புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 3:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:23 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:43 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:31 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:48 am

» வாழ்வை மாற்றும்
by ayyasamy ram Today at 11:12 am

» சூரியவம்சம் தேவையானி மாதிரி மனைவி கிடைத்தால்!
by ayyasamy ram Today at 11:10 am

» மனைவியின் அருமை…
by ayyasamy ram Today at 11:07 am

» செப்டம்பர் 9 ஆப்பிள் ஈவண்ட்
by ayyasamy ram Today at 11:05 am

» டெக்ஸாஸில் திறக்கப்பட்ட அனுமனின் சிலை
by ayyasamy ram Today at 11:04 am

» வாழ்வில் உயர சில வழிமுறைகள்
by ayyasamy ram Today at 11:03 am

» ரமண மகரிஷி மொழிகள்
by ayyasamy ram Today at 11:01 am

» குடும்ப உறவு முறையும் இந்து மதமும்
by ayyasamy ram Today at 10:57 am

» நடனப்பள்ளி தொடங்கினார் நடிகை இனியா
by ayyasamy ram Today at 10:54 am

» கொட்டுக்காளி -விமர்சனம்
by ayyasamy ram Today at 10:52 am

» பக்தனுக்கு இந்த உலகம் ஓர் தற்காலிக வீடு
by ayyasamy ram Today at 10:49 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:19 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» கருத்துப்படம் 27/08/2024
by mohamed nizamudeen Yesterday at 10:31 pm

» 63 வயது ஹீரோவை காதலிக்கும் மீனாட்சி சௌத்ரி
by ayyasamy ram Yesterday at 9:40 pm

» அந்தரங்கம் பேசும் ரேஷ்மா
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» எம்.ஜி.ஆரே கேட்ட பிறகும் அரசியலுக்கு வர மறுத்து விட்ட மோகன்
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» வடு நீங்கா பழைய புல்லாங்குழல்…
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» சொல்லாதே யாரும் கேட்டால்…
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» கல்யாணத் தரகர்கள்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:26 pm

» இவ்வளவு தான் வாழ்க்கையே! …
by ayyasamy ram Yesterday at 3:56 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:31 am

» எறும்பை ஏமாத்தத்தான்!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 4:03 pm

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:39 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Aug 23, 2024 5:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பெருமை Poll_c10பெருமை Poll_m10பெருமை Poll_c10 
39 Posts - 63%
ayyasamy ram
பெருமை Poll_c10பெருமை Poll_m10பெருமை Poll_c10 
22 Posts - 35%
mohamed nizamudeen
பெருமை Poll_c10பெருமை Poll_m10பெருமை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெருமை Poll_c10பெருமை Poll_m10பெருமை Poll_c10 
459 Posts - 55%
heezulia
பெருமை Poll_c10பெருமை Poll_m10பெருமை Poll_c10 
322 Posts - 38%
mohamed nizamudeen
பெருமை Poll_c10பெருமை Poll_m10பெருமை Poll_c10 
26 Posts - 3%
prajai
பெருமை Poll_c10பெருமை Poll_m10பெருமை Poll_c10 
11 Posts - 1%
Abiraj_26
பெருமை Poll_c10பெருமை Poll_m10பெருமை Poll_c10 
5 Posts - 1%
T.N.Balasubramanian
பெருமை Poll_c10பெருமை Poll_m10பெருமை Poll_c10 
5 Posts - 1%
சுகவனேஷ்
பெருமை Poll_c10பெருமை Poll_m10பெருமை Poll_c10 
4 Posts - 0%
mini
பெருமை Poll_c10பெருமை Poll_m10பெருமை Poll_c10 
4 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
பெருமை Poll_c10பெருமை Poll_m10பெருமை Poll_c10 
3 Posts - 0%
vista
பெருமை Poll_c10பெருமை Poll_m10பெருமை Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெருமை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 16, 2011 9:12 am

இருட்டை விடியல் துரத்திய அதிகாலைப்பொழுது. சேலைத் தலைப்பால் முகத்தை அழுந்தத் துடைத்துக் கொண்டு வெளியில் வந்தாள் அழகம்மை.

முற்றத்தின் ஒதுக்குப்புறத்தில், தொழுவத்தில் பசுக்கள் கறவைக்குத் தயாராக காத்திருந்தன. அங்கே பால் கறக்கும் அறிகுறி எதுவும் தெரியவில்லை.

அவளைப் பார்த்தவுடன் முற்றத்தைப் பெருக்கிக் கொண்டிருந்த செல்லம்மா- விளக்குமாற்றை அப்படியே போட்டுவிட்டு ஓடி வந்தாள்.

ஏண்டி ஓம்புருஷன் இன்னும் வரலியா? அழகம்மையின் குரல் கடுகடுவென்றிருந்தது.

நான் எவ்வளவோ சொல்லியும் கேட்காம ராத்திரியே அய்யாவோட டவுனுக்குப் போயிருச்சிம்மா.

தன் கணவனுடன் தான் செல்லம்மா புருஷன் போயிருக்கிறான் என்பதுதெரிந்ததும் அழகம்மையின்ஆத்திரம் அனல் தெறிக்க கேள்வியாக வெளிப்பட்டது. ஆமா இந்த ரெண்டுக்கும் டவுனிலே என்னடி ஜோலி?

அம்மா! உள்ளூர்லே ஒரு இடம் கூட பாக்கியில்லாம, துண்டை விரிச்சி ஒக்காந்து சீட்டு வெளையாடியாச்சி. இப்படி மரத்தடியிலேயும், களத்து மேட்டிலேயும் வெளயாடினது அலுத்துப்போச்சி போல. இப்ப டவுனுக்கு சீட்டாடப் போயிட்டாக. அதுக்கு என் புருசனை வேற தொணைக்கு கூப்பிட்டுக்கிட்டு.......

அழகம்மையின் உடம்பெல்லாம் ஈட்டியை எடுத்துக் குத்தியது போல் இருந்தது.

சொத்து சொகம் ஏராளமா பெரியவங்க தேடி வச்சும் அதை பாதுகாக்கத் தெரியாம இப்படி அலையுறாகளே அதான் பெரிய கேவலம். சரிசரி... போயி சொம்பை எடுத்துட்டு ஓடிவா! என்று அவளை விரட்டினாள்.

ஊருக்குள்ளே பெரிய வீட்டுக்காரகன்னு பெயர் சொன்னால் அது அழகம்மையின் குடும்பத்தைக் குறிக்கும். ஊருக்குள்ளே சொத்து பத்துக்களும், வெளியே வயல்கள் தோட்டம், தோப்பு என்று ஏராளமாக குவிந்து கிடந்தன. இதன் பராமரிப்பில் வீட்டுப் பெரியவர்களுக்கு அக்கரையத்துப் போனதால் அந்தச் சுமை அழகம்மையின் தலையில் விழுந்தது. அதன் அழுத்தம் அவளை நிலைகுலையச் செய்திருந்தது.

காலை நேரத்து வேலைகள் ஒருவாறு முடித்த நிலையில் ஓசிப் பேப்பரை புரட்டிக் கொண்டிருந்த மாமனார் கண்ணில் பட்டார்..

வீட்டுச் செய்திகளை அறிவதைவிட, உலக விஷயங்களை தெரிந்து கொள்வதில் அவருக்கு ஆர்வம் அதிகம்!

அப்போது அழகம்மையை நோக்கி வந்தார் செந்தியப்ப அண்ணாச்சி.

தோப்பு தோட்டம் இவைகளுக்குப் பாதுகாவலர் இவர்!

வாழைத்தோட்டத்திலே, தாரெல்லாம் வெட்டி லாரியிலே ஏத்தியாச்சி தங்கச்சி. அந்த சந்தடியிலே நம்ம டிரைவர் பய வெட்டிப் போட்டிருந்த தார்லே பருமனாப் பார்த்து பத்துத்தாரை ஒதுக்கி வீட்டுப்பக்கம் அனுப்பிட்டான்.

எதுக்காம்...?

வித்துக் காசாக்கி பாக்கெட்லே போட்டுக்கறதுக்குத்தான். களவாணிப்பயம்மா அவன்!

ஓகோ அப்படியா, அப்ப நீங்களும் பத்துத்தாரை ஒதுக்கி ஓங்க வீட்டுப்பக்கம் அனுப்பிற வேண்டியதுதானே!

என்ன தங்கச்சி இப்படிச் சொல்லிட்டே!

பின்னே எப்படிச் சொல்லச் சொல்றீங்க அண்ணாச்சி! களவாணிப் பயல்னு தெரியுது; செவுள்ளே ரெண்டு வைக்காம இங்க வந்து கதை சொல்றீகளே... கம்பு சுத்துற வீரமெல்லாம் போச்சாக்கும்!

அண்ணாச்சி ஆடிப்போனார்!

சின்னவுகளுக்கு சீட்டைப் புடிச்சி புடிச்சி கை தேஞ்சிபோச்சி. பெரியவுகளுக்கு பேப்பர்லவர்ற உலக செய்தி மட்டும் போதும். இதுக்கு ஊடே அவுக சொத்தைக் காக்குறதுக்கு கறுக்கல்லே எந்திரிச்சி ராத்திரி பன்னெண்டு மணி வரைக்கும் நாய பேயா அலையற இந்த இளிச்சவாய் சிறுக்கி அழகம்மை! இந்த லட்சத்திலே நான் பெத்த புள்ளைங்க ரெண்டு! ஆறாப்பு படிக்கிற மூத்தவ பொண்ணு இன்னும் ரெண்டு வருஷம் போனா உக்காந்திருவா, சின்னது பையன் மூணாங்கிளாஸ் படிக்கிறான். இதுங்க ரெண்டும் அனாதைகளைப் போல அலையுதுங்க. அதுங்களா ஸ்கூல் போறதும் வாரதும், கூழோ கஞ்சியோ குடிச்சிட்டு மொடங்குறதும் இங்கு யாருக்குத் தெரியுது? அண்ணாச்சி ஒண்ணு சொல்றேன் இந்த வீட்டுச் சொத்து ஆத்துலே போற தண்ணிதானேன்னு அள்ளி குடிக்க நினைக்கிறவுகளும் சரி- என்னை இப்படி அல்லாட விட்டு வேடிக்கை பாக்குறவுகளும் சரி... வெளங்கவே மாட்டாக!

திண்ணையிலிருந்து பெரியவர் பேப்பரை சுருட்டி மடக்கிக் கொண்டு எழுந்து படியிறங்கினார்.

தங்கச்சி, மாமா கோவிச்சிக்கிட்டாக போலிருக்கு என்று அண்ணாச்சி மெதுவாகச் சொன்னார்.

கோவிச்சுக்கிடட்டும் அண்ணாச்சி, எனக்குக் கவலை இல்லை. ஆம்பளைங்களா இருந்தா கொஞ்சமாவது சூடு சொரணை இருக்கணும்!

அண்ணாச்சி அதிர்ந்து போனார்! இது மாதிரி அவள் பேசிக் கேட்டதில்லை.

அந்த வேகம் குறைவதற்குள் வீட்டிற்குள் நுழைந்தாள் அழகம்மை!

பிள்ளைகள் வட்டிலில் பழைய கஞ்சியை ஊற்றிக் குடித்துக் கொண்டிருந்தார்கள்.

பெரியவர்களது அலட்சியப் போக்கினால் இந்தப் பிள்ளைகள் படுகிற அவஸ்தை அவளுக்குப் புரிந்தது. மூட்டைக் கணக்கில் உப்பு, புளி, மிளகாய், அரிசி, பருப்பு என்று அடுக்கிக் கிடந்தும், காய்கறிகள் ஒரு பக்கம் குவிந்து கிடந்தும் இதுகளுக்கு வாய்க்கு ருசியா ஆக்கிப்போட முடியவில்லை. சரியான பராமரிப்பு இல்லாமல் அவர்கள் அன்றாடம் பள்ளிக்கூடம் போய் வருகிற காட்சி அவளது இதயத்தை பிழிந்தது.

அவர்கள் அருகில் அமர்ந்து அணைத்துக் கொண்டாள்! இனி என்ன வந்தாலும் சரி; எது என்னகேடு கெட்டாலும் சரி - இனி பிள்ளைகளுக்கு நல்லதாயா இருக்கணும்! முடிவுக்கு வந்தவள், இன்னிக்கு- அம்மா, வீட்டிலேயே இருந்து, நெல்லுச்சோறு ஆக்கி, பருப்புக் கொழம்பு வச்சி, சீனியவரக்காய் பொறிச்சி சுடச்சுடப் போடப்போறேன்! ஸ்கூல் விட்டதும் சீக்கிரமா வீட்டுக்கு வரணும்! என்றவள் பிள்ளைகளை அணைத்துக் கொண்டாள்.

வாசலில் நிழலாடியது! பரம்பராயிக் கிழவி உள்ளே வந்தாள்.

என்னடியம்மா பைத்தியக்காரி மாதிரி அழுதுக்கிட்டு... ஆம்பளைங்க பொறுப்பு இல்லாதவங்கன்னு தெரிஞ்சதும், தெய்வமா, மாறி இந்தக் குடும்பத்தைத் தாங்குனியே! அப்பேர்பட்ட தைரியசாலி நீ அழலாமா?

சும்மா தூக்கி வச்சி பேசாத அய்யாம்மா! வாழத்தாரை வெட்டிக் கடத்தறவனும், தென்னங்கொலையை வெட்டி தெரியாம திங்கறவனும், இன்னும் சின்னதா- பெரிசா எவ்வளவோ திருட்டுத்தனம்! அய்யம்மா- அலுத்துப்போச்சி!, இனிமே இந்த அழகம்மை வீட்டிலேயே தான் இருக்கப்போறா! குடும்பத்தைப் பார்த்துக்கிட்டு பெத்த புள்ளைங்களை அணைச்சிக்கிட்டு..!

அவ்வளவுதானே சங்கதி, இப்ப நான் சொல்றேன் ஒரு சேதி அதைக்கேளு! இன்னைக்கு காலைல நீ அடிச்ச அடி இருக்கே... அது இந்தக் கிழவனுக்கு ஜென்மத்துக்கும் போதும்! பொறுத்துப் பொறுத்துப் பார்த்து பொங்கிட்டா போல அழகம்மைன்னு அம்பலகாரரே சொல்லிச் சிரிச்சாரு!

அவுகளுக்கு எப்படிப்போச்சி இந்த சங்கதி?

இங்கே இருந்து கோவமா கொளம்பிப் போன உன் மாமனாரு நேரா அம்பலக்காரர் வீட்டுக்குப் போயிருக்கார், அப்பத்தான் டவுனிலிருந்து வந்த பஸ்லேருந்து ஓம்புருஷன் எறங்கியிருக்கான்! அவனையும் சேத்துக்கிட்டாரு! ரெண்டு பேரும் போய் அவுக முன்னாலே நின்னுருக்காக! எல்லா சங்கதிகளையும் பொறுமையா கேட்டுக்கிட்ட அந்த நீதிமான்... மரியாதையா உங்க நடவடிக்கையை மாத்திக்கிடுங்க, இல்லைன்னா ஒரு பொட்டச்சி தயவிலே பொழைக்கிற பயலுகன்னு கெட்ட பேரு வந்து சேந்துடும்! அழகம்மைப் பொண்ணு உங்க வீட்டுக்கு மருமகளா கிடைச்சது முன்ஜென்மத்திலே நீங்க செஞ்ச புண்ணியம்! உத்தமமான ஒரு பொண்ணை நோகடிச்சா அந்தப் பாவம் ஏழு பிறப்புக்கும் கூடவே வரும்னு பெரியவுக சொல்லுவாக! இதை நல்லா புரிஞ்சிக்கிட்டு, உங்க பொறுப்புகளை நீங்களே ஏத்துக்கிட்டு அழகம்மையை நல்லவிதமான காப்பாத்துங்கடான்னு அடிச்சி சொல்லியிருக்காங்க!

அந்தப் புண்ணியவான் பேச்சை யாருதட்ட முடியும்! இவுக ரெண்டு பேரும் இனிமே நல்லா நடந்துக்குறோமின்னு சத்தியம் பண்ணிட்டாகளாம்! அதோட நாங்க எங்க தப்பை உணர்ந்ததை அழ கம்மை இங்க வந்து ஏத்துக்கிட்டு இப்ப வீட்டுக்கு வாங்கன்னு கூப்பிடணும். அது வரைக்கும் உங்க வீட்டு வாசல்லே கையைக் கட்டிக்கிட்டு கைதிங்க மாதிரி நிக்கிறோம்! இதுதான் எங்களுக்கு தண்டனை!ன்னு கேட்டுக்கிட்டாகளாம்!

அதிர்ந்து போனாள் அழகம்மாள். அப்படி விட முடியாது அய்யாம்மா! இவ்வளவு நாளா அவுக தப்பு செஞ்சதுக்கு காரணம்- தாங்குறதுக்கு நான் இருக்கேன்ங்கிற தைரியத்திலே தான்! இப்ப நானும் உங்க மாதிரி கைதட்டிச் சிரிக்கிறவளா வோ, மற்றவுங்க மாதிரி வேடிக்கை பாக்குற வளாவோ இருந்திட்டா- வருஷக்கணக்கா இந்த வீட்டுப் பொறுப்பு களைச் சுமந்துக்கிட்டு அவுக திருந்துறதுக்காக நான் நடத்துன போராட்டத்துக்கு அர்த்தம் இல்லாம போயிடும்! பொண்ணுக அதிகாரம், அந்தஸ்து, செல்வாக்குன்னு எவ்வளவு உயரத்துக்கு வேணாலும் போகலாம்! ஆனா- பாசம், பந்தம் குடும்பத்துக்கு நல்லதுன்னு ஒருநேரம் வரும் போது அவ எவ்வளவு ஆழத்துக்கும் இறங்கி நிக்க தயங்கக்கூடாது! அதுதான் அவுகளுக்குப் பெருமை! எந்தலைலே ஏத்தி வெச்ச சுமையை அவுகளே இறக்கி வைக்க வரும்போது அதைச் சந்தோஷமா ஏத்துக்கறதுதான் மரியாத! அதனாலே ஒரு நொடியிலே போயி அவுகளைக் கூட்டியாரேன்! அதுவரை இங்கேயே இருங்க அய்யாம்மா என்று கிழவிக்கு கட்டளையிட்டு விட்டு படியிறங்கி வேகமாக ஓடினாள் அழகம்மை!

பொறுமையே பெண் வடிவாகி விட்ட அழகம்மையின் அந்த நேர ஓட்டத்தையும் நெகிழ்ச்சியாக உணர்ந்தாள் கிழவி!

ஏ.பி.சதாசிவம்



பெருமை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக