புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் என்னும் கனவு (தொடர் கவிதை) பகுதி1+2 Poll_c10காதல் என்னும் கனவு (தொடர் கவிதை) பகுதி1+2 Poll_m10காதல் என்னும் கனவு (தொடர் கவிதை) பகுதி1+2 Poll_c10 
366 Posts - 49%
heezulia
காதல் என்னும் கனவு (தொடர் கவிதை) பகுதி1+2 Poll_c10காதல் என்னும் கனவு (தொடர் கவிதை) பகுதி1+2 Poll_m10காதல் என்னும் கனவு (தொடர் கவிதை) பகுதி1+2 Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
காதல் என்னும் கனவு (தொடர் கவிதை) பகுதி1+2 Poll_c10காதல் என்னும் கனவு (தொடர் கவிதை) பகுதி1+2 Poll_m10காதல் என்னும் கனவு (தொடர் கவிதை) பகுதி1+2 Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
காதல் என்னும் கனவு (தொடர் கவிதை) பகுதி1+2 Poll_c10காதல் என்னும் கனவு (தொடர் கவிதை) பகுதி1+2 Poll_m10காதல் என்னும் கனவு (தொடர் கவிதை) பகுதி1+2 Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
காதல் என்னும் கனவு (தொடர் கவிதை) பகுதி1+2 Poll_c10காதல் என்னும் கனவு (தொடர் கவிதை) பகுதி1+2 Poll_m10காதல் என்னும் கனவு (தொடர் கவிதை) பகுதி1+2 Poll_c10 
25 Posts - 3%
prajai
காதல் என்னும் கனவு (தொடர் கவிதை) பகுதி1+2 Poll_c10காதல் என்னும் கனவு (தொடர் கவிதை) பகுதி1+2 Poll_m10காதல் என்னும் கனவு (தொடர் கவிதை) பகுதி1+2 Poll_c10 
6 Posts - 1%
sugumaran
காதல் என்னும் கனவு (தொடர் கவிதை) பகுதி1+2 Poll_c10காதல் என்னும் கனவு (தொடர் கவிதை) பகுதி1+2 Poll_m10காதல் என்னும் கனவு (தொடர் கவிதை) பகுதி1+2 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
காதல் என்னும் கனவு (தொடர் கவிதை) பகுதி1+2 Poll_c10காதல் என்னும் கனவு (தொடர் கவிதை) பகுதி1+2 Poll_m10காதல் என்னும் கனவு (தொடர் கவிதை) பகுதி1+2 Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
காதல் என்னும் கனவு (தொடர் கவிதை) பகுதி1+2 Poll_c10காதல் என்னும் கனவு (தொடர் கவிதை) பகுதி1+2 Poll_m10காதல் என்னும் கனவு (தொடர் கவிதை) பகுதி1+2 Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
காதல் என்னும் கனவு (தொடர் கவிதை) பகுதி1+2 Poll_c10காதல் என்னும் கனவு (தொடர் கவிதை) பகுதி1+2 Poll_m10காதல் என்னும் கனவு (தொடர் கவிதை) பகுதி1+2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் என்னும் கனவு (தொடர் கவிதை) பகுதி1+2


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Jan 21, 2011 5:57 am

1. மாலையின் மயக்கம்

வானமெனும் மகள்மேக இதழ்தனை
வண்ணம் சிவப்பினில் சாயமிட
தேனுமினிய பொன்மாலை யிளங்காற்று
தேடி அலைந்தென்னை தீண்டவர
ஞானம் அறியும் நற்கோவில்களில் மணி
யோசை எழுந்து பரவிவர
போனதிசையினில் கால்பதித்தே யந்தப்
பூமிதனிலே நடந்து சென்றேன்

வானரக்குஞ்சுகள் வாழைமரம் முறித்
தோடின வாயில் பழம்திணித்து
சேனை வயல்கதிர் நெல்முறித்துகொண்டு
சேர்த்தன பச்சைகிளி பறந்து
கூனை எடுத்தகதிர் வளைந்து நிலம்
கொஞ்சின மண்ணை வளர்த்ததுக்கு
கானமிடும் பலகானக் குருவிகள்
காற்றில் பறந்தன சத்தமிட்டு

வீசி அடித்தது காற்று மரத்தினி
லோடிக் குதித்தது சின்ன அணில்
பாசிபிடித்த வயல் குளத்தில் நின்று
பாவம் தவித்தன தாமரைகள்
பேசிச் சிரித்திடும் பெண்குலத்தோர் கரை
மீதிருந்தி அள்ளிநீர் தெளித்து
கூசி சிரித்திட்ட கோலம் கண்டேநடை
கொண்டனன் எந்தனோர் பாதைகண்டு

நானும் நடந்தொரு தூரம்சிறிதிடை
நாடும் பொழுதினில் கண்ணெதிரே
கூனும் விழுந்து நரைதிரண்டு தடி
கொண்டொரு மாது அருகில்வந்தாள்
வானும் நடந்தமுகிலெனவே பஞ்சை
வார்த்தன வெண்ணிற கூந்தல்முடி
மீனும் நடமிடும் ஆழிதிரையென
மேனி சுருங்கித் திரைந்திருக்க

கண்ணினொளி சிறுத் தாகிவிட ஒரு
கையை எடுத்துஇமை பொருத்தி
அண்மையில் வாஎன கையசைத்து ஒரு
ஆணையிட்டால் அந்தமூதாட்டியார்
எண்ணியென்னவென நான்நினைத்தே அயல்
ஏகமுதல் கணீரென்ற ஒலி
தண்ணிலவின் தங்கை சின்னவளாய் மணி
தாளமிடஒரு தோகை நின்றாள்

எங்கு சென்றாயடி சின்னவளே என்று
ஏதோ நினைத்து முணுமுணுக்க
தங்கமகள் அவர் ரண்டு உருவமும்
தன்மைகண்டு நானும் எண்ணிநின்றேன்
பொங்கி வள ரிளம் பூரிப்புடன் எழில்
புத்தம்புது மலர் போலிருந்தாள்
சங்கு எனும் வெளிர் மின்னும் முகமதில்
சந்திரவண்ணக் குளுமை கண்டேன்

பிஞ்சென நின்றவள் நாளைவளர்ந்திடப்
பின்னல் கலைத்தொரு கொண்டையிட்டு
வஞ்சியென் றாகவளர்ந் தொருக்கால் நல்ல
வாழ்வின் சுவைகண்டு தான்மகிழ்ந்து
நெஞ்சமுவந்து கதைபடித்துப் பல
நீளவிழிசிந்தும் நீர்துடைத்து
வெஞ்சினம் கொண்டும் வியந்து பலபல
வேடிக்கையால் மனம் புன்னகைத்து

இந்த உலகினில் வாழ்ந்து முதிர்ந்துகோல்
கொண்ட முதியவள் போல் குனிந்து
விந்தை வளைந்து நடந்திடுவாள் இது
வேடிக்கையானொரு வாழ்க்கையன்றோ?
சந்தடி என்னை உலுப்பிவிட நானும்
சற்று நிமிர்ந்தயல் பார்த்திடவே
சிந்து நடைமகள் புன்னகைத்தே யெனைச்
சற்று நாணமிடச்செய்து சொன்னாள்

(தொடரும்)

தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Fri Jan 21, 2011 9:48 am

அருமை அருமை ...வாழ்த்த வயதில்லை .......

avatar
கோவை. மு. சரளா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010

Postகோவை. மு. சரளா Fri Jan 21, 2011 10:20 am

தமிழின் சுவை குறையாது நயமாய் சமைத்து கொடுத்ததற்கு மனம் குளிர்ந்த வாழ்த்துக்கள்
ரசிப்பவனால் மட்டுமே சுவையான ரசனையானதை தர முடியும்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Jan 21, 2011 2:18 pm

அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Jan 21, 2011 8:14 pm

2. இளமை மயக்கம்

கண்களிரண்டதும் துள்ளும்கயலெனில்
காணுமுகமதி பொய்த்துவிடும்
வெண்ணிலவானது வட்டமுகமெனில்
வண்ணஇதழ் கொவ்வை பொய்த்துவிடும்
எண்ணீயிவைஇதழ் கொவ்வைஎனில் அங்கு
எப்படி உள்ளிடை முத்துக்களோ
அண்ணளவாய் இவைஒன்றுமில்லை அந்த
இந்திரலோகத்து பொற்சிலையோ

பொன்னும் பளிங்கதும் போதாநவமணி
கொண்டு செதுக்கிய சிற்பமதோ
என்னும் பிரமனும் இத்தனைநாளில்லா
அற்புதம் செய்ய விளைந்தனனோ
மின்னும் அழகுடன் என்னயல் நின்றவள்
மூத்தவள் தன்னை விழிசரித்து
”என்னுடை அன்னையைப் பெற்றவளாமிவள்
இன்று தனதில்லம் மீளுகிறாள்

அன்னவளால் இனி ஆகமுடியலை
ஆடி நடைதளர் வாகுகிறாள்
இன்னுமடைந்திட நீண்ட தொலையுண்டு
எப்படிசெல்வது நானறியேன்
தன்னந்தனிதுணை வந்துவிட்டேன் ஏதும்
தக்க உதவிகள் செய்குவீரோ
என்னசெய்வேன்” என்று இரண்டுமலர்க்கரம்
ஏந்தும்விரல்கள் பிசைந்து நின்றாள்

கிண்ணமதில் விரல் சுண்டியதால் வரும்
கிண்ணெனும் நாதக்குரலெடுத்து
மண்ணிற் பெரும்வீர மாமறமும்வந்து
மண்டியிடவைக்கும் பேரழகில்
எண்ணிக் கணக்கிடா ஆண்டவனும் அள்ளி
இட்டபொலிவுடன் நின்றவளோ
வண்ணமுகத்தினில் சோகமுறச் சொன்ன
வார்த்தைகண்டு மனமாவலுற்றேன்

சற்று தொலைவினில் சங்கரனின் பையன்
சல்லெனுமோசை ஒலியெழுப்பும்
சுற்றி மாட்டுவண்டி ஓட்டிவந்து சின்ன
ஊரில் கருமங்கள் ஆற்றுபவன்
நிற்பதைக் கண்டு மனம்மகிழ்ந்துஅந்த
நீலவிண்ணின் மதிதங்கையினை
உற்ற வழிஒன்று தோன்றியதென்றினி
ஓடும்வண்டி இல்லம் சேர்க்குமென்றேன்

முன்னம் தெரிந்தவன் சின்னவயதினன்
மெல்ல அணுகியேசேதி சொன்னேன்
அன்னமெனும் எழில்மங்கை தனைகண்டு
ஆவல் மீறத் தலையாட்டி நின்றான்
அன்னை தனும் அவள் ஆயிருவர்தம்மை
ஆகுமிருள் மூடும் வேளையிலே
இன்பமுடன் சென்று வாருமென்றேன் அந்த
ஏந்திழையோ மனம் கோணிநின்றாள்

கண்ணை விழித்தவள் அச்சம்கொண்டு அந்த
கட்டழகன்தனைச் சாடையிட்டு
எண்ணமதில் அச்சம்கொண்டேன் அவனிங்கு
என்னை விழிப்பது நல்லதில்லை
உண்ணுமதுவென கண்களால் நோக்குவன்
உத்தமனோ எனஏங்கி நின்றாள்
வண்ண மலர்முகம் வாடியது கண்டு
வந்தேன் வழித்துணை நானுமென்றேன்

கூடிப்பயணமும் செய்வதென்ன அவள்
கோலமுகம் மகிழ்வாகிடவே
ஆடிச் சிறுவழி ஒடி நடந்திடும்
ஆனந்த வண்டியில் நாம் புகுந்தோம்
தேடித்திசைதனில் போகும்வண்டிதனின்
துள்ளுமெழில் அலைபோலசைய
பாடிக்களித்திட எண்ணியவனொரு
பாட்டிசைத்தான் முன்னேபாதைகண்டோன்

(அவன் பாடுகிறான்)
ஆத்தினிலேவெள்ளம் வந்து அலையடிக்குது
அதிலிரண்டு கயல்புரண்டு துடிதுடிக்குது
சேத்தினிலே பூமலர்ந்து சிரித்து நிக்குது
செங்கனியின் நிறமெடுத்து சிவந்துபோனது
நேத்துவந்த மாமனுக்கு நெஞ்சு நிறையுது
நிலவுவந்து நேரில் நின்று கதைபடிக்குது
சாத்திரங்கள் பாத்து நல்ல சோடி என்குது
சாமிகூட பூவிழுந்து கூடு என்குது

வாத்தியாரு பெத்தபிள்ளை சட்டம்பேசுது
வந்திடடி பக்க மென்றால் கணக்குபண்ணுது
கூத்தடிச்சுச் சின்னதோட கும்மியாடுது
குழந்தைபோல ஆசைகொண்டு குதித்து ஓடுது
பாத்துப் பாத்து எத்தனைநாள் காவல் காப்பது
பழமிருக்கு பக்கத்திலே பொழுது கழியுது
காத்தடிச்சு ஓயுமுன்னே தூற்றிடவேணும்
கன்னியுன்னை கைபிடிச்சுக் கண்டிடவேனும்

முன்னிரவு குளிரடிச்சு மேனிவாடுது
மூச்சினிலேபூவின் வாசம் மோகம்கூட்டுது
பின்னிலவு தூக்கம்விட்டு என்னைஎழுப்புது
பேசஆசை எவருமில்லை நிலவுகாயுது
கன்னி யவள் நெஞ்சம் எண்ணி காதலனது
காணும் பச்சை இலைமறைத்த காயென்றானது
சின்னப்பொண்ணு உன்நினைவில் சிந்தை ஓடுது
சேர்ந்திடவா என்னஉந்தன் நெஞ்சம் சொல்லுது?
(தொடரும்)

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Jan 21, 2011 11:50 pm

(தொடர்ச்சி)
பாடியவன் கடைக் கண்ணெடுத்துஅவள்
பாவைதனை இடை நோக்குவதும்
ஓடிய மாட்டினை ஓங்கிவிரட்டியே
ஒன்றுஇல்லையென காட்டுவதும்
தேடியே காதலை திங்கள் முகவிழி
தேன் மலராளிடம் காத்துநிற்க
ஆடிய வண்டியின் ஆட்டத்திலேஅவள்
அல்லியென நடமாடிநின்றாள்

மெல்ல அவள்மனம் மாறியதோ இந்தப்
மாயமனம் தன்னை நான் அறியேன்
கல்லும் கரைத்திடும் கட்டழகைகொண்ட
காளை அவன் விழிமோதிடவே
வல்லமன தனல்நெய்யெனவே விட்டு
வாசமெழ வழிந்தோடக் கண்டேன்
நல்லதுவோ இல்லை அல்லதுவோஅதை
நானோ புரிந்துகொள்ளாது நின்றேன்.

மேலைத் திசையினில் மேகம்கறுத்திட
மாலைக் கிழவனும் ஆடிவந்து
வாலைக்குமரி யென்றாடும் சுழல்புவி
வண்ணமகளிடம் மாயமிட்டு
ஓலைபிரித்தொரு மந்திரம்சொல்லிட
ஓடிக் கருத்தது விண்ணரங்கு
ஆலைமுடிந்தொரு சங்குகள் கூவிட
ஆடிப்பறந்தன வான்குருவி

தென்றலணைந்தங்கு வீசியதுஅது
தேகம் வருடியேஓடியது
நின்றமரங்களின் மீதுஅதுபட
நெஞ்சை நிமிர்த்திச் சிரித்தன காண்
குன்றதன் பின்னே குடியிருந்த மதி
கோலமிட்டு முகம் பொன்குழைத்து
நன்றெனப்பூசி நளினமிட்டே விண்ணில்
நானிலம் காண நடைநடந்தாள்

உள்ளம் மயங்கிடும் வேளையது மேனி
உணர்வு வென்றிடும் காலமது
கள்ளைஉணவென்று உண்டதென இரு
கண்ணும் மயங்கிடும் மாலையது
தெள்ளெனும் நீரினில் கல்லுவிழுந்தன்ன
கன்னியின் உள்ளம் கலங்கியதோ
மெள்ள அவனதைக் கண்டுகொள்ள அந்த
மேடையின் நாடகம் கண்டுநின்றேன்

(தொடர்கிறது)

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக