ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 22:23

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 14:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 21:45

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 18:49

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:03

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:39

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 14:35

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:24

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 14:08

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:01

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:42

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:38

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒபாமா மன்மோகன் ஒப்பந்தம் மக்களைச் சூறையாட அனுமதிச்சீட்டு

3 posters

Go down

ஒபாமா மன்மோகன் ஒப்பந்தம் மக்களைச் சூறையாட அனுமதிச்சீட்டு Empty ஒபாமா மன்மோகன் ஒப்பந்தம் மக்களைச் சூறையாட அனுமதிச்சீட்டு

Post by நிசாந்தன் Sat 22 Jan 2011 - 16:53

குழந்தைகளுடன் குதூகலம், கல்லூரி மாணவர்களுடன் கை குழுக்கி கனிவான உரையாடல், இந்தியா இனி வளரும் வல்லரசல்ல. வளர்ந்துவிட்ட வல்லரசு என்ற புகழ்ச்சி - இவற்றிற்கிடையே தனதௌ ஆதிக்க நலனை பாதுகாத்துக்குக் கொள்வதில் கவனம். அண்மையில் இந்தியா வந்த அமெரிக்கக் குடியரசுத் டலைவர் பராக் ஒபாமா செயல்பாடு இதுதான்.
அமெரிக்க வல்லரசு தனது வரலாற்றில் இதுவரை சந்தித்திராத நெருக்கடியில் சிக்கியுள்ளது. இந்நெருக்கடியில் ஒரு பகுதியை இந்தியாவின் மீது சுமத்தவும், தமது வல்லாதிக்க நடவடிக்கையில் இந்தியாவை இளைய பங்காளியாக உறுதியாக இணைத்துக் கொள்ளவும் இந்தப் பயணத்தை ஒபாமா பயன்படுத்திக் கொண்டனர்.

அமெரிக்கா மிகப்பெரும் தொழில் மந்தத்தில் உள்ளது. 2008 ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளியல் வீழ்ச்சியிலிருந்து அந்நாடு இன்னும் முழுவதும் மீளவில்லை. வங்கிகளும் நிதி நிறுவனங்களும் மூடுவிழா காண்பது தொடர்கிறது. ஒரு இலட்சம் கோடி டாலருக்கு மேல் அரசுப் பணத்தை வாரி இறைத்த பின்னும் அமெரிக்க பெரு நிறுவனங்களைத் தூக்கி நிறுத்த முடியவில்லை. ஒரு நாளைக்கு சராசரியாக 16,000 பேர் வேலை இழந்து வருகின்றனர்.

அமெரிக்க மக்களிடையே உணவுத் தட்டுப்பாடும், பட்டினியும் பரவி வருகிறது என்பது பலராலும் நம்பமுடியாத உண்மை. அமெரிக்க மக்களில் 16 விழுக்காடினர் ஒருவேளை உணவு மட்டுமே உண்டு வாழ்கின்றனர் என்று அமெரிக்க அரசே தெரிவிக்கின்றது. இந்தப் பட்டினிக்கும் “நிறம்” உண்டு. பட்டினியால் வாடுகின்ற அமெரிக்கர்களில் மிகப்பெரும்பாலானோர் கருப்பின மக்களே. கருப்பினத்தில் பிறந்த ஒபாமா குடியரசுத் தலைவராக ஆனதினால் இம்மக்களுக்கு ஒரு பயனும் இல்லை.

கடந்த ஓராண்டுக்கு முன்னால், “மீட்பராக” புகழப்பட்ட ஒபாமா இன்று செல்வாக்கு தேய்ந்து கிடக்கிறார். அண்மையில் நடந்து முடிந்த அமெரிக்க நாடாளுமன்றத் தேர்தலில் அவரது சனநாயகக் கட்சி படுதோல்வி அடைந்தது.

இவ்வாறான சூழலில்தான் ஒபாமா இந்தியாவுக்கு வந்தார். அவருக்கு வாய்ப்பான இந்தியத் தலைவராக பிரதமர் மன்மோகன் சிங் விளங்குகிறார். வெளிநாட்டு தலைவர் யார் இந்தியா வந்தாலும் அவரை விமான நிலையத்திற்குச் சென்று பிரதமர் வரவேற்பது மரபல்ல. வேறு மூத்த அமைச்சர்தான் வரவேற்பார். இம்மரபை மீறி இந்தியப் பிரதமர் முனைவர் மன்மோகன் சிங் தில்லி விமான நிலையத்திற்கு 6/11/2010 அன்று ஓடோடிச் சென்று ஒபாமாவை வரவேற்றார்.
இதற்கு முன்னர் இருந்த அமெரிக்கக் குடியரசுத் தலைவர்களைப் போலவே இரண்டு வழிமுறைகளைக் கையாண்டு தமது நோக்கங்களை ஒபாமாவும் நிறை வேற்றிக் கொள்கிறார். ஒன்று, அமெரிக்கவின் படைக்கலன் உற்பத்தியைப் பெருக்குவதற்கு மரணச் சந்தையை விரிவாக்குவது. இன்னொன்று அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனங்களுக்கு தடையற தாராள சந்தையை உறுதி செய்வது. இந்த இரண்டுமே இப்பயணத்தில் நிறைவேறியிருக்கிறது.

கடந்த 9/11/2010 அன்று கையெழுத்திடப்பட்ட ஒபாமா மன்மோகன் சிங் கூட்டறிக்கை இதனை உறுதி செய்கிறது. இக்கூட்டறிக்கையானது இனி வரவிருக்கிற அடுக்கடுக்கான துறை சார்ந்த ஒப்பந்தங்களின் தாய் ஒப்பந்தம் ஆகும்.
அலைக்கற்றை ஊழல் ஆரவாரங்களுக்கிடையே இக்கொடுமையான ஒப்பந்தம் உரியவாறு கவனிக்கப்படாமல் கடந்து போனது. பன்னாட்டு கடல் கண்காணிப்பு ஒப்பந்தம், பன்னாட்டு நிறுவனங்களின் சரக்குக் கப்பல்களைப் பாதுகாப்பதற்கு படை அனுப்பும் ஒப்பந்தம், பயங்கரவாத எதிர்ப்பு என்ற பெயரால் உலகெங்கும் விரியும் அமெரிக்கப் படை நடவடிக்கைகளில் இந்தியாவை இணைத்துக் கொள்ளும் ஒப்பந்தம், சனநாயகத்தைப் பாதுகாப்பது என்ற பெயரால் ஈரான், வடகொரியா போன்ற நாடுகளுக்கெதிராக அமெரிக்கா மேற்கொள்ளும் தலையீடுகளில் துணை சக்தியாக இந்தியாவை இணைத்துக் கொள்ளும் ஒப்பந்தம், அணுசக்தி ஒப்பந்தம்… என்று அடுக்கடுக்கான ஒப்பந்தங்களுக்கு ஒபாமா மன்மோகன் கூட்டறிக்கை அடிகோலுகிறது.

ஆப்கானித்தானிலும், ஈரானிலும், வாய்ப்பிருந்தால் வடகொரியாவிலும் தலையிட்டு போர் நடத்தும் அமெரிக்க வல்லாட்சியின் திட்டத்திற்கு இந்தியா துணைப் படையாக செயல்படுவது இந்த ஒப்பந்தத்தில் உறுதி செய்யப்படுகிறது.
கனரக, எளியவகை போர் விமானங்களையும் படையாட்கள் பயன்படுத்தும் போர்க் கள வாகனங்களையும் பல்லாயிரம் கோடி ரூபாய் கொடுத்து வாங்கிக்கொள்ள இந்திய அரசு ஒத்துக்கொண்டுள்ளது.

மறுபுறம் வேளாண்மை, கல்வி, ஆராய்ச்சி, மருந்துப்பொருள் தயாரிப்பு, சில்லரை வணிகம் ஆகிய பல்வேறு துறைகளில் அமெரிக்க நிறுவனங்களுக்கு இந்தியச் சந்தையை இன்னும் விரிவாகத் திறந்துவிட ஒபாமா மன்மோகன் ஒப்பந்தம் வழியேற்படுத்துகிறது.

“தொடர் பசுமைப் புரட்சியின் ஒரு பகுதியாக வேளாண்மையில் வடிவமற்ற தொழில் நுட்பத்தை வளர்க்கவும் அவற்றின் ஆய்வுகளை விரிவாக்கவும் இருநாடுகளும் இணைந்து செயல்படும். கிராமப்புறங்களில் சந்தை வளரச்சியையும் வேலை வாய்ப்பையும் பொருளியல் வளத்தையும் மேம்படுத்த வேளாண் துறையை வளர்க்க வேண்டியது அவசியம். இதனைக் கருத்தில் கொண்டு வேளாண் உறுபத்தித் திறனை அதிகப்படுத்த இருநாடுகளும் முயற்சிகள் மேற்கொள்ளும். வேளான் விளைபொருள்களின் மதிப்புக் கூடவும் அறுவடைக்குப் பிந்திய இழப்பைக் குறைக்கவும் வணிக நிறுவனங்களை வலுப்படுத்த கூட்டு முயற்சிகள் மேற்கொள்ளப்படும்”, என்று ஒபாமா மன்மோகன் சிங் கூட்டறிக்கை கூறுகிறது.
நெளிவு, சுழிவான சொற்களுக்கிடையில் கொலைவாள் மறைக்கப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் பொருள் வேளாண்மையிலும், வேளாண் ஆய்விலும், சில்லரை வணிகத்துலும் எந்த சிறு இடையூறும் இன்றி அமெரிக்கப் பெரு நிறுவனங்கள் அனுமதிக்கப்படும் என்பதுதான்.

ஏற்கனவே 2005 இல் ஜார்ஜ் புஷ் – மன்மோகன் ஒப்பந்தத்திற்கு இணங்க பல்வேறு கொடும் சட்டங்கள் நிறைவேறியுள்ளன. இப்போதுள்ள இந்த ஒப்பந்தம் இத்திசையில் மேலும் விரைந்து செல்கிறது.

வேளாண் ஆய்வு நிறுவனங்களும், பல்கலைகழங்களும் மான் சாண்டோ, சிஞெண்டா போன்ற பன்னாட்டு விதை நிறுவனங்களின் பிடிக்குள் தள்ளப்பட்டுவிட்டன. விதைச் சட்டம், நிலப்பயன்பாட்டுச் சட்டம், உயிரித் தொழில் நுட்பச் சட்டம் என பல்வேறு சட்டங்கள் பன்னாட்டு நிற்வனங்களின் ஆதிக்கத்தை உறுதிப்படுத்த நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் கத்திருக்கின்றன.

இப்போது உணவுப் பதப்படுத்துதல், சில்லரை வணிகம், தானிய மொத்த வணிகம், சேமிப்பு கிடங்குகள் நிர்வாகம் போன்ற பலவற்றிலும் எந்த நிபந்தனையுமின்றி நூற்றுக்கு நூறு கார்கில், வால்மார்ட், டெஸ்கோ, காட்பரி போன்ற வெளிநாட்டு நிறுவனங்களை அனுமதிப்பதற்கு வழி திறந்துவிடப்படுகிறது.

சில்லரை வணிகத்தில் வால் மார்ட்டையும், ரிலையன்சையும், பார்த்தியையும் அனுமதித்தால் வேளாண்மைக்கு உறுதியான சந்தை கிடைக்கும்; அதன் மூலம் உழவர் வாழ்வு செழிக்கும் என்பது அப்பட்டமான மாய் மாலம் ஆகும்.
சில்லரை வணிகத்தில் பெரு நிறுவனங்கள் இருந்தால் அது வேளாண்மையைப் பாதுகாக்க உதவும் என்று கூறுவது உண்மையானால் அமெரிக்க அரசு தன் நாட்டு வேளாண் பண்ணைகளுக்கு ஏராளமாக மானியம் கொடுத்து தூக்கி நிறுத்த வேண்டிய தேவை எப்படி ஏற்பட்டது என்று வேளான் அறிவியலாளர் தேவீந்திர சர்மா கேட்பது(www.groundreality.com) நியாயமானது.

அமெரிக்க அரசும், ஐரோப்பிய ஒன்றியமும் ஆண்டுதோறும் பல இலட்சம் கோடி டாலர் வேளாண் மானியம் வாரி வழங்கி வருகின்றன. பச்சைப் பெட்டி, பழுப்புப் பெட்டி என்ற பெயர்களால் வழங்கப்படும் இந்த வேளாண் மானியங்கள் நிறுத்தப்பட்டால் அந்நாடுகளில் வேளாண் உற்பத்தியே நின்றுபோகும். இவ்வாறான தாராள மானியங்களைப் பயன்படுத்திக் கொண்டுதான் அமெரிக்க, ஐரோப்பிய வேளாண் பெரு நிறுவனங்கள் உலகச் சந்தையில் போட்டிபோட முடிகிறது. இந்த மானியம்தான் அப்பண்ணைகளைப் பாதுக்காக்கிறதே தவிர வால்மார்ட், டெஸ்கோ போன்ற சில்லரை வணிக பெரு நிறுவனங்கள் அல்ல.

அமெரிக்காவிலேயே தோற்றுப்போன ஒரு பொருளியல் உத்தியை ஒபாமாவும் மன்மோகமும் இணைந்து நம் மீது திணிக்கிறார்கள்.

சில்லரை வணிகத்திலும், உணவுதானிய வர்த்தகத்திலும் வெளிநாட்டு பெருநிறுவனங்கள் அனுமதிக்கப்பட்டால் உழவர்கள் மேளாண்மையிலிருந்தும், சி்று வணிகர்கள் வணிகத்திலிருந்தும் தொகை தொகையாக வெளியேற்றப்படுவார்கள்.
உலகிலேயே உயிர்காக்கும் மருந்துகள் குறைந்த விலையில் உற்பத்தியாகும் பகுதி இந்தியா. மருந்தியல் ஆய்விலும் மருந்துப் பொருள் உற்பத்தியிலும் ஏற்கெனவே பன்னாட்டு நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்டுவிட்ட்ன. இருக்கிற கொஞ்ச நஞ்ச தடைகளையும் ஒபாமா – மன்மோகன் ஒப்பந்தம் நீக்கிவிடுகிறது. மருந்துப் பொருள் உற்பத்தியில் பன்னாட்டு நிறுவனங்களின் முற்றாதிக்கம் மேலும் வலுப்படப் போகிறது. உயிர்காக்கும் எளிய மருந்துகள் கூட ஏழை எளிய மக்களுக்கு எட்டாத ஒன்றாக மாறப்போகிறது.

வேளாண் ஆய்வு, மருந்தியல் ஆய்வு, மருத்துவ ஆய்வு போன்ற உயர் ஆய்வு மையங்களெல்லாம் அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனங்களுக்கு கைமாற்றிவிடப்படும் ஆபத்து இந்த ஒப்பந்தத்தில் உள்ளது. இது நிறைவேறிவிட்டால் உயராய்வு மையங்களிலிருந்து வெளிவரும் அறிவாளர்கள் அனைவரும் பொருளாதார அடியாட்களாக மாற்றப்படுவார்கள்.
அறிவுத் துறையில் அந்தந்த மண்ணின் முயற்சிகள் முளையிலேயே கிள்ளியெறியப்படும்.

இந்தியா வல்லரசாக மாறவேண்டும் என்ற நடுத்தர வர்க்கத்தினரின் அறிவற்ற ஆசையை ஒபாமாவும் மன்மோகனும் தந்திரமாக பயன்படுத்திக் கொள்கின்றார்கள். இந்தியா வல்லரசாக மாற வேண்டும் என்பது அரசியல், பொருளியல், பண்பியல் துறைகளை இராணுவ மயப்படுத்துவதுதான். எந்த வகை வளர்ச்சிக்கும் உதவாத அழிவு ஒன்றைமட்டுமே நிகழ்த்துகிற படைப் பொருளாதாரத்தில் மையங்கொண்டுள்ள அமெரிக்காவோடு இந்தியாவை துணை சக்தியாக இணைத்துவிடுவதில் இந்த வல்லரசுக் கனவு பெரும்பங்காற்றுகிறது. எல்லா வகை சனநாயக உரிமைகளையும், கருத்துரிமையையும், பறிப்பதை வல்லரசு கனவு நியாயப்படுத்துகிறது. ஆட்சியாளர்கள் செய்யும் அனைத்தையும் ஆதரிக்கிற வெறும் மந்தையாக மக்களை இது மாற்றிவிடுகிறது. சிறு முணுமுணுப்புகளைக் கூட பயங்கரவாதம் என சித்தரிக்க ஆட்சியாளர்களுக்கு இது வாய்ப்பை வழங்குகிறது.

ஐ.நா.பாதுகாப்பு அவையில் “கூடிய விரைவில்” இந்தியா நிரந்தர உறுப்பு நாடாக இடம் பெற அமெரிக்கா ஒத்துழைக்கும் என்று ஒபாமா இந்திய நாடாளுமன்ற கூட்டத்தில் கூறியது இந்தக் கனவுக்குத் தீனி போடும் நோக்கத்தில்தான்.
நடுத்தா வர்க்கத்தினரும், ஊடகங்களும் ஐ.நா. கனவில் மிதந்து கொண்டிருக்கும்போது இந்திய நிறுவனங்களில் 50,000 அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்பை உறுதி செய்துகொள்ளும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் ஒபானா. அது மட்டுமின்றி 1000கோடி டாலர்(47,000 கோடி ரூபாய்)அளவுக்கு அம்ரிக்க முதலீடு இந்தியாவில் நுழையவும் வழி ஏற்படுத்திக் கொண்டார்.

அடுத்தடுத்து இது போன்ற ஒப்பந்தங்கள் துறை அளவில் தொடரவிருக்கின்றன. ஒபாமாவோடு அமெரிக்கப் பெருநிறுவன முதலாளிகள் 200 பேர் தில்லி வந்ததே இதற்கு ஒரு சான்று.
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Back to top Go down

ஒபாமா மன்மோகன் ஒப்பந்தம் மக்களைச் சூறையாட அனுமதிச்சீட்டு Empty Re: ஒபாமா மன்மோகன் ஒப்பந்தம் மக்களைச் சூறையாட அனுமதிச்சீட்டு

Post by Guest Sat 22 Jan 2011 - 18:52

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது நாம் இந்தியர் என்பதில் பெருமை கொள்வோம்.... மறந்தும் கூட தமிழ் ,தமிழர் உணர்வை உருவாக்க மாட்டோம்... இன்னும் தமிழக மீனவனை சாக விட்டு கூடி களிக்க பண்டிகைகள் வருகின்றன...
avatar
Guest
Guest


Back to top Go down

ஒபாமா மன்மோகன் ஒப்பந்தம் மக்களைச் சூறையாட அனுமதிச்சீட்டு Empty Re: ஒபாமா மன்மோகன் ஒப்பந்தம் மக்களைச் சூறையாட அனுமதிச்சீட்டு

Post by SK Sat 22 Jan 2011 - 19:28

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

ஒபாமா மன்மோகன் ஒப்பந்தம் மக்களைச் சூறையாட அனுமதிச்சீட்டு Empty Re: ஒபாமா மன்மோகன் ஒப்பந்தம் மக்களைச் சூறையாட அனுமதிச்சீட்டு

Post by கலைவேந்தன் Sat 22 Jan 2011 - 23:56

இந்த தகவல்கள் உண்மையா என்பதை பொருளாதார விற்பன்னர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

ஆகாத மருமகள் கைப்ட்டால் குற்றம் என்னும் கதை ஆகிவிடக்கூடாது.

இந்திய எதிர்ப்பாளர்களின் இந்த கூற்று எத்தனை தூரம் சரி என்பதை காலமும் வல்லுனர்களும் தான் காட்ட வேண்டும்..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஒபாமா மன்மோகன் ஒப்பந்தம் மக்களைச் சூறையாட அனுமதிச்சீட்டு Empty Re: ஒபாமா மன்மோகன் ஒப்பந்தம் மக்களைச் சூறையாட அனுமதிச்சீட்டு

Post by நிசாந்தன் Mon 24 Jan 2011 - 15:39

மதன் கார்த்திக் தமிழ் தமிழன் என் தமிழ்நாடு என்ற உணர்வைத் தான் உருவாக்க வேண்டும்.
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Back to top Go down

ஒபாமா மன்மோகன் ஒப்பந்தம் மக்களைச் சூறையாட அனுமதிச்சீட்டு Empty Re: ஒபாமா மன்மோகன் ஒப்பந்தம் மக்களைச் சூறையாட அனுமதிச்சீட்டு

Post by Guest Mon 24 Jan 2011 - 18:13

நிசாந்தன் wrote:மதன் கார்த்திக் தமிழ் தமிழன் என் தமிழ்நாடு என்ற உணர்வைத் தான் உருவாக்க வேண்டும்.

உண்மைதான் அதை தான் மறைமுகமா சொல்லி இருக்கிறேன்... ஆனால் அரசியல்வாதிகள் தமிழன் என்றாலே ஏதோ ஒரு வேற நாட்டை செர்ந்த்வன் எண்டு நினைக்கிறார்களே.... அண்ணே
avatar
Guest
Guest


Back to top Go down

ஒபாமா மன்மோகன் ஒப்பந்தம் மக்களைச் சூறையாட அனுமதிச்சீட்டு Empty Re: ஒபாமா மன்மோகன் ஒப்பந்தம் மக்களைச் சூறையாட அனுமதிச்சீட்டு

Post by நிசாந்தன் Tue 25 Jan 2011 - 17:09

எனது பதுவுகளை நிதானமாக படித்து வாருங்கள், உண்மைகள் பல இனி வரும்.
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Back to top Go down

ஒபாமா மன்மோகன் ஒப்பந்தம் மக்களைச் சூறையாட அனுமதிச்சீட்டு Empty Re: ஒபாமா மன்மோகன் ஒப்பந்தம் மக்களைச் சூறையாட அனுமதிச்சீட்டு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மன்மோகன் சிங் அறிவாளி : ஒபாமா புகழாரம்
» ஒபாமா - மன்மோகன் நாளை அமெரிக்காவில் சந்திப்பு _
» அமெரிக்காவில் இருந்து 50 லட்சம் டன் எரிவாயு இறக்குமதிக்கு ஒப்பந்தம் - பிரதமர் மோடி முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து
» மக்களைச் சென்றடையாத காப்பீட்டுத் திட்டங்கள்: விழிப்புணர்வு இல்லாததால் வீணாகிறது
» மக்களைச் 'சுரண்ட' விதிகளை காற்றில் பறக்கவிட்ட டிடிஎச் நிறுவனங்கள்...!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum