ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புல்லாங்குழல் வாசிக்கப்படட்டும்...(கவிஞர் செல்வா)

5 posters

Go down

புல்லாங்குழல் வாசிக்கப்படட்டும்...(கவிஞர் செல்வா) Empty புல்லாங்குழல் வாசிக்கப்படட்டும்...(கவிஞர் செல்வா)

Post by j.selvaa Tue Jan 25, 2011 9:14 am

பருவ உணர்ச்சியென்னும்
முள் கிரீடத்தைச் சுமக்கும்
கன்னி மலர்களே !
உயிர்ப் பிணங்களே!

கல்யாணப் பத்திரிக்கையைத்தவிர
எல்லாப் பத்திரிக்கைக்கும்
ஆயுள் சந்தா செலுத்தியவர்களே!

ஜாதகம் என்னும்
சமூகச் சகதிக்குள்
சிக்கிச் சிதைந்துபோன
சித்திரங்களே!

கருவரையென்னும்
இருட்டறைக்குள்
கருக்கொண்டதால்
உங்களது கனவுகள்
கறுப்பாகிப்போனாதா?

சாஸ்திரவாதிகளின்
கால்களில் விழுந்தே
முதுகெலும்பு முடமாக்கப்பட்டு
இளமைக்காலம்
நரைத்துப்போனவளே!

உன் இளமைக்குச்
சிறகுகள் கிடைத்தும்
பறந்து செல்வதற்கு
வானம் வாய்க்கவில்லையா?

உன்பருவத்தின் மீது
காதல் நெருப்பு மூட்ட
தேசிங்குராஜன் இன்னும்
தேரோடு வரவில்லையா?

தேதி கிழித்தே
தேய்ந்து போனவளே..

உன் புல்லாங்குழல்
மூங்கிலாய் முளைக்கும்போதே
ஊமையாகும்படி
உத்தரவிடப்பட்டுவிட்டதா?

உனது மொட்டுக்கள்
மலர்வதற்கு முன்னரே
சருகாக்கும்படி
சபிக்கப்பட்டுவிட்டதா?

இந்தச் சமூகம்
உன் கைகளில்
விளக்குகளைத் தந்துவிட்டு
திரிகளை திருடிக்கொண்டதா?

இதழ்களைத் தந்துவிட்டு
புன்னகையை புடுங்கிங்க்கொண்டதா?

சுதந்திர இந்தியா
விடிந்த பிறகும்
ஆணாதிக்க காட்டுமிராண்டிகளுக்கு
உன் அழுகுரல்
கேட்கவில்லயா?
இல்லை....
சங்ககாலம் தொட்டு
சமகாலம் வரை
இன்னும் உன் கண்ணீர்
பரீசீலிக்கப்படவே இல்லையா?

போதுமடி சகோதரி
போதும் ....

சமூகவாதிகளுக்கு
செவிசாய்த்தே-உன்
இளமை நரைத்தது போதும்...

ஆண்வர்க்கம் நடத்திய
அடக்குமுறையில்
பெண்மையின் மென்மை
பேதலித்தது போதும்......

அறியாமையென்னும்
அடிமை விலங்கை
உடைத்தெறி...

அடக்குமுறையின்
ஆணிவேரை
அறுத்தெரி...

சருகாகும்படி-உன்னைச்
சபித்தவர்களை
விழி நெருப்பால்
பொசுக்கு...

சாஸ்திரங்களை
எரித்து
பெண்மையை உசுப்பு..

எதிர்வரும் நூற்றாண்டிலாவது
உன் பருவங்கள் புசிக்கப்படட்டும்.....
புல்லாங்குழல் வாசிக்கப்படட்டும்....


தமிழனாய் தலை நிமிரும்,

கவிஞர் செல்வா
காரியாபட்டி.
j.selvaa
j.selvaa
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 11
இணைந்தது : 10/01/2011

http://இன்ஃபோஜ்.செல்வா@ஜிமெய்ல்.கொம் ,

Back to top Go down

புல்லாங்குழல் வாசிக்கப்படட்டும்...(கவிஞர் செல்வா) Empty Re: புல்லாங்குழல் வாசிக்கப்படட்டும்...(கவிஞர் செல்வா)

Post by சிவா Tue Jan 25, 2011 9:25 am

ஆண்களின் அடக்கு முறைகளை உடைத்தெறிய பெண்களுக்கு கூறப்பட்டுள்ள ஊக்க வரிகள் அருமை!

ஆனால் இப்பொழுது உள்ள பெண்களுக்கு அடிமை விலங்கிடப்பட்டுள்ளதா? ஆண் ஆதிக்கம் இன்னும் உள்ளதா? பெண்களுக்கு சுதந்திரம் இல்லையா?

எதிர்வரும் நூற்றாண்டு வரை பெண்கள் காத்திருக்க வேண்டியதில்லை. இப்பொழுதே அவர்களுக்கு முழுச் சுதந்திரம் கிடைத்துவிட்டது என்பதே என் கருத்து.

ஓரிரு இடங்களில் மட்டும், ஆணாதிக்கவாதிகள் மனைவியை அடக்கி வைக்கும் நிகழ்வுகள் இப்பொழுதும் உண்டு. ஆனால் 90% பெண்களுக்கு சுதந்திரம் உள்ளது.


புல்லாங்குழல் வாசிக்கப்படட்டும்...(கவிஞர் செல்வா) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

புல்லாங்குழல் வாசிக்கப்படட்டும்...(கவிஞர் செல்வா) Empty Re: புல்லாங்குழல் வாசிக்கப்படட்டும்...(கவிஞர் செல்வா)

Post by கலைவேந்தன் Tue Jan 25, 2011 12:03 pm

அருமையான சமூகச்சாடல் ... நன்றி கவிஞரே...!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

புல்லாங்குழல் வாசிக்கப்படட்டும்...(கவிஞர் செல்வா) Empty Re: புல்லாங்குழல் வாசிக்கப்படட்டும்...(கவிஞர் செல்வா)

Post by SK Tue Jan 25, 2011 12:08 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

புல்லாங்குழல் வாசிக்கப்படட்டும்...(கவிஞர் செல்வா) Empty Re: புல்லாங்குழல் வாசிக்கப்படட்டும்...(கவிஞர் செல்வா)

Post by ARR Tue Jan 25, 2011 12:13 pm

கவி வரிகளில் தாண்டவமாடும் சொல்லாடல்களைச் சுவைத்துக்கொண்டே வந்தபோது, கல்லாய் கடிபட்டது ஒரு வரி..

(எதிர்வரும் நூற்றாண்டிலாவது
உன் பருவங்கள் புசிக்கப்படட்டும்.....)

அட .. இதற்குத்தான் கவிஞர் எழுத்தாடினாரா என ஒரு ஆயாசம்.. அதற்குக்கூட ஒரு நூற்றாண்டு காத்திருக்க வேண்டுமோ..?




புல்லாங்குழல் வாசிக்கப்படட்டும்...(கவிஞர் செல்வா) 0018-2புல்லாங்குழல் வாசிக்கப்படட்டும்...(கவிஞர் செல்வா) 0001-3புல்லாங்குழல் வாசிக்கப்படட்டும்...(கவிஞர் செல்வா) 0010-3புல்லாங்குழல் வாசிக்கப்படட்டும்...(கவிஞர் செல்வா) 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

புல்லாங்குழல் வாசிக்கப்படட்டும்...(கவிஞர் செல்வா) Empty Re: புல்லாங்குழல் வாசிக்கப்படட்டும்...(கவிஞர் செல்வா)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum