புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மக்கள் சேவை புரிந்த மருத்துவருக்கு ஆயுள் தண்டனை: பினாயக் சென்னுக்கு எதிராக சூழ்ச்சி வலை Poll_c10மக்கள் சேவை புரிந்த மருத்துவருக்கு ஆயுள் தண்டனை: பினாயக் சென்னுக்கு எதிராக சூழ்ச்சி வலை Poll_m10மக்கள் சேவை புரிந்த மருத்துவருக்கு ஆயுள் தண்டனை: பினாயக் சென்னுக்கு எதிராக சூழ்ச்சி வலை Poll_c10 
25 Posts - 69%
heezulia

10 Posts - 28%
mohamed nizamudeen

1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மக்கள் சேவை புரிந்த மருத்துவருக்கு ஆயுள் தண்டனை: பினாயக் சென்னுக்கு எதிராக சூழ்ச்சி வலை Poll_c10மக்கள் சேவை புரிந்த மருத்துவருக்கு ஆயுள் தண்டனை: பினாயக் சென்னுக்கு எதிராக சூழ்ச்சி வலை Poll_m10மக்கள் சேவை புரிந்த மருத்துவருக்கு ஆயுள் தண்டனை: பினாயக் சென்னுக்கு எதிராக சூழ்ச்சி வலை Poll_c10 
361 Posts - 78%

56 Posts - 12%

16 Posts - 3%
Dr.S.Soundarapandian
மக்கள் சேவை புரிந்த மருத்துவருக்கு ஆயுள் தண்டனை: பினாயக் சென்னுக்கு எதிராக சூழ்ச்சி வலை Poll_c10மக்கள் சேவை புரிந்த மருத்துவருக்கு ஆயுள் தண்டனை: பினாயக் சென்னுக்கு எதிராக சூழ்ச்சி வலை Poll_m10மக்கள் சேவை புரிந்த மருத்துவருக்கு ஆயுள் தண்டனை: பினாயக் சென்னுக்கு எதிராக சூழ்ச்சி வலை Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%
Balaurushya

3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

Anthony raj

ஜாஹீதாபானு

நிகழ்நிலை நிர்வாகிகள்

மக்கள் சேவை புரிந்த மருத்துவருக்கு ஆயுள் தண்டனை: பினாயக் சென்னுக்கு எதிராக சூழ்ச்சி வலை

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Wed Jan 19, 2011 4:55 pm

தமிழக மக்கள் உரிமைக் கழக சார்பில் ஜனவரி 1 ஆம் தேதி சென்னை தியாகராயர் நகர் சி.டி.நாயகம் மேல்நிலைப் பள்ளியில் பினாயக் சென்னுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட் டதைக் கண்டித்து வழக்கறிஞர் பா. புகழேந்தி தலைமையில் நடந்த கூட்டத்தில் பங்கேற்று கழக பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆற்றிய உரையின் தொகுப்பு.

பினாயக் சென் என்ற மனித உரிமைப் போராளிக்கு சத்திஸ்கரில் உள்ள ராய்ப்பூர் கூடுதல் அமர்வு நீதிமன்றம் டிசம்பர் 24 இல் ஆயுள் சிறைத் தண்டனை வழங்கியுள்ளது. இந்திய குற்றவியல் சட்டப் பிரிவு 120(அ), 124(ஆ) மற்றும் சத்தீஸ்கர் மாநில மக்கள் பாதுகாப்புச் சட்டம் என்ற காட்டுமிராண்டி சட்டத்தின் பிரிவுகள் 8(1), 8(2), 8(3), 8(5) சட்ட விரோதச் செயல்கள் தடுப்புச் சட்டம் 39(2) ஆகிய பிரிவுகளின் கீழ், அவர் தண்டிக்கப்பட்டுள்ளார்.

பினாயக்சென் அடிப்படையில் குழந்தைகள் நல மருத்துவர்; தமிழ்நாட்டில் வேலூரில் உள்ள கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் தான் 1972 இல் படிப்பை முடித்தார். குழந்தைகள் நல மருத்துவத்தில் மேல் பட்டப் படிப்பும், அதே கல்லூரியில் 1976 இல் முடித்தவர். நேர்மையில்லாத இந்த உலகில், மருத்துவருக்கான தொண்டுக்கு புதிய இலக்கணம் வகுத்து செயல்பட்டார் என்பதற்காக வேலூர் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரி பால் ஹார்ரிசன் என்ற மனித சேவை விருதை 2004 ஆம் ஆண்டு வழங்கி பெருமைப்படுத்தியது. படிப்பை முடித்தவுடன், புதுடில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இயங்கும், சமூக மருத்துவம் மற்றும் சுகாதார மேம்பாடு மய்யத்தில் இணைந்து இரண்டு ஆண்டுகள் பணி புரிந்தார். தொடர்ந்து மத்திய பிரதேசத்தில் ஹோஷன்பாட் மாவட்டத் தில் ரசூலியா என்ற பகுதியில் மக்களிடம் நேரடியாகச் சென்று சேவை செய்யும் நண்பர்கள் கிராம மய்யத்தில் இணைந்து பணியாற்றினார். மக்களின் வியாதிகளைக் கண்டறிவதும், காச நோய்க்கு சிகிச்சை செய்வதும், இந்த அமைப்பின் பணிகளாகும்.

உழைக்கும் ஏழை மக்கள் காச நோயில் பெருமளவு பாதிக்கப்படுவதற்குக் காரணம். அவர்களது சமூக பொருளாதார பின்னணியே என்பதை அனுபவத்தில் கண்டறிந்த சென், உருக்காலை அமைந்துள்ள பிலாய் நகரில், சுரங்கத் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள், காச நோயால் பெருமளவு பாதிக்கப்பட்ட நிலையில், அவர் களுக்கு மருத்துவ சேவை செய்ய முன்வந்தார். தள்ளி - ராஜ்ஹரா என்ற பகுதியில் மருத்துவ நண்பர்களுடன் இணைந்து, சிறிய மருத்துவமனை ஒன்றை அமைத்தார். அப்போது சத்திஸ்கர் பகுதி ம.பி. மாநிலத்திலே இருந்தது. அப்பகுதியில் சுரங்கத் தொழிலில் ஈடுபட்டு வந்த ஒப்பந்த தொழிலாளர்கள் தொழிற்சங்கம் ஒன்றை நடத்தி வந்தனர். இந்தத் தொழிற்சங்கத்தில் தொழிலாளர்கள் உரிமைக் காகப் போராடிய தொழிற் சங்கத் தலைவர் சங்கர் குகா நியோகி, தொழிலதிபர்களின் சதியால் 1991 இல் படு கொலை செய்யப்பட்டார். நியோகியுடன் இணைந்து தொழி லாளர்களுக்கு மருத்துவ சேவை வழங்கிய பெருமையும் சென்னுக்கு உண்டு.

பிறகு, தொழிலாளர்களே தங்களுக்கான மருத்துவ மனை ஒன்றை உருவாக்கிக் கொள்ள (ஷாஹீத் மருத்துவ மனை) சென் உதவினார். மிகவும் குறைந்த கட்டணத்தில் தொழிலாளர்களுக்கு, இந்த மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. சென்னின் இந்த மருத்துவ சேவை மக்களிடையே அவருக்கு பெரும் புகழைக் கொண்டு வந்து சேர்த்து, மக்கள் மருத்துவர் என்று பெயர் பெற்றார். தொழிலாளர்கள் சேவையைத் தொடர்ந்து, பழங்குடியின மக்களின் மருத்துவ சேவையிலும், சென் இறங்கினார். சத்திஸ்கரில் தாம்த்தரி (Dhamtari) மாவட்டத்தில் உள்ள பக்ரும்நாலா கிராமத்தில் பழங்குடி மக்கள் மேம் பாட்டுக்கான சுகாதார சேவைகளில் இறங்கினார்.

பினாயக் சென் மக்கள் சிவில் உரிமைக் கழகம் (பி.யு.சி.எஸ்.) என்ற மனித உரிமை அமைப்பின் தேசிய துணைத் தலைவராகவும் உள்ளார். இந்த அமைப்பு 1976 ஆம் ஆண்டு அன்றைய இந்திராகாந்தி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி, கட்டவிழ்த்துவிட்ட அவசரகாலஅடக்குமுறைக்கு எதிராக மறைந்த ஜெயப்பிரகாஷ் நாராயணன் அவர்களால் தொடங்கப்பட்டதாகும். மருத்துவத்தோடு நின்று விடாது, மனித உரிமைக்கும் மருத்துவ சேவையை பழங்குடி உழைக்கும் மக்களுக்கு கொண்டு செல்வதிலும் அர்ப்பணித்துக் கொண்ட மனித உரிமைப் போராளியை, ‘இந்தியாவின் பார்ப்பன முதலாளித்துவ ஆளும் வர்க்கம் வழமைபோல் தீவிரவாதி’, ‘தீவிரவாதிகளுக்கு உதவுகிறவர்என்ற முத்திரையை குத்தியது. சென் மீது அரசு அடக்குமுறை எந்திரமான காவல்துறை குற்றச்சாட்டுகளைத் தேடத் தொடங்கியது. சென் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்கள் என்ன?

சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாராயன்சன்யால் என்ற நக்சலைட் தலைவரிடமிருந்து 3 கடிதங்களைப் பெற்று கல்கத்தாவில் உள்ள சிலரிடம் கொடுக்கும் கூரியர்வேலை செய்தார் என்பதும், இது தேசத் துரோக நடவடிக்கை என்பதும் தான். சென் மீது காவல்துறை புனைந்த’ ‘பயங்கரகுற்றச்சாட்டு; சிறையில் உள்ள நாராயன் சன்யால், வயது முதிர்ந்தவர்; பி.யு.சி.எல். அமைப்பின் பொறுப்பாளர் என்ற முறையில் மனித உரிமைக் கடமைகளை செயலாற்ற முன் வந்த சென், அவரை சிறைச்சாலைக்கு சென்று அடிக்கடி சந்தித்து, சன்யால் அடிப்படைத் தேவைகளுக்கு உதவிசெய்து வந்தார். ஒவ்வொரு சந்திப்பின் போதும் சென், மனித உரிமை அமைப்பு செயலாளர் என்ற முறையிலேயே சிறை அதிகாரிகளிடம் அனுமதி பெற்று சந்தித்தார். அவரது சந்திப்பு அதிகாரிகளால், கண்காணிக்கப்பட்டு வந்தது. சந்திப்புக்குப் பிறகு, சோதனைகளுக்கு உட்பட்டே சென் வெளியே வருவார். ஒவ்வொரு சந்திப்பும் சிறை ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், சிறை அதிகாரிகளின் பார்வையோடு நிகழ்ந்த சந்திப்பில் அதிகாரிகளுக்கு தெரியாமல் ரகசியமாக, கடிதங்களை கையளிக்கும் வாய்ப்புகள் இல்லை. ஆனால் பழியை எப்படிப் போடலாம் என்று காவல்துறை திட்டமிட்டது.

கல்கத்தாவில் உள்ள தொழிலதிபர் பியுஷ்குகா என்பவரிடம் சிறையிலுள்ள நாராயண் சன்யால் என்ற நக்சலைட் தலைவர் எழுதிய கடிதங்கள் கைப்பட்டதாகவும் அந்தக் கடிதத்தை சிறையிலிருந்து ரகசியமாகக் கொண்டு வந்து, பியுஷ்குகாவிடம் சேர்க்கும் தேசத் துரோகத்தைசெய்தவர் - பினாயக் சென் என்றும், சட்டீஸ்கர் காவல்துறை குற்றம் சாட்டியது.

2007 ஆம் ஆண்டு மே 14 ஆம் தேதி விசாரணைக்கு வருமாறு அழைத்து காவல்துறை டாக்டர் சென்னுக்கு சம்மன்அனுப்பியது. காவல்துறை சம்மனைஏற்று டாக்டர் சென் காவல்நிலையம் சென்றார். அங்கே சட்டீஸ்காரின் சட்டவிரோத தடுப்பு நடவடிக்கைகள் சட்டம் (1967), சத்தீஸ்கர், சிறப்பு மக்கள் பாதுகாப்பு சட்டம் (2005) ஆகியவற்றின் கீழ் - பினாயக் சென், கைது செய்யப்பட்டார். சட்டீஸ்கரில் அமுலில் உள்ள இந்தச் சட்டங்கள் மனித உரிமைகளுக்கு எதிரான காட்டுமிராண்டி சட்டங்களாகும். தடா’, ‘பொடாசட்டங்கள் நாடாளுமன்றத்தில் நீடிக்கப் படாமல் செயலலிழந்து போன நிலையில் அந்த சட்டத்தின் பிரிவுகளை உள்ளடக்கி சத்திகர் மாநில அரசு இந்த சட்டத்தைக் கொண்டு வந்தது. அத்துடன் தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்கான இந்திய தண்டனைச் சட்டப் பிரிவும் (124ஏ) சேர்க்கப்பட்டு விசாரணைக் கைதியாக, சென் சிறையில் அடைக்கப்பட்டார். இரண்டு ஆண்டு காலம் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சென், மாவட்ட நீதிமன்றங்கள் பிணை மறுத்ததைத் தொடர்ந்து உச்சநீதி மன்றம் போனார். 2004 ஆம் ஆண்டு மே 25 ஆம் தேதி உச்சநீதிமன்றம் அவருக்கு பிணை வழங்கியது. சென் கைதைக் கண்டித்து நாடு முழுதும் கண்டனங்கள் எழுந்தன. இவர் சிறையிலிருந்த காலத்தில் சுகாதார சேவை மற்றும் மனித உரிமைகளுக்காக வழங்கப்படும் ஜோனாத்தன் மான் என்ற சர்வதேச விருது வழங்கப் பட்டது. குழந்தைகள் மரண வீதம்; வயிற்றுப் போக்கு நோயால் ஏற்படும் மரண வீதத்தைக் குறைத்த வர்களுக்கு வழங்கப்படும் இந்த சர்வதேச விருதை வாஷிங்டன் நகரில் போய் பெற வேண்டும். இந்த உயரிய விருதைப் பெற பினாயக் சென்னை சிறையிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று நோபல் பரிசு பெற்ற 27 அறிஞர்கள் கூட்டாக வலியுறுத்தியும், இந்திய பார்ப்பன ஆட்சி கோரிக்கையை மறுத்து விட்டது. கைதைக் கண்டிக்கும் வகையில் இந்தியா முழுதும் மருத்துவர்கள் ஏழை எளிய மக்களுக்கான இலவச மருத்துவ முகாம்களை நடத்தி தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர். நாடு முழுவதுமிருந்தும் கண்டனங்கள் வெடித்தன.

அமெரிக்க மனித உரிமை சிந்தனையாளர் நோம் கோம்ஸ்கி, நோபல் பரிசு பெற்ற பொருளியல் அறிஞர் அமர்த்யா சென், மகசேசே விருது பெற்ற அருணாராய், புக்கர் விருது பெற்ற அருந்ததி ராய், ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ராஜேந்திர சச்சார் மற்றும் இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் சென்னின் கைதுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

இப்போது நக்சல் தலைவர் கடிதத்தைப் பெற்று வெளியே ஒருவரிடம் தந்த குற்றம் ராஜ துரோககுற்றமாக்கப்பட்டு, ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு விட்டது. வழக்கில் முதன்மையான குற்றச்சாட்டே கடிதப் பரிமாற்றம் தான். ஆனால், ஆயுள் தண்டனை வழங்கிய ராய்ப்பூர் அமர்வு நீதிமன்றம் இந்தக் குற்றச்சாட்டை சந்தேகத்துக்கு அப்பாற்பட்டு உறுதி செய்துள்ளதா? கடிதங்கள் கைப்பற்றப்பட்ட முறையிலேயே காவல்துறை முன்னுக்குப் பின் முரணான தகவல்களையே முன் வைத்தது.

அய்.எஸ்.எய்.என்றால்....

பினாயக்சென் மனைவி இலினாவும் ஒரு மருத்துவர். அவர் மீதும் தேச விரோதக் குற்றச்சாட்டுகளை சட்டிஸ்கர் காவல்துறை போட்டு வழக்குத் தொடர்ந்துள்ளது. அந்தக் குற்றச்சாட்டுகள் தான் வேடிக்கையானவை.

இலினா. தனது மின்னஞ்சல் வழியாக டெல்லியிலுள்ள சமூக ஆய்வு நிறுவனமான இந்திய சமூக நிறுவனத்துக்கு ஒரு கடிதம் அனுப்பினார். ஆங்கிலத்தில் Indian Social Institute என்பது அந்நிறுவனத்தின் பெயர். சுருக்கமாக ISI என்று அழைக்கப்படுகிறது. சட்டிஸ்கர் காவல்துறையோ, பாகிஸ்தான் உளவு நிறுவனமான Inter Service Intelligence (ISI) என்ற நிறுவனத்துக்குத் தான் கடிதம் எழுதினார் என்று வழக்குப் பதிவு செய்துள்ளது.

மற்றொரு மின்னஞ்சல் கடிதத்தில் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையை சிம்பன்சி’ (ஆப்பிரிக்காவில் வால் இல்லாத குரங்கு) என்று இலினா குறிப்பிட்டுள்ளார். இந்த சிம்பன்சிஎன்ற வார்த்தை நக்சலைட்டுகளால் பயன்படுத்தும் ரகசிய மொழி (Code language) என்று கூறி, காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

அந்த வால் இல்லாத குரங்குகளே கூட இந்தக் குற்றச்சாட்டுகளைக் கேட்டு, வாய்விட்டுச் சிரிக்கும். இப்படித்தான் நடக்கிறது, இந்த பார்ப்பன நாயகத்தின் அரசும் காவல்துறையும்!
பினாயக் சென் விடுதலை கோரி ஆர்ப்பாட்டம்

பினாயக் சென்னை விடுதலை செய்யக் கோரி பெரியார் திராவிடர் கழகம் மற்றும் காஞ்சி மக்கள் மன்றம் தோழர்கள் இணைந்து டிசம்பர் 31 ஆம் தேதி காலை 11 மணியளவில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகே எழுச்சியான ஆர்ப்பாட்டம் நடத்தினர். மக்கள் மன்ற ஒருங்கிணைப்பாளர் மகேஷ் தலைமை தாங்கினார். பேராசிரியர் சரசுவதி, கழகத் தோழர்கள் தமிழ்ச் செல்வன், டேவிட் பெரியார், கேசவன், பார்வேந்தன் (விடுதலை சிறுத்தைகள்), டாக்டர் ராக்காய், பேரறிவாளன், டாக்டர் விமுனா மூர்த்தி, மகேந்திரவர்மா உள்ளிட்ட தோழர்கள் உரையாற்றினர்.
தேச விரோதம்என்ற சட்டப் பிரிவு நீக்கம்: அமெரிக்க தேசியக் கொடியை எரிப்பதை அந்நாட்டு சட்டம் அனுமதிக்கிறது

இந்தியாவின் தேசப் பற்றை அமெரிக்காவிடம் அடகு வைத்தால் அது சூப்பர் தேசபக்தி. பார்ப்பன நாயகம் அந்த தேசபக்தியை தலையில் தூக்கி வைத்துக் கூத்தாடுகிறது. இந்தியாவின் அரசியலை, பொருளாதாரத்தை அமெரிக்காவிடம் அடகு வைப்பதில் ஆர்வமும், ஆவேசமும் காட்டும் தேச பக்தியாளர்களைக் கேட்கிறோம், அதே அமெரிக்காவில் தேச விரோதம் (Sedition) எப்படிப் பார்க்கப்படுகிறது?

அமெரிக்காவிலே தேச விரோதக் குற்றச்சாட்டை ஒருவர் மீது எந்த சூழ்நிலையில் பயன்படுத்த முடியும் தெரியுமா? நாட்டில் யுத்தப் பிரகடனம் அமுலில் உள்ள காலத்தில் மட்டும் தான். அமெரிக்க உச்சநீதிமன்றம் தேசவிரோதப் பேச்சுகளையும், பேச்சுரிமையாகவே அங்கீகரித்திருக்கிறது. அமெரிக்காவின் அரசியல் சட்டத்தில் கொண்டு வரப்பட்ட முதல் திருத்தமே தேச விரோதம்என்பதற்கான கடுமையான வரையறைகளைத் தகர்த்தது தான்.

அமெரிக்காவின் தேசியக் கொடியை எரிப்பது கூட அந்நாட்டுச் சட்டத்தின் படி தேச விரோதநடவடிக்கையாகாது. ஆனால் தமிழ்நாட்டில் அமெரிக்கக் கொடியை எரித்தால், உடனே இங்கே தேச விரோதசட்டங்கள் பாய்ந்து விடும். அமெரிக்க உச்சநீதிமன்றம் 1969 ஆம் ஆண்டு அளித்த தீர்ப்பில் (brandenberg vs Ohio) தேசத் துரோக சட்டப் பிரிவுகளை முழுமையாக செயலற்றதாக்கி விட்டது. அமெரிக்க தேசியக் கொடியை எரிப்பது குற்றம் என்ற சட்டத்தையாவது கொண்டு வரவேண்டும் என்று பலமுறை முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டன, அந்த முயற்சிகள் முறியடிக்கப்பட்டே வந்துள்ளன.

அமெரிக்காவின் சட்டப்படி சுயநிர்ணய உரிமை கோருவதும் பிரிந்து செல்ல விரும்பு வதற்கு குரல் கொடுப்பதும் சட்டப்படி குற்றம் அல்ல. அமைதியாக ஜனநாயக வழியில் தேசியக் கொடியை எரிக்கவும், அரசு அங்கீகரித்துள்ள சின்னங்களை அவமதிப்பதும் குற்றமாகாது. கனடா, எத்தியோப்பியா, ஆஸ்திரியா, பிரான்சு போன்ற நாடுகளில் அமைதியாக ஜனநாயக வழிமுறையில் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்திப் பேச சட்டம் அனுமதிக்கிறது.

எதற்கெடுத்தாலும் அமெரிக்காவின் பாதையில் ஓட விரும்பும் போலி தேச பக்தர்கள் பார்ப்பனர்கள், அங்கே வழங்கப்பட்டிருக்கும், இந்த உரிமைகள், இந்தியாவிலும் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்த மறுப்பது ஏன்? பதில் சொல்வார்களா?

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக