ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 9:29 pm

» நம் வாழ்வை நாம் காப்போம்
by ayyasamy ram Today at 7:40 pm

» அவளது கண்கள்…
by ayyasamy ram Today at 7:38 pm

» சிலையைக் கண்டேன்
by ayyasamy ram Today at 7:37 pm

» விசும்பின் துளி- மழைத்துளி
by ayyasamy ram Today at 7:36 pm

» உங்களால் முடியும்
by ayyasamy ram Today at 7:35 pm

» சாமி குத்தம்
by ayyasamy ram Today at 7:34 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by கண்ணன் Today at 4:31 pm

» ஸ்பீடாமீட்டரை மாற்றி காரை நல்ல விலைக்கு விற்கலாம்!
by ayyasamy ram Today at 3:21 pm

» ஓடிடியில் படம் பார்த்தாலும் பாப்கார்ன் வேணும்!
by ayyasamy ram Today at 3:20 pm

» காலை ஆட்டிக்கிட்டே சூப் குடிக்கிறாரே….
by ayyasamy ram Today at 3:18 pm

» ஆரோக்கியம் நிறைந்த அவல் லட்டு
by ayyasamy ram Today at 3:17 pm

» காமெடி டைம்
by ayyasamy ram Today at 3:14 pm

» அறிவுத்தரம் உயர வைத்த எழுத்தாளர்…
by ayyasamy ram Today at 3:13 pm

» கொத்தமங்கலம் சுப்புவின் தேச பக்தி
by ayyasamy ram Today at 3:12 pm

» மாணவராகவே வியக்க வைத்த விவேகானந்தர்
by ayyasamy ram Today at 3:10 pm

» பெண்கள் அவல் குத்துவது …
by ayyasamy ram Today at 3:09 pm

» எப்போதும் புசித்திருக்கும் கண்ணன்
by ayyasamy ram Today at 3:07 pm

» சுப மூகூர்த்தம் -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 3:05 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:04 pm

» தமிழகத்தில் இருமொழிக் கொள்கை: த.வெ.க
by ayyasamy ram Today at 3:03 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 3:01 pm

» பிரஜை தோழருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்
by கண்ணன் Today at 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:24 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:49 pm

» இதுதாங்க இடியாப்பம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:38 pm

» நல்ல குடிமகனுக்கு எது தேவை?
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:31 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 1:10 pm

» நாவல்கள் வேண்டும்
by nahoor Yesterday at 10:42 am

» உலகில் ஒரு முறையஅவது பார்க்க வேண்டிய இடங்கள் பட்டியலில் தமிழ்நாடு...
by ayyasamy ram Yesterday at 8:40 am

» கருத்துப்படம் 26/10/2024
by mohamed nizamudeen Sat Oct 26, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Sat Oct 26, 2024 8:46 pm

» அருளைப் பொழியும் ஸ்ரீ அன்னை
by ayyasamy ram Sat Oct 26, 2024 11:06 am

» எது விலை உயர்ந்தது?
by ayyasamy ram Sat Oct 26, 2024 11:01 am

» மருந்துகள் சாப்பிடுவதால் வாய்ப்புண் ஏற்படுமா?
by ayyasamy ram Sat Oct 26, 2024 11:00 am

» அனுமதி கொடுத்த நீதிமன்றம்; மீண்டும் துவங்கியது வள்ளலார் சர்வதேச மையம் கட்டுமானப் பணி
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:59 am

» தல தீபாவளி நினைவுகள்
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:56 am

» சப்பாத்தி சுடும் பொழுது, ஒரு ஸ்பூன் நெய் அவசியம் தடவணும்…
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:54 am

» எழுத்தறிவித்தோன் இறை…
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:53 am

» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:51 am

» குரைக்கிற நாய் கடிக்காது…!
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:49 am

» UDAYANAN NOVEL REQUEST
by prajai Fri Oct 25, 2024 11:18 pm

» வாங்க சட்டை எடுக்கலாம்!
by ayyasamy ram Fri Oct 25, 2024 7:27 pm

Top posting users this week
ayyasamy ram
"பென் அலி" : ஒரு அமெரிக்க அடிவருடியின் பரிதாபக் கதை Poll_c10"பென் அலி" : ஒரு அமெரிக்க அடிவருடியின் பரிதாபக் கதை Poll_m10"பென் அலி" : ஒரு அமெரிக்க அடிவருடியின் பரிதாபக் கதை Poll_c10 
கண்ணன்
"பென் அலி" : ஒரு அமெரிக்க அடிவருடியின் பரிதாபக் கதை Poll_c10"பென் அலி" : ஒரு அமெரிக்க அடிவருடியின் பரிதாபக் கதை Poll_m10"பென் அலி" : ஒரு அமெரிக்க அடிவருடியின் பரிதாபக் கதை Poll_c10 
kavithasankar
"பென் அலி" : ஒரு அமெரிக்க அடிவருடியின் பரிதாபக் கதை Poll_c10"பென் அலி" : ஒரு அமெரிக்க அடிவருடியின் பரிதாபக் கதை Poll_m10"பென் அலி" : ஒரு அமெரிக்க அடிவருடியின் பரிதாபக் கதை Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

"பென் அலி" : ஒரு அமெரிக்க அடிவருடியின் பரிதாபக் கதை

Go down

"பென் அலி" : ஒரு அமெரிக்க அடிவருடியின் பரிதாபக் கதை Empty "பென் அலி" : ஒரு அமெரிக்க அடிவருடியின் பரிதாபக் கதை

Post by ரபீக் Wed Jan 19, 2011 10:18 am

அமெரிக்காவின் உதவியுடன் பதவியை காப்பாற்றிக் கொள்பவர்கள். அமெரிக்காவை திருப்திப்படுத்த இஸ்ரேலுக்கு ஆதரவாக இருப்பவர்கள். எல்லோருக்கும் பென் அலியின் கதை ஒரு சிறந்த பாடம்.அரபுலகின் முதலாவது மக்கள் எழுச்சியின் விளைவாக, உயிருக்கு பயந்து நாட்டை விட்டோடிய துனிசியா ஜனாதிபதி பென் அலி, இன்று சவூதி அரேபியாவில் சிறைக்கைதி போல வாழ்கின்றார். அதிகார மமதையுடன், டாம்பீகமான பணக்கார வாழ்வு வாழ்ந்தவர். துனிசியாவில் பல வர்த்தக நிறுவனங்களின் சொந்தக்காரர். 23 வருடங்களாக ஒரு தேசத்தின் அதிபதியாக எதிர்க்க ஆளின்றி அதிகாரம் செலுத்தியவர். இன்று உடல் தளர்ந்த வயோதிபராக, 74 வயதில் ஒதுங்க இடமின்றி பரிதாபகரமாக அலைந்தார். முதலில் மால்ட்டாவிடம் அடைக்கலம் கேட்டார். பின்னர் நெருக்கமான அயலுறவுக் கொள்கையைக் கொண்டுள்ள பிரான்சிடம் தஞ்சம் கோரினார். ம்ஹ்ம்.... யாருமே அந்த அரசியல் அகதியை ஏற்றுக் கொள்ள முன்வரவில்லை. இத்தனை காலமும் அமெரிக்காவின் விசுவாசியாக இருந்ததால், ஒபாமாவுக்கு தொலைபேசிப் பார்த்தார். வாஷிங்டனில் பென் அலியின் அழைப்புக்கு யாரும் பதில் சொல்லவில்லை. இறுதியில் மதச்சார்பற்ற கொள்கைப் பிடிப்பாளரான பென் அலி, மத அடிப்படைவாத சவூதி அரேபியாவில் தஞ்சம் புகுந்தார்.

பென் அலி காலம் பூராவும் யார் யாருக்கு சேவை செய்தாரோ, அவர்கள் யாரும் ஆபத்து நேரத்தில் உதவவில்லை. அரேபிய சகோதரர்களை பகைத்துக் கொண்டு, இஸ்ரேலுடன் நட்பு பாராட்டினார். ஒரு காலத்தில் துனிசியாவில் PLO தலைமையகத்தை இஸ்ரேல் குண்டு வைத்து தகர்த்தது. அப்படியிருந்தும் அதை எல்லாம் மன்னித்து விட்டு, முன்னாள் பிரதமர் ஆரியல் ஷரோனை கூப்பிட்டு விருந்து கொடுத்தார். ஆரியல் ஷரோன் ஒரு போர்க்குற்றவாளி என்று உலகமே குற்றஞ்சாட்டினாலும், தயக்கமின்றி கை குலுக்கினார். இருந்தும் என்ன? ஆபத்து நேரத்தில் உற்ற நண்பனுக்கு உதவ இஸ்ரேல் முன் வரவில்லை. இது தான் யதார்த்தம். சில தமிழர்கள் இப்போதும் இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்படுமாறு எங்களை அழைக்கிறார்கள். அவர்களுக்கும் பென் அலி போல அடி பட்டால் தான் ஞானம் பிறக்கும்.

சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்னர், தலைநகரான தியூனிசில் டாக்சியில் பயணம் செய்து கொண்டிருந்த பொழுது, அமெரிக்க தூதரகத்தின் முன்னாள் செல்லும் பாதை தடுக்கப் பட்டிருந்தது. வேறு வழியால் சுற்றிச் சென்றதால் 20 நிமிடம் அதிகமாக பிடித்தது. டாக்சி சாரதி வழி நெடுக, அமெரிக்கர்கள் கேட்பதை எல்லாம் செய்து கொடுத்துக் கொண்டிருக்கும் தனது அரசை திட்டிக் கொண்டிருந்தார். அப்போது பொருளாதாரம் நல்ல நிலையில் இருந்த காலம். அயல் நாடான அல்ஜீரியாவுடன் ஒப்பிடும் போது, துனிசியாவில் தனி நபர் வருமானம் அதிகம். அதனால் பெரும்பாலான துனிசியர்கள் பென் அலியின் சர்வாதிகாரத்தை பொறுத்துக் கொண்டார்கள். ஆனால் முன்பு பிரான்ஸ் இருந்த இடத்தில் இன்று அமெரிக்காவின் ஆதிக்கம் அதிகரிப்பதை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அன்று நடந்து கொண்டிருந்த ஈராக் போரினால், அரபு இன உணர்வுகள் கொந்தளித்துக் கொண்டிருந்த காலகட்டம். அதனால் அரசு பகிரங்கமாக அமெரிக்கா பக்கம் நின்றதை, துனிசிய மக்கள் விரும்பவில்லை. துனிசியாவில் பயணம் செய்த நாட்களில் நான் சந்தித்த அனைவரும் அந்த விஷயத்தில் ஒத்த கருத்தைக் கொண்டிருந்தனர்.

துனிசியா முன்னாள் பிரெஞ்சுக் காலனி என்பதால், அங்கே போவதற்கு முன்னம் எனது பிரெஞ்சு மொழி அறிவை சற்று மெருகூட்டிக் கொண்டேன். நான் தட்டித் தடுமாறி துனிசியர்களுடன் பிரெஞ்சில் சம்பாஷணையை தொடங்கினால், அவர்கள் சரளமாக ஆங்கிலத்தில் பதிலளித்தார்கள். சுற்றுலாப்பயணிகளின் வருகை மட்டுமல்ல, அமெரிக்காவின் நெருக்கமும் ஆங்கில மொழி கற்றோரின் அதிகரிப்புக்கு காரணம். சர்வதேச வர்த்தக சமூகத்திற்காக, துனிசியாவில் ஒரு ஆங்கில வாரப் பத்திரிகை கூட வெளி வந்து கொண்டிருந்தது. அமெரிக்கா அல்கைதாக்கு எதிரான போரில் வென்றதோ இல்லையோ. துனிசியாவில் அத்தகைய அமைப்புகளை அடியோடு அழித்து விட்டார்கள். மசூதியில் அரசியல் பேசினால் கூட, இரகசியப் போலீசார் பிடித்துச் சென்று சிறையில் போட்டார்கள். தற்போது நடந்துள்ள புரட்சியில் இஸ்லாமிய மத அரசியல் வாசகங்களைக் கொண்ட பதாகைகளை காணவில்லை என்று பலர் "வருத்தப்பட்டார்கள்." அப்படி வருத்தப் பட்டவர்கள் மேற்குலக ஊடகவியலாளர்கள். புரட்சிக்கு இஸ்லாமிய முலாம் பூச முடியாத வருத்தம் அவர்களுக்கு.

இதுவரை துனிசியாவை பார்க்காதவர்கள், அது துபாய், குவைத் போலிருக்கும் என்று நினைத்தால், அந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள். பிரான்சில் வாழும் ஒருவரை கண்ணைக் கட்டி கூட்டி வந்து டியூனிஸ் நகரில், அல்லது வட துனிசியா பகுதியொன்றில் கொண்டு வந்து விட்டால், வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாது. இயற்கை, நில அமைப்பு மட்டுமல்ல, கட்டிடங்கள் தெருக்கள் எல்லாமே பிரான்சின் தெற்குப் பகுதி போன்றிருக்கும். ஒரு சராசரி "முஸ்லிம் நாட்டில்" நீங்கள் எதிர்பார்க்கும் எதுவும் அங்கே கிடையாது. தெருவோர பெட்டிக் கடையில் சாதாரணமாக பியர், வைன் வாங்கலாம். பெண்கள் சுதந்திரமாக திரிகிறார்கள். நகரங்களில் நட்சத்திர ஹோட்டல் டிஸ்கோதேக்கில் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த நங்கைகளைக் காணலாம். துனிசிய பெண்கள் மிகவும் அழகானவர்கள். ஐரோப்பிய மகளிரைப் போல கவர்ச்சியான உடை அணிவதும் சர்வசாதாரணம். ஆனால்... ஆனால்... தலையில் முக்காடு போட்ட பெண்ணை துனிசியாவில் மிக மிக அரிதாகவே காண முடியும்.

பிரான்சில் முக்காடு தடைச் சட்டம் அமுலுக்கு வந்த பொழுது, உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. பிரான்சில் அப்படி ஒரு சட்டம் வருவதற்கு பல வருடங்களுக்கு முன்னரே, துனிசியா அரசு முக்காடு அணிவதை தடை செய்து விட்டது. முக்காடு அணிந்தவர்கள் எல்லாம் இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள் என்று பென் அலி நினைத்தாரோ என்னவோ? அல்லது மதச்சார்பற்ற லிபரல் கொள்கையை பின்பற்றுவதில் தான் மேற்குலகின் சிறந்த மாணவன் என்று காட்ட விரும்பினாரோ? காரணம் என்னவாக இருந்தாலும், பாடசாலை, கல்லூரி, அலுவலகம் போன்ற பொது இடங்களில் பெண்கள் முக்காடு அணிவதும், ஆண்கள் தாடி வைப்பதும் தடை செய்யப்பட்டது. தடையை மீறுபவர்களை காவல்துறை கைது செய்தது. ஒரு நாளாவது போலிஸ் நிலையத்தில் வைத்திருந்து விட்டு விட்டார்கள். எவராவது பிடிவாதமாக தொடர்ந்து செய்தால், மதத் தீவிரவாதியாக கணிக்கப்பட்டார்.

அமெரிக்காவும், இஸ்ரேலும் எந்தளவு மகோன்னத நட்பு கொண்டிருந்தாலும், ஆபத்து நேரத்தில் உதவ வர மாட்டார்கள். அமெரிக்காவை, இஸ்ரேலை விமர்சித்து நான் எழுதும் கட்டுரைகளை கடுமையாக எதிர்க்கும் "தமிழர்கள்" இருக்கிறார்கள். அவர்கள் யாரும் பென் அலி அளவுக்கு அமெரிக்க/இஸ்ரேல் விசுவாசம் காட்டியிருக்க முடியாது. பென் அலியின் கதை மேற்குலக விசுவாசிகளுக்கு ஒரு பாடமாக அமையட்டும். பென் அலி மட்டுமா அவரது மேற்குலக நண்பர்களால் கைவிடப்பட்டார்? ஈரானில் ஷா, பிலிபைன்சில் மார்கோஸ்.... மக்கள் புரட்சியால் விரட்டப்பட்டு நாடு நாடாக அலைந்தார்கள். எந்தவொரு மேற்குலக நாடும் அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்க முன்வரவில்லை. இன்னும் சில துரதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள் வேண்டுமா? பனாமாவில் நொரீகா, ஈராக்கில் சதாம், ஆப்கானிஸ்தானில் பின்லாடன்... இவர்கள் எல்லோரும் ஒரு காலத்தில் சி.ஐ.ஏ. யின் சம்பளப் பட்டியலில் இருந்தவர்கள். முற்காலத்தில் ஆதரித்து அரவணைத்த அதே அமெரிக்கா, பிற்காலத்தில் அவர்களை வில்லன்களாக்கியது. இந்த முன்னாள் அமெரிக்க விசுவாசிகளின் பரிதாபகரமான நிலைமை உங்களுக்கும் வர வேண்டுமா? தாராளமாக அமெரிக்காவையும், இஸ்ரேலையும் ஆதரியுங்கள்
விடுப்பு குலுமம்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum