுக்கறவரா... பண பலத்தோட... அதிகார பலத்தோட... செல்வாக்கோட இருந்தவரும்மா... கூட இருந்த பார்ட்னரும்... ஆடிட்டரும் சேர்ந்து பண்ணின தில்லுமுல்லுத்தனத்தால கம்பெனி 'சட...சட''ன்னு சரிஞ்சு விழுந்திட்டுது... அவங்கெல்லாம் முன்கூட்டியே புத்திசாலித்தனமா தங்களோட சொத்துபத்துக்களை பாதுகாப்புப் பண்ணி வெச்சுக்கிட்டுத் தப்பிச்சிட்டாங்க.. இவருதான் பாவம் எல்லாரையும் நம்பி... ஏமாந்து... திவாலாகி... வீடு வாசலை இழந்து... அடுத்த வேளைச் சோத்துக்குக் கூட வழியில்லாதவராகி நடு ரோட்டுக்கு வந்திட்டாரு!''

'அடப்பாவமே!''

'கடைசில... இப்ப ஏதோ ஒரு குறைஞ்ச சம்பளத்துக்கு... ஒரு சின்ன கம்பெனில வேலைக்குச் சேர்ந்திட்டாரு... அதன்மூலமா இப்போதைக்கு ஏதோ அரை வயிறு... கால் வயிறு நிறையுது... நல்ல வேளையா ஆண்டவன் எங்களுக்குன்னு குழந்தை குட்டி எதையும் குடுக்கல... இல்லேன்னா பாவம்... அதுகளும் எங்க கூட சேர்ந்து கஷ்டப்பட்டிருக்கும்!''

சில வினாடிகள் அமைதியாய்க் கழிய, 'சரிம்மா... இதுக்கும் அவரு தெனமும் உங்களை அடிக்கறதுக்கும்... அதுக்கு நீங்க பொறுமை காக்கறதுக்கும் என்ன சம்பந்தம்?'' வசுமதி விடாமல் கேட்டாள்.

'அம்மா... அவருக்கு வயசு ஐம்பத்தியொண்ணு... இப்ப அவரு வேலைக்குப் போற எடத்துல... அவரோட மேலதிகாரியா இருக்கிற எல்லாருமே... அவரை விட வயசுல குறைஞ்சவங்க... அவங்க ஏவுற வேலையைச் செய்யற ஆள் இவரு... அது அவரை மனசளவுல ரொம்பவே பாதிச்சிருக்கு... ஆனாலும் வயித்துப் பாட்டுக்காக அதை மறைச்சுக்கிட்டு வேலை செஞ்சுக்கிட்டிருக்காரு... சமயத்துல வயசுல குறைஞ்ச அவங்க இவரை அதிகாரத்தொனில விரட்டும் போது... திருப்பிப் பேச... எதிர்த்துக் கேட்க.. நாக்கும் மனசும் துடிச்சாலும் பேச முடியாத சூழ்நிலை... ஆரம்பத்திலிருந்தே ஒரு முதலாளியா வாழ்ந்திட்டு... நூத்துக்கணக்கான பேர்களை அதிகாரம் பண்ணிட்டிருந்தவரோட மனசு அது போன்ற சூழ்நிலைகள்ல எவ்வளவு வலிக்கும்னு எனக்குத்தான் தெரியும்! அதனால...!

'அதனால.....?''

'பாவம்!... மேலதிகாரிங்க மேலே காட்ட முடியாத கோபத்தை அவரு எங்க போயி... யாருகிட்டக் காட்டுவார்?... அவர் என் மேல் காட்டுற கோபமெல்லாம்... எனக்குக் குடுக்கற அடியெல்லாம் அந்த ஆவேசத்தின் வெளிப்பாடுதான்னு எனக்கு நல்லாத் தெரியும்... அதனால்தான் அவரோட அந்த உணர்ச்சிகளுக்கு வடிகாலா என்னை நான் ஆக்கிட்டு பொறுமையா இருக்கேன். புருஷனோட சுகங்களுக்கும்... சந்தோஷங்களுக்கும் மட்டுமில்லே, சோகங்களுக்கும்... ஏன்.. கோபங்களுக்கும் கூட பொண்டாட்டி தான் வடிகால்!''

சொல்லிவிட்டு நிதானமாய் நடந்த அந்தப் பெண்மணியை ஆற்றவொண்ணா ஆதங்கத்துடன் பார்த்தாள் வசுமதி.



வடிகால் - முகில் தினகரன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக