புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 6:08 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 5:53 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 3:09 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 2:44 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 1:07 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 1:05 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:04 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 1:02 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 1:01 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 12:59 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 3:50 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 3:06 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:55 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:44 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:32 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:24 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 5:28 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:23 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 1:32 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 1:19 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Thu Nov 14, 2024 7:10 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Thu Nov 14, 2024 7:06 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Thu Nov 14, 2024 7:05 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 1:47 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 1:44 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 1:38 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:49 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:47 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:46 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:45 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:44 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:42 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:40 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 5:33 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 5:21 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 5:18 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 4:55 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 4:53 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 4:29 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 2:41 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 2:39 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 2:01 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:57 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:55 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:54 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:49 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:46 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தண்ணி...தண்ணி ! Poll_c10தண்ணி...தண்ணி ! Poll_m10தண்ணி...தண்ணி ! Poll_c10 
113 Posts - 75%
heezulia
தண்ணி...தண்ணி ! Poll_c10தண்ணி...தண்ணி ! Poll_m10தண்ணி...தண்ணி ! Poll_c10 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
தண்ணி...தண்ணி ! Poll_c10தண்ணி...தண்ணி ! Poll_m10தண்ணி...தண்ணி ! Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
தண்ணி...தண்ணி ! Poll_c10தண்ணி...தண்ணி ! Poll_m10தண்ணி...தண்ணி ! Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
தண்ணி...தண்ணி ! Poll_c10தண்ணி...தண்ணி ! Poll_m10தண்ணி...தண்ணி ! Poll_c10 
3 Posts - 2%
Pampu
தண்ணி...தண்ணி ! Poll_c10தண்ணி...தண்ணி ! Poll_m10தண்ணி...தண்ணி ! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
தண்ணி...தண்ணி ! Poll_c10தண்ணி...தண்ணி ! Poll_m10தண்ணி...தண்ணி ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தண்ணி...தண்ணி ! Poll_c10தண்ணி...தண்ணி ! Poll_m10தண்ணி...தண்ணி ! Poll_c10 
278 Posts - 76%
heezulia
தண்ணி...தண்ணி ! Poll_c10தண்ணி...தண்ணி ! Poll_m10தண்ணி...தண்ணி ! Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
தண்ணி...தண்ணி ! Poll_c10தண்ணி...தண்ணி ! Poll_m10தண்ணி...தண்ணி ! Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
தண்ணி...தண்ணி ! Poll_c10தண்ணி...தண்ணி ! Poll_m10தண்ணி...தண்ணி ! Poll_c10 
8 Posts - 2%
prajai
தண்ணி...தண்ணி ! Poll_c10தண்ணி...தண்ணி ! Poll_m10தண்ணி...தண்ணி ! Poll_c10 
5 Posts - 1%
Balaurushya
தண்ணி...தண்ணி ! Poll_c10தண்ணி...தண்ணி ! Poll_m10தண்ணி...தண்ணி ! Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
தண்ணி...தண்ணி ! Poll_c10தண்ணி...தண்ணி ! Poll_m10தண்ணி...தண்ணி ! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
தண்ணி...தண்ணி ! Poll_c10தண்ணி...தண்ணி ! Poll_m10தண்ணி...தண்ணி ! Poll_c10 
3 Posts - 1%
Barushree
தண்ணி...தண்ணி ! Poll_c10தண்ணி...தண்ணி ! Poll_m10தண்ணி...தண்ணி ! Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தண்ணி...தண்ணி ! Poll_c10தண்ணி...தண்ணி ! Poll_m10தண்ணி...தண்ணி ! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தண்ணி...தண்ணி !


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jan 30, 2011 2:45 pm

பரமார்த்த குருவின் வழிவந்தவர்தான் வரமார்த்த குரு. ஒருநாள் நீண்ட தூரம் பயணம் செய்த களைப்பால், தண்ணீர் தாகத்தால் முனிவருக்கு தொண்டை வரண்டு மயங்கிக் கீழே விழுந்து விட்டார். பதறிப்போன சீடர்கள், விறகுகளை எல்லாம் அப்படியே போட்டுவிட்டு, என்ன செய்வதென்று தெரியாமல் குருவைச் சுற்றி நின்றனர். பொழுதும் போய்விட்டது. அமாவாசை இருட்டு வேறு.

""இருக்கிற கொஞ்சம் வெளிச்சம் மறைவதற்குள், முண்டன், சமுட்டி நீங்கள் இருவரும் ஆசிரமத்திற்கு விரைவாக ஓடிச்சென்று குடிக்க நீர் மொண்டுக்கிட்டு வாருங்கள். அதோடு லாந்தரையும் ஏற்றிக்கொண்டு வாருங்கள்!'' என்றான் சண்டன்.

இருவரும் ஆசிரமம் நோக்கி ஓடினர். அவர்கள் வருவதற்குள் இருட்டிவிட்டது. அதுவரை, மற்ற மூன்று சீடர்களும், குருவின் கை, கால், உடம்பு முழுக்க கைகளால் அமுக்கி விட்டனர்; குரு பேச்சு மூச்சின்றிக் கிடந்தார்.

கொஞ்ச நேரத்தில், முண்டனும், சமுட்டியும், தண்ணீரும், லாந்தரும் கொண்டு வந்தனர். தண்ணீரை குருவின் முகத்தில் தெளித்தான் சண்டன். முனிவருக்குச் சிறிது களைப்பு நீங்கியது. குடிக்க தண்ணீர் கொடுத்தனர். களைப்பு நீங்கினாலும், குருவால் எழுந்திருக்க முடியவில்லை.

""முண்டா! நாங்கள் நால்வரும் குருவை அப்படியே தோளில் தூக்கிக் கொள்கிறோம். நீ ஒரு கையில் கமண்டலத்தையும், மற்றொரு கையில் லாந்தரையும் எடுத்துக்கொண்டு எங்களுக்கு வெளிச்சம் காட்டிக்கிட்டு பின்னாடியே வா! நீ முன்னாடி போனீன்னா, உன் நிழல் எங்களுக்கு வெளிச்சத்தை மறைக்கும்,'' என்றான் சண்டன். அனைவரும் ஒப்புக் கொண்டனர்.

குருவைத் தூக்கிக் கொண்டு நடந்தனர். கீழே கல், முள், பள்ளம். காலடியைப் பார்த்துக் கொண்டு நடந்து வந்தனர். பாதிதூரம் வந்தபிறகு, வழியில் பட்டமரம் ஒன்று இருந்திருக்கிறது. அது தெரியாமல், குருவுடைய தலை அம்மரத்தில் "மடார்' என்று மோதியது. ""ஆ! ஐயோ! அம்மா!'' என்று அலற, ""பார்த்து வாருங்கள்... வழியில் ஏதோ தடுப்பது போல் உள்ளது!'' என்றான் முண்டன்.

அவர்களுக்கு பின்னால் வந்த சமுட்டி, ""இல்லை... குரு நமக்குப் பாடம் நடத்தும்போது சொன்னது இப்பதான் என் நினைவுக்கு வருகிறது!'' என்றான்.

""டேய்! சொல்லித் தொலைடா சீக்கிரம்... நேரம் வேற ஆகுது; தோள் வேற வலிக்குது!'' என்றான் பாவாடை.

""பாதை மாறிப் போகும்போது பயணம் தடைபடும்ன்னு நம் குரு சொல்லியிருக்கிறார். அதனால், கொஞ்சம் தள்ளி இந்தப் பக்கம் வாங்க...'' என்று சொல்லித் தள்ளிப் போயினர். ஒருவழியாகக் குருவை ஆசிரமத்தில் கொண்டு சேர்த்துவிட்டனர்.

குருவைக் கட்டிலில் படுக்கப்போட்டு, கை, கால் அமுக்கிவிட்டனர். இருந்த பழைய சோற்றைச் சீடர்கள் அனைவரும் சாப்பிட்டனர்.

தலையில் அடிப்பட்டதால், வலி பொறுக்க முடியாமல், ""ஐயோ! அப்பா!'' என்று அரை குரலில் பிதற்றிக் கொண்டிருந்தார் குரு.

"நம் குருவுக்குப் பசியால் உடல்நிலை பலகீனமடைந்துள்ளது போலிருக்கு. அவருக்கு பழையதைக் கொடுக்கக் கூடாது...' என்று, சூடாகப் புளிச்சோறு ஆக்கிக் கொடுப்பதென முடிவு செய்த சண்டன், குரு ஒருநாள் புளிச்சோறு சமைத்ததை நினைவுபடுத்தி சமைத்தான். ஆனால், தாளிப்பதற்குக் கருவேப்பிலைத் தேடிப் பார்த்தான் இல்லை.

""தாளிப்பதற்குக் கருவேப்பிலை இல்லை!'' என்றான்.

""எனக்குத் தெரியும், நம் குரு கருவேப்பிலையை எங்கு வைத்திருக்கிறார்!'' என்ற முண்டன், குரு தன் பூசையறையில் வைத்திருந்த வேப்பிலையை, கருவேப்பிலை என்று நினைத்துக் கையில் உருவிக்கொண்டு வந்துக் கொடுத்தான்.

உடனே அவனைப் பாராட்டி, ""ம்... நீ புத்திசாலிடா!'' என்று சொல்லிக் கொண்டே, அதை வாங்கித் தாளித்தான் சண்டன்.

சோற்றைத் தன் குருவுக்கு ஊட்டினான். கசப்பால் குரு, "துப்பு... துபு... துபு...'ன்னு வாயை இறுக்க மூடிக்கொண்டார்.

உடனே, ""சீடர்களே! நம் குரு சாப்பாடு சாப்பிட மாட்டேங்கிறார்... என்ன காரணம்னு தெரியலை? என்றான் சண்டன்.

""சாப்பிடலன்னா விடு! அவருக்குப் பசிக்கில போலிருக்கு!'' என்றான் சமுட்டி.

""சாப்பிடலன்னா நம் குரு இறந்துவிடுவார். எங்கம்மா அப்படிதான் நான் சின்ன புள்ளையா இருக்கும்போது, பால் குடிக்கலேன்னா, பாலாடையில் பால் ஊற்றி, என் கையும், காலையும் இறுக்கிப் பிடித்துக்கொண்டு ஊட்டுவாங்க. நான் கத்துவேன். அப்பவும் எங்கம்மா விட மாட்டாங்க! அதே போல, நாங்க நால்வரும் நம் குரு கையையும், காலையும் அமுக்கிப் பிடித்துக் கொள்கிறோம், நீ ஊட்டு!'' என்றான் மமுட்டி.

அனைவரும் ஒப்புக் கொண்டனர். சண்டன் குருவுக்குச் சோறு ஊட்டினான். குரு வேண்டாம்! என்று சொல்ல முடியாமல், தலையை ஆட்டினார். கை கால்கள் உதறினார். மற்ற சீடர்கள், மமுட்டி சொன்னது போல், கை, கால்களை அமுக்கிப் பிடித்துக் கொண்டனர். சோற்றை ஊட்டிக் கொண்டேயிருந்தான் சண்டன்.

குருவால் ஒண்ணும் சொல்ல முடியாமல், சாப்பாட்டை மெல்லவும், விழுங்கவும் முடியாமல் கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கினார். சோறு ஊட்டினப் பிறகு, குருவைத் தூங்க வைத்துவிட்டு, சீடர்கள் அனைவரும் தரையில் வரிசையாய்ப் படுத்து உறங்கினர்.

ˆபடிழுது புலர்ந்தது. ""பொழுது விடிந்து இவ்வளவு நேரம் ஆயிடுச்சி. இன்னும் நம்ம குரு எழுந்திருக்கல. மேல் மூச்சு, கீழ் மூச்சு வேற வாங்குது. அதனால, நான் போய் நாட்டு வைத்தியரை அழைச்சிக்கிட்டு வர்றேன்!''ன்னு சண்டன் ஓடினான்.

சிறிது நேரம் கழித்து நாட்டு வைத்தியரை அழைத்து வந்தான். அவர் நாடியைப் புடிச்சிப் பார்த்துட்டு, ""பயப்படுற மாதிரியெல்லாம் இல்ல... உடம்புல வலி இருக்கு. அதான் அசதியில இப்படிப் படுத்துத் தூங்குறாரு. நான் ஒரு லேகியம் தர்றேன். காலையில ஒண்ணு, மாலையில ஒண்ணு கொடுங்க. கொடுத்ததும் தண்ணீர் நிறைய குடிக்கக் கொடுங்க. மீண்டும் நாளைக்கு நான் வர்றேன்,'' என்று கூறிவிட்டுச் சென்றார்.

வைத்தியர் சொன்னது போல லேகியத்தை குருவின்வாயில் போட்டுத் தண்ணீர் கொடுத்தனர். குரு மெல்ல மெல்ல விழுங்கினார்.

உடனே, ""சீடர்களே! குருவுக்கு மருந்து கொடுத்தவுடன் தண்ணீர் நிறைய கொடுக்கணும் என்று வைத்தியர் சொன்னார்!'' எனச் சொல்லிக்கொண்டே, கையில் ஒரு குடம் நிறையத் தண்ணீரைத் தூக்க முடியாமல் தூக்கி வந்தான் முண்டன். குருவுக்கு இப்போ ஓரளவு சுயநினைவு வந்திருந்ததால், முண்டன் சொன்னது குரு காதில் விழுந்தது.

""வேண்டாம்! போதும்!'' என்று குரு லேசாக எழுந்து கையசைத்தார். மற்ற சீடர்கள், அவர் கை, கால்களை அமுக்கிப் பிடித்துக் கொண்டனர். டம்பளரில் தண்ணீரை மொண்டு மொண்டு அவர் வாயைப் பிளந்து ஊற்றினான் முண்டன். குருவுக்கு அதற்குமேல் குடிக்க முடியவில்லை. வயதாகியிருப்பதால், சீடர்களின் பிடியிலிருந்து அவரால் எழும்ப முடியவில்லை. கத்தினார்; அலறினார்.

அவ்வழியாகச் சென்ற நாட்டு வைத்தியர், அலறல் சப்தம் கேட்டு ஆசிரமத்தின் உள்ளே சென்றார். அங்கு சீடர்கள் அவரை வலுக்கட்டாயமாகப் பிடித்து, குடத்துத் தண்ணீர் முழுவதும் கொடுப்பதைப் பார்த்து பதறிப் போய் ஓடி அவர்களை விலக்கினார்.

""அடப்பாவிங்களா! மருந்து கொடுத்ததும் ரெண்டு டம்ளர் அல்லது ஒரு டம்ளர் தண்ணீர் கொடுக்கணும்னு சொன்னா, நீங்க என்னடான்னா ஒரு குடம் நிறையத் தண்ணீர் கொண்டு வந்து மொண்டு மொண்டு அவர் வாயில் ஊத்தி... இந்நேரம் கொண்ணு இருப்பீங்களே!'' என்றார்.

உடனே, ""வைத்தியரே! நீங்க தான் தண்ணீர் நிறைய கொடுங்கன்னு சொன்னீங்க. ஆனால், எவ்வளவு கொடுக்கணும்னு சொல்லல!'' என்றான் முண்டன்.

சீடர்கள் தங்கள் அறியாமையால் தலை கவிழ்ந்தபடி நின்றனர்.

""சரி... சரி! குருவை இரண்டு நாளைக்கு நான் பார்த்துக் கொள்கிறேன். எனக்குச் சம்பளம் மட்டும் நூறு ரூபாய் கொடுங்க...'' என்றார்.

"அப்பாடா! நமக்குத் தொல்லை நீங்கிடுச்சி!' என்று நினைத்து வைத்தியர் கேட்ட சம்பளத்திற்கு ஒப்புக் கொண்டனர் சீடர்கள்.

""சரி... இனி உங்க வேலையைக் கவனியுங்க,'' என்று சீடர்களைப் பார்த்து சொன்னார் வைத்தியர்.

வரமார்த்த குரு தன் முட்டாள் சீடர்களால் பட்டபாடை பார்த்தீர்களா?

சிறுவர் மலர்



தண்ணி...தண்ணி ! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 05/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Jan 30, 2011 3:26 pm

முட்டாள் சீடர்களிடம் குரு பட்ட அவதி படிக்க அருமையாக இருந்தது....

அருமையான பகிர்வுக்கு அன்பு நன்றிகள் சிவா...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தண்ணி...தண்ணி ! 47
guruprasath
guruprasath
பண்பாளர்

பதிவுகள் : 105
இணைந்தது : 04/06/2010

Postguruprasath Sun Jan 30, 2011 3:30 pm

தண்ணி...தண்ணி ! 168300 தண்ணி...தண்ணி ! 168300 தண்ணி...தண்ணி ! 403484 தண்ணி...தண்ணி ! 168300 தண்ணி...தண்ணி ! 403484 தண்ணி...தண்ணி ! 168300 தண்ணி...தண்ணி ! 403484

அகீல்
அகீல்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 336
இணைந்தது : 22/12/2010

Postஅகீல் Sun Jan 30, 2011 3:41 pm

இப்படி 4 சிறுவர்கள் இருந்தால் போதும் சனத்தொகை குறைசுடும் நல்ல பகிர்வு அண்ணா. தண்ணி...தண்ணி ! 677196



அகீல் தண்ணி...தண்ணி ! 154550
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக