ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழைச் சொல்ல.. உயிரைக் கொல்ல..! (கவிதை)

+2
தமிழ்ப்ரியன் விஜி
kirikasan
6 posters

Go down

தமிழைச் சொல்ல.. உயிரைக் கொல்ல..! (கவிதை) Empty தமிழைச் சொல்ல.. உயிரைக் கொல்ல..! (கவிதை)

Post by kirikasan Thu Jan 20, 2011 11:21 am

தமிழே உன்னைக் கண்டால் அஞ்சித் தலையேசுற்றுதடி
தாகம் கொண்டேன் வாழ்வில் என்னைத் தனியே விட்டுடடி
அமுதே என்றுஉன்னைக் கற்றேன் ஆனா என்றெழுதி
ஆனாலின்றோ தமிழைப்பேசத் தலையே போகுதடி

அம்மா என்று மண்ணில் எழுதி அழித்தேன் அருச்சுவடி
அதனால்தானோ அன்னை மண்ணுள் அழியக் கொன்றவிதி
சும்மா தமிழைப் படியென் றப்பா சொல்லிப் போட்ட அடி
சொன்னாற் தமிழை விழுதேமுதுகில் எதிரி துவக்குப்பிடி

தாங்கா தலறும் போதிற் கூடத் தருணம் பார்த்துக்கடி
தமிழைப் பேசத் தலையும்போகும் சற்றே நிறுத்துங்கடி
நீங்காமனதில் கற்றோம்அன்று நெஞ்சில் கவிதையடி
நினவில் கனவில் நேரில் ஊரில்நிறைந்தாய் இன்பமடி

ஆனா லின்றோ தமிழைப்பேச அச்சம் கதவையடி
அக்கம் பக்கம் பார்த்தே மூடிப் பேசும் அவலமடி
தேனாய்ப் பேசிச் சிரித்தோம் தமிழை திமிரில் தலை நிமிர்த்தி
தெய்வத் தலைவன் இருந்த போது கதையே வேறுவழி

வயலின் பக்கம் சென்றேன் மாடு அம்மா என்றதடி
குலையும் நடுங்கி திகைத்தேன் எதிரி கிட்டே இல்லையடி
அயலில் ஆடு குழையைத் தின்று அம்மே என்றதடி
அடடா இதுவே போதும்என்று உளமே மிகிழுதடி
(அம்மா-தமிழ் அம்மே- சிங்களம்)

முடியை வெட்டக் கடையில் நின்றேன் முன்னே அவன்வந்தான்
முரட்டுப் பார்வை கண்டேன்”தமிழன் தானேநீ”யென்றான்
இடிபோ லெண்ணி ஏனோ என்றேன் இகழக் கண்வெட்டி
முடியைவெட்டத் தேவையில்லை சிரசைவெட்டென்றான்

முடியைவெட்டும் துணிவே போதும் தமிழன் தலைவெட்ட
முழுதாய் ஈழத்தமிழன் வாழ்வு பலியேஉயிர் கொள்ள
குடிநீர் கிணற்றில் பிணமேகாணும் கொடுமைஎன்சொல்ல
கேட்பார் எவரும் இல்லைத்தமிழே பிழைநீ நாமல்ல


புயலே வந்து புகுந்தாற்கூடத் தமிழே கொல்லுதடி
புனலும் ஓடிப் புகுந்தாற் கூட போவது ஈழமடி
அயலே நின்று அரவம் கூட ஆளைத் தீண்டுதடி
யார்தான் இவரேதமிழன் என்றால் ஆடிக் கொத்துதடி

வழியே நின்று தலைமுறையாக வாழ்ந்த ஈழமடி
வாசல்கதவை திறந்தா லின்று வருவது கொலைஞரடி
அழிவே என்று அணையும் தென்றல் அதுவும்போனதடி
அவனும்தெய்வம் அஞ்சி ஒளிந்தான் யாரும் இல்லையடி

தனியே நின்று தமிழைக் காக்கத் தவிக்கும் வேளையடி
தலையேஇன்றி போகும் நிலைமை தமிழர்க் கானதடி
எனியென் செய்வோம் எம்மைக்காக்க எவரும் எடுத்துஅடி
இரண்டே வைத்தால் போதும் உலகம் உள்ளேதள்ளுதடி

உரிமை என்றால் உயிரும்போயே உடல்தான் மிஞ்சுதடி
உணவைக் கேட்டால் உதைதான் நெஞ்சில் ஓங்கிப் படுகுதடி
அருமைதமிழை அறியா துரைத்தல் அருகில் கத்தியடி
அய்யோ என்று அலறக்கூட அச்சம் தமிழதடி

இருளில் வாழ்ந்து உயிரை கையில் எட்டிப் பிடித்தடி
எத்தனைகாலம் வீட்டுள் வாழ்வோம் சுற்றி மிருகமடி
அருகில் வந்து கதவின் ஓரம் அவைகள் நின்றபடி
அகலத்திறக்கும் தருணம் பார்த்து ஆளைதின்னுதடி

தமிழே எந்தன் தாயே உந்தன் புதல்வர் கோடியடி
தரணி எங்கும் பரந்தே வாழ்ந்தார் தனிநாடில்லையடி
தமிழன் கொல்லத் தட்டிக் கேட்க தலைவர் இல்லையடி
தமிழாம் ஈழம்இன்று, நாளை இன்னோர் தேசமடி

உலகத்தமிழா எண்ணிக்கொள்ளு இற்றை வரையும்நீ
எதுவுமில்லா அகதி, உரிமை எங்கும் அற்றாய்நீ
கலகம் எல்லாம் ஈழம்தானேகவலை ஏதென்று
கணக்குபோட்டால் கழித்துப்பார் எம்விடையே உன்மீதி

காலைப்பிடித்து கெஞ்சிகேட்டு வாழும்நிலைமைதான்
கடலில் கொல்ல கவிதைபாடி காலம் போகும்தான்
வேலை செய்து நாளும்போகும் வயிறும்நிறையும்தான்
வீரம்பேச காலைஊன்ற தேசம் இரவல்காண்
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

தமிழைச் சொல்ல.. உயிரைக் கொல்ல..! (கவிதை) Empty Re: தமிழைச் சொல்ல.. உயிரைக் கொல்ல..! (கவிதை)

Post by தமிழ்ப்ரியன் விஜி Thu Jan 20, 2011 11:26 am

அருமையான வரிகள் ...
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

தமிழைச் சொல்ல.. உயிரைக் கொல்ல..! (கவிதை) Empty Re: தமிழைச் சொல்ல.. உயிரைக் கொல்ல..! (கவிதை)

Post by SK Thu Jan 20, 2011 11:31 am

அருமையாம கவிதை


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

தமிழைச் சொல்ல.. உயிரைக் கொல்ல..! (கவிதை) Empty Re: தமிழைச் சொல்ல.. உயிரைக் கொல்ல..! (கவிதை)

Post by பூஜிதா Thu Jan 20, 2011 11:33 am

இதையதை துளைதை வரிகள் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

தமிழைச் சொல்ல.. உயிரைக் கொல்ல..! (கவிதை) Empty Re: தமிழைச் சொல்ல.. உயிரைக் கொல்ல..! (கவிதை)

Post by kirikasan Thu Jan 20, 2011 3:43 pm

கருத்துக்கள் மூலம் என்மனதை கனியவைத்த அனைவருக்கும் நன்றிகள் உரித்தாகட்டும்
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

தமிழைச் சொல்ல.. உயிரைக் கொல்ல..! (கவிதை) Empty Re: தமிழைச் சொல்ல.. உயிரைக் கொல்ல..! (கவிதை)

Post by மஞ்சுபாஷிணி Thu Jan 20, 2011 3:50 pm

நம் தேன் தமிழ் இலங்கையில் படும் அவதியை நம் தமிழினமக்கள் எப்படி எல்லாம் நசுக்கப்படுகின்றனர் என்பதற்கு உதாரண வரிகள் கீறிய நெஞ்சில் ரத்தம் வடியவைக்கும் வரிகள்....
கன்னுக்குட்டி அம்மா என்றதும் அதிர்ந்து அம்மே என்ற ஆட்டுக்குட்டியின் சத்தத்துக்கு நிதானித்து காரணம் எல்லோருமே அறிவர்.. சோகம்

நிலை சுமுகமாகி தமிழினம் கண்டிப்பாக கம்பீர நடை போடும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது... காலங்கள் இப்படியே இருக்க போவது இல்லை...

நசுக்கியவர்கள் எல்லோரும் மிதிபடுவர்... தான் செய்த இச்செயலை எண்ணி எண்ணி வெட்கப்பட்டு தம்மையே மாய்த்தும் கொள்வர்...

நாமிருப்போமோ இல்லையோ தெரியாது... ஆனால் நம் கனவு நிஜமாகும் ஐயா..

அன்பு வாழ்த்துக்கள் ஐயா ரத்த வரிகளின் சத்தியத்துக்கு...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தமிழைச் சொல்ல.. உயிரைக் கொல்ல..! (கவிதை) 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

தமிழைச் சொல்ல.. உயிரைக் கொல்ல..! (கவிதை) Empty Re: தமிழைச் சொல்ல.. உயிரைக் கொல்ல..! (கவிதை)

Post by kirikasan Thu Jan 20, 2011 4:01 pm

தங்கள் கருத்துக்கு பதிலாக காட்சி கலங்கியது. கண்ணை மறைத்தது! நன்றிகள்
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

தமிழைச் சொல்ல.. உயிரைக் கொல்ல..! (கவிதை) Empty Re: தமிழைச் சொல்ல.. உயிரைக் கொல்ல..! (கவிதை)

Post by nandhtiha Thu Jan 20, 2011 4:42 pm

அனைவருக்கும் வணக்கம்
அடிதொறு மடியா? அடிவயிறு கலங்குதடி
முடிவ திதுயெந் நாளோ? முழுதுணர்ந்தோர் எவரோடி?

பிடியோடு களிறோட்டிப் பேரரசு நாட்டிய மும்
முடிச் சோழ மன்னனும் தான் மீண்டெழுந்து வாரானோ?
சிங்களைத்தைச் சிதைத்துச் செந்தமிழை அரசிருத்தி
எங்களினம் கொலுவேற ஏற்றவழி சொல்லேண்டி
பொங்கு தமி ழன்னையே! புவிமுழுது முன்னாண்டு
சங்கங் கண்டவளே தலைகுனிந்த தேனோடி?

திரிபுரம் எரித்தானின் சிரிப்பெங்கே போனதடி?
வரிசிலைக் கை காகுத்தன் வாளிக்கென் னாச்சுதடி?
கிரிகாசன் கதறுமொலி கேட்டிலதோ நின்செவிகள்
வரியுழுவைக் கொடிகொண்டான் வருநாளு மெந்நாளோ/
இதயத்தில் வலியுடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

தமிழைச் சொல்ல.. உயிரைக் கொல்ல..! (கவிதை) Empty Re: தமிழைச் சொல்ல.. உயிரைக் கொல்ல..! (கவிதை)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum