புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வெள்ளமும் அள்ளுதே! + தை பிறந்தது, வழி பிறந்ததா?(கவிதைகள்) Poll_c10வெள்ளமும் அள்ளுதே! + தை பிறந்தது, வழி பிறந்ததா?(கவிதைகள்) Poll_m10வெள்ளமும் அள்ளுதே! + தை பிறந்தது, வழி பிறந்ததா?(கவிதைகள்) Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
வெள்ளமும் அள்ளுதே! + தை பிறந்தது, வழி பிறந்ததா?(கவிதைகள்) Poll_c10வெள்ளமும் அள்ளுதே! + தை பிறந்தது, வழி பிறந்ததா?(கவிதைகள்) Poll_m10வெள்ளமும் அள்ளுதே! + தை பிறந்தது, வழி பிறந்ததா?(கவிதைகள்) Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
வெள்ளமும் அள்ளுதே! + தை பிறந்தது, வழி பிறந்ததா?(கவிதைகள்) Poll_c10வெள்ளமும் அள்ளுதே! + தை பிறந்தது, வழி பிறந்ததா?(கவிதைகள்) Poll_m10வெள்ளமும் அள்ளுதே! + தை பிறந்தது, வழி பிறந்ததா?(கவிதைகள்) Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
வெள்ளமும் அள்ளுதே! + தை பிறந்தது, வழி பிறந்ததா?(கவிதைகள்) Poll_c10வெள்ளமும் அள்ளுதே! + தை பிறந்தது, வழி பிறந்ததா?(கவிதைகள்) Poll_m10வெள்ளமும் அள்ளுதே! + தை பிறந்தது, வழி பிறந்ததா?(கவிதைகள்) Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
வெள்ளமும் அள்ளுதே! + தை பிறந்தது, வழி பிறந்ததா?(கவிதைகள்) Poll_c10வெள்ளமும் அள்ளுதே! + தை பிறந்தது, வழி பிறந்ததா?(கவிதைகள்) Poll_m10வெள்ளமும் அள்ளுதே! + தை பிறந்தது, வழி பிறந்ததா?(கவிதைகள்) Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
வெள்ளமும் அள்ளுதே! + தை பிறந்தது, வழி பிறந்ததா?(கவிதைகள்) Poll_c10வெள்ளமும் அள்ளுதே! + தை பிறந்தது, வழி பிறந்ததா?(கவிதைகள்) Poll_m10வெள்ளமும் அள்ளுதே! + தை பிறந்தது, வழி பிறந்ததா?(கவிதைகள்) Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel

prajai

Manimegala

சிவா
வெள்ளமும் அள்ளுதே! + தை பிறந்தது, வழி பிறந்ததா?(கவிதைகள்) Poll_c10வெள்ளமும் அள்ளுதே! + தை பிறந்தது, வழி பிறந்ததா?(கவிதைகள்) Poll_m10வெள்ளமும் அள்ளுதே! + தை பிறந்தது, வழி பிறந்ததா?(கவிதைகள்) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெள்ளமும் அள்ளுதே! + தை பிறந்தது, வழி பிறந்ததா?(கவிதைகள்) Poll_c10வெள்ளமும் அள்ளுதே! + தை பிறந்தது, வழி பிறந்ததா?(கவிதைகள்) Poll_m10வெள்ளமும் அள்ளுதே! + தை பிறந்தது, வழி பிறந்ததா?(கவிதைகள்) Poll_c10 
435 Posts - 47%

320 Posts - 35%

77 Posts - 8%

38 Posts - 4%

30 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

Srinivasan23
வெள்ளமும் அள்ளுதே! + தை பிறந்தது, வழி பிறந்ததா?(கவிதைகள்) Poll_c10வெள்ளமும் அள்ளுதே! + தை பிறந்தது, வழி பிறந்ததா?(கவிதைகள்) Poll_m10வெள்ளமும் அள்ளுதே! + தை பிறந்தது, வழி பிறந்ததா?(கவிதைகள்) Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
வெள்ளமும் அள்ளுதே! + தை பிறந்தது, வழி பிறந்ததா?(கவிதைகள்) Poll_c10வெள்ளமும் அள்ளுதே! + தை பிறந்தது, வழி பிறந்ததா?(கவிதைகள்) Poll_m10வெள்ளமும் அள்ளுதே! + தை பிறந்தது, வழி பிறந்ததா?(கவிதைகள்) Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெள்ளமும் அள்ளுதே! + தை பிறந்தது, வழி பிறந்ததா?(கவிதைகள்)

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sun Jan 23, 2011 3:20 pm

(தை பிறந்தது, எமக்கு வழிபிறந்ததா? என்னும் ஓர் கவியரங்கத்துக்கு எழுதியது)

ஓடும் குளிர்காற்றும் ஓங்கியநற் பெருமரமும்
ஓரத்தே நின்றசைய
கூடும் பசும்வயலை குலவிடவே தூரத்தில்
குனிந்துமே தொடுவானமும்
பாடும் குயில் பறவை பசுங்கிளிகள் பற்பலவும்
படபடத்து ஒடியலையும்
நாடும் நலம்வீடும் பேணும் உழவர்தமின்
நாணுகதிர் சேர்ந்தவயலில்

ஓடியறுத்தகதிர் ஓரம் அடுக்கிவெயில்
உடல்கருக்க வேர்வை தெளித்து
பாடிக் களித்துவரும் பலம்கொண்ட காற்றுக்குப்
பதர்நீக்கிப் பயனும்பெற்று
வாடியவர் குடிசெழிக்க வயலீந்த பெருங்கொடையால்
வாசலிலும் கோலமிட்டு
தேடியவோர் நிதிஎண்ணி தெய்வம் எனக்கதிரோன்
திசை நோக்கித் தொழுதுநிற்பர்

நாடு செழிக்கவெனில் வயல்`வரம்புயர`வென
நறுக்கான வார்த்தைகூறி
பாடும் பெரும்புலவர் பாட்டிஎம தவ்வையவள்
பதங்கூறுஞ்சொல் கேளீரேல்
தேடும் நிதியனைத்தும் தோற்றுவது கழனி,கறித்
தோட்டமெனப் பொருளேயாகும்
ஓடும் முகில் மறைந்து உள்ளமகிழ் ஆதவனே
உயிருக்கு உணவீந்ததை

தைபிறந்தால் வழிபிறக்கும் தமிழன்வாழ் வேற்றமுறும்
தழைத்தோங்கு மென்றேகூறி
மெய்யுரைத்த நாளெல்லாம் மேதினியில் போனதய்யா
மீளாத வெள்ளம் வந்து
செய்கழனி நெல்லழித்து சிதைத்தவரின் இல்லத்தே
சென்றுதான் இடம்பிடித்து
கொய்துதலை கொண்டாடும் குடியழித்த அரசுக்கு
கூலிக்குநிற்குதப்பா

தைபிறந்தால்குடியழிக்கும் தமிழீழத்திருநாட்டில்
தவிக்கவிடும் என்பதைப்போல்
கையழிந்து கைகொண்ட காசிழந்து பொருள்நீங்க
கால்நடைகள்தானுமிழந்து
தாயழுது சேயழுது தரம்கெட்டு எழுந்தோடி
தண்ணீரில் உடல் விறைத்து
பேய்களுதும் வாழ்வைவிட பேதலித்தவாழ்வுகொள்ளப்
பிறந்தவரோநாம் ஈழத்தவர்

கொய்துதலை குவித்தெண்ணிக் கொண்டாடும் சிங்கத்தின்
கொடிகொண்ட அரசுதானும்
எய்தவென எல்லாமும் உவந்தளித்து நலமவாழ
செய்தவனோ இறைவன் என்னில்
பெய்தமழை உருண்டோடிப் பேசாமல் கடல் செல்லச்
செய்வதனை விட்டே எம்மை
உய்த நிலை காண்பதுவும் பொறுக்காது எழஎழவே
வீழ்த்துவதாய் வினைகள் செய்தான்

தைபிறந்தால் குழிபறிக்கும் தலைபோகுமென்றிருகக்
தைபொங்கல் யாருக்கய்யா
பெய்யுமழை உணவழிக்க உயிரெடுக்க இடம்நகர்த்த
நன்றி சொல்வ தெவருக்கய்யா
செய்தவயல் எமக்கில்லை உள்ளவயல் வெள்ளமென
இயற்கையே கொள்ளிவைக்க
கைகுலுக்கி வாழ்த்தெழுதி களித்திடவும் எங்களுக்கு
தை இன்னும் பிறக்கவில்லை

சூரியனைக்காணாது சூழுமிருள் காலமதில்
சூடேறும் வானைநோக்கி
ஏறுவனோ கதிரோனென் றேங்கிகிடக்கின்றோம்
எரியட்டும் எங்கள்சோதி
வீறுடனே விடுதலையும் வெற்றியதும் கிட்டட்டும்
வீடெல்லாம்பொங்கல்பொங்கி
கூறிடுவோம் அப்போதே தை பிறந்து வழிபிறந்த
தழைத்தோங்கும் வாழ்வும்வரும்

மாறிடுவோம் மாற்றிடுவோம் மாகவியின் கூற்றெடுத்து
மாவுலகில் ஒருவனுக்கு
சோறுதான் இல்லையெனில் சுற்றும் புவி நிறுத்திச்
சொல்லென்று கேளாயினும்
வேறுஅவர் என்றில்லா வீரத் தமிழுறவு
விடியாமல் அலைந்துசாக
ஏறுவது கீழ்த்திசையில் எங்கள் இரவியல்ல
இது எங்கள் தையுமல்ல

தைபிறந்து வழிபிறக்கும் வார்த்தையது உண்மையெனில்
வந்ததிது தையுமல்ல
வெய்யவனும் கீழ்த்திசையில் வேகமுடனேறிவரின்
விடிந்திருக்கும் விடிவுமல்ல
தெய்வமெனும் தமிழ்பொங்கி திசையெல்லாம் முழக்கமிடும்
தேன்தமிழின் பொங்கலல்ல
செய்வதென் விடியலதன் திசைநோக்கி நடைகொள்வோம்
தோன்றட்டும் முதலில் விடிவு

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Jan 23, 2011 5:37 pm

மிக அருமையான இலக்கிய வளம் செறிந்த மரபுப்பாவுக்கு வந்தனம் கிரிகாசன்..

தை பிறந்தால் வழி பிறக்கும் வாழ்வு சிறக்கும் என்று முன்னோர் சொன்ன சொல் பொய்யாய் பழங்கதையாய்ப் புதையுண்டு போனதே எனும் ஆதங்கம் உங்கள் வரிகளில் வழிந்தோடுவதைக் காண்கிறேன்.. தை பிறந்தால் குழி பறிக்கும் என்னும் சொல்லாடல் அருமை.

பாராட்டுக்கள் கிரிகாசன் அண்ணா..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Jan 23, 2011 5:41 pm

அழகான கவிக்கு நன்றி

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Sun Jan 23, 2011 6:17 pm

விடுதலைப் பயிர் செழித்து, தமிழீழ வெள்ளி முளைத்து, உள்ளம் உவகையால் பொங்கும் நாளே எமக்கு வழி பிறக்கும் தையாகும் என்னும் உங்கள் உள்ளக்கிடக்கை தெள்ளென விளங்கிற்று கிரி..

உயர்வான கவியமைப்பு .. உட்பொருளைப் போன்றே..

பாராட்டுகள் கிரிகாசன்..

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Jan 24, 2011 3:20 am

வாழ்த்துக்கள் தந்த கலையண்ணா, ரபீக், ARR அனவருக்கும் அன்பான மனமுவந்த நன்றிகள் உரித்தாகட்டும்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 24, 2011 4:43 am

///தைபிறந்தால் குழிபறிக்கும் தலைபோகுமென்றிருகக்
தைபொங்கல் யாருக்கய்யா
பெய்யுமழை உணவழிக்க உயிரெடுக்க இடம்நகர்த்த
நன்றி சொல்வ தெவருக்கய்யா
செய்தவயல் எமக்கில்லை உள்ளவயல் வெள்ளமென
இயற்கையே கொள்ளிவைக்க
கைகுலுக்கி வாழ்த்தெழுதி களித்திடவும் எங்களுக்கு
தை இன்னும் பிறக்கவில்லை///

படிக்கும்பொழுதே மனதை உலுக்கும் அருமையான படைப்பு அண்ணா! வெள்ளமும் அள்ளுதே! + தை பிறந்தது, வழி பிறந்ததா?(கவிதைகள்) 678642

வெள்ளமும் அள்ளுதே! + தை பிறந்தது, வழி பிறந்ததா?(கவிதைகள்) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Jan 31, 2011 5:59 am

சிவா wrote:படிக்கும்பொழுதே மனதை உலுக்கும் அருமையான படைப்பு அண்ணா! வெள்ளமும் அள்ளுதே! + தை பிறந்தது, வழி பிறந்ததா?(கவிதைகள்) 678642

மிக்க நன்றி இதே பாணியில் இன்னொருகவிதையும் எழுதினேன். அதையும் இங்கேயே போடுகிறேன்

தை பிறந்தது, வழி பிறந்ததா?

எத்`தை` வந்துவழிபிறக்கு மென்பரோ
அத்`தை` வந்து ஆனதென்ன வாழ்விலே
சொத்தை வாழ்வும் சூழும் துன்பமாகியே
நித்தம் நீரில் கண்கள் கொட்டக்காணுதே

எத்துணைதான் பாவம்செய்தோம் வாழ்விலே!
சுத்திச்சுத்தித் துன்பம்வந்து மேவியே
சொத்து சுகம் அத்தனையும் அள்ளியே
நிர்க்கதியாய் நிற்கவிட்டுப் போகுதே

கொத்துகொத்தாய் செத்து இனம் மண்ணிலே
வித்துக்களாய் போயழிந்து போகுதே
இத்`தை` வந்துஎன்ன பயன் பாரிலே
சத்தியமாய் எவ்வழியும் தோன்றலே

வைத்தகுறி எம்மெதிரி ஈழமே
அத்தனையும் கொள்ளையிட்டு நம்மையே
சுத்தியுள்ள தீவின்கடல் தள்ளியே
புத்தமதத் தீவென்றாக்கத் திட்டமே

ஒத்து ஊதிக் காலமகள் கூடவே
கத்திப் பெருஞ்சூறைகாற்றும் வெள்ளமே
சுத்தி வரும்சூழலை சுனாமியே
அத்தனையும்வந்து எம்மைகொல்லுதே

நர்த்தமிடும் எம்சிவனே நங்கைகொள்
அர்ததநாரி ஈஸ்வரனே ஆண்டவா
வைத்த முடிகங்கையோடு சண்டையா
வந்தவளோ எம்மைகொல்வதேனடா

தை பிறந்து இவ்வுலகம் ஆடியே
தெய்வமெனச் சூரியனைப் பாடியே
நெய்யும்மிட்டுத் தேன்சுவைத்த பொங்கலை
கையழைந்து உண்ண நாமோ மண்ணிலே

மெய்கிழித்து ரத்தம்வரப் பாவியாய்
பொய்த்து உடை இன்றிநிரு வாணமாய்
கைபிணைத்துக் கட்டிபெரும்பேய்களால்
கொய்துவாழ்வழிந்து சேற்றில்சாகுறோம்

வழிபிறக்க வில்லை என்பதொன்றடா
விழிதிறக்கக்கூடச் சக்தி இல்லைடா
மொழிகதைத்த தமிழனென்ற தானதால்
குழிபறித்து வாழ்வு மண்ணுள்போகுதே

ஒளித்தலைவன் ஒருவன் எங்கள் சூரியன்
வளித்தடத்தில் கால்பதித்து வாழ்வையே
அழிக்கும் பகை கையிருந்து ஈழமாம்
பிழைத்துவிட மீட்டிடுவோம் முதலிலே

செழித்துஈழம் மீண்டுமாட்சி கொள்ளட்டும்
பழித்தவர்கள் பாவி மண்ணுள் போகட்டும்
வெளித்து வானம் கருமுகில்கள் ஓடட்டும்
வழிபிறந்து தையும் வந்துசேரட்டும்

அதுவரையில் வருவதொன்றும் தையல்ல
பொதுவுலகின் கதையுமெங்கள் கதையல்ல
புதுவழியில் விடுதலை நாம் பெறும்வரை
இது புரியாவிடுக`தை` எம்துயர்க`தை`

தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Mon Jan 31, 2011 10:25 am

அருமையான கவிதைகள் அண்ணா! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Mon Jan 31, 2011 2:18 pm

வெள்ளமும் அள்ளுதே! + தை பிறந்தது, வழி பிறந்ததா?(கவிதைகள்) 677196 செய்தவயல் எமக்கில்லை உள்ளவயல் வெள்ளமென
இயற்கையே கொள்ளிவைக்க
கைகுலுக்கி வாழ்த்தெழுதி களித்திடவும் எங்களுக்கு
தை இன்னும் பிறக்கவில்லை வெள்ளமும் அள்ளுதே! + தை பிறந்தது, வழி பிறந்ததா?(கவிதைகள்) 677196

வெள்ளமும் அள்ளுதே! + தை பிறந்தது, வழி பிறந்ததா?(கவிதைகள்) Mவெள்ளமும் அள்ளுதே! + தை பிறந்தது, வழி பிறந்ததா?(கவிதைகள்) Oவெள்ளமும் அள்ளுதே! + தை பிறந்தது, வழி பிறந்ததா?(கவிதைகள்) Hவெள்ளமும் அள்ளுதே! + தை பிறந்தது, வழி பிறந்ததா?(கவிதைகள்) Aவெள்ளமும் அள்ளுதே! + தை பிறந்தது, வழி பிறந்ததா?(கவிதைகள்) N
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக