ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Today at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொடரும் தமிழின அழிப்பும்! துரத்தும் துயரங்களும்!

3 posters

Go down

தொடரும் தமிழின அழிப்பும்! துரத்தும் துயரங்களும்! Empty தொடரும் தமிழின அழிப்பும்! துரத்தும் துயரங்களும்!

Post by ரூபன் Mon Aug 24, 2009 1:59 pm

தொடரும் தமிழின அழிப்பும்! துரத்தும் துயரங்களும்! Vanni_140509_01தமிழீழத்தின் பலபாகங்களிலும் உள்ள மனிதப் புதைகுழிகள் ((Amnesty International
வெளியிட்ட செய்தி) அமெரிக்கா செய்மதிப் புகைப்படக்கருவிகள்
சிக்கிக்கொண்டதனைத் தொடர்ந்து, இலங்கை அரசு விடுதலைப்பலிகளின் ஆயுதங்கள்
புதைக்கப்பட்டிருப்பதாகவும், அவற்றைத் தாங்கள் முழுமையாகத்
தேடிக்கண்டுபிடித்த பின்னரே மீள்குடியேற்றமும், வெளியுலக - உடகவியலாளர்களை
உள்ளே அனுமதிப்பதும் எனக் கூறி காலம் கடத்துவதுடன், ஈழத் தமிழினத்தின்
அழிப்பிலும் முக்கிய கவனம் செலுத்தி வருகின்றது.
ஈழத்
தமிழினத்தைத் திடமிட்டு அழித்து அவர்கள் வாழ்ந்த சுவடே இல்லாமல் செய்யும்
பாரிய செயல் திட்டத்தை திட்டமிட்டு இலங்கையின் பாசிச அரசு செயல்படுத்தி
வருவது யாவரும் அறிந்ததே. அதற்காக, விடுதலைப் புலிக்கு எதிரான போர்
என்றும், பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்றும் தமிழின அழிப்பிற்கு
மேல்முலாம் பூசி சர்வதேசத்தை ஏமாற்றித் தனது இனஅழிப்புக் கபடநாடகத்தை
சிறப்பாக அரங்கேற்றியதன் மூலமம் ஒருலட்சத்திற்கும் மேலான
ஈழத்தமிழினத்தைக்கொன்று குவித்துவிட்டு அதற்கு அர்த்தமற்ற காரணங்களைச்
சொல்லிக்கொண்டிருக்கும் அதே வேளை மூன்றரை லட்சத்திற்கும் அதிகமான மக்களை
மின்சார முட்கம்பிகளுக்குள் முடக்கிச் சிறைவைத்துக்கொண்டு, அவர்களையும்
நாளாந்தம் அழிக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றார்கள்.

இதனைத் தட்டிக் கேட்பார் யாரும் இல்லை. அப்படிக் கேட்கச் சென்ற சர்வதேச
அரசியல் வாதிகளும் இலங்கை அரசின் அற்பசொற்ப சலுகைக், களியாட்டங்கள்,
விருந்துகளுக்கும் விலைபோய்விட்ட நிலையில் இன்று ஈழத் தமிழினம் சிறிது
சிறிதாக அழிக்கப்பட்டுக்கொண்டு வருவதை யார்தான் காப்பாற்றப் போகிறார்கள்.
அண்மையில் மொரட்டுவையில் இரண்டு சிங்கள இளைஞர்கள் பொலிஸ் காவலில்
விளக்கத்திற்குள்ளாக்கப்பட்ட வேளையில் கொல்லப்பட்டதற்காக அந்த பொலிஸ்
நிலையமே நிர்கூலமாக்கப்பட்டுள்ளது.
ஆனால் பல்லாயிரக்கணக்கான தமிழ் இளைஞர்களும்? யுவதிகளும் விளக்கம்
என்னும் காரணம் காட்டி அழைத்தச் செல்லப்பட்டு அவர்கள் சித்திரவதை
செய்யப்படுவதும், பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுவதும் பின்னர்
அவர்கள் அடையாளம் தெரியாமல் கொலை செய்யப்படுவதுமாக இன்று ஈழத்தமிழினத்தின்
அழிப்பு நடவடிக்கைகள் இலங்கையின் பாஸிச அரசினால் தொடர்ந்த வண்ணம் உள்ளது.

அவற்றில் ஒருசிலவற்றை சர்வதேச சமூகத்தின் கண்களுக்குத் தருகின்றோம்......
செய்மதிப் படங்களின் கணிப்பின்படி 1346 மனிதப் பதைகுழிகள்
காணப்படுவதாகத் தெரியவந்துள்ளது. அவற்றுள் வகைதொகையின்றிப் புதைக்கப்பட்ட
பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழ் உறவுகளுக்கு சர்வதேச சமூகம் சொல்லப்போகும்
பதில் தான் என்ன?
புதிதாகக் கிடைத்த செய்மதிப் படங்களின் கணிப்பில் வன்னிப் பகுதியில்
மொத்தம் 17 பாரிய தமிழின அழிப்புத் தாக்கதல் நடத்தப்பட்டிருப்பதாகக்
கணிக்கப்பட்டிருக்கின்றது.
கடந்த மாதம் 14ந்திகதி கொழும்பின் புறநகர்ப் பகுதியில்
சுற்றிவளைப்புத் தேடுதல் நடவடிக்கையின்போது 12 அப்பாவித் தமிழ் இளைஞர்கள்
கைது செய்யப்பட்டள்ளார்கள். அவர்களுக்கு இதுவரை என்ன நடந்தது என்றே
தெரியாத நிலையில் உள்ளது.
மின்சார முட்கம்பிச் சிறை முகாம்களுக்குள் இருக்கும் தமிழ்
இளைஞர்களையும். யுவதிகளையும், விடுதலைப்புலிகளின் அமைப்பின் காவற்துறை,
அரசியல்பிரிவு என்றெல்லாம் தவறான குற்றச்சாட்டுக்களைக் கூறி நாளாந்தம்
கைது செய்யப்பட்டு விசாரணைக்கென அழைத்துச் செல்லப்படுபவர்கள் மீண்டும்
அகதி முகாமிற்குத் திரும்பாத நிலையே இன்றுவரை தொடர்கின்றது. (இவ்வாறு
அழைத்துச் செல்லப்படுபவர்களில் பெரும்பாலனவர்கள் இராணுவத்தினரதும்,
அவர்களின் எடுபிடிகளினதும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு
உள்ளானவர்கள் என்பது இன்று வரை யாரும் அறியாத ஒன்றாகும்)
கொழும்பிலும், அதன் புறநகர் பகுதிகளிலும் தொழில் செய்துகொண்டிருக்கும்
அப்பாவித் தமிழ் வாத்தகர்களிடம் நாளாந்தம் கப்பம் என்ற பெயரில் நடைபெறும்
கொள்ளையில் பலர் தங்கள் முதலை இழந்தவண்ணம் இருக்கின்றனர். அப்படிக்
கொடுக்காத, கொடுக்க முடியாத தமிழ் வர்த்தகர்கள் வெள்ளை வான்
கும்பலினாலும், இராணுவத்தினரின் போலிக் குற்றச்சாட்டின் பெயரிலும் கைது
செய்தும், கடத்தப்பட்டும் கப்பப் பணம் கிடைக்காதவிடத்து கொலை
செய்யப்படுவது நாளாந்த நடைமுறை சம்பவங்களாகிவிட்டன.
எல்லாவற்றிற்கும் மகுடம் வைத்தாற்போல வெளிநாடுகளில் தொழில்
செய்துவிட்டு நாடு திரும்பும் தமிழர்கள் கட்டநாயக்கா விமானநிலையத்தில்
கைதுசெய்து கடத்தப்படுவது நாளந்த செயற்பாடாகிவரும் இன்றைய நிலையில், இன்று
அதனைச் சிறப்பாகச் செயற்படுத்தும் வகையில் அங்கேயே ஓர் புலனாய்வு
விசாரணைப் பிரிவு நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
அங்கு கொண்டு செல்லப்படும் தமிழர்கள் யாரும் தங்கள் உடமைகளையும்,
பெருந்தொகைப் பணத்தையும் இழந்துதான் வெளியே வர முடிகின்றது. அப்படி
வக்கற்ற வகையற்றவர்கள் ஒரேயடியாகக் காணாமல் போய்விடுவது இப்பொழுது
சர்வசாதாரணமாகிவிட்டது.
இராணுவ நடவடிக்கைகளின்போது ஒவ்வொரு சதுர அடியாக படையினர் நகாந்துதான்
போரினை முடிவுக்குக் கொண்டுவந்ததாகச் சொல்லிய இராணுவப் பேச்சாளர், தற்போது
விடுதலைப் புலிகளின் பாரிய ஆயுதங்களும் தளபாடங்களும் தாங்கள்
கண்டெடுப்பதாகவும், அவை முற்றாகக் கண்டெடுக்கப்படுவதுடன், அங்கெல்லாம்
கண்ணிவெடிகள் இருப்பதாகவும் அவற்றையெல்லாம் மீட்டெடுத்த பின்னர் தான் மீள்
குடியேற்றம் என்றும் சாவதேசத்திற்குப் பாசாங்குகாட்டி நாட்களைக்
கடத்தகின்றார்கள்.
(ஏனெனில் இறந்துபோன இலட்சக்கணக்கான மக்களின் சடலங்களைப்
புதைகுழிகளினின்றும் மீட்டெடுத்து அவற்றை அழித்தொழிக்கும் நடவடிக்கையை
வெற்றிகரமாகச் செய்து முடிப்பதற்கு) அவர்களுடைய இந்த நடவடிக்கையை
அனைத்துலகமும், ஐ.நா. சபையம் தலையாட்டிப் பொம்மைகளாகிவிட்டது போன்ற நிலை
இன்று உருவாகி இருப்பது சர்வதேசத் தமிழினத்தை பெரும் கவலைக்குள்ளாக்கி
இருக்கின்றது.
கடந்த வாரம் மலையகத் தமிழ்ப் பெண்கள் இருவர் கொழும்பில் வேலைசெய்து
கொண்டிருந்தவர்கள் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு, அவர்களின்
சடலங்கள் ஆற்றில் வீசப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாது தற்போதைய மழை காரணமாக மின்சார முட்கம்பி வேலிகளுக்குப்
பின்னால் அகதி முகாம்களில் வாழும் தமிழ் மக்கள் தொற்றுநோய் பற்றிக்
கொள்வதன் மூலம் அவர்கள் பாரிய அழிவினை எதிர்நோக்கி உள்ளனர் என்றும்,
அவர்கள் கிறிமினல் குற்றவாளிகளை விட மோசமான முறையில் நடத்தப்படுவதாகவும்,
மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் பணியாளரும், சட்டத்தரணியுமான திருமதி
நிமால்கா பெர்னான்டோ அவர்கள் தனது அறிக்கையில் குறிப்பிட்டள்ளார்.
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

தொடரும் தமிழின அழிப்பும்! துரத்தும் துயரங்களும்! Empty Re: தொடரும் தமிழின அழிப்பும்! துரத்தும் துயரங்களும்!

Post by ரூபன் Mon Aug 24, 2009 2:00 pm

ராஜபக்ச தமிழ் மக்களுக்கு அகதி வாழ்வை அப்படியே தக்கவைத்துக்கொள்ள
முயற்சிப்பாரே தவிர அவர்களுக்கு நல்ல தீர்வுத் திட்டததையோ அல்லது 13வது
அரசியல் சட்டத்தையோ நடைமுறைப்படுத்தவே மாட்டார்.
இப்படியான அகதி வாழ்வில் தொடர்ந்து வைத்திருந்து அவர்களை முற்றுமுழுதாக
அழிக்கும் நடவடிக்கையே மேற்கொள்வார் என்றும் அவர் எக்ஸ்பிரஸ் செய்தி
நிறுவனத்திற்கு அளித்த தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
(அவர்கள் யாரும் இருக்க சொந்த நிலம் அற்ற அகதிகள் அல்ல. அவர்களின்
சொந்த இடங்களுக்க அவர்களைத் திரும்பவும் செல்ல அனுமதித்தாலே போதும். அரசு
அவர்களுக்கு எந்த அகதி நிவாரணமும் செய்யத் தேவையில்லை. அவர்கள் நாளாந்த
சராசரி வாழ்க்கையை சிறப்பாக நடாத்திக்கொள்ள முடியும்.
அகதிமுகாமில் இருந்து வேறு முகாம்களுக்க அழைத்துச் செல்லப்படுவதாக
நாளாந்தம் கொண்டு செல்லப்படும் மக்கள் எங்கு கொண்டு செல்லப்படுகின்றார்கள்
என்ற தகவல் இதுவரை யாருக்கும் புரியாத புதிராகவே இருந்து வருகின்றது.
நாளாந்தம் அகதி முகமில் இருந்து தப்பிச் செல்ல முயற்சித்தவர்கள் என்ற
குற்றச்சாட்டின்பேரில் கைதுசெய்து கொண்டு செல்லப்படும் தமிழர்கள் என்ன
ஆனார்கள் என்ற பதிலும் இதுவரை யாருக்கும் தெரியாத ஒன்றாகவே உள்ளது.
இராணுவத்தினரின் கைக்கூலிகளாகச் செயல்படும் ஒருசிலர் அகதிமுகாமில்
இருக்கும் மக்களில் சிலரை வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாக பொய்சொல்லி
அவர்களின் உடமைகளையும் பணத்தையும் அபகரித்துக்கொண்டு பின்னர் அவர்களுக்கு
என்ன நடந்தது என்று தெரியாமலே போய்விடுவதம் அகதி முகாம்களின் அன்றாட
நடவடிக்கைகளில் ஒன்றாகிவிட்டது. இதில் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு
உட்படுத்தப்படுவது சர்வசாதாரணமாகிவிட்டது.
கண்ணிவெடி அகற்றும் பணிகள் 80 வீதம் நிறைவேறிவிட்டது. அதேவேளை
விடுதலைப்புலிகளுடன் தொடர்பில்லாத அப்பாவித் தமிழ்மக்கள் இரண்டு
லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். அவர்களை அரசு இன்னமும் ஏன்
மீள்குடியேற்றம் செய்ய தாமதம் செய்கின்றது என எதிர்கட்சித் தலைவர்
அரசின்மீது குற்றம் சாட்டியுள்ளார்.
போரின்போது அரசின் வேண்டுகோளை நம்பி சரணடைந்த அப்பாவி மக்களை அரசு
ஏமாற்றிக்கொண்டே வருகின்றது. மூன்ற மாதங்களுக்குள் அவர்களின்
இடங்களுக்குத் திருப்பி அனுப்புவதாகக் கூறிய அரசு இன்று வரை அதற்கான எந்த
நடவடிக்கையும் எடுக்காமல் அவர்களை மிருகங்களை விட கேவலமாக நடத்துகின்றது
என ஜே.வி.பி கட்சியின் தலைவர் சோமவன் அமரசிங்க குற்றம் சாட்டியுள்ளார்.
யார் என்ன சொன்னாலும் அகதிகள் முகாமில் உள்ள தமிழர்களை உடனடியாக மீள்
குடியேற்றம் செய்ய முடியாது என சரத் பொன்சேகா கடந்த வாரம் கண்டியில்
தெரிவித்துள்ளார்.
( அதிகரித்து வந்த மக்கள் செல்வாக்குடன் முதலமைச்சாராகும் நிலையை
நோக்கிய எல்லா முன்னுரிமைகளும் பறிக்கப்பட்டு தனக்கு சமூகம் முன்னுரிமை
தருவதை ராஜபக்ச அன் பிறதேர்ஸ் இனால் சகிக்க முடியாமல் தான் பல்லுப்
பிடுங்கிய பாம்பாக தன்னை நடத்துவது தெரியாது வாழும் இவரது அறிக்கையே
இப்படியென்றால் மற்றவர்களின் செயற்பாடுகள் எப்படி என்று சர்வதேசம் எண்ணிப்
பார்க்க வேண்டும்.)
கிழக்கு மாகாணத்தில் புலி உறுப்பினர்கள் ஆயுதங்களைக் காட்டித் தருவதாக
இராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்பட்டு காணாமல் போவதும் நீரேரிகளில்
பிணமாக மீட்கப்படுவதும் அன்றாடம் நிகழ்வாகிவிட்டது. (மட்டக்களப்பு, பியகம
ஆகிய இடங்களிலுள்ள வாவிகளில் மீட்கப்பட்ட தமிழ் வாலிபர்களின் சடலங்கள்,
இப்படிக் கொலை செய்யப்படும் அப்பாவித் தமிழ் இளைஞர்களது தான்....)
இவை எல்லாவற்றையும் தாண்டி இலங்கை அரசின் தமிழினப் படுகொலையும், அரச
பயங்கரவாதமும் மலேசியாவில் கைது செய்யப்பட்ட செல்வராஜா பத்மநாதன் அதனைத்
தொடர்ந்து நோர்வேயிலும், அமெரிக்காவிலும் மற்றம் சாவதேசங்களிலும்
தமிழர்களைக் கைதுசெய்து இழுத்துவருவோம், தங்களை யாரும் எதுவும் செய்ய
முடியாது என்ற சவால்விடும் இலங்கையின் ஜனாதிபதியும் அவரின் இராணுவ
பேச்சாளரும். (கையாலாகாத்தனமாகச் செயற்பட்ட மலேசியாவைப்போல் சர்வதேசமும்
இருந்துவிடும், அல்லது தங்களிடம் விலைபோகும் என இலங்கை பாஸிச அரசு
நினைப்பதுதான் வேடிக்கை....)
போரும் முடிவுக்கு வந்து, விடுதலைப் புலிகளின் தலைவரையும் கொலைசெய்து,
அந்த இயக்கத்தையே முற்றாக அழித்துவிட்டதாக வெற்றிவிழாக்களைக் கொண்டாடிக்
கொண்டிருக்கும் இலங்கையின் பாஸிச அரசு இன்னமும் புலியென்று மக்களை
ஏமாற்றிக்கொண்டு கடன் சுமைகளை மக்கள் சுமப்பது தெரியாமல் இருக்கும்
அப்பாவிக் கிராமத்து மக்களை ஏமாற்றக் கபட நாடகம் ஆடிக்கொண்டிருக்கின்றது.
தூங்கிக்கொண்டிருக்கும் அப்பாவிக் கிராமத்து மக்கள் எப்பொழுது தான்
உண்மையை உணருவார்களோ தெரியாது. இலங்கையில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையின்
தலையிலும் ஒன்றரைக்கோடி ரூபாவிற்கு மேல் அந்நியநாட்டுக் கடன்தொகையைத்
தலையில் சுமந்தபடிதான் பிறக்கின்றது என்னும் உண்மை நிலை எப்போது
அப்பட்டமாக வெளிவரப்போகின்றதோ?
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

தொடரும் தமிழின அழிப்பும்! துரத்தும் துயரங்களும்! Empty Re: தொடரும் தமிழின அழிப்பும்! துரத்தும் துயரங்களும்!

Post by VIJAY Mon Aug 24, 2009 5:53 pm

அழுகை


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

தொடரும் தமிழின அழிப்பும்! துரத்தும் துயரங்களும்! Empty Re: தொடரும் தமிழின அழிப்பும்! துரத்தும் துயரங்களும்!

Post by சதீஷ்குமார் Mon Aug 24, 2009 6:44 pm

சோகம்
சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Back to top Go down

தொடரும் தமிழின அழிப்பும்! துரத்தும் துயரங்களும்! Empty Re: தொடரும் தமிழின அழிப்பும்! துரத்தும் துயரங்களும்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum