புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அனுபவம்  Poll_c10அனுபவம்  Poll_m10அனுபவம்  Poll_c10 
53 Posts - 42%
heezulia
அனுபவம்  Poll_c10அனுபவம்  Poll_m10அனுபவம்  Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
அனுபவம்  Poll_c10அனுபவம்  Poll_m10அனுபவம்  Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
அனுபவம்  Poll_c10அனுபவம்  Poll_m10அனுபவம்  Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
அனுபவம்  Poll_c10அனுபவம்  Poll_m10அனுபவம்  Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
அனுபவம்  Poll_c10அனுபவம்  Poll_m10அனுபவம்  Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
அனுபவம்  Poll_c10அனுபவம்  Poll_m10அனுபவம்  Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அனுபவம்  Poll_c10அனுபவம்  Poll_m10அனுபவம்  Poll_c10 
304 Posts - 50%
heezulia
அனுபவம்  Poll_c10அனுபவம்  Poll_m10அனுபவம்  Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
அனுபவம்  Poll_c10அனுபவம்  Poll_m10அனுபவம்  Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
அனுபவம்  Poll_c10அனுபவம்  Poll_m10அனுபவம்  Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
அனுபவம்  Poll_c10அனுபவம்  Poll_m10அனுபவம்  Poll_c10 
21 Posts - 3%
prajai
அனுபவம்  Poll_c10அனுபவம்  Poll_m10அனுபவம்  Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
அனுபவம்  Poll_c10அனுபவம்  Poll_m10அனுபவம்  Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
அனுபவம்  Poll_c10அனுபவம்  Poll_m10அனுபவம்  Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
அனுபவம்  Poll_c10அனுபவம்  Poll_m10அனுபவம்  Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
அனுபவம்  Poll_c10அனுபவம்  Poll_m10அனுபவம்  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அனுபவம்


   
   
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Mon Jan 24, 2011 11:16 am

ஹிட்லரை ஆதரித்தவர்!

“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற அற்புத வரிகளுக்குச் சொந்தக்காரர் கணியன் பூங்குன்றனார் என்பதறிவோம்; ஆனால் அவரைப்பற்றி மேலதிக விபரங்கள் எதுவும் அறிய இயலவில்லை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்டதால் அன்று வரலாற்றை எழுதிவைக்கும் வழக்கம் இல்லாததால் அவ்வாறு நேர்ந்தது எனலாம்.

எங்கெல்லாம் அடக்குமுறை கோலோச்சுகிறதோ- எங்கெல்லாம் பாசிசம் கவ்வுகிறதோ- எங்கெல்லாம் சர்வாதிகாரம் கோலோச்சு கிறதோ- எங்கெல்லாம் மத, இன, பிரதேச வெறி ஆட்டிவைக்கிறதோ அங்கெல்லாம் மேற்கோள்காட்டப் படும் கவிதை ஒன்று உண்டு.

“முதலில் அவர்கள் யூதர்களைப் பிடிக்கவந்தனர், நான் பேசவில்லை; ஏனெனில் நான் யூதன் அல்ல. பின்னர் அவர்கள் கம்யூனிஸ்டுகளைப் பிடிக்க வந்தனர், நான் பேசவில்லை; ஏனெனில் நான் கம்யூனிஸ்டு அல்ல. பின்னர் அவர்கள் தொழிற்சங்க வாதிகளைப் பிடிக்க வந்தனர். அப்போதும் நான் பேசவில்லை; ஏனெனில் நான் தொழிற்சங்கவாதியும் அல்ல. பின்னர் அவர்கள் என்னைப் பிடிக்க வந்தனர். அப்போது எனக்காகப் பேச யாரும் இல்லை”

மனித மனங்களை நுட்பமாகப் படம் பிடித்து பாசிசத்துக்கு எதிராக ஆவேச உணர்வை ஊட்டிய இக் கவிதை வரிகளை எழுதியவர்யார்? அவர் வரலாறு என்ன? எதுவுமே தெரியாமல் கூட அன்றாடம் உலகெங்கும் பலரால் இக்கவிதை மேற்கோள் காட்டப்பட்ட வண்ணம் உள்ளது.

இக்கவிதையை எழுதியவர் பாஸ்டர் மார்டின் - நீய்- மொல்லர். இவர் ஒரு கிறிஸ்தவ மதபோதகர். இதில் வேடிக்கை என்னவெனில் இவர் கப்பற்படை அதிகாரியாக பணி புரிந்தவர் என்பதும், முதலில் ஹிட்லரின் தேசிய வாதத்தை ஆதரித்தவர் என்பதும் நாமறிய வேண்டிய செய்தி.

1892 ஜனவரி 14 ஆம்நாள் ஜெர்மனியில் லிப்ஸ்டாப் என்ற சிறிய கிராமத்தில் லூத்தரன் தேவாலய பாதிரியாரின் மகனாக மார்டின் பிறந்தார். இவர் கல்வியில் சிறந்து விளங்கினார். 1915 ஆம் ஆண்டு ஜெர்மன் சாம்ராஜ்ய இம்பீரியல் கப்பற்படையில் ஒரு அதிகாரியாகச் சேர்ந்தார். தாய் நீர் மூழ்கி கப்பல் என அழைக்கப்படும் வல்கன் நீர்மூழ்கிக் கப்பலில் தளபதிக்கு அடுத்த நிலைக்கு விரைவில் உயர்ந்தார்.

இவர் போர்க்களத்தில் பல்வேறு தாக்குதல்களுக்கு தலைமையேற்று வெற்றி பெற்றார். பிரெஞ்சு கப்பலை மூழ்க வைத்து பிரெஞ்சு துறைமுகத்தை தற்காலிகமாக மூடவைத்தார். இவருடைய தொடர் சாதனைகளுக்காக இவருக்கு முதல்தர இரும்புச் சிலுவை (ஐயர்ன் கிராஸ் ஃபர்ஸ்ஃட் கிளாஸ்) விருது வழங்கப்பட்டது. ஆனால் அவர் மனம் யுத்தங்களை விட மக்கள் மனதில் பீடித்திருக்கும் கொந்தளிப்புகளை அமைதிப்படுத்தும் போதனைகளிலேயே நாட்டம் கொண்டது. அவர் மதபோதகராக விரும்பினார். அவர் எழுதிய சுயசரிதை அவர் போதகரான கதையைக் கூறும்.

1919 ஜூலை 20 ஆம் நாள் எலிஸா-நீ பெர்ல் என்பவரை மணந்து கொண்டார். மூனஸ்டர் பல்கலைக்கழகத்தில் புராட்டஸ்டண்ட் இறையியல் பட்டம் பயின்றார்.

அதன்பின் தேவாலயப்பணிகளிலும் மதபோதனைகளிலும் ஈடுபட்டு அதில் பல பொறுப்புகளை ஏற்று திறம்பட செயலாற்றலானார்.

ஆரம்பத்தில் ஜெர்மன் குடியரசுக் கட்சியின் தீவிர தேசியவாதத்தை புராட்டஸ்ட்டண்ட் சர்ச்சுகள் பகிரங்கமாகவே ஆதரித்தன. மொல்லரும் ஆதரித்தார். 1933 ஆம் ஆண்டு ஹிட்லர் பதவிக்கு வர விழைந்தார். பதவிக்கு வந்ததை வரவேற்றார். தேசிய உணர்வு வலுப்பெறுமென புகழ்ந்தார்.

ஆனால் விரைவிலேயே தன் தவறை உணரலானார். ஆரியர்களின் மேன்மை குறித்து தற்பெருமையும் யூதர்களுக்கு எதிரான விஷமும் மிகுந்த ஹிட்லரின் போதனைகள் வழி தவறுவதாக உணரலானார். இதே போல் மேலும் பல மதபோதகர்கள் எதிர்க்கலானார்கள்.

வெகுண்ட ஹிட்லர் தன் குணத்தை காட்டினான். மொல்லர் உட்பட 800 மதபோதகர்களைக் கைது செய்து வழக்குத் தொடர்ந்தான். மொல்லர் இதர சர்ச்சுகளை ஒருங்கிணைத்து யூத கிறிஸ்தவர்கள் மீது காட்டப்படும் பாரபட்சத்துக்கு எதிராகவும் புராட்டஸ்ட்டண்ட் மதத்தையே நாசிச கருத்தோட்டத்திற்கு திருப்புவதை எதிர்த்தும் வலுவான ஒன்றுபட்ட குரல் எழுப்பினார். இவரது மனவலிமை எல்லோராலும் பாராட்டப்பட்டது.

ஆயினும் முதலில் சுயபாதுகாப்பு என்கிற தன் சர்ச் நிலைபாட்டிலிருந்து நாசிசித்தை எதிர்க்கத் துவங்கியவர் படிப்படியாக முழுமையாக நாசிசத்தை, ஹிட்லரை எதிர்த்து குரல் எழுப்பலானார். யூதர்களை எதிர்ப்பது சரியென்று கருதியே ஹிட்லரை ஆதரித்த மொல்லர், அனுபவ பட்டறையில் அடிபட்டு அதற்கு எதிராக எழுந்தார் என்பதே வரலாற்று உண்மை.

ஆரம்பத்தில் ஹிட்லரை ஆதரித்த போதிலும் எதிர்க்க துவங்கியதும் ஒரு பரந்த ஒற்றுமையைக் கட்ட பல்வேறு சர்ச்சுகளை ஒருங்கிணைத்து ஜனநாயக மேடை அமைத்தார். இதனால் ஹிட்லர் சினம் கொண்டார்.

1937 ஜூன் முதல் நாள் மொல்லர் கைது செய்யப்பட்டார். அரசுக்கு எதிராகசதி செய்ததாக குற்றஞ் சாட்டப்பட்டு நீதிவிசாரணை என்ற நாடகம் நடத்தப்பட்டு 2000 ஜெர்மன் ரூபாய் அபராதமும் 7 மாத கடுஞ் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டன. சிறையிலிருந்து விடுதலையாகிற நாளில் மீண்டும் கைதுசெய்யப்பட்டு 1938 முதல் 1945 வரை சித்ரவதைக்கு ஆளானார். 1945 ஆம் ஆண்டு நேசநாட்டுப் படைகள் இவரையும் இவரோடு 140 பிற கைதிகளையும் விடுதலை செய்தன. அதுவரை வதை முகாமில் கொடுமைகளுக்கு ஆளானார்.

லியோஸ்டின் என்ற சக வதை முகாம் கைதி ஒரு முறை மொல்லரிடம் தாங்கள் ஒரு போதும் ஹிட்லரை ஆதரித்ததில்லையா என்று கேட்டபோது, மொல்லர் சொன்ன பதிலை அவர் பதிவு செய்திருக்கிறார்.

அதில் ஹிட்லரை தான் நம்பியதாகவும், யூதர்களுக்கு கட்டுப்பாடு மட்டுமே விதிப்பார் அழித்தொழிக்கமாட்டார் என அவர்கொடுத்த வாக்குறுதிகளை நம்பியதாகவும் கூறியுள்ளார். ஆனால் ஹிட்லர் நம் பிக்கை மோசம் செய்து விட்டதாக குற்றஞ் சாட்டியுள்ளார். அதுமட்டுமல்ல, அன்று ஜெர்மனியில் நாத்திகவாதமும் கம்யூனிசமும் வளர்ந்து வந்ததால் அதிலிருந்து சர்ச்சுகளை பாதுகாக்க ஹிட்லர் தேவை என்று தாம் கருதியதாகவும், அது தவறென உணர்ந்ததாகவும் கூறியுள்ளார்.

“என் தவறுகளுக்கு நான் இப்போது விலை கொடுத்துக் கொண்டிருக்கிறேன்; நான் மட்டுமல்ல இங்கு வதை முகாமில் உள்ள பலர் நிலையும் அது தான்” என்றார். ஆம் பாசிசமும் நாசிசமும் வரம் கொடுத்தவனையே பதம் பார்க்கும் என்பதுதான் வரலாறு. விடுதலைக்குப் பிறகு மதபோதனைகளிலும் ஈடுபட்டு உலக அளவில் பல பொறுப்புகள் வகித்தார். 92வது வயதில் 1984 மார்ச் 6 ஆம் நாள் மரணமடைந்தார்.

அவரது கவிதை வரிகள் அவ்வளவு உயிர்த்துடிப்புடன் இன்றும் வாழ்வதன் ரகசியம்; அது அவரது வாழ்க்கை அனுபவத்தின் சாரமாக பிழியப்பட்ட வரிகள் என்பது தான்.

- தீக்கதிர்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக