புதிய பதிவுகள்
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 8 Poll_c10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 8 Poll_m10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 8 Poll_c10 
89 Posts - 77%
heezulia
எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 8 Poll_c10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 8 Poll_m10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 8 Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 8 Poll_c10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 8 Poll_m10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 8 Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 8 Poll_c10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 8 Poll_m10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 8 Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 8 Poll_c10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 8 Poll_m10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 8 Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 8 Poll_c10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 8 Poll_m10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 8 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 8 Poll_c10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 8 Poll_m10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 8 Poll_c10 
254 Posts - 77%
heezulia
எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 8 Poll_c10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 8 Poll_m10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 8 Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 8 Poll_c10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 8 Poll_m10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 8 Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 8 Poll_c10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 8 Poll_m10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 8 Poll_c10 
8 Posts - 2%
prajai
எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 8 Poll_c10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 8 Poll_m10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 8 Poll_c10 
5 Posts - 2%
Anthony raj
எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 8 Poll_c10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 8 Poll_m10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 8 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 8 Poll_c10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 8 Poll_m10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 8 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 8 Poll_c10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 8 Poll_m10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 8 Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 8 Poll_c10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 8 Poll_m10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 8 Poll_c10 
2 Posts - 1%
Barushree
எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 8 Poll_c10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 8 Poll_m10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 8 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் "


   
   

Page 8 of 13 Previous  1, 2, 3 ... 7, 8, 9 ... 11, 12, 13  Next

sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Mon Jan 24, 2011 11:07 pm

First topic message reminder :

அன்பு நண்பர்களே
இரண்டு ஆண்டுகளுக்கு முன் மின் தமிழ் குழுமத்தில்
எனக்குப் புரிந்தது இதுவே ! என்ற பெயரில் மனித மனத்தின் மாண்புகளைப்பற்றியும் ,சித்தர்கள்மனித உடலைப் பற்றி கூறிய தத்துவங்களையும் , உண்மைகளைப்பற்றியும் தொடராக சுமார் நாற்பது பகுதிகள் எழுதினேன் .

அதை மீள்பதிவாக நண்பர்களுக்கு வழங்கி பின் ,இதைத் தொடர எண்ணி இருக்கிறேன் .

தொடர் குறித்து அன்பர்கள் தங்கள் கருத்துக்களை வழங்கலாம் .

அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்


எனக்குப் புரிந்தது இதுவே !---1
---அண்ணாமலை சுகுமாரன்


யாருடனும் உன்னை ஒப்பிடாதே !
ஒவ்வொருவரும் அவரவர்
நிலையில் தனித்தனியே !
நீயும் உன் மகனும்
கூட வேறு வேறுதான்
அவரவர் வினையைப்
போக்கி ஞானம் பெறவே
அவரவர் வருகிறார்கள் !

உன் கடமை
உனது பாத்திரம் இப்போது தந்தை !
கொஞ்ச நாளுக்கு முன் நீயே
மகன்எனும் பாத்திரத்தில் இருந்தாய் !
இருக்கும் வரை கொடுத்த பாத்திரத்தை
குறைவரச் செய்வதே சுதர்மம் !

இதில் மற்றவருடன் உன்னை
ஒப்பிடுவது நாடகத்தில் அடுத்தவர்
வசனத்தை நீ பேசுவது போல் !,
அது உன் பணி அன்று !
அது உன்னையே நீ
அவமதித்துக் கொள்வது ஆகும் !

சுதர்மத்தில் வரும் தடைகளை
எண்ணி அதிகம் கலங்காதே !
எங்காவது சாவி இல்லாது
பூட்டுச் செய்கிறார்களா ?

எந்த பிரச்னையும் தீர்வுடன்தான்
வருகிறது ! சில சமயம் சாவியை
மறந்து விட்டுத் தேடுவது போல் ,
பல சமயம் நாம் தீர்வைத் தேடி அலைகிறோம் !
எப்போதும் தீர்வு ,பிரச்சனைக்கு
அருகில்தான் இருக்கும் !
பிரச்சினையை ஊன்றிப் பார் !

நீ சோகமாக இருந்தால்
வாழ்க்கை உன்னைப்
பார்த்துச் சிரிக்கிறது !
கையால் ஆகாதவன் என்று !

நீ சந்தோஷமாக இருந்தால்
வாழ்க்கை உன்னைப் பார்த்து
மகிழ்கிறது ! நீ மற்றவரை
சந்தோஷப் படுத்தினால்
வாழ்க்கை உன்னை
வாழ்த்துகிறது ! வணங்குகிறது !

ஒவ்வொரு வெற்றி பெற்ற மனிதனின்
பின்னணியிலும் அவன் ஏறி வந்த
ஒரு கடினமான சோகக் கதை இருக்கும் !
ஒவ்வொரு துயரக் கதையிலும்
நிச்சயம் ஒரு வெற்றிகரமான
முடிவிருக்கும் !நீ அந்தச் சுழற்சியில்
எங்கு இருக்கிறாயோ ! கஷ்டத்தை
ஒப்புக்கொள் ! வெற்றிக்குத் தயார் ஆகு !

மற்றவர் செய்யும் தவறுகளைப்
பேச நமக்கு ரொம்ப ஆசைதான் !
ஆனால் நம் தவறுகளை நாம்
உணர நமக்கு நேரமில்லை !
அதைத் தெரிந்து கொள்ளும் கடைசி ஆளாக
நாம்தான் இருப்போம் !
அனைவருக்கும் தெரிந்த பிறகுதான்
நமக்குப் புரியும் நம் தவறுகள் !
அப்போது தெரிந்து கொண்டும் பலன் இராது !
சுற்றி யாரும் இருக்க மாட்டர்கள் நம்மைத்
தொந்தரவு செய்ய !
தனிமையில்தான் இனிமை காணவேண்டி இருக்கும் !!

உஷாராக நாம் காலுறை அணிவதுதான்
புத்திசாலித்தனம் !
சாலை முழுவதும் முள் இல்லாது கமபளம்
விரிக்க முடியுமா ?
ஊரைத் திருத்தப் போவதை விட
நம்மை திருத்திக் கொள்வது
மிகச் சுலபம் !

யாரும் பின்னால் சென்று நடந்த
நிகழ்வின் ,மோசமான ஆரம்பத்தை
மாற்ற முடியாது !
எனவே சென்றதை எண்ணிச்
செயலிழக்க வேண்டாம் !
ஆனால் யாராலும் புதிய ஒரு மாற்றத்தால்
ஒப்பில்லாத சந்தோஷ முடிவை அடைய முடியும் !
முடிந்து விட்ட பிரச்னையைப் பற்றி
வருந்தி என்ன பயன் ?
ஒரு பிரச்சனை முடியாது என்றால்
அதைக் குறித்துப் புலம்பி என்ன பயன் !

நம்மைத் தேடி வரும் பிரச்னையை
மகிழ்வுடன் எதிர்கொண்டு
சந்தோஷத்துடன் வழியனுப்பு !
அதில் நீ மட்டும் பட்டும் படாமல் இருக்கப்
பயின்று கொள் !

தவற விட்ட வாய்ப்புகளை எண்ணிக்
கண்ணீரால் கண்களை குளமாக்காதே !
எதிரில் வந்து நிற்கும் நல்ல ஒரு
புதிய வாய்ப்பை அந்தக் கண்களின்
கண்ணீர் மறைத்து விடக்கூடும் !

முகத்தை மட்டும் மாற்றினால்
ஏதாவது மாற்றம் வருமா ?
மாற்றத்தை எதிர் கொள்ளும்
முகம்தான் மறுமலர்ச்சி தரும்
யாரைப் பற்றியும் குறையில்லை ,
நாம் மாறினால் போதும் ,
வாழ்வின் இனிமைக்கு
பிறரைச் சார்ந்து இராதீர்கள் !

மற்றவர் அபிப்ராயம் உங்களுக்கு,
உங்கள் மன நிம்மதிக்கு
நிச்சயம் தேவையானால்
நீங்கள் மகிழ்ச்சி கொள்ள வாய்ப்பே இல்லை !
மற்றவர்களுக்கு வேறு பல வேலை உண்டு
உங்களை மகிழ்விப்பதைத் தவிர !
-------------------------------------------


*இது முதலில் கவிதை அன்று !
கருத்துக்களை சுருக்கமாக சொன்னதால்
கவிதையாகிவிடாது .
நான் நடந்து வந்த பாதையில்
கண்டெடுத்த கற்கள் இவை ! பாதத்தில்
தைத்ததில் சில வைரக் கற்களும் உண்டு !
இந்தக் கருத்துக்கள் எதுவும் புதியன இல்லை !
பலரும் பகர்ததுவே !
கொள்வோர் இருப்பின் தொடரும்
உத்தேசம் உண்டு !

அன்புடன் ,
அண்ணாமலை சுகுமாரன்


sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Thu Jul 21, 2011 8:27 pm

இடையே பல்வேறு நிகழ்வுகள் !
தொடர்ச்சியாக ஈகரைக்கு வர இயலவில்லை .
இந்தக் கட்டுரைத்தொடரை மீண்டும் உங்கள் அனுமதியுடன் தொடர்ந்து விரைவில் முடிக்க எண்ணுகிறேன் .

இடையில் ஏற்பட்ட தாமத்திற்க்கு உங்கள் அனைவரையும் பொருத்தருளுமாறு வேண்டுகிறேன் .
அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Jul 21, 2011 8:44 pm

sugumaran wrote:இடையே பல்வேறு நிகழ்வுகள் !
தொடர்ச்சியாக ஈகரைக்கு வர இயலவில்லை .
இந்தக் கட்டுரைத்தொடரை மீண்டும் உங்கள் அனுமதியுடன் தொடர்ந்து விரைவில் முடிக்க எண்ணுகிறேன் .

இடையில் ஏற்பட்ட தாமத்திற்க்கு உங்கள் அனைவரையும் பொருத்தருளுமாறு வேண்டுகிறேன் .
அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்

தொடருங்கள் ஐயா காத்திருக்கிறோம் அன்பு மலர் அன்பு மலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 8 Ila
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Mon Jul 25, 2011 5:29 pm

எனக்கு புரிந்தது இதுவே ! (28 ) *

*எண்ணிய எண்ணியாங்கு !*


ஆமாம் ! வாழ்கை என்பது தான் என்ன ?
வாழ்க்கை என்பது என்ன என வேறு எப்படி விரிவாக கூறினாலும்
சுருக்கமாக ஒரே வரியில் கூறினால் வாழ்கை என்பது
இதுவரை நாம் எண்ணிய
எண்ணங்களின் மொத்த வடிவம் தான் .

எதுவரை நாம் எனன எனன எண்ணினோம் என்பதை மொத்தமாக எண்ணினால் ,நாம் வாழும் வாழ்க்கையும் ,நமது சூழ்நிலையும் ,நமது உருவமும் ஒருவாறு ஊகிக்கும் ஒழுங்கிலேயே இருக்கும் .

நாம் எண்ணும் எண்ணங்கள்தான் செயல்கள் ஆகி
பிறகு அதுவே பழக்கம் ஆகி பின் அந்த செயல்கள் தொடர்ந்து நடக்க
அதுவே வாழ்கை ஆகிறது.

இதில் எதுவும் ஐயம் இல்லை
எண்ணமே வாழ்வு !எண்ணம் போல் வாழ்வு ,மனம் போல் மாங்கல்யம்
என எந்த கிராமத்து மனிதரை கேட்டால் கூட நமது நாட்டில் கூறுவார்கள் !

இவ்வளவு தெரிந்தும் நாம் எண்ணும் எண்ணங்கள் நமது
கட்டுப்பாட்டில் இருக்கிறதா என்றால் இல்லை என்பது தான் உண்மை !
நாம் தான் நமது எண்ணங்களை உருவாக்குகிறோமா என்றால்அதுவும் இல்லை.
அல்லது வாழ்வில் ஒரு முறையாவது எண்ணத்தை நமது கட்டுப்பாட்டில்
வைக்க முயற்சியாவது செய்கிறோமா என்றால் இல்லை, இல்லை என்பதுவே பதில்

எண்ணங்கள் எப்படி உருவாகிறது என ஒருமுறை இப்போது எண்ணிப்பார்ப்போமா ?.

எண்ணங்கள் எப்படி உருவாகிறது என ஒரு சிறிய உதாரணம் பார்ப்போம் !

நாம் ஒரு குரங்கை பார்க்கிறோம் என்றுவைத்துக்கொள்ளுங்கள் ,
உடனே ஒரு குரங்கு நமது சிறுவயதில் நம்மை துரத்தியது நினைவுக்கு வரும் ,
அடுத்து நமது சிறுவயது நண்பன் ராமன் நினைவுக்கு வருவான்
அடுத்து ராமன் தற்ப்போது இருக்கும் அமெரிக்கா நினைவுக்கு வரும் ,
அடுத்து நாம் அமெரிக்கா வரும் மாதத்தில் போக இருப்பது நினைவுக்கு வரும் ,
அடுத்து அதற்க்கு விசா வாங்க நாளை சென்னை போக
இருப்பது நினைவுக்கு வரும் ,,
நாளை சென்னைக்கு எதில் போவது டிரைவர் நேரத்தில் வருவாரா என்ற பயம் வரும் , ஒரு
வேலை விசா கிடைக்காமல் போனால் என்ன செய்வது ?
அதற்க்கு என்ன ஏற்ப்பாடு செய்வது யாரைப பிடிப்பது ?
சென்னையில் எங்கு தங்குவது ?
யார் யாரைப் பார்ப்பது ? என்ன செலவாகும் ? பாங்கு போகவேண்டும்
பேங்க் மேலாளர் மகளுக்கு திருமணம் என்றார் ?
போவதா ? போனமாதம் பாலு வீட்டு திருமணம் போகமுடியவில்லை ?
மனைவிக்கு உடல் நலம் இல்லாமல் போனது ?
அடாடா இன்று மனைவியை மருத்துவ மனை அழைத்து செல்ல வேண்டுமே ?
இவ்வாறு குரங்கில் ஆரமித்தது எங்கோ வந்து முடியும் ?இவ்வளவும்
மனோ வேகம் எனப்படும் வேகத்தில் !

இதில் பெறுவாரியான எண்ணங்கள் தொடர்பு நமது மனதில் புதைத்துள்ள
பூர்வ எண்ணங்களின் பதிவை பொறுத்து தான் இருக்கும் ,
நம்மை குரங்கு முன்பு துரத்த வில்லை என்றால் ,நல்லசமஸ்காரம்
இருந்தால் ஒருவேளை குரங்கை பார்த்ததும்
ஆஞ்சிநேயர் கோயில் நினைவுக்கு வரலாம்
அது தொடர்ந்து வேறு நல்ல விஷயங்கள் நினைவுக்கு வரலாம் !

ஆனால் குறைங்கைப்பார்த்ததும் அது சம்பந்தப்பட்ட அனைத்து புதைவுப் பதிவுகளும்

நல்லதும் கேட்டதும் கிளைதேழும் .

நமது அறிவை அப்போதுதான் பயன்படுத்தி கிளைதேழ்ம் ,கிளைகளை அப்போதே வெட்டியெறிய வேண்டும் .

இதை ஒரு பயிற்சியாக ஒரே ஒரு நாள் ஒரே ஒரு முறை
ஒரு ஐந்து நிமிடம் நமது எண்ணங்களை தொடர்ந்து கவனியுங்கள் ,
அவைகளை ஒன்று விடாமல் ,உண்மையாக எந்த ஒளிவு மறைவு இல்லாமல்
எழுதிப்பாருங்கள் ! நமது எண்ணம் எவ்வாறு கிளைதேழுகின்றதுஎன்பது
நமக்கே வியப்பாக இருக்கும் !

இதை தொடர்ந்து கவனித்தால் எப்படிப்பட்ட சமஸ்காரம் நம்மிடம் அதிகம் இருக்கிறது
என்பதை தெரிந்து கொள்ளலாம் !

இதில் குரங்கை சந்தித்தது நமது விதி எனக் கொண்டால் !
அது நமது கர்ம பலன் படி நடக்கிறதென்றால் ,,
நமது சமஸ்காரம் நமது எண்ணத்தொடரை நிர்ணயிக்கிறது !
நமது எண்ணத்தொடர் நமது வாழ்க்கையாகிறது !

தோன்றும் எண்ணங்களை நாம் மிக கவனமாக நாம் விழிப்புணர்வுடன்
கவனித்தால் நமக்கு சில உண்மைகள் புலப் படும் !
இவைகளை சற்று கவனமாக புரிந்து கொண்டால் வாழ்க்கை நமக்கு வசப்படும் !

முதலில் எண்ணங்கள் தோன்றுவது நிகழ் காலத்தில் இருந்து ஆனாலும்
உடனடியாக அடுத்த எண்ணம் சென்ற காலம் எண்ணும் இறந்த காலத்திற்கோ ,
அல்லது வரும் காலம் எனும் எதிர்காலத்திர்க்கோ சென்று விடுகிறது !
பிறகு இறந்த காலத்திற்கும் ,எதிர்க்காலதிர்க்கும் மாறி மாறி
குரங்கு மாதிரி தாவுகிறது ,
இது இந்ததாவுதால் நமது கட்டுப்பாட்டில் இல்லை ,நாம் முதல் நிகழ்வான
குரங்கை பார்த்ததுமே நாம் நமது நினைவில் இல்லை ,!
மாறி மாறி எதிர்காலத்திலும் ,வரும் காலத்திலும் வாழ்கிறோம் !
அது எதுவரை என்றால் நாம் மீண்டும் நிகழ்காலத்திற்கு வரும் வரை !
நிகழ்காலத்திற்கு வருவது என்றால் நமக்கு விழிப்புணர்வு வருவது
என்றுதான் பொருள் ! எப்போதாவது நாமே விழித்துக்கொள்கிறோம் !

விழிப்புணர்வு எப்போது வரும் என்பதும் நமது கட்டுப்பாட்டில் இல்லை ,
அது ஆளுக்கு ஆள் மாறுபடும் ! இதில் கர்ம வினையும்
சமஸ்காரமும் தனது வேலையைக் காட்டும்., ஏமாந்தவர்களிடம் தான் வேலையைக் காட்டும் . !
ஆனால் விழித்து கொண்டோரெல்லாம் பிழைத்து கொண்டார்கள் என்பது இதைதான்போலும் .

எண்ணங்கள் தொடர்ந்து வரிசையாக சோப்பு நுரைபோல்
வந்து கொண்டே இருந்தாலும் ஒரு சமயத்தில் ஒரு எண்ணம் தான் ,
புதிய ஒரு எண்ணம் வரும் போது, நிச்சயம் பழைய எண்ணம் போய்த்தான் ஆகவேண்டும்.
உதாரணமாக கார் மோதி ,கிழே விழுந்து ,பயம் மிகக்கொண்டுஇருக்கும் போது ,,
பயம் எண்ணும் எண்ணம் நம்மை ஆளும் போது ,யாரோதரும் ஒரு சோடா ,
நமது பயத்தை மாற்றுகிறது . சோடா குடிக்கும் போது பயம் போய்விடுகிறது.
அந்த பயம் மீண்டும் வரலாம் ஆனால் அப்போது தொடர் விடுபடுகிறது.
அதை மீண்டும் வரமாமல் எண்ணத்தை சீரமைப்பது தான் ,
அதை எவ்வர்று சீரமைப்பது என தெரிந்து கொள்வது தான் அவனது ஞானம்என்பது .
எனவே ஒரே எண்ணம் தான் ஒரு சமயம்என்பது தான் மிக்கிய செய்தி .

அடுத்து எண்ணங்கள் எண்ணங்கள் தொடர் என்றாலும் அவை தொடர் அல்ல,
நீர் ஒழுகு மாதிரி இல்லை. அது விட்டு விட்டுதான் வருகிறது !


அவைகளுக்கு இடையே ஒவ்வரு எண்ணத்திற்கும் இடையே
ஒரு சிறிய இடைவெளி உண்டு.

எண்ணங்கள் எந்த தர்க ரீதியாகவும் இருப்பதில்லை ! no logic !
தொடர்பும் இருப்பதில்லை !
எந்தக்காலத்திற்கும் உடபபட்டதில்லை .

இந்த எண்ணங்கள் எல்லாவற்றையும் நாம் உணர்வதும் இல்லை .
நமக்கு எது விருப்பமோ அதுதான் நமக்கு தெரியும் !
என்ன நடந்ததோ அவைத தெரியாது ?
பின் நாம் என்னதான் செய்து கொண்டிருக்கிறோம் ?
இதை நீங்கள் தான் சொல்லவேண்டும் !

இதயம் நாம் இயக்கவில்லை ,
மூளை நாம் இயக்கவில்லை ,
நுரைஈறல் நாம் இயக்கவில்லை ,
நமது எண்ணமும் நாம் இயக்கவில்லை
எனவே மனமும் நாம் இயக்கவில்லை ,
செல்கள் தானே புதிப்பித்துகொள்கிறது !
அதுவும் நாம் செய்வதில்லை !
ஒன்பது ஒட்ட்யுள்ள உடலில் காற்று தானே உலாவி வருகிறது

பிறப்பும் நாம் விரும்பி வரவில்லை !
இறப்பும் நாம் விரும்பும் போது வரப்போவதில்லை !

விழித்திருக்கும் போது நாம் பொருள்களைப்பார்க்க
நமக்கு வெளிச்சம் வேண்டும் கண்கள் வேண்டும் !
ஆனால் இரவில் உறங்கும் போது எந்த வெளிச்சத்தில்
நாம் பொருள்களைப் பார்க்கிறோம் ? எந்தக்க் கண்ணால்
பார்க்கிறோம் என்பது தெரியவில்லை ?

என்னமோ , ஆயினும் இந்த மனிதன் தான் உலகின் மிக அற்ப்புத
படைப்பு !இன்னமும் இந்த மனிதன் தான் இன்னும் புரியாத புதிர் !

இனி அடுத்து வரும் பாகத்தில் எப்படி விழிப்புணர்வு நாமே கொள்வது என்பதையும்
,இன்னும் கொஞ்சம் எண்ணங்களின் கொட்டத்தையும் பார்ப்போம் .!



அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்

sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Tue Jul 26, 2011 10:05 pm

எனக்கு புரிந்தது இதுவே ! 29)-*

*ரகசியம் ! பரமரகசியம் !----1*

சென்ற பகுதியில் நாம் நிகழ் காலத்தில் செய்துகொண்டு இருக்கும்
ஒரு கரியத்திலோ ,அல்லது பார்த்துக் கொண்டிருக்கும் பொருளிலே இருந்து கிளைக்கும்
எண்ணங்கள் அடுத்த ஷணமே ஒன்று எதிர் காலத்திற்கோ ,அல்லது தனது இருப்பில் உள்ள
கடந்த கால இருப்புடன் ஒப்புநோக்கி இறந்த காலம் சென்று பின் எண்ணம் இறந்த
காலம் எதிர் காலம் என தாவ ஆரமிக்கும் என்பதைப் பார்த்தோம் .

.இந்த எண்ண தொடர் நடைபெற ஆரமிக்கும் போது நாம் நம் நினைவை இழந்து விடுவோம் .
ஒரு கனவுலகம் போல் கிறக்கத்தில் ஆழ்ந்து விடுவோம் .
மனம் எப்போதும் நிகழ் காலத்தில் உலாவ அச்சப்படும்
அது இறந்து விட்ட இனி திரும்பி வர இயலாத இறந்த காலத்திலேயும் ,
இனி வரும் அல்லது வராது என கூற முடியாத நிச்சயம் இல்லாத
எதிர் காலத்திலேயும் பாதுகாப்பாக உலாவ மிகுந்த விருப்பம் உடையது .

நாம் விழிப்புணர்வு கொள்வது என்பது என்றும் உண்மையான நிகழகாலத்தில் இருக்கும்
போது மட்டும்தான் .


வாழ்கை என்பது ஒரு தொடர் செயல் ,அது செய்வது என்னவெனில் எப்போதும் அது தொடர்ந்து எதிர்காலத்தை இறந்த காலம் ஆக ஆக்கிவருகிறது
வாழ்கை என்பது எண்ணங்கள் தான் அதாவது மனம் தான் என்று பார்த்தோம் .

மனம் என்பது எண்ணங்களின் இருப்பிடம் தானே .

எனவே மனம் என்பது தொடர்ந்து வருங்காலத்தை ,இறந்த காலமாக ஆக்கி வரும் செயல்
தொடர் தான் .

எதிர்காலத்தை இறந்த காலமாக மாற்றி அதை சமஸ்காரமாக பதிவு செய்து கொள்கின்றது.
பின் அதே சமஸ்காரத்தை கொண்டு எதிர்காலத்தை இறந்த காலமாக ஆக்குகிறது

எதிர்க்காலம் என்பது சமஸ்காரத்தை பொறுத்து அமைவது இப்படித்தான் .
.இது ஒரு தொடர் . !

(சற்று மறுமுறையும் படித்துப்பாருங்கள் )

அது ஆகிறது பின் அதுவே ஆக்குகிறது .
அது என்றும் நிற்காத ஒரு தொடர் சங்கிலி .

ஆனால் எண்ணங்கள் என்பதுவோ தொடர்ந்து எதிர்காலதிலேயும்
இறந்த காலத்திலேயும் மாறி மாறி தாவி வரும் ஒரு செய்யல் தொடர் !
இதில் எதிர்காலம் என்பது என்ன எனில் இனி வரும் காலம்
அதாவது இனி நடக்கப் போகும் செயல்கள் !
எதிர்காலம் என்பது ஒன்று நம்பிக்கையாகவும் ,அல்லது

அவநம்பிக்கை என்ற பயமாகவும் தான் இருக்கிறது .

பயம் என்பது அவநம்பிக்கத்தான்
நாம் வரும் காலத்தில் இப்படி ஆகவேண்டும்இப்படி ஆகவேண்டும் என கனவு கோட்டை கட்டுவோம் . அல்லது ஒரு வேளை ஆகாவிட்டால் என்ன செய்வது என கற்பனை பயத்தில் உலாவுவோம்

.இந்த இரண்டு வகையில் தான் எந்த ஒரு வருங்கால எண்ணமும் இருக்கும் .

மாறாக இறந்த காலம் என்பது இது வரை நடை பெற்ற செயல்களில் விளைந்த மக்ழ்ச்சி
அல்லது நடக்காமல் போன செய்யல்களினால் விளைந்த துயரம் மற்றும் குற்றவுணர்வு .!
இவை அணைத்து நிக்ழ்வும் முழுமையாக பதிவு செய்யப் பட்டு உள்ளது .


இந்த நடை பெற்ற சம்பவங்களில் இருந்து நாம் அனுபவம் என்ற ஏதாவது அறிவு பெற்றால்
,அதுவும் WISDOM ஆக பதிவு செய்யப் படுகிறது .
ஆனால் நம்மில் பெரும்பாலோர் விளையும் செயல்களில் இருந்து
அனுபவம் என்னும் அறிவை பெறத் தவறி விடுகிறோம் .

அனுபவம் என்பது நடைபெற்ற நிகழ்வுகளின் தொகுப்பு மட்டுமல்ல ,

அந்த நிகழ்வுகளில் ஏதாவது படிப்பினை கற்றோமா என்பதில் தான் அடங்கி இருக்கிறது .

எனவேதான் ,ஆயுள் முழுவதும் உயர் பதவி வகித்த எத்தனையோப் பேர்

நடைபெற்ற செயல்களையே எண்ணி எண்ணி அதையே அனுபவம் என்று மயங்கி வாழ்வைக் கழிக்கின்றனர் .ஒவ்வொரு போரின் வெற்றி தோல்வி என்பது பெற்ற படிப்பினையைப் பொறுத்ததே .

ஜப்பான் உலகப்போரில் தோல்விதான் அடைந்தது ,ஆனால் அதில் பெற்ற அனுபவ அறிவு அதை உலகின் பொருளாதார வல்லரசாக மாற்றியது .

அனுபவங்கள் ,அறிவாக மாறாமல் வெறும் செயல்களாக பதிவு ஆகும் போது , பெரும்பாலும் செயத தவறுகள் மீண்டும் மீண்டும் செய்யப் பட்டு திருபத் திரும்ப வருகின்றன .


இரண்டாம் வகுப்பில் பாடம் கேட்டால் இரண்டாம் வகுப்பில் இருந்து கிடைக்கவேண்டிய
அறிவை பெற்றால் தானே மூன்றாம் வகுப்பு போக முடியும் .


நாம் பாடம் கவனமாக கேட்கிறோம் அதில் இருந்து பெற வேண்டிய அறிவை மட்டும்
விட்டுவிடுகிறோம் .எனவே மீண்டும் மீண்டும் இரண்டாம் வகுப்பு
அதே பாடம் பயில நேருகிறது .

எண்ணம் என்பது இறந்த காலத்திலேயும் ,எதிர்காலத்திலேயும் மாறி மாறி தாவி வரும்
சிந்தனைத்தொடர் எனப் பார்த்தோம் .
அப்போது எண்ணங்கள் இறந்த காலத்தில் இருந்து எதிர்காலம் போகும் போது சும்மா
போவதில்லை ,இறந்த காலம் எனும் பகுதியில் இருக்கும் எண்ணற்ற
பதிவுகளில் இருந்து துயரத்தையும் இன்பத்தையும் எடுத்து போய் வருகாலம் எனும்
பகுதியில் பரிமாறிவிடுகிறது. அதே மாதிரி எதிர்காலத்தில் இருந்து வரும் போது
நம்பிக்கை ,அவ நம்பிக்கை என்ற பயம் எனும் உணர்வை கொண்டுவந்து இறந்த காலத்தில்
சேர்க்கிறது .

நமக்கு முன்பே தெரியும் எதை நாம் விதை கிறோமோ அதைத்தாம் நாம் பெற முடியும்
என்பது . எனவே நாம் இந்த செயல் தொடரில் எதுவும் விதைக்க முடிவதில்லை .மனம் நம்மை ஒன்றும் மதிக்காமல் அது பாட்டிற்கு எதிர்காலத்தை ,இறந்த காலமாக மாற்றி , பயத்தையும்

துயரத்தையும் மாற்றிப்ப்போட்டு ,நமது வாழிவில் இனி நடை பெறப் போகும்
செய்யல்களும் நமது சென்ற காலத்தில் நடைப் பெற்ற மாதிரி அதே மாதிரி செய்யல்களே
விளைய முழு மூச்சுடம் முனைந்து வேலை செய்ய்கிறது .

நாம் இதில் எப்படியாவது நிகழ்காலத்தை இடையில் கண்டுபிடித்து ,அதில் நமக்கு வேண்டியதை
விதைத்தால் தான் வருங்காலம் நாம் விரும்பியப் படி இருக்கும் .

இதில் எண்ணங்கள் அதிகம் ஆக இருந்தால் எதிர்காலத்திற்கும் இறந்த காலத்திற்கும்
தாவுவதும் அதிகமாக இருக்கும் .அதனால் இங்கிருந்து அங்கும் அங்கிருந்து இங்கும்
பரிமாறப் படுவதும் அதிகமாகத்தான் இருக்கும் .

எனவே இறந்த காலத்தை போலவே வருங்காலம் இருக்கும் சாத்தியம் அதிகம் ஆகிவிடுகிறது
எனவே இந்த நடந்ததே நடக்கும் போக்கினை தடுக்க முதலில் எண்ணங்களை குறைக்கவேண்டும்
. கண்டதைஎக் காணும் ,நடந்த்ததேயே நடக்கும் போக்கினைத்த்டுக்க எண்ணத்தின் கொதிப்பு அடங்கவேண்டும் .

ஏதாவது ஒரு வழியிலே நாம் எண்ணத்தை குறைத்து விட்டால் ,உண்மையில் இறந்த
காலத்திலேயும் நடந்ததுஎன என்பது நமக்கு தெளிவாக புலப்படும் .
அப்போது நடந்தது எல்லாம் நமக்கு தெரியாமலா நடக்கிறது என்றால் ,.
உண்மை தான் ! பெரும் பாலும் என்ன நடக்கிறது என்பதை நாம் நடக்கும் போதே
உணர்வதில்லை.நடந்த்ததின் விளைவு ,எதிர்வினை நடந்க்கும் போதுதான் பலருக்கும் ,நாம்,அதுவரை எனன செய்து கொண்டிருக்கிறோம் என்பதே புரியும் .

பலர் காலையில் காலை உணவு சாப்பிடும் போதே அவர்களின் எண்ணங்கள் சென்று
காரிலோ அல்லது பஸ் நிலயத்திலோ சென்று நின்றுவிடும் .
பஸ்சில் ஏறி உட்கார்ந்ததும் மனம் அலுவலகம் சென்றுவிடும்.
இன்று செய்யவேண்டிய காரியங்கள் , செய்ய வேண்டிய போன் கால் முதலியவை பற்றிய
கனவு ஓடும் .பஸ் கார் பயணம் அவகளுக்கு உறைக்காது.
பலவித கற்பனை பயம் ,எதிர்ப்பார்ப்பு இவைகளால் இவர்களின் மனம் நிரம்பி இருக்கும்
.
கார் வந்து அலுவலகத்தில் நிற்கும் போதுதான் ,அலுவலகம் வந்தது புரியும்

வழியில் எத்தனையோ சிக்னல்கள் , எத்தனையோ வளைவுகள் தாண்டி நம் உணர்வின்றி வந்தது
அப்போதுதான் புரியும் .இத்தனைக்கும் நாம் தான்காரை ஒட்டி வந்திருப்போம் .

கடவுளுக்கு தான் நாம் நன்றி செலுத்த வேண்டும் .
நம்மை நம்பாமல் எத்தனை எத்தனை ஆட்டோ முறைகளை நம்மில் புதைத்து கருணையுடன்
வைத்திருக்கிறார் .
செக்கு மாடு போல் பழக்கம் நம்மை இயக்கி நமது உணர்வின்றியே நம்மை நமது காரில்
நமது அலுவலகம் கொண்டு சேர்த்து விடுகிறது .

நம்மை நிகழ காலைத்தில் இருக்கவிடாமால் நம்மை ஆளும் எண்ணங்கள்
நம்மை ஆண்டு வருகின்றன
எனவே நமது கார் பயணம் நமக்கு உறைக்கவேண்டும் ஆனால் நமது ஆளும் எண்ணங்கள் குறைவாக இருக்கவேண்டும் .
எண்ணங்கள் குறைவாக இருந்தால் நடை பெற்ற செயல்கள் நமக்கு புரியும் .
எப்படி எண்ணங்களை குறைப்பது , எப்படி நிகழ காலத்தில் இருப்பது ?

நான் இந்த தொடரின் ஆரம்பத்திலேயே கூறினேன் ,இந்த தொடரை முடிக்கும் போது
இந்தத்தொடரை படிக்கும் அத்தனை பேருக்கும் ஆளுக்கு ஒரு அட்சய பாத்திரம்
கிடைக்கும் என்று .!
இப்போது அட்சய பாத்திரம்பெறும் தருணம் நெருங்கி விட்டது ..
வெற்றிக்கு போகும் வழி காணும் இடம் அருகில் வந்து விட்டோம் .!
இனி நாம் எப்படி விதை விதைத்து மிகுந்த மகசூல் பெறுவது என்பதைப் பார்க்கப்
போகிறோம் .

ஆனால் அதில் உங்கள் துணையும் அவசியம் தேவை .

"வேகம் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க !"

அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Jul 26, 2011 10:14 pm

நான் மிகவும் ஆர்வமுடன் ரசிக்கும் வாழ்வின் வழிகாட்டும் தொடர் நன்றி அய்யா மேலும் எழுதுங்கள்
அன்பு தளபதி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அன்பு தளபதி

sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Tue Aug 02, 2011 4:33 pm

எனக்குப் புரிந்தது இதுவே ! (30)-
*ரகசியம் ! பரமரகசியம் !----2*


எப்படி எண்ணங்களை குறைப்பது , எப்படி நிகழ காலத்தில் இருப்பது ?
என்று சென்ற பகுதியில் நாம் வினா எழுப்பிஇருந்தோம் !


மனம் தான் வாழ்க்கை என்பதையும் , மனம் ஓயாமல் எதிர்காலத்தை ,இறந்த காலமாக
மாற்றி வருகிறது ,என்றும் முன்பே பார்த்தோம் .
எதிர்காலம் என்பது நம்பிக்கை , அல்லது
அவநம்பிக்கை என்ற பயமாகவும் ,
இறந்த காலம் என்பது எண்ணியது நடந்து அதனால் மகழ்ச்சி ஆகவும் , அல்லது நடை பெறாத
குற்ற உணர்வு ஆன guilty ஆகவும் ,துக்கமாகவும் இருக்கிறது என்றும் பார்த்தோம்
!

நமக்கு தெரியும் எதை விதைக்கிறோமோ ,அதைத்தான் நம்மால் அறுவடை செய்ய இயலும் என்பது .
ஆனால் மனமோ நம்மை விதைக்க விடுவதே இல்லையே

அப்போது என்ன தான் செய்வது ?
வழி இல்லாமலா போகும்?
சாவி இல்லாமல் எங்காவது பூட்டு உண்டா ?
இன்னும் கொஞ்சம் சிந்திப்போம் .

இதில்நிகழ காலம் என்பது எதிர்காலமும் ,இறந்த காலமும் சந்திக்கும் நேரம் தான் !
ஆனால் அது நீடிப்பதில்லை ! உணருமுன்பே நகர்ந்து விடுகிறது !
ஓஷோ சொன்னபடி ஓடும் நதியில் இரண்டாவது முறை அதே இடத்தில் கால் வைக்க முடியாது என்ற படி ,காலம் விரைந்து ஓடுகிறது !
நிகழ்காலம் நம் கையில் கிடைக்காத பொருளாகவே இருக்கிறது .
ஓடும் நதியில் சொல்லப்போனால் ஒரு முறை கூட அதே இடத்தில் கால் வைக்க முடிவதில்லை !
தொடரும் போதே முடிந்து விடுகிறது !
உணரும் போதே இறந்து விடுகிறது !
இந்த நிகழ காலம் என்பது ஒரே ஒரு ஷணம் கூட இருப்பதில்லை !

இதில் இறந்த காலம் என்பதுசேமிப்பாகிறது வரும் காலம் நம்பிக்கையிலேயே வாழ்கிறது .நிகழ் காலத்தை நம்
கையில் எடுப்பது ,எப்படி நாம் எண்ணியது எண்ணியபடி நடக்க
ஆளும் நேர்மறை எண்ணங்களை எப்படிவிதைப்பது என்றால் ,அதற்கும் ஒரு வழி
நம்மிடம் இருக்கிறது .


நமது உடலிலேயே நிற்காமல் செய்யல் படும் ஒரு வேள்வி உண்டு .
அது தான் உயிரின் அடையாளம்
அது இருக்கும் வரைதான்
நாம் உயிருடன் இருக்கிறோம்.
அது இறந்த காலம் ஆனால் நாமும் இறந்து விடுவோம் .அது என்றும் எதிர்காலத்தில்
வாழ்வதில்லை.

அதுவேறு ஒன்றும் இல்லை .
அதுதான் நமது *மூச்சு* !
மூச்சு என்றும் இறந்த காலம் ஆவதில்லை.

அது இறந்தகாலம் ஆனால் நாமும் இறந்து விடுவோம் .


அது ஒரு தொடர்வேள்வி !நாம் பிறந்த போது விட ஆரபித்த
முதல் மூச்சு அது ! அதுவே இறுதி மூச்சு ஆகும் போது நாமும்
இருப்பதில்லை !
அதுவரை அது ஒரு தொடர் இயக்கம்.


அந்த மூச்சு தான் மனதை அடக்கும் கடிவாளம் !
மூச்சை அறிந்தவர் முழுவதும் அறிந்தவர் ஆகிறார் !
ஆனால் என்னனவோ சொல்லித்தரும் நமது பெற்றோரும்
ஆசிரியரும் மூச்சை சீராக விடும் வழியையோ ,அதை சீரமைக்கும்
வழியையோ நமக்கு சொல்லித்தருவதில்லை !

மூச்சுக்கும் மனதிற்கும் எப்படி தொடர்பு ஏற்படுத்துவது ?
எப்படி அதன் மூலம் நிக்ழ் காலத்தில் வாழ்வது என்றால் ,
அது தியானம் என்ற ஒரு ஒப்பரிய வேள்வியின் மூலமே நடக்கும் !
தியானம் என்பது மனதை வெறுமனே ஒரு பொருளில் குவிப்பது மட்டுமல்ல ..
அப்படியானால் அதற்க்கு மன ஒருமைப்பாடு என்றுதான் பெயர் !

மன ஒருமைப்பாடு என்பதில் எல்லா
பொறிகளும் வேலை செய்கின்றன !
தியான வேளையில் பொறிகள் அடக்கப்பட்டு மனம் மட்டும்
செய்யல் படுகிறது !
காலதைக்கடந்த நிலையில் வாழ முயற்சிப்பது தியானம் !
காலமற்ற நிலையில் செய்யல் படுவது தியானம் !

நாம் முன்பே பார்த்திருக்கிறோம் ,காலம் என்பது
இரு எல்லைகளுக்கு இடையே இருப்பது தான் என்பதைப்பற்றியும் ,
இடம் ( SPACE ) என்பதைப்பற்றியும் ஓரளவிற்கு பார்த்திரிக்கிறோம் .

உண்மையில் இருவகையான காலங்கள் உள்ளது .
ஒன்று ஒன்று சூரியன் பூமிஅவைகளின் அசைவு , இவைகளைக்கொண்டு நாம் கணக்கிடும் காலம் .
பூமியின் இயக்கத்தால் 24 மணி நேரம் ஆனதும் மறு நாள் ஆவதும் மறு மாதம் ஆவதும், மறு வருடம் ஆவதும் ஒருவகை காலம் .இது இயற்க்கை !
இது மனிதனுடன் சம்பந்தப் படாதது !

இதில் மனிதனால் மாறுதல் ஏதும் செய்யமுடியாது .
இது அனைவர்க்கும் பொது !

இரண்டாவது காலம் அகக்காலம் , அது நமக்குள்ளே ஓடும் எண்ண அலைகளால் நிச்சயிக்கப்பட்ட அகக்காலம்!
அது நாமே உண்டாக்குவது

நாம் படைக்கும் நமது பிரபஞ்சம் !
மனிதனுக்கு மனிதன் மாறுபட்டது !

அதைப்பற்றித்தான் இதுவரை பார்த்துவருகிறோம் !
சிறு குழந்தைகளுக்கு இந்த இருகாலமும் தனித்தனியாகவே இயங்கி வருகிறது !
பிறகு வளர வளர எண்ணமும் சிந்தனையும் பெருக பெருக இந்த இரண்டு காலமும்
இணைத்து விடுகின்றன !
ஆனால் இந்த இணைப்பு ஆழ்த்த உறக்கத்திலும் ,கனவுகளிலும்
துண்டிக்கப்பட்டுவிடுகிறது !அங்குநாம் முற்றிலும் மாறுப்பட்ட ஒரு
காலநிலையில் வாழ்கிறோம் !
விழிப்பு நிலையில் இந்த புற அக காலங்கள் ஒரு குறிப்பிட்ட
விகிதத்தில் இணைந்து செயல் படுகிறது !
இந்த விகிதம் மனிதனுக்கு மனிதன் மாறுபடுகின்றது !
அது அவனது எண்ண ஓட்டத்தை சிந்தனையை பொறுத்திருக்கிறது !
சிலருக்கு காலம் பறக்கிறது !
சிலருக்கு காலம் நகர்கிறது !
காலத்தின் ஆதிக்கத்தில் வாழ்வதும் ,
அதன் கூட சுழல்வதும் மனிதனை மிகவும் பாதிக்கின்றன !
அதன் ஆதிக்கத்தில் இருந்து விடுபட அவன்விரும்புகிறான் !
இயற்க்கை வகுக்கும் காலம் ஒன்று
மனிதன் வகுக்கும் காலம் ஒன்று
இரண்டும் இணையும் விகிதம் வேறு வேறு !
மனிதன் அதன் ஆதிக்கத்தில் இருந்து விடுபட என்றும் முயல்கிறான் . !
எனவேதான் தன்னை மறக்க
காலத்தை மறக்க
திரைப்படம் பார்க்கிறான்.
மனதை மயக்கும் கதைகளை படிக்கிறான்.
இன்னும் மயக்கும் பல வேலைகளும் ,செய்யல்ளிலும்
தொடர்ந்து ஈடு படுகிறான் .
மனதை மயக்க ஏதாவது ஒன்றை புதிது புதிதாக உருவாக்குகிறான் .
ஆனால் எதுவும்அவனை தொடர்ந்து மயக்குவதில்லை !
எல்லாம் கொஞ்ச காலம் தான் ,நேரம் தான் .
புதியது ஒன்று எப்போதும் தேவையாக இருக்கிறது !
மனிதன்எங்கு சென்றாலும் ,என்ன வேலை செய்தாலும் காலத்தின்
ஆதிககத்தில் இருந்து விடுபட முடியவில்லை !

காலம்அவனை நிழல் போலத் தொடர்கிறது !
அகக்காலத்தின் பிடியில் இருந்து வெள்யே செல்லவும் ,
அகக்காலத்தின் பிடியைத் தளர்த்தவும் மனதை படி படியாக உயர
வேண்டியும் மனிதன் கண்ட உயரிய வழிதான் *தியானம் !
*
காலமற்ற நிலைக்கு உயரவும் ,காலத்தின் ஆதிக்கத்தில் இருந்து விடுபடவும்
செய்யும் முயற்சிதான் தியானம் !

இந்த தியானம் பயின்ற மாணவர் சிறந்த மாணவர்ஆகிறார் !
இந்த தியானம் பயின்ற வியாபாரி சிறந்த வியாபாரி ஆகிறார் !
இந்த தியானம் பயின்ற பொறியாளர் சிறந்த பொறியாளர் ஆகிறார் !
இந்த தியானம் பயின்ற மனிதன்சிறந்த மனிதன் ஆகிறார் !

இத்தைய தியானங்களில் பல்வேறு வகையான ,பல வித பலன்களை தரவல்ல
பல நிலை தியானங்கள் உள்ளன !
நாம் பார்க்கப்போவது மிக எளிய ,நாம் விரும்பும்
எதையும் விரும்பியவண்ணமே காண வழி வகுக்கும் ஒரு
எளிய முறைத்தியானம் !
அதை பயின்று வாழும் போதே வாழ்வின் அத்தனை
சாரங்களையும் உணர ஒரு வாய்ப்பு !
பின் அதைக்கொண்டு வாழ்வின் குறிக்கோளான அடைய
அடுத்த படியை செல்ல அதுவே ஒரு ஆயத்தம் .!

அதன் முறைமற்றும் மூச்சும் மனதும் சேரும் மார்கத்தையும்
அடுத்த பகுதியில் பார்ப்போம் .

அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Aug 02, 2011 8:53 pm

சூப்பருங்க
வழி இல்லாமலா போகும்?
சாவி இல்லாமல் எங்காவது பூட்டு உண்டா ?
இன்னும் கொஞ்சம் சிந்திப்போம் மகிழ்ச்சி மகிழ்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 8 Ila
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Aug 02, 2011 9:21 pm

நன்றி அய்யா தொடருங்கள்

sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Tue Aug 09, 2011 9:13 am

[b][b]எனக்குப புரிந்தது இதுவே ! (31)-[/b]*
[/b]
*போனக சாலை *

மனதைப் பற்றி எத்தனைச கூறினாலும் அது போதுமானதாக இருக்கவில்லை.
இன்றுநேற்றா மனத்தைப் பற்றிப பேசுகிறோம்

மனிதன் தன்னை வெளிப்படுத்த அறிந்த உடனே அவனுக்கு மனதைப் பற்றி
தான் விசாரம் . மனதை பற்றிய மனவிசாரம் மனிதனிடம் ஆரம்பம் முதல்
இன்றைய வரை இன்னும் நீங்கவே இல்லை .

இன்னுமே புரியாதப் புதிராக இருப்பது மனித மனமே .வருகின்ற நூற்றாண்டு மனித மனத்தைபற்றிய பல உண்மைகளை அறிந்து பயன்படுத்தப்போகிறது .

ஆனால் நமது நாட்டு ரிஷிகளும் ,சித்தர்கள் எனும் அறிவர்களும் மனதைப் பற்றி முழுவதும் ஆராய்ந்து அறிந்து ,அதை பயன்பாட்டில் கொண்டு வாழ்வாங்கு வந்திருக்கின்றனர் .ஆயினும் நமது மரபும் ,பாரம்பரிய அறிவும் இன்னமும் அயல் நாட்டாரின் ஆமொதிப்புக்காகக் காத்திருக்கின்றது .

எனன செய்வது இரண்டாயிரம் ஆண்டுகளாக நம்மில் படிந்து விட்ட அடிமை குணம் அத்தனை விரைவில் நீங்கிவிடுமா ?

மனதை உடையவன் தான் மனிதன் என்ற கோட்ப்பாடு அவனிடம் வந்து விட்டது .

இதில் அதிசயம் என்ன வென்றால் இதையும் சொல்லுவது
மனம் தான் என்பதுதான் . மனிதன் வாழ்வில்
பெறும் முன்ற்றத்தை அளப்பதும் மனதுதான் !
பின் மனிதன் அடையும் பிற்ப்போக்கையும் அறிவிப்பது மனம்தான் !
அறச்செயல்கள் செய்து வாழ்க்கையில் சொர்கத்தை போல் அனுபவிப்பதும் மனம் தான் !
அறவழி நில்லாது பாபங்கள் செய்து பின் நரகம் போல்
தொல்லைகள் படுவதும் இதே மனதைக் கொண்டுதான்

பார்க்கப் போனால் நமது வாழவே எதோ ஒன்றை நோக்கிய பயணம் தான் !
அது குறிக்கோள் இல்லாது தற்செயலாக தாறுமாறாக செல்கிறது
என்றும் நம்ப முடியவில்லையே ! ஏதோ ஒரு ஒழுங்கு நிச்சியம் அதில் இருக்கிறது !
ஏதோ ஒரு விதி அதை ஆள்கிறது !

அறிந்தோ அறியாமலோஎதோ ஜீவர்கள் அனைவரும பரத்தை நோக்கியே
பயணம் போகின்றனர் ! அதில் திருப்பம் இருதாலும் ,மயக்கம் இடையில் வந்தாலும்
அவ்வப்போது பாதை திருத்தப் பட்டு , மூலத்தை நோக்கிய பயணம்
தொடர்ந்து நடை பெறுகிறது ! வந்த இடம் நோக்கிய பயணம் தான்
பயணத்தின் முடிவாகயுள்ளது .!

அதில் அவர்கள் எடுத்துக்கொள்ளும் முயற்சியும் அதிகம் ,மிகப் பெரிது தான் !
ஜீவர்கள் எடுக்கும் முயற்சிக்கு அனுபக்ஷம் எனப்பெயர் !
இந்த முயற்சிக்கு இந்த முயற்சிக்கு கடவுளிடம் இருந்து வருகின்ற உதவிக்கு ,
அனுகிரகத்திற்கு சம்பு பக்ஷம் எனப்பெயர் !
இந்த இரண்டும் வேறு வேறானதா ? அல்லது ஒன்றா என்ற முரண்பாடு
என்றும் உள்ளது !தனக்குத்தானே உதவி செய்து கொள்வதும் , தன்னை தெய்வத்திடமே
ஒப்படைப்பதும் எப்படி ஒன்றாகும் என்ற முரண்பாடு
என்றும் நிலவிததான் வருகிறது !
உண்மையில் இரண்டும் வேறுவேறு அல்ல ! இவைகளிடம் முரண்ப்பாடு இல்லை என்பதே
நிதர்சனம் !

தங்கள் பயணத்தின் ஆரம்பத்தில் நெடும் தூரம் ஜீவர்கள் தங்கள் சொந்த முயச்சி
ஒன்றையே நம்பி வருகின்றனர் ! சுயப் ப்ரயத்தனத்தைக் கொண்டே கல் ,பூண்டு முதலிய
நிலையில் இருந்து உயர்நிலை மானிடர் ஆகும் பக்குவம் வரை
சுய முயற்சி ஒன்றே அவர்களுக்கு துணை !

அதாவது மூளை ஒன்றே துணை !
மனம் அப்போது செயல் படவில்லை !

ஆனால் மனிதனாக பரிணாம வளர்ச்சிக்கு பிறகு அடுத்த நிலை போவதற்குள்
அவனது மனதில் இடம் பெற்றிருக்கும் அனைத்து பதிவுகளும் அவனை பற்றி
பிணைந்து மேலே செல்லும் அவனது முயற்சிக்கு தடை போடுகிறது !

பின்பு எண்ணற்ற பிறவிகளுக்கு பின் ,அவனது கருமக்கணக்குக்கு ,சமஸ்கார
பிணப்புக்கு தப்பி அவனருளால் அவனை அறியும் போது ,தனக்கும் தனது
தலைவனுக்கும் உள்ள தொடர்பு அறியும் போது ,தன முயற்ச்சிகளை எல்லாம்
தன தலைவனிடம் ஒப்படைக்கிறான் !
அதற்க்கு அடைக்கலம் என்று பெயர் !


ஜிவன் செய்யும் அனைத்து முயற்சிகளிலும் ஒப்பற்ற முயற்சி
இந்த அடைக்கலம் தான் !
பிஞ்சு நேரம் வரும்போது கனியாவது போல் ,
மனிதன் நேரம் வரும் போது அவனும் கனிகிறான் !

அனுபக்ஷம் எனும் சுயப் ப்ரயத்தனத்தில் இருந்து ,
சம்பு பக்ஷம் எனும் ஈஸ்வர அனுகிரகம் எனும் நிலையில் பயணம் பூர்த்தியாகிறது !

இந்தநிலை ஏதாவது தன்னம்பிக்கை குறைவை ஏற்படுத்துமா ?
என்றால் , இத நிலை ஏற்ப்படும் போது நமக்கு தன்னம்பிக்கை தேவை இராது !
அது ஒரு உதற வேண்டிய குணமாக ஆகியிருக்கும் !
அப்போது நம்பிக்கைதான் வேண்டி இருக்குமேத்தவிர ,தன்னம்பிக்கை தேவை இராது ! தான்
என்பது அகன்றபின் தன்னம்பிக்கை என்பது ஏது ? எதற்கு ?

அந்த நிலைக்கு நாம் இன்னும் வெகுதூரம் போகவேண்டும் !
அதுவரை தன்னம்பிக்கையோடு இருப்போம் !
தன்னம்பிக்கை தேவைப் படாத ஒரு நிலையை நோக்கிப பயணப்படுவோம் !
அந்தக்கவலை இப்போது வேண்டாம் !

இதை கூறுவது தாயுமானவர் ஸ்வாமிகள் தனது
மௌன குருவணக்கத்தில் ,
" அணு பக்ஷ, சம்புபக்ஷம் ஆம் இருவிகற்ப்பமும் மாயாதி சேவையும் அறிந்து "
என்கிறார் !

மனிதவாழ்வின் நோக்கம் வெறும் உணவு உண்டு வாழ்வது இல்லை என்பது
மனிதனுக்கு என்றோ அவனுக்குதெரிந்து விட்டது !
அவனது முந்திய பரிணாம வளர்ச்சி வரை அவனது நோக்கம் உணவு உண்டு
உடல் வளர்த்தல் மட்டுமே !
இப்போது உணவை உண்டு வாழ்வதை விட உயர்ந்த குறிக்கோள் அவனுக்கு இருப்பதாக அவன்
உணர்கிறான் !உணவை உண்டு மட்டும் சும்மா இருக்க அவனால் இப்போது முடிவதில்லை !

இன்னமும் விலங்கு நிலையிலேயே வாழும் சில மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் .

உணவும் ,இருப்பிடம் மட்டுமே அவர்களின் நினைவில் இருக்கிறது .

இன்னமும் அவர்களின் சென்ற பிறவிகளின் அவாக்கள் முற்றுபெறவில்லை ,ஏதோ ஒரு நற்செயலால் இந்தபிரவிஎனும் வாய்ப்பு கிடைத்தும் அதை பயன்படுத்த எண்ணம் இல்லாதவர்கள் அவர்கள் .

அவர்களுக்காக இந்தத் தொடர் இல்லை .

சிறிதாவது விழிப்புணர்வில் வாழும் சாதகருக்கானத் தொடர் இது .

மனிதரில் பலருக்கும் பலவித குறிக்கோள் !

ஆயிரம் ஆயிரம் மனிதருக்கும் ஆயிரம் ஆயிரம் குறிக்கோள் !
அத்தனையும் தொகுத்து நான்கு ஆக ஆக்கியது மனிதனின் அறிவு !

அறம் பொருள் இன்பம் வீடு தமிழ் மொழியிலும் வட மொழியிலே
தர்மம் ,அர்த்தம் ,காமம் ,மோக்ஷம் எனவும் இந்த நான்கும் மனிதனால்
நாடப்பெறும் புருஷார்த்தம் வகுக்கப்பட்டது !
மனிதனின்தேட்டைகளும் ,வேட்டைகளும் இந்த நான்கில் அடங்கி விட்டன !

கூறப்போனால் இந்தநான்கைப் பற்றி கூறுவது ஒன்றே நூல்கள் ,சாஸ்திரங்கள் எனப்பட்டன
!
இத்தகைய நூல்கள் எண்ணிக்கையில் அடங்காதவை !
தமிழ் மொழியில் தான் பக்தி இலக்கியங்கள் மிக அதிகம் !
இத்தனை சமய பூசல்களையும் , அனல் வாதங்களையும் ,புனல் வாதங்களையும் தாண்டி
இன்னும் நமக்கு கிடைப்பெறும் சமய நூல்கள் எண்ணில் அடங்காதவை !
அவைகளை முழுவதும் கேள்விப்படவே இன்னும் எத்தனை பிறவிகள் வேண்டுமோ !

இனிப்பு சுவைதான் ! ,அனைவருக்கும் பிடிக்கும்தான் !,
ஆனால் மனிதருக்கு மனிதர் சுவையில் எத்தனை வித்தியாசம் !
அதை நம்பிதானே இனிப்புக்கடைகள் தெருவுக்கொன்றாக
நிறம் நிறமாகவும் ,வடிவிலே வேறுவேறாகவும் , திரவ ,திட
என மாறுதலாகவும் காட்டி மயக்கி நம்மை உண்ணத்தூண்டுகின்றன !

ஒவ்வருவருக்கு ஒவ்வொன்று பிடிக்கிறது !
அது போலவே சொல்லும் பொருள் ஒன்றாக இருந்தாலும் ஒவ்வொருவருக்கு
ஒவ்வொருவர் சொன்னால் தான் புரிகிறது !
எனவே தான் இத்தனை இத்தனை நூல்கள் !
நமதுமுன்னோர் நமது பால் கொண்ட கருணையின் காரணமாக
எண்ணற்ற சமய நூல்களை நமக்கு வழங்கி சென்றுள்ளனர் !

பகவத் கீதைக்கு உரை எழுதாத குருமார்கள் யார் ?
ஆதி சங்கரர் ,குரு ராமானுஜர் முதல் நமது பாரதி வரை பகவத் கீதைக்கு
உரை எழுதாத மகான்கள் யார் ?
அவர்கள் பகவத் கீதைக்கு உரை முன்பு இல்லை என நினைத்தா எழுதினர் ? எத்தனை இருந்தாலும் பத்தாதே எனக் கருணையுடன் நமக்கு வழங்கினார்கள் .

இவ்வாறு உண்மையை பலரும் அறியச் செய்வது அவர்களின் மனித
தர்மமாக கருதினர் ! இது ஒரு அறிவு தானம் எனப்பட்டது .
தாங்கள் அறிந்ததை தாங்கள் மட்டுமே வைத்து கொள்ளாது
மனிதர்கள் அனைவருக்கும் அறிவிக்க முயயன்றனர் .

தற்க்காபிற்காகவும் ,பிற உயிர்களின் மேல் தனது ஆளுமையை செலுத்தவும்
எல்லா விலங்குகளுக்கும் பல ஆயுதங்களை அவைகள் பிறக்கும் போதே
இறைவன் கொடுத்துள்ளான் .அனால் விலங்குகளில் இருந்து உர்யர்ந்த
மனிதனுக்கு அவனுக்கு என எந்த ஆயுதமும் வெளிப்படையாக இல்லை ,

ஆனால் தோற்றத்தில் தெரியாத மனமும் ,அதில் இருக்கும் பகுத்தறிவும் அவனை
யாராலும் வெல்ல முடியாதவனாகவும் ,எல்லா விலங்குகளையும் வென்று அடக்கும்
ஆற்றலையும் அவனுக்கு வழங்குகிறது .
மெய்ப் பொருளை காணும் திறன் அவனிடமே உள்ளது !
அந்த மனத்தைக் கொண்டே மனத்தை வெல்லும் திறனை
படிபடியாக மனிதன் அடைகிறான் !
மாடிக்கு போக படிப்படியாகத்தானே போகவேண்டும் !
மனதை தூய்மையாக்குதல் ,பின் அதனை வென்று விடுதல்
இதுவே வாழ்வின் குறிக்கோள் !இதை மனதைக் கொண்டுதான் செய்யவேண்டும் !

அதேசமயம் ..வாழும் போதே நல்லவண்ணம் வாழும் முறையும்
அதே மனத்தைக் கொண்டு பயிலவேண்டும் !
அதற்க்கு தடை செய்யும் கர்மக்கணக்கை , சமஸ்கார சிக்கலை
மேலும் மேலும் வளர்க்காமல் குறைக்கும் வித்தையை பயிலவேண்டும் ..

ஒருமனிதனுக்கு வறுமை உண்டாவதற்கு அவனது மனநிலை , அவனது சூழ்நிலையே காரணம்
ஆகிறது .
உடல் வாழ உணவு மிக அவசியம் ! உடலில் ஒரு பசியையும் , மனதில் ஒரு
பசியையும் பொதித்தே நாம் படைக்கப் பட்டிருக்கிறோம் !

உணவுதேடும் முயற்ச்சியே நமது வாழ்வின் பெரும் பகுதியை ஆக்கிரமிக்கிறது ! தேடி
தேடி அதைபாதுகாக்க வைக்கிறது !
அதை மிகுதியாக சாப்பிட வைக்கிறது !
மிகு உணவிற்கு ,உணவு கிடைக்காமல் போகும் என்ற அச்சமே காரணம் .
பின் அதுவே பழக்கம் ஆகிறது !
இதுவே மனத்திற்கும் வாய்க்கிறது !
மனப்பசி நம்மை அலைய வைக்கிறது ! மேலும் மேலும் மனத்திற்கு அளவுக்கு அதிகமாக தீனி போட வைக்கிறது .

இதுவே நமக்கு ஒரு போஜன சாலை சொந்தம் என வைத்துக்கொள்வோம் ,
அங்கே எப்போது சென்றாலும் நாம் விரும்பும் அத்தனை உணவுகளும் பெற்று உண்ண நமக்கு
உரிமை இருக்கிறது என்றால் ,நாம் உணவுக்கு அலைவோமா ?
அதை சேர்த்து வைப்போமா ?மிகுதியாக சாப்பிடுவோமா ?

இவ்வாறு இறைஎன்னும் போஜனசளை நமக்கு சொந்தம் என்பது நமக்கு தெரியாமல் இருக்கிறது
அதனால் நாம் வறுமை என பாவித்து , சேர்த்துவைக்க அலைகிறோம் ,பிறர் உடமையும் தானே
அடைய அலைகிறோம் !
இத்தனையையும் வாழ்வின் நோக்கங்களையும் தாயுமானவர்
மிக தெளிவாக விளக்குகிறார் !

நாம் இதுவரை சென்ற பகுதிவரை மனத்தின் படர்க்கையான எண்ணங்களின் ,இறந்த
காலம் , வரும் காலம் என்னும் ஆட்டம் ,பாட்டம் பற்றி பார்த்தோம் .
நிகழ்காலம் என்னும் வயலிலே எவ்வாறு வருங்காலத்தை விதைப்பது ,
நல்ல ஒரு வாழ்வினை ,நாம் எண்ணிய எண்ணியவாறே எவ்வாறு அடைவது
என ,அதன் வழியான தியானத்தின் மார்கத்தை பார்ப்பதற்கு முன்னே மீண்டும்
மனம் ,இறை ,வாழும் வழி இவைகளைப் பற்றி கொஞ்சம் பார்த்தோம் ..

இதில் எழும் கேள்விகள்தான் உலகின் மிகப்பழமையான கேள்விகள் ,
எத்தனையோ மகான்களால் ,அவ்வப்போது எத்தனையோ விதமாக விளக்கிய போதும் ,அந்த
சந்தேகங்கள் ,கேள்விகள் திருப்பித்திருப்பி கேட்க்கப் படுகிறது .
ஆனால் இதற்க்கு விடை ஒவ்வருவருக்கும் தனித்தனியானது !.இது பொதுவானது அல்ல
!எத்தனையோ முறை புத்தகத்தில் படித்திருந்தாலும்
,தானே உணரும் வரை அது புரியாது !
படித்து மட்டும்பசியை ஆற்ற முடியுமா ?

உணர்தல் எப்போதுயாரால் நிகழும் என்பது யாராலும் அறிய முடியாது !
இதற்க்கு முன் எத்தனை அடி விழுந்தாலும் கடைசி அடியில் தான்
கல் பிளக்கும் ! அந்த கடைசி அடி எப்போது விழும் ,யாரால் விழும் என்பது
அவனருள்ளாலே நிகழும் விஷயம் !

போனகம் இருக்கின்ற சாலையிடை வேண்டுவ
புசித்தற்கு இருக்கும் அது போல
புருஷர் பெறு தர்மாதி ,வேதமுடன் ஆகமம் ,
புகலும் அதினால் ஆம் பயன்
அணுபக்ஷம் சம்பு பக்ஷம் ஆம் இருவிகற்ப்பமும்
மாயாதி சேவையும் அறிந்து இரண்டு ஒன்று எனும் ஓர்
மானத விகற்ப்பம் அறவென்று நிற்ப்பது நமது
மரபு என்ற பரமகுருவே !
-----தாயுமான சுவாமி

தொடர்ந்து பயணப்படுவதற்கு நன்றி ! இனி அடுத்ததை விரைவில் காண்போம் .

அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்

sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Fri Aug 12, 2011 10:52 am

எனக்குப் புரிந்தது இதுவே ! (32)-*
*மாறாத சில விதிகள் !*

நாம் வாழும்இந்தப் பிரபஞ்சத்தில் நாம் எண்ணும் எண்ணங்கள்
நம்மை மட்டும் உயர்த்தவோ அல்லது தாழ்த்தவோ செய்யவதில்லை !
அந்த எண்ணங்களின் தாக்கம் இந்தப் பிரபஞ்சத்தையும் தாக்குவதுண்டு !

நாம் வாழும் இந்தப்பிரபஞ்சத்தில் எல்லாமே ஒன்றோடு ஒன்று
இணைக்கப் பட்டதுவே ! நாம் எண்ணும்
எண்ணமும் நம்பிக்கையும் நம்மோடு மட்டும் போவதில்லை ,அவைகள் அனைவரையும் உயர்த்தும் ,
நம்மோடு சேர்த்து .
நமது நீடித்த எண்ணத்தொடர்களால் இந்தப்பிரபஞ்சமும் பாதிக்கப்படும் .
ஒவ்வொரு மனிதனின் எண்ணமே அவனது வாழ்வின் கட்டளைக்கல் .ஒட்டு மொத்த மனிதனின் எண்ணங்களே இப்புவியின் கட்டளைக்கல் !
எனவே எண்ணும் எண்ணத்தில் என்றும் எச்சரிக்கை தேவை !
நாம் வாழும் இந்தப்பிரபஞ்சத்தில் எல்லாமே ஒன்றோடு ஒன்று
இணைக்கப் பட்டதுவேஆகும் . இது நாமே உருவாக்கும் நமது உலகம் .
இந்தப் பிரபஞ்சத்தில் எல்லாமே சக்தியின் வடிவம் தான் !
எங்கெங்கு காணினும் சக்திதான் !
எனவே நமது எண்ணமும் ஒரு சக்தி ( energy) தான் !
ஆனால் அளவுக்கு அதிகமான எண்ணங்கள் நமது உடலின் சக்தியை குறைக்கும்
அது ஒரு ஆபத்த்தான வடிகால் !
அதுவும் மித மிஞ்சினால் வருவது உடல் நலக்கேடுதான் .
பொருளும் ( matter) சக்தியும்( energy )ஒன்றுதானே .
ஒரு நேரம் பொருள் சக்தியாக காட்சியளிக்கிறது
ஒரு நேரம் சக்தி பொருளாக காட்சியளிக்கிறது .
இதில் நேரம்( time ) எனும் காலம் இடையில் வருகிறது .ஒரேஎண்ணமே தொடர்ந்து நீடித்தால் அது வலிமை பெறும்போது
அது பொருளாகிறது ,காலமும், இடமும் ( space )அப்போது ஒன்றாக சேரவேண்டும் .
நாம் எந்த பொருளையும் பார்த்து பதிவுசெய்வது முப்பரிமாணத்திலே தான் .
ஆனால் விழிப்புணர்வு கொண்டவர்கள் காண்பது காலமும், இடமும்
சேர்ந்த மொத்த பரிமாணத்திலே !
இந்தப்பிரபஞ்சத்தில் அணைத்துமே அசைந்து கொண்டும் ,
துடித்து ( vibrate ) கொண்டும் இருப்பதுவே ஆகும் மேலும்
அவை என்றும் பயணப்பட்ட்டுக் கொண்டும் இருக்கின்றன .
இந்த பூமியை ஒத்து அவை வட்டப்பாதையில்
துடித்தும் அசைந்தும் விரிவடைந்து வருகிறது .
பூமியின் இயக்கத்தைப் போலவே அதில் உள்ள பொருள்களும் இயங்கும்
அண்டத்தில் இருப்பதுவே பிண்டத்திலும் இருக்கிறது

இது நமது எண்ணங்களுக்கும் நம்பிக்கைகளுக்கும் ,
ஆசைகளுக்கும் ,உணர்வுகளுக்கும் சேர்த்துத்தான் .
ஒவ்வொரு எண்ணமும் சப்தமும் பேச்சும் ,செய்கையும்
அதனதன் தனித்தனி துடிப்பும் அசைவும் கொண்டு என்றும்
விரிவடைகின்றன ! அவை என்றும் அழிவதில்லை !
அசைவும் துடிபபுமே சக்தியின் வடிவம் !
செய்கைகளே( actions) செயல்களே (deed) உருவாகும் !
நமது ஒவ்வொரு எண்ணத்தையும் ,கனவுகளும் ,
உணர்வுகளையும் உருவாக்க அவைகளை
செயல்களாக மாற்ற அதை ஒத்த ,அதை சார்ந்த
செயல்கள் என்றும் தேவை ! சூக்ஷும எண்ணங்கள் செய்கைகளுடன்
சேரும்போதுதான் இப்புவியில் அவை ஸ்தூல
செயல்களாக மாற்றும் !
எண்ணங்களுடன் செய்கைகளும் ,செயலாக்கத் தேவை .
செயல்கள் உருவாக அசைக்க முடியாத விதியான
cause and effect அதன் செயல்பாடுகளை நிர்ணயிக்கும் .
எதுவும் தற்செயலாக நடைபெறுவதில்லை .
ஒவ்வொரு செய்கைகளுக்கும் அதன் எதிர்விளைவோ ,
பின் விளைவோ நிச்சயம் உண்டு !
எதை விதைகிறோமோ அதைத்தான் பெறுகிறோம் .எனவே செய்யும் செயல்பாடுகளில் என்றும்
ஒரு உன்னத நியதியும் , ஒழுங்கும் தேவை .
விஷவித்தை நாமே விதைத்து விட்டு
பின் விஷ விருஷத்தை வெட்ட ஏன் நாம்
அவதி படவேண்டும்

இந்த விதைக்கும் செயல்களின் மேன்மை
நமக்கு கிடைக்கும் ஆசிகளாலும் , பரிசுகளாலும் ,
நமது செல்வவளத்தாலும் ,சேரும்பொருள்களாலும் ,
நண்பர்களாலும் ,பெறும் பாராட்டாலும் உணரப்படும் !
நாமேதான் நமது வாழ்வில் நடை பெரும் சம்பவங்களையும் ,
செய்யும் செயல்களையும் ,காணும் மக்களையும்
நிர்ணயிக்கிறோம் . நமது எண்ணங்கள் ,உணர்வுகள் ,
வார்த்தைகள் , செயல்கள் அனைத்தும்
ஒருவித சக்தியை ( energy) உண்டாக்குகிறது !
இச் சக்திகள் இப்பிரபஞ்சத்தில் தொடர்ந்து உருவாகிவரும்
இத்தகு சக்தியின் சேமிப்பில் இருந்து
அதன் ஒத்த சக்தியை ஈர்த்து பெறும்.
நேர் சக்திகள் பிரபஞ்சத்தில் இருந்து நல்ல சக்தியை பெறும்
மாறு சக்திகள் பிரபஞ்சத்தை மாசுபடுத்தும் தீய சக்திகளை
தானும் ஈர்த்தும் அதிகம் பெறும் .
நேர்சக்திகள் என்பவை அன்பு நேர்மை , ஆனந்தம் கருணை ,நன்றி முதலியன
இவை ஈர்ப்பதுவோ செல்வத்தையும் ,ஆனந்தத்தையும் .

எதிர்மறை சக்திகள் பொறாமை ,ஒழுங்கீனம் , வன்முறை இன்னும் பல
அதனால் பெறுவதோ வறுமை , தொடரும் ஆதரவின்மை , செயலில் மேன்மையின்மை ,
பிறவியை வீணடிக்கும் அறிவீனம் இன்னும் பல .

ஒவ்வொரு மனிதனுள்ளும் அவனை மேன்மை படுத்திக்கொள்ளும்
வல்லமை பொதிந்தே உள்ளது
அவனினின் கர்ம வினையின் போக்கை மாற்றி அமைத்துக்கொள்ளும்
வழி அவனிடமே உள்ளது

வாழ்வு என்பது தண்டனை கழிக்க வரும் சிறைச்சாலை இல்லை .
அது வாழ்வை மேன்மை படுத்திக்கொள்ளவரும் அற்ப்புதமான பாடசாலை
இறைவன் தண்டனைதரும் சிறை வார்டன் அல்ல
அறிவை நமக்கு தர நாளும் உழைக்கும் நல்லாசிரியன் !

நமது கர்ம வினைகள் நாம் நினைத்து ,நடுங்கும்
நாமே ஒடுங்கும் ,நாமே ஈர்க்கும் கொடும் தண்டனைகள் என அஞ்சத்தேவை இல்லை
அவைகளை அனுபவிக்கும் முறைகளை நான்கு விதமாக
நமது மூத்தோர் வகுத்துள்ளனர் !
அவை
---காற்று வீசுவது போல் நம்மை பாதிப்பது
-- மழையில் நனைவது போல் நம்மை பாதிப்பது
-- மண் பானையில் உள்ள எழுத்து போல் நம்மை பாதிப்பது
---கல்வெட்டு போல் நம்மை பாதிப்பது

நான்காம் வழியில் உள்ள கல்வெட்டு போன்ற கர்ம வினைத்தரும் கொடும் வினைகளை வாழும்
போது தவிர்க்கவேண்டும் .
எனவே கமது கர்ம வினைகளை எண்ணி அதிகம் நமை நாமே ,
சுருக்கிகொள்லாமல் , காற்று வீச ஆரமித்ததுமே ,
நாமே முகத்தை மூடிக்கொள்ளாமல் ,
மழை பெய்ய ஆரமித்ததுமே தும்ப ஆரமிக்காமல் ,
மண் பானையில் உள்ள எழுத்து கரைந்து விடும் என்ற
நம்பிக்கையுடன் வாழ தெரிந்து கொண்டால்

கர்ம வழி மூலம் வரும்
துன்பத்தை சுலபமாக அனுபவித்து தீர்க்கலாம் .அப்போது தேவை அமைதியும் ,சற்று பொறுமையுமே !
நடப்பது அனைத்தையும் கடவுளின் கருணையாக ஏற்றுக்கொள்ளும்
அறிவும் ,நடப்பதுடன் போராடி மேலும் சிக்கலாக்காமல்
அமைதியாக இருக்கும் பொறுமையும் அமைதியும் நமக்கு இருக்குமானால் ,
நாம் நமது கர்ம வினையையும் ,நம்மை ஆட்டிவிக்கும்
சமஸ்கார உத்துதல்களில் இருந்தும் எளிதில் தப்பிவிடலாம்

செல்வந்தனாகவும் ,சுகமாக வாழ்வதும் நமது உரிமை !
ஒவ்வருவரின் வாழ்வின் வழி !
கடவுள் கருணையுள்ள நல்லாசிரியனேத்தவிர தண்டனைத்தரும் சிறை வார்டன் அல்ல .
இறைவன் நம்மை கஷ்ட்டப்படுத்தி வாழநம்மை படைக்கவில்லை .அப்படியானால் நமக்கு
இயற்க்கை மூலம் இத்தனை சௌரியங்களை வழங்கி இருக்கவேண்டாமே .

எனவே நம்மை நாமே துன்ப சிறையிலிட்டுகொள்ளவேண்டாம்
கர்மவினைகளில் இருந்து படம் கற்றலே விடுபட எளிய வழி .

மேலும் சில வாழ்வின் சிக்கலில் இருந்து மீளும் ,
சுலப வழிகளை அடுத்த பகுதியில் பார்ப்போம் !
அதில் மிக சுலபம் பக்தி ! அதுவே நன்றி தெரிவித்தல் !
அன்புடன் ,
அண்ணாமலை சுகுமாரன் --
9345419948


Sponsored content

PostSponsored content



Page 8 of 13 Previous  1, 2, 3 ... 7, 8, 9 ... 11, 12, 13  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக