புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குடிசைகளை அகற்றும் அரசு Poll_c10குடிசைகளை அகற்றும் அரசு Poll_m10குடிசைகளை அகற்றும் அரசு Poll_c10 
73 Posts - 77%
heezulia
குடிசைகளை அகற்றும் அரசு Poll_c10குடிசைகளை அகற்றும் அரசு Poll_m10குடிசைகளை அகற்றும் அரசு Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
குடிசைகளை அகற்றும் அரசு Poll_c10குடிசைகளை அகற்றும் அரசு Poll_m10குடிசைகளை அகற்றும் அரசு Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
குடிசைகளை அகற்றும் அரசு Poll_c10குடிசைகளை அகற்றும் அரசு Poll_m10குடிசைகளை அகற்றும் அரசு Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குடிசைகளை அகற்றும் அரசு Poll_c10குடிசைகளை அகற்றும் அரசு Poll_m10குடிசைகளை அகற்றும் அரசு Poll_c10 
238 Posts - 76%
heezulia
குடிசைகளை அகற்றும் அரசு Poll_c10குடிசைகளை அகற்றும் அரசு Poll_m10குடிசைகளை அகற்றும் அரசு Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
குடிசைகளை அகற்றும் அரசு Poll_c10குடிசைகளை அகற்றும் அரசு Poll_m10குடிசைகளை அகற்றும் அரசு Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
குடிசைகளை அகற்றும் அரசு Poll_c10குடிசைகளை அகற்றும் அரசு Poll_m10குடிசைகளை அகற்றும் அரசு Poll_c10 
8 Posts - 3%
prajai
குடிசைகளை அகற்றும் அரசு Poll_c10குடிசைகளை அகற்றும் அரசு Poll_m10குடிசைகளை அகற்றும் அரசு Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
குடிசைகளை அகற்றும் அரசு Poll_c10குடிசைகளை அகற்றும் அரசு Poll_m10குடிசைகளை அகற்றும் அரசு Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
குடிசைகளை அகற்றும் அரசு Poll_c10குடிசைகளை அகற்றும் அரசு Poll_m10குடிசைகளை அகற்றும் அரசு Poll_c10 
3 Posts - 1%
Barushree
குடிசைகளை அகற்றும் அரசு Poll_c10குடிசைகளை அகற்றும் அரசு Poll_m10குடிசைகளை அகற்றும் அரசு Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
குடிசைகளை அகற்றும் அரசு Poll_c10குடிசைகளை அகற்றும் அரசு Poll_m10குடிசைகளை அகற்றும் அரசு Poll_c10 
2 Posts - 1%
Shivanya
குடிசைகளை அகற்றும் அரசு Poll_c10குடிசைகளை அகற்றும் அரசு Poll_m10குடிசைகளை அகற்றும் அரசு Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குடிசைகளை அகற்றும் அரசு


   
   
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Mon Jan 24, 2011 2:40 pm

சென்னையை எப்படியாவது சீர்மிகு சிங்கார சென்னையாக மாற்றிவிட வேண்டும் என்று கங்கணம் கட்டி களம் இறங்கியிருக்கும் முதல்வர் கருணாநிதியும், துணை முதல்வர் மு.க.சுடாலினும் அதற்காக முதலில் கை வைத்தது சென்னையில் உள்ள குடிசைகள் மீதுதான்.

சென்னை நகரில் பொருத்தவரையில் அதிவிரைவு மேம்பால நெடுஞ்சாலை(துறைமுகத்திலிருந்து மதுரவாயல் வரை) அதிவேக நெடுஞ்சாலை(அடையாறு ஆற்றிலிருந்து போரூர் நந்தம்பாக்கம் பாலம் வரை) வெளிவட்டச் சாலை(வண்டலூரிலிருந்து மீஞ்சூர் வரை), கடலோர மேம்பாலச்சாலை(திருவொற்றியூரிலிருந்து எண்ணூர் வரை) ஆறுவழிச்சாலை, கூவத்தைச் சுத்தப்படுத்துதல் போன்ற அதி முக்கியமான சென்னை நகரை அழகுபடுத்தி, போக்குவரத்தை விரிவாக்கி சீர்மிகு சிங்காரச் சென்னையாக மாற்றுவதற்கு இந்தத் திட்டங்கள் தீட்டப்படுகின்றன.

வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் வெளியேற்றப்பட்ட சேரி மக்கள், குன்றத்தூர் திருப்பெரும்புதூர் நெடுஞ்சாலையில் குன்றத்தூரில் இருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் நல்லூர், பழைய மகாபலிபுரம் சாலையில் துரைப்பாக்கத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் கண்ணகி நகர், பெருங்குளத்தூர் அருகே எருமையூர் கூட்டு சாலை செல்லும் வழியில் தாம்பரத்திலிருந்து 4.கி.மீ. தொலைவில் கன்னடபாளையம் என்று குடியமர்த்தப்பட்டுள்ளனர். கண்ணகி நகரில் 15 ஆயிரத்து 656 வீடுகள் கட்டி முடித்திருப்பதாகக் கூறி, 14 ஆயிரத்து 509 வீடுகளை இதுவரை ஒதுக்கியிருக்கிறார்கள். இன்னும் எட்டாயிரம் வீடுகள் கட்டப்போவதாகவும் அரசு தரப்பில் கூறிவருகிறார்கள்.

நகரின் மேம்பாட்டுத் திட்டத்திற்காக சேரி மக்களை நகருக்கு வெளியே எங்காவது தூக்கி எறியும் துணை முதல்வர் மு.க.சுடாலினுடைய நடவடிக்கையை நமது நடுத்தர, மேல்வர்க்க மக்கள் வரவேற்கவே செய்கின்றனர். முனைவர் இராதாகிருட்டிணன் சாலையில் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி வரும் விதிமுறை மீறிக் கட்டப்பட்ட ஒரு நட்சத்திர விடுதியால் நீதிமன்ற உத்தரவை மீறியும் பிரம்மாண்டமாக இன்றும் நிற்கமுடிகிறது! இதையெல்லாம் கண்டுகொள்ளாத ஒட்டுமொத்த நகரவாசிகள், சேரிகளால்தான் சென்னை நகரின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது என்கிறார்கள்.

‘நகரம் வளர்ச்சி அடைய சேரி மக்களை விரட்டுவதில் என்ன தவறு’ என்று கேட்கிறார்கள். கூவத்தைச் சாக்கடையாக்கி, நகரின் தூய்மையைக் கெடுப்பவர்கள்தேனே சேரி மக்கள் என்று படித்த நடுத்தர, மேல்தட்டு மக்களின் புத்திக்குள் ஏற்றப்பட்டிருக்கிறது. கூவம் உண்மையில் சேரி மக்களால்தான் கெட்டுப் போனதா? யமுனை நதிக் கரையில் வாழ்கிற மூன்று இலட்சம் குடிசைவாசிகளால் அந்நதியில் சேரும் மாசு வெறும் 0.33 சதவிகிதம் மட்டும்தான். மீதமுள்ள 99.67 சதவிகித மாசு மற்றவர்களால் தொழிற் சாலைகளால் ஏற்படுகின்றன. (ஆதாரம்: மாசுதீங்கு ஆய்வு மையம் வெளியிட்ட புள்ளி விவரம்) கூவத்துக்கும் இது பொருந்தும்தானே.

நகரில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள் தொகையால் அடுக்குமாடி கட்டடங்களால் வெளியேறும் கழிவுகள், உணவுவிடுதிக் கழிவுகள், தொழிற்சாலைக் கழிவுகள், குப்பைகள் என கூவத்தில் கொட்டப்படுபவை குறித்து என்றைக்குமே இந்த நடுத்தர, மேல்தட்டு மக்கள் கவலைப்பட்டது கிடையாது. பொதுவாக ஆறு ஆறாக இருக்கும் வரை அதன் கரைகளில் வாழ்பவர்களால் அந்த ஆற்றுக்கு என்ன தீங்கு வந்துவிடப் போகிறது? காவிரி ஆற்றின் கரைகளில் இன்றும் வீடுகள் இருக்கின்றன. அதில் மக்கள் வசித்துக் கொண்டுதானிருக்கிறார்கள்.

இவர்களை ஆக்கிரமித்து இருக்கிறார்கள் என்று காரணம் காட்டி அகற்றுகிறார்கள் என்றால், சென்னையில் தியாகராயர் நகர் உட்பட பல்வேறு பகுதிகளில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட துணிக்கடைகள், வணிக வளாகங்கள், கல்யாண மண்டபங்களை அகற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையிலும் அந்த உத்தரவை அரசு நிறைவேற்றாமல் இருப்பது ஏன்?

நகரில் வசித்து வந்த குடிசை வாழ் மக்கள் வளர்ச்சிப் பணி என்கிற பெயரில் இங்கிருந்து அகற்றப்பட்டு எங்கோ ஒரு மூலையில் குடியமர்த்தப்படுகிறார்கள். இதனால் இடம் பெயரும் மக்களின் சமூக, பொருளாதார வாழ்க்கை எப்படியெல்லாம் பாதிக்கப்படும் என்று சிந்திக்கப்படுவதே இல்லை. நகரம் என்பதை பணக்காரர்களும் அரசியல்வாதிகளும் வாழ்வதற்கான இடமாக மாற்றுகிறார்கள்.

குடிசைகளை அகற்றிவிட்டு அதில் வசித்த மக்களை எந்த அடிப்படை வசதியும் இல்லாத பகுதிகளில் நகருக்கு வெளியே குடியமர்த்தப்படும் சேரி மக்கள், தினமும் அங்கிருந்து கூலி வேலைக்காக நகரை நோக்கி வந்து செல்வதால் அவர்களின் வருமானத்தில் பெரும் பகுதி பயணத்துக்கே போய்விடுகிறது. எந்த வளர்ச்சித் திட்டத்திற்காக அவர்கள் வெளியேற்றப்பட்டார்களோ அந்தத் திட்டத்திற்கு கோடிக்கணக்கில் செலவு செய்யும் அரசு அதையொட்டி வெளியேற்றப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய எந்த நிதி ஒதுக்கீடும் செய்வதில்லை என்பதுதான் வேதனையான உண்மை.

நகருக்கு ஒதுக்குபுறத்தில் இவர்கள் குடியமர்த்தப்படும் இடங்களில் பள்ளிகளோ அரசு மருத்துவமனைகளோ இல்லை. ஒரு தலைமுறையை கல்வி அறிவு அற்றதாக உருவாக்குவதில் இந்த அரசுக்கு அப்படியென்ன மகிழ்ச்சியோ தெரியவில்லை. சென்னை எழும்பூரில் கூவம் கரையில் இருந்து அகற்றப்பட்ட குடிசைவாசிகளுக்கு நகருக்கு வெளியே இடம் ஒதுக்கப்பட்டது. எழும்பூரில் இந்தச் சேரிக் குழந்தைகள் படித்து வந்த மாநகராட்சிப் பள்ளியும் மாணவர்கள் யாரும் வருவதில்லை என்ற காரணத்தால் மூடப்பட்டுவிட்டது. அந்தக் குழந்தைகள புதிதாக வசிக்கப் போன இடத்தில் பள்ளிக்கூடங்கள் கிடையாது. சேரி மக்களின் பெரும்பாலானோர் தலித்துகள்.

ஆண்டுக்கு 100 நாட்கள் கூட நடக்காத, அப்படியே நடந்தாலும் அதனால், ஏழை, எளிய பாமர மக்களுக்குப் பயன்படாத சட்டப்பேரவை கூட்டத்திற்கான பிரமாண்ட கட்டடம் நகரின் மத்தியில் கட்டப்படுகிறது. இதனால், அந்தப் பகுதியில் ஏற்படும் போக்குவரத்துச் சிக்கல், பாதுகாப்பு ஏற்பாடுகளால் மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் பற்றியெல்லாம் அரசுக்கு கவலையில்லை. சட்டப் பேரவை கட்டடத்தை நகரில் இருந்து தொலைவில் வண்டலூருக்கு அருகே கட்டியிருந்தால் என்ன குறைந்து போய்விடும்?

2001ம் ஆண்டு கணக்கின்படி குடிசைவாழ் மக்களின் எண்ணிக்கை 10 இலட்சத்து 79 ஆயிரம் பேர். (உலகமயமாதலால், விவசாயிகளுக்கு எதிரான விவசாயக் கொள்கை, சிறப்புப் பொருளாதாரா மண்டலங்கள் போன்ற திட்டங்களால் கிராம மக்கள் அவர்களின் சொந்த நிலத்தில் இருந்து விரட்டியடிக்கப்பட்டு சென்னை பொன்ற பெரு நகரங்களில் நடைபாதை வாசிகளாக, சேரிவாசிகளாக ஆக்கப்பட்டு வருவதால் இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக் கொண்டேதானிருக்கிறது)

குடிசை மாற்று வாரியம் மூலம் இதுவரை சேரி மக்களுக்கு நிறைவேற்றப்பட்ட ஆக்கப்பூர்வமான திட்டங்கள் எதுவும் இல்லை. ஆனால் சேரி மக்களுக்கு மத்திய அரசு ஒதுக்கும் யவர்கர்லால் நேரு தேசிய நகர்புறப் புனரமைப்புத் திட்டத்தின் பலகோடி ரூபாய் நிதியை நகரை அழகுபடுத்துவதற்கே இந்த அரசு பயன்படுத்தி வருகிறது என்று தொண்டு நிறுவனங்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன.

சென்னை குடிசைப் பகுதிகளில் தீ விபத்துகள் மற்றும் இடம்பெயர்த்துக் குடியமர்த்தப்பட்டவர்களின் வாழ்நிலை குறித்த உண்மையறியும் குழு(ஆ.மார்க்சு தலைமையில்) அளித்துள்ள அறிக்கையில்,

1. வளர்ச்சித் திட்டங்களுக்காகவோ, கார்ப்பரேட்களுக்காகவோ குடிசைப் பகுதி மக்கள் இடம் பெயர்த்தப்படுவது நிறுத்தப்பட வேண்டும். தவிர்க்க முடியாத நிலையில் ஏற்கெனவே வசித்த இடங்களில் இருந்து 5கி.மீ. தூரத்தில் குடியிருப்பு, வசதி செய்து தரப்பட வேண்டும்.
2. குடியமர்த்தப்பட்ட பகுதிகளில் குடிநீர், பள்ளிகள், ஆரம்ப சுகாதார நிலையம், நியாயவிலைக்கடை, மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
3. இப்போது வாழும் சுகாதாரக் கேடான அடிப்படை வசதிகளற்ற நிலையிலேயே அவர்கள் தொடர்வதா என்கிற கேள்வி எழுகிறது. கோட்பாடுகளின் அடிப்படையில் இந்தக் கேள்விக்கு ஒற்றை வரியில் பதில் சொல்லிவிட முடியாது. இவை எல்லாவற்றையும் விட அடிப்படை வாழ்வாதாரம், வேலைவாய்ப்பு முதலியன அமையாதபோது அவை இரண்டாம் பட்சமாகிவிடுகிறது.
4. தீப்பற்றை எரிந்த இடங்கள் அனைத்திலும் மக்கள் வெளியேற்றப்படுவது குறித்து மறைமுகமாகவும் நேரடியாகவும் காலி செய்யுமாறு எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. ஆதாரங்கள் இல்லாதபோதும் இரசாயனப் பொடி ஏதோ பாவிக்கப்பட்டு தீ உண்டாக்கப்பட்டிருக்கலாம் என்று சிலர் கருதுகின்றனர்.
5. தீ முற்றாக அனைத்தையும் அழித்துவிடுகிறது. பாடநூல்கள், சீருடைகள், குடும்ப அட்டை, வரி கட்டிய ரசீது, ஓட்டுநர் உரிமம் முதலான அடிப்படை ஆவணங்கள் அழிந்துள்ளன.
6. சென்னை நகரில் திட்டமிடப்பட்டுள்ள வளர்ச்சித் திட்டங்கள், இதனால் ஏற்பட உள்ள பாதிப்புகள், பாதிக்கப்படுவோர் குறித்த மதிப்பீடு, மாற்றுத் திட்டங்கள் ஆகியன குறித்து வெள்ளை அறிக்கை ஒன்றை அரசு உடனடியாக வெளியிட வேண்டும்.
எனக் கோரியுள்ளது.

நகரை அழகுபடுத்த, வளர்ச்சிக்கு உட்படுத்த குடிசைகள் இல்லாத நகரம் அமைப்போம் என்பதை கருணாநிதி அரசு கொள்கையாகக் கொண்டிருக்குமேயானால், முதலில் நகரின் அழகைக் கெடுக்கும் வகையில் கருணாநிதி, அழகிரி, சுடாலின், கனிமொழி ஆகியோருக்கு உடன்பிறப்புகள் வைக்கும் பிளக்சு போர்டுகளுக்குத் தடை விதிக்கட்டுமே! முடியுமா இவர்களால்…

முடியாவிட்டால், குடிசைகளில் பற்றும் தீ, கோட்டை கோபுரங்களுக்குப் பரவும் நாள் வந்தே தீரும்!


SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Jan 24, 2011 2:55 pm

நிசாந்தன் wrote:நகரை அழகுபடுத்த, வளர்ச்சிக்கு உட்படுத்த குடிசைகள் இல்லாத நகரம் அமைப்போம் என்பதை கருணாநிதி அரசு கொள்கையாகக் கொண்டிருக்குமேயானால், முதலில் நகரின் அழகைக் கெடுக்கும் வகையில் கருணாநிதி, அழகிரி, சுடாலின், கனிமொழி ஆகியோருக்கு உடன்பிறப்புகள் வைக்கும் பிளக்சு போர்டுகளுக்குத் தடை விதிக்கட்டுமே! முடியுமா இவர்களால்…

முடியாவிட்டால், குடிசைகளில் பற்றும் தீ, கோட்டை கோபுரங்களுக்குப் பரவும் நாள் வந்தே தீரும்!


அதெல்லாம் முடியாது அதை கேட்க யாருக்கும் உரிமை இங்கு வழங்கப்படவில்லை

குடந்தை மணி
குடந்தை மணி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 458
இணைந்தது : 11/06/2010
http://manikandanvisvanathan.wordpress.com

Postகுடந்தை மணி Mon Jan 24, 2011 3:07 pm

கட் அவுட் வைக்கும் கலாச்சாரம் ஒழியட்டும்



- குடந்தை மணி
[size=18]http://manikandanvisvanathan.wordpress.com/
[/size]
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக