புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Today at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm
» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நிலக்கொள்ளையால் நெருங்கும் உணவுப்பஞ்சம்-1
Page 1 of 1 •
- நிசாந்தன்இளையநிலா
- பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010
”தனியொருவனுக்கு உணவில்லையெனில் யகத்தினை அழித்துடுவோம்” என்று பாரதி பாடி ஒரு நூற்றாண்டு முடியவில்லை; அதற்குள் தனிமனிதர்கள் சிலர் சேர்ந்து யகத்தினை பட்டினியால் அழிக்கும் திட்டத்தை செயல்படுத்தத் தொடங்கிவிட்டார்கள். மக்களைப் பட்டினி போடும் அரசுகளைக் கொண்ட நாடுகள், இலட்சக்கணக்கான எக்டேர் விளைநிலத்தை அடிமாட்டு விலைக்கு அன்னியரிடம் விற்று செயற்கையாக பஞ்சத்தை ஏற்படுத்தி வருகின்றன.
கோடிக்கணக்கான மக்கள் பஞ்சத்தால் மடியப்போவது உறுதியாகத் தெரிந்தும் உலகின் எப்பகுதியில் இருந்தாலும் அந்நாடுகளிலுள்ள விளை நிலங்களை வாங்கிக் குவித்து வருகின்றன. ‘பன்னாட்டுக் கம்பெனிகள்’ எனப்படும் பிணந்தின்னிக் கழுகுகள். அப்படியாவது பிற நாடுகளில் சென்று விளைநிலம் வாங்க வேண்டிய அவசியமென்ன? சொந்த நாட்டு மக்களை பட்டினியிலிருந்து காப்பாற்றப் போகிறார்களாம்!
இந்த ‘மனிதநேயர்கள்’ ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் மட்டுமே இருப்பதாக தவறாக எண்ணிவிடக் கூடாது. யப்பான், அரபு நாடுகள் ஒன்றியம், சவுதி அரேபியா, தென் கொரியா, சீனா, இந்தியா ஆகிய நாடுகள் நில அபகரிப்புப் போட்டியில் முன்னணியில் உள்ளன. எந்த நாடு உலகின் எப்பகுதியில் எவ்வளவு நிலத்தை அபகரித்துள்ளது என்பதை கீழே தரப்பட்டுள்ள பட்டியலில் பார்க்கலாம்.
நிலம் அபகரித்த நாடுகள்/நிறுவனங்கள் பரப்பளவு/பணமதிப்பு நிலத்தை இழந்த நாடுகள்
சீனா 24,000 கோடி டாலர் பிரேசில், அர்எந்தினா, உருகுவே, பராகுவே
லிதுவேனியா 50,000 எக்டேர் ரசியா
சவுதி அரேபியா 16 இலட்சம் எக்டேர் இந்தோனேசியா
தென்கொரியா(தெவூ நிறுவனம்) 13 இலட்சம் எக்டேர்(மொத்த விளை நிலத்தில் பாதி) மடகாசுகர்
யப்பான் 1 இலட்சம் எக்டேர் பிரேசில்
கத்தார் 25,000 கிராமங்கள் பாகித்தான்
சவுதி அரேபியா 5 இலட்சம் எக்டேர் பாகித்தான்
இந்தியா(கருதூரி குளோபல் லிமிடெட்) 3.5 இலட்சம் எக்டேர்/4300 கோடி டாலர் எத்தியோப்பியா
இந்தியா 10,000 எக்டேர் பராகுவே
குவைத் - பர்மா
இந்தியா(வருண் இண்டர்நேசனல்) 1.8 இலட்சம் எக்டேர் மடகாசுகர்
சுவீடன் 1,29,000 எக்டேர்/23 கோடி டாலர் ரசியா
பிரிட்டன் 6,500 எக்டேர் மலாவி
கோல்ட்மேன் சாக்சு(வட அமெரிக்கா) 30 கோடி டாலர் சீனா
டாயிசு பேங்க்(யெர்மனி) 6 கோடி டாலர் சீனா
மார்கன் சிடான்லி(வட அமெரிக்கா) 40,000 எக்டேர் உக்ரைன்
சால்வெண்ட் எக்சுடிராக்டர்சு என்ற 18 நிறுவனங்களின் கூட்டமைப்பு 10,000 எக்டேர் 4 கோடி டாலர் உருகுவே/பராகுவே
சிடெர்லிங் குழுமம் சென்னை 1700 எக்டேர் அர்எதினா
ஓலம் எண்டர்நேசனல்-இதன் தலைவர் சன்னி வர்கீசின் தலைமயகம் சிங்கப்பூரில் உள்ளது 12000 எக்டேர் அர்எதினா
மலேசியா தமிழர் ஆறுமுகம் 6 இலட்சம் எக்டேர் அர்எதினா
(ஒரு எக்டேர் என்பது சுமார் இரண்டரை ஏக்கரைக் குறிக்கும்)
தெற்காசியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா கண்டங்களில் உள்ள நாடுகளின் விளை நிலங்களை அதிவேகமாக வாங்கிக் குவித்து வருகின்றன பல பன்னாட்டு நிறுவனங்கள். ஏற்கெனவே நாட்டு மக்களைக் கூட்டங்கூட்டமாக பட்டினியால் சாகவிடும் அரசுகள், இரகசியமாக காதும் காதும் வைத்தாற்போல பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களைக் கையெழுத்திட்டு வருகின்றன. இவ்வாறு விளைநிலங்கள் பன்னாட்டு முதலாளிகள் வசமாக்கி எதிர்காலத்தில் உணவு என்பதே சாமானிய மனிதருக்கு எட்டாத கனியாகிவிடும் அபாயம் நெருங்குகிறது. வெளிநாடுகளில் உணவை உற்பத்தி செய்து உள்நாட்டில் பெரும் இலாபத்திற்கு விற்கும் உரிமை கார்ப்பரேட் நிறுவனங்களின் வசமாவதால் உலகில் என்னென்ன கேடுகள் விளையும் என்பதை நினைத்துப் பார்க்கவே அச்சமாக உள்ளது.
நில அபகரிப்புப் போட்டியினால் உடனடியாக பெருமளவு பாதிப்பைச் சந்திக்கப் போவது ஆப்பிரிக்க நாடுகளே. ஏற்கெனவே எத்தியோப்பியாவில் ஆயிரக்கணக்கில் மக்கள் பஞ்சத்தில் மடிந்து வருவது அனைவரும் அறிந்த செய்தி. அந்த நிலையில், ‘எரிகிற வீட்டில் பிடுங்கியது இலாபம்’ என பல நாடுகள் போட்டி போட்டு எத்தியோப்பிய விளைநிலங்களை அபகரித்து வருகின்றன.
எத்தியோப்பியாவில் 6 இலட்சம் எக்டேர் நிலம் அபகரிக்கப்பட்டுள்ளது. ஒரு எக்டேர் 3ரூ. 150லிருந்து ரூ.500 வரை விலை தரப்பட்டுள்ளது. அங்கு சராசரியாக ஒரு குடும்பத்திற்கு 2 எக்டேர் நிலம் உள்ளது. இந்த நில அபகரிப்பால் ஏறக்குறைய 3 இலட்சம் குடும்பங்கள் நிலத்தை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அபகரிக்கப்பட்டுள்ள நிலங்களில் இயந்திரங்களைக் கொண்டு விவசாயம் செய்யப்படுவதால், வெறும் 20,000 பேருக்கு மட்டுமே வேலை கிடைக்கும்.
நிலப்பறிப்புப் போட்டியில் முதலிடம் வகிப்பது இந்தியா.

கருதூரி குளோபல் லிமிடெட் என்ற பெங்களூர் நிறுவனம் ஒன்று மட்டுமே 3,50,000 எக்டேர் நிலத்தை அபகரித்துள்ளது. இந்திய அரசின் கடனுதவியோடு இதுவரை 30,000 ஏக்கர் நிலத்தில் பயிர் செய்யப்பட்டிருக்கிறது. உணவு தானியங்கள், கரும்பு, பாமாயில் போன்றவற்றை விளைவித்து அவற்றை இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்போவதாக அறிவித்துள்ள கருதூரி நிறுவனம், ‘உலகிலேயே மிகப்பெரிய விவசாய நிலப்பரப்பு’ தன்னிடம் உள்ளதாக மார்தட்டிக் கொள்கிறது. உணவுப் பொருட்களை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டுமென்ற நிபந்தனையோடு இதுவரை எத்தியோப்பியாவுக்கு இந்திய அரசு 50 கோடி பவுண்ட் கடனுதவி அளித்துள்ளது.
எத்தியோப்பியாவில் மட்டுமே 80 இந்திய நிறுவனங்கள் நில அபகரிப்புப் போட்டியில் இறங்கியுள்ளன. எத்தியோப்பியாவில் மட்டுமின்றி, கானா, மாலி, மடகாசுகர், மொசாம்பிக், சூடான், டான்சானியா ஆகிய நாடுகளிலும் இந்திய நிறுவனங்கள் விளை நிலங்களைப் பறித்து வருகின்றன.
ஆப்பிரிக்க விளை நிலங்களை அபகரித்து, புதியமுறை காலனியாதிக்கத்திற்கு இந்தியா வழிகோலியுள்ளது என்ற குற்றச்சாட்டை வேளாண் அமைச்சர் சரத் பவார் மறுத்துள்ளார். “சில நிறுவனங்கள் சர்க்கரை உற்பத்திக்கென விளை நிலங்களை வாங்கி, விளைச்சலை சர்வதேசச் சந்தையில் விற்கப்போகின்றன – அவ்வளவு தான்” என்கிறார் அவர்.
இந்தியாவில் விளையும் பாசுமதி அரிசியை மட்டுமே ஏற்றுமதி செய்ய முடியும். எனவே, பிறவகை அரிசியை சர்வதேசச் சந்தையில் விற்பனை செய்ய ஏதுவாக ஆப்பிரிக்க விளை நிலங்களில் முதலீடு செய்யுமாறு இந்தியாவின் ‘YES BANK’ முதலாளிகளுக்கு அறிவுரை வழங்குகிறது.
அதேபோல தற்போது இந்தியாவில் மாமிச உணவுக்கான த்ஹெவை அதிகரித்துள்ள போதிலும் மாட்டுத் தீவனமாக மக்காச்சோளம் விளைவிக்க இந்திய அரசு உதவி ஏதும் செய்யவில்லை. ஆனால், ஆப்பிரிக்காவில் சோளம் விளைவிக்க இந்திய நிறுவனங்களுக்கு கடனுதவி அளிக்கிறது. எத்தியோப்பியாவில் மட்டுமே இதுவரை இந்தியா 430 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. விரைவில் இத்தொகை ஆயிரம் கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இதுபோன்ற அநியாயமான நில பறிப்பால் எத்தியோப்பியாவில் ஏற்கெனவே பட்டினியால் செத்துக் கொண்டிருக்கும் மக்களின் நிலை என்ன ஆகும்? எத்தியோப்பியாவின் கிழக்கு, தெற்கு பகுதிகளில் மட்டுமே 52 இலட்சம் மக்கள் உணவுக்காக சர்வதேச சமூகத்தின் உதவியை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். அது மட்டுமல்ல – ஏற்கெனவே சர்வதேச சமூகத்தின் உதவியால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் பாதுகாப்பு வலைத்திட்டம் தான் பட்டினியால் சாகும் அபாயமுள்ள 80 இலட்சம் கிராமப்புற மக்களை காப்பாற்றி வருகிறது. கோடிக்கணக்கான மக்களை பட்டினியில் சாகவிட்டுவிட்டு விளைச்சலை அந்நிய முதலாளிகளிடம் விற்பதை என்னவென்று சொல்வது?
பனை எண்ணெய்க்காகவும், தாவர எரிபொருள் எண்ணெய் உற்பத்திக்காகவும், பர்மா, இந்தோனேசியா போன்ற நாடுகளின் விளைநிலங்கள் காவு கொடுக்கப்பட்டதால்தான் ஏற்பட்டுள்ள நாசத்தை நாம் கண்கூடாகக் கண்டு வருகிறோம்.
அடுத்தப்படியாக நில அபகரிப்பு காரணமாக சூழலியல் பாதிப்புக்கு இரையாகப் போவது அண்டை நாடான பாகித்தான். கத்தார் நாடு பாகித்தானின் பஞ்சாப் மாநிலத்தில் 16 இலட்சம் எக்டேரில் உணவு உற்பத்தியைத் தொடங்கவிருக்கிறது. இதனால் 25,000 கிராமங்களில் மக்கள் தங்கள் விளைநிலங்களையும் வாழ்விடங்களையும் விட்டு துரத்தப்படுவார்கள். சவூதி அரேபியாவும் பாகித்தானில் 5 இலட்சம் ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்துள்ளது. பாகித்தானில் வேளாண் நிலங்களை நிறுவனங்களுக்கு வாரி வழங்கும் படலம் முசாரப் அதிபராக பொறுப்பிலிருந்த காலத்தில் வேகமெடுத்தது. அதற்கு முன்பே பாகித்தானில் விவசாயம் மிக மோசமான நிலையில் தான் இருந்து வந்தது.
1967லிலேயே பாகித்தான் மெக்சிகோவிலிருந்து 47,000 டன் குட்டைரக கோதுமையின் ‘உயர் தரமான’ விதைகளை இறக்குமதி செய்திருந்தது. (அதற்கு முன் 1966இல் இந்தியா மெக்சிகோவிலிருந்து 18,000 டன் கோதுமை விதையை இறக்குமதி செய்துதான் பசுமைப் ’புரட்சியை’(!) தொடங்கியிருந்தது). விவசாயத்தை தாராளச் சந்தை அழிப்பது ஏன், எவ்வாறு என்று அந்நாட்டின் பொருளாதார வல்லுனர்களே கூறுகின்றனர்.
தனிநாடுகளின் இந்த நிலைமை தொடர்ந்தால் உலகம் முழுவதிலுமுள்ள நாடுகள் பலவும் பட்டினிச்சாவை எதிர்நோக்கும் அபாயநிலை ஏற்படும். இதனைத் தடுக்க சர்வதேச அமைப்புகள் இதுவரை என்ன நடவடிக்கை எடுத்துள்ளன?
உலகெங்குமுள்ள 16 சர்வதேச வேளாண் ஆராய்ச்சி நிலையங்களின் நிர்வாக அமைப்புதான் ‘சர்வதேச வேளாண் ஆராய்ச்சிக்கான அலோசனைக் குழு’(CGIAR) முதலில் சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிலையம்(IFPRI) நில அபகரிப்பு நடவடிக்கையில் நிறுவனங்களுக்கு நடைமுறை விதிகளை ஏற்படுத்துவது குறித்துப் பேசியது. இப்போது சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிலையம்(IRRI) அதிகமாக அரிசி விளைவிப்பதற்காக சவூதி அரேபியாவின் நிறுவனங்களுடன் பல ஒப்பந்தங்களை செய்திருக்கிறது! சர்வதேச வேளாண் ஆராய்ச்சிக்கான ஆலோசனைக் குழு(CGIAR) சிறு விவசாயிகளுக்கு உதவும் கடமையைக் கைவிட்டு நீண்டகாலமாகிவிட்டது. தற்போது பில் மற்றும் மெலிந்தா கேட்சு அமைப்பு உள்ளிட்ட பெருங் குழும முதலாளிகளுக்கு எந்தெந்த நாடுகளில் நிலங்களைப் பறித்து விவசாய உற்பத்தி செய்யலாம் என்று அறிவுரை வழங்கி வருகிறது.
ஒருபுறம் வங்கிகளும், காப்பீட்டுக் கழகங்களும் பெரு முதலாளிகளின் நில அபகரிப்புக்கு எவ்வித உத்தரவாதமும் பெறாமல் கடனுதவி அளிப்பதற்காக சாதாரண மக்களின் சேமிப்புகளை வீணாக்கி வருகையில், மறுபுறம் ஆராய்ச்சி நிறுவனங்கள் அனைத்தும் புவி வெப்பமாதல் பற்றியும் உணவு உற்பத்திப் பெருக்கம் பற்றியும் ஓயாமல் பேசி வருகின்றன. “எதிர்வரும் அபாயத்தை நாம் உணருமுன்பே நம் காலடியில் உள்ள நிலம் கைமாறிப் போயிருக்கும்! எனவே இந்த உணவுக் கொள்ளையர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்கிறார் உணவுக் கொள்கை ஆய்வாளரான தேவீந்தர் சர்மா.

உணவு மற்றும் வேளாண் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் யாக்வெசு தியோஃப்(Jaques Theoph), “உள்நாட்டின் உணவு மற்றும் பிற வேளாண் பொருட்களின் உற்பத்திக்காக அந்நிய நாடுகளில் நிலம் வாங்கினால் கச்சாப் பொருட்களுக்கன விலையும், அவற்றின் உற்பத்தியாளர்களுக்கான கூலியும் அநியாயமாகக் குறைந்து புதுக் காலனி ஆதிக்கம் ஏற்பட ஏதுவாகும்” என்று கூறினார்.
ஆனால் இதற்கு எதிராக உணவுப் பொருள் வணிகத்துக்கு ஆதரவாக வாசிங்டனிலுள்ள சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஓவாச்சிம் வான் பிரவுன் பின்வரும் பதிலைக் கூறினார்.
“சர்வதேசச் சந்தையை அண்டியிருப்பதால் இறக்குமதி செய்யும் நாடுகள் விலை உயர்வால் மட்டுமின்றி முக்கியமாக – பொருட்களின் வரத்து தடைப் படுவதாலும் பாதிக்கப்படும் நிலை உள்ளது. அந்நாடுகள் தடையற்ற உணவுப் பொருள் வரத்துக்கு உத்தரவாதம் இருக்க வேண்டுமெனக் கருதுகின்றன”.
மேற்கூறியவற்றைப் பார்க்கும்போது, உள்நாட்டு மக்களுக்கான உணவை உற்பத்தி செய்வதற்காக அந்நிய மண்ணில் உற்பத்தி செய்வது ஏற்கெனவே பட்டினிக்கு ஆளான மக்கள் வாழும் ஏழை நாடுகளை மேலும் சுரண்டுவதுதான் என்பது தெளிவாக விளங்கும். நிலங்களைக் கையகப்படுத்தும் பன்னாட்டு நிறுவனங்கள் வேளாண் உற்பத்தியை பெரும் இலாபத்திற்கு வேறு நாட்டில் விற்பனை செய்வதால், உள்நாட்டில் மக்கள் உணவுக்குப் போதுமான நிலம் இல்லாமல் பஞ்சத்தில் மாள்வதை அறிந்தே இந்த நிலக் கொள்ளைக்கு சுரண்டல்வாத அரசுகள் வழியமைத்துக் கொடுக்கின்றன. அது மட்டுமின்றி விளை நிலங்களை பன்னாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்வது, “வேளாண் உற்பத்தியில் தனியார் முதலீட்டை அதிகளவில் ஊக்குவிக்கும்” என்றும், “பொறுப்புள்ள சர்வதேச வேளாண் முதலீட்டை நல்ல முறையில் ஊக்குவிக்க நடைமுறை விதிகளை உருவாக்க வெண்டும்” என்றும் ஐ.நா. சபையும் உலக வங்கியும் இதற்கு சப்பைக் கட்டு கட்டுகின்றன.
2008ஆம் ஆண்டு வட அமெரிக்காவில் தொடங்கி உலகெங்கும் பாதிப்புகளை ஏற்படுத்திய பொருளாதார நெருக்கடியின் மோசமான விளைவுகளை இன்றுவரை அனுபவித்து வருகிறோம். விளை நிலங்களின் பரப்பளவு குறைவதால் உலகெங்கும் உணவுப் பற்றாக்குறையும் அதிகரித்து வருகிறது. முதலாளிகளுக்கு இந்த இரண்டு பற்றாக்குறைகளும் சேர்ந்து புதியதோர் இலாபகரமான தொழிலுக்கு வழியமைத்துள்ளன. பொருளாதார நெருக்கடியால் மலிவாகிவிட்ட விளைநிலம், குறைந்த கூலியில் கிடைக்கும் உழைப்பு, அதிக விலைக்கு விற்கக்கூடிய உணவை விளைவிக்கும் நிலத்தை வாங்கக் கிடைக்கும் கடனுதவி – இவையாவும் பெருமுதலாளிகளை நிலக் கொள்ளைத் தொழிலை நோக்கி கவர்ந்திழுக்கின்றன.
உலக வங்கி, சர்வதேச நிதி நிறுவனம், மறுகட்டமைப்புக்கும் வளர்ச்சிக்குமான ஐரோப்பிய வங்கி போன்ற பகாசுர நிதி நிறுவனங்கள் நில அபகரிப்புக்கு பெரும் தொகைகளை கடனாக அளிக்கின்றன. இதற்காக அரசுகளை நில உரிமைக் கொள்கைகளை மாற்றியமைக்குமாறு வற்புறுத்தி வருகின்றன.(அண்மையில் இந்திய அரசு அயல் நாட்டவர் இந்தியாவில் விளைநிலம் வாங்கலாம் என்ற சட்டத்தை முன் வைத்தும், அதனை எதிர்த்து வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் தலைமையில் தஞ்சையில் ஏப்ரல் 17 அன்று தாளாண்மை உழவர் இயக்கம், தமிழக உழவர் முன்னணி, தமிழ் தேசப் பொதுவுடைமைக் கட்சி, மனித நேய மக்கள் கட்சி, இந்திய பொதுவுடைமைக் கட்சி, தஞ்சையிலுள்ள பல்வேறு உழவர் சங்கங்கள் இவையாவும் ஒன்றிணைந்து தஞ்சையில் எதிர்ப்பு மாநாடு நடத்தியது நினைவிருக்கலாம்.)
நிலப்பறிப்பில் உலக வக்கி போன்ற கொள்ளை இலாபம் ஈட்டும் நிதி நிறுவனங்கள் மட்டுமின்றி, 2008 பொருளாதார நெருக்கடியில் திவாலாகி, பின்பு வட அமெரிக்க அரசின் நிதி உதவியால் பிழைத்துப் போன மார்கன் சிடான்லி, டாயிச் வங்கி, கோல்ட்மேன் சாக்சு ஆகியவை பெருமளவு முதலீடு செய்துள்ளன. மக்களின் இயல்பான உரிமையாக இல்லாமல் பொருள் படைத்தவரின் தனியுரிமையாக உணவை மாற்றும் சூதாட்டத்தில் கொழுத்த இலாபம் அடைவதற்காக உலகெங்கிலும் விளை நிலங்களை இந்நிறுவனங்கள் அபகரித்துள்ளன.
பஞ்சம் தலைவிரித்தாடும் நாடுகளில் மட்டுமின்றி, தென் அமெரிக்க நாடுகளான பிரேசில், அர்எதினா, உருகுவே, பராகுவே ஆகியவற்றிலும் விளைநிலங்களை வாங்க இந்தியா, சீனா உள்ளிட்ட பல நாடுகள் போட்டியில் இறங்கியுள்ளன. தென் அமெரிக்காவில் விளை நிலங்களை வாங்குமாறு இந்திய அரசு இந்திய முதலாளிகளை ஊக்குவித்து வருகிறது.
சிறப்புப் பொருளாதார மண்டலம் என்ற பெயரில் நாட்டின் ஏழை விவசாயிகளின் வாழ்வாதாரமான சிறுதுண்டு நிலங்களையெல்லாம் பிடுங்கி பெருமுதலாளிகளின் வசம் ஒப்படைக்கும் இந்திய அரசு, அதே மக்களின் உணவுத் தேவையை நிறைவேற்ற வெளிநாடுகளில் நிலம் வாங்கும்படி முதலாளிகளை ஊக்குவிக்கிறது. ஒட்டுமொத்த நாட்டின் உணவு உற்பத்தையை நாட்டை ஆளும் பெருமுதலாளிகளுக்கு வாங்கித்தரும் தரகு வேலையைத்தான் இந்திய அரசு முழு வேகத்தில் செய்து வருகிறது.
டாட்டாவிற்கு நிலத்தை தாரைவார்க்க சிங்கூரில் மக்களை வேட்டையாடிய மேற்கு வங்க அரசும், அதே டாட்டாவிற்கு தூத்துக்குடியில் நிலத்தை விற்க முயன்ற தமிழ்நாட்டின் அரசும், பீகார், ஒரிசா, யார்கண்ட், சத்தீசுகர் ஆகிய மாநிலக்களின் கனிம வளங்களை பன்னாட்டு நிறுவனங்களுக்கு விற்று தரகு கூலியை அள்ளும் இந்திய அரசும், நமது “மக்கள் பிரதிநிதிகள்” தரகு வேலையில் கைதேர்ந்தவர்களே என்பதையே பறைசாற்றுகின்றன. நாட்டை ஆள்வது காங்கிரசு கட்சி அல்ல - நிறுவனங்களே என்றும் உறுதி செய்கின்றன.
தூத்துக்குடியில் டைட்டானியம் ஆக்சைடு அகழ்தெடுக்கும் டாட்டாவின் திட்டம் பொதுமக்களின் போராட்டத்தால் தற்காலிகமாக கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இரகசியமாக பல பகுதிகளில் ஓசைப்படாமல் நிலம் கையகப்படுத்தப்பட்டு வருவதால் நாட்டிலேயே அதிகமான சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் தமிழ்நாட்டில்தான் உள்ளன.

மார்க்சிட் கம்யூனிட்டு கட்சி ஆட்சியின் கீழுள்ள சிங்கூரில் காவல்துறையும் துணை இராணுவப் படைகளும் மக்களை வேட்டையாடின. தற்போது வடமாநிலங்களில் இராணுவமும் காவல்துறையும் பழங்குடி மக்களை ஒரேடியாக ஒழித்துக் கட்டிவிட்டு, கனிமங்களை கொள்ளையடிக்க பன்னாட்டு நிறுவனங்களுக்கு நிலங்களை வாரி வழங்கி முற்படுகின்றன.
வருகின்ற 10-15 வருடங்களில் பருப்பு உற்பத்தியைப் பெருக்க வேண்டும் என்ற அறிவிப்போடு அரியானா முதலமைச்சர் தலைமையிலான செயற்குழு ஒன்று அமைக்கப்பட்டது. இக்குழு யூன் 6ஆம் நாள் ஒரு வரைவு அறிக்கையை அளித்துள்ளது. இக்குழுவில் மேற்குவங்க முதல்வர், பீகார் முதல்வர், பஞ்சாப் முதல்வர் உறுப்பினர்களாக உள்ளனர். இவ்வறிக்கை கனடா, அர்எதினா. ஆத்திரேலியா, பர்மா ஆகிய நாடுகளில் நிலம் வாங்கி பருப்பு விளைவிக்க வேண்டும் என பரிந்துரை செய்கிறது. இதே அறிக்கை எண்ணெய் வித்துகளின் உற்பத்தியை அதிகரிக்க ஆசிய நாடுகளில் நிலம் அபகரிக்க அறிவுறுத்துகிறது.
நிலப்பறிப்பு அரசியல் கூட்டணியில் மார்க்சிட் கட்சியின் மேற்கு வங்க அரசும் சேர்ந்திருப்பது சீரழிவின் புதிய நிலை; ஆபத்தின் புதிய வளர்ச்சி.
மிகப்பெரும் சனநாயக நாடு, வளரும் நாடு என்ற நிலையிலிருந்து வல்லரசாக மாறி சர்வதேச அரங்கில் அந்நிலையைத் தக்கவைத்துக் கொள்வதற்காக வல்லரசுகள் மேற்கொள்ளும் அனைத்துவித மக்கள் விரோத நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது இந்திய அரசு.
உணவை உற்பத்தி செய்யும் விளைநிலங்களை பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்த்துக் கொண்டிருப்பதை உடனடியாக நிறுத்தாவிட்டால், மண்ணைத் தின்று வாழும் ஐத்தி மக்களை போல, எத்தியோப்பிய மக்களைப் போல நாமும் பட்டினியால் கூட்டங் கூட்டமாக மடியும் நாள் வெகு தூரத்திலில்லை.
எனவே இந்திய விளை நிலங்களை பன்னாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதையும், வெளிநாடுகளில் இந்திய நிறுவனங்கள் விளைநிலங்களை வாங்கிக் குவிப்பதையும், எதிர்த்து தொடர் போராட்டங்களை முன்னெடுப்பது நமது அவசரமான, அவசியமான கடமை.
ஏனெனில் இவை ஒரே பிரச்சனையின் இரண்டு கூருகல். வேளாண் வல்லாதிக்கத்தின் இரண்டு முனைகள்.
ஆதாரங்கள்:
1) Food pirates are extending their reach: Africa is an easy target – Devinder Sharma, June 2009.
2) Govt. wants Indians to buy land in South America – Jayenth Jacob, Hindustan Times, May 18,2010.
3) FAO and World Bank back Food Pirates – Devinder Sharma, Nov 18,2009.
4) The New Landlords – indrani Bagchi, Times of India, 26 Sept, 2009.
5) Food pirates are extending their Tentacles – Pakistan an easy Target - Devinder Sharma, Sept 24, 2009.
6) India joins ‘Neocolonial’ rush for Africa’s Land & Labour – Dean Nelson, The Daily Telegraph, London.
7) Firms buy up African Farms to raise crops that will be ‘sold’ to India – Dinesh C.sharma, Mail Today, june 25, 2009.
8) Grain Briefing, October 2008: Seized! The 2008 land grab for food and financial security – www.grain.org.

- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1