ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

Top posting users this week
ayyasamy ram
திருப்பாவை - Page 2 Poll_c10திருப்பாவை - Page 2 Poll_m10திருப்பாவை - Page 2 Poll_c10 
heezulia
திருப்பாவை - Page 2 Poll_c10திருப்பாவை - Page 2 Poll_m10திருப்பாவை - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருப்பாவை

4 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

திருப்பாவை - Page 2 Empty திருப்பாவை

Post by சிவா Mon Jan 10, 2011 11:08 pm

First topic message reminder :

திருப்பாவை: கார்மேனிச் செங்கண்ணே!!!

திருப்பாவை - Page 2 Bb39fe10

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
!நீராடப்போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்!
சீர்மல்கம் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்!
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்!
நாராயணனே, நமக்கே பறைதருவான்!
பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்
!

விளக்கம்:

திருமாலின் திருமேனி ஒத்த கார்மேகங்கள் மண்ணிலே தவழும் மார்கழி மாதம்! முழுமதியான தண்மதி விண்ணிலே தவழ்ந்து தண்மையும் மென்மையும் பொழியும் திருநாள்! பாவை நோன்பிற்காக நீராடச் செல்ல விருப்பமுள்ள பாவையர்களே! போதும், போதும்... உங்கள உறக்கம்! பேரெழில் பெற்ற அணிமணிகளை புனைந்த, சீரும் சிறப்பும் செல்லமும், பருவமும் நல்லுருவமும் திரு உருவான மங்கையர்ச் செல்வங்களே! வாருங்கள்!

கொடும் பகைவர்களை, ஏந்திய கூர்மாயான வேலால் அழித்தொழித்து வளமும் நலமும் அளிக்கும் ஸ்ரீநந்தகோபனை அறிவீர்கள்! அல்லவா...

அவரது திருக்குமாரன் யார்-?... யாரா? ஸ்ரீகண்ணபிரான்தான்! பேரழகு அனைத்தும் ஒன்றாகி உருவாகி ஈர்க்கும் கண்களையுடைய மரகத அன்னை யசோதையின் செல்வன் அவன்! இளஞ்சிங்கம் போன்றவன்!

கார்காலக் கருமேகம் போன்ற திருமேனி! செஞ்ஞாயிறு கண்டு மலர்ந்த செந்தாமரைப் புஷ்பம் போன்ற மலர்ந்த அவனது திருவிழிகள்! செங்கதிரவனாய்ப் பிரகாசிக்கும் அவனது திருமுகம்! செங்கதிரவன் என்பதால் அவன் முகத்தில் உஷ்ணமும் அனலும் வெப்பமும் வீசுமோ? என்றால் அதுதான் இல்லை.

மாறாக முழு நிலவின் குளிர்ந்த குளிர்ச்சியே கருணையே தவழும்! எப்பொழுதும்! எந்நாளும்! எந்நேரமும்!

இப்பாரோர் புகழும் வண்ணம் பேரருளை நல்குவான், அவன்!

*******

பனி கொட்டும் வைகறையில், குளிர்ந்த நீரில் ஸ்நானம் செய்வதால், அறிவியல் தத்துவப்படி, உடலில் நரம்புகள் சதைகள் ரத்த நாளங்கள் யாவும் புத்துணர்ச்சிப் பெறுகின்றன.

தாமரைத்திருவின் திருத்தாள் போற்றி! போற்றி!


திருப்பாவை - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


திருப்பாவை - Page 2 Empty Re: திருப்பாவை

Post by சிவா Tue Jan 11, 2011 12:40 am

திருப்பாவை: ஸ்ரீமந் நாராயணன்!

திருப்பாவை - Page 2 92b6a2da-0a8e-4811-a30e-324363cd48ca_S_secvpf

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்?
நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்
போற்றப் பதைதரும் புண்ணியனால் பண்டொருநாள்
கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்பகர்ணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ?
ஆற்ற அனந்த லுடையாய்! அருங்கலமே!
தேற்றமாய் வந்து திறவேலோ ரெம்பாவாய்


விளக்கம்:- விரதம் இருந்து சொர்க்கம் போகின்ற அம்மையே! வாசல் கதவை திறக்காதவர், பதிலும் கூடவா சொல்ல மாட்டார்களே? மணக்கும் துளசி மாலையை திருமுடியில் அணிந்த நாராயணன், பேரின்பத்தை தருவான். புண்ணிய மூர்த்தியாகிய ராமபிரானால் முன்னொரு காலத்தில் எமன் வாயில் போய் விழுந்த கும்பகர்ணன், அவனது உறக்கத்தை உனக்குள் தந்தானா? அரிதான ஆபரணம் போன்றவளே! உறக்கம் தெளிந்து வந்து கதவை திறப்பாய்!


திருப்பாவை - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

திருப்பாவை - Page 2 Empty Re: திருப்பாவை

Post by சிவா Tue Jan 11, 2011 12:44 am

திருப்பாவை :"முகில்வண்ணன்"!

திருப்பாவை - Page 2 6372de91-8063-443f-88bb-5f4f0239b1cf_S_secvpf
கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து
செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்
குற்றமொன் றில்லாத கோவலர்தம் பொற்கொடியே!
புற்றர வல்குல் புனமயிலே! போதராய்!
சுற்றத்துத் தோழிமா ரெல்லாரும் வந்துநின்
முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட
சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி! நீ
எற்றுக் குறங்கும் பொருளேலோ ரெம்பாவாய்


விளக்கம்:- கறவை பசுக்கூட்டங்களில் இடையர்கள் பால் கறப்பார்கள். பகைவர்களின் வலிமை அழியும்படி போர் செய்வது உண்டு. தங்கக்கொடி போன்ற பெண்ணே! அழகிய மயில் போன்றவளே! எழுந்துவா! நம் உறவினர்களாகிய தோழிகள் எல்லோரும் உன் வீட்டு வாசலில் முகில்வண்ணன் புகழ் பாடுகிறோம். ஆனால் நீ அசையாமல் ஏன் இப்படி உறங்குகிறாய். இதற்கு பொருள்தான் என்ன?


திருப்பாவை - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

திருப்பாவை - Page 2 Empty Re: திருப்பாவை

Post by சிவா Tue Jan 11, 2011 12:55 am

திருப்பாவை:"மனதுக்கு இனித்தான்"

திருப்பாவை - Page 2 2ba594d0-bb1b-46a5-b391-ee03990806fa_S_secvpf
கனைத்திளங் கற்றெருமை கன்றுக் கிரங்கி
நினைத்து முலைவழியே நின்று பால் சோர
நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!
பனித்தலை வீழநின் வாசற் கடைபற்றிச்
சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக் கிளியானைப் பாடவும் நீ வாய் திறவாய்
இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்
அனைத்தில்லத் தாரும் அறிந்தேலோ ரெம்பாவாய்


விளக்கம்:- இளங்கன்றுகளை கொண்ட எருமைகள் தங்கள் கன்றை நினைத்து பால் சுரந்து வீட்டை சேறாக்குகின்றன. அப்படிப்பட்ட எருமைகளை கொண்ட செல்வனுடைய தங்கையே! மார்கழி மாதப்பனி எங்கள் தலையில் விழ, உன் வீட்டு கடைவாசலில் நிற்கிறோம்! தென் இலங்கை வேந்தனாகிய ராவணனை கோபத்தில் அழிக்க ராமபிரானை நாங்கள் பாடுகிறோம். இது என்ன உறக்கம்பா நாங்கள் உன்னை இப்படி அழைப்பது எல்லா வீட்டுக்கும் தெரிந்துவிட்டது. இனியாவது எழுந்து வா!


திருப்பாவை - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

திருப்பாவை - Page 2 Empty Re: திருப்பாவை

Post by சிவா Tue Jan 11, 2011 12:57 am

திருப்பாவை: "கண்ணா! கார்முகில் வண்ணா!"

திருப்பாவை - Page 2 4e44f608-45f4-4d3c-af59-0981c4997dd7_S_secvpf
புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்
பிள்ளைக ளெல்லாரும் பாவைக் களம்புக்கார்
வெள்ளி எழுந்து வியாழ மிறங்கிற்று
புள்ளும் சிலம்பினகாண் போதரிக் கண்ணினாய்!
குள்ளக் குளிரக் குடைந்து நீ ராடாதே,
பள்ளிக்கிடத்தியோப பாவாய்! நீ நன்னாளால்
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோ ரெம்பாவாய்.


விளக்கம்:- நம் பெருமான் பறவை வடிவமாக வந்த மகாசுரனுடைய வாயை பிளந்து எறிந்தவன். அவனுடைய வீரப்புகழை பாடிக்கொண்டு பிள்ளைகள் எல்லாரும் பாவை நோன்பு நோற்கும் இடத்திற்கு சென்றனர். விடிவெள்ளி தோன்றி விட்டது. மலர் போன்ற அழகிய ரேகை பொருந்திய விழியுடையவளே! இந்த நல்ல நாளில் நீ, உன் கள்ளத்தனத்தை விட்டு விட்டு எங்களோடு கலந்து குளிர குளிர நீராடாமல் கிடக்கின்றாயா?


திருப்பாவை - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

திருப்பாவை - Page 2 Empty Re: திருப்பாவை

Post by சிவா Tue Jan 11, 2011 12:58 am

திருப்பாவை:"பங்கயக் கண்ணா"
திருப்பாவை - Page 2 92640b84-b409-4d50-aa21-119f27e4af39_S_secvpf
உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய்நெகிழ்ந் தாம்பல்வாய் கூம்பினகாண்
செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோவில் சங்கிடுவான் போகின்றார்
எங்களை முன்னம் எழுப்புவான்வாய்பேசும்
நங்காள் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோ ரெம்பாவாய்


விளக்கம்:- முந்தி வந்து உங்களை எழுப்புவேன் என்று வாய்ப்பேச்சு பேசிய நங்கையே! நாவின் நீட்சியை கொண்டவளே! உங்கள் வீட்டு புழக்கடை தோட்டத்தில் உள்ள குளத்திலே செங்கழுநீர்ப்பூக்கள் பூத்தன. ஆம்பல் மலர்கள் இதழ்குவிந்து வாய்மூடின. காவி உடை அணிந்த தவசீலர்கள் தாங்கள் பொறுப்பேற்றுள்ள கோவில்களை திறக்கச் சென்றுவிட்டனர். சங்கு, சக்கரம் ஏந்திய நீண்ட கைகளையும், தாமரைக் கண்களையும் உடையவனைப் பாடுவோமாக!


திருப்பாவை - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

திருப்பாவை - Page 2 Empty Re: திருப்பாவை

Post by சிவா Tue Jan 11, 2011 12:59 am


திருப்பாவை: "வல்லானை மாயனை"


திருப்பாவை - Page 2 08b37fd5-9429-4f85-9712-0204c7474467_S_secvpf

எல்லே! இளங்கிளியே! இன்னம் உறங்குதியோப!
சில்லென் றழையேன்மின்! நங்கைமீர் போதர்கின்றேன்
வல்லைஉன் கட்டுரைகள் பண்டே உன் வாயறிதும்!
வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக!
ஒல்லைநீ போதாய் உனக் கென்ன வேறுடையை?
எல்லாரும் போந்தாரோப போந்தார்போந் தெண்ணிக்கொள்:
வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலோ ரெம்பாவாய்!


விளக்கம்:- இளங்கிளியே! இன்னும் உறங்குகிறாயோப நீ மிகவும் கெட்டிக்காரி. உன் பேச்சுக்களை முன்பே அறிந்து இருக்கிறோம். நீ சீக்கிரம் எழுந்து வா! இந்த புத்தசாலித்தனம் தவிர, உனக்கு என்று வேறு என்ன வைத்திருக்கிறாய்ப மற்ற எல்லோரும் வந்து விட்டார்கள். குவலயா பீடம் என்ற வலிய யானையை கொன்றவனை, பகைவரின் செருக்கை அழிக்க வல்லவனை, மாயனை பாடுவாயாக!


திருப்பாவை - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

திருப்பாவை - Page 2 Empty Re: திருப்பாவை

Post by சிவா Tue Jan 11, 2011 1:01 am

திருப்பாவை :"மாயன் மணிவண்ணன்"


திருப்பாவை - Page 2 62c669df-73d7-4215-ba6a-8e9b62884965_S_secvpf

நாயகனாய்நின்ற நந்தகோபானுடைய
கோயில் காப்பானே! கொடித்தோன்றும் தோரண
வாயில் காப்பானே! மணிக்கதவம் தாள்திறவாய்!
ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்
வாயால் முன்னமுன்னம் மாற்றாதே அம்மா! நீ
நேச நிலைக்கதவம் நீக்கேலோ ரெம்பாவாய்.


விளக்கம்:- உலகுக்கெல்லாம் தலைவனாகிய நந்தகோபனுடைய கோவிலை காப்பாவனே! மணிக்கதவின் தாழ்திறவாய்! இடையர்களின் சிறுமிகளாகிய எங்களது நோன்பை நிறைவு செய்யபறை தருவதாக மணிவண்ணன் நேற்றே வாக்களித்தான். அந்த எம்பெருமான் துயில் நீங்க உள்ளும், புறமும் தூயவர்களாக நாங்கள் வந்தோம்! எனவே மறுப்பு சொல்லாமல் கதவை திறப்பாயாக!


திருப்பாவை - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

திருப்பாவை - Page 2 Empty Re: திருப்பாவை

Post by சிவா Tue Jan 11, 2011 1:02 am

திருப்பாவை :"உம்பர் கோமானே"!

திருப்பாவை - Page 2 0eac4eb2-ae81-4ee2-94e3-d105d6e77150_S_secvpf

அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும்
எம்பெருமான்! நந்தகோ பாலா எழுந்திராய்!
கொம்பனார் கெல்லாம் கொழுந்தே! குலவிளக்கே!
எம்பெரு மாட்டி யசோதாய் அறிவுறாய்!
அம்பர மூடறுத் தோங்கி உலகளந்த
உம்பர்கோ மானே! உறங்கா தெழுந்திராய்!
செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா
உம்பியும் நீயும் உறங்கேலோ ரெம்பாவாய்.


விளக்கம்:- ஆடை, தண்ணீர், சோறுஆகிய மூன்றையும் எங்களுக்கு வழங்கும் எம்பெருமானே! நந்தகோபாலா, எழுந்திரு! வஞ்சிக்கொடி போன்ற பெண்கள் எல்லோருக்கும் கொழுந்தனாகவும், தாம் பிறந்த குலத்திற்கு விளக்காகவும் திகழும் யசோதையே! துயில் நீங்கி உணர்வு பெற்று எழுவாய்! ஓங்கி வளர்ந்து உலகை திருவடியால் அளந்த தேவனே! துயில் கொள்ளாமல் எழுந்திரு! வீரக்கழல் அணிந்த செல்வா! உன் தம்பியாகிய கண்ணபிரானும் நீயும் உறங்காதீர்கள்!


திருப்பாவை - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

திருப்பாவை - Page 2 Empty Re: திருப்பாவை

Post by சிவா Tue Jan 11, 2011 1:04 am

திருப்பாவை:"நப்பின்னை நாயகன்"!

திருப்பாவை - Page 2 28494f26-0cb0-4b94-9b3b-d75f48760de2_S_secvpf

உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்,
நந்தகோ பாலன் மருமகளே! நப்பின்னாய்!
கந்தம் கமழும் குழலீ! கடைதிறவாய்!
வந்தெங்கும் கோழி அழைத்தன காண்; மாதவிப்
பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்!
பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர்பாடச்
செந்தா மரைக்கையால் சீரார் வளையொலிப்ப
வந்துதிறவாய் மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்!


விளக்கம்:- நந்தகோபாலன் மதம் பொழிகின்ற யானைகளை கொண்டவன். நீங்காத தோள் வலிமை உடையவன். அவனது மருமகளே! மணங்கமழும் கூந்தலை உடையவனே! கதவைத்திற! குயில் கூட்டங்கள் பலமுறை கூவின. உன் மைத்துனன் பெயரை நாங்கள் சொல்லிப்பாட, செந்தாமரை போன்ற உன் கைகளால் அழகிய வளையல்கள் ஒலிக்க, மகிழ்ந்து வந்து கதவை திறப்பாயாக!


திருப்பாவை - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

திருப்பாவை - Page 2 Empty Re: திருப்பாவை

Post by சிவா Tue Jan 11, 2011 1:05 am

திருப்பாவை: திருமலர் மார்பா!

திருப்பாவை - Page 2 1d4b58f6-247d-4386-8c4d-3afe20fb9fcb_S_secvpf

குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டிலின் மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக்
கொத்தலர் பூங்குழல் நப்பினைகொங்கை மேல்,
வைத்துக்கிடந்த மலர்மார்பா! வாய்திறவாய்!
மைத்திடங் கண்ணினாய்! நீ உன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ வொட்டாய் காண்
எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால்!
துத்துவமன்று தகவேலோ ரெம்பாவாய்!


விளக்கம்:- குத்து விளக்கு ஒளியை பரப்பிக் கொண்டிருக்கிறது. அழகு, குளிர்ச்சி, மென்மை, மணம், வெண்மை ஆகிய ஐந்தும் பொருந்திய படுக்கையை கொண்ட கண்ணபிரானே! உன் திருவாய் மலர்ந்து அருள்வாயாக! மை தீட்டிய பெரிய கண்ணைக் கொண்ட பிராட்டியே! நீ உன் கணவனை சிறிது நேரம்கூட துயில் எழ விடமாட்டாயாப இது உன் நிலைக்கு பொருத்தமானது அல்ல.


திருப்பாவை - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

திருப்பாவை - Page 2 Empty Re: திருப்பாவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum