புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 7:51 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
போபால் பேரழிவும் தொலைந்து போனநீதியும் Poll_c10போபால் பேரழிவும் தொலைந்து போனநீதியும் Poll_m10போபால் பேரழிவும் தொலைந்து போனநீதியும் Poll_c10 
68 Posts - 41%
heezulia
போபால் பேரழிவும் தொலைந்து போனநீதியும் Poll_c10போபால் பேரழிவும் தொலைந்து போனநீதியும் Poll_m10போபால் பேரழிவும் தொலைந்து போனநீதியும் Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
போபால் பேரழிவும் தொலைந்து போனநீதியும் Poll_c10போபால் பேரழிவும் தொலைந்து போனநீதியும் Poll_m10போபால் பேரழிவும் தொலைந்து போனநீதியும் Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
போபால் பேரழிவும் தொலைந்து போனநீதியும் Poll_c10போபால் பேரழிவும் தொலைந்து போனநீதியும் Poll_m10போபால் பேரழிவும் தொலைந்து போனநீதியும் Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
போபால் பேரழிவும் தொலைந்து போனநீதியும் Poll_c10போபால் பேரழிவும் தொலைந்து போனநீதியும் Poll_m10போபால் பேரழிவும் தொலைந்து போனநீதியும் Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
போபால் பேரழிவும் தொலைந்து போனநீதியும் Poll_c10போபால் பேரழிவும் தொலைந்து போனநீதியும் Poll_m10போபால் பேரழிவும் தொலைந்து போனநீதியும் Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
போபால் பேரழிவும் தொலைந்து போனநீதியும் Poll_c10போபால் பேரழிவும் தொலைந்து போனநீதியும் Poll_m10போபால் பேரழிவும் தொலைந்து போனநீதியும் Poll_c10 
2 Posts - 1%
manikavi
போபால் பேரழிவும் தொலைந்து போனநீதியும் Poll_c10போபால் பேரழிவும் தொலைந்து போனநீதியும் Poll_m10போபால் பேரழிவும் தொலைந்து போனநீதியும் Poll_c10 
1 Post - 1%
Guna.D
போபால் பேரழிவும் தொலைந்து போனநீதியும் Poll_c10போபால் பேரழிவும் தொலைந்து போனநீதியும் Poll_m10போபால் பேரழிவும் தொலைந்து போனநீதியும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
போபால் பேரழிவும் தொலைந்து போனநீதியும் Poll_c10போபால் பேரழிவும் தொலைந்து போனநீதியும் Poll_m10போபால் பேரழிவும் தொலைந்து போனநீதியும் Poll_c10 
319 Posts - 50%
heezulia
போபால் பேரழிவும் தொலைந்து போனநீதியும் Poll_c10போபால் பேரழிவும் தொலைந்து போனநீதியும் Poll_m10போபால் பேரழிவும் தொலைந்து போனநீதியும் Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
போபால் பேரழிவும் தொலைந்து போனநீதியும் Poll_c10போபால் பேரழிவும் தொலைந்து போனநீதியும் Poll_m10போபால் பேரழிவும் தொலைந்து போனநீதியும் Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
போபால் பேரழிவும் தொலைந்து போனநீதியும் Poll_c10போபால் பேரழிவும் தொலைந்து போனநீதியும் Poll_m10போபால் பேரழிவும் தொலைந்து போனநீதியும் Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
போபால் பேரழிவும் தொலைந்து போனநீதியும் Poll_c10போபால் பேரழிவும் தொலைந்து போனநீதியும் Poll_m10போபால் பேரழிவும் தொலைந்து போனநீதியும் Poll_c10 
21 Posts - 3%
prajai
போபால் பேரழிவும் தொலைந்து போனநீதியும் Poll_c10போபால் பேரழிவும் தொலைந்து போனநீதியும் Poll_m10போபால் பேரழிவும் தொலைந்து போனநீதியும் Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
போபால் பேரழிவும் தொலைந்து போனநீதியும் Poll_c10போபால் பேரழிவும் தொலைந்து போனநீதியும் Poll_m10போபால் பேரழிவும் தொலைந்து போனநீதியும் Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
போபால் பேரழிவும் தொலைந்து போனநீதியும் Poll_c10போபால் பேரழிவும் தொலைந்து போனநீதியும் Poll_m10போபால் பேரழிவும் தொலைந்து போனநீதியும் Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
போபால் பேரழிவும் தொலைந்து போனநீதியும் Poll_c10போபால் பேரழிவும் தொலைந்து போனநீதியும் Poll_m10போபால் பேரழிவும் தொலைந்து போனநீதியும் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
போபால் பேரழிவும் தொலைந்து போனநீதியும் Poll_c10போபால் பேரழிவும் தொலைந்து போனநீதியும் Poll_m10போபால் பேரழிவும் தொலைந்து போனநீதியும் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

போபால் பேரழிவும் தொலைந்து போனநீதியும்


   
   
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Thu Jan 27, 2011 2:35 pm

பன்னாட்டுக் குழுமங்களின் பேயாட்சி தில்லியில் நடக்கிறது என்பதற்கான சான்று தான் அண்மையில் வெளியான போபால் வழக்குத் தீர்ப்பு. இருபதாயிரம் பேர் சாவு, இரண்டு இலட்சம் பேர் நடைப்பிணம், அடுத்தடுத்தத் தலைமுறையும் ஊனப் பிறவிகள்… என்ற கொடுங்குற்றத்தைச் செய்தவர்களுக்கு இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை; அதுவும் 26 ஆண்டுகளுக்குப் பிறகு! தண்டனையை அறிவித்த போபால் நீதிமன்றம், தண்டிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக சொந்தப் பிணை வழங்கி விடுதலை செய்தது.

போபால் நச்சு வாயுப் பேரழிவுக்கு முதன்மைப் பொறுப்பாளியான வெள்ளைக்கார குற்றவாளிக்கு எந்த தண்டனையும் இல்லை.

உழைப்பாளிகள், பொதுமக்கள் உயிர்களை விட நிறுவனங்களின் இலாபம் காக்கப்பட வேண்டியது என்பதே இந்தியாவின் எழுத்தப்படாத சட்டம் என்ற உண்மையை போபால் வழக்கு தெளிவுபடுத்திவிட்டது.

நடந்தது என்ன?

மத்தியப் பிரதேசத் தலைநகர் போபாலில் அமைந்துள்ள யூனியன் கார்பைடு தொழிற்சாலையிலிருந்து 1984 திசம்பர் 2-3 நள்ளிரவில் வெளியான நச்சு வாயுவுக்கு இருபதாயிரம் பேர் பலியானார்கள். இரண்டு இலட்சம் பேர் உழைக்க முடியாத அளவுக்கு உடல் ஊனமுற்றவர்களாக உருக்குலைந்தார்கள். இவர்களது நுரையீரல்கள் குலைந்தன. எலும்புகள் வலுவிழந்தன. கண்பார்வை முற்றிலுமோ பெருமளவிலோ பறிபோனது. பலருக்கு புற்றுநோய் உருவானது. இவர்களுக்குப் பிறந்த குழந்தைகளும் எலும்பு வலு இல்லாமல், மூச்சுத்திணறல் நோயுடன் பிறந்தன. இவர்களுக்கு நினைவாற்றல் குறைந்து காணப்படுகிறது.

இது வெறும் விபத்தா? முதலாளியின் இலாப வேட்டைக்காக தெரிந்தே இந்த மரணப்படுகுழி வெட்டப்பட்டதா என்பதே இச்சிக்கலின் மையப் பொருளாக விவாதிக்கப்படுகிறது. விபத்து என்ற அடிப்படையிலேயே தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இது சரியா என்பதே விடைகாண வேண்டிய வினா.

யூனியன் கார்பைடு இந்தியா லிமிடெட்(UCIL) தொழிற்சாலை போபாலில் 1969-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இது யூனியன் கார்பைடு கார்ப்பரேசன் என்ற அமெரிக்க நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். யூனியன் கார்பைடு இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் 51% பக்குகளை அமெரிக்காவின் யூனியன் கார்பைடு கார்ப்பரேசனே உரிமையாகக் கொண்டுள்ளது. மீதிப்பங்குகள் சில இந்திய நிதி நிறுவனங்களுடையவை.

இந்த வகையில் போபால் யூனியன் கார்பைடு தொழிற்சாலைக்கு அமெரிக்காவின் யூனியன் கார்பைடு கார்ப்பரேசனின் உரிமையாளரான வாரன் ஆண்டர்சன் தான் முதலாளி.

போபால் யூனியன் கார்பைடு தொழிற்சாலையில் கார்பரில் என்ற பூச்சிக் கொல்லி நச்சு தயாரிக்கப்பட்டது. ‘செவின்’(Sevin) என்ற பெயரால் இது விற்கப்பட்டது.

கார்பரில் தயாரிப்புக்கு மீத்தைல் ஐசோ சயனேட்(Methyl iso cyanate) என்ற நச்சுத் திரவமே அடிப்படைப் பொருளாகும். 1979ஆம் ஆண்டு வரை இது அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது. ஆனால், 1979ல் போபால் தொழிற்சாலை வளாகத்திலேயே மீத்தைல் ஐசோ சயனேட் தயாரிப்பு நிலையம் நிறுவப்பட்டது.

இந்த மீத்தைல் ஐசோ சயனேட் ஆட்கொல்லி நஞ்சு என்பதால் இந்த நிலையம் நிறுவப்படுவதற்கு தொடக்கத்திலிருந்தே எதிர்ப்புக் கிளம்பியது. போபால் மாநகராட்சி ஆணையர் எம்.என்.புக் என்பவர் 1975ஆம் ஆண்டிலேயே இந்த நச்சு நிலையம் நிறுவப்படுவதற்கு மாநகராட்சியின் அனுமதி கோரப்பட்டபோதே, எதிர்ப்பு தெரிவித்தார். மக்கள் நெருக்கம் அதிகம் இல்லாத பகுதியில் இந்த நிலையம் நிறுவப்பட்டால் மட்டுமே அனுமதிக்க முடியும் என்று உறுதிப்படக் கூறினார்.

மத்தியப் பிரதேசத்தின் அன்றைய முதலமைச்சர் பி.சி.சேத்தி தலையிட்டு போபால் மாநகராட்சி ஆணையர் பதவியிலிருந்து புக்கை மாற்றல் செய்தார்.

மீத்தைல் ஐசோ சயனேட் வழியாக கார்பரில் தயாரிக்கும் வழிமுறை ஆபத்து நிறைந்தது என்பதால், இந்த வழிமுறையையே அனுமதிக்கக் கூடாது என்று அறிவியலாளர்கள் எச்சரிக்கை செய்தனர். மாற்று வழிமுறையில் கார்பரில் தயாரிக்க முடியும் என்று எடுத்துக் கூறினர்.

யூனியன் கார்பைடு நிறுவனம் மேர்கொண்ட வழிமுறை வருமாறு:

மெதில் அமைன் + பாஸ்ஜீன் = மீத்தைல் ஐசோ சயனேட்.
மீத்தைல் ஐசோ சயனேட் + 1-நேப்தால் = கார்பரில்


ஆபத்தான மீத்தைல் ஐசோ சயனேட் வராமலேயே கார்பரில் தயாரிக்கும் மாற்று வழிமுறை வருமாறு:

பாஸ்ஜீன் + 1-நேப்தால் = குளோரோ ஃபொர்மேட் எஸ்தர்
குளோரோ ஃபொர்மேட் எஸ்தர் + மெதில் அமைன் = கார்பரில்


பாயர் நிறுவனம் மேற்கண்ட மாற்று வழிமுறையில்தான் கார்பரில் தயாரிக்கிறது. இதுதான் பாதுகாப்பானது.

ஆனால் மீத்தைல் ஐசோ சயனேட் வழிமுறையில் தான் செலவு குறைவு என்பதால் யூனியன் கார்பைடு நிறுவனம், பாதுகாப்புக்கு ஆபத்தான அந்த வழிமுறையையே தேர்ந்தெடுத்தது. மக்கள் உயிரைவிட தங்களது இலாபமே அதற்கு முக்கியம்.

1975ல் மீத்தைல் ஐசோ சயனேட் மாதிரி(Sample) உற்பத்தித் தொடங்கிய போது அங்கு ஆய்வு மேற்கொண்ட போபால் மாவட்டத் தொழிற்சாலை ஆய்வாளர் அதனைத் தொடரக்கூடாது என உத்தரவிட்டார். அதற்காக அந்த ஆய்வாளரும் மாற்றப்பட்டார்.

அந்த அளவுக்கு மேல்மட்ட அரசியல் செல்வாக்கு யூனியன் கார்பைடு முதலாளி ஆண்டர்சணுக்கு இருந்தது. அன்றைக்கு பிரதமர் இந்திராகாந்திக்கு நெருக்கமாக இருந்து, சட்டப் புறம்பான அதிகார மையமாக செயல்பட்ட, திரேந்திர பிரம்மச்சாரி என்ற ‘சாமியார்’ வாரன் ஆண்டர்சனுக்கு மிகவும் நெருக்கமானவர். யூனியன் கார்பைடு விருந்தினர் மாளிகையில் நிரந்தர விருந்தாளியாகத் தங்கியிருந்து சீடர்களுக்கு யோகா வகுப்பு நடத்தி வந்தார். ஆண்டர்சன் – திரேந்திர பிரம்மச்சாரி – பி.சி. சேத்தி கூட்டணி அன்று வலுவாக செயல்பட்டது.

1979இல் ஐசோ சயனேட் உற்பத்தி தொடங்கியதிலிருந்தே யூனியன் கார்பைடு ஆலையில் விபத்துகளும் தொடங்கின. 1981லிருந்து மீத்தைல் ஐசோ சயனேட் சேகரிப்புக் கலத்திலிருந்து நச்சுவாயுக் கசிவு விபத்துகள் ஆலையில் அடிக்கடி நிகழத் தொடங்கின. 1981 மார்ச்சில் ஒரு தொழிலாளி மரணம், ஏப்ரலில் ஒரு பொறியாளருக்கு நச்சுவாயுக் காயங்கள், ஆகசுட்டில் வாயுக் கசிவால் 20 தொழிலாளிகள் மருத்துவமனையில் அனுமதி, திசம்பரில் நச்சுவாயுக் கசிவால் ஆலைக்கு அருகில் வசித்த நூற்றுக்கணக்கானோர் பாதிப்பு என்று பாதிப்புகள் அதிகரித்தன.

இந்திப் பத்திரிக்கையாளர் இராசுகுமார் கேசவானி, 1981, 1982 இரு ஆண்டுகளும் “எந்த நேரமும் யூனியன் கார்பைடில் விபத்து நேரலாம்” என கட்டுரை எழுதி எச்சரித்தார். “எரிமலை மீது போபால்”, “காத்துக் கொண்டிருக்கும் பேராபத்து” போன்றவை அவரது கட்டுரைத் தலைப்புகள்.

கார்பைடு தொழிலாளர் சங்கம் ஆலையில் உள்ள பாதுகாப்புக் குறைபாடுகளை சுட்டிக்காட்டி ம.பி.முதலமைச்சருக்கும், இந்திய உள்துறைக்கும், தொழிலாளர்துறைக்கும் புகார் மனு அளித்தது. “கொல்லும் கார்பைடு ஆலை” என்று விழிப்புணர்வு பரப்புரையும் மேற்கொண்டது.

எதிர்க்கட்சிகள் இச்சிக்கல் குறித்து மத்தியப் பிரதேச சட்டமன்றத்தில் விவாதம் எழுப்பின.

இந்நிலையில் யூனியன் கார்பைடு முதலாளி ஆண்டர்சன் ஆணைப்படி பாதுகாப்புத் தணிக்கைக் குழு அமெரிக்காவிலிருந்து போபாலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சி.எசு.டைசன் என்பவர் தலைமையிலான அக்குழு ஆலையை அய்வு செய்து தனது அறிக்கையை 1982 மார்ச்சில் வாரன் ஆண்டர்சனிடம் அளித்தது.

ஆலையில் 61 பாதுகாப்புக் குறைபாடுகள் இருப்பதாகவும், அவற்றுள் 30 குறைபாடுகள் மிக அவசரமாகக் கவனித்துக் களையப்பட வேண்டியவை என்றும், அவ்வாறு உடனே செய்யாமலிருந்தால், எந்த நேரத்திலும் மனிதப் பேரழிவு(Human Disaster) நிகழக்கூடும் எனவும் டைசன் அறிக்கை எச்சரித்தது.

இதற்கு ஆகும் செலவு 20 இலட்சம் டாலர் (அன்றைய மதிப்பில் 48 கோடி ரூபாய்) எனவும் டைசன் குழு மதிப்பிட்டது.

இந்தச் செலவை மேற்கொள்ள ஆண்டர்சன் மறுத்தார். மேலும் சிக்கன நடவடிக்கை என்ற பெயரால் பாதுகாப்புக் ஏற்பாடுகளைக் குறைக்கத் தொடங்கினார். பாதுகாப்புக் குறைபாடுகள் குறித்து எதிர்ப்புகள் கிளம்பியதையடுத்து மொத்தமாக போபால் ஆலையை இந்தோனேசியா அல்லது பிலிப்பைன்சுக்கு மாற்றுவதற்கான பேச்சுவார்த்தையைத் தொடங்கினார்.

இவையெல்லாம் ஆண்டர்சன் நேரடியாக ஈடுபட்டு நடந்த செயல்பாடுகள் என்பதற்கு அடுக்கடுக்கான ஆதாரங்கள் உள்ளன.

இந்த நிலையில் நச்சுவாயுக் கசிவு ஏற்படுவதற்கு ஆறு மாதத்திற்கு முன்பிருந்தே மீத்தைல் ஐசோ சயனேட் சேமிப்புத் தொட்டிக்கு இருந்த குளிரூட்டிகள் நிறுத்தப்பட்டுவிட்டன. வெளியாகும் Hydrogen Cyanide நச்சுவாயுவைத் தூய்மைப்படுத்தி நச்சில்லா வேறுவாயுவாக மாற்றும் கருவி(Vent Gas Scrubber) நிறுத்தப்பட்டுவிட்டது. வெப்பநிலையைக் காட்டும் கருவிகள், கசிவைக்காட்டும் கருவிகள் போன்றவை நிறுத்தப்பட்டுவிட்டன. கண்கானிப்புப் பணிக்கான ஊழியர்கள் எண்ணிக்கை பாதியாகக் குறைக்கப்பட்டுவிட்டது.

இவ்வாறான சூழலில்தான் 1984 திசம்பர் 2 ஆம் நாள் இரவு கழிவுத் தண்ணீர் மீத்தைல் ஐசோ சயனேட் தொட்டிக்குள் சென்றது. தண்ணீர் கலந்தவுடன் வெப்ப உமிழ்வினை(Exothermic Reaction) தொடங்கியது. (சுண்ணாம்பு நரப்பிய வாளியில் தண்ணீர் ஊற்றினால் வெப்பம் வெளிப்படுவதைப் போன்ற வேதிவினை இது) சில நிமிடங்களில் 200 செண்டிகிரேடு என்ற அளவுக்கு வெப்பநிலை உயர்ந்தது. நாற்பதாயிரம் கிலோ மீத்தைல் ஐசோ சயனேட் ஒரே நேரத்தில் வெளியேறியது.

வெளிக்காற்றோடும், தண்ணீரோடும், ஐசோ சயனேட்டுக்கு நிகழ்ந்த வேதிவினையில் ஐட்ரசன் சயனைடு என்ற ஆட்கொல்லி நச்சுவாயு தோன்றி போபாலையே பிணக்காடாக்கியது. இருபது ஆயிரம் பேர் மரணம் அடைந்தனர். நீதிமன்ற கணக்குப்படி இது 15 ஆயிரத்து 500 பேர். ஏறத்தாழ இரண்டு இலட்சம் பேர் நடைபிணமாக மாற்றப்பட்டார்கள்.

பேரழிவுச் செய்தியறிந்து அமெரிக்காவிலிருந்து போபால் வந்த யூனியன் கார்பைடு முதலாளி வாரன் ஆண்டர்சனை போபால் மாவட்ட காவல்துறை கண் காணிப்பாளர் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தினார். செய்தியறிந்த அன்றைய ம.பி. முதலமைச்சர் அர்யூன் சிங்(Arjun Singh) ஆண்டர்சனை யூனியன் கார்பைடு விருந்தினர் மாளிகையிலேயே “சிறை” வைக்கும்படி ஆணையிட்டார்.

நான்கு நாள்களில் சொந்தப் பிணையில் வெளிவந்த ஆண்டர்சனை மாவட்ட ஆட்சியரும், மாவட்ட காவல்துறை அதிகாரியும் பாதுகாப்பாக போபால் விமான நிலையம் அழைத்துச் சென்றனர்.

ம.பி. மாநில அரசின் தனி விமானத்தில், திசம்பர் 7 ஆம் நாள் தில்லி சென்ற ஆண்டர்சன், அன்றைய குடியரசுத் தலைவர் யெயில் சிங்கின் விருந்தினராகத் தங்கிவிட்டு அடுத்தநாள் அமெரிக்கா பறந்தார். இராசீவ் காந்தி அமைச்சரவையில் மூத்த அமைச்சர் பி.வி.நரசிம்மராவ் அவரை வழியனுப்பிவைத்தார்.

இவையெல்லாம் 2005 வரை கமுக்கமாக வைக்கப்பட்டிருந்தன. நிகழ்வு நடந்து இருபது ஆண்டுகள் கழிந்துவிட்டதால் கமுக்கம் நீக்கப்பட்ட ஆவணங்களாக(Declassifies Documents) இவை வெளியாயின. ஆண்டர்சன் அமெரிக்காவிலிருந்து புறப்படும் முன்பே இராசீவ் காந்தியிடம் வாக்குறுதி பெற்றே போபால் வந்தார் என்பது இப்போது தெளிவாக வெளிப்பட்டுவிட்டது. ஆனால் அன்றைக்கு அது இந்த அளவு வெளியாகவில்லை.

போபால் நச்சுவாயு பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு நீதியும், நிவாரணமும், பெற்றுத்தரும் பொறுப்பை தாம் எடுத்துக்கொள்வதாக இராசீவ்காந்தி அரசு அறிவித்தது. “போபால் நச்சுவாயுக் கசிவுப் பேரழிவு இழப்பீடுக் கோரிப் பெறும் சட்டம் – 1985” என்ற சட்டத்தை 1985 மார்ச்சில் பிறப்பித்து பொறுப்பைத் தான் எடுத்துக் கொண்டது.

பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் இந்திய அரசு அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. 330 கோடி டாலர் அதாவது அன்றைய மதிப்பில் 7920 கோடி ரூபாய் இழப்பீடு கோரியது.

இதனை இந்திய நீதிமன்றத்தில் விசாரித்து முடிவு செய்துகொள்ள வேண்டும் என அமெரிக்க உச்சநீதிமன்றம் அரசின் மனுவைத் தள்ளுபடி செய்தது.

எனினும் விசாரணைக்கு யூனியன் கார்பைடு நிர்வாகம் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது. ஒத்துழைப்பதாக ஆண்டர்சன் சார்பில் உறுதிப்பத்திரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

போபால் நடுவர் நீதிமன்றத்தில் இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கில் யூனியன் கார்பைடு ஆலை செய்த மேல் முறையீடு 1989ல் உச்சநீதிமன்றம் சென்றபோது, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அகமதி கட்டைப் பஞ்சாயத்தில் ஈடுபட்டார்.

மொத்தமாக 4.7 கோடி டாலர், அதாவது அன்றைய மதிப்பில் 723 கோடி ரூபாய் இறுதி இழப்பீடு என்று பஞ்சாயத்து கூறினார். இந்திய அரசு ஏற்றது. பிரச்சனையை அத்தோடு விடுவதென்றும், யூனியன் கார்பைடு மீதோ, ஆண்டர்சன் மீதோ உள்ள வழக்குகள் அனைத்தையும் திரும்பப் பெறுவதாகவும் உறுதிப்பத்திரம் அளித்தது.

இதன்படி ஆளுக்கு ரூ.12,000 வீதம் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு அளிக்கப்பட்டது.

தாங்கள் வஞ்சிக்கப்பட்டதாக தெளிவுபடுத்தி இரசீதாபீவி, சம்பாதேவி சுக்ளா ஆகிய இரண்டு பெண்மணிகள் பாதிக்கப்பட்டோர் சார்பில் 1991 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்.

ஆண்டர்சன் உள்ளிட்ட பொறுப்பாளிகள் மீது குற்றவியல் வழக்குத் தொடர வேண்டும் என்றும், இழப்பீடு ஏற்கெனவே இந்திய அரசு கோரிய வகையில் வழங்க வேண்டும் எனவும் கோரினர்.

இதனைத் தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், குற்றவியல் வழக்குத் தொடர அனுமதித்தது. ஆயினும் அது தண்டனைச் சட்டபிரிவு 304-A படியான வழக்காக மாற்றப்பட வேண்டும் என அகமதி ஆணையிட்டார்.

ஏற்கெனவே 304ஆம் பிரிவின் கீழ், அதாவது மனிதச் சாவுக்குத் தெரிந்தே காரணமாக அமைந்தவர்கள் என்ற வகையில் வழக்கு நடந்து வந்தது. இதன் கீழ் 10 ஆண்டு வரை சிறை தண்டனை வழங்கலாம். ஆனால் 304-A என்பது கவனக்குறைவாக நடந்து கொண்டு விபத்து ஏற்படுத்துவது என்ற பிரிவாகும். இதன் கீழ் அதிக அளவு இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை வழங்கலாம் அவ்வளவுதான்! அதுதான் இப்போது நடந்துள்ளது.

நீதிபதி அகமதி கூறியது போல் இது கவனக்குறைவால் நிகழ்ந்த விபத்து அல்ல. தனது கொள்ளை இலாபத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்காக திட்டமிட்டே செய்யப்பட்ட பாதுகாப்புக் குறைபாடு ஏற்படுத்திய மனிதக் கொலை.

இதனை மேலே விளக்கியிருக்கிறேன்.

வாரன் ஆண்டர்சனுக்கு போபால் யூனியன் கார்பைடு ஆலை நிர்வாகப் பணியில் நேரடிப் பங்கு இல்லை; அன்றாடப் பணிகளுக்கும் அவருக்கும் எந்தத் தொடர்புமில்லை. எனவே அவரைக் குற்றவாளியாக சேர்க்க முடியாது என்ற வாதம் தொடர்ந்து வைக்கப்படுகிறது. ஆண்டர்சனுக்கு போபால் ஆலையின் கடுமையான பாதுகாப்புக் குறைபாடுகள் தொடக்கத்திலிருந்தே தெரியும் என்பதை விளக்கி உள்ளோம். குறிப்பாக அவர் அனுப்பிய டைசன் குழு 61 குறைபாடுகளைக் குறித்துஅவருக்கு அறிக்கை அளித்ததும் மெய்ப்பிக்கப்பட்ட உண்மை.

எனவே இந்தப் பேரழிவுக்கு முதன்மைப் பொறுப்பாளி வாரன் ஆண்டர்சன் ஆவார்.

இப்போது யூனியன் கார்பைடு ஆலை கைமாறிவிட்டது. அமெரிக்காவின் டவ் கெமிக்கல்சு(Dove Chemicals) என்ற பன்னாட்டு நிறுவனம்(Dove Soap தயாரிக்கும் நிறுவனம்) உலகம் முழுவதும் உள்ள யூனியன் கார்பைடு ஆலைகளை 2001ஆம் ஆண்டு வாங்கிவிட்டது. போபால் ஆலைக்கும் டவ் கெமிக்கலே உரிமையாளர். எனவே இன்றைக்கு இழப்பீடு வழங்கும் பொறுப்பு டவ் கெமிக்கல்சுக்கே உள்ளது.

எனவே,

 இந்திய அரசு அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் தான் ஏற்கெனவே கோரியபடி தான் 330 கோடி டாலர். அதாவது இன்றைய மதிப்பில் 21450 கோடி ரூபாய் டவ் கெமிக்கல்சிடம் இழப்பீடு கோரிப் பெற்று, பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டும்.

 வாரன் ஆண்டர்சனை இந்தியாவிற்கு வரவழைத்து, கைது செய்து 304 பிரிவின்படி வழக்கு நடத்தி தண்டனை பெற்றுத்தர வேண்டும்.

 ஆண்டர்சனைத் தப்பிக்க வைத்த அரசியல் பிரமுகர்களைக் கண்டறிந்து கூண்டில் ஏற்ற வேண்டும். இதில் இராசீவ்காந்தியின் பங்கை வெளிப்படுத்த வேண்டும்.

 போபல் நிகழ்வை எச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு அணு ஆலை விபத்து இழப்பீடு தொடர்பான மசோதாவை நிறைவேற்றாமல் கைவிட வேண்டும்.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக