ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீண்டும் ஒரு இனக்கலவரம் eelaththile

3 posters

Go down

மீண்டும் ஒரு இனக்கலவரம் eelaththile  Empty மீண்டும் ஒரு இனக்கலவரம் eelaththile

Post by கண்ணன்3536 Tue Jan 25, 2011 9:49 am

அனுராதபுர சிறைச்சாலையில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: தமிழ்க் கைதிகளுக்கு உயிராபத்து? ஆறு போ் ஸ்தலத்திலேயே பலி? (ஒரு கைதியின் அவலக்குரல் இணைப்பு)
[ திங்கட்கிழமை, 24 சனவரி 2011, 01:40.15 PM GMT ]

அனுராதபுரம் சிறைச்சாலையில் சற்றைக்கு முன் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் கேட்டுள்ளதுடன், அதன் காரணமாக அங்குள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கும் உயிரச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக ஊர்ஜிதப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.


அனுராதபுர கைதிகள் நேற்று மாலை தொடக்கம் சிறைச்சாலை நிர்வாகத்திற்கு எதிரான உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டிருந்தார்கள்.அதனையடுத்து அப்பிரதேசமெங்கும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டார்கள்.

அவ்வாறான நிலையில் இன்று மாலை திடீரென சிறைச்சாலைப் பிரதேசத்தில் இருந்து துப்பாக்கிப் பிரயோக சப்தங்கள் கேட்டுள்ளன. அத்துடன் கல்லெறி சம்பவங்களும் நடந்துள்ளதாக அறியப்படுகின்றது.

அங்குள்ள சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் தனியாக அடைக்கப்பட்டுள்ளார்கள். அத்துடன் அவர்கள் எந்தவொரு ஆபத்தான கட்டத்திலும் அவர்கள் ஓடித்தப்ப முடியாதளவுக்கு அவர்கள் தடுக்கப்பட்டுள்ளார்கள்.

இவ்வாறான நிலையில் தற்போது மேற்கொள்ளப்படும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் தமிழ் அரசியல் கைதிகளை இலக்கு வைத்தே மேற்கொள்ளப்படுவதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது. துப்பாக்கிப் பிரயோகம் காரணமாக தற்போதைக்கு நான்கு போ் வரை காயமடைந்துள்ளதாகவும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறான நிலையில் அங்கு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் உயிருக்கு உத்தரவாதம் பெற்றுக் கொள்ளும் நடவடிக்கையில் தமிழ் அரசியல் வாதிகளும், முக்கியஸ்தர்களும் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கைதிகள் மற்றும் அவர்களின் உறவினர்கள் சார்பில் அவசர வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் இணைப்பு

சிறைச்சாலையின் கைதிகள் தங்கவைக்கப்பட்டுள்ள பகுதியில் சிவில் குண்டர்கள் தீவைத்துள்ளதுடன், துப்பாக்கிப் பிரயோகம் காரணமாக ஆறு போ் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தற்போதும் சிறைச்சாலைப் பகுதியில் இருந்து பலத்த புகை மண்டலம் கிளம்பிக் கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக தமிழ்க் கைதிகள் இலக்கு வைத்துத் தாக்கப்படுவதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் உறுதிப்படுத்துகின்றன. இரண்டு போ் தற்போதைக்கு காயமடைந்துள்ளனர். இலங்கை நேரப்படி இன்று மாலை ஆறரை வரை காயப்பட்டவர்களை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல முடியாதளவுக்கு நிலைமைகள் கடும் மோசமாக இருந்ததாக அறிவிக்கப்படுகின்றது.

தற்போதைக்கு ஆறு அம்புலன்ஸ் வண்டிகள் மூலம் இருபதுக்கும் அதிகமான கைதிகள் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. ஆயினும் ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் வரையில் காயமுற்றிருப்பதற்கான அறிகுறிகள் இருப்பதாக அங்கிருக்கும் எமது விசேட செய்தியாளர் தெரிவிக்கின்றார்.அதற்கு மேலதிகமாக சுமார் இருபது வரையான அம்புலன்ஸ் வண்டிகள் அப்பகுதிக்கு சைரன் ஒலியெழுப்பிக் கொண்டு சென்றுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கைதிகள் பெரும்பாலும் தலையில் இரத்தம் வழிந்தோடும் நிலையில் காணப்பட்டதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிடுகின்றார்.

இன்று காலை அனுராதபுர நீதிவான் நீதிமன்றத்தில் ஏற்பட்ட தீ அனர்த்தத்தின் போது முன்னை நாள் வடமத்திய மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் மேஜர் ஜெனரல் ஜானக பெரேராவைப் படுகொலை செய்த கொலையாளியின் குற்ற அறிக்கையும் எரிந்து நாசமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன் பின்பே இன்று நண்பகல் தொடக்கம் சிறைச்சாலைக்குள் கடும் கொந்தளிப்பான நிலை ஏற்பட்டுள்ளது.

அதன் பின் இன்று மாலை தமிழ் அரசியல் கைதிகள் இலக்கு வைத்துத் தாக்கப்பட்டுள்ளார்கள். சிறைச்சாலை நிர்வாகத்தின் ஏற்பாட்டில் அதற்கென வெளியிலிருந்து நன்கு பயிற்சி பெற்ற குண்டர்கள் தருவிக்கப்பட்டுள்ளனர்.

தற்போதைய நிலையில் அங்கிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளுக்குப் போதுமான பாதுகாப்பு வழங்கப்படாத பட்சத்தில் இன்று இரவுக்குள் அவர்கள் அனைவரும் உயிராபத்தை எதிர்நோக்க வேண்டிய நிலையில் இருப்பதாக அவசர எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

நான்காம் இணைப்பு

அனுராதபுர சிறைச்சாலைக் கலவரத்தில் மூன்று கைதிகள் பலியாகி இருபத்தி மூன்று போ் காயமடைந்துள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் வீ. ஆர்.டீ. சில்வா தமிழ்வின்னுக்குத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கைதிகள் தரப்பிலிருந்து மாலை 5.30 மணியளவில் கல்லெறித் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும், அதன் பின்பு துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்டதாகவும் காயமுற்ற நிலையில் அனுராதபுரம் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறைச்சாலையின் பிரதான சிறை அதிகாரி காமினி சில்வா தமிழ்வின் செய்தியாளருக்குத் தெரிவித்துள்ளார்.

ஆயினும் ஸ்தலத்துக்கு அருகில் வசிக்கும் எமது விசேட செய்தியாளரின் தகவல்களின் பிரகாரம், மாலை நான்கு மணி தொடக்கம் உண்ணாவிரதத்தில் இருந்த கைதிகளைத் தாக்குவதற்கான ஏற்பாடுகள் பலமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதன் பின்பு சிறைச்சாலை அதிகாரிகளில் சிலர் சிறைச்சாலை நூலகம் மற்றும் சமையலாறை என்பவற்றைத் தீயிட்டுக் கொளுத்தியுள்ளதுடன், கற்களால் எறிந்தும் சேதப்படுத்தியுள்ளார்கள்.அதனை சிறைக் கைதிகளே மேற்கொண்டதாக கூறப்படுவது அபத்தமானது என்றும், தான் அதனை சிறைச்சாலைக்கு அண்மையில் இருக்கும் கட்டிடமொன்றின் மேல்மாடியிலிருந்து நேரடியாக அவதானித்துக் கொண்டிருந்ததாகவும் எமது விசேட செய்தியாளர் குறிப்பிடுகின்றார்.

அதற்கு மேலதிகமாக அனுராதபுரம் சிறைச்சாலை அமைந்துள்ள அனுராதபுரம்-புத்தளம் பாதையில் மாலையாகும் போது பல புதியவர்கள் நடமாடிக் கொண்டிருப்பதை அவதானிக்க முடிந்ததாகவும், அவர்கள் ஒன்றில் குண்டர்களாக அல்லது இராணுவத்தரப்பினராக இருக்கலாம் என்று அப்பகுதி மக்கள் பேசிக் கொண்டதாகவும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

அந்தவகையில் எமக்குக் கிடைத்துள்ள தகவல்களின் பிரகாரம் அனுராதபுர சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆபத்து விளைவிக்கும் நோக்கிலேயே திட்டமிட்ட ரீதியில் கலவரம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆயினும் கலவரம் குறித்த தகவல்கள் உடனடியாக ஊடகங்களால் வெளிக்கொணரப்பட்ட நிலையில் சதிகாரர்களின் முயற்சி கைகூடாமல் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. அதன் காரணமாக பாரிய உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் குறிப்பிடுவது போன்று மூன்று போ் மட்டுமே இறந்துள்ளதாக கூறப்படுவது பொய் என்று குறிப்பிட்ட எமது செய்தியாளர், குறைந்தது ஆறு போ் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் அவர்களில் பெண்ணொருவரும் உள்ளடங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.

அதற்கு மேலதிகமாக பதினொரு கைதிகள் மற்றும் எட்டு சிறைச்சாலை அதிகாரிகள் காயமுற்ற நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்களின் மண்டை உடைக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்பும் இரத்தம் வழிந்தோடிக் கொண்டிருந்திருக்கின்றது.

அத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் மூன்று பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவர்களில் ஒருவர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் காயமுற்றுள்ள ஐவர் கைதிகளோ, சிறைச்சாலை அதிகாரிகளோ அல்லவென்றும் தெரிய வருவதுடன், அவர்கள் யார் என்பது பற்றிய தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. பிரஸ்தாப நபர்கள் கைதிகளைத் தாக்குதவற்காக வெளியிலிருந்து தருவிக்கப்பட்ட குண்டர்களாக இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகின்றது
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010

http://liberationtamils.blogspot.com

Back to top Go down

மீண்டும் ஒரு இனக்கலவரம் eelaththile  Empty Re: மீண்டும் ஒரு இனக்கலவரம் eelaththile

Post by சிவா Tue Jan 25, 2011 9:55 am

வேதனையான செய்தி...

ஈழத்திற்கு விடிவே இல்லையா?


மீண்டும் ஒரு இனக்கலவரம் eelaththile  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மீண்டும் ஒரு இனக்கலவரம் eelaththile  Empty Re: மீண்டும் ஒரு இனக்கலவரம் eelaththile

Post by ப்ரியா Tue Jan 25, 2011 10:29 am

ஈழத்தமிழர் வாழ்வு விடியலுக்காக எங்கும் இரவுகள் போல ஆகிவிட்டது ..ஆண்ட இனம் அடிமையாக வாழ்கின்றது ...சொல்ல முடியாத சோதனைகளே வாழ்க்கை சோகம் சோகம் அழுகை அழுகை அழுகை
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

மீண்டும் ஒரு இனக்கலவரம் eelaththile  Empty Re: மீண்டும் ஒரு இனக்கலவரம் eelaththile

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
»  நைஜீரியாவில் இனக்கலவரம்: 19 பேர் சாவு - 4500 மக்கள் வெளியேற்றம்
» திரிபுராவில் மீண்டும் மலர்ந்த தாமரை. பாஜக மீண்டும் வெற்றி பெற காரணம் என்ன?
» தமிழர்கள் இந்தியர்கள் அல்ல என்று மீண்டும் மீண்டும் சொல்லும் இந்தியா !!
» மலேசியாவில் 80 முறை மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் சமையல் எண்ணெய் கண்டுபிடிப்பு
» தமிழகத்துடன் கேரளா மீண்டும், மீண்டும் வம்பு : பெரியாறு புதிய அணைக்கு இன்று புது ஆய்வு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum