புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மனு முறைகண்ட வாசகம் - Page 2 I_vote_lcapமனு முறைகண்ட வாசகம் - Page 2 I_voting_barமனு முறைகண்ட வாசகம் - Page 2 I_vote_rcap 
69 Posts - 43%
ayyasamy ram
மனு முறைகண்ட வாசகம் - Page 2 I_vote_lcapமனு முறைகண்ட வாசகம் - Page 2 I_voting_barமனு முறைகண்ட வாசகம் - Page 2 I_vote_rcap 
66 Posts - 41%
T.N.Balasubramanian
மனு முறைகண்ட வாசகம் - Page 2 I_vote_lcapமனு முறைகண்ட வாசகம் - Page 2 I_voting_barமனு முறைகண்ட வாசகம் - Page 2 I_vote_rcap 
7 Posts - 4%
Dr.S.Soundarapandian
மனு முறைகண்ட வாசகம் - Page 2 I_vote_lcapமனு முறைகண்ட வாசகம் - Page 2 I_voting_barமனு முறைகண்ட வாசகம் - Page 2 I_vote_rcap 
7 Posts - 4%
mohamed nizamudeen
மனு முறைகண்ட வாசகம் - Page 2 I_vote_lcapமனு முறைகண்ட வாசகம் - Page 2 I_voting_barமனு முறைகண்ட வாசகம் - Page 2 I_vote_rcap 
4 Posts - 2%
prajai
மனு முறைகண்ட வாசகம் - Page 2 I_vote_lcapமனு முறைகண்ட வாசகம் - Page 2 I_voting_barமனு முறைகண்ட வாசகம் - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
Manimegala
மனு முறைகண்ட வாசகம் - Page 2 I_vote_lcapமனு முறைகண்ட வாசகம் - Page 2 I_voting_barமனு முறைகண்ட வாசகம் - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
Balaurushya
மனு முறைகண்ட வாசகம் - Page 2 I_vote_lcapமனு முறைகண்ட வாசகம் - Page 2 I_voting_barமனு முறைகண்ட வாசகம் - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
Karthikakulanthaivel
மனு முறைகண்ட வாசகம் - Page 2 I_vote_lcapமனு முறைகண்ட வாசகம் - Page 2 I_voting_barமனு முறைகண்ட வாசகம் - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
சிவா
மனு முறைகண்ட வாசகம் - Page 2 I_vote_lcapமனு முறைகண்ட வாசகம் - Page 2 I_voting_barமனு முறைகண்ட வாசகம் - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனு முறைகண்ட வாசகம் - Page 2 I_vote_lcapமனு முறைகண்ட வாசகம் - Page 2 I_voting_barமனு முறைகண்ட வாசகம் - Page 2 I_vote_rcap 
432 Posts - 48%
heezulia
மனு முறைகண்ட வாசகம் - Page 2 I_vote_lcapமனு முறைகண்ட வாசகம் - Page 2 I_voting_barமனு முறைகண்ட வாசகம் - Page 2 I_vote_rcap 
305 Posts - 34%
Dr.S.Soundarapandian
மனு முறைகண்ட வாசகம் - Page 2 I_vote_lcapமனு முறைகண்ட வாசகம் - Page 2 I_voting_barமனு முறைகண்ட வாசகம் - Page 2 I_vote_rcap 
77 Posts - 9%
T.N.Balasubramanian
மனு முறைகண்ட வாசகம் - Page 2 I_vote_lcapமனு முறைகண்ட வாசகம் - Page 2 I_voting_barமனு முறைகண்ட வாசகம் - Page 2 I_vote_rcap 
36 Posts - 4%
mohamed nizamudeen
மனு முறைகண்ட வாசகம் - Page 2 I_vote_lcapமனு முறைகண்ட வாசகம் - Page 2 I_voting_barமனு முறைகண்ட வாசகம் - Page 2 I_vote_rcap 
29 Posts - 3%
prajai
மனு முறைகண்ட வாசகம் - Page 2 I_vote_lcapமனு முறைகண்ட வாசகம் - Page 2 I_voting_barமனு முறைகண்ட வாசகம் - Page 2 I_vote_rcap 
8 Posts - 1%
Karthikakulanthaivel
மனு முறைகண்ட வாசகம் - Page 2 I_vote_lcapமனு முறைகண்ட வாசகம் - Page 2 I_voting_barமனு முறைகண்ட வாசகம் - Page 2 I_vote_rcap 
5 Posts - 1%
sugumaran
மனு முறைகண்ட வாசகம் - Page 2 I_vote_lcapமனு முறைகண்ட வாசகம் - Page 2 I_voting_barமனு முறைகண்ட வாசகம் - Page 2 I_vote_rcap 
5 Posts - 1%
Srinivasan23
மனு முறைகண்ட வாசகம் - Page 2 I_vote_lcapமனு முறைகண்ட வாசகம் - Page 2 I_voting_barமனு முறைகண்ட வாசகம் - Page 2 I_vote_rcap 
4 Posts - 0%
Ammu Swarnalatha
மனு முறைகண்ட வாசகம் - Page 2 I_vote_lcapமனு முறைகண்ட வாசகம் - Page 2 I_voting_barமனு முறைகண்ட வாசகம் - Page 2 I_vote_rcap 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனு முறைகண்ட வாசகம்


   
   

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 27, 2008 1:41 am

First topic message reminder :

காப்பு
நேரிசை வெண்பா

அன்ன வயல்சூழ் அணியாரூர் வாழ்மனுவாம்
மன்னன் முறைகண்ட வாசகத்தைப் - பன்னுதற்கு
நேய மிகத்தான் நினைப்போர்க் கருள்புழைக்கைத்
து‘ய முகத்தான் துணை.

கங்கைச் சடையான்முக் கண்ணுடையான் அன்பர்தம்முள்
அங்கைக் கனிபோல் அமர்ந்திருந்தான் - அங்கை
முகத்தான் கணங்கட்கு முன்னின்றான் மூவாச்
சுகத்தான் பதமே துணை.



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 27, 2008 1:45 am

அந்தக் கட்டளையை அன்புடன் தலைமேற்கொண்டு வணங்கி விடைபெற்று, மாதாவினிடத்தில் போய்ப் பக்தியுடனே பணிந்தெழுந்து கைகூப்பி நின்று "அநேக விரதங்களை அனுஷ்டத்து அடியேனைப் பெற்றெடுத்து, கண்களை இமைகள் காப்பதுபோற் காத்து வளர்த்த தாயே! அடியேன் தெய்வ சிகாமணியாகிய தியாகராஜப் பெருமானைத் தரிசனஞ் செய்யவேண்டும்; இதற்குத் தந்தையாருடைய சம்மதம் பெற்றுக்கொண்டேன்; இனி உமது உள்ளமும் ஒருமித்தருளவேண்டும்" என்று குறையிரந்துகொண்டான். அதுகேட்ட தாயானவர் உருக்கத்துடன் மனமகிழ்ச்சி கொண்டு முகமலர்ந்து முலைகளிலிருந்து பால் பீரிடவும் கண்களில் ஆசை நீரரும்பவும் தம் அருமைத் திருமகனை நோக்கி "இறைவனையும் என்னையும் நற்கதியிற் சேர்க்கவந்த நாயகமே! நாங்கள் முன்செய்த தவப்பயனாலே கிடைத்த முத்தமே! எங்கள் வருத்தமெல்லாந் தீர்க்கவந்த மாணிக்கமே! சிறந்த கண்மணியே! சுந்தர வடிவமுள்ள சூரியனே! சாந்தகுணமுள்ள சந்திரனே! பேரறிவுடைய பிள்ளாய்! நெடுநாளாகப் பலவிதமான தருமம் தானம் தவம் முதலானவைகளைச் செய்தும் பெற்றுக்கொள்ளாமல், தியாகேசர் சந்நிதிக்கு நடந்து அந்தக் கடவுளின் அனுக்கிரகத்தால் உன்னைப் பெற்றுக்கொண்டோம். அப்படிப்பட்ட பெருங்கருணையுள்ள பெருமானை நீ தரிசிக்கவேண்டுவது அடுத்த காரியந்தான். ஆதலால் நீ போய்க் கண்குளிரக் கண்டு தரிசித்து, 'உபநயனம் முதலான மங்கலக் கோலங்கண்ட நமது கண்கள் மணக்கோலமுங் கண்டு களிப்படைய வேண்டும்! என்று எண்ணியிருக்கிற என்னெண்ணம் விரைவில் முடியும்படி ஒரு வரத்தையும் பெற்றுவரக்கடவாய்" என்று விடை கொடுத்தார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 27, 2008 1:45 am

அவ்விடையைப் பெற்றுக்கொண்ட வீதிவிடங்கன் தன் அரண்மனைக்கு வந்து, தைலம், சந்தனம், கஸ்து‘ரி, பால், தயிர், நெய், பழம் முதலான அபிஷேக திரவியங்களும்; மாணிக்கமாலை, மரகதமாலை, முத்துமாலை, பவளமாலை, பொன்மாலை, வச்சிரமுடி, இரத்தினகுண்டலம் முதலான திருவாபரணங்களும்; கொன்னைமாலை, தும்பைமாலை, வில்வமாலை, சண்பகமாலை, முல்லைமாலை, மல்லிகைமாலை முதலான திருமாலைகளும்; வெண்பட்டு, கோசிகப்பட்டு, பீதாம்பரம் முதலான திருவாடைகளுடத, மற்றும்வேண்டிய திரவியங்களெல்லாமும் தியாகேசர் கோயிலுக்குக் காரியக்காரர்கள் வசத்தில் முன்னதாக அனுப்புவித்து, பின்பு தான் மஞ்சனச்சாலையில் வாச நீராடி வெண்பட்டுடுத்துச் சிவத்தியானத்துடன் திருநீறு தரித்துத் திலகமணிந்து கிரீடம், குண்டலம், கண்டசரம், வாகுவலயம், பதக்கம், சரப்பளி, கடகம், ஆழி, பொற்பூணுநு‘ல், பொன்னரைஞாண், உதரபந்தனம், வீரகண்டை முதலான பூஷணங்களும், பூண்டுகொண்டு ஜோதிமயமான பீதாம்பர உத்தரியம் மேலே தரித்துக்கொண்டு நவரத்தினமிழைத்தவொரு பொற்பிரம்பைக் கையில் பிடித்துக்கொண்டு, அரண்மனைவாசலை விட்டு வெளியே புறப்பட்டு, வேத பாரகராகிக வேதியர்முதலானவர்களுக்குப் பலபலதானங்கள் செய்து, மனோவேகமும் பின்னடையத்ததக்க வேதமான நடையுள்ள நான்கு குதிரைகளைக் கட்டிய மகாமேருவைப் போல உயர்வுள்ள ரத்தின கசிதமாகிய ரதத்தின்மேல் ஆரோகணித்துக்கொண்டு வேதவேதியர், மீமாம்சகர், தார்க்கீகர், வையாகரணர், சோதிடர், ஆயுள்வேதியர், வேதாந்தியர், ஆகமசித்தாந்தர், புராணிகர், சமய சாஸ்திரப் பிரசங்கர் முதலான காரியத்தலைவர்களும்; சினேகர், உறவினர், புரோகிதர் முதலானவர்களும்; மன்னர், மண்டலீகர், பட்டவர்த்தனர் மகுடவர்த்தனர் முதலான அரசர்களும் தங்கள் தங்கள் பெருமைக்குத் தக்க வாகனங்களிலேறிச் சூழ்ந்துவரவும், நெற்றிப்பட்டம் கிம்புரி முதலான அணிகளை அணிந்து அலங்காரஞ் செய்து மதயானைகள் கர்ச்சித்து வரவும், முத்துக்குஞ்சம் முத்துவடம் முத்துவாளி கிண்கிணிமாலை பொற்கலனை முதலான அணிகளால் அலங்கரித்த வலியுள்ள குதிரைகள் கனைத்து வரவும், வீரபட்டம் வீரசங்கிலி வீரகண்டை முதலான அணிகளை யணிந்த வீரர்கள் ஆரவாரித்து வரவும், மங்கலப்பாடகர் பாடவும், வந்தியர் மாகதர் புகழவும், மங்கல மங்கையர் வாழ்த்தவும், நாடகக் கணிகையர் நடனஞ்செய்யவும், பட்டாங்கு படிக்கவும், கட்டியங் கூறவும், அஷ்டமங்கலங்களை ஏந்திச் சுமங்கலிகள் சூழ்ந்து போகவும், வெள்ளை வட்டக் குடைகள் நிழற்றவும், வெண்சாமரை வீசவும், மயிற்குஞ்சங்கள் சுழற்றவும், பூந்தட்டேந்தவும் பேரிகை, தம்பட்டம், தக்கை, உடுக்கை, சச்சரி, தாளம், மத்தளம், தாரை, சின்னம், மல்லரி, சங்கம், எக்காளம், ருத்திரவீணை, நாரதவீணை, தும்புருவீணை, இராவணாஸ்தம், கின்னரி, புல்லாங்குழல் முதலான தோற்கருவி, துளைக்கருவி, கஞ்சக்கருவி, மிடற்றுக்கருவி, நரப்புக்கருவி என்கின்ற ஐவகையான முப்பத்திரண்டு வாத்தியங்களும் முழங்கவும், தேரிற்கட்டிய மணிகளினோசை க¬ர்க¬ரென்று சத்திக்கவும், ஆடுகின்ற மாதரது அடிகளிற் பூண்ட சிலம்போசை கலீர்கலீரென்று ஒலிக்கவும், சகல மங்கல சம்பிரம ஆடம்பரங்களுடன், மாளிகைகளின் வாயில்கள்தோறும் மலர்ப்பந்தரிட்டு மணிமாலைகள் து‘க்கி வாழை கமுகுகள் நாட்டி மெழுகிக் கோலமிட்ட திண்ணைகளில் பூரண கலசங்களும் பொற்பாவைகளும் முளைப்பாலிகைகளும் முகவிளக்குகளும் வெண்சாமரைகளும் இணைக்கயல்களும் கண்ணாடிகளும் பூந்தட்டுகளும் மங்கலமாக வைத்து அலங்கரித்தும் பரிமள திரவியங்களைக் கலந்த பனிநீர் தெளித்துத் து‘ளியெழும்பால் களஞ்செய்தும் ஆடல்பாடல் முதலான விநோதங்களைக் கொண்டு விளங்கிய வீதியினிடத்து தேவேந்திரன் தியாகராஜ தரிசனஞ் செய்யப்போவது போல அவ் வீதிவிடங்கனென்னும் இராஜகுமாரன் தேரை நடத்தனான்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 27, 2008 1:45 am

அப்பொழுது, இரதி இந்திராணி முதலான தேவமாதர்களை யொத்த அவ்வீதியிலுள்ள ஸ்திரீ ஜனங்களெல்லாம் அப்புத்திரனைக் கண்டு மணமுள்ள மலரை வண்டுகள் சூழ்ந்ததுபோலவும் இனிய சுவையுள்ள தேனை ஈக்கள் சுற்றியதுபோலவுஞ் சூழ்ந்துகொண்டு, கலை நெகிழ்ந்தும், கைவளை சோர்ந்தும், கண்­¬ர் ததும்பியும், குழல் அவிழ்ந்தும், கொங்கைகள் விம்மியும், பசலைபோர்த்தும் மையலடைந்த மனத்தவர்களாய், "கரும்பை வில்லாகவுடைய காமனைப் பார்க்கிலும் எண்மடங்கு அழகுடைய இளவரவே! கன்னிகைப் பருவம் உள்ளவளே நான்; என்மேற் கடைக்கண் செய்யாயோ?" என்றும், "எழுதப் படாத சுந்தர வடிவமுள்ள இளங்காளையே! புருஷர் முகம் பாராத பூவையே நான்; என்னைப் புணர்ந்து போகாயோ? என்றும் "கண்களுக்கு நிறைந்த கட்டழகனே! காவல் அழியாத காரிகையே நான்; என்னைக் கலந்து போகாயோ?" என்றும், "சுபலக்ஷணங்கள் நிறைந்த சுந்தர வடிவனே! கல்யாணமில்லாத கன்னிகையே நான்; என்மேல் கருணை செய்யாயோ?" என்றும், "மனுச்சக்கரவர்த்தி பெற்ற மதயானையே! சிறுவயதுள்ளவளே நான்; என்னைத் திரும்பிப் பாராயோ?" என்றும், "அதிசயிக்கத்தக்க அழகனே! நிறையழியாத நேரிழையே நான்; சற்றே நின்று போகாயோ?" என்றும், இந்த நாஜபுத்திரனுக்கு வீதிவிடஙகனென்று பெயரிட்ட பெரியோர்க்கு அனந்தந்தரம் அடிக்கடி தெண்டனிட்டாலும் போதாதே" என்றும், "வாசமுள்ள தைலம் பூசி மணமுள்ள மலர்மாலை சூழ்ந்து வாழைப்பூ இதழ்போல் வகிர்ந்து குயில்முகம் போல முடியிட்டுப் பளிங்குச் சிமிழ்க்குள்ளிருந்து தோன்றுகின்ற பருத்த நீலக்கல்போல் தாவள்ளியமான தலைச்சாத்துக்குள்ளிருந்து சிறுகித் தோன்றுகின்ற குடுமியும், பார்க்கின்றவரது பார்வைக்கு இன்பந்தருகின்ற தோற்றமும் மாறாத மலர்ச்சியும் மனோரஞ்சிதமான அழகும் குளிர்ச்சியும் ஒளியும் பெற்றுச் செந்தாமரை மலர்போல் விளங்கும் முகமும், கருமை மிகுந்து செம்மை கலந்து காருண்ணியந் ததும்பி இங்கிதமறிந்து சிறிதே இமைத்து மனோலம்மியமாய் மலர்போன்று நீண்ட கண்களும் ஒளிகொண்டு உயர்ந்த நீண்ட நாசியும், குண்டலமணிந்து நீண்டு அகன்ற செவியும், திரிபுண்டரந் தரித்துத் திலகந்தீட்டி அழகு பெற்று அகன்று உயர்ந்த நெற்றியுங்ம, பவளம்போற் சிவந்து திரண்ட உதடும், முல்லை யரும்புகள் போலச் சிறுகி நெருங்கி ஒளிவீசும் பற்களும், குறுகி மென்மையாகிச் சிவப்பேறிய நாவும், கண்டசரம் முதலான ஆபரணங்களை அணிந்து வலம்புரிச்சங்குபோல் திரண்ட கண்டமும், மத்தளம் போலத் திரண்டு மந்தர மலைபோல உயர்ந்து கண்டோர் கண்களையுங் கருத்தையுங் கட்டுகின்ற சுகந்தமாலை யணிந்த வெற்றியுள்ள தோளும், வீணைத்தண்டுபோல நீண்டு தாழ்ந்து கடகமணிந்த கையும், தாமரை மலர்போற் சிவந்து மிருதுவாகி மழைபோற் சொர்ணம் பொழிகின்ற முன்கையும், விளக்கமிகுந்து பதக்க முதலானவை அணிந்து களபகஸ்து‘ரிகள் பூசிக் கண்ணாடிபோல அகன்று மலைபோல உயர்ந்த மார்பும், சிறுகி உயர்ந்த வயிறும், ஆழ்ந்து அழகு பெற்ற உந்தியும், யானைத் துதிக்கை போன்று திரண்ட தொடையும், வட்டந் தோன்றாது தசைகொண்டு செழிப்புள்ள முழங்காலும், திரண்ட நீண்ட கணைக்காலும், தாமரை மலர் போன்று வீரகண்டை யணிந்த கால்களுடத, வரம்பு கடவாத வடிப்பமுள்ள வடிவமு முடைய இந்த இராஜபுத்திரனைக் கண்டு களிப்பதற்கு நானென்ன தவஞ் செய்தேனோ!" என்றும், "இராஜ சிங்கமாகிய இந்தக் குமரனைச் சிருஷ்டித்தவன் பிரமதேவனே யானால் இவனழகுக்குத் தக்க மாதினை இனி எங்கே உண்டுபண்ணுவானோ!" என்றும், "இவ்வழகனது வடிவைக்கண்டால் உருகாத கருங்கல்லும் உருகுமானால் பேதைமையுள்ள பெண்கள் மனம் உருகாதிருக்குமோ!" என்றும் "இவனது பூர்ணசந்திர பிம்பம் போன்ற புன்னகையொன்றுமே மூன்றுலகத்திலுமுள்ள பெண்களுக்கெல்லாம் பித்தேற்றுமே!" என்றும் பலவிதமாகத் தனித்தனி சொல்லி மோகங்கொண்டு நின்றார்கள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 27, 2008 1:45 am

அவ்வீதியிலுள்ள வாலிபர் வார்த்திபர் முதலான புருஷ ஜனங்களெல்லாங் கண்டு, "ஆ! ஆ!! இந்தப் புத்திரனே இராஜ புத்திரன்; இவனுக்குமுன் மற்ற இராஜ புத்திரரெல்லாம் இராக்ஷச புத்திரரே" என்றும், "இவன் வடிவே வடிவு; இவன் வடிவுக்குமுன் மற்றவர் வடிவெல்லாம் மர வடிவே" என்றும், "இவன் கற்ற வித்தையே வித்தை; இவனுக்கு முன் மற்றவர் கற்ற வித்தையெல்லாம் மாயவித்தையே" என்றும், "இவன் குணமே குணம்; இவனுக்குமுன் மற்றவர் குணமெல்லாம் வில்லின் குணமே" என்றும், "இவனே இளவரசு; இவனுக்கு முன் மற்ற இளவரசெல்லாம் பூவரசே" என்றும், "இவனே சீமான்; இவனுக்குமுன் மற்றச் சீமான்களெல்லாங் கலைமான்களே" என்றும், "இவன் வீரமே வீரம்; இவன் வீரத்துக்குமுன் மற்றவர் வீர மெல்லாம் சவ்வீரமே" என்றும், "இவன் யௌவனமே யௌவனம்; இவன் யௌவனத்துக்கு முடன மற்றவர் யௌவனமெல்லாம் வெவ்வனமே" என்றும், "இவன் பாக்கியமே பாக்கியம்; மற்றவர் பாக்கியமெல்லாம் நிர்ப்பாக்கியமே" என்றும், "இவனைப் பெற்றவரே பெற்றவர்; மற்றவரெல்லாம் பெண் பெற்றவரே" என்றும், இந்தக் குணரத்தினமான புதல்வனைப் பெறுதற்கு நமது மகாராஜனும் அவரது மனைவியாரும் என்ன நோன்பு நோற்றாரோ" என்றும், "வெற்றியையுடைய வீரசிங்கம்போன்ற இந்தப் புத்திரனது திருமுகமண்டலத்தில் சாந்தந் ததும்புகின்றதே" என்றும், "இவனது வடிவில் அழகு ஒழுகுகின்றதே" என்றும், "நெடுநாளாகக் கண்டுகளிக்க வேண்டுமென்று எண்ணி எதிர்பார்த்திருந்த நமக்கு இன்று தியாகராஜப் பெருமான் திருவருளல்லவோ இந்த இராஜ புத்திரனை இவ் வீதியில் வரும்படி செய்தது? இனி அவ்வருளுக்கு என்ன கைம்மாறு செய்வோம்" என்றும், "இந்தப் புத்திரன் தியாகேசப்பெருமான் வரத்தினால் தோன்றினான் என்பதை இவனது அற்புதமான வடிவமே காட்டுகின்றதே என்றும், "நமதரசனுக்குச் சந்ததி யில்லாமையால் பிற்காலத்தில் உலகம் என்ன பாடுபடுமோ என்று எண்ணி இளைத்திருந்த நமது துன்பத்தையெல்லாம் நீக்கி இன்பத்தைக் கொடுத்த இப்புத்திரனுக்கு நாம் செய்யும் உபகாரம் ஒன்றுமில்லையே" என்றும், மனுச்சோழ மகாராஜனைப்போல நம்மையெல்லாம் பாதுகாத்து வருவானென்பதற்கு வேறே அடையாளம் வேண்டுமோ? இவனிடத்திற் கருணை துளும்புகின்ற கடைக்கண்களே காட்டுகின்றன" என்றும் பலவிதமாகத் தனித்தனி சொல்லிக் கொண்டு சூழ்ந்து நின்றார்கள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 27, 2008 1:46 am

இந்தப் பிரகாரம் அவ்வவ் வீதியிலுள்ள ஸ்திரீ ஜனங்களும் புருஷ ஜனங்களும் பார்த்துப் பார்த்துப் பலவிதமாகப் புகழ்ந்து நெருங்க வீதிவிடங்கன் தேரிலேறிச் செல்லும்போது, ஒரு வீதியில், தேரிலே கட்டிய குதிரைகள் தேர்ப்பாகன் வசத்தைக் கடந்து தெய்வத்தின் வசமாகி, அதிவேகமாக அத்தேரை இழுத்துக்கொண்டு சென்றன. அத் தருணத்தில் தாய்ப்பசுவானது பின்னே வர முன்னே வந்த அழகுள்ள ஒரு பசுங்கன்றானது 'இளங்கன்று பயமறியாது' என்ற மொழிப்படியே துள்ளிக்குதித்துக்கொண்டு எதிர் வந்து, இராஜகுமாரனைச் சூழ்ந்து வருகிற சனத்திரள்களுக் குள்ளே ஒருவருமறிந்து கொள்ளாதபடி ஊழ்வினையாற் கண்மயக்கஞ் செய்வித்து உட்புகுந்து, அதிவேகமாகச் செல்லுகின்ற தேர்ச் சக்கரத்தில் அகப்பட்டு அரைபட்டு உடல் முறிந்து குடல்சதிந்து உயிர்விட்டுக் கிடந்தது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 27, 2008 1:46 am

உடனே அந்தப் பசுங்கன்று தனது தேர்ச்சக்கரத்தில் அகப்பட்டதைக் கேட்ட வீதிவிடங்கன் இடியோசை கேட்ட நாகம் போலத் திடுக்கிட்டு, நடுநடுங்கித் தேரிலிருந்து கீழே விழுந்து, எண்ணப்படாத துன்பத்தோடும், பயத்தோடும் எழுந்துபோய் அப் பசுங்கன்று இறந்து கிடப்பதைக் கண்டு, மதிமயங்கி மனம் பதைத்துக் கையுங்காலும் நடுக்கெடுத்துப் பெருமூச்சுவிட்டு உடம்பு வியர்த்துச் சோபமடைந்து விழுந்து, சிறிதே தெளின் தெழுந்து கண்களிலே நீர் ஆறாகப் பெருக நின்று, "சிவசிவா! சிவசிவா!! சங்கரா! சங்கரா!! சம்புவே! சம்புவே!! மஹாதேவா! மஹாதேவா!! தியாகராஜப்பிரபு! தியாகராஜப்பிரபு!! தேவரீ€த் தரிசிக்கவேண்டு மென்று வந்த அடியேனுக்கு இப்படிப் பட்ட இடரும் வரலாமா? நன்றறியாத பாவி இவன் நம்மைத் தரிசிக்கத் தக்கவனல்ல னென்று திருவுளங் கொண்டு தானோ என்னை இந்தப் பழிக்கு ஆளாக்கியது? தேவரீரைத் தரிசனஞ் செய்ய எண்ணி வந்த அடியேன் கால்வருந்த நடந்து பயபக்தியுடனே வந்து தரிசிக்க வேண்டும்; அவ்வாறு செய்யாமல், செல்வச் செருக்கினால் தேரிலேறிக் கொண்டு ஆடம்பரங்களுடன் பக்தியில்லாது பகல்வேஷக்காரன் போல டம்பவேஷங் காட்டி வந்த அன்பில்லாத பாவியாகிய என் பிழையைக் குறித்து நோவதல்லது, எம்பெருமானிடத்திற் குறை சொல்லத் தகுமோ? இப்படிப்பட்ட பெரும்பாதகம் செய்யத்தானோ பிள்ளையாகப் பிறந்தேன்? விரிந்த பாற்கடலில் விஷம் பிறந்ததுபோல் மறைநெறி தவறாத மனுவின் வமிசத்தில் எதிரற்ற பாவியாகிய நான் ஏன் பிறந்தேன்? பழிபாவங்களைக் கனவிலும் கண்டறியாத மனுச்சோழராகிய என் பிதாவுக்குப் பெரும்பழியைச் சுமத்தத்தானோ பிறந்தேன்? சிவபெருமானைத் தரிசித்துச் சீர்பெறலாமென்று எண்ணி வந்த எனக்குச் சிவதரிசனங் கிடையாது தீராப்பழி கிடைத்ததே! ஓகோ! 'எண்ணம் பொய்யாகும் ஏளிதம் மெய்யாகும்' என்ற வார்த்தை என்னிடத்திலே இன்று அனுபவப்பட்டதே! ஐயோ! நான் கற்ற கல்வி யெல்லாம் கதையாய் முடிந்ததே; நான் கேட்ட கேள்வியெல்லாம் கேடாய் முடிந்ததே; நான் அறிந்த அறிவெல்லாம் அவலமாய் விட்டதே; நான் தெளிந்த தெளிவெல்லாம் தீங்காய் விட்டதே! அரஹரா! இப்படிப்பட்ட தீங்கு வருமென்று அறிந்தால் தேரிலேறேனே, பசுவைக் கொலை செய்வதே பாவங்களி லெல்லாம் பெரும் பாவம், அதைப் பார்க்கிலும் பசுங்கன்னைக் கொலைசெய்வது பஞ்சமா பாதகத்தினும் பதின்மடங்கு அதிகம் என்று பெரியோர் சொல்லக் கேட்டறிந்திருக்கிற நான் இன்று அந்தப் பாதகத்துக்கு ஆளாகியும் உயிரை விடாமல் உடலைச் சுமந்திருக்கின்றேனே; இளங்கன்று எதிரே வரவும் அதைப்பாராமல் அதன்மேற் தேரை நடத்தியது செல்வச் செருக்கல்லவோ என்று உலகத்தார் பழிக்கும் பழிக்கத்தான் உடம்பெடுத்தேன்; நான் புத்தி பூர்வமாக எள்ளளவாயினும் அறிந்திருப்பேனானால் இப்படிப்பட்ட அபாயம் நேரிடவொட்டேன்; என்ன செய்வேன்! என்ன செய்வேன்!! மனுச்சோழர் காலத்தில் அவர் புத்திரன் ஒரு பசுங்கன்னைக் கொன்றான் என்னும் பழிமொழியை உலகத்தில் நிலைபெற நாட்டினேனே! நீதி தவறாது உலகத்தை யெல்லாம் ஆளுகின்ற மனுச்சக்கரவர்த்தி யென்னும் மகாராஜனுக்குப் பிள்ளையாகப் பிறக்கும்படி இருந்த நல்வினை இப்போது பேயாகப் பிறப்பதற்குத் தக்க தீவினையாய் விட்டதே! இந்தப் பிறப்பிலே இப் பழியை ஏற்றுக் கொள்வதற்கு முன் பிறப்பில் என்ன பாவஞ் செய்தேனோ? து‘ய்மையுள்ள சூரிய குலத்திற்கு ஆதியாகிய மனுவென்பவரும் அவர் வழிக்குப்பின் வழிவழியாகத் தோன்றிய குலோத்துங்க சோழர், திருநீற்றுச்சோழர், காவிரிகரைகண்ட சோழர், மனுநீதிச்சோழர், இராஜேந்திரசோழர், இராஜசூடாமணிச்சோழர், இராஜராஜசோழர், உறையூர்ச்சோழர், மண்ணளந்தசோழர், கங்கைகொண்ட சோழர், தேவர்சிறைமீட்ட சோழர், மரபுநிலைகண்ட சோழர், எமனைவென்ற சோழர், சுந்தரச்சோழர், மெய்ந்நெறிச் சோழர் முதலான என் மூதாதைகளான முன்னோர்களெல்லாம் தீமையைச் சேராது செங்கோல்நடத்தி அடைந்த கீர்த்தி இக்காலத்தில் எடுக்கப்படாத பழியைச்சுமந்த என்னால் மறைந்து போகும்படி நேரிட்டதே! ஐயோ! இதை எண்ணும்போது, நான் குலத்தைக் கெடுக்க வந்த கோடரிக் காம்பானேனே! மரபழிக்கவந்த வச்சிராயுதமானேனே! கன்றுக்குப் பாலு‘ட்டாதவனைக் கண்டாலும் பாவமென்று சொல்லுகிற பெரியோர்கள் சேங்கன்றைத் தேர்க்காலிலிட்ட என்னைக் குறித்து என்ன சொல்வார்கள்? இந்தக் கன்று எங்கே பிறந்ததோ? எங்கே வளர்ந்ததோ? எங்கே போக எண்ணியதோ? இங்கே வந்து இறக்க நேரிட்டதே! சுந்தரமுள்ள இக் கன்று இறந்ததைக் கண்ட எனக்கே இவ்வளவு துக்கமுண்டாயிருக்கின்றதே! இதை ஈன்ற தாய்ப்பசு கண்டால் என்ன பாடு படுமோ? இச் செய்தியை என் பிதாவானவர் கேட்பாரானால் ஏதாய் முடியுமோ? வார்த்தைமாத்திரத்திலே பழியென்று சரசஞ் செய்கின்றவர்களையுந் தண்டிக்கின்ற தந்தையார் திருமுகத்தில் தகுதியல்லாத பழியைச் சுமந்து தண்டனைக்காளாகிய நான் எவ்வாறு விழிப்பேன்? இனி இவ்வுலகில் பழிக்காளாகி உண்டுடுத்து உலாவி உயிர் வைத்திருக்க மாட்டோன்; இன்றே என்னுயிரை இழந்துவிடுகிறேன்!" என்று பலவிதமாகப் பரிதபித்து, துக்க சமுத்திரத்தில் அழுந்திக் கரை காணாதவனாகி நின்றபோது, உடன் சூழ்ந்துவந்த அந்தணர் அமைச்சர் முதலானோர் ராஜகுமாரனைப் பார்த்துத் தாமும் விசனமடைந்தவர்களாய், "ஓ விவேகமுள்ள வீதிவிடங்கனே! நீர் என்ன கெடுதி நேரிட்டதென்று இப்படிப் பிரலாபிக்கின்றீர்? அந்தப் பசுவின் கன்றை நீர் கொல்லவேண்டு மென்று கொன்றீரோ? அல்லது அந்தக் கன்று தேர்க்காலில் அகப்படுவதை அறிந்தும் அஜாக்கிரதையாயிருந்தீரோ? அக்கன்று ஓடிவந்ததைச் சூழ்ந்திருந்த நாங்கள் ஒருவரும் அறியோமே; நீர் எப்படி அறிவீர்? அது கர்மவசத்தாலே எல்லார் கண்களிலும் மண்களைத் துவி வலிய வந்த மடிந்ததே; அதற்கு நீர் என்ன செய்வீர்? மிருக ஜாதிகளிலே உயர்வுள்ள பசுவின் கன்று இறக்கநேரிட்டதே யென்று எண்ணி யெண்ணிச் சோர்ந்து போகின்றீர். ஆனால் அதற்கென்ன செய்வோம்? பொன்கத்தி என்று கழுத்தரிந்து கொள்ளலாமோ? இதனால் நமக்குப் பழி பாவம் ஒன்றுமில்லை; ஆயினும் இதுபற்றி உமது மனது ஆலைபாய்ந்து அவலங் கொள்ளுகின்றபடியால், வேதத்தில் விதித்திருக்கின்ற பிராயச்சித்தங்களுள் இதற்குத் தக்கது எதுவோ அதைக் கேட்டறிந்து செய்து கொள்ளலாம்; நீர் சித்தங் கலங்காமல் தேரிலேறும்" என்று சொன்னார்கள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 27, 2008 1:46 am

அதுகேட்ட வீதிவிடங்கன் "நடுவாகப் பேசுகின்ற நல்லோர்களாக விருந்தும் காலவேற்றுமையால் கருத்துவேறுபட்டு முகநட்பாகப் பேசி முகந்துடைக்கின்றவர்கள்போற் சொன்னீர்கள். இதென்ன ஆச்சரியம்! பூர்வம் எங்கள் வம்சத்தில் சிபிச்சக்கரவர்த்தி என்பவர் ஒருவர் ஒரு வேடன் துரத்திக்கொண்டு வரப்பயந்து அடைக்கலமாகப் புகந்த புறாவுக்கு அபயஹஸ்தஞ்செய்து, பின்பு அவ்வேடன் வந்து புறாவைக் கேட்டு வழக்கிட்டபோது, அந்தப் புறாவுக்கு ஈடாகத் தமது சரீரத்திலுள்ள மாமிசத்தை யெல்லாம் அரிந்தரிந்து தராசில் வைத்தும் நிறைகாணாமலிருக்க, அதுகண்டு தாமும் அந்தப் தராதசிலேறினார். அவர் பட்சி ஜாதிகளில் சாமானியப் பிறவியாகிய புறாவின் உயிர்க் கொலைக்கே அஞ்சித் தம் உடம்பைக் கொடுத்ததுமன்றி உயிரையுங் கொடுத்தாரானால், அப்பட்சி ஜாதிகளில் விசேடப் பிறப்பாகிய கருடன் முதரான உயிர்களினிடத்து எப்படிப்பட்ட காருண்ணியமுள்ளவராய் இருக்கவேண்டும்? அதனினும் உயர்ந்த மிருக ஜாதிகளில் எவ்வகைப்பட்ட கிருமையுடையவராய் இருக்கவேண்டும்? அதனினம் அம்மிருக ஜாதிகளில் விசேடமாகிய பசுக்களினிடத்தில் எப்படிப்பட்ட இரக்கமுள்ளவராய் இருக்கவேண்டும்? அதனினும் பசுவின் கன்றுகளிடத்தில் எவ்வகைப்பட்ட தயவுள்ளவராய் இருக்க வேண்டும்? அப்படிப்பட்டவருடைய வம்சத்தில் நான் பிறந்தும், இன்று வீதியில் வரும்போது யாரோ பயங்காட்டித் துரத்த, அதனால் நடுங்கி என்னெதிரே அடைக்கலமாகத் துள்ளியோடி வந்த இந்தப் பசுங்கன்றை அபயஹஸ்தங் கொடாமல், அநியாயமாகத் தேர்க்காலில் அகப்பட்டிறந்துபோகச் செய்தேனே! இப்படிப்பட்ட என்னை என்ன செய்தால் தீரும்? என்னை இதற்குத்தக்க பிராயச்சித்தஞ் செய்து கொள்ளும்படி சொன்னீர்கள்; எங்கள் வம்சத்திலிருந்த அரசர்கள் இரக்கத்துடன் நீதி தவறாது அரசு செலுத்தி வந்த கிரமத்தையும், என் பிதாவாகிய மனச்சோழர் நடுநிலை தவறாமல் எவ்வுயிர்களையும் தம்முயிர்போலப் பாதுகாத்து வருகின்ற முறைமையையும், அரசர்க்குக் கோபூசை செய்வது கடனென்ற வேதவாக்கியத்தையும், அரசர் பசுக்களுக்கு யாதொரு குறைவும் நேரிடவொட்டாமல் மிகுந்த ஜாக்கிரதையுடன் விருத்தி செய்விக்க வேண்டுமென்கிற பெரியோர் வாக்கியத்தையும், ஐயோ! எங்கே அனுப்பிவிட்டு இங்கே பிராயச்சித்தஞ் செய்து கொள்ளுவேன்!" என்று துயரத்துடன் சொல்லினான்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 27, 2008 1:46 am

அதுகேட்ட அவ்வந்தணர் முதலானவர்கள் "வாராய் இராஜபுத்திரனே! நாங்கள் முகத்துக் கிச்சையாக முன்னொன்று பேசிப் பின்னொன்று சொல்லுகின்றவர்களல்ல; நெடுநாளாக எங்களுடன் பழகியிருந்தும் எங்கள் சுபாவம் இன்னமும் உமக்கு நன்றாகப் புலப்படவில்லை என்று தோன்றுகின்றது. உலகம் தலைகீழாகுமானாலும் உள்ளபடி சொல்லுவோமே யல்லது புதிதாகத் தொடுத்துப் பொய் பேசமாட்டோம். நாங்கள் சொல்லும் வார்த்தையில் நம்பிக்கை வைத்துக் கேட்கக் கடவீர். அந்தப் பசுங்கன்று ஒருவர் துரத்த அதனால் பயந்து அடைக்கலமாக வேண்டுமென்கின்ற அறிவோடு உமக்கெதிரே ஓடிவந்ததல்ல; அல்லது தானே துள்ளிக்குதித்து ஓடிவந்தததுமல்ல; அதை இன்னவிடத்தில் இன்ன காலத்தில் இன்னபடி இறக்குமென்று விதித்திருந்த அதன் தலைவிதியே அதனைத் துரத்திக்கொண்டுவந்து தேர்க்காலில் அகப்படுத்திச் சிதைந்துவிட்டது; அதன் விதி அப்படியிருக்க நீர் வீணாக விசனப்படுவதில் என்ன பலன்? 'கும்பகோணத்துப் பள்ளன் கொள்ளை கொண்டுபோகத் தஞ்சாவூர்ப் பார்ப்பான் தண்டங் கொடுத்தான்' என்னும் பழமொழிபோல அதனுயிரே விதி கொள்ளை கொள்ள உம்முயிரைத் தண்டங் கொடுப்பதேன்? நீர் ஒன்றுக்கும் அஞ்சாமல் தேரிலேறும்" என்று சொன்னார்கள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 27, 2008 1:47 am

அதுகேட்டு ராஜபுத்திரன், "சிவதரிசனம் செய்ய எண்ணித் தேரிலேறும்போதே கால்தவறியும் இடது தோளும் இடது கண்ணும் துடித்தும் காட்டிய உற்பாதங்களை ஆலோசியாமல் புறப்பட்ட என்மதியை நினைத்துத்தான் துயரப்படுவேனோ! அரசர் குலத்திற் பிறந்தும் என்னை இழிகுலத்தார் செய்யும் செய்கையைச் செய்வித்த என்விதியை நினைத்துத்தான் துயரப்படுவேனோ! மாசில்லாத சூரிய குலத்துக்கு மாசுண்டாகும்படி செய்ததைக் குறித்துத் துயரப்படுவேனோ! பிதாவுக்குப் பழிசுமத்தப் பிள்ளையாகப் பிறந்ததைக் குறித்துத் துயரப்படுவேனோ! இக்கன்றின் இறப்பைக் கண்ட தாய்ப்பசு துக்கப்படுமென்பதை நினைத்துத் துயரப்படுவேனோ! நானொருவன் எதற்கென்று துயரப்படுவேன்! என்ன செய்வேன்! செய்யத் தக்கதான்றும் இன்ன தென்று அறியேனே! ஆயினும் 'முற்ற நனைந்தார்க்கு ஈரமில்லை' என்பதுபோல முழுதும் பழிப்பட்ட எனக்கு இனி யென்ன துக்கமிருக்கின்றது! இனிப் பெரியயோர்சொல் கடக்கப்படாது என்பதுபற்றி உமது சொற்படியே இதோ இரதத்தில் ஏறுகின்றேன்! என்னை எப்படிப் புனிதனாக்க வேண்டுமோ அப்படிச் செய்து கடைத்தேற்றுவது உங்களுக்கே கடன்" என்று சொல்லி, ஏறி, இரதத்தை வந்த வழியே திருப்பிவிட்டுப் பிராயச்சித்தம் அறிந்து செய்விக்கத்தக்க பெரியோர்களிடத்துக்கப் போயினான்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 27, 2008 1:47 am

இந்தப் பிரகாரம் இராஜகுமாரன் போனபின்பு, இறந்துவிட்ட அக்கன்றை ஈன்ற தலையீற்றுப் பசுவானது தன் கன்று துள்ளிக் குதித்தோடிய வழியேபோய் அந்தக் கன்று கீழேவிழுந்து கிடப்பதைத் து‘ரத்தே கண்டவளவில் குலைகுலைந்து நடுநடுங்கி புத்திமயங்கி ஒன்றுந் தெரியாமல் சூறைக்காற்றில் அகப்பட்ட துரும்பைப்போல் சுழன்று சுழன்று ஓடிச் சமீபத்தில் வந்து உடல் சிதைந்தும் குடல் சரிந்தும் உயிர்விட்டுக் கிடப்பதைப் பார்த்துச் சோர்ந்துவிழுந்து பிரக்கினை தப்பிப் பிணம்போற் கிடந்து, பின்பு சற்றே தெளிந்தெழுந்து பெருமூச்சுவிட்டு அந்தக் கன்றைச் சுற்றிச் சுற்றிக் கோவென்று அலறியலறி அதனுடம்பை முகர்ந்து முகர்ந்து, "இதென்ன தீவினையோ; இதென்ன இந்திரசாலமோ! இதென்ன விபரீதமோ! வாலசைத்துக் கால்விசைத்து எனக்குமுன் துள்ளியோட இப்போது பார்த்தேனே! இத்தனை விரைவில் இப்படிப்பட்ட இடியிடிக்கும் என்று எள்ளளவும் அறியேனே! காவிரி முதலான தீர்த்த யாத்திலை செய்தும், சிதம்பரம் முதலான ஸ்தலயாத்திரை செய்தும், திருக்கோயில்களிலும் திருவீதிகளிலும் உள்ள புல் முதலானவைகளை வாயினாற் களைந்து திருப்பணி செய்தும், புல் மேயாமலும் நீர் குடியாமலும் நெடுநாள் விரதங்காத்தும் உன்னைப் பெறப்பட்ட பாடு தெய்வம் அறியுமே! அவ்வளவு பாட்டையும் அவலமாக்கிப் போட்டு, சேங்கன்றே! என்னைத் தெருவில் விட்டாயே! உன்னைப் பெறுகிறதற்கு நோற்ற நோன்புகளால் வந்த இளைப்பு இன்னும் ஆறவில்லையே! இதற்குள் இப்படிப்பட்ட ஆறாத பெரு நெருப்பை அடிவயிற்றில் வைத்தாயே! இந்தத் துக்கத்தை இனி எந்த விதத்தினாற் சகித்துக்கொள்ளுவேன்! 'பாவிக்கப் பாக்கியந் தக்காது' என்பதற்குச் சரியாகப் பளிங்கு போன்ற நிறமும், பால் வடிகின்ற முகமும், சிறுகித் திரண்ட திமிலும், கடைந்தெடுத்தது போன்று கால்களும் வாழைச் சுருள் போன்று வளர்ந்த வாலும், சித்திரக்கன்று போன்று சுபலக்ஷணங்களைப் பெற்ற வடிவுமுடைய நீ நிர்ப்பாக்கியமுள்ள எனக்குத் தக்காமற் போய்விட்டாயே! உன்னுடைய சுந்தரமுள்ள வடிவத்தைக் கண்டாற் காமதேனுவுங் கட்டி யணைத்து முகங்குளிர்ந்து முத்தங் கொள்ளுமே! நான் உன்னைப் பற்றியல்லவோ உயிர்தரித்து உலகத்தில் உலாவியிருந்தேன்! இன்னும் ஒருதரம் உன்னழகிய முகத்தைக்கண்டு என் மடிசுரந்து பால் சொரியக் காண்பேனோ! ஐயோ! உன்னை 'ஆயிரங் கன்றுகளிலும் அழகுள்ள கன்று' என்று கண்டோர் சொல்லக் களிப்புடன் கேட்ட என் காதுகளால் இன்று 'இளங்கன்றை இறக்க விட்டு மலட்டுப் பசுப்போல் வருந்துகின்றதே' என்று பலபேரும் பழித்துப் பேசுகின்ற வார்த்தையை எவ்வாறு கேட்பேன்? என்று எண்ணியெண்ணி இளைப்படைந்து மூர்ச்சித்து, மறுபடியுந் தெளிந்து இறந்து கிடக்கின்ற கன்றினுடம்பை உற்றுப் பார்த்த இரதத்தின் சக்கரம் ஏறுண்டு இரத்தஞ்சொரிய அழுந்திக் கிடக்கின்ற வடுவைக் கண்டு, "ஓகோ!! என் ஏழை மதியால் ஏதோ ஒரு சொற்பமான அபாயத்தால் விழுந் திறந்ததென்று எண்யி யிரங்கினேனே! இவ்வடுவைப் பார்க்கம்போது தேர்ச்சக்கரம் ஏறுண்டு உடல் சின்னப்பட்டு இறந்ததாகத் தெரியவருகின்றதே! ஆ! ஆ!! உனக்கு இப்படிப்பட்ட பெரிய அபாயம் வந்து சம்பவிக்கும்படி நானென்ன பாவஞ் செய்தேனோ! ஓ குழந்தாய்! நீ தேர்க்காலில் அகப்பட்டபோது எப்படிப் பயந்தாயோ! என்ன நினைந்தாயோ! எவ்வாறு பதைத்தாயோ! உயிர்போய் உடல் குழம்பிக் கிடக்கின்ற உன்னைப் பார்க்கப் பார்க்கப் பெற்ற வயிறு பற்றி யெரிகின்றதே!" என்று கண்¬ர் விட்டுக் கதறிக் கதறி அழுதழுது புரண்டு புரண்டு விம்மி விம்மி வெதும்பி வெதும்பிப் பெருமூச்சவிட்டு விழுந்து விழுந்து மெய்மறந்து கிடந்து, பின்பு எழுந்து "என் கன்றினைத் தேர்க்காலில் அழுத்திக் கொன்ற காருண்யமில்லாத கண்மூடியைக்கண்டால் என்னிரண்டு கொம்புக்கும் இரையாக்காது விடுவேனோ! மைந்தரைப் பெறாத மலட்டுத்தன முள்ளவர்களும் இப்படிச் செய்தத் துணிவு கொள்ளார்கள்! ஆ! இது செய்யத் துணிந்தவன் இன்னுமென்ன செய்யத் துணியான்!" என்று வெம்பியும் "துன்பஞ் செய்விக்கும் துஷ்டர்களுக்கும் கொலை செய்கின்ற கொடுந் தொழிலோர்க்கம் இடங்கொடாத இந்நகரம் இன்று வலியற்ற உயிர்களை மாய்த்து விடுகின்ற வஞ்சகர்க்கும் இடங்கொடுத்ததே! ஐயோ, இதில் அரசனில்லையோ! நீதியில்லையோ! நெறியில்€யோ! இதென்ன அநியாயமோ!" என்று முறையிட்டும், தன் கன்றையிழந்ததனால் உண்டாகிய துக்கத்தைச் சகிக்க மாட்டாததாய் வருந்தி, 'நமக்கு சென்று குறிப்பித்து நிவர்த்தி செய்து கொள்ளுவோம்' என்றெண்ணி அக்கன்றைப் பசுந்தழைகளால் மூடி, கண்¬­ர் சொரிந்து கதறிக் கொண்டே மனுச்சக்கரவர்த்தியின் வாயிலில் வந்து, குடிகளுக்கக் குறைவு நேரிட்டால் அதை அரசனுக்கு அறிவிக்கும்படி அவ்வரண்மனை வாயிலில் கட்டியிருக்கிற ஆராய்ச்சிமணியைத் தன் கொம்பினால் மிகந்த விசையோடும், வலியோடும் அடித்தசைத்தது.

Sponsored content

PostSponsored content



Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக