புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழுக்குக் கேடு வரும்போதுகூட குடும்பத்தை மறக்காத கருணாநிதி! : ஊதுகுழ‌ல்  Poll_c10தமிழுக்குக் கேடு வரும்போதுகூட குடும்பத்தை மறக்காத கருணாநிதி! : ஊதுகுழ‌ல்  Poll_m10தமிழுக்குக் கேடு வரும்போதுகூட குடும்பத்தை மறக்காத கருணாநிதி! : ஊதுகுழ‌ல்  Poll_c10 
62 Posts - 39%
heezulia

55 Posts - 35%
mohamed nizamudeen

10 Posts - 6%
prajai

6 Posts - 4%
வேல்முருகன் காசி

T.N.Balasubramanian

Raji@123

4 Posts - 3%
mruthun

3 Posts - 2%
Saravananj

Guna.D

இந்த மாத அதிக பதிவர்கள்

191 Posts - 41%

177 Posts - 38%

25 Posts - 5%
Dr.S.Soundarapandian
தமிழுக்குக் கேடு வரும்போதுகூட குடும்பத்தை மறக்காத கருணாநிதி! : ஊதுகுழ‌ல்  Poll_c10தமிழுக்குக் கேடு வரும்போதுகூட குடும்பத்தை மறக்காத கருணாநிதி! : ஊதுகுழ‌ல்  Poll_m10தமிழுக்குக் கேடு வரும்போதுகூட குடும்பத்தை மறக்காத கருணாநிதி! : ஊதுகுழ‌ல்  Poll_c10 
21 Posts - 5%

12 Posts - 3%

9 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழுக்குக் கேடு வரும்போதுகூட குடும்பத்தை மறக்காத கருணாநிதி! : ஊதுகுழ‌ல்

avatar
Guest
Guest

PostGuest Sun Jan 30, 2011 10:41 am

தமிழுக்குக் கேடு வரும்போதுகூட குடும்பத்தை மறக்காத கருணாநிதி! : ஊதுகுழ‌ல்.
தமிழால் வளர்ந்தார்கள்; தமிழால் உயர்ந்தார்கள். தமிழ்.... தமிழ் என்று
சொல்லியே கொள்ளையடித்த கோபாலபுரத்துக் கோமான், தமிழும் தம் குடும்பமும்
பிரித்துப்பார்க்க முடியாதது என்பதை ஒவ்வொரு கட்டத்திலும்
நிரூபித்துள்ளார். கோவையில் நடைபெற்ற செம்மொழி மாநாட்டில் தமிழில்
எழுத்துச் சீர்திருத்தம் என்ற பெயரில் தமிழுக்கு கேடு விளைவிக்கும்
முயற்சியில் தமிழ் சீரழிப்பாளர்கள் முயன்றனர். உடனிருக்கும் ஒத்தூதும்
தமிழ்ப்பகைவர்கள், கருணாநிதியிடம் சொன்ன காரணம். "மா.கோ.இரா., ஆட்சியில்
பெரியார் சீர்திருத்தத்தை நடைமுறைக்கு கொண்டுவந்து இன்றளவும் அவர் பெயர்
சொல்லி வருகிறது. இப்போது நீங்கள் ஒரு சீர்திருத்தத்தை அறிவித்தால்,
வரலாற்றில் உங்களுக்கு நிலையான இடத்தை அளிக்கும்" என்றெல்லாம் சாமரம்
வீசினார்கள். ஒரு வழியாக அதைத் தடுத்து நிறுத்த தமிழறிஞர்களும் உலகளாவிய
தமிழர்களும் முனைப்போடு கொந்தளித்ததில் சீரழிப்பு நடைபெறாமல்
தடுக்கப்பட்டது.தமிழுக்குக் கேடு வரும்போதுகூட குடும்பத்தை மறக்காத கருணாநிதி! : ஊதுகுழ‌ல்  Karunanidhim

கால‌ அவ‌காச‌ம்

தமிழில் கிரந்தத்தைச் சேர்க்கவும், கிரந்தத்தில் தமிழைப் புகுத்தவும்
இந்திய நடுவணரசு 2008-ம் ஆண்டிலிருந்து பல கூட்டங்களை நடத்தியிருக்கிறது.
(உலகத் தகவல் தமிழ் தொழில் நுட்பமன்றம் என்ற "உத்தமம்" அமைப்பும் ஏற்கனவே
கிரந்தத்துக்கு வழிவிட்டு ஓய்வெடுத்ததில் ஒருங்குறிச் சேர்த்தியத்தில்
உறுப்பியத்தை புதுப்பிக்காமல் காலாவதியானதில் அதுவும் தக்க ஆலோசனையை
அரசுக்கு சொல்லாமற் போனது.) தமிழக அரசை, நடுவணரசின் தகவல் தொழில்நுட்ப
ஆணையம் கிரந்தக் கலப்புக் குறித்துக் கருத்துக் கேட்டும் தமிழக அரசின்
சார்பில் எவரும் அந்தப்பக்கம் கூட தலைவைத்துப் படுக்காததால் ஏகமனதாக 2010ம்
ஆண்டு செப்டெம்பர் மாதம் இறுதியாகத் தீர்மானித்து அக்டோபர் மாதம்
18/10/2010-ல் ஒருங்குறி சேர்த்தியத்தில் தமது பரிந்துரையை அளித்தது.
எப்படி? ஒருங்குறி சேர்த்தியம் 6/11/2010 அன்று கூடும் கூட்டத்தில் இது
குறித்து தீர்மானித்து நடுவணரசின் பரிந்துரையை ஏற்க இருந்தது.

இந்த நேரத்தில்தான் தமிழ் மீது உண்மையான அக்கறையுள்ள ஒரு சிலர் மூலம்
முதல்வர் கருணாநிதியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. தாழிகைகளில்
செய்தியான பிறகு, வேறு வழியின்றி, கலைஞரும் உடனே தடாலடியாக 4/11/2010ல்
தஞ்சை துணைவேந்தர் இராசேந்திரன் தலைமையில் ஒரு கூட்டத்தை கூட்டி
நடுவணரசுக்கு, "இப்போதுதான் உறக்கத்திலிருந்து விழித்தெழுந்து இருக்கிறோம்.
நாங்க‌ள் இது குறித்து அல‌சி ஆராய்ந்து சொல்ல‌ எங்க‌ளுக்கு கால‌
அவ‌காச‌ம் தேவை என்று, அன்றைய அலைக்கற்றை ஊழல்புரியின் அமைச்சர் இராசா
மூலமாக ஒருங்குறி சேர்த்தியத்திடம் கோரப்பட்டது. ந‌ல்ல‌தோ கெட்ட‌தோ இந்த‌
ஒரு காரிய‌த்தைச் செய்து முடிப்ப‌த‌ற்காக‌ இருந்த‌ இராசா அவகாசம் வாங்கிக்
கொடுத்துவிட்டு ப‌த‌வியைத் தூக்கிப்போட்டுவிட்டுப்
போக‌வேண்டிய‌தாகிவிட்ட‌து.தமிழுக்குக் கேடு வரும்போதுகூட குடும்பத்தை மறக்காத கருணாநிதி! : ஊதுகுழ‌ல்  Karunanidhi-family

க‌ண்துடைப்புக் குழு!

ஒருங்குறி சேர்த்தியமும் பிப்ரவரி 7ம் தேதிவரை கால அவகாசத்தை நீட்டித்துத்
தந்தது. இதையே பெரிய சாதனையாகச் சொல்லி மகிழ்ந்தனர்; பின் வழமை போல
மறந்தும் போயினர். ஆனால் பிப்ரவரி ஏழாம் தேதி என்பது நெருங்கிய நிலையில்
தற்போது 18ம்தேதி நீதிபதி மோகன் தலைமையில் ஒரு குழுவை நியமித்தது. அந்தக்
குழு எப்போது கூடும்? யாரிடமிருந்தெல்லாம் அறிக்கை பெறும்? இவை எதுவும்
தெரியாது. தமிழக அரசின் ஆணையின் இறுதியில், "மேற்காணும் பொருள் தொடர்பாக
ஆய்வு செய்து, தமிழக அரசின் நிலையை மத்திய அரசுக்குத் தெரிவிப்பதற்கு
ஏதுவாக, இக்குழு தனது அறிக்கையை விரைவில் வழங்கும்" என்று உள்ளது.

இந்த‌க் குழுவே ஒரு க‌ண்துடைப்புக் குழு! இன்னும் விர‌ல்விட்டு
எண்ண‌க்கூடிய‌ நாட்க‌ளே இருக்கும் நிலையில் போட்ட‌ குழுவும் கூடாம‌ல்,
வ‌லுவான தொழில்நுட்பக் கார‌ண‌ங்க‌ளை ஒருங்குறிச் சேர்த்திய‌த்துக்கு
த‌ருவ‌த‌ற்கான‌ முய‌ற்சிக‌ளும் இக்குழுவால் ந‌டைபெற‌வில்லை என்ப‌து சோக‌ம்;
அத‌னினும் சோக‌ம் இக்குழு உறுப்பின‌ர்க‌ளில் சில‌ர் த‌மிழ் நாட்டிலேயே
இல்லை என்ப‌து! மணிமணியான ஒருவ‌ர் அமெரிக்காவில்! கடவுளின் பெயரை முன்னாள்
வைத்துள்ள சுந்தரர் ஒருவ‌ர் சிங்க‌ப்பூரில்!

சிங்க‌ப்பூர் அர‌சின் பிர‌திநிதி?!

மேலும் த‌மிழுக்காக‌ பாடுப‌ட்ட‌, கிர‌ந்த‌ம் ச‌ம‌க்கிருத‌த்தை
கரைத்துக்குடித்த‌ தொழில்நுட்ப‌ப் புள்ளிவிப‌ர‌ங்க‌ளை விர‌ல்நுனியில்
வைத்துள்ள‌ த‌மிழ் கூறும் ந‌ல்லுல‌க‌ம் அறிந்த தகவல் தொழில் நுட்ப‌ அறிஞ‌ர்
ஒருவ‌ரும் இட‌ம்பெற்றுள்ளார். அவ‌ர், சிங்கப்பூர் தகவல் தொழில்நுட்ப
வல்லுனர் திரு.அர‌விந்த‌ன்! என்ன‌, உங்க‌ளுக்கு இவ‌ர் யாரென்று
தெரிய‌வில்லையா? ச‌ரி, இவ்வ‌ள‌வு நாளும் தெரிஞ்சுக்க‌லைன்னாலும்
இப்ப‌வாவ‌து தெரிஞ்சுக்க‌ங்க‌ அய்யாமார்க‌ளே! அம்மாமார்க‌ளே!

தமிழுக்குக் கேடு வரும்போதுகூட குடும்பத்தை மறக்காத கருணாநிதி! : ஊதுகுழ‌ல்  Karunafast114
பேர் கொண்ட‌ இந்த‌க் குழுவில் சிங்க‌ப்பூர் அர‌சின் சார்பில் இட‌ம்பெற்ற‌
ஒரே ஒரு வெளிநாட்டுப் பிர‌திநிதி என்று கூட‌ நீங்க‌ள் நினைக்க‌லாம்.
நினைக்க‌லாம் என்ன‌? அப்ப‌டித்தான் இந்த‌க் குழுவைப் பார்த்த‌ ப‌ல‌ர்
எண்ணிக்கொண்டுள்ள‌ன‌ர். ஆனால் உண்மை என்ன‌ தெரியுமா? ஒரு கால‌த்தில்
சிங்க‌ப்பூரில் இருந்தார், இந்த‌ அர‌விந்த‌ன். ஆனால் இப்போது
சிங்க‌ப்பூரில் இல்லாத‌ இவ‌ரை த‌மிழ‌க‌ அர‌சு ஏன் சிங்க‌ப்பூர் தகவல்
தொழில்நுட்ப வல்லுனர் திரு.அர‌விந்த‌ன் என்று போட‌வேண்டும்? ச‌ரி
சிங்க‌ப்பூரில் இல்லையென்றால் எங்கே இருக்கிறார்? சிட்னியில் இருக்கிறார்
இவ‌ர். அப்ப‌டியானால் இவ‌ரை சிட்னி என்றே போட‌லாமே? இவர் "சிட்னியில்
சட்னி" செய்யப்பட்டு ரெம்பக்காலமாகிவிட்ட குடும்பச் சிக்கல் அது!? ஆனால்,
குழுவில் ஏன் சிங்க‌ப்பூர் என்று போட‌வேண்டும்? கேள்வி நியாய‌மான‌துதான்.
ஆனால் ப‌தில்தான் ப‌ல‌ இடியாப்ப‌ச் சிக்க‌லில் உள்ள‌து.

சரி விசயத்துக்கு வருகிறேன். க‌ருணாநிதியின் ம‌க‌ள் க‌னிமொழியின்
ஆத்துக்கார‌ர்தாங்க‌ இவ‌ர்! இவ‌ரை எங்க‌ இற‌க்கிவிட‌லாம்ன்னு மூளையை
க‌ச‌க்கிய‌வ‌ர்க‌ள் இந்த‌க் குழுவில் க‌க்கிவிட்டார்க‌ள்! பாவ‌ம்
அர‌விந்த‌ன்! இல்லை... இல்லை பாவ‌ம் த‌மிழ்!
த‌மிழ் என்ன‌ பாவ‌ம் செய்த‌தோ இப்ப‌டி க‌ருணாநிதி குடும்ப‌த்தில் வ‌ந்து மாட்டிக்கொண்டு முழியோ முழி என்று முழிக்கிற‌து.

தமிழும் தம் குடும்பமும் பிரித்துப்பார்க்க முடியாதது என்பதை இந்த‌த்
த‌மிழ் கூறும் ந‌ல்லுல‌க‌த்துக்கு க‌ருணாநிதி இன்னுமொருமுறை
தெளிவுப‌டுத்தியுள்ளார். வாய்விட்டுக் கேட்க முடியாத கொடுமைக்கு
த‌மிழ‌றிஞ‌ர்க‌ள் உள்ளுக்குள் ம‌ன‌ம் நொந்துபோயுள்ள‌ன‌ர்.

கிர‌ந்த‌த்தை த‌டுக்க‌ த‌மிழ‌க‌ அர‌சுக்கு என்ன‌ த‌ய‌க்க‌ம் என்று
தாழிகைக‌ளில் வினா எழுப்புவோர் இந்த‌ அர‌விந்த‌ன் எதுக்கு இந்த‌க் குழுவில்
என்று எவ‌ராவ‌து வினா எழுப்ப‌ இய‌லுமா? எழுப்ப‌ மாட்டார்க‌ள். இனம்
அழிந்தாலும் கேட்கமாட்டார்கள்? மொழிக்கு ஊறு வந்தாலும் துணிந்து
கேட்கமாட்டார்கள்!? அதுதான் நம் த‌மிழ‌ர்க‌ள்!

இன்றைக்கு ந‌டுவ‌ண‌ர‌சில் அமைச்ச‌ர் இராசா அங்க‌ம் வ‌கிக்க‌வில்லை.
நடுவணரசிடம் இந்தக் குழு அறிக்கை கொடுத்து அந்த அறிக்கை 7ம்தேதி
நடைபெறவுள்ள இரமண சர்மா முன்வைத்துள்ள, வினாயகரின் பெயரை வைத்துக்கொண்டு
த‌மிழைச் ச‌துராட‌த் துடிக்கும் ஒரு த‌மிழ் துரோகி த‌மிழுக்குள்
கிர‌ந்த‌த்தையும், கிர‌ந்த‌த்துக்குள் த‌மிழையும் க‌ல‌ந்து எ, ஓ, ன, ற, ழ
உள்பட 7 தமிழ் எழுத்துக்களை கிரந்தத்தில் சேர்க்க முன்வைத்துள்ள‌தை ஆய்வு
செய்து முடிவை அறிவிக்க‌விருக்கும் ஒருங்குறிச் சேர்த்திய‌த்துக்கு எப்போது
வ‌ந்து சேரும்!?

பிப்ரவரி 7ம்தேதி இது குறித்து முடிவெடுக்க ஒருங்குறிச் சேர்த்தியத்தில்
வலுவான சான்றுகளை இரு வாரங்களுக்கு முன் சேர்க்கவேண்டும் என்பது
ஒருங்குறிச் சேர்த்தியத்தின் விதி முறையாகும்! இந்த விதியை எல்லாம் தமிழக
அரசு எங்கே அறியப்போகிறது! விதியே விதியே என் தமிழ்ச் சாதியினை என் செய
நினைத்தாய்? என்று வெந்து நொந்து பாடினானே ஒரு முண்டாசுக் கவிஞன்! அதை
எண்ணி விதியே என்று தமிழர்கள் இருக்க வேண்டியதுதானா? கிரந்தத்தில் தமிழைப்
புகுத்த வேண்டிய அவசியம் ஏதும் இல்லை என்பதற்கான வலுவான தொழில்நுட்பச்
சான்றுகளை முன்வைக்க ஏதும் உருப்படியாகச் செய்யாமல் உறங்கும் தமிழக அரசை
எண்ணி தமிழகத் தமிழர்களும் அயலகத் தமிழர்களும் மனம் வெதும்பிப்
போயுள்ள‌னர்.

தமிழின்மீது அக்க‌றை இருந்திருந்தால்...!

உண்மையிலேயே தமிழின்மீது அக்க‌றை, த‌மிழ‌க அர‌சுக்கு இருந்திருந்தால் என்ன‌ செய்திருக்க‌ வேண்டும்?

உள்ள‌படியே த‌மிழில் அக்கறையுள்ள‌ த‌மிழ‌றிஞ‌ர்க‌ளை அழைத்து த‌மிழில்
கிர‌ந்த‌ம் நுழையாம‌லிருக்க‌வும், கிர‌ந்த‌த்தில் த‌மிழ்
நுழைக்காம‌லிருக்க‌வும் என்ன‌ செய்ய‌லாம்?

தொழில்நுட்ப‌ ரீதியாக‌ இத‌ற்கான‌ வ‌ல்லுன‌ர்க‌ளை வைத்து வ‌லுவான‌
கார‌ண‌ங்க‌ளை அர‌சு பெற்றிருக்க‌ வேண்டும். அடுத்து த‌மிழ‌க‌ அர‌சு
நேர‌டியாக‌ ஒருங்குறிச் சேர்த்திய‌த்தில் உறுப்பின‌ராகி இருக்க‌வேண்டும்;
அது ஒன்றே ந‌டுவ‌ண‌ர‌சின் த‌ய‌வு ஏதுமின்றி நேர‌டியாக ஒருங்குறிச்
சேர்த்தியத்தில் தன் வலுவான வாதத்தை முன் வைக்க முடியும். ஒருங்குறிச்
சேர்த்தியத்துக்கு தமிழக அரசின் சார்பில் பிரதிநிதி ஒருவரை நேரில் அனுப்பி
த‌மிழ் மொழிக்கு ஏற்ப‌ட்ட‌ சிக்க‌லைத் தீர்க்க‌ முன் வ‌ந்திருக்க‌
வேண்டும். இன்னும் கொஞ்ச‌ம் அவ‌காச‌ம் வாங்கிக்கொடுங்க‌ள் என்று நீதியரசர்
மோகன் தலைமையில் உள்ள‌ குழு கேட்குமேயானால் அதைவிட‌க் கேவ‌ல‌ம் த‌மிழுக்கு
வேறேதும் இல்லை. அவ‌காச‌ம் கேட்டீர்க‌ள். கொடுத்தோம். மீண்டும் அவ‌காச‌மே
கேட்டால் என்ன‌ அர்த்த‌ம் என்று ஒருங்குறிச் சேர்த்திய‌ம் கேட்குமா?
கேட்காதா?

கோடிகோடியாக‌ செம்மொழி மாநாட்டுக்குச் செலவ‌ழித்த‌ த‌மிழ‌க‌ அர‌சு
செம்மொழித்த‌மிழைக் காக்க‌ ஒருங்குறிச் சேர்த்திய‌த்தில் உறுப்பின‌ராக‌ச்
சேர‌ என்ன‌ த‌ய‌க்க‌ம்? 15,000 டால‌ர் செல‌வ‌ழிக்க‌ த‌மிழ‌க‌ அர‌சுக்கு
வ‌க்கில்லாம‌ல் போன‌து ஏன்? "இந்திய மொழிகள் அனைத்துக்கும் ஒரு பொதுவான
எழுத்து முறையாக கிரந்தத்தை மாற்றுவதே நோக்கம் என்று" மத்திய அரசு
கூறியிருக்கும் சூழ்நிலையில், ஒரு எழுத்து முறையை பிற மொழிகளின் மீது
திணிக்கத் தயாராக இருக்கும் மத்திய அரசிடம், இந்தக் குழு அறிக்கையைக்
கொடுக்கும் என்று சொல்ல வெட்கப்படவேண்டாம்? எத‌ற்குத்தான் ம‌த்திய‌ அர‌சைத்
தொங்குவ‌து என்று வரைமுறை வேண்டாமா?

பெரிய திரையா? வளைத்துப்போடு;
சின்னத்திரையா? வளைத்துப்போடு தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம்
தொலைக்காட்சி வரிசைகளா சன்னுக்குள் கொண்டுவா? கலைஞர் டி.வி.க்குள்
கவுத்துப்போடு; விமானக் கம்பெனியா? வாங்கிப்போடு; நாளிதழா? வார, மாத இதழா
வளைச்சுப்போடு; சென்னை சங்கமமா? கனிமொழி கவனிச்சுக்கட்டும்; அமிர்தாஞ்சனம்
நிறுவனத்துக்கு எதுக்கு மைலாப்பூர்ல அவ்ளோ பெரிய எடம்? கோபாலபுரம்
குடும்பத்தோட பட்டியல்ல சேத்துடு... இப்படியாக‌ இன்று! அன்று....

"மாத்துத்துணி மஞ்சப்பை"யோடு
சென்னைக்கு திருட்டு இரயிலேறி வந்த கருணாநிதி இலட்சம் கோடிகளில்
"காசேதான் கடவுளடா" என்று புரண்டு தவழுகின்ற பொன்பொழுதுகளில் இன்று
கருணாநிதி.

இதில் த‌மிழ் எக்கேடுகெட்டால் என்ன‌? த‌மிழ் இன‌ம் எக்கேடு கெட்டால் என்ன‌?
எத்த‌னையோ நாட‌க‌ங்க‌ளுக்கு திரைக்க‌தை வ‌ச‌ன‌ம் எழுதி இய‌க்கி ந‌டித்த‌
புக‌ழ் பெற்ற‌ க‌ருணாநிதிக்கு கிர‌ந்த‌த்தில் த‌மிழ் க‌ல‌க்காம‌ல்,
த‌மிழில் கிர‌ந்த‌ம் க‌ல‌க்காம‌லிருக்க‌ என்ன‌ செய்தீர்க‌ள்? என்று
கேட்டால் அவ‌ரிட‌ம் ப‌தில் த‌யாராக‌ இருக்கிற‌து.

"ம‌த்திய‌ அர‌சுக்கு இது குறித்து அறிக்கை அளித்து த‌டுத்து
நிறுத்த‌ உண்ணாம‌ல் உற‌ங்காம‌ல் நான‌ல்ல‌வா என் வியர்வையையும்
இர‌த்த‌த்தையும் க‌ல‌ந்த‌ல்ல‌வா அந்த‌ அறிக்கையில் கையெழுத்திட்டேன்!
என்னைப்பார்த்தா கேட்கிறீர்க‌ள் என்ன‌ செய்தேன் என்று?

- ஊதுகுழ‌ல்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக