புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சவாலுக்குத் தயாரா...  வாக்கெடுப்பு...முடிவடைந்தது..! Poll_c10சவாலுக்குத் தயாரா...  வாக்கெடுப்பு...முடிவடைந்தது..! Poll_m10சவாலுக்குத் தயாரா...  வாக்கெடுப்பு...முடிவடைந்தது..! Poll_c10 
156 Posts - 79%
heezulia
சவாலுக்குத் தயாரா...  வாக்கெடுப்பு...முடிவடைந்தது..! Poll_c10சவாலுக்குத் தயாரா...  வாக்கெடுப்பு...முடிவடைந்தது..! Poll_m10சவாலுக்குத் தயாரா...  வாக்கெடுப்பு...முடிவடைந்தது..! Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
சவாலுக்குத் தயாரா...  வாக்கெடுப்பு...முடிவடைந்தது..! Poll_c10சவாலுக்குத் தயாரா...  வாக்கெடுப்பு...முடிவடைந்தது..! Poll_m10சவாலுக்குத் தயாரா...  வாக்கெடுப்பு...முடிவடைந்தது..! Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
சவாலுக்குத் தயாரா...  வாக்கெடுப்பு...முடிவடைந்தது..! Poll_c10சவாலுக்குத் தயாரா...  வாக்கெடுப்பு...முடிவடைந்தது..! Poll_m10சவாலுக்குத் தயாரா...  வாக்கெடுப்பு...முடிவடைந்தது..! Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
சவாலுக்குத் தயாரா...  வாக்கெடுப்பு...முடிவடைந்தது..! Poll_c10சவாலுக்குத் தயாரா...  வாக்கெடுப்பு...முடிவடைந்தது..! Poll_m10சவாலுக்குத் தயாரா...  வாக்கெடுப்பு...முடிவடைந்தது..! Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
சவாலுக்குத் தயாரா...  வாக்கெடுப்பு...முடிவடைந்தது..! Poll_c10சவாலுக்குத் தயாரா...  வாக்கெடுப்பு...முடிவடைந்தது..! Poll_m10சவாலுக்குத் தயாரா...  வாக்கெடுப்பு...முடிவடைந்தது..! Poll_c10 
3 Posts - 2%
prajai
சவாலுக்குத் தயாரா...  வாக்கெடுப்பு...முடிவடைந்தது..! Poll_c10சவாலுக்குத் தயாரா...  வாக்கெடுப்பு...முடிவடைந்தது..! Poll_m10சவாலுக்குத் தயாரா...  வாக்கெடுப்பு...முடிவடைந்தது..! Poll_c10 
1 Post - 1%
Pampu
சவாலுக்குத் தயாரா...  வாக்கெடுப்பு...முடிவடைந்தது..! Poll_c10சவாலுக்குத் தயாரா...  வாக்கெடுப்பு...முடிவடைந்தது..! Poll_m10சவாலுக்குத் தயாரா...  வாக்கெடுப்பு...முடிவடைந்தது..! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
சவாலுக்குத் தயாரா...  வாக்கெடுப்பு...முடிவடைந்தது..! Poll_c10சவாலுக்குத் தயாரா...  வாக்கெடுப்பு...முடிவடைந்தது..! Poll_m10சவாலுக்குத் தயாரா...  வாக்கெடுப்பு...முடிவடைந்தது..! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சவாலுக்குத் தயாரா...  வாக்கெடுப்பு...முடிவடைந்தது..! Poll_c10சவாலுக்குத் தயாரா...  வாக்கெடுப்பு...முடிவடைந்தது..! Poll_m10சவாலுக்குத் தயாரா...  வாக்கெடுப்பு...முடிவடைந்தது..! Poll_c10 
321 Posts - 78%
heezulia
சவாலுக்குத் தயாரா...  வாக்கெடுப்பு...முடிவடைந்தது..! Poll_c10சவாலுக்குத் தயாரா...  வாக்கெடுப்பு...முடிவடைந்தது..! Poll_m10சவாலுக்குத் தயாரா...  வாக்கெடுப்பு...முடிவடைந்தது..! Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
சவாலுக்குத் தயாரா...  வாக்கெடுப்பு...முடிவடைந்தது..! Poll_c10சவாலுக்குத் தயாரா...  வாக்கெடுப்பு...முடிவடைந்தது..! Poll_m10சவாலுக்குத் தயாரா...  வாக்கெடுப்பு...முடிவடைந்தது..! Poll_c10 
14 Posts - 3%

8 Posts - 2%
prajai
சவாலுக்குத் தயாரா...  வாக்கெடுப்பு...முடிவடைந்தது..! Poll_c10சவாலுக்குத் தயாரா...  வாக்கெடுப்பு...முடிவடைந்தது..! Poll_m10சவாலுக்குத் தயாரா...  வாக்கெடுப்பு...முடிவடைந்தது..! Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
சவாலுக்குத் தயாரா...  வாக்கெடுப்பு...முடிவடைந்தது..! Poll_c10சவாலுக்குத் தயாரா...  வாக்கெடுப்பு...முடிவடைந்தது..! Poll_m10சவாலுக்குத் தயாரா...  வாக்கெடுப்பு...முடிவடைந்தது..! Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
சவாலுக்குத் தயாரா...  வாக்கெடுப்பு...முடிவடைந்தது..! Poll_c10சவாலுக்குத் தயாரா...  வாக்கெடுப்பு...முடிவடைந்தது..! Poll_m10சவாலுக்குத் தயாரா...  வாக்கெடுப்பு...முடிவடைந்தது..! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
சவாலுக்குத் தயாரா...  வாக்கெடுப்பு...முடிவடைந்தது..! Poll_c10சவாலுக்குத் தயாரா...  வாக்கெடுப்பு...முடிவடைந்தது..! Poll_m10சவாலுக்குத் தயாரா...  வாக்கெடுப்பு...முடிவடைந்தது..! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
சவாலுக்குத் தயாரா...  வாக்கெடுப்பு...முடிவடைந்தது..! Poll_c10சவாலுக்குத் தயாரா...  வாக்கெடுப்பு...முடிவடைந்தது..! Poll_m10சவாலுக்குத் தயாரா...  வாக்கெடுப்பு...முடிவடைந்தது..! Poll_c10 
3 Posts - 1%
Barushree
சவாலுக்குத் தயாரா...  வாக்கெடுப்பு...முடிவடைந்தது..! Poll_c10சவாலுக்குத் தயாரா...  வாக்கெடுப்பு...முடிவடைந்தது..! Poll_m10சவாலுக்குத் தயாரா...  வாக்கெடுப்பு...முடிவடைந்தது..! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சவாலுக்குத் தயாரா... வாக்கெடுப்பு...முடிவடைந்தது..!

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

உங்களைக் கவர்ந்த கவிதை எது...? [39Vote ]

  • கவிதை எண் : 1

    1026%
  • கவிதை எண் : 2

    410%
  • கவிதை எண் : 3

    00%
  • கவிதை எண் : 4

    00%
  • கவிதை எண் : 5

    1846%
  • கவிதை எண் : 6

    38%
  • கவிதை எண் : 7

    25%
  • கவிதை எண் : 8

    13%
  • கவிதை எண் : 9

    00%
  • கவிதை எண் : 10

    12%
  • கவிதை எண் : 11

    00%

You are not connected. Please login or register

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Dec 30, 2010 10:46 pm

இந்த மூன்றாம் பருவத்தில் கலந்துகொண்ட கவிஞர் பெருமக்களுக்கு என் அன்பான நன்றிகளை உரித்தாக்குகிறேன்..,!

‘’ புத்தாண்டே .. புதுவரவே... ‘’ என்னும் தலைப்பில் வந்த கவிதைகளை வரிசைப்படுத்துகிறேன்..!

இவற்றில் உங்களை மிகவும் கவர்ந்த கவிதை ஒன்றை தேர்ந்தெடுத்து வாக்கிடவும்..!

அனைவரும் தவறாது வாக்கிடுமாறு வேண்டிக்கொள்கிறேன்..!

நன்றி வணக்கம்..!

கவிதை எண் : 1.

மு.வித்யாசன் wrote:புழுதி படிந்த நமது கலாச்சாரம் - இந்த
புத்தாண்டில் புத்தாடை அணியட்டும்;
பழுதடைந்த நமது பண்பாடு - இன்றோடு
பாரதத்தில் புதையுண்டு அழியட்டும் !

சுருங்கி கிடக்கும் நமது உள்ளம் - இனி
பரந்து இருக்கும் வானம் ஆகட்டும்;
கிழிந்துபோன பழைய தேதியாக - நம்மில்
சாதிகள் ஒழிந்து போகட்டும் !

பதுக்கி வைத்திருக்கும் பணங்களை எல்லாம்
ஏழைக்கு பகிர்தளிக்க முடிவெடுப்போம்;
ஒதுக்கி வைக்கும் இன, மதங்களை யாவும்
குப்பையில் பெருக்கி தள்ள தோள்கொடுப்போம் !

அறிவியல் வளர்ச்சி, அழிவுக்கு வழி விடுவதை
புது முயற்சிகள் மூலம் முறியடிப்போம்;
அமுதும் ஏங்கும் தமிழை இன்னும்
அதிகம் கவிதை எழுதி அழகாய் விதைப்போம் !

வானம் முட்டி உடையும் அளவு
மனித நேயம் எட்டி வளரட்டும்;
கானக் குயில்களின் இன்னிசை மட்டும்
நம் காதுகளை துளைக்கட்டும் !

கடந்த காலம் துன்பங்கள் யாவும்
இறந்த காலம் ஆகட்டும்;
இனி கடக்கப்போகும் ஒவ்வொரு கணமும்
நமக்குள் புது சக்திகள் பிறக்கட்டும் !

இருட்டு எனும் அழுக்கு வேட்டி - (இன்றோடு)
வானம் விட்டு கிழியட்டும்;
வெளுப்பு எனும் ஆடை கட்டி - (புதிய)
கிழக்கு முட்டி முளைக்கட்டும் !

கவிதை எண் : 2.

kirikasan wrote:
புத்தாண்டே புதுவரவே

புத்தாண்டே புதுவரவே புன்னகைத்து வாராயோ
புவியாண்டுபலகோடி நன்மைகளைத் தாராயோ
பத்தோடு ஒன்றாக பாவங்கள் தாராமல்
பழிநீங்கி இனம்தழைக்க புதுவாழ்வு தருவாயோ

நித்தமும் அழுதழுது நெஞ்சும்கனத்ததடி
நீநடந்து நிலமாண்டால் நீதிவழி திறக்காதோ
புத்தாண்டு மகளே புதுவரவே வந்திங்கு
பொய்யா துறுதியுடன் பேசியெமைக் காக்காயோ

சத்தியமே வந்துவிடு சாகுமினம் பிழைக்க
நித்தியமாய் புவியிலொரு நேர்மைவழிகாண
உத்தமி நீ வாராயேல் உண்மைஇறந்ததென
வைத்திடுவேன் தமிழை வாழ்வில்கவி வேண்டியதோ

மூசிப்பனிஅடிக்க முன்னிலவு எரித்தஎன்
தேசத் திருநாட்டில்தென்றல் குளிரெடுத்து
வீசி உடல் சிலிர்க்கும் வேளையிலே ஓரோரம்
வாசித்த கவி எழுதி வைத்தேன் அதன்பின்.....!

வீட்டின் வடக்கே வெளிவாசல் திண்ணையிலே
நீட்டிக் கிடந்தேன் நான், நீள பெருங்குரலில்
கூட்டிக் கிணுகிணென கொசு அலையும்சங்கீதம்
வாட்டி உயிரெடுக்க வரும்தூக்கம் கலைந்தவனாய்

தேகம் திருப்ப அத் திசைதனிலேநேர் எதிரே
தோகை ஒருத்தியெழில் துள்ளுமிள மயிலழகாள்
மேகக்குளிர் நிலவின் மின்னலிடும் புன்னகையும்
ஆக வடிவெடுத்தே அருகினில் நின்றிருந்தாள்

கண்கள் பார்த்தவளின் களங்கமிலா முகம்நோக்கி
பெண்ணே யார்நீயோ பேய்உலவும் நடுச்சாமம்
எண்ணாதொருஇருளில் எழுந்த விதமென்ன
மண்ணில் உன்பாத மழுந்தியதோ ஐயமென்றேன்

சிரித்தாளாம் சித்திரமோ சில்லறையை கொட்டியதாய்
பிரித்த இதழிருந்து பிறந்தசங் கீதமெனும்
விரித்த நகைகண்டு வெள்ளிமலர்க் கால்பார்த்து
சரி(த்)தான் பேயல்ல தமிழ் மகளே என்றுணர்ந்தேன்

பட்டுப்போல் கேசங்கள் பழுத்த நிலவொளியில்
கட்டிகுளிர் வெண்ணையது கசிந்து வழிவதென
திட்டாய் ஒளிமின்னித் தேகம் சிலிர்க்க வைக்க
மொட்டாய் உடன்மலர்ந்த மோகினியோ பேசவர

தூரத்தில் பெண்ணொருத்தி துடித்துக் கதறுமொலி
ஊரை கலக்கியவா றொலித்த ததைக்கேட்டு
வீரத்தை உலுக்கிவிட விறைத்துப் பீதியெழ
யாருக்குஎன்னது யாரன அவள் கேட்டாள்

பேசமுன் நின்றன் பேரென்ன சொல்லாயோ
நீசரசு ஆளுகையில் நேரும் துயரங்களை
கூசும்கதைகூறக் கோடியுகம் ஓடிவிடும்
வாசலிலே வந்தவளுன் வண்ண முரைத்திடுவாய்

மீண்டும் புன்னகைத்து மெல்லியதாய் கண்பார்த்து
ஆண்டொன்றுபோக அடுத்தவளின் புதுவரவாய்
வேண்டிஉன்வீடுவர விரும்பாதவன்போல
நீண்ட கதை படித்தாய் நின்னைநான் என்னவென்பேன்

சொன்னவளைப் பார்த்தேன் சுடரெனும் கன்னமதும்
மின்னும் ஒளிமுகமும் மெய்யென்று கூறவொரு
கன்னியை காணுவதிக் காலத்தில் நிகழ்வதுண்டோ
என்னவோ பெண்ணா நீ இருப்பது தெளிவடையேன்

நட்டநடு நிசியில் நடந்தேகால் பத்திரண்டு
தட்டிமணியடிக்க தரணியிலே படர்பவளே
சொட்டு நிமிடமுதல் சுந்தரி என்வீடுவந்து
தட்டியதேன் என்னத் தமிழ்கவி உன்பாட்டென்றால்

பத்தவள் போகவொரு பதினொன்று நீவந்து
இத்தரை மீதினிலே என்ன சுகம் காண்போமோ
செத்ததும் போயிருக்க சுடுகாடு நோக்கி நடை
வைத்தநிலை வழிபாத்து வருந்தி கிடக்கின்றோம்

புத்தாண்டு என்ன புதுவருடம் தானென்ன?
முத்தான மொழிஎல்லாம் ஒப்பாரிக்காமென்றேன்
எத்தகைய துன்பமென இவளறிவாள் நானாளும்
புத்தாண்டில் இல்லாமல் போமென்றாள்: சொல்லி

முடிக்கமுதல் மீண்டு மோர் அவலக் குரலெழுந்து
துடிக்கும்பெண் குரலாய் தொலைவிலே கேட்டிருக்க
அடித்து வதை செய்யும் ஆட்களின் கோரமது
வடிக்க மனம் ரத்தம் வழிந்தோட வாழ்கின்றோம்

என்னபிறவி கொண்டோம் இருந்தும் வீர்மதைத்
தின்று விழுங்கிவிட்டுத் தெரியாமல் கிடக்கின்றோம்
என்றுமுடிக்க முன் எழும் சத்தம் வீதியிலே
நின்று நடந்தோடும் நிழல்கூடத் தென்படவே

வந்துவிட்டான்ஆமி வளைந்து தலையை ஒளி
எந்தவிதி யுன்னை இங்கு அனுப்பியதோ
சுந்தரமாய் காணுகிறாய் சுற்றியவன் கண்டாலோ
உந்தன் கதி ஐயோ உள்ளம் துடிக்கிறதே!

என்றே கூறக்கணம் எமைநோக்கி ஒருபகைவன்
முன்வாசல் வழிகாண முடிந்தோம் ஓடென்றேன்
தேனாய் சிரிப்பொன்றைத் திங்கள் ஒளித்தங்கை
தான்செய்து அஞ்சாதே தலைபோகா தெனைநீயும்

யாரென்று கொண்டாய் ஞாலத்தை ஆளவரும்
போருக்கும் தலைவி இப்பூவுலகின் ஆட்டமெலாம்
நேருக்குநேர் நின்று நிகழ்வெல்லாம் சீராக்கி
பாருக்கு வழிகாட்ட பணிகொண்டு வந்தவளாம்

சொல்ல அவள் முகத்தை சிறு குழந்தையாய் நோக்கி
வல்ல மொழிபேசி வந்தாள் உன் தங்கையும்பார்
வெல்லவந்தேன் என்றாள் விடியுமுன் போகின்றாள்
நல்ல கதைபேச்சு நானிலமோ வேறென்றேன்

கொல்லும் பகைவர்முன் கோரப்பேய் ஆளுலகில்
நல்லவரின் நீதிவழி நடப்பவர்க்கு வாழ்வுஇல்லை
வல்லவளே உன்னாலே வரும் துன்பம் என்னையும்தான்
இல்லையென ஆக்கிவிடும் இறப்பதிவன் நீயில்லை

வா இன்னும் பார்த்துவிட வழியில் பலதிருக்கும்
போவதற்குஇன்னும் பொழுதுண்டு பன்னிரண்டு
ஆவதுவரைதானும் அழிவுகளைக் கண்டொருக்கால்
பூவது உன்னுள்ளம் புரிந்திடுமோ வாஎன்றேன்

கண்டே இருள்மறைந்து கையில் உயிர்பிடித்து
கொண்டே அவளுடனே குலைநடுங்க ஓடுகிறோம்
தண்டும் தடி இலைகள் தடக்க ஒருசத்தமெழச்
செண்டும் பூமரமும் சிதைய நம்காலடியில்

எந்ததிசையிருந்து இடிமுழங்கி குண்டுவரும்
வந்து எனதுயிரை வாரி எடுத்தேகும்
சிந்தனையில் அச்சம் செறிந்தோட காலடியில்
அந்தோ உயிரற்ற ஐந்தாறு உடலங்களாம்

குற்றுயிராய் ஒன்று குரல் இன்றிக் கதறுவதும்
மற்றுயிரோ மரணிக்க மரத்தவாய் நீர்கேட்கும்
அற்று உயிர்போயும் அலங்கோலமாய் கிடந்த
சுற்றங்களைக் கடந்து சுழன்றே ஒடுகிறோம்

பெருஞ்சத்தம்போட்டு பேரிடியாய் கதறும் படை
உருண்டோடும் வண்டியதில் ஒளிவெள்ளம் தவிர்க்கஎன
அருகே ஒருவீட்டின் அமைதியிலே ஆழ்ந்தநிலை
திறந்தே கதவிருக்க தெரியாமல் உட்சென்றோம்

அய்யோஎன் சொல்வேன் அழகியதோர் பெண்மகளாம்
செய்யாத கோரங்கள் செய்தே உயிரழித்து
மெய்யில் குருதிகளும் மேனிச் சிதைத்தழித்து
வெய்யோர் பிணமாக்கி விட்டுவைத்து சென்றனரே

புதுவருடபெண்ணோ பேச்சறியா திகைத்திட்டாள்
இதுவும் பூவிமீதில் இருப்பதுவோ என்பதுபோல்
மதுவிழிகள் நீர்சுரக்க மனது வெறித்தவளாய்
எதுபேச என்றெண்ணா எழுந்து வெளிநடந்தாள்

பன்னிரண்டு மணியடித்து பாரில் ஒலியெழுப்ப
என்னுடைய நேரமிது ஏங்காதே உலகமதின்
சின்னதொரு வருடம் செயலாற்ற வந்தேனாம்
உந்தன் இனமழியும் உண்மைதனை நானறிந்தேன்

புலரும் புதுவருடம் புத்தாண்டு மட்டுமல்ல
நிலவும் பகைநீங்கி நிம்மதியை தருமாண்டு
பலதும்தீயவைகள் பழிநீங்கி நலம்காக்க
மலரும் வாழ்வுக்காய் மனம்கொண்டுழைத்திடுவேன்

போகும்பிணி தமிழன் புதுவாழ்வு கொள்ளவென
ஆகுமெனக் கூறி அஞ்சாதே என்றிட்டாள்
வேகமுடன் அவளோ விழிநோக்கி நான்காண
தேகமெடுத்தவளோ தென்றலிலே கரைந்திட்டாள்

முழுதாய் வியாபித்து மேதினில் பரவியவள்
அழுதவிழி துடைக்க அழியுமினம் காத்திடவே
பொழுதாமிவ் வாண்டு போதியன செய்வாளோ
எழுதும் விதியென்று எங்கள்திசை மறப்பாளோ!

கவிதை எண் : 3.

Ganesh1 wrote:புதுமை தரும் புத்தாண்டே வருக
எதிலும் ஏற்ற நிலை புகுத்தி
உழைப்பைப் போற்றியே உயரும் உணர்வுக்கு
பிழையற்ற பேறைத் தருக !

உருக் குலைக்கும் ஊழல் ஒழிந்து
பெருமை சேர்க்கும் பொன்னான தொரு
இனிமை பயக்கும் பன்னிரு திங்களாய்
முன்னேற்றப் பாதைகாட்டு வாய்.

அளவான மழையை அமுதமாய்ப் படைத்து
வளமான வாழ்வை மண்ணோர் களிப்பொடு,
களைப்பின்றி இன்பமுடன், நலமுடன், நாட்டமொடு
நாளையும் எமதாய்மாற்று வாயே.

கவிதை எண் : 4.

Tamizhmuhil wrote:புத்தாண்டே.....புது வரவே....

கடந்த கால அனுபவங்களை ஆசானாக்கி
நிகழ் காலத்தில் - மனதில் துணிவை
உறுதுணையாய்க் கொண்டு
தன்னம்பிக்கை மிகக்கொண்டு
வெற்றிச் சிகரங்களை எட்ட
வரவேற்போம்......புத்தாண்டை!!!

போர் மறந்து ...ஆயுதம் மறந்து ...
அன்பினை கைக்கொண்டு
மனித நேயம் மனதிற் கொண்டு
ஏற்றத் தாழ்வுகள் மறைந்து
உலக ஒற்றுமை என்றும் ஓங்க
வரவேற்போம்..... புத்தாண்டை!!!

இல்லாமை இருளகற்ற ..
ஈகை விளக்கேற்றி
உயர்வு தாழ்வு மறந்து
உதவி புரியும் மனங்கொண்டு
இதயத்தில் அன்பு மிகக்கொண்டு
வரவேற்போம்......புத்தாண்டை!!!

கல்லாமை அழித்தொழித்து
அறிவு ஒளியேற்ற
கற்று அறிந்தோரெல்லாம்...
கற்றறிந்ததன் பயன்-
"உலகிற்கு எழுத்தறிவித்தல்" என்று சபதமேற்று
வரவேற்போம்......புத்தாண்டை!!!

புதுவரவாய் இருக்கும்
புத்தாண்டு பல நன்மைகள் தர ...
உள்ளத்து எண்ணங்களை
நிறைவற்ற .....வரவேற்போம்....
புத்தாண்டே.....புது வரவே....
வருக !!! வருக !!!
அனைவரது வாழ்விலும்
வசந்தங்கள் பல தருக!!!

கவிதை எண் : 5.

ஹாசிம் wrote:ஈராயிரத்துப்பத்து வருடங்கள்
ஒரு நொடியில் கடந்ததுபோல்
புத்தம் புதியதுவாய்
மலர்வதோடு மறைகின்றாய்

உன்னுள் அகப்பட்ட
உயிர்களின் அலறல்களும்
சீற்றங்களில் சிதறிய
மனிதர்களின் ஆசைகளும்
அங்காங்கே ஒலிக்கிறதே..

முடித்தாய் பல ஆயுட்களை
ஏற்றினாய் பல ஆட்சிகளை
வீழ்த்தினாய் பல வீரர்களை
வென்றிருக்கிறாய் பல இன்னல்களை

கடந்தவைகளோடு மறந்து
மறைந்தவைகளோடு அகன்று
விலக்கல்கள் தவிரந்து
வாழ்ந்திட வழிசெய்யாயோ.
.

புத்தாணேட உன் புதுவரவோடு
உலகெங்கும் சமாதானம் நிலைத்திடவேண்டும்
சகோதரத்துவப்பாசம் ஓங்க வேண்டும்
சமத்துவ ஆட்சி நிலவ வேண்டும்

பிரிவுகளற்ற உறவுகள் வேண்டும்
பிணிகளற்ற தேகம் வேண்டும்
மனிதனை மதிக்கும் மனிதம் வேண்டும்
மதங்களை நேசிக்கும் மனிதன் வேண்டும்

பொய்மைகளற்ற அன்புகள் வேண்டும்
ஏக்கங்களற்ற வாழ்வும் வேண்டும்
உதவும் கரங்கள் உதவிட வேண்டும்
உயிரை உயிராய் மதித்தல் வேண்டும்

உந்தன் அழகான மலர்வில்
புதுமைகளதிகம் படைத்துவிடு
தொடர்ந்தும் புரட்சிகளோடு பயணித்துவிடு
உலகை ஆண்ட ஒரு வருடமாய்ப் பிறந்து
மனங்களில் என்றும் நிலைத்துவிடு

கவிதை எண் : 6.

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:சவாலுக்குத் தயாரா...  வாக்கெடுப்பு...முடிவடைந்தது..! Vannimugam

புத்தாண்டு பிறக்கட்டும்...
புன்னகைப் பூக்கள் பூக்கட்டும்..
புதுவரவாய் நாம் ஏங்கிய
தமிழீழம் மலரட்டும்..

ரத்தச்சகதி கலந்த மண்ணில்
புத்தமெனும் பூக்கள் பூக்கட்டும்..
மனிதச்சதைகள் தின்ற மண்ணில்
மனிதநேயம் மீண்டும் வளரட்டும்.

முடங்கிப்போன எங்கள் இனத்தின்
முதுகெலும்புகள் இனி நிமிரட்டும்..
முகத்திரை அகலட்டும்..எங்கள்
அகத்திரையில் மகிழ்ச்சி பரவட்டும்..

அமைதிப்போர் நடக்கட்டும்.-நம்
அன்பின் வலிமை வெல்லட்டும்..
அதில்..ஆளுகின்ற கூட்டத்தின்
ஆணிவேர் அழுகட்டும்..அழியட்டும்.

மீண்டும் ஓர் யுத்தம்.கொண்டு
மீதமுள்ள சந்ததியை புதைத்திடாமல்.
புத்த வேதம் கையில் கொண்டு
புது உலகம் படைத்திடுவோம்..

எல்லோர்க்கும் எல்லா ஆண்டும்
இனியதாக அமையட்டும்..எங்களுக்கு
இந்த வருடமாவது தமிழீழ சுதந்திரம்.-ஒரு
சாவில்லாமல் கிடைக்கட்டும்-இது வரை
சாய்ந்தவர்களுக்கு அது
மனச்சாந்தி அமைதியும் தரட்டும்.

கவிதை எண் :7.

அமுத வர்ஷிணி wrote:புத்தாண்டே ...புதுவரவே..!

கடைக்கண் பார்வையில்
இகபரசுகம் தாங்கி

வல்லமை மிகுதியுடன்

அபயமளிக்கும் ஆதிலட்சுமியவள்

அபயமென்று வருவோர்க்கு

அபயமளிக்கக் காத்திருக்கும் புத்தாண்டே..!

ஜடா மகுடத்துடன்

சுகுமாறனை ஏந்தி

பூரண கும்பத்துடன்

சௌபாக்கியமளிக்கும் சந்தானலட்சுமியவள்

சகலசௌகர்யமும்வேண்டி வருவோர்க்கு

சௌபாக்கியமளிக்கக் காத்திருக்கும் புத்தாண்டே..!

கரங்கள் நான்கினில்

ஞானமுத்திரை தாங்கி

வெண்பட்டுப் புடைவையுடன்

அரசபோகமளிக்கும் கஜலக்ஷ்மியவள்

அரசபோகம்நாடி வருவோர்க்கு

யோகம்பலவுமளிக்கக் காத்திருக்கும் புத்தாண்டே..!

எண் கரங்களில்

சங்குசக்கரம் தாங்கி

தங்க மணிமகுடத்துடன்

வேண்டும்வரமளிக்கும் தனலக்ஷ்மியவள்

பொருள்வேண்டி வருவோர்க்கு

வேண்டும்வரமளிக்கக் காத்திருக்கும் புத்தாண்டே..!

எண் கரங்களில்

சூலம்கபாலம் ஏந்தி

எட்டுக்கைகளிலும் வெற்றியுடன்

நிர்க்கதியைப்போக்கும் வீரலக்ஷ்மியவள்

நற்கதிவேண்டி வருவோர்க்கு

வேண்டும்நலங்களளிக்கக் காத்திருக்கும் புத்தாண்டே..

இடக் கரத்தினில்

செழுங்கரும்பை ஏந்தி

ஆற்றோர எழிலழகுடன்

நிலவளமளிக்கும் தான்யலக்ஷ்மியவள்

நிலவளம்வேண்டி வருவோர்க்கு

வேண்டும்வளமளிக்கக் காத்திருக்கும் புத்தாண்டே..!

அழகிய முகந்தன்னில்

தாய்ப்பாசந்தனை ஏந்தி

இராஜலங்கார வடிவுடன்

துயரம்போக்கும் விஜயலக்ஷ்மியவள்

இன்பம்வேண்டி வருவோர்க்கு

வேண்டுமின்பமளிக்கக் காத்திருக்கும் புத்தாண்டே..!

நான்கு கரங்களில்

அழகியமலர் தாங்கி

கண்கவர் பொன்மேனியுடன்

வறுமைபோக்கும் மகாலக்ஷ்மியவள்

அறம்பொருள்வீடுபேறுவேண்டி வருவோர்க்கு

வேண்டும்வீடுபேறளிக்கக் காத்திருக்கும் புத்தாண்டே..!

மூவுலகைல் இருப்போர்க்கும்

சந்ததியுடன் தனம்கொடுத்து

கலைகளில்வெற்றி தந்து

சகலசௌபாக்கியமும் வீரத்துடனருளி

அக்ஷ்டலக்ஷ்மியாம் உன்னாமம்சொல்வோர்க்கு

மோட்சத்துடன் முக்தியளிக்கக் காத்திருக்கும் புத்தாண்டே...நீ புதுவரவே...!

கவிதை எண் : 8.

மகாலிங்கம் wrote:வருடங்கள் வருகிறது வழக்கமாக
வாழ்க்கை மட்டும் அப்படியே எங்கள் ஈழதமிழருக்கு

நம்பிக்கையோடுதான் எழுகிறோம் வருடத்தின் முதல் நாளில்
உறவில் ஒருவரோ இல்லை இருவரோ தொலைந்துபோய் முடிகிறது வருடத்தின் கடைசிநாளில்

மனதை, மனிதரை இதமாக்கும் வருடமும் வருமா
எங்கள் வாழ்வும் வளமும் பெருகுமா

சுயநல கூட்டத்தால் தொலைந்துபோன எங்கள் வாழ்வை மீட்டுதர வருமா ஒரு புதிய வருடம்

நம்பிக்கை குறையவில்லை

காத்து இருக்கிறோம் கண்களில் கனவோடு
நெஞ்சில் உரமோடும்
நேர்மை திரமோடும்
புத்தாண்டே வருக
புது வாழ்வு தருக

கவிதை எண் :9.

அமுத வர்ஷிணி wrote:புத்தாண்டே...!புதுவரவே...!

தாய்சொல் தட்டிடாமல்
தந்தைசொல் மீறிடாமல்
பெற்றவர்களுக்கோர் பாரமில்லாமல்
விரும்பி மணந்தவனுடன்
ஊரறிய சுற்றம்சூழ
மனமொத்த தம்பதியராய்
மகிழ்ச்சியுடன் இருக்கையிலே!

இருமனம் கலந்து
இல்லறசுகம் பெற்றபோதும்
அம்மாவென் றழைத்திடவே
குழவியெதுவும் இல்லாதநிலையில்
பிள்ளச்சோகம் மறக்கயெண்ணி
ஜவுளிக்கடைப் படியேறி
கணினிப்பெட்டியில் பில்லடித்து
பொழுதைப்போக்கிய வேளையிலே!

மாமன்மாமி மச்சினிச்சியும்
நாத்தனார்நாத்திக் கொடுமையிலும்
பிள்ளைச்செல்வம் இல்லையென
வெள்ளைமன மறியாதோர்
சொல்லும்சுடும் வார்த்தையையும்
சிரித்துப்பேசி மறந்துமே
யாருரைத்த போழ்திலும்
மனசொடிந்து போகாது
அனுசரித்துப் போகையிலே!

தாலிகட்டி மணமுடித்த
மணாளனவன் மலடியென
கூறும்துயர நேரத்திலே!
ஏன்பிறந்தோ மென்றெண்ணி
இதயமொடிந்து போனாளே!

புத்தாண்டு பிறந்தவுடன்
புதுமனிதன் தோன்றிடுவான்!
பிறக்கும்குழவியின் குரல்கேட்டு
கட்டியகணவனும் மகிழ்ந்திடுவான்
திட்டியஉறவுகளும் திருந்திடுமே
என்றேயெண்ணி என்தோழியும்...
காத்திருக்கும் புத்தாண்டே! புதுவரவே...!

கவிதை எண்: 10.

Kaa Na Kalyanasundaram wrote:சவாலுக்குத் தயாரா...  வாக்கெடுப்பு...முடிவடைந்தது..! Pongal-south-india

புத்தாண்டே புதுவரவே !
புன்னகையின் தோரணமே!
இத்தரை மணக்கவரும்
தைத்திங்கள் நித்திலமே!
பழயன போக்கி
புதியன புகுத்தி
புதுமஞ்சள் அகழ்ந்தெடுத்து
புதுப்பானை புத்தரிசிப்
பொங்கலிடும் தமிழர்தம்
வாழ்வுதானில்
மனிதநேயமொடு மண்மீது
மட்டிலா மகிழ்ச்சியொடு
வீசட்டும் புதுவசந்தம்!
எல்லாமும் எல்லோரும்
பெறவேண்டும் - இங்கு
இல்லாமை இல்லாத
நிலை வேண்டும்
பொன்மொழியாய்
ஆண்டாண்டுகாலம்
பாடிப் பரவசம்
அடைந்தது போதும்!
செயலாக்க வீதிதனை சமைத்திட
அயராதுழைத்திடும் இளயநெஞ்சங்கள்
அணியணியாய்த் திரண்டெழ....
புத்தாண்டே வருக!
புதுவரவே வருக!!

.....கா.ந.கல்யாணசுந்தரம்.

கவிதை எண்: 11.

SN.KUYILAN wrote:
புத்தாண்டே புது வரவே !

இதயத்தில் மேடையமைத்து
எழுதுகோளால் வண்ணம் தீட்டி
உணர்வுகளை பூக்களாக தொடுத்து
என் எண்ணக் காணவுகளால்
தோரணம் கட்டி காத்திருக்கின்றேன்...
நாட்களுக்குள் வசந்தங்களை
கொண்டு வரும் உனக்காக...

நாளை திறக்கப்படும்
எனது கற்பனை கோட்டையின்
அரங்கேற்ற விழாவில்
சந்தோஷ நாட்களை நீ வெளியிட
நான் பெற்றுக்கொள்ளக் காத்திருக்கின்றேன்...

உன் வருகைக்காக மட்டுமல்ல
ஒவ்வொரு வருடமும்
நீ விட்டுச்சென்ற காலடித் தடங்களுக்கும்
நான் நினைவுகளால் குடை பிடித்துக்
காத்திருந்ததுண்டு...

அது மட்டுமா?
என் முதுகுப் புறத்தில்
முட்களால் நீ குத்திய போதும் கூட
அடுத்த நாளுக்காக நான் எதிர் பார்த்துக்
காத்திருந்ததுண்டு...

நூலில்லாமல் நெய்யப்பட்ட
உனது கற்பப்பைக்குள் எனக்காக பெற்றெடுக்க
365 குழந்தைகளை
சுமந்து நிற்கும் அற்புத கண்ணித்தாயே...

உனது முந்தானைச் சேலை தலைப்பில்
எனக்காக முடிந்து வைத்திருக்கும்
அந்த 12 பொற்காசுகளை
அவிழ்த்துக்கொள்ள காத்திருக்கின்றேன்...

புத்தாண்டின் பொன் மகளே,
என் வாழ்வின்
முன்னுரையும் நீயே!
முடிவுடையும் நீயே!

நீ பெற்றெடுக்கும் குழந்தைகளில்
ஏதாவதொன்று என்னை
சிகரத்தில் அமரச்செய்யும் என்ற நம்பிக்கையோடு
இப்போதும் உன்னை எதிர் பார்த்துக் காத்திருக்கின்றேன்...

வா!
வசந்தங்களை வீசிச்செல்ல வா!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Dec 31, 2010 12:11 pm

வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது... அனைவரும் வாக்கிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்... வாக்கிடுபவர் இங்கு தம் கருத்துக்களையும் பதிந்து செல்லலாமே...!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Dec 31, 2010 3:44 pm

வாக்களித்த ஏழுபேருக்கும் நன்றி... மிகுதியுள்ள அனைவரும் விரைந்து வாக்கிட வேண்டுகிறேன்...

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Dec 31, 2010 4:06 pm

அப்பாடா எப்படியோ முட்டி மோதி அமைதியாக வாக்களித்து தவித்து விட்டேன்!

சவாலுக்குத் தயாரா...  வாக்கெடுப்பு...முடிவடைந்தது..! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Jan 01, 2011 1:16 pm

அருமை அருமை... இதுவரை 19 வாக்குகள் இடப்பட்டுவிட்டன... தொடருங்கள் நண்பர்களே...!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அகீல்
அகீல்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 336
இணைந்தது : 22/12/2010

Postஅகீல் Sat Jan 01, 2011 1:33 pm

அண்ணை கையில மை பூசிவிடுங்கோ ஒட்டு போடுடன். சவாலுக்குத் தயாரா...  வாக்கெடுப்பு...முடிவடைந்தது..! 182891

அகீல் சவாலுக்குத் தயாரா...  வாக்கெடுப்பு...முடிவடைந்தது..! 154550
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat Jan 01, 2011 5:17 pm

இலக்கம் 9
இலக்கம் 7
இது இரண்டும் அமுத வரிஷினியின் கவிதை போல் உள்ளது கலை அண்ணா கவனிக்கவும் நன்றி

சவாலுக்குத் தயாரா...  வாக்கெடுப்பு...முடிவடைந்தது..! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Jan 01, 2011 7:54 pm

அப்புகுட்டி wrote:இலக்கம் 9
இலக்கம் 7
இது இரண்டும் அமுத வரிஷினியின் கவிதை போல் உள்ளது கலை அண்ணா கவனிக்கவும் நன்றி

ஆம் அப்பு... அவர் இரண்டு கவிதைகளைப் பதிந்து இருக்கிறார்.. அதில் தடையும் இல்லையே....!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun Jan 02, 2011 1:13 am

கலை wrote:
அப்புகுட்டி wrote:இலக்கம் 9
இலக்கம் 7
இது இரண்டும் அமுத வரிஷினியின் கவிதை போல் உள்ளது கலை அண்ணா கவனிக்கவும் நன்றி

ஆம் அப்பு... அவர் இரண்டு கவிதைகளைப் பதிந்து இருக்கிறார்.. அதில் தடையும் இல்லையே....!

தெரியும் அண்ணா வாக்களிக்கும் போது கஸ்டம் இருக்குமே என்றுதான்.
சரி எல்லாரும் வாக்களிக்க வேண்டுகிறேன் நன்றி அண்ணா நன்றி நன்றி

சவாலுக்குத் தயாரா...  வாக்கெடுப்பு...முடிவடைந்தது..! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Jan 02, 2011 8:53 pm

இதுவரை 28 வாக்குகளே பதிவாயிருக்கின்றன ... மற்றையோரெல்லாம் எங்கே...? விரைந்து வாக்கிடுக...!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக