புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 9:56 am
» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Today at 7:47 am
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Yesterday at 1:16 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 12:29 pm
» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm
» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am
» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am
» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am
» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am
» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am
» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am
» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
sram_1977 | ||||
Shivanya | ||||
kaysudha | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Balaurushya | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இராசபக்சே ஒரு போர்க் குற்றவாளி-1
Page 1 of 1 •
- நிசாந்தன்இளையநிலா
- பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010
நுழைவுவாயில்
அண்மையில் தமிழீழ ஆதரவுப் போராட்டத்தில் மிகுந்த அக்கறையோடும் அர்ப்பணிப்போடும் ஈடுபட்ட பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த சில முன்னணித் தோழர்களிடம் டப்ளின் தீர்ப்பாயத் தீர்ப்பு பற்றி உரையாடிக் கொண்டிருந்தபொழுது, அது பற்றி அவர்கள் எதுவுமே அறியாமல் இருந்தது எனக்கு மிகப் பெரும் அதிர்ச்சியைத் தந்தது. ஈழப் போராட்டம் குறித்தும், போராளிகள் குறித்தும் பல்வேறு வகையான கருத்தோட்டங்கள் தமிழ்ச் சமூகத்தில் நிலவுகின்றன. ஆனால் ஈழப் போராட்டம் குறித்து மாறுபட்ட கருத்துக் கொண்டவர்களும்கூட அண்மைக்கால வரலாற்றில் ஆசியக் கண்டத்தில் மிகப்பெரும் உயிர்ப்பலி நேர்ந்ததற்கு சிங்கள இனவெறியன் இராசபக்சேதான் காரணம் என்பதில் மாறுபாடு கொள்வதில்லை. அத்தகைய கொடியவனுக்குப் பாடம் புகட்டும் முறையில், அயர்லாந்து தலைநகர் டப்ளினில் கூடிய நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தின் பத்து நீதிபதிகள் தந்த தீர்ப்பு நெற்றியடியாக அமைந்தது.
1. இராசபக்சே, ஒரு போர்க்குற்றவாளி
2. இராசபக்சே, மனித குலத்திற்கு எதிரான குற்றங்களை இழைத்தது உண்மை.
எனும் இரண்டு திருப்புமுனைத் தீர்ப்புகளை அமெரிக்கா, அர்யெண்டீனா, பெல்சியம், அயர்லாந்து, இத்தாலி, எகிப்து, இந்தியா, தாய்லாந்து, பிலிப்பைன்சு ஆகிய நாடுகளைச் சேர்ந்த நீதிபதிகள் பல்வேறு ஆதாரங்களின் அடிப்படையில் வழங்கி உள்ளனர்.
சர்வதேச அளவில் இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கிய நிரந்தர மக்கள் தீர்ப்பாயம்(Permanent People’s Tribunal) மனித உரிமைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்தும் ஆராய்ந்து தீர்ப்புகளை வழங்கக்கூடிய ஒரு சர்வதேச அமைப்பாகும். இத்தாலியில் 1979ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இத்தீர்ப்பாயம், சர்வதேச மக்கள் உரிமைப் பிரகடனத்தால்(Universal Declaration of Human Rights UDHR) உந்துதல் பெற்று, திபெத் – மேற்கு சகாரா – அர்யெண்டீனா – எரித்திரேயா – பிலிப்பைன்சு – எல்சால்வடோர் – ஆப்கானித்தான் – கிழக்குத்திமோர் – கவுதமாலா – அர்மீனியா – நிகாரகுவா போன்ற நாடுகளில் நடப்பேற்ற பல்வேறு மனித உரிமை மீறல்களைத் தனது ஆய்வுக்கு எடுத்துக் கொண்டு தீர்ப்புகளை வழங்கியுள்ளது.
இத்தீர்ப்புகளை நடமுறைபடுத்தும் இதற்கு இல்லாவிட்டாலும், அவை மிகுந்த நம்பகத்தன்மை உடையவையாக உலகெங்கும் மதிக்கப்படுகின்றன; இத்தீர்ப்புகளில் பல யெனிவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைக் குழுமத்தினால் விவாதிக்கப்படுகின்றன; அதன் விளைவாகப் பல்வேறு அரசியல் மாற்றங்களுக்கு வித்திடுகின்றன. எரித்திரியாவின் விடுதலைப் போராட்டம், பிலிப்பைன்சு நாட்டின் சர்வாதிகாரி மார்கோசிற்கு எதிரான கண்டனம் போன்றவை இத்தீர்பாயத்தின் முன்னால் வந்த சில அண்மைக்கால நிகழ்வுகளாகும். சிக்கலின் வேர்களைக் கண்டறிவதோடு நேர்மையான தீர்ப்புகளை வழங்குவது; தனி நபர்கள் அல்லது குழுவினரது பொறுப்புக்களை உணர்த்துவது மட்டுமல்லாமல், சிக்கலுக்கு உள்ளாகியுள்ள நாடுகளின் கட்டமைப்புக் காரணங்களையும் சுட்டிக்காட்டுவது இத்தீர்ப்பாயத்தின் முக்கியமானதோர் சிறப்பாகும். சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்(International Criminal Court) உருவாக்கப்பட்ட பிறகு, இத்தீர்ப்பாயம் தொடங்கப்பட்டது குறிப்பிடப்பட்டதாகும்.
சிறீலங்காவில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களை அயர்லாந்து நாட்டின் தலைநகர் டப்ளினில் 2010 சனவரி 14/15/16 ஆகிய நாள்களில் இத்தீர்பாயம் விவாதிக்க ஏற்பாடு செய்தது சிறீலங்காவில் அமைதிக்கான ஐரிஷ் கருத்து மன்றம்(Irish Forum for Peace in Sri Lanka) எனும் அமைப்பாகும். இது 2007 ஆம் ஆண்டு மே மாதத்தில் தொடங்கப்பட்டது. மனித உரிமை மற்றும் அமைதிக்காகப் பரப்புரை ஆற்றிவரும் மனித உரிமைக் குழுவினர், கலைஞர்கள் மற்றும் அயர்லாந்திலிருக்கும் கல்வியாளர்கள் ஆகியோர் சிறீலங்காவில் மனித உரிமைகள், சனநாயகம் குறித்துப் பேச்சுவார்த்தைக்கு உதவும் பொருட்டு இவ்வமைப்பை உருவாக்கினர். இராசபக்சேவுக்கு எதிரான உண்மையான தீர்ப்பு உருவாவதற்கு இவ்வமைப்பின் நேர்மையான முயற்சிகள் உதவி இருக்கின்றன.
உலக வரலாற்றில் இராசபக்சேவுக்கு முன்னாலும், போர்க் குற்றங்களுக்காகவும் மனித குலத்திற்கெதிரான குற்றங்களை இழைத்ததற்காகவும் பலரும் தண்டிக்கப்பட்டுள்ளார்கள். யெர்மனியில் இட்லரின் நாஜிப்படையினரின் மாபெரும் அணிவகுப்புகள் நடைபெற்ற நூரம்பர்க் எனுமிடத்தில், 21 பேருக்குப் பன்னாட்டு இராணுவத் தீர்ப்பாயம் தூக்கு தண்டனை, ஆயுள் தண்டனை, 10ஆண்டு/ 15ஆண்டு/ 20ஆண்டு சிறைத்தண்டனை எனக் கடுமையான தண்டனைகளை வழங்கியது(1945 – 1949). அதைத் தொடர்ந்து போசுனியா, டார்பர்(சூடான்) ஆகிய நாடுகளில் நடைபெற்ற போர்க்குற்றங்களுக்காகவும், மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்காகவும் தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன. போசுனியா, காங்கோ சனநாயகக் குடியரசு, சூடான்(டார்பர்) ஆகிய நாடுகளுக்கு எதிராகப் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்புகளை வழங்கியது. அதேப் போல் சிறீலங்காவில் தமிழ் மக்களுக்கு எதிரான குற்றங்களுக்காகப் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றம் விசாரணை நடத்த முடியாத சூழல் நிலவுகிறது. ஏனெனில், நாட்டு அரசுகள்தான் பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க முடியும். அல்லது ஐக்கிய நாடுகள் அவையின் பாதுகாப்புக் குழு வழக்குத் தொடுக்கலாம். ஆனால், ஈழச்சிக்கலில் இந்த இரண்டுமே சாத்தியமில்லாமல் போய்விட்டது.
2009 மே மாதத்தில் ஐக்கிய நாடுகள் அவையின் பாதுகாப்புக் குழுவில் சிறீலங்காவில் மனித உரிமைகள் குறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பற்றி அடிக்கடி பேசப்படுகிறது. சுவிட்சர்லாந்து நாடு முன்மொழிந்த தீர்மானத்தில், சிறீலங்காவில் தமிழ் மக்கள் மீது நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து சிறீலங்கா அரசே விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று மட்டுமே கோரப்பட்டிருந்தது; சர்வதேச விசாரணை கோரப்படவில்லை. ஆனால் அதுவுங்கூட ஏற்கப்படவில்லை என்பதுதான் மிகப்பெரும் அவலம்.
இறுதியாக ஐக்கிய நாடுகள் அவையின் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் தமிழாக்கத்தை தருகிறேன்-
ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைக் குழுவின் பதினொன்றாம் சிறப்பு அமர்வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் (27 மே 2009)
சிறீலங்காவின் இறையாண்மை, ஒருமைப்பாடு மற்றும் அதன் சுதந்திரத்தின் மீதான மதிப்பையும், அது தனது குடிமக்களைப் பாதுகாக்கும் உயர் உரிமையையும் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போரிடும் தன்மையையும் மனித உரிமைக்குழு(Human Rights Council) மீண்டும் உறுதிப்படுத்துகிறது. பகைமையுணர்வு முடிவுக்கு வந்ததையும், குடிமக்களின் விருப்பத்திற்கு மாறாக தமிழீழ விடுதலைப் புலிகளால் பிணையாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த பல்லாயிரக்கணக்கான குடிமக்களை விடுதலை செய்த சிறீலங்கா அரசையும் மனித உரிமைக்குழு வரவேற்கிறது. மேலும் சிறீலங்காவிலுள்ள அனைவரது பாதுகாப்பிற்கும் உத்தரவாதம் கொடுத்த அரசின் முயற்சிகளையும், அந்நாட்டில் நிலையான சமாதானத்தைக் கொண்டு வந்ததையும் மனித உரிமைக் குழு வரவேற்கிறது.
இலங்கைச் சிக்கலுக்கு இராணுவத் தீர்வுதான் இறுதியானது எனத்தான் கருதவில்லையென, சிறீலங்காவின் குடியரசுத்தலைவர் அண்மையில் கொடுத்த மறுவாக்குறுதியை மனித உரிமைக் குழு வரவேற்கிறது. மேலும் சிறீலங்காவில் நிலையான அமைதியையும் சாமாதானத்தையும் கொண்டு வருவதற்குப் பதிமூன்றவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தி ஓர் அரசியல் தீர்வு காண முடியும் எனும் அவரின் உத்தரவாதத்தையும் மனித உரிமைக்குழு வரவேற்கிறது. உள் நாட்டிற்குளேயே இடம் பெயர்ந்தவர்கள் உள்ளிட்ட போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி, மறு குடியேற்றம் பெற உதவுவதும், நாட்டின் பொருளாதாரம் மற்றும் அடிப்படைக் கட்டுமானத்தை மீண்டும் கட்டி எழுப்புவதும் பகைமை முடிவுக்கு வந்த இக்காலகட்டத்தில் மனித உரிமைச் செயற்பாடுகளில் முதன்மையானது என இக்குழு வலியுறுத்துகிறது. பெருந்தொகையாகவுள்ள உள்நாட்டில் இடம் பெயர்ந்தவர்களை ஆறுமாதத்தில் பாதுகாப்பாகக் குடியமர்த்தும் திட்டத்தை சிறீலங்கா அரசு அறிவித்ததையும் மனித உரிமைக் குழு வரவேற்கிறது.
சிறீலங்காவின் கிழக்குப் பகுதியில் போர் முடிவுற்றதும் முன்னாள் குழந்தைப் போர் வீரர்களை மறுசீரமைப்புச் செய்து அவர்களை வெற்றிகரமாக மீண்டும் ஒருங்கிணைத்ததை மனித உரிமைக்குழு வரவேற்கிறது.
சிறீலங்காவிலுள்ள மனித உரிமைச் சூழலையும், அது குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் முறையாகவும் ஒளிவு மறைவின்றியும் தொடர்ந்து எடுத்துரைத்த சிறீலங்கா அரசின் செயலை மனித உரிமைக் குழு அங்கீகரிக்கிறது.
1. உள்நாட்டில் இடம் பெயர்ந்த மக்களின் அவசரத் தேவைகளுக்கான நடவடிக்கைகளை எடுத்துவரும் சிறீலங்கா அரசை இக்குழு பாராட்டுகிறது.
2. அனைத்து மனித உரிமைகளையும் மேம்படுத்துவதிலும் பாதுகாப்பதிலும் தொடர்ந்து அர்ப்பணிப்போடிருக்கும் சிறீலங்காவை இக்குழு வரவேற்கிறது. மேலும் மனித உரிமைக் கடமைகளையும் சர்வதேச மனித உரிமைச் சட்டங்களின் கூறுகளையும் தொடர்ந்து உயர்த்திப் பிடிக்குமாறு சிறீலங்காவை இக்குழு ஊக்குவிக்கிறது.
3. உள்நாட்டில் இடம் பெயர்ந்த மக்களுக்குத் தேவையான அடிப்படை மனித நெய உதவி, குறிப்பாக பாதுகாப்பான குடிநீர் – சுகாதாரம் – உணவு – மருத்துவம் மற்றும் உடல்நலப் பாதுகாப்பு ஆகியவற்றை ஐக்கிய நாடு அமைப்புகளின் ஒத்துழைப்போடு நிறைவேற்ற சிறீலங்காவை இக்குழு தூண்டுகிறது.
4. உள்நாட்டில் இடம் பெயர்ந்தவர்களை ஆறுமாதத்திற்குள் பாதுகாப்பாகவும் முழுமையாகவும் மறு குடியமர்த்தும் திட்டம் பற்றி அறிவித்ததற்காகவும், தேசிய, மத மற்றும் மொழிச் சிறுபான்மையினர் ஆகிய பிரிவினருக்கு உரிய மரியாதை கொடுத்து இம்முயற்சிகளில் ஈடுபடச் சிறீலங்காவை உற்சாகப்படுத்துமாறும், இக்குழு வேண்டுகிறது.
5. கடந்த காலப் போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு – குறிப்பாக உள்நாட்டில் இடம் பெயர்ந்தவர்களுக்கு – அவர்களது அவசரத் தேவைகளுக்கு உத்தரவாதம் அளிக்கும் சர்வதேச மனித நேய முகவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யும் சிறீலங்கா அரசின் அர்ப்பணிப்பை இக்குழு அங்கீகரிக்கிறது. மேலும் இது குறித்துப் பொருத்தமான பணிகளை மேற்கொள்ளுமாறு சிறீலங்காவை இக்குழு தூண்டுகிறது.
6. சிறீலங்காவில் நடைபெற்ற போரில், அரசு அல்லாத ஆயுதப் படையினரால் பணியமர்த்தப்பட்ட முன்னால் குழந்தைப் போர் வீரர்களின் ஆயுதங்களைக் களைவதற்கும், அவர்களைக் கலைப்பதற்கும், மறு குடியேற்றத்திற்கும் உடல்/ உள மாற்றத்திற்கும், சமூகத்தில் மீண்டும் அவர்களைப் பிணைப்பதற்கும் குறிப்பாகப் பெண்களின் தேவைகள் மற்றும் திறமைகளைக் கணக்கிலெடுத்துக் கொண்டு அவர்களின் கல்வி மேம்பாட்டிற்கும், சிறீலங்கா அரசு ஐக்கிய நாடு அமைப்புகளின் ஒத்துழைப்பு மூலம் சிறீலங்கா அரசு எடுத்து வரும் முயற்சியைத் தொடருமாறு இக்குழு ஊக்குவிக்கிறது.
7. மனித உரிமையை முழுமையாக அனுபவிப்பதில் சிறுமான்மை இனத்தவர்களுக்கு எதிராகப் பாகுபாடு காட்டாமல் உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை சிறீலங்கா அரசு தொடரவேண்டும் என இக்குழு வலியுறுத்துகிறது.
8. போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதநேய உதவி அளிப்பதில், ஐக்கிய நாடுகள் அவையின் முகவர்கள் மற்றும் பிற மனிதநேய அமைப்புகளுக்கு சிறீலங்கா அரசு தொடர்ந்து ஒத்துழைப்பு நல்குமாறு வலியுறுத்துகிறது.
9. ஐக்கிய நாடுகள் அவையின் மனித நேயச் செயல்பாடுகளின் செயலாளர் நாயகம் அவர்களும், செயலாளர் நாயகத்தின் பிரதிநிதி அவர்களும், உள்நாட்டில் இடம் பெயர்ந்தவர்களின் மனித உரிமை குறித்தறிய சிறீலங்காவிற்கு அண்மையில் வருகை புரிந்ததை இக்குழு வரவேற்கிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனித நேய உதவி வசதியும், ஒருங்கிணைப்பும் வழங்கித் தொடர்ந்து ஒத்துழைக்குமாறு இக்குழு வேண்டுகிறது.
10. சிறீலங்கா அதிபரின் அழைப்பிற்கிணங்க சிறீலங்காவிற்கு வருகை புரிந்த செயலாளர் நாயகம், அப்பயண இறுதியில் வெளியிட்ட கூட்டறிக்கையையும் அதன் புரிந்துணர்வையும் இக்குழு வரவேற்கிறது.
11. சீறீலங்காவில் நீடித்த அமைதி, வளர்ச்சி மற்றும் அரசியல் தீர்வு காணவும், சிறீலங்காவில் வாழும் அனைத்து இன மற்றும் மதக் குழுக்களின் உரிமைகளுக்கு மதிப்புக் கொடுத்துப் புரிந்துணர்வின் அடிப்படையில் விரிவான பேச்சுவார்த்தையைத் தொடங்கவிருக்கும் சிறீலங்கா அரசின் உறுதிப்பாட்டை இக்குழு வரவேற்கிறது. அக்கறையும் கரிசனமும் கொண்ட அனைவரையும் இதில் தீவிரமாகப் பங்கேற்குமாறும் இக்குழு அழைப்புவிடுக்கிறது.
12. சிறீலங்காவின் வறுமை மற்றும் வளர்ச்சியற்ற தன்மையை எதிர்த்துப் போராடவும், மறுகட்டமைப்பு முயற்சிகளுக்குத் தேவையான நிதி உதவி, வளர்ச்சிக்கான உதவி ஆகியவற்றை அதிகரித்து, சிறீலங்கா அரசோடு ஒத்துழைக்குமாறு சர்வதேச சமூகத்தை இக்குழு வலியுறுத்துகிறது. அதேபோல் அந்நாட்டின் பொருளாதார, சமூக மற்றும் பண்பாட்டு உரிமைகள் உள்ளிட்ட அனைத்து மனித உரிமைகளையும், பாதுகாக்கவும் மேம்படுத்தவும் தொடர்ந்து உதவுமாறு இக்குழு வேண்டுகிறது.
-இதுதான் 2009 மே 26 -27 நாட்களில் ஐ.நா.வின் மனித உரிமைக் குழுவின் பதினொன்றாம் சிறப்புக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்.
(ஆதாரம்:- Report of the Human Rights Council on its Eleventh Special Session)
உலகிலுள்ள பல்வேறு நாடுகள் இராசபக்சேவுக்கு ஆதரவாக அணித்திரண்டதை ஐ.நா.வின் இத்தீர்மானம் வெட்ட வெளிச்சமாகிறது. ஆனால் இதில் ஒருமனதாக ஏற்கப்பட்ட எந்தத் திட்டத்தையும் இதுவரை இராசபக்சே அரசு முழுமையாகச் செயல்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அங்கோலா, அசர்பெய்சான், பக்ரைன், பங்காளதேசம், பொலிவியா, பிரேசில், பர்கினா பேசோ, கேமரூன், சீனா, கியூபா, டிஜிபௌட்டி, எகிப்து, கானா, இந்தியா, இந்தோனேசியா, சோர்டான், மடகாசுகர், மலேசியா, நிகாரகுவா, நைசீரியா, பாக்கித்தான், பிலிப்பைன்சு, கட்டார், இரசியக் கூட்டமைப்பு, சௌதி அரேபியா, செனகல், தென் ஆப்பிரிக்கா, உருகுவே, சாம்பியா ஆகிய 24 நாடுகள் இத்தீர்மானத்தை ஆதரித்து – சிறீலங்காவிற்குச் சாதகமாக – ஓட்டளித்தன.
போசுனியா, அர்சகோவினா, கனடா, சிலி, பிரான்சு, யெர்மனி, மெக்சிகோ, நெதர்லாந்து, சுலோவாக்கியா, சுலோவேனியா, சுவிட்சர்லாந்து, பிரிட்டனின் ஒன்றுபட்ட அரசு(UK) மற்றும் வடக்கு அயர்லாந்து ஆகிய 12 நாடுகள் இத்தீர்மானத்தை எதிர்த்து – சிறீலங்காவிற்குப் பாதகமாக ஓட்டளித்தன.
அர்செண்டீனா, கேபான், சப்பான், மொரீசியசு, கொரியக் குடியரசு, உக்ரைன் ஆகிய ஆறு நாடுகள் ஓட்டளிக்கவில்லை. இந்தப் பின்னணியில்தான் டப்ளின் நிரந்தர மக்கள் தீர்ப்பாயத் தீர்ப்பின் முக்கியத்துவத்தை நாம் புரிந்துகொள்ள முடியும். ஐ.நா.வின் மனித உரிமைக்குழுவின் ஆதரவைப் பெற்ற இராசபக்சே, டப்ளினில் போர்க்குற்றவாளியாகப் பிரகடனப்படுத்தப்பட்டது நீதிக்குக் கிடைத்த முதல் வெற்றியாகும்.
மனித குலத்திற்கு எதிரான குற்றங்களை இராசபக்சே செய்துள்ளான் என்பது ஏராளமான தரவுகளோடு மெய்பிக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட மனித குலப் பகைவன், தான் செய்த குற்றங்களிலிருந்து தப்பிவிட ஒருக்காலும் அனுமதிக்க முடியாது. இராசபக்சே தப்பிவிட்டால், அது மனித குலத்திற்கே மிகப்பெரும் அவமானமாகும்.
இன்றைய புவிசார் அரசியல் சூழலில், தமிழ் மக்கள் மீது அநியாயமாக இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு நியாயம் கேட்க, அரசாங்கங்களை நம்பிப் பயனில்லை. அவை தங்களது எதிர்கால இலாபத்தை முன்வைத்தே சர்வதேச நிலைபாடுகளை எடுக்கின்றன. ஆகவே, உலகெங்குமுள்ள புரட்சியாளர்கள், சனநாயக ஆர்வலர்கள், மனித உரிமையாளர்கள், தேசிய இன விடுதலைப் போராளிகள், மனசாட்சியுள்ள சிவில் சமூகம் ஆகியோரது ஆதரவைத் திரட்டுவதுதான் இன்றைய நிலையில் ஏற்புடையதாக இருக்கும். “மூலதனம் உலகமயமாவதால், புரட்சியும் உலகமயமாவது கட்டாயம்” எனப் புரட்சியாளர் துணைத் தளபதி மார்க்கோசு இதைத்தான் குறிப்பிடுகிறார்.
ஏற்கெனவே சனநாயக சக்திகள்தான், சிங்கள இனவெறி அரசு மற்றும் இராசபக்சேவின் பொய் முகத்தை அம்பலப்படுத்தியுள்ளன. அவ்வகையில் மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின்(முன்னாள்) அகில இந்தியத் தலைவர் திரு.கண்ணபிரான், தமிழகத் தலைவர் வழக்குரைஞர் திரு.சுரேசு, பெங்களூர் வாழ் தமிழர் திரு.பால் நியூமென் ஆகியோர் சிறீலங்காவில் தமிழ் மக்கள் மீதான மனித உரிமை மீறல்களைச் சட்ட வடிவில் எதிர்கொள்ளத் தேவையான முயற்சிகளைப் பாராட்டத்தக்க முறையில் முன்னெடுத்தனர்.
அதேபோல் ஈழத்தமிழ் மக்கள் மீது ஏவப்பட்ட கடும் ஒடுக்குமுறைகளை மக்களிடம் அம்பலபடுத்துவதிலும் மக்களை அணி திரட்டுவதிலும் பல்வேறு அரசியல் கட்சிகளும், தமிழீழ ஆதரவு அமைப்புகளும், தமிழ்த்தேசிய இயக்கங்களும், பரந்துபட்ட சனநாயக சக்திகளும் மிகபெரும் பங்காற்றியுள்ளன. ”செய்திகளை அறிந்து கொள்ளும் வாய்ப்பு உடையவர்களுக்கு, அது சார்ந்த செயலாற்ற வேண்டிய கடமையும் இருக்கிறது” என்றார் ஐன்சுடீன். எனவே டப்ளின் தீர்ப்பாயத் தீர்ப்பு பற்றி அறிந்து கொள்வதோடு, நாடு முழுவதும் பட்டி தொட்டிகளெங்கும் – அதனைக் கொண்டு செல்வதும் இயக்கமாக்குவதும் நமது தலையாய கடமையாகும். தமிழ் மக்களின் பகைவன் இராசபக்சேவுக்கு உரிய தண்டனை பெற்றுத் தரும்வரை சனநாயக சக்திகளுக்கு ஓய்வு என்பது இல்லை.
“ஆயிரம் ஆண்டுகள் கடந்தாலும், யெர்மனியின் குற்றத்தை வரலாற்றிலிருந்து அழிக்க முடியாது” என போலாந்திற்கான நாஜி ஆளுநர் ஹேன்ஸ் பிராங் நூரம்பர்க் விசாரணையில் ஒப்புதல் வாக்குமூலமாகக் குறிப்பிட்டார். அதுபோல ஈழ மண்ணில் சிந்தப்பட்ட தமிழ் இரத்தம், அதிகாரத்தின் மமதையை அம்பலப்படுத்துவதோடு, விடுதலை வேட்கையின் வீரியத்தையும், வீழ்ந்துவிடாத வீரத்தையும் உலகம் முழுவதும் உரத்தச் சொல்லிக் கொண்டேயிருக்கும்.
- நிசாந்தன்இளையநிலா
- பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010
நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் ஓர் அறிமுகம்
”அமைதிப் பேச்சுவார்த்தைகள் முறிந்து போன பிறகு நடைபெற்ற இறுதிக்கட்டப் போர், குறிப்பாக இறுதி மாதங்கள்” பற்றி விசாரிப்பதை முக்கிய நோக்கமாகக் கொண்ட ஒரு விசாரணையை – ‘நிரந்தர மக்கள் தீர்ப்பாயம்’ மேற்கொள்ள வேண்டும் என்பதற்கான கோரிக்கையை முன்வைத்த ஆவணங்கள், நவம்பர் 19, 2009 அன்று ஏற்றுக் கொள்ளப்பட்டன.
நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் – எந்த அரசதிகாரத்தையும் சார்ந்திராத ஓர் உலகளாவிய கருத்துத் தீர்ப்பாயம். மனித உரிமை மீறல்கள் குறித்தும் மக்களின் உரிமைகள் பறிக்கப்படுவது குறித்தும் அது விசாரணைகளை மேற்கொள்கிறது.
‘லெலியோ பாசோ’ என்ற மக்களின் உரிமைகள் மற்றும் விடுதலைக்கான உலகளாவிய அமைப்பினால் ஆதரித்து ஊக்கப்படுத்தப்படும் நிரந்த மக்கள் தீர்ப்பாயம், இத்தாலியில் உள்ள பொலோக்னாவில் சூன் 1979 அன்று 31 நாடுகளைச் சேர்ந்த பல சட்ட வல்லுநர்கள், எழுத்தாளர்கள் மற்றும் நோபல் பரிசு பெற்ற 5 பேர் உட்பட, பிற பண்பாட்டு மற்றும் சமூகத் தலைவர்களால் உருவாக்கப்பட்டது.
வியட்நாம்(1966-67) மற்றும் இலத்தின் அமெரிக்காவின் சர்வாதிகாரங்கள் (1974-76) மீதான இரஸ்சல் தீர்ப்பாயத்தின் மூலம் பெற்ற வரலாற்று அனுபவங்களைத் தனது அடிப்படையாக நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் கொண்டுள்ளது. நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் மேகொள்ளும் முடிவுகளின் முக்கியத்துவமும் பலமும் – அதன் முன் விசாரணைக்கு வரக்கூடிய வழக்குகளின் தார்மீக பலத்தையும், அவர்கள் முன்வைக்கும் வாதங்களின் உண்மைத் தன்மையையும், தீர்ப்பாயத்தின் உறுப்பினர்களின் நேர்மை மற்றும் தீர்மானிக்கும் திறன் ஆகியவற்றையும் பொருத்தது.
தீர்ப்பாயத்தின் முன் வரும் புகார்கள் பாதிக்கப்பட்டவர்களாலோ, அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் குழுக்கள் அல்லது தனி நபர்களாலோ அளிக்கப்படுகிறது. நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் அதில் தொடர்புடைய அனைத்துத் தரப்பினரையும் ஒன்றாக அழைத்து, குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்கள் தரப்பு வாதத்தை முன் வைக்கப் போதுமான வாய்ப்பினை வழங்குகிறது. விசாரணைக் குழு ஒவ்வொரு வழக்கிற்கும் பொருத்தமான நபர்களாகவும், தங்கள் நேர்மைக்கும் திறனுக்கும் அறியப்பட்டவர்களாகவும் உள்ளவர்களை கொண்டதாக அமைக்கப்படுகிறது.
சூன் 1979 முதல் இன்று வரை, ஏறத்தாழ 40 விசாரணைகள் நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் மேற்கொண்டுள்ளது. அவற்றின் விவரங்களும் தீர்ப்புகளும் கீழ்க்காணும் தளத்தில் கிடைக்கப் பெறும் : http://www.internazionaleleliobasso.it
இலங்கை குறித்த இந்த விசாரணையை மேற்கொள்ள, சூன் 2009லேயே பல்வேறு தரப்பினையும் சேர்ந்த பல தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், நிரந்த மக்கள் தீர்ப்பாயத்தின் செயலரை அணுகினர். அதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு உலகெங்கிலும் பரவலாக தலைப்புச் செய்திகளாக ஆகிப் போகும் வகையில் – பல மாதங்கள் நடந்த இரத்த வெறிக் கொண்ட படுகொலைகளுக்குப் பிறகு, இலங்கை அரசு போர் முடிந்ததாக அறிவித்தது. நிலைமையின் அவசரம் புரிந்துகொள்ளப்பட்டது. கூடுதலாக, தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டதை உலக ஊடகங்களின் கவனத்திலிருந்து மறைப்பதற்கு துணை போன உலகளாவிய நிறுவனங்களின் அலட்சியப் போக்கிற்கு மாற்றாக, நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தின் திறன் கவனத்தில் கொள்ளப்பட்டது.
“அமைதிப் பேச்சுவார்த்தைகள் முறிந்து போன பிறகு நடபெற்ற இறுதிக்கட்டப் போர், குறிப்பாக இறுதி மாதங்கள்” பற்றி விசாரிப்பதை முக்கிய நோக்கமாகக் கொண்ட ஒரு விசாரணையை – ‘நிரந்தர மக்கள் தீர்ப்பாயம்’ மேற்கொள்ள வேண்டும் என்பதற்கான கோரிக்கையை முன்வைத்த ஆவணங்கள், நவம்பர் 19, 2009 அன்று ஏற்றுக் கொள்ளப்பட்டன.
விசாரணை நடைமுறைகள் குறித்த விளக்கக் குறிப்பும், நிரந்த மக்கள் தீர்ப்பாயத்தினால் டப்ளினில் நடத்தப்பட இருக்கும் விசாரணையில் பங்கேற்கக் கோரும் அழைப்புக் கடிதமும் – இலண்டனில் உள்ள இலங்கை அரசின் பிரதிநிதி மதிப்பிற்குரிய நீதியரசர் நிஹால் ஜெயசிங்கேவிடம் டிசம்பர் 1, 2009 அன்று அளிக்கப்பட்டன.
நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தின் சட்ட திட்டங்களின்படியும், அதன் அறிவிப்பில் உள்ளபடியும், விசாரணையில் தங்கள் தரப்பு வாதத்தை முன்வைப்பதற்காக வழங்கப்பட்ட வாய்ப்பு குறித்தும் – நேர்மறையான பதில் எதுவும் இல்லாத நிலையில், பொது விசாரணையில் இலங்கை அரசின் பார்வையில் கருத்துக்களை முன்வைக்க ஒருவரை நிரந்தர மக்கள் தீர்ப்பாயமே நியமித்தது.
நிரந்த மக்கள் தீர்ப்பாயத்தின் விசாரணை, டிரினிடி கல்லூரியில் மேற்கொள்ளப்பட்டது. பாதுகாப்பு காரணங்களால் போரின் இறுதி மாதங்கள் குறித்து நேரடி சாட்சிகளின் விரிவான வாக்குமூலங்களை, நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தைன் உறுப்பினர்கள் மூடிய அறையில் விசாரித்தனர்.
இந்த விசாரணையை மேற்கொள்வதற்காக தமிழ் அமைப்புகளிடமோ, இதில் தொடர்புடைய அரசுகளிடமோ எவ்வித பொருளுதவியும் பெறப்படவில்லை எனவும், பல தொண்டு நிறுவனங்களின் தன்னார்வப் பங்களிப்பின் மூலமாகவே தீர்ப்பாயத்தின் கட்டமைப்பு மற்றும் பொருளாதாரத் தேவைகள் நிறைவேற்றப்பட்டன என்றும் நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் உறுதி கூறுகிறது.
தீர்ப்பாயத்தின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட எழுத்து மற்றும் ஒளிப்பட ஆவணங்கள், நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
- நிசாந்தன்இளையநிலா
- பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010
’
குற்றச்சாட்டுகள்
இலங்கையில் அமைதிக்கான ஐரிஷ் கருத்து மன்றம்’ 19.11.2009 அன்று ஒரு மக்கள் தீர்ப்பாயத்தை நடத்தக் கோரியது. சூலை 2006இல் போர் தொடங்கிய நாள் முதல் ஏப்ரல் 2009 வரை, ஐக்கிய நாடுகள் அவையின் உள் ஆவணங்களின்படி, வான் வழித் தாக்குதல் மற்றும் கனரக ஆயுதங்களின் பயன்பாடு காரணமாக, ஒரு நாளைக்கு 116 பேர் கொல்லப்பட்டதாக அந்த ஐரிஷ் குழு கூறியது. இறுதி சில வாரங்களில் மட்டும் 20,000 தமிழ் மக்கள் கொல்லப்பட்டதாக பிரிட்டன் மற்றும் பிரெஞ்சு ஊடங்கங்கள் செய்தி வெளியிட்டன.
போர் குறித்த யெனிவா ஒப்பந்தங்களை இலங்கை பாதுகாப்பு படையினர் மீறியதாகவும், குறிப்பாக போரின் இறுதி ஐந்து மாதங்களான சனவரி முதல் மே 2009 வரையிலான காலக்கட்டத்தில் கொடூரமான போர்க் குற்றங்களையும் மானுடத்திற்கு எதிரான குற்றங்களையும் அவர்கள் புரிந்ததாகவும் பல குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன.
மக்களின் வாழ்விடங்கள், மருத்துவமனைகள், அரசு அறிவித்த ‘பாதுகாப்பு வலையங்கள்’, பாதுகாப்புப் படையினர் அறிவித்த ‘தாக்குதல் அற்ற வலையங்கள்’ ஆகியவற்றின் மீது பாதுகாப்புப் படையினர் நடத்திய குண்டுவீச்சுத் தாக்குதல்களும், அவற்றின் மூலம் பல மக்களும் மருத்துவர்களும் தொண்டு ஊழியர்களும் கொல்லப்பட்டதும் இந்த குற்றச்சாட்டுகளில் அடங்கும். போர்ப் பகுதிகளில் மக்களின் அன்றாட வாழ்வியல் தேவைகளான உணவு, நீர் மற்றும் மருத்துவ வசதிகள் வழங்கப்படாததும் இப்புகார்களில் அடங்கும். இவற்றைத் தவிர, மானுடத்திற்கு எதிரான கொடூரக் குற்றங்களும் அதில் அடங்கும்.
போர் முடியும் முன்பே ஐ.நா. அவையின் நிறுவனங்கள், நடைபெற்றுவரும் மனித உரிமை மீறல்கள் மற்றும் மக்கள் மீது இலங்கை அரசின் ஆயுதப் படையினர் நடத்தும் தாக்குதல்கள், விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் முன்பு இருந்த பகுதிகளில் வாழும் மக்களுக்கு எல்லாவித உதவிகளும் மறுக்கப்பட்டமை ஆகியவை குறித்து இலங்கை அரசிடம் தங்கள் கவலையை வெளிப்படுத்தின. ஆனால், இலங்கைப் பாதுகாப்புப் படையினர் இந்த எச்சரிக்கைகளை எல்லாம் அலட்சியப்படுத்திவிட்டு, தங்கள் போக்கில் கொடூரங்களைத் தொடர்ந்தனர்.
போர் முடிந்த உடனடி மாதங்களில், அனைவரின் கவனமும் வன்னிப்பகுதி தடுப்பு முகாம்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 2 இலட்சத்து 80 ஆயிரம் இலங்கை தமிழர்கள் மீது திரும்பியது. முகாம்களில் நெருக்கமாக அடைக்கப்பட்டு, பாதுகாப்பான உணவு, நீர், சுகாதாரம் மற்றும் மருத்துவ வசதிகளை அளிப்பதற்கான போதுமான கட்டமைப்புகள் இன்றி அவர்கள் வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், இலங்கை அரசு அவர்களில் உள்ள புலி ஆதரவாளர்களைப் பிரித்து எடுக்கும்வரை, இடம் பெயர்ந்த தமிழ் மக்கள் அனைவரும் அந்த முகாம்களிலேயே வைக்கப்படுவார்கள் என்று அறிவித்தது.
தொடர்ந்த வாரங்களில், பல நூறு எண்ணிக்கையிலான தமிழ் இளைஞர்கள் முகாம்களில் இருந்து காணாமல் போவதும், பாதுகாப்பு படையினர் அல்லது அரசின் ஆதரவு பெற்ற ஒட்டுக்குழுக்களால் கூட்டிச் செல்லப்படுவது குறித்தும் பெரும் எண்ணிக்கையிலான புகார்கள் எழுந்தன. நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
ஐந்து மாதங்களுக்கு மேல் தமிழ் மக்கள் இவ்வாறு முகாம்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளமை குறித்த எழுந்த உலகளாவிய எதிர்ப்பினைத் தொடர்ந்து, அதில் குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையிலானவர்கள் மீள் குடியமர்த்தப்படுவார்கள் என அரசு அறிவித்தது. இருப்பினும், பி.பி.சி. மற்றும் பிற செய்தி ஊடகங்கள் ‘இவ்வாறு முகாம்களிலிருந்து விடுதலை செய்யப்பட்டவர்கள், மீண்டும் ஊரைவிட்டுத் தள்ளி உள்ள பிறிதொரு முகாமுக்கே கொண்டு செல்லப்பட்டனர்’ என்று கூறின. தனது படையினர் மீது வைக்கப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் தொடர்ந்து மறுத்து வந்த இலங்கை அரசு, இக்குற்றச்சாட்டுகள் இலங்கையின் இறையாண்மை மீது தொடரப்பட்ட தாக்குதல் எனப் புறந்தள்ளியது.
தமிழ்ப் பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று உள்ளூர் மக்களுடன் உரையாடுவதன் மூலம் உண்மைகளை வெளிக் கொணரும் வாய்ப்பினை அளிக்க, எந்த தேசிய அல்லது பன்னாட்டு ஊடகங்களுக்கோ, பிற நிறுவனங்களுக்கோ, ஐ.நா. அமைப்பினருக்கோ அனுமதி அளிக்க இலங்கை அரசு மறுத்துவிட்டது. இலங்கையின் தென்பகுதியில் – போர் நடத்தப்பட்ட முறை குறித்தும் உலகளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட போர் நடைமுறைகள் மற்றும் மனித உரிமைகளின் அடிப்படையில் இலங்கை பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கைகள் குறித்தும் கேள்வி எழுப்புவது, தேசத் துரோகச் செயலாகவே பார்க்கப்பட்டது.
இந்தப் பின்னணியில்தான் நிரந்தர மக்கள் தீர்ப்பாயம், கீழ்காண்பவற்றை ஆராயுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது:
1. உலகளாவிய குற்றவியல் நீதிமன்றத்தின் ‘ரோம்’ சட்டத்தில் மானுடத்திற்கு எதிரான குற்றங்கள் என விளக்கப்பட்டுள்ள முறையில், திட்டமிடப்பட்ட தாக்குதல்கள் நடைபெற்றனவா?
2. ‘ரோம்’ சட்டத்தின் மானுடத்திற்கு எதிரான குற்றங்களில் அழித்தொழிப்பு என்பதற்கு அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தின்படி, தமிழ் மக்களில் ஒரு பகுதியினரை அழித்தொழிக்கும் நோக்கத்துடன் – உணவு மற்றும் மருத்துவ உதவிகள் மறுக்கப்பட்டு, அவர்கள் வாழ்வியல் நிலைகளில் பாதிப்புகள் ஏற்படுத்தப்பட்டனவா?
3. தாமாகவே முன் வந்து இலங்கை இராணுவத்திடம் சரணடைந்த போர்க் கைதிகளை கொலை செய்ததன் மூலம், இலங்கை அரசுப்படைகள் உலகளாவிய போர்ச் சட்டங்களை மீறியிருக்கின்றனவா? தாங்கள் பிடித்த அல்லது தங்களிடம் சரணடைந்த தமிழர்களை இலங்கை ஆயுதப் படையினர் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கினரா? கைதிகளின் சுயமரியாதையைப் பாதிக்கும் வகையிலான கொடுமைகளோ, அவர்களை அவமானப்படுத்தும் அல்லது தரந்தாழ்த்தும் நடவடிக்கைகளோ மேற்கொள்ளப்பட்டனவா?
4. பாலியல் வன்கொடுமைகளும் வன்புணர்வும் போர் ஆயுதங்களாகப் பயன்படுத்தப்பட்டனவா?
5. ‘வலுக்கட்டாயமாக காணாமல் அடிப்பது’ குறித்த ரோம் சட்டத்திற்கு எதிராகத் தமிழ் மக்கள் கொலை செய்யப்பட்டனரா? காணாமல் ஆக்கப்பட்டனரா?
6. உலகளாவிய சட்டங்களுக்கு முரணாக, தமிழ் மக்கள் பெருமளவில் வெளியேற்றப்பட்டனரா? அல்லது தடுத்து வைக்கப்பட்டனரா?
7. மக்கள் அடர்த்தியாக இருந்த இடங்களில் கனரக ஆயுதங்களையும் விமானத் தாக்குதல்களையும் மேற்கொண்டதன் மூலம் – இலங்கை ஆயுதப் படையினர் போர்க் குற்றங்களைப் புரிந்துள்ளனரா? உலகளாவிய சட்டங்களால் தடை செய்யப்பட்டுள்ள ஆயுதங்களான கொத்துக் குண்டுகள், இராசயன தன்மையுள்ள குண்டுகள் போன்றவற்றை அவர்கள் பயன்படுத்தினரா?
8. இறந்து போனவர்களின் உடல்களைச் சேதப்படுத்துவதுவதன் மூலம், போர்க் குற்றங்களை இலங்கை அரசு படைகள் புரிந்தனவா?
இந்தத் தீர்ப்பாயம், இலங்கை அரசு புரிந்த குற்றங்களை மட்டுமே விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது; விடுதலைப் புலிகள் புரிந்தவற்றைக் குறித்து அல்ல.
இதற்குக் காரணம் என்னவெனில், இம்மாதிரியான மனித உரிமை சட்டங்கள் அரசிடமிருந்து மக்களை காக்கவே உருவாக்கப்பட்டன. தனி மனிதர்களோ, ஒரு குழுவினரோ புரியும் குற்றங்களை தண்டிக்க அரசு இருக்கிறது. ஆனால், அரசு புரியும் குற்றங்கள் பெரும்பாலும் கவன ஈர்ப்பின்றியே போய்விடுகின்றன. ஏனெனில் தனது நடவடிக்கைகளை விசாரிக்கவோ, தண்டிக்கவோ அரசு விரும்புவதில்லை.
உலகளாவிய சட்டங்களில் உள்ள மனித உரிமை மீறல்களுக்கான பிரிவுகள் அரசுக்குப் பொருந்துவதாகவே உள்ளன. இந்தக் கோட்பாட்டின் அடிப்படையில் விசாரணையை மேற்கொள்வதே இத்தீர்ப்பாயத்தின் நோக்கம்.

போர் நிறுத்தமும் அமைதிப் பேச்சுவார்த்தைகளின் முறிவும்
போர் நிறுத்த ஒப்பந்தத்தை வலுபடுத்த – ஆக்கப்பூர்வமான முறையில் தலையிட்டோ, சமநிலையில் கையாளவோ, அடைந்துவிட்ட பலன்களை முன்னிறுத்தவோ பன்னாட்டுச் செயல்பாட்டாளர்கள் தவறிவிட்டதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
விடுதலைப் புலிகள் ஒருதலைப்பட்சமான சண்டைநிறுத்தம் அறிவித்ததைத் தொடர்ந்து பிப்ரவரி 22,2002 அன்று, இலங்கை அரசும் விடுதலைப் புலிகள் இயக்கமும் நிரந்தரப் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. நார்வே சமாதானக் குழுவினர் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கான முயற்சிகளை மேற்கொண்டனர். நிதியுதவி வழங்கி வந்த நாடுகளான ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, சப்பான், நார்வே ஆகியவற்றின் இணைத் தலைமைகள் – நார்வேக்கு பக்கத் துணையாக சமாதான நடவடிக்கைகளை மேற்பார்வையிட்டன.
“இலங்கையில் நிலவும் சிக்கலுக்கு பேச்சுவார்த்தைகளின் மூலம் ஒரு தீர்வை அடைவதே” ஒட்டுமொத்த நோக்கமாக இருந்தது. போர் நிறுத்த ஒப்பந்தத்தின் நோக்கம் – “பேச்சுவார்த்தைகளை நோக்கி முன்னேறவும், ஒரு நீடித்த தீர்வை எட்டவும், ஒரு நேர்மறையான சூழலை உருவாக்குவதே” ஆகும். போர் நிறுத்த ஒப்பந்த மீறல்களைக் கண்காணிக்க ‘இலங்கை போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழு’ என்ற சுதந்திரமான குழு உருவாக்கப்பட்டது. இதன் உறுப்பினர்கள் பெரும்பாலும் நார்வே, சுவீடன், பின்லாந்து, டென்மார்க் மற்றும் ஐசுலாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். போரினால் கடுமையாக பாதிப்புக்குள்ளான இலங்கை மக்கள் – தமிழர்களும் சரி, சிங்களர்களும் சரி – போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஆதரவாக இருந்தனர். அவர்களைப் போலவே இலங்கையின் வணிக சமூகமும் அவர்களின் வெளிநாட்டுக் கூட்டாளிகளும் கூட இதனை வரவேற்றனர்.
போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு சில உடனடிப் பலன்கள் கிடைத்தன. ஒப்பந்தத்தினால் இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே ஆறு சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்த வாய்ப்பு ஏற்பட்டது. ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஒருவர் மீது ஒருவர் கொண்ட நம்பிக்கை மீட்டெடுக்கப்பட்டது. அனைத்து சமூகத்தினரும் ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொண்டவர்களாக வாழவும், இனங்களுக்கு இடையே உறவைத் தொடங்கவும் புதிய அரசியல் சமூக வெளிகள் திறந்து விடப்பட்டன. யாழ்ப்பாண தீபகற்பத்திற்கான ஒரே தரை வழிப் பாதையான ஏ-9 பாதையைத் திறப்பதன் மூலம் வடக்கையும் தெற்கையும் மீண்டும் இணைக்க ஒப்பந்தம் உதவியது.
போர் நிறுத்தத்தின் வரலாற்று முக்கியத்துவத்தைக் கடந்து, அதன் பலன்கள் குறைந்த காலமே நீலைத்தன. போர் நிறுத்த ஒப்பந்தம் சிறிது சிறிதாக செயலற்றுப் போனது. ஆறு சுற்றுப் பேச்சுவார்த்தைகள் ஒரு கணிசமான வெற்றியை ஈடியிருந்தபோதும், ஒட்டுமொத்த முக்கியத்துவம் தேயத் தொடங்கியது. 2005ன் பிற்பகுதியில் ஆங்காங்கே தொடங்கிய மோதல்கள் சூலை 2006க்குப் பிறகு பெரிதாயின. கடும் இராணுவ நடவடிக்கைகளின் மூலம் இலங்கை அரசு விடுதலைப் புலிகளை, கிழக்கு மாகாணத்திலிருந்து முற்றிலுமாக வெளியேற்றியது. பின்னர் அது தனது நடவடிக்கைகளை வடக்கு நோக்கி நகர்த்தியது.
ஒப்பந்தம் கையெழுத்தாகி ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு, 2007ல் பெரும் உயிர்ச் சேதங்கள், மனித உரிமை மீறல்கள், பெருமளவிலான இடப்பெயர்வுகள் என அந்தச் சூழல் – அறிவிக்கப்படாத போர் என்றே வர்ணிக்கப்பட்டது. கிழக்குப் பகுதியில் தங்கள் தாக்குதல்களை முடித்த பிறகு, “கெரில்லாப் படைகள் நிர்வகிக்கும் பகுதிகளை” மீட்க, வடக்குப் பகுதியை நோக்கித் தனது படைகள் நகரும் என இலங்கை அரசு அறிவித்தது. சனவரி 2, 2009 அன்று போர் நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து தான் விலகிக் கொள்வதாக இலங்கை அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இரண்டு தரப்பினரும் ஒப்பந்தத்தை மீறியதாக ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டிக் கொண்டனர். இதனால் ஒருவர் மீது ஒருவர் மீண்டும் நம்பிக்கையை ஏற்படுத்தும் சூழல் வலுவற்றுப் போனது.
போர் நிறுத்த ஒப்பந்தத்தின் தோல்விக்குப் பல காரணங்கள் உள்ளன. தொடர்ந்து போர் நிறுத்தத்தை மீறியதாக விடுதலைப் புலிகள் மீது இலங்கை அரசு குற்றம் சாட்டிய அதே வேளையில், நம்பிக்கையை குலைக்கும் வகையில் இலங்கை அரசும் அதன் படைகளும் நடந்து கொண்டதாகவும், போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழ்ந்த தமிழ் மக்களுக்கு சமாதானத்தின் பங்கை அளிக்காமல் தட்டிக் கழிப்பதாகவும் இலங்கை அரசை விடுதலைப்புலிகள் குற்றம் சாட்டினர். கூடுதலாக, எதிர் தரப்பின் முக்கிய தனி நபர்களை குறி வைத்துக் கொன்றதாக – இருவரும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டனர்.
போரினால் சிதைக்கப்பட்ட பகுதிகளில் புனரமைப்புக் பணிகளையும் மறுகட்டமைப்புப் பணிகளையும் தொடங்குவதற்கு இலங்கை அரசு தாமதப்படுத்தியதும், மக்களின் சமூக, பொருளாதார நலன்களைப் பேணத் தவறியதும் நம்பிக்கையை மேலும் குலைக்க உதவியது. முக்கியமாக, இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட ,சுனாமி,க்குப் பிறகு, தமிழர்கள் தாங்கள் ஒடுக்கப்பட்டதாகவும், தனிமைப்படுத்தப்பட்டதாகவும், பாகுபடுத்தப்பட்டதாகவும் உணர்ந்தனர். அதனால் மேலும் அவநம்பிக்கையே ஏற்பட்டது.
தமிழ் மக்களின் உரிமைகளுக்கு உத்தரவாதம் அளித்து, அவர்களின் வாழ்நிலையை மேம்படுத்த கூடிய எந்த நேர்மறையான முன்னேற்றத்தையும் தடுக்க, தீவிர சிங்கள தேசியவாதிகள் தங்களால் ஆன அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டனர். போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்ட காலத்திலிருந்தே அவர்களை அதனை எதிர்த்து வந்திருக்கின்றனர். அன்றிலிருந்து அதை முறிக்கவும் வலுவுற்றதாக ஆக்கவும் தங்களால் ஆன அனைத்தையும் செய்து வந்திருக்கின்றனர்.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை வலுபடுத்த – ஆக்கப்பூர்வமான முறையில் தலையிட்டோ, சமநிலையில் கையாளவோ, அடைந்துவிட்ட பலன்களை முன்னிறுத்தவோ பன்னாட்டுச் செயல்பாட்டாளர்கள் தவறிவிட்டதாக சுட்டிக்காட்டப்படுகிறது. குறிப்பாக, அமெரிக்காவும், பிரிட்டனும் பிறரும் சொல்லாலும், செயலாலும் வன்முறையை முற்றிலுமாக கைவிடவேண்டும் என விடுதலைப் புலிகளை தொடர்ந்து வலியுறுத்தியதன் மூலம் அவர்களை வலுவிழக்கச் செய்யவும், சமாதானத்தின் பால் அவர்களைக் கொண்ட அர்ப்பணிப்பைத் தகர்க்கவும் முயன்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டனர். போர் தொடங்கும் முன்பே ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகள் மீது தடை விதித்தது பெரும் தவறாகப் பார்க்கப்பட்டது. அந்தச் செயலானது சமாதான நடவடிக்கைகள் தொடர்வதற்கு தேவையாப விடுதலைப் புலிகளின் சமநிலையைக் குறைத்தது.
மேலும், வாசிங்டனில் நடைப்பெற்ற பேச்சுவார்த்தைகளில் அவர்கள் இணைக்கப்படாததன் காரணமாக, புலிகள் நேரடியான பேச்சுவார்த்தைகளிலிருந்து விலக நேர்ந்ததாக கூறப்படுகின்றது. அதோடு, அரசாங்க கருவூலத்தைத் தவிர வேறு எந்த ஒருங்கிணைந்த நிதியத்திற்கும் பணம் அனுப்ப முடியாது என வலியுறுத்துவதன் மூலம் சுனாமியால் பாதிக்கப்பட்ட தமிழ்ப் பகுதிகளில், புனரமைப்பு மற்றும் மறு கட்டமைப்புப் பணிகளை இணைந்து மேற்கொள்ள, ஒருங்கிணைந்த முறையாக உருவாக்கப்பட்ட ‘சுனாமிக்குப்’ பிறகான நடவடிக்கைகளை – மேலாண்மை’ கட்டமைப்பை அமெரிக்கா வலுவிழக்கச் செய்தது. இலங்கை அரசு இலங்கையில் விடுதலைப்புலிகளை தடை செய்யாத நிலையில், ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகள் இயக்கத்தை பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலில் இணைத்ததன் மூலம் 2006ல் மேலும் ஒரு பின்னடைவு ஏற்பட்டது.
போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறையில் இருந்த ஆறு ஆண்டு காலம் முழுவதும் போர் நிறுத்தத்தைக் கண்காணிக்க அமைக்கப்பட்ட சுதந்திரமான, சார்பற்ற அமைப்பான போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு, ஒப்பந்தத்தை மீறியதாக இரு தரப்பினரையும் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வந்தது. சனவரி 2008ல் இலங்கை அரசு தன்னிச்சையாக ஒப்பந்தத்திலிருந்து விலகிக் கொண்டதன் காரணமாக, தனது நடவடிக்கைகளை அது நிறுத்திக் கொள்ளும் வரையில் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு, சிக்கல் நிலவிய பகுதிகளில் கண்காணிப்பைத் தொடர்ந்தது. போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவிற்கு இரண்டு முக்கிய நோக்கங்கள் இருந்தன. ஒன்று, போர் நிறுத்த ஒப்பந்தத்தை நடைமுறைபடுத்துவதில் இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் துணை நிற்பது. இரண்டாவதாக, ஒப்பந்த மீறல்களைக் கண்காணித்து, அதனை விசாரித்து அறிக்கை அளிப்பது. போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதற்குப் பிறகான காலத்தில், “குறிப்பிடத்தகுந்த மற்றும் கவனிக்கத்தக்க வகையில் வன்முறை குறைந்திருந்தது” எனப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு குறிப்பிடுகிறது.
சில சிறிய பின்னடைவுகளைத் தவிர்த்தும், போர் நிறுத்த ஒப்பந்தத்தின் தொடக்க காலத்தில் மோதல்கள் குறைந்ததும், நேரடிப் பேச்சுவார்த்தைகளில் முக்கிய முடிவுகள், முன்னேற்றங்கள் கண்டதுமாக போர் நிறுத்த ஒப்பந்தம் முன்னேற்றப் பாதையிலேயே சென்றது. இருப்பினும், இந்த வெற்றியானது இரு தரப்பினரின் வலு சம நிலையைப் பொருத்திருந்தது. அது தகர்க்கப்பட்ட போது, அதில்ம் குறிப்பாக வாசிங்டனில் நடந்தவற்றிற்குப் பிறகு, போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறைப்படுத்துவதில் பின்னடைவு ஏற்படத் தொடங்கியது. அதன் விளைவாக, புதிய மோதல்கள் நிகழ்ந்தன. அவை வளர்ந்து ஒரு முழு போராக மாறியது. இலங்கையை மீண்டும் ஒரு கொலைக் களமாக மாற்றிவிட்டது.
- நிசாந்தன்இளையநிலா
- பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010
போரின் இறுதி வாரங்களில் நடைபெற்ற அட்டூழியங்கள்
இந்த உள்நாட்டுப் போர் ‘சாட்சிகளற்ற போர்’ என்பது, பலமுறை தனது பணிகளின் போக்கில் இத்தீர்ப்பாயத்திற்கு நினைவூட்டப்பட்டது. ஏனெனில், இலங்கை அரசு எவ்வித தேசிய, பன்னாட்டு ஊடகங்களையும் போர்ப் பகுதிகளில் அனுமதிக்கவில்லை.
தீர்ப்பாயத்தின் அறிக்கையின் இந்தப் பகுதி, போர் நிறுத்த ஒப்பந்தம் முறிந்ததன் காரணமாக ஏற்பட்ட கொடுமையான விளைவுகளையும். குறிப்பாக விடுதலைப் புலிகள் படையினர் மற்றும் அவர்களோடு தொடர்புடைய பொது மக்கள் மீது இலங்கை அரசு மேற்கொண்ட இராணுவ மற்றும் பிற நடவடிக்கைகள் மீதும் கவனம் செலுத்துகிறது.
பொதுவான பார்வையாளர்கள் முன் பல தொண்டு நிறுவனங்கள், தற்பொழுது இலங்கையில் உள்ள ‘உள்நாட்டுப் போரின்’ நிலை குறித்து நிபுணர்கள் அளித்த பல அறிக்கைகளைத் தீர்ப்பாயம் கேட்டது. பெரும் எண்ணிக்கையிலான பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள், ஊடகவியாலாளர்கள் மற்றும் புலம் பெயர்ந்த தமிழர்களின் வாக்குமூலங்களை அவர்களின் பாதுகாப்பை மனதில் கொண்டு, அவர்கள் அடையாளத்தை மறைக்க ’உள்ளக விசாரணை’ முறையில் தீர்ப்பாயம் விசாரித்தது.
இந்த உள்நாட்டுப் போர் ‘சாட்சிகளற்ற போர்’ என்பது, பல முறை தனது பணிகளின் போக்கில் இத்தீர்ப்பாயத்திற்கு நினைவூட்டப்பட்டது. ஏனெனில், இலங்கை அரசு எவ்வித தேசிய, பன்னாட்டு ஊடகங்களையும் போர்ப் பகுதிகளில் அனுமதிக்கவில்லை. உண்மையில், தொடக்க காலத்தில் பலியானவர்கள், பெரும்பாலும் அடையாளம் தெரியாத நபர்களால் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களே! விமர்சன கருத்துகளை ஊமையாக்க நினைத்த இலங்கை அரசின் திட்டங்களுக்கு ஏற்ப நடைபெற்றதாகவே இவை இருந்தன. பெரும்பாலான நிபுணர்கள் மற்றும் சாட்சிகளின் கருத்தின்படி, இது ஓர் உள்நாட்டுப் போர். இன அழிப்பைச் செயல்படுத்தும் ஒரு நடவடிக்கை. சொல்லப் போனால் இனப்படுகொலை என்றே கூறலாம். இதை ஊடகங்களிடம் பகிர்ந்துகொள்ள இலங்கை அரசு தயாராக இல்லை. மாறாக, கொள்கைகள் குறித்தும், போர், எண்ணிக்கைகள் மற்றும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் உள்ள மக்களின் நலன் குறித்தும் தவறான தகவல்களைக் கொழும்பு பரப்பியது.
இந்த தவறான தகவல்கள், இராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டு, கனரக ஆயுதத் தாக்குதல்கள் மற்றும் வான்வழித் தாக்குதல்களுக்கு ஆளாகும் நிலையில் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் உள்ள மக்கள் தொகையைக் குறையாகவே கணக்கிட்டது. புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் மிகவும் சுருங்கிய நிலையில் இறுதியாக நடைபெற்ற பாரிய இடப்பெயர்வு தொடங்கிய போதுதான், அவ்வாறு இடம் பெயர்ந்த மக்களை எண்ணியபோதுதான், அரசு தவறான தகவல் கொடுத்து, உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ஊடகங்களுக்குத் தெரிய வந்தது.
இராணுவம் மேற்கொண்ட அட்டூழியங்கள் பொது மக்களோடு தொடர்புடையவைகாவெ இருந்தன. போர் விமானங்கள் மூலம் கொத்துக் குண்டுகள் வீசப்பட்டதற்குச் சான்றுகள் உள்ளன. சர்வதேச சட்டங்களுக்கு முரணாக வெள்ளைப் பாஸ்பரஸ் பயன்படுத்தப்பட்டதாக சில சாட்சிகள் சாட்சியம் அளித்துள்ளனர். காயம்பட்ட பொதுமக்களின் உடல்களில் தீக்காயங்களை பல சாட்சிகள் கண்டுள்ளனர். பிறர், ‘நேபாம்’ போடப்பட்டதன் அறிகுறிகள் வெளிப்படையாக இருந்ததாக நம்புகின்றனர். வேறு பல எரியும் தன்மையுள்ள பொருட்களுக்கான ஆதாரங்கள் இருந்ததை, இம்மாதிரியானவைகளால் காயம்பட்ட நூற்றுக்கணக்கான தமிழ் மக்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். நூற்றுக்கணக்கான உயிரற்ற உடல்கள் காணப்பட்டதை பல சாட்சிகள் உரைத்தனர்.
இதன்மூலம் காயம்பட்ட பலரோடு, பொது மக்களின் சாவு எண்ணிக்கை மிக அதிகமாக இருந்திருக்கிறது. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் குறைந்த நிலையில் மனித நலன் சார்ந்த பொதுக் கட்டமைப்புகள் அழிக்கப்பட்டது சாதாரண நிகழ்வாக இருந்தது. குறிவைக்கப்பட்டவர்களில் பெண்களும் குழந்தைகளும் இருந்தனர்.
மருத்துவமனைகள், பள்ளிகள் போன்ற பொதுக் கட்டமைப்புகள் உள்ளிட்ட பொதுமக்கள் வாழ்விடங்களில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இராணுவம் நடத்திய தொடர்ச்சியான எறிகணைத் தாக்குதலானது, யெனிவா ஒப்பந்த மீறலாகும். குடிநீர்ப் பற்றாக்குறை, அடிப்படை மருத்துவ வசதிகள் இன்மை, தொடர்ந்து கல்வி வசதிகள் கிடைக்காத தன்மை ஆகியவற்றால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அவர்களின் அனைத்து அடிப்படை மனித உரிமைகளும் பறிக்கப்பட்டன. மேலும், இச்சூழலில், பொது மக்களின் சாவு எண்ணிக்கையும் மிக அதிகமாக இருந்தது. ஐக்கிய நாடுகள் அவையின் உள் ஆவணங்களின் படி, ஏப்ரல் 2009 வரை, வான்வழித் தாக்குதல் மற்றும் கனரக ஆயுதங்களின் பயன்பாடு காரணமாக, ஒரு நாளைக்கு 116 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அதோடு போரின் இறுதி வாரங்களில் மட்டும் 20 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டதாக பிரித்தானிய மற்றும் பிரெஞ்சு ஊடகங்கள் தெரிவித்தன.
சட்டவிரோதமான ஆயுதங்களைப் பயன்படுத்தியோ, பயன்படுத்தாமலோ, தமிழ் மக்களை அழித்தொழிக்க முயல்வது என்பதே ஒரு வகையான போர்க் குற்றமாகும். ஆயுத மற்றும் அரசியல் எதிர்ப்புகளை அடக்குவதன் மூலம் இலங்கை அரசு தமிழ் மக்களை இனப்படுகொலை செய்வதையே நோக்கமாக கொண்டிருந்ததா என்று கேள்வி எழுகிறது. நிபுணர்கள் மற்றும் நேரடி சாட்சிகள் மூலம் இராணுவம் முற்றிலும் பொது மக்களின் வாழ்விடங்களாக இருந்த பகுதிகளான – மருத்துவமனைகள், தப்பிச் செல்லும் இடம் பெயரும் மக்கள் மற்றும் நிறைய கிராமங்கள் போன்றவற்றையே தாக்கியதாக உறுதியாகத் தெரிகிறது. மேலும், தாமாக முன்வந்து சரணடைந்த தமிழ் மக்கள் மற்றும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கைதிகள் ஆகியோர் இராணுவத்தால் கொலை செய்யப்பட்டதற்கு போதுமான ஆதாரம் உள்ளது. இது இன அழிப்புக் குற்றச்சாட்டிற்கும் சர்வதேச சட்டங்களை மீறியதான குற்றச்சாட்டிற்கும் பெரிதும் சான்றுகளாக உள்ளன.
எந்த ஒரு முடிவுக்கும் வரும் முன்னர் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட பிற அடக்குமுறைகள் மற்றும் வன்கொடுமைகள் குறித்தும் ஆராய வேண்டும். இடம் பெயர் ‘முகாம்கள்’ அல்லது ‘தடுப்பு முகாம்கள்’(வாக்குமூலங்களில் குறிப்பிட்டுள்ளபடி) பற்றிய சாட்சிகளின் வாக்குமூலங்கள் கவனத்திற்குரியவை. தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்கள் தங்கள் சொந்த வீடுகளுக்குத் திரும்பும் வரையிலோ, மறு குடியமர்த்தப்படும் வரையிலோ தங்குவதற்கான இடைத்தங்கல் முகாம்கள் என்று அரசாங்கத்தால் வர்ணிக்கப்படும் இம்முகாம்கள், நலன்புரி கிராமங்களாகவே அரசால் ஒதுக்கப்பட்டுள்ளன. அப்படி 15 முகாம்கள் ஒதுக்கப்பட்டன. அந்த முகாம்களில், யெனிவா ஒப்பந்தமும் மனித உரிமைக்கான அனைத்துலக அறிக்கையும் தொடர்ந்து மீறப்படுகின்றன.
அந்த முகாம்களுக்குள் நடைபெற்ற பல வேதனையான நிகழ்வுகள், தீர்ப்பாயத்தின் உறுப்பினர்களிடம் புகார் செய்யப்பட்டன. ஒருவருக்கு ஒதுக்கப்படும் வாழ்விடம் மிகச் சிறியதாக இருந்தது. கூரை தகரத்தால் போடப்பட்டிருந்தது. இதனால், வெயில் காலங்களில் வெப்பத்தினால் உடல் நலம் பாதிக்கபட்டு, சரும நோய்கள் ஏற்படுகின்றன. பலர், குறிப்பாக குழந்தைகள், பெண்கள் மற்றும் வயதானவர்கள் காலரா மற்றும் சத்துக் குறைவினால் மரணமடைந்திருக்கின்றனர். நீர் வழங்கல் ஒரு முக்கியப் பிரச்சனையாக இருந்தது. ஒரு குடும்பத்தின் அனைத்துத் தேவைகளுக்கும் ஒரு நாளைக்கு 5 லிட்டர் நீர் மட்டுமே வழங்கப்பட்டது. இது போதாதது மட்டுமல்ல; சுகாதார சீர்கேட்டிற்கும் வழி வகுத்தது.
அடிப்படை சுகாதாரம், கழிவறைப் பயன்பாடு மற்றும் துணி துவைப்பதற்குத் தேவையான நீர் கிடைக்கவில்லை. அதிலும் பெரும்பாலனவர்களுக்கு உடுத்தியிருந்த உடை மட்டுமே இருந்தது. குப்பைகள் அந்தந்த இடங்களிலேயே கிடந்தன. கழிவுத் தொட்டிகள் சிமெண்ட்டால் கட்டப்படாததால் அடிக்கடி உடைந்து, கழிவுநீர் வெள்ளமாக வெளியேறி, சில சமயங்களில் சில குழந்தைகள் அவற்றில் மூழ்கி இறக்கும் அளவிற்கு இருக்கிறது. நிறையக் குழந்தைகள் பெற்றோர் இருவரையும் இழந்து ஆதரவற்று இருக்கின்றனர்; அல்லது பெற்றோரில் ஒருவரின் ஆதரவில் மட்டுமே உள்ளனர். இதனால் முகாம்களில் நிலவும் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கும் ஆபத்துகளுக்கும் ஆளாக நேர்கிறது. ஏற்றுக்கொள்ள முடியாத மற்றொரு அரசுக் கொள்கை என்னவெனில், தமிழ் மக்களைக் கொடுமைக்கு உள்ளாக்கி அவர்களைப் பணிய வைக்கும் ஆயுதமாக உணவு வழங்கலை நிறுத்தி வைத்தது. உணவு வழங்கலைத் தடை செய்தது. மற்றும் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருந்த மக்களின் எண்ணிகையைக் குறைத்து மதிப்பிட்டது ஆகியவை – ஆபத்தான உணவுப் பற்றாக்குறைக்கு வழிகோலின. மேலும் கூடுதலாக, தமிழ்ப் பகுதிகளுக்கு மருந்து வழங்கலைத் தடை செய்தது ஏற்றுக் கொள்ளப்பட முடியாததும் மனித உரிமைச் சட்டங்களுக்கு எதிரானதும் ஆகும்.
அழிக்கப்பட்ட கிராமங்களிலும், ‘நலன்புரி கிராமங்களிலும்’ அரசும் இராணுவமும் பெண்கள் மீது நடத்திய பாலியல் வன்கொடுமைகளும், வல்லுறவுகளும் போர்க் காலம் முழுவதிலும் அரசபடையால் தொடர்ந்து நடந்தப்பட்ட மற்றுமொரு பாரிய கொடுமையாகும். மானுடத்திற்கு எதிரான குற்றமாக ‘ரோம்’ சட்டத்தில் குறிக்கப்படும் இது, கருக்கலைப்பு, குடும்பப் பெருமைக்கு இழுக்கு, அவமானம் மற்றும் மன உளைச்சல்களுடன் வாழ முடியாமல் பாதிக்கப்பட்ட பெண்கள் தற்கொலை செய்து கொள்ளுதல் போன்ற மேலும் பல துயரங்களுக்கு வித்திட்டது. இப்படிக் குறிவைத்து நடத்தப்படும் கொடுமைகளுக்கு, போர்ப் பகுதிக்கு வெளியில் வாழும் தமிழர்களும் பலியாயினர். பெரும் எண்ணிக்கையில் இருப்பிடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டமை தவிர, கடத்தல், படுகொலை, முன்னறிவிப்பற்ற கைதுகள், தடுத்து வைத்தல், பாலியல் வன்கொடுமைகள் மற்றும் துன்புறுத்துதல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட அச்சுறுத்தல் பிரச்சாரமும் நடந்தது.
மேலே உள்ள பகுதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள செய்திகளை மனித உரிமைக் கண்காணிப்பகம் (28.7.2009 மற்றும் 24.11.2009), அம்னசுடி இண்டர்நேசனல்(10.8.2009) மற்றும் கொள்கை மாற்றுகளுக்கான மையம் (செப் 2009) ஆகியவற்றின் அறிக்கைகளில் காணலாம்.
தமிழ்த் தலைவர்களை குறிவைத்து படுகொலை செய்தல் மற்றுமொரு கொடுமையாக இருந்தது. அதிலும் இப்படியான படுகொலைகளில், முக்கியமாக, இராணுவத்தின் படுகொலைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்களான யோசப் பரராச்சிங்கம், நடராசா ரவிராசு மற்றும் டி. மகேசுவரன் ஆகியோர் குறிவைத்துக் கொல்லப்பட்டது முக்கியமானது.
விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகள் என அறிவித்த 1979இன் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம், பல்வேறு கொடுமைகளுக்கு வழிவகை செய்த அரசின் கொள்கைகளுள் முக்கியமானதாகும். அது சட்டத்திலும் இராணுவ சட்ட அமைப்பிலும் உள்ள பாதுகாப்புகளைக் குறைத்து, அவற்றைத் தவறாகப் பயன்படுத்த வழி செய்தது.
இறந்தவர்களின் உடல்கள் அவமரியாதை செய்யப்பட்டதும் சாட்சிகள் மூலம் தெரியவருகிறது.
சுருக்கமாக, விடுதலைப்புலிகளின் அச்சுறுத்தலை நீக்கவும், தமிழ் மக்கள் மீது தனது ஆதிக்கத்தை செலுத்தவும், இலங்கை அரசு, உலகளாவிய சட்டங்கள், யெனிவா ஒப்பந்தம் மற்றும் மனித உரிமைப் பிரகடனம் ஆகியவற்றிற்கு எதிரான ஒரு இராணுவ நடவடிக்கையை முன்னெடுத்தது. இதனால் விளைந்த கொடுமைகளான வல்லுறவு, துன்புறுத்தல், படுகொலைகள், ‘காணாமல் போதல்’ மற்றும் உணவு, நீர் மற்றும் மருந்து வழங்கலை தடை செய்தமை ஆகியவை தமிழ்ச் சமூகத்தின் இருப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்தன. கனரக ஆயுதங்கள் மற்றும் சட்டவிரோத ஆயுதங்களான வெள்ளை பாஸ்பரஸ் மற்றும் கொத்து குண்டுகள் ஆகியவற்றைப் பயன்படுத்தியதானது, உலகளாவிய சட்டநிலைகளுக்கு அப்பால் இலங்கை அரசை நிறுத்தியுள்ளன. வன்கொடுமைகள், இன அழிப்பு, சொல்லப்போனால் இனப்படுகொலை ஆகிய குற்றங்கள், கொழும்பில் திட்டமிடப்பட்டன என்பது வியப்பளிக்கவில்லை. போர்க் குற்றங்களும், மானுடத்திற்கு எதிரான குற்றங்களும் நடந்துள்ளன என்பது தெளிவாகத் தெரிகிறது.
- நிசாந்தன்இளையநிலா
- பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010
ஆவணங்களின் திரனாய்வு
’பயங்கரவாதிகள்’ அல்லது வேறு ஏதேனும் தீவிர பெயரில் முத்திரை குத்தப்பட்ட மக்கள், ஒட்டுமொத்த மனித இனத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்டு, அதனால் மனித உரிமைச் சட்டத்தின்படி உறுதி செய்யப்பட்ட எந்த பாதுகாப்பையும் அனுபவிக்க முடியாது. இந்த கருத்தானது, மனித உரிமைச் சட்டங்களின் இருப்பையே மறுப்பதாகும்.
பல்வேறு தொண்டு நிறுவனங்கள், பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலங்கள், நெரடிச் சாட்சிகளின் வாக்குமூலங்கள், ஊடக அறிக்கைகள் என இத்தீர்ப்பாயத்தின் முன்வைக்கப்பட்ட மெய்நிலைகளின் அடிப்படையில், கடந்த 2002 முதல் (போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதிலிருந்து) இன்றுவரை, இலங்கை அரசால் மூன்று வகையான மனித உரிமை மீறல்கள் செய்யப்பட்டுள்ளன என நாங்கள் வரையறுக்கிறோம்.
· தமிழ் மக்கள் மீது குறிவைத்து நடத்தப்பட்ட வலுக்கட்டாயமாக ‘கானாமல் அடித்தல்’
· போர் மீண்டும் தொடங்கிய பிறகு நடந்த குற்றங்கள்(2006-2009), குறிப்பாக போரின் இறுதி மாதங்களில்
· இராணுவ இலக்குகள் அல்லாத மக்களின் பொதுக் கட்டமைப்புகளான மருத்துவமனைகள், பள்ளிகள் ஆகியவற்றின் மீது குண்டுவீச்சு நடத்தியது
· அரசு அறிவித்த ‘பாதுகாப்பு வலையங்கள்’ மற்றும் ‘தாக்குதலற்ற பகுதிகள்’ மீது குண்டுவீச்சு நடத்தியது
· போர்ப் பகுதிகளில் உணவு, நீர் மற்றும் மருத்துவ வசதிகளைத் தடுத்தது
· கனரக ஆயுதங்கள், தடை செய்யப்பட்ட ஆயுதங்கள் மற்றும் வான்வழித் தாக்குதல்களைப் பயன்படுத்தியது
· உணவு மற்றும் மருந்தைப் போர் ஆயுதங்களாகப் பயன்படுத்தியது
· கைது செய்யப்பட்ட அல்லது சரணடைந்த விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள், பொருப்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்களை மோசமாக நடத்தியது, துன்புறுத்தியது மற்றும் கொலை செய்தது
· துன்புறுத்துதல்
· பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் மற்றும் வல்லுறவு
· தனி நபர்கள் மற்றும் குடும்பங்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றியது
· இறந்து போனவர்களின் உடல்களை சேதப்படுத்தியது
· போரின்போதும் அதற்குப் பிறகும் இடம்பெயர்ந்தோர் முகாம்களில் நடந்த மனித உரிமை மீறல்கள்
· தமிழ் மக்கள் மற்றும் விடுதலைப் புலிகள் இயக்க ஆதரவாளர்களைச் சுட்டுக் கொலை செய்தது
· வலுக்கட்டயமாக காணமல் அடித்தது
· வல்லுறவு
· சத்துக்குறைவு
· மருத்துவ உதவிகள் பற்றாக்குறை.
போர்க் குற்றங்கள்:
மேலே இரண்டாவதாக குறிப்பிடப்பட்டுள்ள செயல்களானது – இலங்கை அரசாங்கம், அதன் பாதுகாப்புப் படைகள், அதனுடன் இணைந்த துணை இராணுவப் படைகள் ஆகியவை யெனிவா ஒப்பந்தம் மற்றும் ரோம் சட்டத்தின் பிரிவு 8ன் கீழ் வரையறுக்கப்பட்டுள்ள ‘போர்க் குற்றங்கள்’ புரிந்துள்ளதை தெளிவாக்குகின்றன. ‘ரோம்’ சட்டத்தின் பிரிவு 8 கீழ் வருமாறு கூறுகிறது :
இந்தப் போரானது நாடுகளுக்கு இடையிலானது என்றால், கீழ்க்காணும் குற்றச்சாட்டுகள் பொருந்தும் :
(b) நிறுவப்பட்ட உலகளாவிய சட்ட அமைப்பின்படி நாடுகளுக்கு இடையிலான போர்களில் பின்பற்றப்பட வேண்டிய சட்டங்கள் மற்றும் மரபுகளை மீறுவது என்பது, கீழ்க்காணும் செயல்களை உள்ளடக்கும் :
· பொதுமக்கள் மீதோ அல்லது மோதலில் ஈடுபடாத தனி நபர்கள் மீதோ திட்டமிட்டு நடத்தப்படும் நேரடித் தாக்குதல்கள்.
· இராணுவ இலக்கில்லாத பொதுக் கட்டமைப்புகள் மீது திட்டமிட்டுத் தாக்குதல் நடத்துவது.
· தெரிந்தே திட்டமிட்டு ஒரு தாக்குதலை நடத்தி, அதன் மூலம் அதனால் கிடைக்கக்கூடிய இராணுவ இலாபத்தை விட அதிகமாக உயிர்கள் கொல்லப்படுவது, பொது மக்களுக்கு காயம் ஏற்படுத்துவது, பொதுக் கட்டமைப்புகள், பொது மக்களின் உடைமைகள் ஆகியவற்றைப் பரவலாகச் சேதப்படுத்துவது, இயற்கைச் சூழலுக்கு நீண்ட கால மற்றும் பாரிய பாதிப்பினை ஏற்படுத்துவது ஆகியவை.
· ஆயுதங்களைக் கைவிட்டு விட்ட அல்லது ஆயுதங்கள் இல்லாத அல்லது தாமாக முன்வந்து சரண்டைந்த ஒருவரைக் கொல்வது அல்லது காயப்படுத்துவது.
· மதம், கல்வி, கலை, அறிவியல் அல்லது தொண்டுக்காக அர்ப்பணிக்கப்பட்ட கட்டிடங்கள், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கட்டிடங்கள், மருத்துவமனைகள் அல்லது இராணுவ இலக்காக அல்லாத காயம்பட்டவர்களோ, நோய்வாய்பட்டவர்களோ கூடியிருக்கக்கூடிய இடங்கள் மீது நடத்தப்படும் திட்டமிட்ட தாக்குதல்கள்
· சுயமரியாதைக்கு களங்கம் ஏற்படுத்துவது போன்ற செயல்கள், குறிப்பாக அவமானப்படுத்துவது அல்லது மரியாதைக் குறைவாக நடத்துவது.
· வல்லுறவு, பாலியல் அடிமைத்தனம், வலுக்கட்டாய விபச்சாரம், பிரிவு 7 பத்தி 2(F)இல் குறிப்பிடப்பட்டுள்ளபடியான வலுக்கட்டாய கர்ப்பம், வலுக்கட்டாய கருத்தடை அல்லது பிற வகையான பாலியல் வன்கொடுமைகள் ஆகியவையும் யெனிவா ஒப்பந்தத்திற்கு எதிரானவை ஆகும்.
· யெனிவா ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிவாரணப் பொருட்களை மக்களுக்கு கிடைக்கவிடாமல் செய்வது உட்பட, பொதுமக்கள் உயிர் வாழ்வதற்குத் தேவையான பொருட்களைத் தடுப்பதன் மூலம் பட்டினியைப் போரில் ஓர் ஆயுதமாகப் பயன்படுத்துவது.
மோதல் உள்நாட்டு தன்மை உடையதாயின் கீழ்க்காணும் குற்றச்சாட்டுகள் பொருந்தும் :
(C) உலக அளவில் அல்லாத ஆயுத மோதலெனில், 12 ஆகஸ்ட் 1949 நாளிட்ட 4 யெனிவா ஒப்பந்தங்களில் பொதுவாக உள்ள பிரிவு 3ஐ மீறுவதானது, மோதலில் நேரடிப் பங்குகொள்ளாதவர்கள், அவர்கள் ஆயுதப் படையின் பகுதியாக இருந்தாலும், ஆயுதத்தைக் கைவிட்டவர்கள் அல்லது நோய், காயம் அல்லது தடுத்து வைப்பு அல்லது பிற காரணங்களுக்காக போரிலிருந்து விலக்கி வைக்கப்பட்டவர்களுக்கு எதிராகக் கீழ்க்காணும் செயல்களை செய்வதாகும்.
· உயிருக்கும் மனிதர்களுக்கும் எதிரான வன்முறை, குறிப்பாக எல்லா வகையிலான கொலைகள், சிதைத்தல், கொடூரமாக நடத்துதல் மற்றும் துன்புறுத்தல்.
· சுயமரியாதைக்குக் களங்கம் ஏற்படுத்துவது போன்ற செயல்கள், குறிப்பாக அவமானப்படுத்துதல் அல்லது மரியாதைக் குறைவாக நடத்தல்
· பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்தல்.
· அனைத்துச் சட்டபூர்வமான பாதுகாப்புகளும் வழங்கப்பட்ட நிலையில் நடைமுறையில் உள்ள ஓரு நீதிமன்றத்தால், அளிக்கப்பட்ட ஒரு முன்னோடித் தீர்ப்பு இல்லாத நிலையில் வழங்கப்படும் தண்டனைகள் அல்லது கொலைகள்.
(e) நிறுவப்பட்ட உலகளாவிய சட்ட அமைப்பின்படி, நாடுகளுக்கு இடையில் அல்லாத போர்களில் பின்பற்றப்பட வேண்டிய சட்டங்கள் மற்றும் மரபுகளை மீறுவது என்பது, கீழ்க்காணும் செயல்களை உள்ளடக்கும் :
· பொதுமக்கள் மீதோ அல்லது மோதலில் ஈடுபடாத தனி நபர்கள் மீதோ திட்டமிட்டு நடத்தப்படும் நேரடித் தாக்குதல்கள்
· மதம், கல்வி, கலை, அறிவியல் அல்லது தொண்டுக்காக அர்ப்பணிக்கப்பட்ட கட்டிடங்கள், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கட்டிடங்கள், மருத்துவமனைகள் அல்லாது இராணுவ இலக்காக அல்லாத காயம்பட்டவர்களோ, நோய்வாய்பட்டவர்களோ கூடியிருக்கக்கூடிய இடங்கள் மீது நடத்தப்படும் திட்டமிட்ட தாக்குதல்கள்.

எனவே, இலங்கையில் நடைபெற்ற போரைச் சர்வதேச அளவிலானது என்று கருதினாலும், உள்நாட்டுப் போர் என்று கருதினாலும் இலங்கை அரசு புரிந்துள்ள போர்க் குற்றங்களை நாம் தெளிவாகக் கண்டுள்ளோம்.
மானுடத்திற்கு எதிரான குற்றங்கள்
முதலாவதாகவும் (வலுக்கட்டாயமாக காணாமல் அடித்தல்) மூன்றாவதும் (இடம்பெயர் முகாம்களில் போரின்போதும் அதற்குப் பிறகும் நடைபெற்ற மீறல்கள்) குறிப்பிடப்பட்டுள்ள செயல்களானது, ரோம் சட்டப் பிரிவு 7இல் கொண்டுள்ளபடி தெளிவாக மானுடத்திற்கு எதிரான குற்றங்களாகும். அதிலும் குறிப்பாக கீழ்க்காணும் பிரிவுகளின்படி :
கீழ்க்காணும் ஏதேனும் செயல்கள் ஒரு பரவலான அல்லது திட்டமிட்டத் தாக்குதலின் பகுதியாக, ஒரு குறிப்பிட்ட மக்களின் மீது, தெரிந்தே நடத்தப்படுமாயின் –
· கொலை
· படுகொலை
· வெளியேற்றுதல் அல்லது மக்களை கட்டாயப்படுத்தி இடம் மாற்றுதல்
· உலகளாவிய சட்டங்களில் கூறப்பட்டுள்ள அடிப்படைச் சட்டதிட்டங்களை மீறி சிறை வைத்தல் அல்லது நடமாடத் தடை விதித்தல்
· துன்புறுத்தல்
வல்லுறவு, பாலியல் அடிமைத்தனம், வலுக்கட்டாய விபச்சாரம், பிரிவு 7 பத்தி 2(F)இல் குறிப்பிடப்பட்டுள்ளபடியான வலுக்கட்டாய கர்ப்பம், வலுக்கட்டாய கருத்தடை அல்லது பிற வகையான பாலியல் வன்கொடுமைகள்
· ஒரு குறிப்பிட்ட குழுவினர் மீது அல்லது பத்தி மூன்றில் விளக்கப்பட்டுள்ளபடியான அரசியல், மரபின, இன, பண்பாட்டு, மத, பாலியல் அல்லது அனைத்துலகச் சட்டத்தின்படி அனுமதிக்க முடியாத, உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிற அடிப்படைகளில் உள்ள ஒரு கூட்டத்தினர் மீது நடத்தப்படும் வன்கொடுமைகள்
· வலுக்கட்டாயமாக காணாமல் அடித்தல்
· பெரும் துன்பத்தையோ அல்லது பெரும் உடல் காயத்தையோ உளவியல் அல்லது உடல் ஆரோக்கியத்திற்கு பாதிப்போ ஏற்படுத்தக்கூடிய இதையொத்த பிற மனிதத்தன்மையற்ற செயல்கள்.
இனப்படுகொலை எனும் குற்றத்தைச் செய்திருப்பதற்கான சாத்தியங்கள்
இனப்படுகொலை குற்றச்சாட்டை விசாரிக்க தீர்ப்பாயத்திடம் கோரிக்கை வைக்கப்படவில்லை எனினும், வாக்குமூலங்கள் அளித்த சில நிறுவனங்களும் தனிநபர்களும் இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் மீது இனப்படுகொலை நடந்தது அல்லது நடந்திருக்கலாம் என்பதை அங்கீகரிக்குமாறு கூறினர். போர்க் குற்றம் மற்றும் மானுடத்திற்கு எதிரான குற்றத்துடன் இனப்படுகொலைக் குற்றச்சாட்டையும் இணைக்கும் அளவிலான ஆதாரங்கள் தீர்ப்பாயத்தின் முன் வைக்கப்படவில்லை. சில உண்மைகள் அவை இனப்படுகொலைச் செயல்களாக இருக்கக்கூடும் என்ற அளவில் முழுவதுமாக ஆராயப்பட வேண்டும். அப்படியான உண்மைகளில் கீழ்க்காணுபவையும் அடங்கும் :
· ”ஒரு குழுவினர் தொடர்ந்து வாழ்வதற்கான அடிப்படைகளை” அழிக்க என்று லெம்கின் கூறியது போல (இங்கு தமிழ்க் குழுவினர்) தமிழ்ச் சமூகத்தின் முக்கிய உறுப்பினர்களுக்கு எதிராக (ஊடகவியலாளர்கள், மருத்துவர்கள், அரசியல்வாதிகள்) இலங்கை ஆயுதப்படையினரும், அரசின் ஆதரவோடும் வழிகாட்டுதலோடும் செயல்பட்ட துணை இராணுவக் குழுவினரும் மேற்கொண்ட, தனிநபர்களை வலுக்கட்டாயமாக ‘காணாமல் போக’ச் செய்த முறை.
· இடம்பெயர் முகாம்களில் உள்ள தமிழ் மக்களின் அவல நிலை நீடிப்பது, சுட்டுக்கொல்லப்படுவது தொடர்வது, திட்டமிட்ட வல்லுறவு, வலுக்கட்டாயமாக ‘காணாமல் போகச் செய்தல்’, நாட்டில் தமிழ் மக்கள் அதிகமாக வாழும் இடங்களில் பரவலாக அழிக்கப்பட்ட கட்டமைப்புகள். தமிழ் மக்கள் தொடர்ந்து வாழ்வதற்கான அடிப்படைத் தேவைகளான உணவு, மருந்து போன்றவற்றிற்கு பற்றாக்குறை.
மேலே குறிப்பிடப்பட்டுள்ளவை தற்போதைய நிலை என்றாலும், அவற்றை குற்றச்சாட்டுகளில் இணைக்கப் போதுமான ஆதாரங்கள் எங்களுக்கு கிடைக்கவில்லை. எனினும், இனப்படுகொலை நடந்திருக்கலாம் என்ற நோக்கில் தொடர்ந்த விசாரணையை மேற்கொள்ள வேண்டியதன் முக்கியத்துவத்தைத் தீர்ப்பாயம் ஏற்றுக்கொள்கிறது.
மனித உரிமைச் சட்டங்களின் கீழ் இருக்க எந்த ஒரு மனிதனுக்கும் உள்ள உரிமை
”பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய போர்” என்று சொல்லப்படுகின்ற விடயமானது, இத்தகைய போர்களில் செய்யப்படும் எந்த ஒரு செயலும், மிக ஆபத்தான ஒரு எதிரியை அழிக்கவல்ல சிறந்த வழியாக கருதப்பட்டு அனுமதிக்கப்பட வேண்டும் என்ற கருத்தை முன்வைக்கிறது. இந்த புதிய பாதுகாப்பானது முன் மாதிரியானது, மக்களில், ‘பயங்கரவாதிகள்’ என்று முத்திரைக் குத்தப்பட்டவர்களுக்கு எதிராக நடத்தப்படும் அனைத்துவித மனித உரிமை மீறல்களையும் நியாயப்படுத்துகிறது. ’பயங்கரவாதிகள் எனறு குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் விடுதலைப்புலிகள் இயக்கத்தினர் புரிந்த குற்றங்களை கணக்கில் எடுத்துக் கொண்டாலும்கூட, அவர்களும் மனித உரிமைச் சட்டத்தின் பாதுகாப்பின் கீழ் வருவார்கள் என்பது இத்தீர்ப்பாயத்தின் தீர்ப்பிற்கு அடிப்படையான கருத்தாகும். பாதிக்கப்பட்டவர்களின் எந்த ஒரு குற்றமும், இத்தீர்ப்பாயத்தினால் உறுதி செய்யப்பட்ட எந்த ஒரு போர்க் குற்றத்தையும் அல்லது மானுடத்திற்கு எதிரான குற்றத்தையும் நியாயப்படுத்த முடியாது.
இதனை முக்கியத்துவப்படுத்துவதன் காரணம் என்னவெனில், இந்த புதிய பாதுகாப்பு முன்மாதிரிக்குள், ’பயங்கரவாதிகள்’ அல்லது வேறு ஏதேனும் தீவிர பெயரில் முத்திரை குத்தப்பட்ட மக்கள், ஒட்டுமொத்த மனித இனத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்டு, அதனால் மனித உரிமைச் சட்டத்தின்படி உறுதி செய்யப்பட்ட எந்த பாதுகாப்பையும் அனுபவிக்க முடியாது. இந்த கருத்தானது, மனித உரிமைச் சட்டங்களின் இருப்பையே மறுப்பதாகும்.
‘அமைதிக்கு எதிரான குற்றங்கள்’ செய்யப்பட்டிருக்க வேண்டும் என்ற குற்றச்சாட்டு
தீர்ப்பாயத்திடம் இறுதியாக அளிக்கப்பட்ட குற்றச்சாட்டு – ‘அமைதிக்கு எதிரான குற்றங்கள்’ இலங்கை அரசும் அதனுடன் வேறு சில அந்நிய சக்திகளும் இணைந்து ஒரு வெறுப்புக் கொண்ட போரையே நடத்தின என்று குற்றம் சாட்டப்படுகிறது. நூரெம்பர்க் தீர்ப்பாயத்தில் அமைதிக்கு எதிரான குற்றங்கள் விளக்கப்பட்டுள்ளன :
· வெறுப்பின் மீது கட்டமைக்கப்பட்ட ஒரு போரையோ அல்லது சர்வதேச ஒப்பந்தங்கள், உடன்பாடுகள் அல்லது வாக்குறுதிகள் ஆகியவற்றை மீறிய ஒரு போரையோ நடத்த திட்டமிட்டு, ஆயத்தமாகி, தொடங்கி நடத்துவது
· அப்படியான செயல்களை நடத்தி முடிப்பதற்கான ஒரு பொதுத் திட்டத்திலோ, சதித் திட்டத்திலோ பங்கேற்பது.
இந்தக் குற்றச்சாட்டை ஏற்றுக் கொள்வதில் தீர்ப்பாயத்திற்கு உள்ள சிக்கலானது, தீர்ப்பாயத்தின் முன் இக்குற்றச்சாட்டை உறுதிபடுத்த வைக்கப்பட்ட சாட்சிகளால் மட்டுமல்ல, கூடுதலாகவும் முக்கியமாகவும், இக்குற்றச்சாட்டை மனித உரிமைச் சட்டங்களின் பகுதியாக ஏற்றுக்கொள்வதால் ஏற்படக்கூடிய விளைவுகள்.
அமைதிக்கு எதிரான குற்றம் என்பது, அமைதி நிலவும் சூழலில், இரு தரப்பினரில் ஒரு தரப்பினர் வன்முறையான ஒரு போரைத் தொடங்குவதன் மூலம் இந்த அமைதிச் சூழலை உடைப்பது.
இருப்பினும், மனித இனம் அவலத்தை எதிர்நோக்கியே பெரும்பாலான ஆயுத மோதல்களில் ஒரு குழப்பமான மற்றும் சிக்கலான நோக்கிலிருந்து சூழலை ஆராய முடியும். ஒரு போரில் முதல் முதலில் தாக்குதலைத் தொடங்கியவர் யாரென முடிவுசெய்வது கடினமானது மட்டுமல்ல, ஒரு சார்பானதாகவும் ஆகிவிடுகிறது. ஒடுக்குமுறையானது பல ஆண்டுகள் சேர்ந்து கொண்டே போய் ஓர் இக்கட்டான நிலையில் வினையாற்றும்போது அது ஒரு வன்முறைப் போரின் தொடக்கச் செயலாகிவிடுகிறது. இதுதான் இலங்கையில் பல ஆண்டுகள் நடந்த போரின் நிலையும். எந்தப் பக்கம் நின்று இந்த மோதல் ஆராயப்படுகிறது என்பதைப் பொருத்து, யார் ‘அமைதிக்கு எதிரான குற்றத்தை’ புரிந்தனர் என்பது முடிவாகும். அதனால்தான் இக்குற்றத்தைப் பொருத்த வரையில் தீர்ப்பாயம் குறிப்பான குற்றச்சாட்டுகளை ஏற்கவில்லை.
இருந்தபோதும், கிடைத்த ஆதாரங்கள் மற்றும் வாக்குமூலங்களின் அடிப்படையில் சர்வதேச சமூகத்தின் பொறுப்பை உணரும் அதே வேளையில், தமிழ் மக்கள் மீதான மனித உரிமை மீறல்களைத் தடுக்க, எவ்விதக் காத்திரமான முன்னெடுப்புகளையும் அது மேற்கொள்ளவில்லை என்பதையும், தொடர்ந்து போர்க் குற்றங்கள் மற்றும் மானுடத்திற்கு எதிரான குற்றங்களையும் அது புறந்தள்ளிவிட்டது என்பதையும் உணர்கிறது.
போரின் இறுதிக் காலங்களில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களுக்கு நீதி பெற்றுத்தர வேண்டிய தார்மீக பொறுப்பை நிறைவேற்றாமல் விட்ட ஐக்கிய நாடுகள் அவையின் உறுப்பு நாடுகளுக்கு, இத்தீர்ப்பாயம் அந்த பொறுப்பினை வலியுறுத்துகிறது. தொடர்ந்த வேண்டுகோள்களுக்குப் பிறகும், தமிழர்கள் அனுபவித்த மோசமான சூழல்களுக்குப் பிறகும், சில உறுப்பு நாடுகளின் அழுத்தம் காரணமாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையமும், ஐ.நா.பாதுகாப்பு ஆணையமும் நடந்த கொடுமைகளை விசாரிக்க – ஒரு சுதந்திரமான ஆணையத்தை அமைக்கத் தவறிவிட்டன.
2002 இன் போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஐரோப்பிய ஒன்றியம் வலுவிழக்கச் செய்ததையும் இத்தீர்ப்பாயம் முன்னிறுத்துகிறது. ஓர் அமைதி முயற்சி முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருப்பதையும் அதன் விளைவுகளையும் நன்கு அறிந்த நிலையில் – அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் அழுத்தத்தின் காரணமாக, தமீழீழ விடுதலைப் புலிகளை உள்ளடக்கிய தமிழ்ப் போராட்டக் குழுவினைப் பயங்கரவாதிகள் இயக்கமெனப் பட்டியலிட ஐரோப்பிய ஒன்றியம் 2006ல் முடிவெடுத்தது. இந்த முடிவானது, இலங்கை அரசு போர் நிறுத்த ஒப்பந்தத்தை முறித்து, பாரிய இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதித்தது. அதன் விளைவாகவே, மேற்குறிப்பிட்டுள்ள அனைத்து விதமான மீறல்களும் நடைபெற்றன. அத்தோடு தமிழர்களைக் குறிவைத்து நடத்தபட்ட ஒரு போரில், இலங்கை அரசாங்கம் அதன் ஆயுதப் படைகள் ஆகியவற்றின் நடத்தைகளுக்கு ஓர் அரசியல் அங்கீகாரம் அளிக்கப்பட்டதன் முழுபொறுப்பும் ‘பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய போரை’ நடத்தும் அமெரிக்கா தலைமையிலான நாடுகளையே சாரும் எனத் தீர்ப்பாயம் சுட்டிக்காட்டுகிறது.
அதோடு, இலங்கை அரசிற்கு ஆயுதங்கள் வழங்கியதில் பல நாடுகளுக்கு நேரடிப் பொறுப்பு இருப்பதையும் இத்தீர்ப்பாயம் சுட்டிக்காட்டுகிறது. இதில் சில ஆயுதங்கள் ‘சில மரபு ஆயுதங்கள் குறித்த ஒப்பந்தம்’ போன்ற பல ஒப்பந்தங்களினால் தடை செய்யப்பட்டுள்ளன. அத்தோடு இதில் சில நாடுகள், போர் நிறுத்தக் காலகட்டத்தில் இலங்கை இராணுவ படையினருக்கு பயிற்சியும் அளித்திருக்கின்றன.

பரிந்துரைகள்
பன்னிரெண்டாயிரத்திற்கும் அதிகமான அரசியல் கைதிகளின் பாதுகாப்பையும் கவுரவத்தையும் உறுதி செய்து, உலகளாவிய நடைமுறைகளின்படி, அவர்களை அனைத்துலகச் செஞ்சிலுவைச் சங்கத்தினர் சந்திக்கவும், சட்டபூர்வமாகத் தங்களை அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தவும் அனுமதிக்க வேண்டும். இலங்கைச் சிறைகளில் தற்பொழுது தடுத்து வைக்கப்பட்டுள்ள 12 ஆயிரம் அரசியல் கைதிகள் நேர்மையான மற்றும் வெளிப்படையான விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
இலங்கை அரசுக்கு :
· 2002 போர் நிறுத்த ஒப்பந்தம் முறிந்த பிறகு போரின் இறுதிக் கட்டங்களில் மோதலில் ஈடுபட்ட இரு தரப்பிலும் புரிந்த மானுடத்திற்கு எதிரான குற்றங்களையும், போர்க் குற்றங்களையும் விசாரிக்க, உடனடியாகச் சூழலின் அவசரத்தைக் கருத்தில் கொண்டு, சுதந்திரமான அதிகாரமுடைய ‘உண்மை மற்றும் நீதிக்கான ஆணையம்’ ஒன்றை அமைத்து, போர்க் குற்றங்கள் மற்றும் மானுடத்திற்கு எதிரான குற்றங்களுக்குப் பொறுப்பானவர்களுக்கு தகுந்த தண்டனை விதிப்பதை உறுதி செய்ய வேண்டும்.
· உடனடியாக அவசர நிலையை விலக்கிக் கொள்வதன் மூலமும், 1979இன் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை திரும்பப் பெற்றுக் கொள்வதன் மூலமும் – தமிழ் மக்களின் அடிப்படை சுதந்திரத்தையும் அரசியல் உரிமைகளையும் மீட்டெடுக்க வேண்டும்.
· 12,000-க்கும் அதிகமான அரசியல் கைதிகளின் பாதுகாப்பையும் கவுரவத்தையும் உறுதி செய்து, உலக நடைமுறைகளின்படி, அவர்களை அனைத்துலக செஞ்சுலுவைச் சங்கத்தினர் சந்திக்கவும் சட்டப் பூர்வமாகத் தங்களை அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தவும் அனுமதிக்க வேண்டும்.
· உள்ளூர் மற்றும் பன்னாட்டு ஊடகவியலாளர்கள், மனித உரிமைக்காப்பாளர்கள் ஆகியோரின் பாதுகாப்பு மற்றும் சுதந்திரமாகச் செயல்படும் தன்மையை உறுதிப்படுத்துவதோடு, அவர்களின் சட்டப்பூர்வமான மனித உரிமைகளுக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும்.
· அனைத்து துணை இராணுவக் குழுக்களையும் கலைத்துவிட்டு, தமிழ்ப் பகுதிகளில் இராணுவப் படைகளின் இருப்பைக் குறைக்க வேண்டும்.
· வடகிழக்கின் நிர்வாகம் மற்றும் மேலாண்மையில் தமிழர்களுக்குச் செயல்படத்தக்க சட்டப்பூர்வமான பங்கெடுப்பினை வழங்கக்கூடிய அரசியல் அதிகாரப் பங்கீட்டுத் தீர்வை நடைமுறைப்படுத்தி, சம குடியுரிமைக்கு அவர்களுக்கு இருக்கும் உரிமைகளை ஏற்றுக் கொண்டு, அனைத்து நிலைகளிலும் அவர்கள் பங்கெடுக்கவும் பிரதிநிதித்துவப்படுத்தவும் வாய்ப்பு வழங்கி, மே 2010இல் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும், அமைதியாகவும் நடைபெற உறுதிப்படுத்த வேண்டும்.
· அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தை ஏற்படுத்தக்கூடிய ‘ரோம்’ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு ஏற்றுக் கொள்ள வேண்டும்.
முகாம்களில் உள்ள தற்போதைய நிலைமைகள் மற்றும் உள்நாட்டில் இடம் பெயர்ந்தோரை பொருத்த அளவில் ‘ நிரந்தர மக்கள் தீர்ப்பாயம்’ கீழ்காணுபவற்றை பரிந்துரைக்கிறது :
· அனைத்துலகச் செஞ்சிலுவைச் சங்கம், மனித உரிமைக்காப்பாளர்கள் மற்றும் ஊடகங்கள் போன்ற மனித நேய அமைப்புகள் – சுதந்திரமாகவும் தடையின்றியும் முகாம்களுக்குச் சென்றுவர அனுமதிக்க வேண்டும்.
· முகாம்களை இராணுவத்திடமிருந்து சிவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களின் முழு ஒத்துழைப்புடனும் பன்னாட்டு நிறுவனங்களின் கண்காணிப்பில் சிவில் அதிகாரிகளின் நிர்வாகத்தில், தமிழர்கள் அவர்களின் சொந்த வாழ்விடங்களில் மீள் குடியமர்த்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
· ஐ.நா.வின் “உள்நாட்டில் இடப்பெயர்விற்கான வழிகாட்டு நெறிமுறைகள்” போன்றவற்றில் கூறப்பட்டுள்ள தரத்தில் – பாதுகாப்பாக திரும்பவும், திரும்புபவர்கள், புனர்வாழ்வு மற்றும் மறுகட்டமைப்புச் செயல்களைச் சுதந்திரமான பன்னாட்டு கண்காணிப்பிற்கு அனுமதிக்கவும் வேண்டும்.
· பாதிப்பு குறித்த மதிப்பீடு, மனித ஆவுகள் ஆகியவற்றை மேற்கொண்டு, தமிழ் மக்களுக்கு, ஏற்பட்டுள்ள இழப்புகள் குறித்துச் சரியான மதிப்பீட்டிற்குப் பின் அதற்கான இழப்பீட்டினை நிர்ணயிக்க, ஒரு சரியான நடைமுறையை உருவாக்க வேண்டும்.
· பெண்கள், குழந்தைகள், பிரிந்துவிட்ட குடும்பங்கள், அடிப்படைச் சேவைகள் சென்றடைதல், போருக்குப் பின்னான புனர்வாழ்வு, கல்வி மற்றும் உடல்நலன் மற்றும் அதிர்ச்சிக்குப் பின்னான மன அழுத்தம் மற்றும் மனப்பிறழ்வுக்கான சிகிச்சை உட்பட்ட உளவியல் நலன் ஆகியவற்றைக் குறிப்பாக கவனிக்க வேண்டும்.
உலக சமூகம், நிதியளிக்கும் அரசுகள் மற்றும் ஐக்கிய நாடுகள் அவை ஆகியவற்றிற்கான பரிந்துரைகள் :
மேற்கூறப்பட்டவர்கள் கீழ்காணுபவற்றை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என தீர்ப்பாயம் கோருகிறது :
· மோதலில் ஈடுபட்ட அனைத்துத் தரப்பினரும் புரிந்த மனித உரிமை மீறல்கள், மனித உரிமைச் சட்ட மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்கள் குறித்து விசாரித்து, அதற்குக் காரணமானவர்களை அடையாளம் காண இலங்கையென ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர் ஒருவரை நியமிக்க வேண்டும்.
போர் நிறுத்த ஒப்பந்தச் சீர்குலைவுக்கும் அதனைத் தொடர்ந்த போர்க் குற்றங்கள் மற்றும் மானுடத்திற்கு எதிரான குற்றங்கள் ஆகியவற்றிற்கும் உலக சமூகம் எந்த அளவுக்குப் பொறுப்பானது என்பதையும், போர் நிறுத்தக் காலத்தில் இலங்கை அரசுக்கு அவை ஆயுதங்கள் வழங்கியமை குறித்தும் விசாரிக்க – பொறுப்பான, புகழ் பெற்ற தனி நபர்களைக் கொண்ட ஒரு சுதந்திரமான குழுவை அமைப்பதற்குத் துணை நிற்க வேண்டும்.
தமிழ் மக்களின் மனித உரிமைகளின் நிலை குறித்தும், தமிழர் புனர்வாழ்வு மற்றும் மறுகுடியமர்த்தும் பணிகள் குறித்தும், அடிப்படை உரிமைகள், சுதந்திரம் மற்றும் சட்டம் ஒழுங்கு ஆகியவற்றை மீட்க மேற்கொள்ளப்படும் முயற்சிகள் குறித்தும் சுதந்திரமாகக் கண்காணிக்க, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் செயல் அலுவலகம் ஒன்றை அமைக்க வேண்டும்.
அமைதி மற்றும் போர் நிறுத்த நடவடிக்கைகளையும், கண்ணிவெடி அகற்றல், புனரமைப்பு, தமிழர்களின் விருப்பம் மற்றும் போருக்குப் பின்னான விருப்பத்திற்கேற்ற மறு கட்டமைப்பு ஆகியவற்றிற்கு துணையாக நிதியளிக்கும் நிறுவனங்களின் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க, பன்னாட்டு மற்றும் கூட்டு நடவடிக்கைப் படை ஒன்றை உருவாக்க வேண்டும்.
தமிழ் மக்களின் நிலைத்த வாழ்விற்கும், அவர்களின் அடிப்படைத் தேவைகளுக்குமானவற்றை அளிக்கவும், சிங்களர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையே பண்பாட்டுப் பகிர்வு மற்றும் உரையாடல்களுக்கும் வழிவகுக்கக்கூடிய நம்பிக்கையூட்டும் நிகழ்வுகளுக்கு ஆதரவு அளிக்கவும் வேண்டும்.
சுனாமி நிவாரணம் மற்றும் பேரவலத்துக்கு பின்னான மறு கட்டமைப்புக்காக வழங்கப்பட்ட பன்னாட்டு அவசரகால மற்றும் வளர்ச்சி நிதிகளின் இறுதிப் பயன்பாடு மற்றும் சரியான படியான மறு பகிர்வு குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.
2010 இல் நடக்க இருக்கிற நாடாளுமன்றத் தேர்தலை கண்காணிக்க, ஒரு சிறப்புப் பன்னாட்டுத் தேர்தல் கண்காணிப்புக் குழுவினை நியமிக்க வேண்டும்.
இலங்கைச் சிறைகளில் தற்பொழுது தடுத்து வைக்கப்பட்டுள்ள 12 ஆயிரம் அரசியல் கைதிகள் நேர்மையான மற்றும் வெளிப்படையான விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்த வேண்டும்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1