புதிய பதிவுகள்
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue 21 May 2024 - 21:54

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue 21 May 2024 - 0:51

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53

» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:36

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:29

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon 20 May 2024 - 11:30

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon 20 May 2024 - 0:32

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:37

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:27

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun 19 May 2024 - 15:25

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:51

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:50

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:45

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இன்று பொங்கல் திருநாள்: தலைவர்கள் வாழ்த்து  Poll_c10இன்று பொங்கல் திருநாள்: தலைவர்கள் வாழ்த்து  Poll_m10இன்று பொங்கல் திருநாள்: தலைவர்கள் வாழ்த்து  Poll_c10 
54 Posts - 47%
ayyasamy ram
இன்று பொங்கல் திருநாள்: தலைவர்கள் வாழ்த்து  Poll_c10இன்று பொங்கல் திருநாள்: தலைவர்கள் வாழ்த்து  Poll_m10இன்று பொங்கல் திருநாள்: தலைவர்கள் வாழ்த்து  Poll_c10 
50 Posts - 43%
T.N.Balasubramanian
இன்று பொங்கல் திருநாள்: தலைவர்கள் வாழ்த்து  Poll_c10இன்று பொங்கல் திருநாள்: தலைவர்கள் வாழ்த்து  Poll_m10இன்று பொங்கல் திருநாள்: தலைவர்கள் வாழ்த்து  Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
இன்று பொங்கல் திருநாள்: தலைவர்கள் வாழ்த்து  Poll_c10இன்று பொங்கல் திருநாள்: தலைவர்கள் வாழ்த்து  Poll_m10இன்று பொங்கல் திருநாள்: தலைவர்கள் வாழ்த்து  Poll_c10 
3 Posts - 3%
சண்முகம்.ப
இன்று பொங்கல் திருநாள்: தலைவர்கள் வாழ்த்து  Poll_c10இன்று பொங்கல் திருநாள்: தலைவர்கள் வாழ்த்து  Poll_m10இன்று பொங்கல் திருநாள்: தலைவர்கள் வாழ்த்து  Poll_c10 
1 Post - 1%
Guna.D
இன்று பொங்கல் திருநாள்: தலைவர்கள் வாழ்த்து  Poll_c10இன்று பொங்கல் திருநாள்: தலைவர்கள் வாழ்த்து  Poll_m10இன்று பொங்கல் திருநாள்: தலைவர்கள் வாழ்த்து  Poll_c10 
1 Post - 1%
Shivanya
இன்று பொங்கல் திருநாள்: தலைவர்கள் வாழ்த்து  Poll_c10இன்று பொங்கல் திருநாள்: தலைவர்கள் வாழ்த்து  Poll_m10இன்று பொங்கல் திருநாள்: தலைவர்கள் வாழ்த்து  Poll_c10 
1 Post - 1%
prajai
இன்று பொங்கல் திருநாள்: தலைவர்கள் வாழ்த்து  Poll_c10இன்று பொங்கல் திருநாள்: தலைவர்கள் வாழ்த்து  Poll_m10இன்று பொங்கல் திருநாள்: தலைவர்கள் வாழ்த்து  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இன்று பொங்கல் திருநாள்: தலைவர்கள் வாழ்த்து  Poll_c10இன்று பொங்கல் திருநாள்: தலைவர்கள் வாழ்த்து  Poll_m10இன்று பொங்கல் திருநாள்: தலைவர்கள் வாழ்த்து  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இன்று பொங்கல் திருநாள்: தலைவர்கள் வாழ்த்து  Poll_c10இன்று பொங்கல் திருநாள்: தலைவர்கள் வாழ்த்து  Poll_m10இன்று பொங்கல் திருநாள்: தலைவர்கள் வாழ்த்து  Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
இன்று பொங்கல் திருநாள்: தலைவர்கள் வாழ்த்து  Poll_c10இன்று பொங்கல் திருநாள்: தலைவர்கள் வாழ்த்து  Poll_m10இன்று பொங்கல் திருநாள்: தலைவர்கள் வாழ்த்து  Poll_c10 
190 Posts - 38%
mohamed nizamudeen
இன்று பொங்கல் திருநாள்: தலைவர்கள் வாழ்த்து  Poll_c10இன்று பொங்கல் திருநாள்: தலைவர்கள் வாழ்த்து  Poll_m10இன்று பொங்கல் திருநாள்: தலைவர்கள் வாழ்த்து  Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
இன்று பொங்கல் திருநாள்: தலைவர்கள் வாழ்த்து  Poll_c10இன்று பொங்கல் திருநாள்: தலைவர்கள் வாழ்த்து  Poll_m10இன்று பொங்கல் திருநாள்: தலைவர்கள் வாழ்த்து  Poll_c10 
12 Posts - 2%
prajai
இன்று பொங்கல் திருநாள்: தலைவர்கள் வாழ்த்து  Poll_c10இன்று பொங்கல் திருநாள்: தலைவர்கள் வாழ்த்து  Poll_m10இன்று பொங்கல் திருநாள்: தலைவர்கள் வாழ்த்து  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
இன்று பொங்கல் திருநாள்: தலைவர்கள் வாழ்த்து  Poll_c10இன்று பொங்கல் திருநாள்: தலைவர்கள் வாழ்த்து  Poll_m10இன்று பொங்கல் திருநாள்: தலைவர்கள் வாழ்த்து  Poll_c10 
9 Posts - 2%
jairam
இன்று பொங்கல் திருநாள்: தலைவர்கள் வாழ்த்து  Poll_c10இன்று பொங்கல் திருநாள்: தலைவர்கள் வாழ்த்து  Poll_m10இன்று பொங்கல் திருநாள்: தலைவர்கள் வாழ்த்து  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இன்று பொங்கல் திருநாள்: தலைவர்கள் வாழ்த்து  Poll_c10இன்று பொங்கல் திருநாள்: தலைவர்கள் வாழ்த்து  Poll_m10இன்று பொங்கல் திருநாள்: தலைவர்கள் வாழ்த்து  Poll_c10 
4 Posts - 1%
Jenila
இன்று பொங்கல் திருநாள்: தலைவர்கள் வாழ்த்து  Poll_c10இன்று பொங்கல் திருநாள்: தலைவர்கள் வாழ்த்து  Poll_m10இன்று பொங்கல் திருநாள்: தலைவர்கள் வாழ்த்து  Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
இன்று பொங்கல் திருநாள்: தலைவர்கள் வாழ்த்து  Poll_c10இன்று பொங்கல் திருநாள்: தலைவர்கள் வாழ்த்து  Poll_m10இன்று பொங்கல் திருநாள்: தலைவர்கள் வாழ்த்து  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று பொங்கல் திருநாள்: தலைவர்கள் வாழ்த்து


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 15 Jan 2011 - 17:12

மக்கள் நலம்பெற பாடுபடும் இந்த அரசு வரும் ஆண்டுகளிலும் தொடரும் கருணாநிதி பொங்கல் வாழ்த்து செய்தி

மக்கள் நலம்பெற பாடுபடும் இந்த அரசு வரும் ஆண்டுகளிலும் தொடரும் என்று முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.

தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதி விடுக்கும் தமிழ்ப் புத்தாண்டு - பொங்கல் திருநாள் வாழ்த்துச் செய்தி வருமாறு:-

ஏழை விவசாயி

உலகெங்கும் தமிழ்ச்சமுதாயத்தின் தனித்தன்மையை எடுத்துக்காட்டும் திருநாள் பொங்கல் நன்னாள்! இந்நாளில் தமிழ்ப்புத்தாண்டுத் திருநாளையும் இணைத்துக் கொண்டாடும் அருமைத் தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த நல்வாழ்த்துகளை உரித்தாக்கி மகிழ்கிறேன்.

பொங்கல் திருநாள் அறுவடைத் திருநாள்! உழுது பயிரிட்டு வளர்த்துப் பாதுகாத்து, அறுவடை செய்து அனைவரும் வயிறார உண்ண உணவு தருபவன் ஏழை விவசாயி! அந்த வவிசாயிகளின் வாழ்வு செழித்திட கடந்த ஆண்டுகளைவிட இந்த ஆண்டில் கூடுதல் மழைபொழிந்து இந்த ஆட்சிக்குப் பெருமை சேர்த்துள்ளது இயற்கை!

தனி பல்கலைக்கழகம்

இயற்கையோடு இணைந்து விவசாயிகள் வளம்பெற 7000 கோடி ரூபாய்க் கடன் தள்ளுபடி! வட்டியில்லாப் பயிர்க்கடன்! பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் 50 விழுக்காடு காப்பீட்டுத் தொகை! விவசாயத் தொழிலாளர் நலவாரியத்தின் மூலம் நலத்திட்ட உதவிகளுடன் கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் பயன்கள்! நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களுக்கு இலவச நிலம்! தலவரி, தலமேல்வரி, தண்ணீர் தீர்வை ரத்து! வெகுவாகக் குறைத்து பெயரளவுக்கு மட்டுமே நிலவரி, நெல் கொள்முதல் விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூபாய் 1100! கரும்புவிலை டன் ஒன்றுக்கு ரூபாய் 2 ஆயிரம்!

இரண்டரை லட்சம் பம்ப் செட்டுகளுக்குப் புதிதாக இலவச மின்சார இணைப்பு! பழைய பம்ப் செட் மோட்டார்களுக்குப் பதிலாகப் புதிய மோட்டார்கள்! பனை, தென்னை விவசாயிகள் நலன் கருதி பனைமரத் தொழிலாளர் நல வாரியம்! தென்னை விவசாயிகள் நல வாரியம்! பனை நுங்குச் சாறும், தென்னை இளநீரும் பக்குவப்படுத்தப்பட்டுத் தயாரிக்கப்படும் சுவைநீரை விற்பனை செய்வதற்கான ஏற்பாடு! கொப்பரை தயாரித்திட தேங்காய் கொள்முதல்! சத்துணவுத் திட்டத்தில் தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துதல்! - எனக் கடந்த நான்கரை ஆண்டுகளாக இந்த அரசு அளித்து வரும் சலுகைத் திட்டங்களோடு; வேளாண்மை செழித்திட அன்று தனிப்பல்கலைக்கழகம் கண்டதுடன் இன்று தோட்டக் கலைத்துறை வளர்ச்சிக்கும் தனிப் பல்கலைக்கழகம்!

பொங்கல் நல்வாழ்த்து

இப்படி, உழவர் சமுதாயத்தின் நலன்களுக்கு ஆற்றிவரும் அரும்பணிகளோடு அமைப்புசாராத் தொழிலாளர் குடும்பங்கள் பயனடைய பல நலவாரியங்கள்! கலைஞர் காப்பீட்டுத்திட்டம்! அவசர மருத்துவ ஊர்தி 108 இலவசச் சேவைத் திட்டம்! ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி! இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள்! தமிழகத்தில் குடிசைகளே இல்லாத கிராமங்கள், குடிசைப் பகுதிகளே இல்லாத நகரங்கள் காண கலைஞர் வீடு வழங்கும் திட்டம்! படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்புகள் பெற பயிற்சிகளோடு இணைந்த வேலைவாய்ப்புத் திட்டம்! - எனப் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி, எல்லாப் பிரிவு மக்களும் நலம்பெற பாடுபடும் இந்த அரசின் பணிகள் மக்களின் பேராதரவுடன் வரும் ஆண்டுகளிலும் தொடரும் எனும் நம்பிக்கையோடு அருமைத் தமிழக மக்களுக்கு எனது புத்தாண்டு - பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை மீண்டும் தெரிவித்து மகிழ்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஜெயலலிதா

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

அறுவடைத் திருநாளாம் பொங்கல் திருநாளை உவகையுடன் கொண்டாட இருக்கும் எனதருமைத் தமிழக மக்கள் அனைவருக்கும் எனது இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

உழைப்பை அறுவடை செய்து, செல்வம் வீட்டுக்கு வந்து சேர்ந்ததும், பலன் பெறக் காரணமாக இருந்த இயற்கைக்கும், கால்நடைகளுக்கும் நன்றி நவிலும் விழா பொங்கல் பெருவிழா. சாதி மத வேறுபாடு இன்றி தமிழர் என்கிற ஒரு குடையின் கீழ் அனைவராலும் கொண்டாடப்படும் விழா தமிழர் திருவிழாவான பொங்கல்.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். தமிழரின் தன்மானம் தனித் தன்மையோடு திகழ, தமிழர் தம் வாழ்வில் வளம் பெற்றிட, மக்களாட்சி மலர, தமிழர் திருநாளாம் தைத் திருநாள் வழி வகுக்க வேண்டும் என்று தெரிவித்து, உங்கள் அனைவரது இல்லங்களிலும் அன்பும், அமைதியும், செல்வமும், மகிழ்வும் பால்போல் பொங்கி வழிய வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஜி.கே.வாசன்

மத்திய மந்திரி ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

நாட்டில் நிலவளமும், நீர்வளமும் பெருகட்டும் இயற்கையும், இறைவனும் அதற்குத் துணை நிற்கட்டும். குறிப்பாகத் தமிழ் மக்கள் எல்லா நலனும், வளமும் பெற்றுப் பெரு வாழ்வு வாழட்டும். வளமான தமிழகமும், வலிமையான பாரதமும் கண்டிட தைத் திருநாளாம் பொங்கல் திருநாளில் அனைவருக்கும் என் மனம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

டாக்டர் ராமதாஸ்


பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் நீண்ட காலமாக பொங்கல் பண்டிகை என்று தமிழர்கள் கொண்டாடி வந்திருக்கிறார்கள். இப்போது தமிழர் புத்தாண்டு பிறந்தநாள் - பொங்கல் பண்டிகை என்று கொண்டாடப்படுகிறது. உலகமெங்கும் வாழ்கின்ற 10 கோடி தமிழர்களும் இந்தத் திருநாளை தங்கள் வீட்டுத் திருவிழாவாக கொண்டாடி வருகிறார்கள். இந்த இனிய நாளில் தமிழ் நெஞ்சங்கள் அனைவருக்கும் எனது தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கே.வி.தங்கபாலு


தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது-

வேளாண்மை வளர்ச்சிக்கும், வேளாண் தொழிலாளர்களின் மேம்பாட்டிற்கும் இன்றைக்கு சோனியாகதாந்தியின் வழிகாட்டுதலில், பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான மத்திய அரசு ஆற்றிவரும் வரலாறு போற்றும் சாதனைகளால் வரப்பெற்ற பலன்கள் தமிழகமெங்கும் எதிரொலிக்கட்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

வைகோ

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

தமிழர் வாழ்வில் கார் இருளாகச் சூழ்ந்திருக்கும் வறுமைப் பிணிகள் அகன்று, விவசாயிகளின் வாழ்வில் தொடர்ந்து வரும் துயரங்கள் நீங்கி, நிலவளம் செழித்தோங்கிட - நீர்வளம் பாதுகாக்கப்படும் நிலைமை ஏற்பட வேண்டும் எனில் புத்தாட்சி மலர்ந்திட வேண்டும்.

இந்த பொங்கல் விழா, தமிழர்தம் வாழ்வில் வளம் குவிக்கும் ஆண்டுக்கு வழிகாட்டும் விழாவாக மலரும் என்ற நம்பிக்கையுடன் தமிழ்ப் பெருமக்களுக்கு ம.தி.மு.க. சார்பில் எனது இனிய பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஆர்.எம்.வீரப்பன்


எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தைப் பொறுத்தவரையில் மக்கள் நலனே முக்கியம் என்று கருணாநிதி செயல்பட்டு வருகிறார். வருகிற ஆண்டு பொதுத் தேர்தல் வரப் போகிறது. முதல்வர் தேர்தலைக் பற்றிக் கவலைப்படாமல் மக்களின் தேவையே முக்கியம் என்று செயல்படுகிறார்.

மக்கள் தான் இந்த ஆட்சியை மாற்றும் உரிமை யாருக்கும் கிடையாது என்று உறுதியுடன் உள்ளார்கள். இந்த மகிழ்ச்சியான நினைவுடன் புத்தாண்டு பிறந்தநாள் கொண்டாடும் தமிழ் மக்களுக்கு இதயங்கனிந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சரத்குமார்

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

விவசாயம் தழைக்கவும், விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்து அவர்கள் நல்வாழ்வு வாழவும் அதற்கான திட்டங்களை தொடர்ந்து மத்திய - மாநில அரசுகள் நிறைவேற்றி செயல்படுத்திட சமத்துவ மக்கள் கட்சி தொடர்ந்து குரல் கொடுக்கும். மீண்டும் ஒரு பசுமை புரட்சிக்கு வித்திடும் நன்னாளாக இத்திருநாளில் அனைவரும் உறுதியேற்போம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

திருமாவளவன்


விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

ஈழ விடுதலை, தமிழக உரிமைகள் உள்ளிட்ட தமிழினத்திற்கான அனைத்து அரசியல் உரிமைகளையும் வென்றெடுக்கும் நாளே தமிழினம் உவகைப் பொங்கக் கொண்டாடும் பெருநாளாக அமையும். அந்த நம்பிக்கையோடு உலகத் தமிழர்கள் அனைவருக்கும் தைப் பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கி.வீரமணி

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

மலரும் தமிழர்தம் இப்புத்தாண்டு, தமிழ் இனம் இலங்கை - ஈழத்தில் - முள்வேலிக்குள் இன்னமும் அவதியுறும் அவலத்தையும், தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கொல்லப்படும் கொடுமைகளையும் போக்கி, தமிழர் இனம் தன்மானம் தழைத்தோங்கி வாழ்ந்திட, தனித் தமிழர் ஆட்சி அமைந்திடும் ஆண்டாக அமையட்டும்.

திராவிடர்தம் திருநாளில் அனைவருக்கும் எமது புத்தாண்டு பொங்கல் வாழ்த்துக்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தா.பாண்டியன்

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

பொங்கல் திருநாள் சாதி, மத, சம்பிரதாயங்களைக் கடந்து, தமிழர்களை ஒருங்கிணைக்கும் நாளாகக் கொண்டாடப்படுகிறது.

எனவே திருநாட்களில், இதுவே உரிய திருநாள் அறிவுக்கு உகந்த விழா.

பயிரிட்டு வளர்க்கும் போது களைகளை அகற்றி, பயிரைமட்டும் வளரவிடுவது போல், சமுதாயத்திலும் களைகளை அகற்றி, நற்பயிர்களை வளர்ப்போம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஜி.ராமகிருஷ்ணன்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

பூமிப்பரப்பின் பல்வேறு பகுதிகளில் வாழும் தமிழ் பெருங்குடி மக்கள் அனைவருக்கும் மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு கட்சி சார்பில் இதயம் கனிந்த பொங்கல் திருநாள் மற்றும் தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

பொங்கல் திருநாள் என்பதே ஒற்றுமையின் வெளிப்பாடாகும். மதவெறி, சாதிவெறி சக்திகளை முறியடித்து, மதச்சார்பின்மை, மக்கள் ஒற்றுமையை உயர்த்திப்பிடிக்க உறுதியேற்கும் நாளாக இப்பொங்கல் திருநாள் அமையட்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

டி.ராஜேந்தர்

லட்சிய தி.மு.க. தலைவர் டி.ராஜேந்தர் வெளியிட்டுள்ள கவிதை வடிவிலான வாழ்த்து செய்தியில், ``தை திங்கள் பிறக்கட்டும். தமிழர் வாழ்வில் வழி திறக்கட்டும். பொங்கலோ பொங்கல் என்று பூத்துக்குலுங்க பொங்கட்டும். புத்துணர்வும், புதுமைகளும் தமிழர் வாழ்வில் வந்து தங்கட்டும். சர்க்கரை பொங்கலாய் இனிக்கட்டும். சமதர்மமும், சந்தோஷமும் செழிக்கட்டும். இயற்கை வளங்களும், இனிவரும் காலங்களும், தமிழர்களுக்கு கரம் கொடுக்கட்டும்'' என கூறியுள்ளார்.

திருநாவுக்கரசர்

முன்னாள் மத்திய மந்திரி சு.திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

எல்லைக் கோடுகள் அனைத்தையும் கடந்த, எல்லையில்லா மகிழ்வு தரும் இவ்வினிய நற் பொங்கல் நாளில் மக்கள் அனைவரும் வளமும், நலமும் பெற்று உளம் நிறைந்த மகிழ்வோடு வாழ்க என, உவகைப் பெருக்கோடு உளமாற வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



இதேபோல், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழக நிறுவன தலைவர் டாக்டர் ந.சேதுராமன், நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ. எச்.வசந்தகுமார், நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், இந்திய ஹஜ் கமிட்டி துணை தலைவர் பிரசிடெண்ட் அபுபக்கர், இந்து சமய வளர்ச்சி பேரவை பொது செயலாளர் மு.ராமச்சந்திரன், தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் எஸ்.ஷேக் தாவூத், தலித் மக்கள் முன்னணி மாநில தலைவர் குமரி அருண், தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் சேம.நாராயணன், அம்பேத்கர் மக்கள் கட்சி நிறுவன தலைவர் ம.மத்தியாஸ் என்ற சீனிவாசன், அம்பேத்கர் மக்கள் முன்னணி நிறுவனர் கோ.வைரபாண்டியன், கிறிஸ்தவ முன்னேற்ற கழக தலைவர் எஸ்.ஜோசப் பெர்னாண்டோ.

அனைத்து செட்டியார்கள் முன்னேற்ற பேரவை மாநில தலைவர் கே.சி.அருணாசலம், சமத்துவ பாரதம் கட்சியின் பொதுச் செயலாளர் க.மோகன்ராஜ், வன்னியர் மக்கள் இயக்கம் தலைவர் ராம.அறிவழகன், ராமசாமி படையாச்சியார் வாழப்பாடியார் பேரவை தலைவர் வி.தேவதாஸ், விடுதலை விரும்பிகள் கட்சி தலைவர் பெ.செங்கோடன், அம்பேத்கர் முன்னணி கழகம் மற்றும் சென்னை துறைமுக தொழிலாளர்கள் சங்க பொதுச் செயலாளர் திண்டிவனம் ஸ்ரீராமுலு, ராஜீவ்காந்தி - வாழப்பாடி ராமமூர்த்தி நல அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ராம.சுகந்தன், வன்னியர் பேரவை தலைவர் வே.மு.பல்லவ மோகன், ஐக்கிய ஜனதாதளம் பொதுச் செயலாளர் டி.ராஜகோபால், தமிழ்நாடு அண்ணா கட்டிட கட்டுமான அமைப்புசாரா தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் பி.வி.ராஜேந்திரன், சுன்னத் ஜமா அத் ஐக்கிய பேரவை பொதுச் செயலாளர் மேலை நாசர், இந்து இயக்கங்களின் கூட்டமைப்பு மாநில அமைப்பு செயலாளர் விநாயகர் வி.முரளி ஆகியோரும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.



இன்று பொங்கல் திருநாள்: தலைவர்கள் வாழ்த்து  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக