புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

படுக்கையில் மனக்கசப்பு - Dr.N.நாராயணரெட்டி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 21, 2008 9:02 am

அன்றாடம் நடக்கும் நடந்து வரும் சில படுக்கையறை பிரச்சினைகளைப் பற்றிபார்ப்போம். இவைகளை வித்தியாசம் என்றும் கூற முடியாது. விகாரம் என்றும் கூற முடியாது. பிரச்சினை என்று மட்டும்தான் கூற முடியும்.

எந்தவித குறைபாடும் உடலில் இல்லாமல் இவர்கள் இருப்பார்கள். இவர்களுடைய செயல்பாடுகள் மற்றவர்களோடு பழகும் முறைகள், தொழில் ஈடுபாடு இவை எதிலுமே வித்தியாசம் காணமுடியாது. கணவன் மனைவியிடையேயும், எந்தவித சச்சரவும் சங்கடமும், அன்பு பரிமாற்றங்களில் வித்தியாசமோ விகாரமோ இருக்காது. இருப்பினும் இவர்களிடையே செக்ஸ் பிரச்சினை இருக்கும். இதனை சில உண்மையான உதாரணங்கள் மூலமாக தெளிவாக புரிந்துகொள்ள முடியும்.

இப்படியான பாலியல் பிரச்சினைகள் இன்றைய நாளில் பல வீடுகளில் இருப்பதாகும். அதனை கண்டறிந்து முயற்சித்து மருத்துவ ஆலோசனை பெற்று பூர்ண குணம் பெற்று இல்லற சுகத்தை அனுபவிப்பவர்கள் வெகு வெகு சிலரே. பாலியல் பிரச்சினைகளுக்கு உடல் ரிதியாகவோ, மன ரிதியாகவோ காரணம் இருக்கலாம். அதனை கண்டறிந்து களைய மனநல, உடல்நல மருத்துவரின் ஆலோசனையினை அவசியம் பெற வேண்டும். உதாரணமாக ஒன்றை பார்ப்போம்.

கணவன் ஒரு முதுநிலை பட்டதாரி. சொந்த தொழில் மற்றும் வியாபாரத்தை வெற்றிகரமாக நடத்தி வருகிறான். நன்கு பழகும் தன்மை உள்ளவன். எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. அதீத தெய்வ நம்பிக்கை கொண்டவன். அவருடைய மனைவியும் ஒரு பட்டதாரி. நல்ல குணமும் உள்ள பெண், வசதியான குடும்பம். எந்தவிதமான பிக்கல் பிடுங்கல்களோ இல்லை. திருமணமாகி இரண்டு வருடமாகிறது. ஒருவரை ஒருவர் அன்னியோன்யமாக அன்பு பாசத்துடன் பழகி வருகிறார்கள். ஒன்றாக கோவில் குளம் மற்றும் கோடை வாசஸ் தலங்களுக்கு சென்று வந்திருக்கிறார்கள். எனவே யாரும் இவர்களை பற்றியோ அல்லது இவர்களுக்கு இடையே ஏதும் பிரச்சினை இருக்குமென கனவிலும் நினைக்கவில்லை. அவர்களுக்குள் எந்தவிதமான பிணக்கோ அல்லது வித்தியாசங்களோ இல்லை. வாழ்க்கையும் சீராக ஓடிக்கொண்டிருந்தது. குழந்தை இல்லையே என்று பெண்ணின் தாயார் கவலைப்பட ஆரம்பித்திருக்கிறார், சம்மந்திகள் இருவரும் பெண்ணை செக்-அப்பிற்காக ஒரு லேடிடாக்டரிடம் அழைத்து சென்றபொழுது பெண் இன்னும் கன்னிகழியாமலே இருப்பது தெரியவந்தது. மிகவும் அதிர்ச்சிக்குள்ளாகி, தாயாரும் மாமியாரும் மாறி மாறி எவ்வளவோ கேட்டும் எங்களுக்குள் எந்த குறையும் இல்லை. நாங்கள் மகிழ்ச்சியுடன் தான் இருக்கிறேhம் என்று அந்த பெண் அடித்து சொல்லிவிட்டார்கள். அதன் பிறகு அவர்கள் அந்த பெண்ணை மனநல மருத்துவரிடம் அனுப்பி ஆலோசனை பெற செய்தபோது தான் கீழ்க்கண்ட உண்மைகள் தெரியவந்தது.

இருவரையும் அழைத்து தீவிரமாக விசாரித்தபோது- வெளியே அந்நியோன்யமாக உண்மையில் படுக்கையில் மனஸ்தாபங்களுடன் இருந்திருக்கின்றன. இந்த மனஸ்தாபம் முதலிரவிலேயே தொடங்கி விட்டதாம். அடிப்படை காரணம் பிடித்தமின்மையாகும் இதற்கெல்லாம் காரணம் செக்ஸ் அறியாமைதான். செக்ஸ் என்பது புனிதமாக கருதுபவர்கள் செக்ஸ் என்றால் என்ன என்ற உண்மையை அறியாமலே காலத்தை கடத்துகிறவர்கள் இருக்கிறார்கள். செக்ஸ் என்பது வாழ்க்கை என்ற புத்தகத்தின் ஒரு பக்கம் என்ற அலட்சியமாக அந்த பக்கத்தை புரட்டிப்பார்க்க விரும்பாமலே அடுத்த பக்கத்திற்கு செல்பவர்கள் இன்னொரு ரகம். இப்படி பல தரப்பட்ட மனிதர்கள் கூறும் செக்ஸ் பற்றிய தவறான செய்திகளைக் கொண்டு உண்மையான செக்ஸ் என்றால் என்ன என்பதை அறியாமல் விட்டுவிடுபவர்களும் உண்டு.

அடுத்து-ஆண்களுக்கு ஏற்படும் துரிதஸ்கலிதம் காரணமாக சில கணவன் மனைவிக்கிடையே படுக்கையறையில் மனஸ்தாபம் ஏற்படலாம். பொதுவாக ஆண்கள் ஒரு பதட்டத்தின் உச்சிக்கு செல்லும் பொழுது விந்து வெளியாக வாய்ப்புகள் அதிகம். எனவே பல சூழ்நிலையில் பதட்டத்தின் உச்சத்தை அடையவாய்ப்புகள் உண்டு. உதாரணமாக புதிய அறிமுகம், மிதமான சூழல், பதட்டமான சூழ்நிலை, யாருக்காவது தெரிந்துவிடுமோ என்ற பயம். என்ன நினைப்பார்களோ என்ற எண்ணம், மேலும் விரைவில் விந்து வந்துவிடுமோ, சீக்கிரம் இந்த சூழ்நிலையிலிருந்து மீண்டுவிட வேண்டுமென்ற ஆர்வம், திருட்டுத்தனம், தகாத அணுகு முறை, தகாத உறவு முறை, புதிய அனுபவம் போன்ற கால்கட்டங்களில் பதட்ட மடைய வாய்ப்பு உண்டு. அதேபோல் நீண்ட இடைவெளிக்குப் பிறகு அறிமுகம் அல்லது உறவு கொள்ளுதல் போன்றவையும் உணர்ச்சிபட வைக்கும். இதுவெல்லாமும் அதிக எதிர்பார்ப்பு போன்றவையும், பதட்டமடைய வைக்கும் மேற்கூறிய காரணங்கள்யாவும் சந்தர்ப்பங்கள் அனைத்தும் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் என்றாவது ஒருநாள் நடக்கும் சம்பவமாகும். அத்தகைய சமயங்களில் துரிதமாக ஸ்கலிதம் அடைய வாய்ப்புண்டு. அப்படியாக இருப்பின் அதை கண்டு கொள்ளாமல் விட்டுவிடுவதே நலமாகும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 21, 2008 9:02 am

குடும்ப சச்சரவுகளின் காரணமாக, கூட்டுக்குடும்ப சூழ்நிலையும் கூட படுக்கையில் மனஸ்தாபம் ஏற்படுவதற்கு காரணமாக அமையலாம். இந்திய அளவில் மத்திய தர வாழ்க்கையில் இருக்கும் மக்களுக்கு தலையாக பிரச்சினையாக இருப்பது பொருளாதாரமாகும். ஆக, பல வீடுகளில் பொருளியல் பிரச்சினைகளும் படுக்கையறை மனஸ்தாபங்களுக்கு வித்திட்டு விடுகிறது. நாம் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளது போல் செக்ஸ் அறியாமையைப் போலவே கணவன் அல்லது மனைவிக்கு செக்ஸ் நோய்கள் இருந்தாலும் அது படுக்கையறை மனஸ்தாபத்திற்கு காரணமாகிவிடலாம்.

உளவியல் அறிஞர்கள் மனதில் ஏற்படும் அச்சம், அழுத்தம், பீதி, சில தகாத எண்ணங்கள் இவைகள்கூட இன்பத்திற்காக உள்ள பாலியல் நடவடிக்கைகளில் பாதிப்பை ஏற்படுத்தலாம்.

மிக முக்கியமான காரணமாக மருத்துவ உலகம் குறிப்பிடுவது- ஒன்று செக்ஸ் பலவீனம் மற்றொன்று செக்ஸ் குறைபாடு. பலவீனம் என்று சொல்லும்போது அதிதீவிரமாக செயல்படுதல், பிற மனிதர்களை தேடி பாலியல் இன்பம் பெறுதல் இவற்றை குறிப்பிடலாம். குறைபாடு எனும் போது திருப்திப்படுத்த இயலாமை, நாம் முன்பே குறிப்பிட்டது மாதிரி துரித ஸ்கலிதம், உறுப்புகளில் வேறுபாடு இவையெல்லாம் அடங்கும். இதன் காரணமாகவும் படுக்கையறையில் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.இவற்றில் பலவற்றை கணவன்- மனைவிகள் தனிப்பட்ட முறையில் பேசியே தீர்வு கணடு விடலாம்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக