புதிய பதிவுகள்
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருப்பாவை - Page 3 I_vote_lcapதிருப்பாவை - Page 3 I_voting_barதிருப்பாவை - Page 3 I_vote_rcap 
28 Posts - 53%
heezulia
திருப்பாவை - Page 3 I_vote_lcapதிருப்பாவை - Page 3 I_voting_barதிருப்பாவை - Page 3 I_vote_rcap 
12 Posts - 23%
Dr.S.Soundarapandian
திருப்பாவை - Page 3 I_vote_lcapதிருப்பாவை - Page 3 I_voting_barதிருப்பாவை - Page 3 I_vote_rcap 
6 Posts - 11%
T.N.Balasubramanian
திருப்பாவை - Page 3 I_vote_lcapதிருப்பாவை - Page 3 I_voting_barதிருப்பாவை - Page 3 I_vote_rcap 
3 Posts - 6%
prajai
திருப்பாவை - Page 3 I_vote_lcapதிருப்பாவை - Page 3 I_voting_barதிருப்பாவை - Page 3 I_vote_rcap 
1 Post - 2%
rajuselvam
திருப்பாவை - Page 3 I_vote_lcapதிருப்பாவை - Page 3 I_voting_barதிருப்பாவை - Page 3 I_vote_rcap 
1 Post - 2%
kavithasankar
திருப்பாவை - Page 3 I_vote_lcapதிருப்பாவை - Page 3 I_voting_barதிருப்பாவை - Page 3 I_vote_rcap 
1 Post - 2%
ஆனந்திபழனியப்பன்
திருப்பாவை - Page 3 I_vote_lcapதிருப்பாவை - Page 3 I_voting_barதிருப்பாவை - Page 3 I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருப்பாவை - Page 3 I_vote_lcapதிருப்பாவை - Page 3 I_voting_barதிருப்பாவை - Page 3 I_vote_rcap 
216 Posts - 43%
heezulia
திருப்பாவை - Page 3 I_vote_lcapதிருப்பாவை - Page 3 I_voting_barதிருப்பாவை - Page 3 I_vote_rcap 
200 Posts - 40%
Dr.S.Soundarapandian
திருப்பாவை - Page 3 I_vote_lcapதிருப்பாவை - Page 3 I_voting_barதிருப்பாவை - Page 3 I_vote_rcap 
24 Posts - 5%
i6appar
திருப்பாவை - Page 3 I_vote_lcapதிருப்பாவை - Page 3 I_voting_barதிருப்பாவை - Page 3 I_vote_rcap 
16 Posts - 3%
mohamed nizamudeen
திருப்பாவை - Page 3 I_vote_lcapதிருப்பாவை - Page 3 I_voting_barதிருப்பாவை - Page 3 I_vote_rcap 
14 Posts - 3%
Anthony raj
திருப்பாவை - Page 3 I_vote_lcapதிருப்பாவை - Page 3 I_voting_barதிருப்பாவை - Page 3 I_vote_rcap 
13 Posts - 3%
T.N.Balasubramanian
திருப்பாவை - Page 3 I_vote_lcapதிருப்பாவை - Page 3 I_voting_barதிருப்பாவை - Page 3 I_vote_rcap 
12 Posts - 2%
prajai
திருப்பாவை - Page 3 I_vote_lcapதிருப்பாவை - Page 3 I_voting_barதிருப்பாவை - Page 3 I_vote_rcap 
5 Posts - 1%
Guna.D
திருப்பாவை - Page 3 I_vote_lcapதிருப்பாவை - Page 3 I_voting_barதிருப்பாவை - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
திருப்பாவை - Page 3 I_vote_lcapதிருப்பாவை - Page 3 I_voting_barதிருப்பாவை - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருப்பாவை


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 10, 2011 11:08 pm

First topic message reminder :

திருப்பாவை: கார்மேனிச் செங்கண்ணே!!!

திருப்பாவை - Page 3 Bb39fe10

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
!நீராடப்போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்!
சீர்மல்கம் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்!
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்!
நாராயணனே, நமக்கே பறைதருவான்!
பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்
!

விளக்கம்:

திருமாலின் திருமேனி ஒத்த கார்மேகங்கள் மண்ணிலே தவழும் மார்கழி மாதம்! முழுமதியான தண்மதி விண்ணிலே தவழ்ந்து தண்மையும் மென்மையும் பொழியும் திருநாள்! பாவை நோன்பிற்காக நீராடச் செல்ல விருப்பமுள்ள பாவையர்களே! போதும், போதும்... உங்கள உறக்கம்! பேரெழில் பெற்ற அணிமணிகளை புனைந்த, சீரும் சிறப்பும் செல்லமும், பருவமும் நல்லுருவமும் திரு உருவான மங்கையர்ச் செல்வங்களே! வாருங்கள்!

கொடும் பகைவர்களை, ஏந்திய கூர்மாயான வேலால் அழித்தொழித்து வளமும் நலமும் அளிக்கும் ஸ்ரீநந்தகோபனை அறிவீர்கள்! அல்லவா...

அவரது திருக்குமாரன் யார்-?... யாரா? ஸ்ரீகண்ணபிரான்தான்! பேரழகு அனைத்தும் ஒன்றாகி உருவாகி ஈர்க்கும் கண்களையுடைய மரகத அன்னை யசோதையின் செல்வன் அவன்! இளஞ்சிங்கம் போன்றவன்!

கார்காலக் கருமேகம் போன்ற திருமேனி! செஞ்ஞாயிறு கண்டு மலர்ந்த செந்தாமரைப் புஷ்பம் போன்ற மலர்ந்த அவனது திருவிழிகள்! செங்கதிரவனாய்ப் பிரகாசிக்கும் அவனது திருமுகம்! செங்கதிரவன் என்பதால் அவன் முகத்தில் உஷ்ணமும் அனலும் வெப்பமும் வீசுமோ? என்றால் அதுதான் இல்லை.

மாறாக முழு நிலவின் குளிர்ந்த குளிர்ச்சியே கருணையே தவழும்! எப்பொழுதும்! எந்நாளும்! எந்நேரமும்!

இப்பாரோர் புகழும் வண்ணம் பேரருளை நல்குவான், அவன்!

*******

பனி கொட்டும் வைகறையில், குளிர்ந்த நீரில் ஸ்நானம் செய்வதால், அறிவியல் தத்துவப்படி, உடலில் நரம்புகள் சதைகள் ரத்த நாளங்கள் யாவும் புத்துணர்ச்சிப் பெறுகின்றன.

தாமரைத்திருவின் திருத்தாள் போற்றி! போற்றி!



திருப்பாவை - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jan 11, 2011 1:06 am


திருப்பாவை :கொடுக்கும் விமலா!


திருப்பாவை - Page 3 C4d649b5-604c-4edf-b520-eb0b8332b3bc_S_secvpf

முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று!
கப்பம் தவிர்க்கும்கலியே! துயிலெழாய்!
செப்ப முடையாய்! திறலுடையாய்! செற்றார்க்கு!
வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்!
செப்பன்ன மென்முலைசெவ்வாய்ச் சிறுமருங்குல்
நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய்!
உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனை
இப்போதே எம்மை நீ ராட்டேலோ ரெம்பாவாய்!


விளக்கம்:- முப்பத்து மூவராகிய தேவர்களுக்கும் தானே முன்சென்று அவர்கள் நடுக்கத்தை போக்கும் வல்லமை உடையனே! பகைவர்களுக்கு காய்ச்சல் உண்டாக்குகின்ற விமலனே! துயில் எழுவாய்! சிவந்த வாயினையும் சிறிய இடையினையும் கொண்ட நற்பிள்ளை அம்மையே! திருமகளே! துயில் எழுவாய்! நோன்புக் கருவிகளான ஆலவட்டத்தையும், கண்ணாடியையும் உன் கணவனையும் எங்களையும் இப்போதே நீராட்டு!



திருப்பாவை - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jan 11, 2011 1:08 am

திருப்பாவை:"தோற்றமாய் நின்ற சுடரே!"

திருப்பாவை - Page 3 7a540f3b-ab72-43e5-951f-c02b94629ed8_S_secvpf

ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்!
ஊற்ற முடையாய்! பெரியாய்! உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்!
மாற்றார் உனக்கு வலிதொலைந்துன் வாசற்கண்
ஆற்றாது வந்துன் னடிபணியு மாபோலே,
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோ ரெம்பாவாய்!


விளக்கம்:- ஏந்திய பாத்திரங்களில் எதிர்த்து பொங்கி வழியும்படியான பசுக்களை அளவின்றி பெற்றவனாகிய நந்தகோபன் மகளே! துயில் எழுவாயாக! உலகத்திலே காட்சிப் பொருளாக நின்ற சுடரே! பகைவர்கள் உனக்கு முன்னே தன் வலிமையை இழந்து உன் கோவில் வாசலிலே வந்து உனது திருவடிகளைப் பணிகின்றனர். அவர்களைப் போல நாங்களும் வணங்கி வந்து உன்னைப் புகழ்ந்தோம்!



திருப்பாவை - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jan 11, 2011 1:09 am

திருப்பாவை:"திருவின் நாயகனே"

திருப்பாவை - Page 3 93feaad5-2844-4c7f-9830-c8db27e3f5e7_S_secvpf

அங்கண்மா ஞாலத் தரசர், அபிமான
பங்கமாய் வந்துநின்பள்ளிக் கட்டிற்கீழே
சங்க மிருப்பார் போல் வந்து தலைப்பெய்தோம்!
கிங்கிணிவாய்ச் செய்த தாமரைப் பூப்போல,
செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ?
திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற்போல்,
அங்க ணிரண்டுங்கொண் டேங்கள்மேல் நோக்குதி!
யேல் எங்கள் மேல் சாபம் இழிந்தேலோ ரெம்பாவாய்!


விளக்கம்:- பரந்த இவ்வுலகத்தில் உள்ள அரசர்கள் அனைவரும் தற்செருக்கு அடங்கி உன் கட்டிலுக்கு அடியில் கூட்டமாக இருப்பர். அவர்களைப் போல நாங்களும் வந்து அடைக்கலமானோம். செந்தாமரைப் பூ போன்ற உன் சிவந்த கண்களை சிறுகச்சிறுக விழித்து எங்கள் மேல் அருட்பார்வை செலுத்தக்கூடாதோப சந்திரனும், சூரியனும் எழுந்தாற்போல உன் அழகிய கண்கள் இரண்டையும் எங்கள் மீது நோக்கினால் எங்கள் மீதுள்ள பாவமெல்லாம் தீர்ந்து போகும்.



திருப்பாவை - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jan 11, 2011 1:11 am

திருப்பாவை:"பூவைப் பூவண்ணா!"

திருப்பாவை - Page 3 B2aadc2f-b407-4fad-bf90-a61ed111032c_S_secvpf

மாரி மலைமுழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து
வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா! உன்
கோயில் நின்றிங்ஙனே போந்தருளிக் கோப்புடைய
சீரிய சிங்கா சனத்திருந்து யாம் வந்த
காரியம் ஆராய்ந் தருளேலோ ரெம்பாவாய்!


விளக்கம்:- காயாம்பூ வண்ணனே! மலைக்குகைக்குள் உறங்கும் வீறு மிகுந்த சிங்கம் உறக்கம் தெளிந்து எழுந்து அனல் கக்க விழித்து பிடரி சிலிர்க்கும்படி நாலாபுறமும் திரும்பிசோம்பல் முறித்து குகையை விட்டு வெளியே புறப்பட்டு வருவது போல நீ உன் கோவிலில் இருந்து இங்கு வந்தருள்வாயாக! அழகு பெற அமைந்து சிறந்து விளங்கும் அரியாசனத்தில் வீற்றிருந்து நாங்கள் வந்த காரியத்தை ஆராய்ந்து அருள்வாயாக!



திருப்பாவை - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jan 11, 2011 1:12 am

திருப்பாவை:"திருவடி!போற்றி!"

திருப்பாவை - Page 3 47c9bee2-5ead-482a-b469-5dfe522ae887_S_secvpf

அன்றிவ் வுலகம் அளந்தாய்! அடிபோற்றி!
சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய்! திறல்போற்றி!
பொன்றச் சகடம் உதைத்தாய்! புகழ்போற்றி!
கன்று குணிலா எறிந்தாய் கழல்போற்றி!
குன்று குடையாய் எடுத்தாய்! குணம் போற்றி!
வென்று பகைக்கெடுக்கும் நின்கையில் வேல்போற்றி!
என்றென்றும் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்
இன்றுயாம் வந்தோம் இரங்கேலோ ரெம்பாவாய்!


விளக்கம்:- அன்று உலகை அளந்தவனே! உன் திருவடிகளை போற்றுகிறோம். தென் இலங்கை சென்று அரக்கர்களை அழித்தவனே! சகடாசுரன் அழியுமாறு உதைத்தவனே! கன்றுக்குட்டியாக வடிவம் எடுத்து வந்த வத்சாசுரனை எறிதடியாக கொண்டு விளமரத்தில் கனியாக வடிவம் எடுத்திருந்த கபித்தாசுரனை எறிந்து அந்த அசுரா இருவரையும் கொன்றவனே! உன் வீரத்திருவடிகளை போற்றுகிறோம். கோவர்த்தன மலையை குடையாக எடுத்து மழையை தடுத்து மக்களை காத்தவனே! இப்படி பலவாறாக உன் வீரத்தை போற்றி பறை கொள்வதற்காக இன்று நாங்கள் வந்தோம் அருள்வாயாக!



திருப்பாவை - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jan 11, 2011 1:13 am

திருப்பாவை :"நின்ற நெடுமாலே!"

திருப்பாவை - Page 3 114f1c27-5922-49a5-aceb-17dc8e1addbb_S_secvpf

ஒருத்தி மகனாய்ப் பிறந்து, ஓரிரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்
தரிக்க்ல னாகித் தான் தீங்கு நினைத்த
கருத்தைப் பிழைப்பித்த கஞ்சன் வயிற்றில்
நெருப்பென நின்ற நெடுமாலே! உன்னை
அருத்தித்து வந்தோம்; பறை தருதி யாகில்,
திருத்தக்க செல்வமும் சேவகமும்யாம் பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்!


விளக்கம்: வடமதுரையில் தேவகியின் மகனாகப் பிறந்து ஒரு இரவிற்குள்ளாகவே கோகுலத்தில் யசோதையின் மகனாக ஒளிந்து வளர்ந்த எம் கண்ணனே! கேடு நினைத்த கம்சனுக்கு நெருப்புப் போல இருந்தவனே! உன் அடிமைகளாகிய நாங்கள் உன்னை வேண்டி வந்துள்ளோம். எங்களுக்கு தேவயானவற்றை அளிப்பாயாக. அவ்வாறு நீ எங்களை ஆட்கொண்டால் உனக்கு சேவை செய்து உன் புகழ் பாடி வருத்தம் தீர்ந்து மகிழ்ந்து வாழ்வோம்.



திருப்பாவை - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jan 11, 2011 1:15 am

திருப்பாவை:"ஆலிலையாய் அருளாய்!"

திருப்பாவை - Page 3 34707def-26ab-4a5f-ae2e-d045750c6ea5_S_secvpf

மாலே! மணிவண்ணா! மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன, கேட்டியேல்,
ஞாலத்தை யெல்லாம் நடுங்க முரல்வன
பாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப்பா டுடையனவே
சாலப் பெரும்பறையே பல்லாண் டிசைப்பாரே,
கோல விளக்கே, கொடியே விதானமே,
ஆலி னிலையாய் அருளேலோ ரெம்பாவாய்!


விளக்கம்:- திருமாலே! மணிவண்ணா ஆலிலையில் பள்ளி கொண்ட பெருமானே! மார்கழியில் நீராடும் பொருட்டு முன்னோர்கள் வேண்டுவது என்னப அவற்றை கேட்டு அருள்வாயாக! உலகம் அதிரும்படி முழங்கும் பால்போன்ற வெண்சங்குகள் வேண்டும். நெடுந்தூரம் சென்று ஒலிக்கும் தன்மை கொண்ட மிகப்பெரிய பறைகள் வேண்டும். பல்லாண்டு இசைப்பவர்கள் வேண்டும். அழகிய விளக்குகள், கொடிகள் வேண்டும். இவற்றையெல்லாம் அருள்வாயாக!

திருப்பாவை - Page 3 Logo




திருப்பாவை - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Tue Jan 11, 2011 1:31 am

கல்லூரியில் படிக்கும் போது வெறுப்பாக இருந்தது,
இப்போது சுவையாக இருக்கிறது...



திருப்பாவை - Page 3 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Tue Jan 11, 2011 7:30 am

அனைவருக்கும்
வணக்கம்



கன்று
குணிலாய் எறிந்தாய் கழல் போற்றி



எறிந்தது
கைதானே எதற்காகக் கழலைப் போற்றுகின்றாள்? கோதை நாச்சியார்



என்றும்
மாறா அன்புடன்



நந்திதா

Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக