Latest topics
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள் by prajai Today at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சூரிய வழிபாடு
2 posters
Page 1 of 1
சூரிய வழிபாடு
பாரதத்தில் சூரிய வழிபாடு இன்று நேற்று ஏற்பட்டதல்ல. ரிக்வேத காலத்துக்கும் முன்பிருந்தே இந்த வழிபாடு இருந்து வருகிறது. அசையும் பொருள்கள் அனைத்திற்கும் சூரியனே உயிர் தருகிறான் என்கின்றன, வேதங்கள்! இந்த வழிபாடு எப்படி ஏற்பட்ட என்பது பற்றி நிச்சயமாக ஒன்றும் கூறமுடியவில்லை. கி.மு..2000-க்கு முன்பே சூரியன், அக்னி, வருணன் ஆகியோரை இந்தியர்கள் வழிபட்டு வந்துள்ளனர். நம்நாடு சூரிய வெப்பம் மிகுந்த நாடு. ஆகவே, அவன் அருளைப் பெற அவனை மக்கள் வழிபட முற்பட்டதில் வியப்பில்லை. பல நோய்களை சூரிய கிரணங்கள் குணப்படுத்துவதாக அதர்வண வேதம் குறிப்பிடுகிறது. உபநிஷத்துக்களும் புராண இதிகாசங்களும் சூரியனின் புகழைப் பேசுகின்றன. பிற தெய்வங்களைப் போல் அல்லாமல் சூரியன் கண்ணெதிரே தோன்றும் தெய்வமாக விளங்குகிறான்.
சூரியன் ஒரு கோள்! கிரகம்! அதைக்கடவுளாக வழிபடலாமா என்ற சந்தேகம் ஏழலாம். வேதம் ஒன்றுதான் இந்த சந்தேகத்தைப் போக்குகிறது. வேதமே, சூரியன் கோள மயமானதுதான் என்கிறது. வேதகால ரிஷிகள், "சூரியனே தண்ணீருக்கெல்லாம் ஆத்மா' என்று குறிப்பிடுகிறார்கள். சூரியனால் உலகத்துக்கு ஏற்படும் நன்மைகளையும் வேதம் வரிசைப்படுத்திக் கூறுகிறது. வேதத்தில் காணும் உண்மைகள், நவீன விஞ்ஞான உண்மைகளுக்கு முரணாக இல்லை, சூரிய ஒளியில் நிறப்பிரிகை ஏற்பட்டால் ஏழு வண்ணமாகப் பிரிகிறத. ஏழு வண்ண ஒளியின் சேர்க்கையே சூரிய ஒளி. சூரியனுக்க ஏழு குதிரைகள் என்று வேதம் வர்ணிப்பதன் சூட்சமம் இதுவே. குதிரையை அசுவம் என்பவர். அசுவம் என்ற சொல்லுக்கு வண்ணம் என்றும் பொருளுண்டு.
பாரசீகத்தில் தங்கிவிட்ட ஆரிய குலத்தினர் சூரியனை வழிபட்டார்கள் என்றாலும், அக்னிக்குத்தான் அவர்கள் முக்கியத்துவம் கொடுத்தார்கள். இந்தியாவுக்கு வந்த ஆரியர்கள் திராவிடர்களுடன் கலந்து விக்ரக ஆராதனையை மேற்கொண்டார்கள். சூரியனை விஷ்ணுவின் அவதாரமாக இவர்கள் கொண்டார்கள்.
சூரிய வழிபாட்டினால் தோல் நோய், கண்நோய்கள் குணமாகிவிடும் என்று பாரசீகர்கள் நம்பினார்கள். பாரசீக மத குருக்களான மாகாஸ்கள், சூரிய வழிபாட்டின் மூலம் சிகிச்சை செய்யும் மருத்துவர்களாக விளங்கினர்.
பஞ்சாபை ஆண்ட மன்னன் ஒருவனுக்கு தோல் நோய் ஏற்பட்டது. அவன் மாகாஸ்களை வரவழைத்தான், நோய் குணமாகவே, இப்போது பாகிஸ்தானில் உள்ள "மூல்தான்' நகரில் அவன் சூரியனுக்காகவே ஒரு கோவில் கட்டுவித்தான். 2000 ஆண்டுகளுக்கு முன் கட்டிய இந்த ஆலயம்தான் பண்டைய இந்தியாவில் சூரியனுக்காக ஏற்பட்ட முதல் கோயில்.
இந்த ஆலயம் அவுரங்கசீப் காலத்தில் அழிவுற்றது. மூல்தானிலிருந்து சூரியவழிபாடு காஷ்மீருக்குப் பரவியது. பிரபல மன்னனான லலிதாதித்ய முக்தாபீடன் என்பவன் இங்கே சூரியனுக்கு ஒரு கோயில் கட்டினான். இந்தக்கோயில், கிரேக்க ஆலய அமைப்பில் கட்டப்பட்டது. பின்னர் வந்த இஸ்லாமிய மன்னன் சிக்கந்தர் பட்டீஸ்கான் (கி.பி. 1391-1414) இந்தக் கோயிலை இடித்து நாசமாக்கிவிட்டான்.
சூரியனுக்காகக் கட்டிய புராதானக்கோயிலில் ஒன்று ஓரிஸ்ஸாவிலுள்ள கொனார்க்கோயில். கலிங்கத்தை ஆண்ட நரசிங்கதேவன் (கி.பி.1238-64) இதைக் கட்டினான். இப்போது இந்தக்கோயிலின் ஒரு பகுதி மட்டுமே மிஞ்சியிருக்கிறது.இந்த ஆலயத்தில் உள்ள சிற்பங்கள் உலகில் வேறு எங்கும் காணக் கிடைக்காத தனி ஆலயமே இருக்கிறது. தமிழ்நாட்டில் கும்பகோணத்தை அடுத்துள்ள சூரியனார் கோயில் என்ற இடத்தில் சூரியனுக்கென்று தனி ஆலயம் இருக்கிறது.
சூரியனைப் பரம்பொருளாக "ஆதித்ய ஹிருதயம்' கூறுகிறது. மார்க்கண்டேய புராணம், பவிஷ்ய புராணம் முதலியவை சூரிய வழிபாட்டை விவரிக்கின்றன. மந்திரங்களில் மிக சக்தி வாய்ந்ததாகக் கருதப்படும் "காயத்ரி' சூரியனுக்கு உகந்த மந்திரம். "சூரிய நமஸ்காரம்' என்பது உடற்பயிற்சி யோகப் பயிற்சியுடன், கூடிய வழிபாடு. இன்று இது மேனாட்டிலும் பரவியுள்ளது. சூரிய வழிபாடு "சௌரமதம்' என்ற பெயரில் ஷண்மதங்களுள் ஒன்றாக இருந்து வந்திருக்கிறது. சௌரமதம் ஒரு காலத்தில் உலகளாவிய மதமாகவும் பரவியிருக்கிறது. ரோமில், கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் கிறிஸ்தவ மதத்தையே சௌரம் எதிர்த்து நின்றது. கி.மு. 1400-ஆம் ஆண்டுமுதலே மத்திய கிழக்கு நாடுகளிலும் அது பரவியிருந்தது. எகிப்தில் சூரியனை "ரே' அல்லது "ரா-அதுன்' என்று குறிப்பிட்டார்கள். எகிப்திய அரசர்கள் தங்கள் பெயரோடு "ரே' என்ற பெயரையும் சேர்த்துக் கொண்டார்கள்.
ஆதிகாலத்தில் சௌரமதத்தினர் சூரியனுக்கு ரத்த அர்க்கியம் கொடுத்து வழிபட்டார்கள். ஆதிசங்கரர்தான் இதை மாற்றினார்.
தை மாதம் முதல் நாள் - சூரியன் மகர ராசிக்குள்(உத்ரராயணம்) பிரவேசிக்கும் நாள் பொங்கல் பண்டிகையாக கொண்டாடப்பட்டு சூரிய வழிபாடு நடத்துகிறார்கள். கீதையில் கண்ணபிரான் "ஜ்யோதிஷம் ரவிர் சும் சுமான்' என்று கூறி, ஜ்யோதிகளில் தாம் சூரியனாக இருப்பதாகத் தெரிவிக்கிறார். அந்தக் காலத்தில் ரிஷிகள் சூரியனின் கனிந்த ஒளியிலே நாள் தவராமல் திளைத்து வந்தார்கள். சூரிய கிரணங்களை "ஜீவத்திறல்' என்றும் "ஆயுளை வளர்க்கும் அன்னம்' என்றும் போற்றினார்கள். அவர்கள் உடல், உள்ளம், உயிரில் தேவசக்தியும் தெய்வ ஒளியும் துள்ளின. சற்றும் உலகுக்கே சூத்திரமாக விளங்கும் சூரியனின் பெருமை இன்று சுருங்கிப்போய்விட்டது. என்றாலும், பொங்கல் திருநாளில் மட்டும் ஆதித்தனைப் போற்றும் பழக்கம் இன்றும் தொடர்கிறது...!
-ஆர்.சி.சம்பத்

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» சுகத்துக்கு சூரிய மூர்த்தியை வணங்கு' - எல்லா வளங்களையும் அருளும் சூரிய வழிபாடு! #Pongal
» ஏன் வேண்டும் வழிபாடு?
» குலதெய்வ வழிபாடு: பங்குன உத்திர நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வதன் நுணுக்கங்கள்
» ஆஞ்சநேயர் வழிபாடு
» நவராத்திரி வழிபாடு
» ஏன் வேண்டும் வழிபாடு?
» குலதெய்வ வழிபாடு: பங்குன உத்திர நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வதன் நுணுக்கங்கள்
» ஆஞ்சநேயர் வழிபாடு
» நவராத்திரி வழிபாடு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum