ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 14:33

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:21

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:03

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 13:50

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:38

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 13:02

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 0:55

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 23:26

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 22:50

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 22:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 22:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:31

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:19

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:45

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 19:02

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:53

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:31

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:23

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:58

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:24

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாவீரர்கள்

5 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

மாவீரர்கள்  - Page 2 Empty மாவீரர்கள்

Post by அன்பு தளபதி Fri 4 Feb 2011 - 22:36

First topic message reminder :

2ம் லெப் மாலதிமாவீரர்கள்  - Page 2 Wp10151cd7
பெண் விடுதலைக்கு வித்திட்ட 2ம் லெப் மாலதி
“..பெண் அடிமைத்தனத்தின் விலங்குகளை உடைத்தெறியாத எந்த ஒரு நாடும், எந்த ஒரு சமூகமும், முழுமையான சமூக விடுதலையைப் பெற்றதாக கூறமுடியாது…”

தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் விழுதுகளுள் ஒன்றாக உருவாகி தலைவர் பிரபாகரனின் பிள்ளைகளில் ஒருத்தியாகி…………

அன்று பெண்களுக்கெதிரான சமூக அநீதிகள், அடக்குமுறைகள் என்பன மேலோங்கியிருந்தன. எமது சமூகமோ சாதி, சமய கட்டமைப்புக்களால் இறுக்கமாக பின்னிப் பிணைந்திருந்தது. அவை எமது சிந்தனைகளுக்கும் தடைக்கல்லாகவே அமைந்தன. அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்பவை அன்று பெண்களுக்கான வரைவிலக்கணமாக எழுதப்பட்டன.



அன்றைய சமூக அமைப்புக்களில் பெண்ணானவள் பலவீனமுடையவளாகவும், பயந்தவளாகவும், பணிவு மிக்கவளாகவும், வீட்டின் கடமைகளைச் செய்பவளாகவுமே கருதப்பட்டாள். உறுதியானவனாகவும் உயர்ந்தவளாகவும் ஆண் சமூகத்தில் போற்றப்பட்டாள். வீட்டின் ஆஸ்தான நாயகியாக விளங்கிய பெண்ணுக்கு அடுப்பங்கரைதான் அவளின் உறைவிடமானது. கரிப்பு…. அவளுடைய சுவாசத்தோடு ஊறிப் போனது. கல்வி கற்பதிலும், தொழில் புரிவதிலும் அவளுக்கு வேற்றுமை காட்டப் பட்டது.; அடக்கம் என்ற கட்டமைப்புக்குள் அலங்காரப் பதுமையாக மிளிர்ந்த பெண்ணின் ஆளுமைகள் எல்லாம் சமூக சம்பிரதாயங்களின் முன் நசுங்கிப் புதையுண்டு போயின. தனது விதியை எண்ணி நொந்து கொள்பவளாகவே அவள் வாழ்ந்தாள்.


விடுதலைப் போராட்டத்தின் “விழுதுகளுள் ஒன்றாக” உருவாகி; தலைவர் பிரபாகரனின் பிள்ளைகளில் ஒருத்தியாகி…………

இப்படியானதோர் சமூகக் கட்டுமானங்களில் இருந்து தான் அந்தப் போர் புரட்சி நோக்கி புறப்பட்டது. அதற்குரிய ஆவணமாக மாறி தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் தனக்கென ஒரு முத்திரையை தடம் பதித்துக் கொண்டாள் 2 ஆம் லெப். மாலதி அவர்கள்.

எமது தேசம் இந்திய இராணுவத்தின் கைகளில் சிக்குண்டு தவித்த போது ஆத்ம வேகம் கொண்டெழுந்தாள். பெண்கள் பாலியல் துஸ்பிரயோகங்களுக்கு உட்படுவதைப் பார்த்துப் பொங்கியெழுந்தாள். அவளுக்குள் வல்லமை பிறந்தது வானத்தை வளைக்கவும், மலைகளைக் குடையவும் சக்தி வளர்ந்தது. சமூகத்தை சீரமைக்கவும் தேசத்தை மீட்டெடுக்கவும் அவள் நிமிர்ந்தாள். அவள் கரங்கள் உறுதியோடு எழுந்தன. எம் தமிழர் தேச விடுதலையையும் பெண்களினது விடுதலையையும் காப்பாற்றுவற்காக தன் விதியைத் தானெ எழுதும் பெருமைக்குரியவளாக்கி தலைவர் பிரபாகரனின் பிள்ளைகளில் ஒருத்தியாகி ஆயுதம் ஏந்தினாள்.



அமைதிப்படையின் போர்வையில் தமிழீழமெங்கும் அகலக்கால் பரப்பி எம்மண்மீது யுத்தமொன்றைத் திணித்தனர் இந்தியப் படையினர். 1987 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10 ஆம் திகதி நள்ளிரவு 1.15 மணியளவில் தமிழ் பெண்களுக்கு அநீதி விளைவித்த வல்லாதிக்க இந்திய இராணுவத்துக்கு எதிராக கோப்பாய் கிறேசர் வீதியில் மகளிர் அணிப்பிரிவினர் தாக்குதலொன்றைச் செய்வதற்காக தம்மைத் தயார்படுத்தி நிற்கின்றார். மாலதியின் கண்கள் எந்நேரமும் வீதிகளை அவதானித்தபடியே தான் இருந்தன. இந்திய இராணுவச் சக்திகளை அழிக்க வேண்டுமென்ற ஆதங்கம் அவள் மனதில் குடிகொண்டேயிருந்தது. அவ்வேளை கோப்பாய்ச் சந்தி கடந்து வாகனத்தில் வந்த இராணுவத்தினர் மீது தாக்குதலைத் தொடுத்தனர். பெண் அணியினர் இங்கு மாலதியின் துப்பாக்கியிலிருந்த குண்டுகள் முதலில் இந்திய இராணுவத்தைப் பதம் பார்த்தன.



துப்பாக்கிகளின் சூட்டுச் சத்தங்களும் அவற்றின் அதிர்வலைகளும் சண்டை கடுமையாக நடந்து கொண்டிருந்ததை எடுத்தியம்பின. மாலதி இராணுவத்துக்கு மிகவும் அண்மையில் நின்று தாக்குதலை முறியடித்துக் கொண்டிருந்த தருணம் திடீரென்று காலில் காயமுற்றாள். மாலதியின் குரல் சீறிப் பாயும் ரவைகளின் ஒலிகளுக்கு மத்தியிலும் ஏனைய போராளிகளின் செவிகளுக்கு கேட்கத்தான் செய்தது. ‘நான் காயப்பட்டிட்டன் என்ர ஆயுதத்தைப் பிடியுங்கோ. என்ர ஆயுதத்தைக் கொண்டு போய் அண்ணையிட்டைக் குடுங்கோ.”

தான் வீரமரணம் எய்தாலும் உயிரைவிட மேலாக நேசித்த ஆயுதம் அந்நியரின் கைகளுக்குப் போய்விடக் கூடாது என்ற உறுதியான எண்ணத்தில் தன்னைப் பார்க்க வேண்டாம். ஆயுதத்தை எடுத்துச் செல்லும்படி கூறிக் கொண்டிருந்தார். அவரை எப்படியாவது காப்பாற்றி விட வேண்டும் எனச் சென்ற சக போராளி ஒருவரிடம்.
‘என்ர ஆயுதம் பத்திரம் என்னை விட்டடிட்டு ஆயுதத்தைக் கொண்டு போ.” எனச் சொல்லிக் கொடுத்து தனது கழுத்தியிலிருந்த நஞ்சையருந்தி தனது இலட்சியக் கனவோடு தாய் மண்ணை முத்தமிட்டு தமிழீழ வரலாற்றில் புதிய சரித்திரம் ஒன்றைப் படைத்து தமிழீழத்தின் முதலாவது பெண் வித்தாய் புதைந்தாள்.



அவளின் வேண்டுகோளுங்கிணங்க அவரது ஆயுதம் பாதுகாப்பாக கொண்டு வரப்பட்டு இன்னொரு போராளியின் கரங்களில் ஒப்படைக்கப் பட்டது. ஒவ்வொரு ஆயுதத்தின் பெறுமதிமிக்க மதிப்பையும் வெற்றி இலக்கு நோக்கிய பயணத்திலே அவற்றின் முக்கிய தன்மையையும் மாலதி அவர்கள் நன்கு உணர்ந்திருந்தமையை இது வெளிக்காட்டி நிற்கின்றது. இன்று தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஒவ்வொரு ஆயதத்தின் பெறுமதியையும் அதன் முக்கியத்துவத்தையும் ஒவ்வொரு போராளியும் உணர்ந்து அவற்றை நேசிக்கும் மனப்பாங்கையும் ஈழத் தமிழருக்கான விடுதலைப் போராட்டம் எமக்கு சித்தரித்துக் காட்டுகின்றது.

எமது சமூக அமைப்பில் புரையோடிப் போயிருந்த பிற்போக்குத் தனமான பழமைவாத சிந்தனைகளை உடைத்துக் கொண்டு போராடப் புறப்பட்ட மாலதி ஆணைவிடப் பெண்ணுக்கு ஆளுமைத் தன்மை குறைவு என்னும் கருத்தியல் வாதங்களை 21 வருடங்களுக்கு முன் எமது சமூகத்தின் முன் பொய்மைப் படுத்தினர். அவர் புதுமைப் பெண்ணாகவல்ல புரட்சிப் பெண்ணாக அவதாரமெடுத்தார். அவரின் நிமிர்வு ஆயிரமாயிரம் தலைகளை உருவாக்கியது. அவரின் பாதங்கள் ஆயிரமாயிரம் பாதங்களுக்கு வழிகாட்டின.


தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் விழுதுகளுள் ஒன்றாக உருவாக்கி இன்று அதைத் தாங்கும் வேராகவும் பரிணாமம் பெற்றுவிட்ட மகளிர் படையணிகளின் தோற்றம், வளர்ச்சி, எழுகை என்பவற்றுக்கு வித்திட்டவர் 2 ஆம் லெப். மாலதி அவர்கள். இவரின் வழிகாட்டல் மகளிர் பிரிவினருக்கு புதியதொரு அத்தியாயப் படிக்கல்லாகவும் அமைந்தது. மாலதியின் நினைவாக அவருடைய பெயரைத் தாங்கிய மாலதி படைப்பிரிவினர் தமிழீழ போரியல் வரலாற்றில் பல வரலாற்றுச் சாதனைகளை நிகழ்த்தி வருகின்றமை இங்கு சுட்டிக் காட்டத்தக்கது.



2 ஆம் லெப். மாலதி விதைத்த விடுதலை மூச்சு என்னும் விதை தமிழீழப் பெண்களிடத்தில் பெரு விருட்சமாக வளர்ந்தும் பரந்தும் வியாபித்தும் அவர்களின் எழுச்சிக்கு கைகோர்த்தன.நம் தமிழீழப் பெண் சமூகத்தின் மத்தியில் ஒரு பெரிய புரட்சியை நிகழ்த்தியிருக்கின்றோம். தமிழர் வரலாற்றிலே நடைபெறாத புரட்சியொன்று தமிழீழத்தில் நடைபெறுகின்றது. எனும் தலைவரின் சிந்தனைத் தெளிவோட்டம் இங்கு நினைவுகூறத் தக்கது.

தமிழீழ விடுதலை வரலாற்றில் பெண்கள் தமக்கென ஒரு இடத்தினை தட்டிச் சென்றுள்ளனர். பல வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த மகாகவி பாரதியார் சொன்ன பெண்ணியலையும் மிஞ்சி விட்டனர் எமது தேசத்துப் பெண்கள். இன்று பல கட்டுமானத் துறைகளிலும் முன் நிற்பது இவர்கள் தான். தம் தேச விடுதலைக்காகவும் தமிழின விடுதலைக்காகவும் இலங்கை அரசிடம் நீதி கேட்கும் தமிழீழப் பெண்களின் உணர்வு வேட்கைகள் எமக்கொரு இறுதி இலட்சியம் கிடைக்கும் வரை அவர்களின் விடுதலை நோக்கிய பயணங்கள் மேலும் வலுப்பெற்றுக் கொண்டேயிருக்கும்.

தாய்மண் விடிவுக்காக இன்று புலம்பெயர் வாழ் தாய் நாட்டுப் பெண்களின் புரட்சியானது மாபெரும் எழுச்சிகளைத் தோற்றுவித்து வருகின்றது. ஆனால் ஒவ்வொரு தமிழின பெண்ணின் ஆத்மார்த்த கருத்துக்களின் வெளிப்பாடுகள் இன்னும் உலக மாதாவின் செவிகளுக்கு கேட்கப்படவில்லை. தமிழ்த் தாய் வயிற்றில் பிறந்த ஒவ்வொரு தமிழ்ப் பெண்களாகிய நாம் தமிழ்மண் விடிவுக்காகவும் பெண்ணியலின் சுதந்திரத்திற்காகவும் தொடர்ந்து போராடுவோம்.

நன்றி eelam.tamilpower.com


Last edited by maniajith007 on Fri 4 Feb 2011 - 22:44; edited 1 time in total
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down


மாவீரர்கள்  - Page 2 Empty Re: மாவீரர்கள்

Post by Guest Sat 5 Feb 2011 - 14:28

நல்ல தொடர் பதிவு ..... தொடருங்கள் மணி அண்ணே.... மாவீரர்கள்  - Page 2 677196
avatar
Guest
Guest


Back to top Go down

மாவீரர்கள்  - Page 2 Empty தியாக தீபங்கள் மில்லர், திலீபன், மாலதி தொடங்கிய போரைத் தொடர்வோம்.

Post by அன்பு தளபதி Sat 5 Feb 2011 - 14:53

புலம்பெயர் நாடுகளில் மாவீரர் துயிலும் இல்லம் அமைப்போம்!

அவற்றை புதிய ஈழ விடுதலைக்கான புரட்சிப்பள்ளிகளாய் மாற்றுவோம்!

மாவீரன் மில்லர் நினைவாக!

* பக்ச பாசிஸ்டுக்களின் ஈழதேச முற்றுகையை முறியடிப்போம்!

* இடைவழிச் சமரசங்களைத் தோற்கடிப்போம்! ஈழவிடுதலைக்காய் ஊற்றெடுப்போம்!

* 18 வது அரசியல் சட்டத் திருத்தத்தை எதிர்ப்போம்!

* சிங்களப் பேரினவாத போலிப் பாராளமன்றப் பாதையை நிராகரிப்போம்!

* தேசிய சுயநிர்ணய உரிமையை உயர்த்திப்பிடித்து பிரிந்து செல்லும் உரிமைக்காகப் போராடுவோம்.

* பிரிந்து செல்லும் உரிமை அங்கீகரிக்கப்படாத ஒற்றையாட்சி அரசு முறையில் பிரிவினையே தீர்வு என முழங்குவோம்!

* ஈழத்தமிழர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு குறித்து கருத்தறிய வடக்கு கிழக்கு தமிழர்களிடையே பொது ஜன வாக்கெடுப்பு நடத்தக் கோருவோம்!

மாவீரன் திலீபன் நினைவாக!

* விடுதலைப் போரைக் கருவறுத்த விஸ்தரிப்புவாத இந்திய அரசுக்குப் பதில் சொல்வோம்!

* இலங்கையை அடிமைப்படுத்திய,இந்திய இலங்கை ஒப்பந்தத்தை கிழித்தெறியப் போராடுவோம்!

* இலங்கையில் இந்தியாவின் தலையீட்டை முறியடிக்க 'இந்திய எதிர்ப்பு மக்கள் இயக்கத்தைக்' கட்டியமைப்போம்!

* இந்து சமுத்திரப் பிராந்தியத்தை, ஏகாதிபத்திய உலக மறு பங்கீட்டிற்கான போர்க்களமாக மாற்றுவதை தடுத்து நிறுத்துவோம்.!

* அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஏவல் நாயாக இருந்து இலங்கை மக்களை 'இந்திய சீன மேலாதிக்கப் போட்டிக்குள் இழுத்து விடுவதை எதிர்ப்போம்!

* நவீன காலனியாதிக்கத்தின் தாசன் மன் மோகன் சிங், 'அபிவிருத்தி' என்ற பெயரால் உலகமயமாக்கல் கொள்கையை இலங்கை மக்கள் மீது திணிப்பதை எதிர்ப்போம்!

முத்துக்குமாரன் மற்றும் தீயில் கருகிய 16 தமிழக இளைஞர்கள் தியாகத்தின் நினைவாக!

* 'இன மானம்' 'தமிழ் வீரம்', பிரபாகரன் புகழ் பாடி, தமிழக மக்களை ஏமாற்றி இந்திய விஸ்தரிப்புவாதத்தை தாங்கிப்பிடிக்கும், சமரசவாத, சீர்குலைவுவாத நெடுமாறன், வை கோ, சீமான் கும்பலைத் தனிமைப்படுத்துவோம்.

* காங்கிரஸ், பாரதிய ஜனதா, போலிக் கொம்யூனிஸ்ற் கும்பல்களின் அதிகாரத்தின் கீழ் நசுக்கப்படும் இந்திய தேசிய இனங்களுடன் ஒன்றுபடுவோம்!

* காஸ்மீர் தேசத்தின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தை ஆதரிப்போம்

* ஆந்திர பழங்குடி மக்களின் உரிமைகளுக்காகவும், அவர் வாழ் நிலத்தின் வளங்களைக் காப்பதற்காகவும் போராடும் மா ஓஇஸ்டுக்களுக்கெதிராக மன் மோகன் கும்பல் தொடுத்துள்ள பச்சை வேட்டைப் பயங்கரத்தை எதிர்ப்போம்!

* தமிழகத்தில் போல்சுவிக்குகளுடனும், மக்கள் ஜனநாயக இயக்கங்களுடன் ஐக்கியப்படுவோம்!

மாவீராங்கனை மாலதி நினைவாக!

* ஏகாதிபத்திய உலக மறுபங்கீட்டுப் பிணக்குகளுக்கு பஞ்சாயத்து வழங்கும் ஐ.நா.மன்றத்தில் ஈழதேசிய ஒடுக்குமுறைக்கு நீதி கிடைக்காது என்பதை அறிவோம்!

* ஏகாதிபத்தியம் தேசியத்தின் எதிரி! புலம்பெயர் நாடுகளில் அரசுகளை நோக்கியல்ல மக்களை நோக்கி அரசியல் பிரச்சாரம் செய்வோம்.

* ஈழத்தை ஆக்கிரமித்துள்ள சிறீலங்காத் துருப்புக்களை வெளியேற்றப் போராடும் அதேவேளையில், ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும், பாலஸ்தீனத்திலும் இருந்து அந்நிய ஆக்கிரமிப்புப் படைகளை வெளியேற்றவும் கோருவோம்!


* தமிழீழ யுத்தக்குற்றவாளிகளை கூண்டில் நிறுத்தப்போராடும்அதேவேளையில்,அமெரிக்க,பிரித்தானிய,இஸ்ரேலிய, இந்திய யுத்தக்குற்றவாளிகளையும் கூண்டில் நிறுத்தப்போராடுவோம்.

* மாவீரர்களை நினைவு கொள்ளும் வேளையில், இன்னும் மாளாத வீரர்களை பக்ச பாசிசத்தின் பிடியில் இருந்து விடுவிக்கப் போராடுவோம்!

* புலம்பெயர் நாடுகளில் மாவீரர் துயிலும் இல்லம் அமைப்போம்! அவற்றை புதிய ஈழ விடுதலைக்கான புரட்சிப்பள்ளிகளாய் மாற்றுவோம்!

மாவீரர்கள் நமது அரசியல் புரட்சியின் பொக்கிசங்கள், அவர்கள் பெயரால் கேளிக்கைகள் நடத்துவதைத் தவிர்ப்போம்!

மாவீரர்கள் நமது தாயக விடுதலைக்காக மரித்த போர்வீரர்கள்!

அவர்கள் பெயரால் நாடுகடந்த அரசாங்கம் அமைக்கும் போலிகளை இனங்காண்போம்!

நாடுகடந்த அரசாங்கம் நோக்கி ஈழத்தமிழரை வழி நடத்தும் கேடுகெட்ட திராவிடத் துரோகிகளை புறந்தள்ளுவோம்!



* மக்கள் புரட்சி வெடிக்கட்டும்! சுதந்திர தமிழீழம் மலரட்டும்!

மாவீரர் கனவு நனவாகட்டும்!

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்!

இறுதி வெற்றி ஈழ மக்களுக்கே!

நன்றி ஹிஸ்டரியேல்டீடீஈ வலைப்பூ
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

மாவீரர்கள்  - Page 2 Empty உலகத் தமிழர் வரலாற்றில் மாவீரர்கள்

Post by அன்பு தளபதி Sat 5 Feb 2011 - 14:55

வீரர்களுக்கு மா என்ற அடைமொழி கொடுத்தவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் மா என்ற தழுவுசொல் ஒரு அர்த்தமுள்ள உயிர்மெய் எழுத்து. உயிரும் உடலும் கலந்த அர்த்தம் அதில் வெளிப்படுகின்றது. அழகு, வலிமை, பெருமை, பெரிய, குற்றமற்றவர் என்பன மா அடையின் பிற அர்த்தங்கள்.

பழந்தமிழர் வரலாற்றில் மாவீரர் என்ற சொற் பிரயோகம் கிடையாது. விசேட அர்த்தங்களோடு மாவீரர் என்ற சொல்லை முதன் முதலாகப் பயன் பாட்டிற்குக் கொண்டு வந்தவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளாவர் மாவீரர் என்பது ஆண் பெண் இருபாலாரையும் ஒரு சேரக் குறிக்கும் பொதுச் சொல்.

வரலாற்றில் முதல் ஆண் மாவீரர் லெப் சங்கர் என்றழைக்கப்படும் செல்வச்சந்திரன் சத்தியநாதன் ஆவார். இவர் யாழ் வடமராட்சி மாவட்டத்திலே கம்பர் மலை எனும் கிராமத்தில் 1961 யூன் 19ம் நாளில் பிறந்தவர். 1982 நவம்பர் 27ம் நாளில் அவர் வீரச்சாவடைந்தார்.

மாவீரர்களின் இறப்பை வீரச்சா என்று அழைப்பது தமிழீழ விடுதலைப் புலிகளின் இன்னுமோர் மரபு மாவீரர்களின் சா தனித்துவமானது தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் “காலத்தால் அழியாத சிரஞ்சீவிகள், சுதந்திரச்சிற்பிகள், எமது மண்ணில் ஒரு மாபெரும் எழுச்சிக்கு வித்திட்டுச் சென்ற வீரமறவர்கள் “ என்று கூறியுள்ளார்.

லெப் சங்கரின் வீரச்சா நாளான நவம்பர் 27 ஈழத் தமிழர்களாலும் உலகத்தமிழர்களாலும் மாவீரர் நாளாகக் கொண்டாடப் படுகிறது. களப்பலியான முதல் புலி மாவீரனும் ஒரு வீரப் பரம்பரையைத் தொடங்கிய முன்னோடியுமான சங்கர். தமிழர் வாழும் நாடெல்லாம் வீடெல்லாம் நினைவு கூரப்படுகிறார்.

யாழ் திருநெல்வேலியில் நடந்த ஒரு முற்றுகையில் காயத்துடன் மீட்கப்பட்ட சங்கர் மருத்துவ சிகிச்சைக்காகத் தமிழ் நாட்டிற்குக் கடல் வழியாகக் கொண்டு செல்லப்பட்டார். பெரும் குருதிப் பெருக்கு ஏற்பட்டாலும் அவர் தப்பிப் பிழைப்பார் என்ற நம்பிக்கை அவரை எடுத்துச் சென்றவர்களுக்கு இருந்தது.

அது தமிழீழ விடுதலைப் புலிகள் தமக்குச் சொந்தமான மருத்துவ பிரிவையும், மருத்துவ நிலையங்கள், மருத்துவப் பணியாளர்கள், குருதிப் பெருக்கை நிறுத்தி உடனடி சத்திர சிகிச்சை வழங்குவோர் போன்ற கட்டமைப்புக்களைக் கொண்டிராத காலம்.

புலிகளின் வளர்ச்சிப் பாதையில் மருத்துவக்கல்வி தொடக்கம் கள மருத்துவம் வரையிலான முக்கிய கட்டங்கள் உள்ளன போராளி மருத்துவர்கள், மருந்தாளர்கள், தாதிகள் சிகிச்சைக்குப் பிந்திய அனுசரனை வழங்குவோர் என்று புலிகளின் மருத்துவக்கட்டமைப்பு விரிகின்றது.

கால் கை உறுப்புக்களை இழந்த போராளிகளுக்குச் செயற்கை உறுப்புக்களை வழங்கும் பிரிவை வெண்புறா அமைப்பு என்ற பெயரில் புலிகள் செயற்படுத்தினர் ஜெய்ப்பூர் செயற்கை உறுப்புத் திட்டத்தைப் பின்பற்றிச் சில மாற்றங்களோடு புலிகள் அதை நடைமுறைப் படுத்தினர்.

மீண்டும் களத்திற்குத் திரும்ப முடியாத போராளிகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் நோக்கில் லெப்கேணல் நவம் (செல்லப்பெருமாள் அருமைராசா) பிறப்பிடம் கொக்குத்தொடுவாய், முல்லைத்தீவு, பிறப்பு 1961 பெப்பிரவரி 02 வீரச்சாவு 1989 மே 15 அவர்கள் பெயரில் நவம் அறிவுகூடம் என்ற நிலையத்தைப் புலிகள் திறந்தனர்.

லெப்கேணல் நவம் புலிகளின் தாக்குதல் தளபதிகள் வரிசையில் முதலிடம்; பிடிப்பவர் ஒரு கையை இவர் வெஞ்சமரில் இழந்தவர். எனினும் இந்தியப் படையினருடன் பொருதிய போது படுகாயமடைந்து வீரச்சாவடைந்தார் நவம் அறிவு கூடத்தில் கணினிக் கல்வியுடன் தொழில் நுட்பப் பயிற்சி மற்றும் ஆதாரக் கல்வியும் வழங்கப்பட்டது கண் இழந்தோருக்கு பிறெயில் முறைப்படி கல்வி புகட்டப்பட்டது.

நவம் காட்டுச் சண்டையில் வல்லவர் காட்டுப் பாதைகளை நன்கு அறிந்து வைத்திருந்தவர் இந்தியப் படைகளுடனான வன்னிச் சமர்களில் அவருடைய இந்த அறிவு ஆக்கிரமிப்புப் படையைக் கட்டிப் போடுவதற்கு உதவியது. தேசியத் தலைவருக்குப் பாதுகாப்பு வழங்கும் பொறுப்பையும் நவம் ஏற்றார் “நவம் இல்லாவிட்டால் நான் இல்லை” என்று பிரபாகரன் அவர்கள் பகிரங்கமாகக் கூறியிருக்கிறார்.

தமிழ் நாடு கொண்டு செல்லப்பட்ட லெப் சங்கருக்கு உலகத்தமிழரின் பேராதரவு பெற்ற பெருந் தலைவர் நெடுமாறன் ஜயா அவர்களின் பண்ணை வீட்டில் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனளிக்காமல் மாலை 6.05 மணியின் போது அவர் வீரச்சாவடைந்தார்.

சங்கரின் வீரச்சா நாளை மாவீரர் நாளாகக் கொண்டாடும் அதே வேளையில் சங்கரின் சா எவ்வளவு தூரம் தேசியத் தலைவர் அவர்களைப் பாதித்துள்ளது என்பதை உலகத் தமிழர்கள் உணர வேண்டும் நான்கு பிள்ளைகளில் கடைசியானவர் என்ற காரணத்தால் பிரபாகரனைச் செல்லமாகத் தம்பி என்று அழைப்பார்கள்.

சங்கரின் உயிர் பிரியும் வரை அவருடைய வாய் தம்பி தம்பி என்று ஒலித்தபடி இருந்தது இறுதிவரை என் நினைவாக இருந்த சங்கரை எப்படி மறப்பேன் அந்த நாளன்று நான் அதிகம் யாருடனும் பேசுவதில்லை மூன்று நேரமும் உணவு அருந்துவதில்லை என்று தனக்கு நெருக்கமானவர்களுக்குப் பிரபாகரன் சொன்னார்.

உலகத் தமிழுறவுகள் விடுதலைப் புலிகளின் இன்னும் சில விசேட அடையாளங்களையும் அறிய வேண்டும் விடுதலைப் புலி அமைப்பில் இணைவோர் மிக இறுக்கமான ஒழுக்கக் கட்டுப்பாடுகளைப் பேண வேண்டும் மது அருந்துதல் புகை பிடித்தல் போன்றவற்றை முற்றாக கைவிட வேண்டும்.

பொது மக்களின் நலனில் முழுக்கவனஞ் செலுத்துவதோடு அர்ப்பணிப்பு, ஈகம் மண் பற்று, இனப்பற்று ஆகியவற்றிற்கு முன்னுரிமை கொடுத்தல் அவசியம் உறுப்பினராக இணைவோருக்கு இயற்பெயர் தவிர்ந்த பிறிதோர் பெயர் வழங்கப்படுகிறது இதை வழமையாக இயக்கப்பெயர் என்கிறார்கள் பிரெஞ்சு மொழியில் நொம் டி கரே எனப்படுகிறது.

புலிகள் அமைப்பில் இணையும் அனைவரும் சமமாகப் பார்க்கப்படுகின்றனர் எல்லோரும் வீரவேங்கைகள் என்று அழைக்கப்படுகிறார்கள் இவர்கள் களப்பலியாகி மாவீர்களாகும் போது தகுதி, சாதனை சேவைக்காலம் ஆகியவற்றின் அடிப்படையில் அவர்களுக்கு இராணுவப் பதவி வழங்கப்படுகிறது.

இராணுவப் பதவி என்பது ஜக் குறிப்பிடுகின்றது வீரச்சாவடைந்த பின் பதவி வழங்கும் வழமையைப் பிறிதோர் இராணுவக் கட்டமைப்பிலும் காண முடியாது எனினும் சில குறிப்பிடத்தக்க புலிக் கட்டளைத் தளபதிகளுக்கு அவர்கள் வாழ்நாளிலே கேணல் பட்டம் வழங்கப்பட்டிருக்கிறது. ஒரு வகையில் இதை விதிவிலக்கு எனலாம்.

ஏண்ணிக்கைய் பொறுத்தளவில் லெப் கேணல் தர அதிகாரிகளின் வீரச்சாவு மிக அதிகம் இடை நிலை அதிகாரிகள் படை நடவடிக்கைகளை முன்னின்று நடத்தினர் என்பதை இது எடுத்துக்காட்டுகிறது என்னைப் பின் தொடர் என்ற கோட்பாடு இதில் செயல்வடிவம் காண்கிறது. இஸ்ரெயில் இராணுவத்திலும் என்னைப் பின்தொடர் என்ற கோட்பாடு காணப்படுகிறது.

கட்டளைத் தளபதிகளுக்கு கேணல் பட்டம் வாழ்நாளில் வழங்கப்படுவதாக ஏற்கனவே சொன்னோம் இவர்களில் ஒரு சிலர் பற்றிக் குறிப்பிடுவது மிகப் பொருத்தமாகும். தலைவர் அவர்களுடன் இணைந்து அவருடைய போரியல் தத்துவங்களுக்கு ஒப்பற்ற வடிவம் கொடுத்த கேணல் ராயு, அம்பலவாணர் நேமிநாதன் 1961 மே 30 – 2002 ஆகஸ்து 25 வீரச்சாவு பற்றி விசேடமாகக் குறிப்பிடலாம்.

விடுதலைப் புலிகளின் சிறப்புக் கொமான்டோ பிரிவை உருவாக்கியவர். வுpடுதலைப் புலிகளின் பொறியியல் பிரிவுப் பொறுப்பாளராக இருந்தவர் விடுதலைப் புலிகளின் ஆட்டிலறிப் பிரிவு உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்தவர். எலத்திரனியல் மற்றும் கணினிக் கருவிகளைக் களமுனையிலும் ஆய்வு கூடத்திலும் திறம்பட இயக்கியவர் என்ற பல சிறப்புக்களுக்கு ராயு உரியவர் .மேலும் இஸ்ரெயில் தாயாரிப்பு ஆளில்லா வேவு விமானத்தை விண்ணில் இருந்து வீழ்த்திய தொழில்னுட்ப சிறப்பு அவருடையதாகும்.

எதிரி வீழ்த்த முடியாத இவரைப் புற்று நோய் சாய்த்து விட்டது முகமாலை எல்லைக் காவலன் கேணல் தீபன், கடற்படைத் தளபதி கேணல் சூசை, மாலதி படையணித் தலைவி கேணல் விதுசா, சோதியா படையணித் தலைவி கேணல் துர்க்கா ஆகியோரின் சாதனைப் பட்டியல் நீளமானது.

மாபெரும் தியாகங்கள் மூலமே மாபெரும் சாதனைகளைச் செய்ய முடியும் என்பது சான்றோர் வாக்கு ஏறத்தாழ 40.000 வரையிலான மாவீரர்களை தமிழீழம் கண்டிருக்கிறது. மாவீரர் வரலாறு தியாக வரலாறாக இடம் பெறுகிறது இதை விட வேறு விளக்கம் சொல்ல முடியாது.

மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும் என்று குரல் கொடுத்த மாவீரன் லெப் கேணல் திலீபன், இராசையா பார்த்தீபன் ஊரெழு, யாழ்1963 நவம்பர் 27 வீரச்சாவு 1987 செப்ரம்பர் 26 பற்றிக் குறிப்பிடாமல் இருக்க முடியாது.

போர்க் களச் சாதனையாளரான திலீபன் 1987 செப்ரம்பர் 15 தொடக்கம் 26 ம் நாள் வரையிலான பன்னிரண்டு நாள் நீரின்றி உண்ணாநோன்பு இருந்து இறுதி நாளில் தனது இன்னுயிரைத் தற்கொடை ஆக்கியவன் திலீபன் காந்தி தேசத்தின் ஓரவஞ்சகத்தை உலகிற்கு உணர்த்தியவன் திலீபன்.

முதலாவது ஆண் மாவீரர் லெப் சங்கர், முதலாவது பெண் மாவீரர் 2ம் லெப் மாலதி, சகாயசீலி பேதுரு, மன்னர் 1967 சனவரி 01 – வீரச்சாவு 1987 ஒக்ரோபர் 10 இந்திய இராணுவத்தை எதிர்த்து யாழ் கோப்பாயில் நடந்த போரில் இவர் வீரகாவியமானார். விடுதலைப் புலிகளின் பெண் போராளிகள் மாலதி படையணி இவர் பெயரில் இயங்குகிறது. 2ம் லெப்டினன் அனிதா சித்திராதேவி தம்பிராசா 19.09.1970 – வீரச்சாவு 28.11.1988. இவர் தென் தமிழீழத்தின் வீரச்சாவடைந்த முதலாவது பெண் போராளியாவார்.

பெண் போராளிகளின் பங்காற்றுகை பற்றித் தேசியத் தலைவர் பின்வருமாறு கூறினார் நாம் தமிழீழப் பெண் சமூகம் மத்தியில் ஒரு பெரிய புரட்சியை நிகர்த்தி இருக்கிறோம் தமிழர் வரலாற்றிலேயே நடைபெறாத புரட்சி ஒன்று தமிழீழத்தில் நடைபெற்றிருக்கின்றது. ஏமது விடுதலைப் போரின் மிகப் பெரிய சமூகப் பெறுபேறுகளில் பெண் விடுதலை முன்னணி இடம் வகிக்கின்றது.

ஒரு கைவிரலில் எண்ணக் கூடியளவு பிரிகேடியர்களை தமிழீழ விடுதலைப் புலித் தலைமை அங்கீகரித்திருக்கிறது மேற்கூறிய பெண் படையணித் தலைவிகள் இருவரும் 2009 ஏப்பிறில் 04ம் நாள் களத்தில் வீரச்சாவடைந்தனர். இருவரும் பிரிகேடியார் தரத்திற்கு உயர்த்தப் பட்டுள்ளனர்.

முதலாவது பிரிகேடியர் என்ற வரலாற்றுச் சிறப்பு புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் அவர்களைச் சாரும் பரமு தமிழ்ச்செல்வன் யாழ் சாவகச்சேரி 1967 ஆகஸ்து 29 – வீரச்சாவு 2007 நவம்பர் 02ம் நாள் பெரும் படை வீரனாகத் திகழ்ந்த இவர் 1993 தொடக்கம் அரசியல் துறைப் பொறுப்பாளராக நிலை பெற்றார் எதிரியின் குண்டு வீச்சில் வீரச்சாவடைந்தார், தேசியத் தலைவரின் சிந்தனை ஓட்டத்தை நன்கு அறிந்தவர் சர்வதேசம் புகழ் பெற்ற அதியுயர் இராசதந்திரியாகச் செயற் பட்டார்.

சமர்க்கள நாயகன் என்று பலராலும் அறியப் படும் பிரிகேடியர் பால்ராஜ் – லீமா, பாலசேகரம் கந்தையா, கொக்குத்தொடுவாய், முல்லைத்தீவு 1965 நவம்பர் 27 வீரச்சாவு 2008 மே 20 உலகின் போரியியல் வரலாற்றில் தடம் பதித்தவர். ஆற்றல் மிகுந்த ஆன்ம வல்லமை மிகுந்த இலட்சியப் போராளி அவர் நடத்திய குடாரப்புத் தரையிறக்கம் உலகின் முன்னணி இராணுவக் கல்லூரிகளில் கருத்தூன்றிப் படிக்கப் படுகின்றது.

முக்கியமாகச் சொல்ல வேண்டியதாக விடுதலைப் புலிகளின் போரியல் மரபு இருக்கிறது ஒவ்வொரு இராணுவத்திற்கும் ஒருவகைப் பாரம்பரியம் இருக்கிறது இதை எஸ்பிறே டீ கோர்(நுளுPஐசுஐவு னுநு ஊழுசுPளு ) என்பார்கள் இதை அடியெடுத்துக் கொடுத்த மாவீரன் மூத்த தளபதி லெப் சீலன் 1960 டிசெம்பர் 11 – வீரச்சாவு 1983 யூலை 15 இவருடைய இயற் பெயர் லூக்காஸ் சார்ள்ஸ் அன்ரனி. திருமலையைச் சேர்ந்தவர்.

எதிரியின் முற்றுகையில் காயப் பட்டுத் தப்பமுடியாத நிலையில் தன்னைச் சுட்டுவிட்டு ஆயுதத்தோடு தப்பும்படி சக தோழனுக்கு கட்டளையிட்டார் இதன் மூலம் வீரச்சாவடைந்த அவர் புலிகளின் வீரமரபிற்கு வித்திட்டார் தேசியத் தலைவரின் மூத்த மகன் சார்ள்ஸ் அன்ரனி என்று பெயரிடப் பட்டுள்ளார்.

விதைக்கப் பட்ட மாவீரர்கள் உயிர்த்தெழுவார்கள் என்ற நம்பிக்கை தமிழீழ மக்களுக்கு உண்டு இதற்கான மாவீரர் துயிலும் இல்லங்களையும் நினைவுச்சின்னங்களையும் சிதைக்கும் நடவடிக்கையில் எதிரி ஈடுபடுகிறான்.ள புலிகள் ஏற்படுத்திய விழிப்புக் கண் உறங்காது என்று அவனுக்குத் தெரியும்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்
நன்றி உயர்வு இணயம்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

மாவீரர்கள்  - Page 2 Empty மாவீரர் கேணல் கிட்டு

Post by அன்பு தளபதி Sat 5 Feb 2011 - 14:58

மாவீரர்கள்  - Page 2 Kittu4-234x300
“கிட்டுவை ஆழமாக நேசித்தேன். தம்பியாக தளபதியாக எனது சுமைகளைத் தாங்கும் உற்ற தோழனாக நான் அவனை நேசித்தேன். இது சாதாரண மனிதப் பாசத்திற்கு அப்பாலானது. ஒரே இலட்சியப் பற்றுணர்வில் ஒன்றித்துப் போராட்ட வாழ்வில் நாம் பகிர்ந்து கொண்ட அனுபவத்தில் ஒருவரையயாருவர் ஆழமாக இனங்கண்ட புரிந்துணர்வில் வளர்ந்த நேயம் அது.”

– தமிழீழத் தேசியத் தலைவர்.

1979இன் தொடக்கக் காலப் பகுதி விடுதலைப் போராட்டத்திற்கு அடித் தளமிட்ட காலம். இக்காலகட்டத்தில்தான் கிட்டு விடுதலைப் போராளியாக வளர்ச்சி பெற்றார். இவரின் இயற்பெயர் சதாசிவம் கிருஷ்ணகுமார். வெங்கிட்டு என்பது இயக்கப் பெயர். பின்னாளில் தமிழீழ மக்களால் கிட்டு என்று செல்லமாக அழைக்கப்பட்டார். கிட்டு தலைவர் பிரபாகரனிடம் நேரடியாகப் போரியலைக் கற்றார். கிட்டு வேகமும் விவேகமும் உள்ள துடிப்புமிக்க இளைஞர்.

1983 மார்ச் 04 அற்புதன் தலைமையில் உமையாள்புரம் தாக்குதலுக்காக விடுதலைப் புலிகளின் அணி ஒன்று சென்றது. அதில் கிட்டுவும் ஒருவர்.

வீதியில் நிலக்கண்ணி வெடிகளைப் பொருத்திவிட்டுப் பகைவனின் வரவை எதிர்பார்த்துக் காத்துள்ளனர். சிங்களப் படை வண்டிகள் வருகின்றன. அவை நெருங்கும் நேரத்தில் ஆட்டுக்குட்டி ஒன்று எதிர்பாராமல் ஓடிவந்து கண்ணிவெடியை மிதித்து வெடிக்கச் செய்து விடுகிறது. வெடித்த மறுகணமே சிங்களப் படையினர் கண்மூடித்தனமாகச் சுடுகின்றனர். பின்வாங்குவது தவிர வேறு வழியில்லை. கிட்டு களநிலை பாதகத்தைக் கருத்திற் கொள்ளாது துணிந்து நின்று தாம் வைத்திருந்த பு 3 (G 3) துமுக்கியால் படைக் கவச வண்டியைச் சுடுகிறார். சிங்களப் படை செயலற்றுப் போகிறது. தலைவரின் நம்பிக்கைக்கு உரியவராகிறார் கிட்டு.

1983 ஏப்ரல் 07இல் விடுதலைப் புலிகளின் தாக்குதல் அணிக்கு இரண்டாவது பொறுப்பாளராகக் கிட்டு அமர்த்தப் பட்டார். 1983ஆம் ஆண்டு இறுதியில் பயிற்சிக்கென இந்தியா வந்தார்.

1984இல் பயிற்சியை முடித்துத் தமிழீழம் திரும்பிய கிட்டு, குருநகர் படைமுகாம் தாக்குதல் உட்படப் பல தாக்குதல்களில் முதன்மைப் பங்கு வகித்தார்.

1985 சனவரி 09இல் தளபதி கேப்டன் பண்டிதர் வீரச் சாவடைந்தார். அவர் இடத்திற்குக் கிட்டு அமர்த்தப்பட்டார். கிட்டு யாழ் மாவட்டத் தளபதியானவுடன் யாழ் காவல் நிலையத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்று நடத்தி அங்கிருந்த பெருந்தொகையையும் படைக் கருவிகளையும் கைப்பற்றினார். யாழ் மாவட்டத்தில் கிட்டுவின் வெற்றித் தாக்குதல்கள் தொடர்ந்தன. எதிரிப் படை யாழ் மண்ணில் அதன் முகாமுக்குள்¼ளயே முடக்கப்பட்டது. கிட்டுவின் பெயரைக் கேட்டாலே சிங்களப் படை கதிகலங்கிப் போகும். தமிழீழம் முழுவதும் கிட்டுவின் புகழ் பரவியது. மக்களின் சிக்கல்களைத் தீர்ப்பதிலும் கிட்டு அக்கறை காட்டினார். நூலகம், தொழில் நிலையங்கள் மலிவு விலைக் கடைகள் எனப் பலவற்றை மக்களின் நலன் கருதி நிறுவினார். அவரின் சமூகப் பணிகள் இவ்வாறு விரிவடைந்து கொண்டேயிருந்தன.

1987 மார்ச்சு இறுதியில் துரோகி ஒருவனின் கைக்குண்டுத் தாக்குதலில் தமது காலை இழந்தார் கிட்டு. ஆனால் மன உறுதியை இழக்கவில்லை. மருத்துவத் திற்காக இந்தியா வந்தார். இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் போதாமைகளை இந்தியாவில் இருந்தபடியே எழுதி வெளியிட்டார். இதனால் இந்திய அரசு அவரை வீட்டுக் காவலிலும் பின்பு சென்னை நடுவண் சிறையிலும் அடைத்தது. சிறையில் இருந்தபடியே ‘தேவி’ இதழுக்குப் போராட்டம் தொடர்பான தொடர் கட்டுரைகளை எழுதினார். தம்மை விடுவிக்குமாறு சிறைக்குள் பல அறப் போராட்டங்களை நடத்தினார். இறுதியில் இந்திய அரசு அவரை விடுதலை செய்து தமிழீழத்துக்கு அனுப்பி வைத்தது.

1989ஆம் ஆண்டு சிங்கள அரசுடன் பேச கொழும்பு சென்ற குழுவில் கிட்டுவும் இடம் பெற்றார். அவ்வாண்டே அவர் வெளிநாட்டுப் பிரிவுப் பொறுப்பாளராக அறிவிக்கப்பட்டு இலண்டனுக்குப் பயண மானார். புலம் பெயர் தமிழர்களுக்குப் போராட்ட உணர்வையும், நம்பிக்கை யையும் ஊட்டினார். விடுதலைப் புலிகள் மாணவர் அமைப்பு, விடுதலைப் புலிகள் கலைப் பண்பாட்டுக் கழகம் எனப் பல்வேறு அமைப்புகளை வெளிநாடுகளில் அமைத்துச் செயல்பட்டார். ஈழ மண்ணைக் கிட்டு மிகவும் நேசித்தார். விரைந்து தாயகம் திரும்பவே விரும்பினார்.

1993 சனவரி 7இல் கிட்டுவும் 9 புலி வீரர்களும் எம்.வி. யகதா என்ற கப்பல் மூலம் இந்தோனேசியாவிலிருந்து தமிழீழம் நோக்கிப் புறப்பட்டனர். 1993 சனவரி 13இல் இந்தியக் கடல் எல்லைக்கு அருகில் உள்ள பன்னாட்டுக் கடற்பரப்பை வந்தடைந்தனர். இவர்கள் வருவதை முன்கூட்டியே அறிந்த இந்தியக் கடற்படை அவர்களை மறித்துச் சரணடையும் படி எச்சரித்தது. 16ஆம் நாள் காலை 6 மணி வரை கெடு விதிப்பதாகவும் அதற்குள் கிட்டுவும் மற்றவர்களும் சரணடைய வேண்டும், இல்லையயனில் அதிரடிப் படை அவர்களைத் தாக்கிச் சிறை பிடிக்கும் என்றும் எச்சரித்தனர்.

16 காலை சரியாக 6 மணிக்கு இரண்டு உலங்கு வானூர்திகளும் மூன்று போர் விமானங்களும் கிட்டுவின் கப்பலைச் சுற்றி வட்டமிடுகின்றன. கப்பலின் மேல் தளத்தில் தளபதி கிட்டு நின்ற வண்ணம் எதையும் சந்திக்க அணியமாகிறார். 1993 சனவரி 16 காலை 6.30 மணிக்கு இந்தியக் கப்பற்படை பீரங்கிக் குண்டுகளால் கிட்டுவின் கப்பலைத் தாக்குகிறது. சிவலிங்க கேசவன், கிருஷ்ணமூர்த்தி ஆகிய இரு மாலுமிகளையும் கடலில் குதித்துத் தப்பிக்கச் சொல்கிறார் கிட்டு.

கேணல் கிட்டுவுடன் லெப்ரினன் கேணல் குட்டிசிறி, லெப்ரினன் கேணல் மலரவன், கடற்புலிகளான கப்டன் குணசீலன், கப்டன் ஜீவா, லெப்ரினன் தூயவன், லெப்ரினன் நல்லவன், லெப்ரினன் அமுதன் ஆகியோர் வீரச் சாவைத் தழுவிக் கொள்கின்றனர்.

“கிட்டு ஒரு தனி மனித வரலாறு

நீண்ட ஓய்வில்லாத புயலாக வீசும்

ஈழ விடுதலை வரலாற்றின்

ஒரு காலப் பதிவு.”

நன்றி:கீற்று
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

மாவீரர்கள்  - Page 2 Empty Re: மாவீரர்கள்

Post by SK Sat 5 Feb 2011 - 19:30

நல்ல தொகுப்பு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

மாவீரர்கள்  - Page 2 Empty Re: மாவீரர்கள்

Post by Thanjaavooraan Sun 6 Feb 2011 - 3:04

பயனுள்ள பகிர்வு மாவீரர்கள்  - Page 2 677196
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

Back to top Go down

மாவீரர்கள்  - Page 2 Empty லெப்.கேணல் பொன்னம்மான்

Post by அன்பு தளபதி Mon 14 Feb 2011 - 16:03

மாவீரர்கள்  - Page 2 Ponnamman2

லெப்.கேணல் பொன்னம்மான்(அற்புதன் யோகரத்தினம் குகன்) கலட்டி, யாழ்ப்பாணம் 23-12-1956 – 14-02-1987) வீரவணக்க நாள். அம்மான் இருக்கும் இடத்தில் எப்போதுமே சந்தோசம் குடிகொண்டிருக்கும். ஆனால் எப்போதும் தமிழர் துயரநிலை கண்டு அவர் உள்ளம் கொதித்துக் கொண்டிருந்தது. தந்தை தாய் இருந்தால் நமக்கிந்த தாழ்வெல்லாம் வருமோ ஐயாச. என்ற பாடல் முகாமுக்குள் ஒலித்துக் கொண்டிருந்த ஓரிரவில் தோழர்கள் காற்று வெளியில் நின்று கொண்டிருந்தார்கள். அருமையான அந்தப் பாடல் காற்றில் என்னமாய் வந்து அவர்களை உதைத்தது.

விடுதலைப்புலிகள் இயக்கத்தில் புதிதாக இணைந்து பயிற்சி எடுப்பதற்காக பயிற்சி முகாமில் நின்று கொண்டிருந்த புதியவர்களுக்கு நெஞ்சில் மெல்லிய சோகத்தை அந்த வரிகள் எழுதியிருக்கக்கூடும். ஆனால் அந்த அத்தனை பேருக்கும் தாயாக, தந்தையாக, அண்ணனாக, அம்மானாக, நின்ற பொன்னம்மானே அந்தப் பாடலைப் பாடிக் கொண்டிருந்தார்.அவர் அந்தப் பாடலை அடிக்கடி பாடும்போது தமிழர் துயரநிலையை சூட்சுமமாகப் பாடுவதாக தோழர்கள் நினைத்துக் கொள்வார்கள்.

தேசியத் தலைவர் பிரபாகரனுடன் அக்காலத்தில் தோளோடு தோளாய் நின்று இயக்கத்தைப் பலமாகக் கட்டியெழுப்புவதற்காக அயராது உழைத்தார் பொன்னம்மான்.

எழுபதுகளின் நடுப்பகுதியில் எமது தலைவருடன் இணைந்து கொண்டு செயற்படத் தொடங்கி உமையாள்புரம், திருநெல்வேலி தாக்குதல் உட்பட பல தாக்குதல்களில் தனது துணிவையும், வீரத்தையும் வெளிப்படுத்தியிருந்தார்.

1983ஆம் ஆண்டு திருநெல்வேலியில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்ட நடவடிக்கைக்குப் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மிகவும் வேகமாகவும் அதேவேளை நிதானத்துடனும் வளரத் தொடங்கியது. போர்ப்பயிற்சிகள் இந்தியாவில் ஆரம்பமாகின. அங்கு நடந்த முதலாவது பாசறையின் பொறுப்பாளராக இருந்த பொன்னம்மான் பயிற்சியின் போதே சகவீரர்களை எமது இயக்கத்தின் விதிமுறைக்கேற்ப உருவாக்கிக் கொண்டிருந்தார். இந்தப் பாசறையில் தளபதிகளான கிட்டு, விக்டர், புலேந்திரன், சூசை, பொட்டு, கணேஸ், அருணா, ராதா, பரமதேவா, பதுமன், கேடில்ஸ் போன்றவர்கள் உட்பட சுமார் நூறுபோராளிகள் இருந்தனர். பயிற்சியை முடித்துக் கொண்ட பொன்னம்மான் தமிழ்நாட்டில் பல இடங்களில் பயிற்சி முகாம்களை ஏற்படுத்தி புதிய வீரர்களை புரட்சியாளர்களாக்கினார். உலகமே வியக்கக்கூடிய வகையில் எமது போராட்டம் வளர்ச்சியடைவதற்குத் தேவையான, புதிய வீரர்களிற்குப் பயிற்சி அளித்தல், வேண்டிய ஆயுதங்களைச் செய்து கொள்ளல் போன்ற முக்கிய விடயங்களில் பொன்னம்மானின் முயற்சி கணிசமாக இருந்தது என்றே சொல்லலாம்.

வெடிமருந்துகளைக் கையாள்வதில் பொன்னம்மான் மிகவும் வல்லுனராக இருந்தார். அதற்கேற்றவாறு மேலும் பல வீரர்களை, ஆயுதங்கள் செய்யும் பிரிவிற்குத் தகுதியுள்ளவர்களாகவும் ஆக்கியிருந்தார். பேராட்டத்திற்கு கை எறிகுண்டு கணிசமான அளவு தேவையாக இருந்தது. அன்றைய காலகட்டத்தில் குண்டு தயாரிப்பு வேலைகள் சாத்தியமற்றதாக இருந்தது. பொன்னம்மானின் கடுமையாக முயற்சியினால் 85, 86ஆம் ஆண்டுகாலப் பகுதியில் மாதாமாதம் ஆயிரக்கணக்கில் கைக்குண்டுகள் தயாரிக்க வழிசெய்தார். இந்தியாவில் 2000இற்கும் அதிகமான வீரர்களைத் தோற்றுவித்தது மாத்திரமன்றி இராணுவத் தொழில்நுட்பத் வளர்ச்சிக்கும் முக்கிய காரணியாக பொன்னம்மான் செயற்பட்டார்.

பெரும் எண்ணிக்கையிலான விடுதலை வீரர்களை உருவாக்கி இயக்க வரலாற்றில் பெரும் சாதனை படைத்தவர் பொன்னம்மான். பல சிறப்புக்களும், தகுதியும், ஆளுமையும் மிக்க பொன்னம்மானின் போராட்ட வாழ்வின் இறுதிக்கணங்கள் வீரம் செறிந்தவை. யாழ்ப்பாணத்தில் உள்ள நாவற்குழி எனும் இராணுவ முகாம் மீது தாக்குதலை நடத்த கிட்டண்ணாவும் தோழர்களும் திட்டமிட்டுக் கொண்டிருந்தார்கள். அத்தாக்குதலில் பொன்னம்மானும் முக்கிய பங்கேற்று செயற்பட்டுக் கொண்டிருந்தார். இராணுவ முகாம் மிகவும் பலம் பொருந்திய வெளி அமைப்பைக் கொண்டிருந்தது. அது கடல் நீர் உள்வாங்கிய பகுதி. சுற்றிவர நூறு யாருக்கும் மேலாக ஒரே வெளிப் பிரதேசம். வெட்டை வெளி. சிறு நகர்வும் எதிரிக்குத் தெரிந்து விடக்கூடிய அபாயம் இருந்தது.

இராணுவ முகாமைச் சுற்றி நான்கு பாதுகாப்பு அரண்கள் அமைக்கப்பட்டு மண்ணை சுவர்போல குவித்து வைத்திருந்தனர். அவர்களுடைய காவல் அரண்களை உடைத்துக் கொண்டு உட்புகுவது என்பது மிகவும் சிரமத்துக்குரியதும் எமது வீரர்கள் தரப்பில் அதிக சேதத்தை ஏற்படுத்தக் கூடியதுமான முயற்சி. எனவே அவர்களுக்கு அதிர்ச்சியூட்டி அந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டு அவர்கள் காவல் அரண்களை பலப்படுத்துவதற்கு முன்னர் நாம் தாக்கி உடபுகக் கூடியதாகத் திட்டம் தீட்டப்பட்டது.

தினமும் அந்த இராணுவ முகாமுக்கு தண்ணீர் எடுத்துக் கொண்டு ஒரு பவுசர் செல்வது வழக்கம். அது வெளியாரின் வண்டி: சம்பளத்திற்கு அமர்த்தப்பட்டு இருந்தது. எனவே அதைப் போலவே ஒரு பவுசர் வண்டியைத் தயாரித்து, அதன் கீழ் அரைவாசிப் பகுதிக்கு தண்ணீரை விட்டு, திட்டமிட்ட நாளில் உள்ளே அனுப்பி வெடிக்க வைத்து முகாமை தாக்கியழிப்பதற்கான வேலைகள் நடக்கத் தொடங்கின.

பழைய வண்டியைப் போல் ஒரு புதிய வண்டியைத் தயாரிப்பது என்பது மிகவும் கஸ்டமான விடயமாக இருந்தது. அதிலும் அந்த பவுசர் எஙகோ தாக்குதலுக்குள்ளாகி ஒரு பக்கத்தில் நசுங்கியும் இருந்தது. அது மாத்திரமல்ல தோழர்கள் செய்யும் வண்டி வாயில் காவலர்களைத் தாண்டிச் செல்ல வேண்டி இருந்ததால் அதேபோல் நசுக்கப்பட வேண்டி இருந்தது. இயற்கையாக விபத்துக்குள்ளான வண்டியைப் போல் வெடிமருந்தேற்றிச் செல்லும் வண்டியை மிகச் சிரமத்திற்குப் பின் உருவாக்கினார்கள்.

புதிதாக மை பூசிய புவுசரை பழைய பவுசரைப் போல் உருமாற்றம் செய்ய வேண்டியிருந்தது. ஏன் பழைய வண்டியில் ஏற்பட்டிருந்த துருப்பிடித்த பகுதிகூட தாக்குதலுக்கு தயாரான பவுசரில் இருந்தாக வேண்டும். அதைவிடவும் பவுசர் இரு பகுதியாகப் பிரிக்கப்பட்டு கீழ் பகுதி வெடிமருந்து நிரப்பிய பகுதியாகவும், மேல் பகுதியில் தண்ணீர் நிரம்பிய பகுதியாகவும் தயாரித்தோம். ஏனென்றால் முகாம் வாயிலில் உள்ள காவல் அரணில் இருப்பவர்கள் பவுசரின் மேல் ஏறி மூடியைத் திறந்து தண்ணீரைப் பார்த்தபின்தான் உள்ளே அனுமதிப்பார்கள்.

இத்தனை சிரமங்களின் மத்தியிலும் அந்த பவுசரை மிக நேர்த்தியாக வடிவமைத்தார்கள். பவுசருக்கு வெடிமருந்தை இணைக்கும் பணியை பொன்னம்மான் எடுத்துக் கொண்டார். இம்முயற்சிக்கு வழிகோலி, அயராது உழைத்து வந்தவன் கேடில்ஸ்தான். கேடில்ஸ் அப்போது சாவகச்சேரிப் பகுதிக்கு பொறுப்பளராக விளங்கியவன்.

மிகத் துல்லியமாக முகாமை வேவு பார்த்து, இராணுவ முகாமினது ஒவ்வொரு நடவடிக்கையையும் அவதானித்து வைத்திருந்தான். கேடில்சும், வாசுவும் சேர்ந்துதான் இரவுபகலாக உழைத்து அந்த பவுசரை உருவாக்கினார்கள். அவர்களுக்குத் துணையாக ரஞ்சன் எனும் பொறியியலாளர் ஒருவர் பணியாற்றினார். அவர் பொன்னம்மானின் உறவினருங்கூட. மிகுந்த மதிநுட்பம் வாய்ந்த ரஞ்சன், வாசுவோடு சேர்ந்து விமானமொன்றைத் தயாரிக்கும் பணியிலும் ஈடுபட்டு வந்தார். முழுவதுமாக தன்னை இயக்கத்துடனேயே இணைத்துக் கொண்டவர்.

14-2-87 அன்று தாக்குதல் நடத்துவதாக இருந்தது. கெரில்லா தாக்குதல்களை இரவு நடத்துவதுதான் தோழர்களுக்கு உசிதமாக இருந்தது. தாக்குதல் தொடங்கினால் இராணுவ ஹெலிகொப்டர்களும், குண்டு வீச்சு விமானங்களும் தகவல் பெற்று எம்மைத் தாக்கத் தொடங்கலாம். பகல் வேளையானால் மேலிருந்து கண்டுபிடித்து குண்டு வீசுவது அவர்களுக்கு மிகவும் சுலபமான விடயம். ஆனால் பிற்பகல் 6 மணிக்குப் பின் இராணுவ முகாமுக்கு தண்ணீர் கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. எனவே கடைசி சந்தர்ப்பத்தை தோழர்கள் தாக்குதலுக்கான நேரமாக குறித்துக் கொண்டார்கள். 6:30 மணிக்கு சண்டை தொடங்குமானால் சுமார் ஒரு மணி நேரத்தில் இருட்டடித்துவிடும். அதன்பின் தோழர்களுக்கு மிகவும் பாதுகாப்பாகவே இருக்கும்.

முதல்நாள் இரவிரவாக பொன்னம்மான், வாசு, ரஞ்சன் ஆகியோர் மருந்தடைத்தனர். வெடிமருந்தின் நச்சுத்தன்மை அவர்களைப் பாதித்தது. அதனால் மூவரும் மிகச் சோர்வாக வேறு இருந்தார்கள். அதிகாலை வெடிமருந்து இணைக்கப்பட்ட நிலையில் பவுசர் தயாராக நின்றது. அம்மான் அவ்விடத்திலேயே தூங்கியும் விட்டார். வாசுவும் கிட்டண்ணாவும் தாக்குதல் குழுக்களைப் பிரித்து அவரவர்களுக்குத் தேவையான வெடிபொருட்களை இணைத்து கொடுத்துக் கொண்டிருந்தார்கள். மூன்று பெரிய லொறிகள் தயார்ப்படுத்தப்பட்டன.

முகாமுக்குள் சென்ற பவுசர் வெடித்ததும் ஜொனி, கேடில்ஸ், சூசை தலைமையிலான குழுக்கள் லொறிகளில் விரைந்து முகாமுக்குள் சுட்டுக் கொண்டே உட்புகுவதாகத் திட்டம். லொறியின் முன்புறமும், மேல்பக்கமும் மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டன. முதல் லொறியில் ரொக்கட் லோஞ்சருடன் நிற்பவன் உட்புகும் போது ரொக்கட்டால் வாயில் காவல அரணை உடைத்தெறிவதாக திட்டம் தீட்டப்பட்டிருந்தது.

நேரம் பிற்பகலை நெருங்கிக் கொண்டிருக்க தாக்குதல் குழுக்கள் தத்தமது நிலைகளுக்கு செல்லத் தொடங்கி விட்டனர். பவுசரை அனுப்பும் பொறுப்பு பொன்னம்மான், கேடில்ஸ், வாசு, ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. கிட்டண்ணா தாக்குதலை நடத்துவதற்காக, சகலருடனும் வாக்கிடோக்கியில் தொடர்பு ஏற்படுத்தக்கூடிய வகையில் இடம் தெரிந்தெடுக்கப்பட்டு அதற்குரிய வசதிகள் செய்திருந்தார்.

கிட்டண்ணா ஐந்து மணியளவில் எல்லாக் குழுக்களையும் சரி பார்த்து வந்து கொண்டிருந்தார். நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. கிட்டண்ணா ஒரு குழுவினர் நின்ற வீட்டில் அவர்களை சரிபார்த்துக் கொண்டிருந்தார்ச மிகப்பெரிய சத்தத்தைத் தொடர்ந்து ஒரு முறை பூமி அதிர்ந்தது. அதிர்ச்சி, வியப்பு, சற்றும் புரியவில்லை. 5:30க்கு வேறு இந்த வெடிச்சத்தம் கேட்டதால் தோழர்கள் மத்தியில் ஒரே குழப்பம். கிட்டண்ணா பொன்னம்மானை வாக்கியில் பலதடவை கூப்பிட்டார். கேடில்சைக் கூப்பிட்டார். வாசுவைக் கூப்பிட்டார். பதில் இல்லை. பல தடவைகள் அழைத்தார். மீண்டும் பதில் இல்லை. ஜொனியை அழைத்தார்: பதில் வந்தது. ஜொனியை அழைத்து உடனடியாக சத்தம் கேட்ட இடத்திற்கு அனுப்பினார். ஜொனி அங்கு சென்ற போது எங்கும் தூசிமயம். பிரளயம் ஒன்று ஏற்பட்டதைப் போல இருந்தது. அவ்விடத்தில் பெரிய குழி, அதற்கருகில் கேடில்சினுடைய கார் நொறுங்கிப் போய் கிடந்தது. இதற்கு 50 யார் தூரத்தில் லொறி நின்றது. லொறிக்குள் பார்த்தபோது ஐவர் அதற்குள் இறந்து கிடந்தார்கள். தண்ணீர் நிரப்பிக் கொண்டிருக்கையில் பவுசர் வெடித்து விட்டது. ஆனால் அந்த இடத்தில் நின்று சம்பவத்தைப் பார்த்த யாரும் உயிருடன் இல்லை. பொன்னம்மான், கேடில்ஸ், வாசு, ரஞ்சன் ஆகியோர் அந்த இடத்துக்கு வந்ததாக தோழர்கள் கூறினார்கள்.

பவுசரில் தண்ணீர் நிரப்பும்போது தண்ணீர் சிறிது ஒழுகியதாம். அதைப் பொன்னம்மான் கேடில்சுக்கும் வாசுவுக்கும் தெரிவித்து பொறியியலாளர் ரஞ்சனையும் அழைத்துக் கொண்டு பவுசர் நின்ற இடத்திற்கு சென்றார்கள். பொறியியல் நடவடிக்கையின் போது வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இதனை உறுதிப்படுத்த, அங்கு நின்ற எவருமே இல்லை. எல்லோரையும் தேடினார்கள். வாசுவின் பிஸ்டலும், அடையாள அட்டையும் கேடில்சின் காற்சட்டையின் ஒரு பகுதியும்தான் கிடைத்தது. பொன்னம்மானை அடையாளம் காணக்கூடியவகையில் அவருடைய உடலோ, உடலின் பகுதியோ எந்தத் தடமும் கிடைக்கவில்லை.
ஈழத்தில் வீசிக் கொண்டிருக்கும் காற்றோடு காற்றாய் லெப்.கேணல் பொன்னம்மானுடன் மேஜர் கேடில்ஸ் ( திலீபன்), கப்டன் வாசு (சுதாகர்), லெப். சித்தாத்தர் (வசீகரன்), 2ம்லெப். பரன் (அர்ச்சுணன்), வீரவேங்கைகளான யோகேஸ்(பாலன்), கவர்(நகுலேஸ்வரன்), அக்பர் (லோகநாதன்), குமணன்(மோகனலிங்கம்), தேவன்(வசந்தகுமார்) வீரச்சாவடைந்தனர்.

முகாம்கங்களில் கலைநிகழ்ச்சிகளை வைப்பித்தும், குறும்புகள் செய்தும், நடித்தும், சிரிக்க வைத்து, எந்த நேரமும் சந்தோசத்தைக் குடிகொள்ள வைத்திருக்கும் அந்த மனிதன் இன்று இல்லை. ‘அம்மான் ஒரு பாட்டுப் பாடுங்கோ” என்று தோழர்கள் அடம் பிடிப்பதும் அவர் எப்போதும் தோழர்களுக்காய் பாடிக் காட்டும் அந்தப் பாட்டும் நினைவில் நனைய கண்கள் பனிக்கின்றன. ஈரமான இதயம் சுமந்த மனிதர்களின் நண்பனாய், தந்தையாய், தனையனாய், தாயாய், எல்லாமுமாய் நின்ற எங்கள் அம்மானிடம் வளர்ந்த எத்தனையோ தோழர்கள் இன்றும் அவரது கனவைச் சுமந்தபடி மண்ணில் நிற்கிறார்கள்.

நன்றி மீனகம்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

மாவீரர்கள்  - Page 2 Empty மேஜர் கேடில்ஸ்

Post by அன்பு தளபதி Mon 14 Feb 2011 - 16:11

மாவீரர்கள்  - Page 2 Maj_kedills
மேஜர் கேடில்ஸ்
மகாலிங்கம் திலீபன் – கண்டாவளை
தாயின் மடியில் : 14-05-1966
தாயக மண்ணில் : 14-02-1987
பனை, தெங்கு தோப்பாய் அணிவகுத்திருக்க கனிமரங்கள் நிரை கட்டி நிற்கும் பிரதேசம் யாழ்.குடாநாட்டின் தென்மராட்சிப் பிரதேசம். இப்பிரதேசத்தில் ஆனையிறவும், நாவற்குழியும் என கடல் நீரேரியும் சதுப்பு நிலங்களும் நிறைந்தபுவியியல் அம்சங்கள் நிறைந்து காணப்படுகின்றன. இப்பிரதேசத்தின் முதலாவது பொறுப்பாளனாக மேஜர் கேடில்ஸ் விளங்கினார். பதினெட்டு வயதிலேயே இப்பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.கண்டாவளையிவ் மகாலிங்கம் தம்பதியரின் புதல்வனாக அவதரித்த கேடில்சிற்கு பெற்றோர் இட்ட பெயர் திலீபன். இயல்பாய் சுறுசுறுப்பும், துருதுருவென இருந்த கேடில்ஸ் புலமைப் பரிசில் தேர்வில் சித்தியடைந்து யாழ்.இந்துக் கல்லூரியில் கல்வி பயின்றார். பாடசாலை நாட்களில் கல்வியில் மாத்திரமின்றி விளையாட்டுத் துறையிலும் பிரகாசித்தார். தடைகள விளையாட்டுகளில் பல சாதனைகளைப் படைத்தார். க.பொ.த. உயர்தரம் வரை கல்வி பயின்ற கேடில்ஸ் சிறீலங்கா இராணுவத்தின் கொடூரத்தனங்கள் கண்டு உள்ளங் கொதித்து, தாயக விடுதலையை இலட்சியமாக வரித்து விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து கொண்டார்.

1980களின் நடுப்பகுதியில் விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து கொண்ட கேடில்சின் எதையும் இலகுவில் விளங்கிக் கொள்ளும் ஆற்றலையும், நிர்வாகத்திறனையும், ஆளுமையையும் இனங்கண்ட மூத்த தளபதி கேணல் கிட்டண்ணா, அவரைத் தென்மராட்சிப் பிரதேசத்திற்கான பொறுப்பாளராக நியமித்தார். நாவற்குழியிலிருந்தும் ஆனையிறவிலிருந்தும் சிறீலங்கா இராணுவம் புறப்படுகின்ற வேளைகளிலெல்லாம் எண்ணிச் சில தோழரோடு எண்ணற்ற சிங்களப்படையை எளிதாய் விரட்டியடிப்பார். தென்மராட்சிப் பிராந்தியத்தில் மாத்திரமன்றி சிங்கள இராணுவம் யாழ். குடநாட்டில் எப்பகுதியில் முன்னேறினாலும் அங்கு கிட்டண்ணாவோடு இந்த இளைய பொறுப்பாளனும் தனது குழுவினரோடு நிற்பார். களமுனைகளில் தேர்ந்த தாக்குதல் தலைவனாக விளங்கினார்.

அது மாத்திரமன்றி தென்மராட்சிப் பகுதியில் மக்கள் மத்தியில் இருந்து செவ்வனே அரசியல் கடமைகளை ஆற்றினார். தேர்ந்த போராளிகளை போராட்டத்திற்கு தென்மராட்சியிலிருந்து எடுத்துத் தந்தார். மக்களோடு மக்களாக நின்று மக்களின் பிள்ளையாகக் கடமையாற்றிய கேடில்ஸ் மக்களின் பிரச்சினைகளைப் பூர்த்தி செய்வதில் முன்னின்று உழைத்தார்.

தென்மராட்சி வாழ் மக்களின் நல்வாழ்விற்காக தும்புத் தொழிற்சாலைகளை ஏற்படுத்தி உள்@ர் உற்பத்திகளை ஊக்குவித்தார். எமது தாயகம் தன்னிறைவுள்ள, பொருண்மிய மேம்பாடுள்ள நாடாக மலர வேண்டும் என்ற தலைவரின் கனவை நனவாக்க அல்லும் பகலும் பாடுபட்டார். நெருக்கடியான சூழ்நிலைகளிலும் கடமை தவறாத நிதானம் பிசகாது தாயகப்பணியாற்றியவர் கேடில்ஸ். இன்றும் இவர் பெயரோடு விளங்கும் கேடில்ஸ் தும்புத் தொழில் நிறுவனம் தமிழீழ கயிற்றுத் தேவையைப் பூர்த்தி செய்வதில் முன்னின்று செயற்படுகிறது.

தாயகத்தின் விடுதலையை நேசித்த இந்த இளைய பொறுப்பாளன் எதிர்காலத்தில் தேர்ந்த பொறுப்பாளனாக சிறந்த தளபதியாக வருவானென விடுதலைப் புலிகள் அமைப்பின் மூத்த தளபதிகள் இவனை ஆர்வத்தோடும் எதிர்பார்ப்போடும் காத்திருந்த நேரத்தில் நாவற்குழி முகாம் தகர்ப்பிற்குத் திட்டமிடப்பட்டது. தனது பிரதேசத்தில் வருகின்ற முகாமாகையால் கண் துஞ்சாது மெய்வருத்தம் பாராது முகாம் தகர்ப்பிற்கான ஏற்பாடுகளில் முன்னின்று செயற்பட்டார். விடுதலைப் புலிகளின் மூத்த தளபதி லெப். கேணல் பொன்னம்மான், விடுதலைப் புலிகளின் தொழில்நுட்பப் பிரிவுப் பொறுப்பாளர் கப்டன் வாசு ஆகியோரோடு இணைந்து இராணுவத்திற்கு குடிநீர் கொண்டு செல்லும் பவுசரைப் பயன்படுத்தி இராணுவத்தைத் தகர்ப்பதில் முன்னின்று ஈடுபட்டார். அதன் போது ஏற்பட்ட விபத்தில் லெப். கேணல் பொன்னம்மானோடு, கப்டன் வாசு, லெப். சித்தார்த்தன் உட்பட ஏழு போராளிகளோடு காற்றோடு காற்றாகிப் போனார்.

தமிழீழ மலர்விற்காய் அயராது உழைத்த இவ்வீரமறவனதும், இச்சம்பவத்தில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய ஏழு மாவீரர்களினதும் 14ஆம் ஆண்டு நினைவில் நினைந்துருகி நின்று தாயக விடுதலைப் பணியில் எம்மை இணைத்து எம்பணி தொடர்வோம்.

நன்றி எரிமலை
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

மாவீரர்கள்  - Page 2 Empty லெப்.கேணல் இம்ரான், பாண்டியன்

Post by அன்பு தளபதி Mon 14 Feb 2011 - 16:19

(விடுதலைப் புலிகளின் முதன்மைத் தளபதிகளில் ஒருவரான பாண்டியன் யாழ் மாவட்டத் தளபதியாக பணியாற்றியவர். காரைநகரில் இந்தியப் படையினர் முற்றுகையிட்டபோது தன்னைதானே சுட்டு வீரச்சாவடைந்தார்.)இம்ரான்-பாண்டியன்
யாழ்ப்பாணம், கொக்குவில், பிரம்படி

பாண்டியன்(செல்லத்துரை சிறிகரன்)
கொக்குவில் – யாழ்
23.03.1960 – 09.01.1988
மாவீரர்கள்  - Page 2 Immiran_pandijan_4
இம்ரான்-பாண்டியன் இருவரும் உற்ற நண்பர்கள். அவர்கள் யாழ்ப்பாணத்தில் கொக்குவில் பிரம்படி என்ற இடத்தில் பிறந்து பக்கத்துப் பக்கத்து வீட்டில் வாழ்ந்த நண்பர்களாக இருந்து நண்பர்களாகவே போராட்டத்தில் இணைந்து நண்பர்களாகவே களமுனைகளில் களமாடி நண்பர்களாகவே தங்களுடைய இலட்சியத்திற்காக வீரச்சாவைத் தழுவிக் கொண்டவர்கள்.

எங்களுடைய புகழ் பூத்த மூத்த தளபதி கேணல் கிட்டு அண்ணாவின் தலைமையில் யாழ் மாவட்டம் எங்களுடைய முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட போது சுன்னாகம் சிறிலங்கா காவல் நிலையம் முற்றுகையிட்டு தாக்கப் பட்டது.

சுன்னாகத்திலிருந்த சிறிலங்கா காவல்துறையினர் அனைவரும் தப்பியோடினர். சிறிலங்கா காவல் நிலையத்தை கைப்பற்றும் நோக்கோடு இறங்கிய அணித் தலைவர்களில் இம்ரானும் ஒருவர். இம்ரான் அந்தக் காவல் நிலையத்துக்குள் நுழையும் போது அவர்களுடைய சூழ்ச்சிப் பொறியில் சிக்கி அவரது வலது தொடை எலும்பு முறிந்து பாரிய ஒரு விழுப்புண்ணை அடைந்தார். அந்தத் தாக்குதல் என்பது எங்களுடைய ஒரு வரலாற்றுப் பதிவாக இன்றும் நாம் பேசக்கூடிய ஒரு தாக்குதலாக உள்ளது.

கால் முறிந்தவுடன் இம்ரான் மருத்துவத்திற்காகத் தமிழ்நாட்டுக்குச் சென்றார். அப்போது யாழ் மாவட்டத்தில் கிட்டண்ணாவினுடைய தலைமையில் பாண்டியன் பல்வேறு தாக்குதல்களில் பங்கேற்று தனது கடமையைச் செய்தார். அதே காலத்தில் தலைவர் தன்னுடைய பாதுகாப்பிற்காக ஒரு அணியை ஒழுங்கு செய்து கொண்டிருந்தார். அந்தப் பாதுகாப்பு அணியில் இம்ரான் இணைக்கப் படுகின்றார். இம்ரானுடைய அந்த வருகை பாண்டியனையும் அந்த அணிக்குள் உள்வாங்கக் கூடிய வாய்ப்பை ஏற்படுத்துகின்றது.

தலைவருடைய பாதுகாப்பிற்குக் களங்களில் நின்ற, அனுபவம் வாய்ந்த போராளிகளைத் தெரிவு செய்யும் போது பாண்டியனும், இம்ரானும் உற்ற சிநேகிதர்கள். அவர்கள் ஒன்றாகப் படித்து ஒன்றாக விளையாடி ஒன்றாகப் போராளிகளாக இணைந்து ஒன்றாகக் களமாடியவர்கள். அவர்களுடைய அந்த ஒற்றுமை, அவர்கள் களங்களில் காட்டிய வீரம் ஆகியவற்றால் அந்தப் பாதுகாப்பு அணிக்கு அவர்கள் தெரிவு செய்யப் பட்டனர். இருவருமே பாதுகாப்பு அணியில் ஒரு முக்கிய தளபதிகளாகப் பொறுப்பாளர்களாக, நடத்துனர்களாகத் தலைவருடைய பாதுகாப்பு அணிகளை ஒழுங்கு செய்து கொண்டிருந்தனர்.

அந்தச் சூழலில் இந்திய இராணுவம் வந்தது. யாழ் மாவட்டம் முற்று முழுதாக இந்திய ஆக்கிரமிப்புப் படையால் கைப்பற்றப்பட்டு எங்களுடைய போராளிகளுக்குப் பின்னடைவு நிலையை ஏற்படுத்தின யாழ் மாவட்டத்தினுடைய தளபதியாக பாண்டியன் பொறுப்பேற்றார். பாண்டியன் பொறுப்பெடுத்து குறிப்பிட்ட காலங்களிலேயே அவர் முற்றுகையிடப்பட்டு அவர் தன்னைத் தானே சுட்டு எதிரியிடம் பிடிபடாது வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.

அதன் பின்பு இம்ரான் அந்தப் பொறுப்புக்கு தலைவரால் நியமிக்கப் பட்டார். இம்ரானும் எங்களுடைய இயக்கத்தினுடைய செயற்பாடுகளுக்கு வடிவம் கொடுத்து தாக்குதல்களை நடத்தினார். இந்திய இராணுவத்தினருடனான நேரடி மோதல் ஒன்றின் போது அவரும் வீரச்சாவை அடைந்தார்.

அவர்கள் இருவரும் தலைவருடைய மெய்ப்பாதுகாப்பு அணியிலே இருந்து பொறுப்புகளை ஏற்று, களங்களில் வீரச்சாவை அடைந்தவர்கள்.

கட்டைக்காட்டு முகாம் மீதான தாக்குதலின் போது எங்களுடைய படையணிக்கு பெயர் சூட்டுவதற்காக நாங்கள் தலைவரோடு பேசிய போது பொன்னெழுத்துக்களால் பொறிக்கப் படுகின்ற மாவீரர்களான “இம்ரான்-பாண்டியன்” பெயரை அவர் சூட்டினார். அது எங்களுக்கு பெருமையாக இருந்தது. ஏனெனில் எங்களுடைய பாதுகாப்பு அணியை யுத்த களங்களிலும் மற்றும் தேவைகளின் போதுமான அந்தப் படையணியை உருவாக்குவதற்காக அவர்கள் அயராது பாடுபட்டு உழைத்தவர்கள்.

இந்த இம்ரான்-பாண்டியன் படையணி, தொடக்க காலத்தில் தலைவருடைய மெய்ப்பாதுகாப்பு அணியாக வலம் வந்தது.

நன்றி மீனகம்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

மாவீரர்கள்  - Page 2 Empty போராளி சுயந்தன்

Post by அன்பு தளபதி Mon 14 Feb 2011 - 16:23

09.01.1997 நடுநிசியைத் தாண்டிய அதிகாலை வேளை. ஆனையிரவு, பரந்தன் கூட்டுப்படைத் தளத்தினூடாக புலிகளின் அணிகள் நகர்ந்து கொண்டிருந்தன. அந்தத் தளத்தின் அமைவிடம் வலிந்த ஒரு தாக்குதலுக்குச் சாதகமற்ற பௌதீகச் சூழலைக் கொண்டிருந்தது. தரவைகள், உப்பு வெளிகள், சிறிய சிறிய உவர்நீர் நிலைகள் ஆகியவற்றைக் கொண்டிருந்தது அந்தச் சூழல், எனினும், முகாமின் முக்கியத்துவத்தை உணர்ந்த போராளிகள் அனைவரும் கண்களில் ஒரு வெறியுடனும், எங்கள் மண்ணை ஆக்கிரமித்தவனை அழிக்கவேண்டுமென்ற மனவுறுதியுடனும் நீரற்ற அந்த உப்பு வெளிகளினூடக ஊர்ந்து கொண்டிருந்தனர்.அது ஒரு நீண்ட நகர்வு. விடுதலைப் புலிகளின் போரியல் வரலயாற்றிலேயே ஒரு வலிந்த தாக்குதலுக்காகச் சண்டையை எதிர்பார்த்து எமது படையணிகள் நகர்ந்த நீண்ட நகர்வுகளில் அது குறிப்பிடத் தக்கது. எங்காவது எதிரியால் அவதானிக்கப்பட்டால் அங்கே நகர்ந்து கொண்டிருக்கும் அத்தனை போராளிகளின் உயிர்களும் கேள்விக் குறியாகிவிடும.

அங்கே நகர்ந்து கொண்டிருந்த அணிகளிற் சார்ள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் ஓர் அணியும் அடங்கியிருந்தது. முகாமின் ஒரு முக்கிய பகுதியைக் கைப்பற்றும் பணி அவர்களுக்குரியது. அவர்களின் அன்றைய சிக்கலான பணியில் எமக்குக் கிடைக்கப் போகும் வெற்றியின் ஒரு கணிசமான பகுதி தங்கி நிற்கிறது.

சண்டை தொடங்கி விட்டது. சார்ள்ஸ் அன்ரனி படையணியும் அவர்களுக்குரிய பாதை வழியாகச் சண்டையைத் தொடங்கியது. முட்கம்பி வேலிகளை ஷ டோப்பிட்டோ “ குண்டுகள் தகர்க்க, அணி ஒவ்வொரு தடையாகத் தாண்டி நகர்ந்து கொண்டிருந்தது. எதிரியின் இயந்திரத் துப்பாக்கிகள் அவர்களை நோக்கிச் சடசடக்க அப்போதுதான் அந்தப் பாதையில் உள்ள பிரச்சனை அவர்களுக்குத் தெரிந்தது.

ஆம் எமது வேவுத் தரவின்படி அங்கேயிருந்த முட்கம்பிச் சுருள் தடைகளை விட புதிதாக இன்னுமொரு முட்கம்பிச் சுருள் தடையை எதிரி அமைத்திருந்தான். ஓவ்வொரு நொடியும் சண்டையின் முடிவைத் தீர்மானிக்கும் ஓர் இக்கட்டான நேரம். நாம் அந்தத் தடையைத் தகர்த்து உள்நுளையா விட்டால் எதிரி தன்னைத் தயார்படுத்தக் கூடும். பின்னர் அந்தப் பகுதியைக் கைப்பற்றுவது இயலாமற்கூட போய்விடும். புதிதாகத் தடையை உடைக்க ஷ டோப்பிட்டோ “ வும் கைவசம் இல்லை. மாற்று வழிகளைப் பரிசீலிக்கக் கூட நேரம் இல்லாத ஓர் இக்கட்டான சூழல். முட்கம்பியை வெட்டச் சென்ற போராளி சுயந்தன் அரைவாசிக் கம்பிகளை வெட்டிய நிலையில் எதிரியின் ரவை பட்டு வீழ்ந்து விட்டான். எதிரி, அந்த இடத்தில் முட்கம்பிகளை வெட்டப் படாமல் இருப்பதையும் நாம் அதை வெட்ட முயல்வதையும் கண்டு விட்டான். அவன் தன் முழுச் சூட்டு வலுவையும் இப்போது அங்கே மையங் கொள்ள வைத்தான். அது வார்த்தைகளின் வர்ணணைக்கு அப்பாற்பட்ட இறுக்கமான சூழல். அன்றைய சண்டையின் முடிவைத் தீர்மானிக்கும் ஓர் அணி தடையை உடைக்க முடியாமல் நிற்க, தனியொருவனாகச் சுயாந்தன் நிலைமையை மாற்றி அமைத்தான்.

அந்தத் தடையை அகற்ற வேண்டிய தேவையை அவன் உணர்ந்தான். அன்றைய சண்டையின் முடிவு கண்களிற் பட சுயந்தன் உறுதியான முடிவெடுத்தான். ஓடிச்சென்று முட்கம்பிச் சுருளின் மீது பாய்ந்தான், நசுங்கிய கம்பியின் மேல் அவன் கிடக்க, அவன் அமைத்துத் தந்த உயிர்த்துடிப்பான பாதையின் வழியாக இலக்கை நோக்கி நகர்ந்தனர் தோழர்கள்.

அவனது அணி, கொடுக்கப்பட்ட எதிரிப் பகுதியைப் பிடித்துக் கொண்டு முன்னேறியது. எதிரியின் சூட்டில் விழ வேண்டியவர்களாய் இருந்த அவனது தோழர்கள் எதிரியை வீழ்த்திக் கொண்டு முன்னேறினர். தாக்குதலின் முடிவில் நூற்றுக் கணக்கான எதிரிகளை வீழ்த்தினர். எதிரியின் பீரங்கிகளை அழித்தனர். அந்த வெற்றிக்கு வழியமைப்பதற்காகத் தன் உடலால் வழி சமைத்தவன் சுயந்தன். உடலின் உயிரணுக்கள் ஒவ்வொன்றும் வேதனையால் துடிக்க அத்தனை வேதனைகளையும் தாங்கிக் கொண்டு தான் நேசித்த மக்களின் வாழ்விற்காக முட்கம்பித் தடையின் மீது பாய்ந்து தன் தோழர்களுக்கு வழி சமைத்துக் கொடுத்த அவனது வீரம்.

தலைவரவர்களின் ஷ எமது போராட்டத்தின் வலிமை எமது போராளிகளின் நெஞ்சுரத்திலிருந்தே பிறக்கின்றது “ என்ற கூற்றுப்படி தனது நெஞ்சுரத்தால் அன்றைய சண்டையை மாற்றியமைத்தவன் பின் ஷ ஜயசிக்குறுய் “ சமரில் வித்தாகிப் போனான். இவன்போன்ற போராளிகளின் தியாகங்களே இன்றும் வழித்தடங்களாக எமக்கு வழிகாட்டி நிற்கின்றன.

நன்றி மீனகம்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

மாவீரர்கள்  - Page 2 Empty Re: மாவீரர்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum