Latest topics
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ் முறை கலை
5 posters
Page 1 of 1
தமிழ் முறை கலை
தமிழ் முறை கலை - வள்ளலார் பக்தர் சொல்வது.
திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த சன்மார்க்க அன்பர் திரு ராஜேந்திரன் தொலைபேசியில் ஒரு தகவலைச் சொன்னார். அதாவது,தினமணி கதிர் 28.9.2008ந் தேதிய இதழில் வந்த ஒரு கட்டுரையில், திரு அருட்பிரகாச வள்ளற் பெருமானின் அன்பர் ஒருவர் கராத்தே கற்றுக் கொடுக்கின்றார் என்பதுதான் அந்தச் செய்தி. முற்றிலும் புதியதான அந்தக் கலையைப் பற்றி தினமணி கதிர் (நாள் 28.9.2008) வந்த செய்தி கீழே தரப்படுகிறது.
பயிற்சி – கராத்தே அல்ல .. .. குங்ஃபூ அல்ல .. .. இது தமிழ் முறை .. ..
எஸ்.ஜே.
தாக்குதல் எப்போது ஆரம்பித்ததோ அப்போதே தற்காப்பும் ஆரம்பித்திருக்கும். மனிதர்களுக்கு இடையில் மோதல் வருகிற போது தாக்குதலும், தற்காப்பும் கலைகளாக மாறிவிடுகின்றன. நமது சிலம்பம், களறி, வர்மம் மட்டுமல்ல கராத்தே, குங்ஃபூ போன்ற அனைத்துத் தற்காப்புக் கலைகளும் இப்படிவந்தவைதான்.
ஆனால் நாம் இதுவரை கேள்விப்படாத ஒரு கலையைக் கற்றுக் கொடுக்கிறார் சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த சுயராஜ்யம். ‘தமிழ் முறை’ என்று அதற்குப் பெயரும் வைத்திருக்கிறார்.
‘இது ஒரு தாக்குதல் கலையோ, தற்காப்புக் கலையோ அல்ல. வெறும் உடற்பயிற்சிதான். ஆனால் எந்தத் தற்காப்புக் கலையைக் கற்றவரும் தமிழ் முறையைக் கற்றவர் மீது தாக்குதல் நடத்தினாலும் எந்தப் பாதிப்பும் ஏற்படாது” என்கிறார் சுயராஜ்யம். என்றாலும் ‘இதிலும் சில தாக்குதல் முறைகள் உள்ளன” என்கிறார் அவர்.
அவரைச் சந்தித்துப் பேசினோம். நான் சைதாப்பேட்டை மேட்டுப் பாளையம் ரோடு கார்ணீஸ்வரர் தோட்டத்தைச் சேர்ந்த மாரி முதலியாரிடம் இந்தக் கலையைக் கற்றுக் கொண்டேன். அவர் அருட்பெரும்ஜோதி வள்ளலார் பக்தர். அவர் இந்தக் கலையை எனக்குக் கற்றுக் கொடுத்தார்.
தியானம் செய்ய உடலுக்கு வலிமை வேண்டும். அந்த வலிமையைப் பெறச் செய்யும் உடற் பயிற்சியாகத்தான் இந்தத் தமிழ்முறை வள்ளலார் பக்தர்களிடம் ஆரம்பத்தில் இருந்திருக்கிறது. இது மிகவும் கடினமான உடற்பயிற்சி. நமது உடலைச் சுமந்து செய்யும் உடற்பயிற்சி. இந்தப் பயிற்சியை முறையாகச் செய்த ஒருவரின் மீது எந்த இடத்தில் அடித்தாலும் எந்தப் பாதிப்பும் ஏற்படாது.
உதாரணமாக வர்மம் கற்றவர் ஒருவரை என் உடலில் குற்ப்பிட்ட இடத்தில் அடிக்கும்படி கேட்டுக் கொண்டேன். ஒன்றும் ஆகவில்லை. இப்படி யார் அடித்தாலும் பாதிப்பு ஏற்படாது என்பது மட்டுமல்ல. அடிக்கும் அவரின் சக்தியை அவர் மீதே தாக்குதலாகத் திருப்பித் தரும் நுட்பங்களும் இதில் உள்ளன.
எம்.சுகுமார்.
இந்த உடற்பயிற்சி முறையைக் கற்றுக் கொண்டால் ரப்ப்ர் மாதிரி உடல் வளையும். மூச்சு, எண்ணம் எல்லாவற்றையும் சுத்தம் செய்யும். உடலின் உள்ளுறுப்புகள் வலிமையாகும். யார் அடித்தாலும் உறைக்காது.
அதுபோல எந்த நோய் நொடியும் அண்டாது. என்னிடம் காச நோய் பாதிக்கப்பட்ட சைதாப்பேட்டை சின்னமலையைச் சேர்ந்த ராஜூ என்பவர் வந்தார். பயிற்சி பெற்ற ஓர் ஆறுமாதத்தில் நோய் இல்லாமல் ஆரோக்கியம் அடைந்து விட்டார்.
இந்த உடற்பயிற்சி முறையைக் கற்றுக் கொண்டால் மனம் ரிலாக்ஸாகிவிடும். மனதை ஒருநிலைப்படுத்த முடியும். ஆனால் இதை முழுமையாகக் கற்றுக் கொள்ளும் வரை யாரும் தாக்குப் பிடிப்பதில்லை. ஏனென்றால் அந்த அளவுக்குக் கடுமையான உடற்பயிற்சிகள் இவை.
நடுத்தர வயதுள்ளவர்கள் கற்றுக் கொள்ள சூரிய நமஸ்காரம், சந்திர நமஸ்காரம் போன்ற எளிய பயிற்சிகள் உள்ளன. இதை ஒவ்வொரு பள்ளியிலும் கண்டிப்பான உடற்பயிற்சிப் பாடமாக வைத்தால் உருக்கு போன்ற உடலைக் கொண்ட ஓர் எதிர்காலத் தலைமுறையை உருவாக்கி விடலாம்” என்றார்.
இந்தத் தமிழ் முறை உடற்பயிற்சியைக் கடந்த இரண்டு ஆண்டுகஸாகப் பயின்று வருபவர் சுகன். பிஸியோதெரபி கற்று, பணி செய்து வரும் அவரைக் கேட்டோம்.
“ஒரு பிஸியோதெரபிஸ்ட் என்கிற முறையில் இந்தப் பயிற்சியைப் பற்றி நிறையச் சொல்ல முடியும்.
இந்த தமிழ்முறை பயிற்சியைச் செய்து வந்தால் முதுகுத் தண்டு நேராகும். மூட்டுவலி வராது. தசை முறுக்கேறிவிடும். எந்தத் தாக்குதலையும் உடல் தாக்குப் பிடிக்கும் வலி தெரியாது. மூச்சுப் பயிற்சி செய்பவருக்கு உள்ளுறுப்புகள் வலிமையாகும். இந்தத் தமிழ் முறை பயிற்சி செய்பவருக்கோ எல்லா உறுப்புகளும் வலிமையாகும்.
சில உடற்பயிற்சிகள் உடலில் இடுப்பிற்குக் கீழ் உள்ள பகுதிகளை வலிமைப் படுத்துபவை. சில இடுப்பிற்கு மேல் உள்ள பகுதிகளை வலிமைப்படுத்துபவை. ஆனால் இந்தப் பயிற்சி உடல் முழுக்க வலிமைப்படுத்தும். இது ஒரு முழுமையான உடற்பயிற்சி.
உடலின் ஸ்டெபிலிட்டி அதிகரிக்கும். ஒருவர் ஓங்கி அடித்தாலும் தலை சுற்றாது. மயக்கம் வராது. ஒருவர் அடிக்க வேண்டும். என்பதில்லை. எங்கேயோ இடித்துக் கொண்டு விழுந்து விட்டாலும் அப்போது மயக்கம் எதுவும் வராது. சுதாரித்து எழுந்து கொள்ளலாம்.
நான் ஒரு வருடம் தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டேன். அதன்பின் மாதம் 2 நாள் செய்தாலே போதுமானது” என்றார்.
சென்னை சைதாப்பேட்டை பகுதியில் கடந்த 20 – 25 வருடங்களாக குங்ஃபூ தற்காப்புக் கலையில் பயிற்சி செய்து வருபவர் எம். சுகுமார். அவரிடம் இந்தத் தமிழ் முறையயப் பற்றிக் கேட்டோம்.
சுயராஜ்யம்.
எல்லாத் தற்காப்புப் பயிற்சிகளும் இரண்டு கைகள், இரண்டு கால்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை.
மூடப்பட்ட முஷ்டியால் தாக்குவது ஆபத்தானது. விரிந்த முஷ்டி இன்னும் ஆபத்தானது. அதிலும் விரல் விஷம் போன்றது. இரண்டு விரல்களால் தாக்குதல் நடத்தியே ஒருவருக்குப் பெரிய ஆபத்தை ஏற்படுத்திவிட முடியும்.
பிற தற்காப்புப் பயிற்சிகள் கருவிகள் கொண்டு செய்யப்படுபவை. இந்தஹ் தமிழ் முறையில் எந்தக் கருவியும் கிடையாது. இந்தத் தமிழ்முறை உடற்பயிற்சியைச் செய்யப் பெரிய இடம் எதுவும் தேவையில்லை. சின்ன இடம் இருந்தால் போது. நமது நாட்டில் வர்மக் கலை இருந்தது. இப்போதும் இருக்கிறது. நமது உடம்பில் உள்ள சில இடங்களில் அதை வர்மம் என்று சொல்வார்கள். தாக்கினால் உடலின் சில பகுதிகளோ, அல்லது முழு உடம்புமோ செயலற்றுப் போய்விடும்.
ஆனால் தமிழ்முறையைப் பயிற்சி செய்த ஒருவரை இந்த வர்மக் கலையை வைத்து ஒன்றும் செய்ய முடியாது. அந்த அளவுக்கு உடம்பு உருக்குப் போல இறுகி விடும்.
சுகன்
தமிழ் முறையைக் கற்றவருக்கு உடல் பருமன் ஆகும். ஆனால் உறுதியாக இருக்கும். ஏனென்றால் இது ஒருவர் தன் உடலைச் சுமந்து செய்யும் பயிற்சி.
இது முழுமையான உடல்பயிற்சி என்றாலும் எதிரி அடிக்கும்போது அதைத் தடுக்கும் முறைகளும் சொல்லித் தரப்படுகின்றன. அதுபோல சில பிடிகளும் சொல்லித் தரப்படுகின்றன.
எதிரி அடித்தாலும் அது தெரியாது. அடித்தவருக்குத்தான் வலி அதிகமாக இருக்கும். அடிப்பவரின் அடியை அவர் பக்கமே திருப்பிவிரும் டெக்னிக்குகள் இதில் உள்ளன” என்றார்.
சென்னை சைதாப்பேட்டையில் வாரத்தில் 2 நாட்கள் பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன. முதலில் விளக்கேற்றி அதை வழிபடுகிறார்கள். பின்னர் தியானம். அதன்பிந்தான் உடற்பயிற்சி.
சிலர் வேறு மதத்தைச் சேர்ந்தவராக இருப்பார்கள். சிலருக்குக் கடவுள் நம்பிக்கையே இருக்காது. நீங்கள் தியானம் செய்யச் சொல்வது சரியாக இருக்குமா ? என்று கேட்டோம்.
“இதை எந்த மதத்தவரும் செய்யலாம். தியான செய்யும்போது அவருடைய கடவுளை அவர் நினைத்துக் கொள்ள வேண்டியதுதானே”: என்றார் சுயராஜ்யம் சிரித்துக் கொண்டே.
நன்றி --http://vallalarspace.com/Ramanujam/Articles/1676

Nallathambi- புதியவர்
- பதிவுகள் : 6
இணைந்தது : 28/12/2010
Re: தமிழ் முறை கலை
பயனுள்ள கட்டுரையை வழங்கியதற்கு நன்றி நல்லதம்பி!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தமிழ் முறை கலை
பயனுள்ள கட்டுரை நல்ல தம்பி.. உங்க அறிமுகம் தாருங்க..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
பாராட்டுக்கு நன்றிகள்
சிவா wrote:பயனுள்ள கட்டுரையை வழங்கியதற்கு நன்றி நல்லதம்பி!
ஈகரைக்கு நன்றி.
நல்லதம்பி
Nallathambi- புதியவர்
- பதிவுகள் : 6
இணைந்தது : 28/12/2010
Similar topics
» தமிழ் மெய் எழுத்துகளின் உச்சரிப்பு முறை...
» தமிழ் மாதத்தின் நாட்களை அறியும் முறை
» எத்தனை முறை படித்தாலும் தமிழர்களுக்கு அலுக்காத சில தமிழ் ஜோக்குகள்
» தமிழ் வாழ்க தமிழ் நம் உயிர் மூச்சி manoranjan மனோரஞ்சன் எழுதும் தமிழ்
» தகவல்கள் by சதீஷ் குமார் ... தொடர்பதிவு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum