புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருப்பி அடிப்பேன்  Poll_c10திருப்பி அடிப்பேன்  Poll_m10திருப்பி அடிப்பேன்  Poll_c10 
79 Posts - 68%
heezulia
திருப்பி அடிப்பேன்  Poll_c10திருப்பி அடிப்பேன்  Poll_m10திருப்பி அடிப்பேன்  Poll_c10 
20 Posts - 17%
mohamed nizamudeen
திருப்பி அடிப்பேன்  Poll_c10திருப்பி அடிப்பேன்  Poll_m10திருப்பி அடிப்பேன்  Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
திருப்பி அடிப்பேன்  Poll_c10திருப்பி அடிப்பேன்  Poll_m10திருப்பி அடிப்பேன்  Poll_c10 
3 Posts - 3%
prajai
திருப்பி அடிப்பேன்  Poll_c10திருப்பி அடிப்பேன்  Poll_m10திருப்பி அடிப்பேன்  Poll_c10 
3 Posts - 3%
Barushree
திருப்பி அடிப்பேன்  Poll_c10திருப்பி அடிப்பேன்  Poll_m10திருப்பி அடிப்பேன்  Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
திருப்பி அடிப்பேன்  Poll_c10திருப்பி அடிப்பேன்  Poll_m10திருப்பி அடிப்பேன்  Poll_c10 
2 Posts - 2%
nahoor
திருப்பி அடிப்பேன்  Poll_c10திருப்பி அடிப்பேன்  Poll_m10திருப்பி அடிப்பேன்  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
திருப்பி அடிப்பேன்  Poll_c10திருப்பி அடிப்பேன்  Poll_m10திருப்பி அடிப்பேன்  Poll_c10 
1 Post - 1%
Tamilmozhi09
திருப்பி அடிப்பேன்  Poll_c10திருப்பி அடிப்பேன்  Poll_m10திருப்பி அடிப்பேன்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருப்பி அடிப்பேன்  Poll_c10திருப்பி அடிப்பேன்  Poll_m10திருப்பி அடிப்பேன்  Poll_c10 
133 Posts - 75%
heezulia
திருப்பி அடிப்பேன்  Poll_c10திருப்பி அடிப்பேன்  Poll_m10திருப்பி அடிப்பேன்  Poll_c10 
20 Posts - 11%
mohamed nizamudeen
திருப்பி அடிப்பேன்  Poll_c10திருப்பி அடிப்பேன்  Poll_m10திருப்பி அடிப்பேன்  Poll_c10 
8 Posts - 4%
prajai
திருப்பி அடிப்பேன்  Poll_c10திருப்பி அடிப்பேன்  Poll_m10திருப்பி அடிப்பேன்  Poll_c10 
5 Posts - 3%
ஜாஹீதாபானு
திருப்பி அடிப்பேன்  Poll_c10திருப்பி அடிப்பேன்  Poll_m10திருப்பி அடிப்பேன்  Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
திருப்பி அடிப்பேன்  Poll_c10திருப்பி அடிப்பேன்  Poll_m10திருப்பி அடிப்பேன்  Poll_c10 
3 Posts - 2%
Barushree
திருப்பி அடிப்பேன்  Poll_c10திருப்பி அடிப்பேன்  Poll_m10திருப்பி அடிப்பேன்  Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
திருப்பி அடிப்பேன்  Poll_c10திருப்பி அடிப்பேன்  Poll_m10திருப்பி அடிப்பேன்  Poll_c10 
2 Posts - 1%
Shivanya
திருப்பி அடிப்பேன்  Poll_c10திருப்பி அடிப்பேன்  Poll_m10திருப்பி அடிப்பேன்  Poll_c10 
1 Post - 1%
nahoor
திருப்பி அடிப்பேன்  Poll_c10திருப்பி அடிப்பேன்  Poll_m10திருப்பி அடிப்பேன்  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருப்பி அடிப்பேன்

கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Mon Jan 17, 2011 10:55 am

தமிழனை யார் வேண்டுமானாலும் திட்டலாம்; வெட்டலாம் என்கிற விதியை தமிழகத்தை ஆளும் தலைவர்களே உருவாக்கினார்கள் - திருப்பி அடிப்பேன்! - சீமான் பாகம் 10
[ ஞாயிற்றுக்கிழமை, 16 சனவரி 2011, 10:03.46 PM GMT +05:30 ]
காக்கைகள் மாநாட்டில் கண்டனத் தீர்மானம் பாரதியே... எப்படிப் பாடினாய் 'காக்கை குருவி எங்கள் சாதி’ என்று? எங்களில் ஒருவர் இறந்தால் ஊரே கூடி அழுவோம்...
காக்கைகள் மாநாட்டில்
கண்டனத் தீர்மானம்
பாரதியே...
எப்படிப் பாடினாய்
'காக்கை குருவி
எங்கள் சாதி’ என்று?
எங்களில்
ஒருவர் இறந்தால்
ஊரே கூடி அழுவோம்...
ஊரே இறந்துகிடந்தபோதும்
உங்களில்
ஒருவர்கூட அழவில்லையே...
இனியும்
காக்கை சாதி
எனச் சொல்லி
எங்கள் இனத்தை
களங்கப்படுத்தாதே பாரதியே...

- இது கவிதை அல்ல... ஒவ்வொரு தமிழனின் தலையிலும் காக்கைகள் இட்ட எச்சம்!

இன உணர்வும் மன உணர்வும் இற்றுப்போய்க்கிடப்பவர் களைப் பார்த்து காக்கைகள் காறித் துப்புவதில் தப்பு இல்லையே. இத்தனை மொழிகள் வாழும் என் தாய்த் திருநாட்டில் மலையாளத் தீவிரவாதி என எவனாவது மாட்டி இருக்கிறானா? ஆந்திரத் தீவிரவாதி என யாரேனும் அலறி இருக்கிறார்களா? கன்னடத் தீவிரவாதியைக் கண்டுபிடித்து இருக்கிறார்களா? மராட்டியத் தீவிரவாதியை எங்கேயாவது தேடி இருக்கிறார்களா? மொழிவாரியாய் வேறு எங்கேயும் இல்லாத தீவிரவாதிகள் 'தமிழ்த் தீவிரவாதிகளாக’ இந்தத் தாய் மண்ணில் மட்டும் தேடப்படுகிறார்களே... மொழிக்காகப் போராடுபவர்களைத் தீவிரவாதிகளாக இட்டுக்​கட்டும் துயரங்களை வேறு எங்கேயாவது பார்க்க முடியுமா தோழர்களே?

தனித்த பெருமைகளைத் தடுப்பதற்காகவே 'இந்தியன்’ என்கிற கட்டுக்குள் எங்களைக் கட்டிய புத்திமான்களே... எங்கள் இனத் துயரத்துக்கு மலையாள மண் என்றைக்​காவது மனம் வருந்தி இருக்கிறதா? ஆந்திர தேசம் என்றைக்​காவது எங்களுக்காக அழுது இருக்கிறதா? கர்நாடகம் என்றைக்காவது எங்களுக்காகக் கதறி இருக்கிறதா? என் மீது விழுந்த அடி எவனுக்குமே வலிக்கவில்லை. சக மனிதனாகக்கூட என் கவலை​யில் நீங்கள் கலந்துகொள்ளவில்லை என்றால் எதற்கடா எங்களுக்கு இந்தியன் என்கிற அடையாளம்?

ஈழமே இறந்து கிடந்தபோதும் ஒரு நாள் துக்கம் அனுசரிக்​காத தமிழகம், ஆந்திரத்தின் முதல்வர் ராஜசேகர ரெட்டி விமான விபத்தில் மறைந்தபோது, பக்கத்து மாநிலம் எனப் பதறி ஒரு நாள் அரசு விடு​முறையை அறிவித்ததே... அது தவறு என எந்தத் தமிழனாவது தடுத்தானா?

தமிழ்த் தேசிய உணர்வுக்குள் எங்களைத் தள்ளிவிட்டதே நீங்கள்தானே... மலேசியாவில் தமிழர்கள் துரத்தப்பட்டபோது, அங்கே இருந்த மலையாளிக்கோ, தெலுங்கருக்கோ வலிக்கவில்லை. காவிரிக்காக கருணை காட்டாதவர்கள் - முல்லை பெரியாறு விவகாரத்தில் முறுக்கிக்​ கொண்டு நிற்பவர்கள் - ஒகேனக்​கல் விவகாரத்தில் எங்களை ஒதுக்கி​வைப்ப​​வர்கள் - பாலாறு விவகாரத்தில் கோளாறு​கொள்பவர்கள் 'இந்தியர்’ என்கிற அடையாளத்தில் மட்டும் நம்மோடு இணைவது சாத்​தியமா தமிழர்களே? இதைச் சொன்னால் இன வெறி... இறையாண்மை மீறல்... தேசிய பாதுகாப்புக்குப் பங்கம்... தேசிய ஒருமைப்பாட்டுக்குக் குந்தகம்!

மராட்டிய மண்ணில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவன் பேருந்து ஒன்றைக் கடத்துகிறான். மராட்டியக் காவலர்கள் அவனைச் சுட்டு வீழ்த்துகிறார்கள். அடுத்த கணமே கட்சி வேறுபாடுகளை தூக்கி வீசிவிட்டு, பீகார் முதல்வர் நிதீஷ் குமாரும், லல்லு பிரசாத் யாதவும், ராம் விலாஸ் பஸ்வானும், 'எங்கள் மாநிலத்​தானை எப்படிச் சுடலாம்?’ என மராட்டிய மண்ணையே உலுக்கினார்களே... தீவிரவாதச் செயல் செய்த ஒருவன் கொலையானதற்கே, அந்த மாநிலத் தலைவர்கள் குலைநடுங்கக் கொதித்தார்களே... ஆனால், கொத்துக் கொத்தாய் ஆயிரமாயிரம் தமிழர்கள் செத்து வீழ்ந்தபோதும் இந்தத் தாய்த் தமிழகம் கொதிக்கவில்லையே அய்யா? நிதீஷ் குமாரும் லல்லுவும் கொதித்தால்... அது இன உணர்வு. நான் கொதித்தால் மட்டும் இன வெறியா?

எப்போதுமே காங்கிரஸின் எதிரி... அதோடு, பாரதிய ஜனதா கட்சியை மட்டுமே நிலையான கூட்டாகக் கொண்டவர் மராட்டிய மண்ணின் தலைவர் பால் தாக்கரே. குடியரசுத் தலைவர் பதவிக்கு காங்கிரஸும் பாரதிய ஜனதா கட்சியும் வேட்பாளர்களை அறிவித்தபோது, அவர் ஆதரித்தது காங்கிரஸ் வேட்பாளரைத்தான். காரணம், அம்மையார் பிரதீபா பாட்டீல் மராட்டிய மண்ணுக்குச் சொந்தக்காரர். 'மண்ணுக்குப் பிறகுதான் மற்றதெல்லாம்’ என்று நினைத்த பால் தாக்கரே எங்கே... 'கூட்டணிக்குப் பிறகுதான் குடிமக்கள்’ என்று நினைக்கும் நம் தலைவர்கள் எங்கே?

'எங்கள் மீனவனை அடித்தால், சிங்கள மாணவனை அடிப்பேன்!’ எனச் சொன்னதற்காக தேசியப் பாதுகாப்புச் சட்டத்தைப் பாய்ச்சி, ஐந்து மாதங்கள் என்னை சிறையில் அடைத்தவர்களிடம் கேட்கிறேன். ராமர் பாலம் விவகாரத்தின்போது, 'கருணாநிதியின் தலையை வெட்டுவேன்’ என வேதாந்திரி சாமியார் வெறிக் கூச்சல் போட்டாரே... 'தமிழகத்தின் முதல்​வரை வெட்டுவேன் எனச் சொல்வது தேசியப் பாதுகாப்புக்குப் பங்கமாகிவிடாதா?’ என அந்தச்சாமி​யாரை யாருமே கேட்காதது ஏனய்யா? அடிப்பேன் என்றதற்காக என்னை அடைத்தவர்கள், வெட்டுவேன் என்றவரை விட்டுவிட்டார்களே... தமிழனை யார் வேண்டுமானாலும் திட்டலாம்; யார் வேண்டுமானாலும் வெட்டலாம் என்கிற விதியை தமிழகத்தை ஆளும் தலைவர்களே உருவாக்கிவிட்டதுதான் சொரணையைச் சுண்டும் துயரம்!

நாகசாகி நச்சு எங்களின் தலைமுறையைத் தாக்கியது. சோமாலியாவின் பசி எங்களின் வயிற்றை எரித்தது. அமெரிக்க இரட்டைக் கோபுரத் தகர்ப்பு எங்களை அலறவைத்தது. ஆப்கானின் துயரம் எங்களின் அடிமடியை நொறுக்கியது. ஈராக்கில் விழுந்த இழவு எங்களில் ஈரக்​குலையை நடுக்கியது. சதாம் உசேனின் தூக்குக் கயிறு எங்கள் குரல்வளையையும் இறுக்கியது. பெனாசிர் பூட்டோவின் முடிவு எங்களையும் பேதலிக்கவைத்தது. உடலில் எங்கே அடிபட்டாலும் கண் அழுவதைப்போல, இந்த உலகத்தில் எங்கே துயரம் நிகழ்ந்தாலும் என் மண் அழுதது. ஆனால், என் மண் அழுதபோது, அதற்காக உலகில் எவருடைய கண் அழுதது? எல்லாவற்றுக்காகவும் அழும் எங்களைப் பார்த்து, எதற்காகவும் அழாதவர்கள் 'இன வெறி’ என்கிறீர்களே... இது வரலாற்று வஞ்சனையாக இல்லையா?

பந்தங்களுக்காகப் பதறுவதையும், சொந்தங்​களுக்காகத் துடிப்பதையும் இன வெறி எனப் பரப்புகிறார்களே... இதில் இருக்கும் மறைமுக அடக்குமுறையை படித்த தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால், அவர்களில் சிலரேகூட இணையதளத்தில் 'இன வெறி​யன்’ என எனக்கு அடையாளம் ஏவுகிறார்கள். இணையத்தில் 'சீமான்’ என்கிற வார்த்தையை வைத்து விளையாடப்படும் விமர்சனங்களைப் படிக்கையில், சினம் வருவதற்குப் பதிலாக சிரிப்புத்தான் வருகிறது.

பிச்சை எடுத்துக்கொண்டு இருந்த ஒருவனிடம், 'உனக்கு ஒரு கோடி ரூபாய் பணம் கிடைத்​தால் என்ன செய்வாய்?’ எனக் கேட்டார்களாம். 'தங்கத்தில் திருவோடு செய்து சிங்கப்பூருக்குப் போய் பிச்சை எடுப்பேன்!’ எனச் சொன்னானாம் அவன். விஞ்ஞானம் என்னும் வரப் பிரசாதத்தை நம் இளைய தலைமுறையும் அப்படித்தான் பயன்படுத்துகிறது. வீட்டுத் திண்ணைகளில் அமர்ந்து வெட்டி வாதங்கள் பேசிய காலம் கரையேறிவிட்டது என நினைத்தால்... இன்றைக்கு இணையத்தில் உட்கார்ந்து 'அவன் அப்படி... இவன் இப்படி’ எனச் சொல்கிற அளவுக்கு வெட்டிக்கூட்டம் விசாலமாகிவிட்டது. அன்பிற்கினிய இணையதளப் புரட்சியாளர்களே... நீங்கள் காறித் துப்ப நினைத்தாலும் களத்துக்கு வந்து நின்று துப்புங்கள்!

அதையும் தாண்டி இந்த அரசாங்கத்தைப்​போலவே, இன்னமும் என்னை இன வெறியன் என்றே நீங்கள் உருவகப்படுத்தினால், அதனை பெருமை பொங்க ஏற்றுக்கொள்கிறேன். நல்ல தமிழ்த் தாய்க்கும் நல்ல தமிழ்த் தகப்பனுக்கும் நான் பிறந்திருக்கிறேன் என்பதை 'இன வெறியன்’ என்கிற வார்த்தை மூலமாக உறுதி செய்து கொடுத்தமைக்கு நன்றி!

திருப்பி அடிப்பேன் - தொடரும்

venkateshr
venkateshr
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 27
இணைந்தது : 17/11/2010

Postvenkateshr Mon Jan 17, 2011 11:08 am

எங்கே போகிறது தமிழினம் குறிப்பாக தமிழ் நாட்டின் இளஞர்கள் தமிழர் திருநாள் அறுவடை திருநாள் தமிழ் புத்தாண்டு தின நாட்களில் ஏழை முதல் மேட்டுக்குடி வரை குடித்து சீரழிய டாஸ்மாக் முதல் ஸ்டார் ஹோட்டல் பார் என திருந்து வைத்து ஆட்சி நடத்தும் காட்சிகள் ஆள்வோர் எதிர்க்கட்சிகள் எங்கே கொண்டு செல்கிறது தமிழ் இனத்தை ? எங்கு திரும்பினாலும் மது கடைகள் பாலியல் வன்முறை நெறைந்த சினிமா 24 மணி நேரமும் டி‌வி முன் சீரியல் பார்க்க காத்திருக்கும் கூட்டம் ஜாதி மாதம் கடந்து தமிழ் மக்களுக்காக உழைக்க சிந்திக்க திருத்த யார் உண்டு ? சீமானே நீயாவது ஒட்டுக்காகவோ இன்னா பிற வசதிக்காகவோ தடம் மாறாமல் தமிழனை கரை சேர்ப்பாயா ? 1 நாளில் நடக்காது இந்த மாற்றம் பொறுமையுடன் முயன்றாள் தமிழன் தமிழனாய் திருத்தலாம் சில ஆண்டுகளில்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Jan 17, 2011 12:54 pm

ஏம்ப்பா இப்படி ஒரு கேள்வியா சீமான பார்த்து கேட்டு இருக்கீங்க?
தமிழனை காப்பாத்த தான் அவர் ஜெயலலிதா என்ற புரட்சி பெண்மணியோட சேர்ந்து இருக்கார்.தமிழகத்த ஒரு வழிக்கு கொண்டு வந்துடுவார் சீமான் கவலை படாதீங்க.அவர் சும்மா வாய் பேச்சு பேசி அரசியலுக்கு வந்துடலாம் என்று எண்ணி இப்பதான் ஆரம்பிச்சு இருக்கார்.

திருப்பி அடிப்பேன்  Uதிருப்பி அடிப்பேன்  Dதிருப்பி அடிப்பேன்  Aதிருப்பி அடிப்பேன்  Yதிருப்பி அடிப்பேன்  Aதிருப்பி அடிப்பேன்  Sதிருப்பி அடிப்பேன்  Uதிருப்பி அடிப்பேன்  Dதிருப்பி அடிப்பேன்  Hதிருப்பி அடிப்பேன்  A
வெங்கட்
வெங்கட்
பண்பாளர்

பதிவுகள் : 147
இணைந்தது : 05/01/2011

Postவெங்கட் Mon Jan 17, 2011 1:01 pm

என்னங்க இது, அடிப்பேன் உதைப்பேன்னுகிட்டு!!

இது சரியான வழிதானா???

சீனி.வெங்கட்
**************************
தோல்விகள்தாம் வெற்றிக்கு வழிகாட்டும் விளக்குத்தூண்கள்.
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Jan 17, 2011 1:26 pm

பொறுத்திருந்து பார்ப்போம் சீமான் என்னதான் செய்ய்யபோகிறார் என்று

avatar
Guest
Guest

PostGuest Mon Jan 17, 2011 1:54 pm

உதயசுதா wrote:ஏம்ப்பா இப்படி ஒரு கேள்வியா சீமான பார்த்து கேட்டு இருக்கீங்க?
தமிழனை காப்பாத்த தான் அவர் ஜெயலலிதா என்ற புரட்சி பெண்மணியோட சேர்ந்து இருக்கார்.தமிழகத்த ஒரு வழிக்கு கொண்டு வந்துடுவார் சீமான் கவலை படாதீங்க.அவர் சும்மா வாய் பேச்சு பேசி அரசியலுக்கு வந்துடலாம் என்று எண்ணி இப்பதான் ஆரம்பிச்சு இருக்கார்.

வீட்டுத் திண்ணைகளில் அமர்ந்து வெட்டி வாதங்கள் பேசிய காலம் கரையேறிவிட்டது என நினைத்தால்... இன்றைக்கு இணையத்தில் உட்கார்ந்து 'அவன் அப்படி... இவன் இப்படி’ எனச் சொல்கிற அளவுக்கு வெட்டிக்கூட்டம் விசாலமாகிவிட்டது. அன்பிற்கினிய இணையதளப் புரட்சியாளர்களே... நீங்கள் காறித் துப்ப நினைத்தாலும் களத்துக்கு வந்து நின்று துப்புங்கள்!

அதையும் தாண்டி இந்த அரசாங்கத்தைப்​போலவே, இன்னமும் என்னை இன வெறியன் என்றே நீங்கள் உருவகப்படுத்தினால், அதனை பெருமை பொங்க ஏற்றுக்கொள்கிறேன். நல்ல தமிழ்த் தாய்க்கும் நல்ல தமிழ்த் தகப்பனுக்கும் நான் பிறந்திருக்கிறேன் என்பதை 'இன வெறியன்’ என்கிற வார்த்தை மூலமாக உறுதி செய்து கொடுத்தமைக்கு நன்றி!

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Jan 17, 2011 2:46 pm

மதன்கார்த்திக் wrote:

இதுக்கும் சேர்த்து நான் முதல்வரின் கவனத்திற்கு என்ற பதிவில் பதில் சொல்லி இருக்கேன்.ஏன் எதற்கு என்று கேட்காதா மந்தைகள் கூட்டம் இருக்கும் வரை
எவன் வேணுமின்னாலும் தமிழக அரசியலில் புகுந்து விளையாடலாம்

திருப்பி அடிப்பேன்  Uதிருப்பி அடிப்பேன்  Dதிருப்பி அடிப்பேன்  Aதிருப்பி அடிப்பேன்  Yதிருப்பி அடிப்பேன்  Aதிருப்பி அடிப்பேன்  Sதிருப்பி அடிப்பேன்  Uதிருப்பி அடிப்பேன்  Dதிருப்பி அடிப்பேன்  Hதிருப்பி அடிப்பேன்  A
avatar
Guest
Guest

PostGuest Mon Jan 17, 2011 3:58 pm

உதயசுதா wrote:
மதன்கார்த்திக் wrote:
உதயசுதா wrote:ஏம்ப்பா இப்படி ஒரு கேள்வியா சீமான பார்த்து கேட்டு இருக்கீங்க?
தமிழனை காப்பாத்த தான் அவர் ஜெயலலிதா என்ற புரட்சி பெண்மணியோட சேர்ந்து இருக்கார்.தமிழகத்த ஒரு வழிக்கு கொண்டு வந்துடுவார் சீமான் கவலை படாதீங்க.அவர் சும்மா வாய் பேச்சு பேசி அரசியலுக்கு வந்துடலாம் என்று எண்ணி இப்பதான் ஆரம்பிச்சு இருக்கார்.

வீட்டுத் திண்ணைகளில் அமர்ந்து வெட்டி வாதங்கள் பேசிய காலம் கரையேறிவிட்டது என நினைத்தால்... இன்றைக்கு இணையத்தில் உட்கார்ந்து 'அவன் அப்படி... இவன் இப்படி’ எனச் சொல்கிற அளவுக்கு வெட்டிக்கூட்டம் விசாலமாகிவிட்டது. அன்பிற்கினிய இணையதளப் புரட்சியாளர்களே... நீங்கள் காறித் துப்ப நினைத்தாலும் களத்துக்கு வந்து நின்று துப்புங்கள்!

அதையும் தாண்டி இந்த அரசாங்கத்தைப்​போலவே, இன்னமும் என்னை இன வெறியன் என்றே நீங்கள் உருவகப்படுத்தினால், அதனை பெருமை பொங்க ஏற்றுக்கொள்கிறேன். நல்ல தமிழ்த் தாய்க்கும் நல்ல தமிழ்த் தகப்பனுக்கும் நான் பிறந்திருக்கிறேன் என்பதை 'இன வெறியன்’ என்கிற வார்த்தை மூலமாக உறுதி செய்து கொடுத்தமைக்கு நன்றி!
இதுக்கும் சேர்த்து நான் முதல்வரின் கவனத்திற்கு என்ற பதிவில் பதில் சொல்லி இருக்கேன்.ஏன் எதற்கு என்று கேட்காதா மந்தைகள் கூட்டம் இருக்கும் வரை
எவன் வேணுமின்னாலும் தமிழக அரசியலில் புகுந்து விளையாடலாம்

சரி ungal வழியெலே நானும் வருகிறேன்.... இன்று வரை எனக்கு ஈழ விவகாரம் தெரியவில்லை என்று வைது கொள்ளுங்கள் .... இனிமேல் நான் ஈழ விவரகரதின் ஆதி முதல் அந்தம் வரை தெரிந்து கொள்கிறேன்..... அவராகளிக்க போராட veethiku வந்தேன் என்றால்... என்னை என்ன சொல்வீர்கள் amma...... பணம் ,புகழ் கு ஆசைபடுகிறான் என்றா.... போலுது போகவில்லை என்றா.....

இப்படியே பேசி பேசி தான் பேசுபவர்கள் வாயை அடைதீர்கள்....

சரி இதற்கு மேல் நான் பேசினால் உங்களுக்கு புரிய போவதில்லை....

போராட யார் வந்தாலும் எதயாவது சொல்லி தடுக்கும் பாங்கு நாம் ரததிலே ஊறி இருக்கிறது.....

சரி யாரைதான் numbu வீர்கள்..... நான் புதிதாக போராட வந்தால் எனக்கு என்அ பேர் இடுவீர்கள்.....

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Jan 17, 2011 9:07 pm

நண்பர் மதன்கார்த்திக் உங்கள் ஆதங்கம் எனக்கு புரிகிறது. ஆனால் என்ன செய்ய தமிழனுக்கு மொழிபற்று, இனபற்று இவையெல்லம் மற்ற மொழிகாரனைவிட மிக குறைவாகவே உள்ளது. ஆனால் அதற்க்காக அனைவரையும் அவ்வாறு நினைத்து விட முடியாது.உங்களை போன்ற என்னை போன்ற நண்பர்கள் மற்றவர்களிடம் இதைபற்றி விவாதிக்கும் பொழுது நமக்கு மிச்சமாவது என்னவோ ஏமாற்றமும் வருத்தமும் தான்.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக