ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:28 pm

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Today at 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Today at 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Today at 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 11:24 am

» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

"கலைஞர் வீடு வழங்கும் திட்டம் 2010 - 2016"

5 posters

Go down

"கலைஞர் வீடு வழங்கும் திட்டம் 2010 - 2016" Empty "கலைஞர் வீடு வழங்கும் திட்டம் 2010 - 2016"

Post by பிளேடு பக்கிரி Mon Jan 03, 2011 1:29 pm

தமிழகத்தை குடிசைகளே இல்லாத மாநிலமாக மாற்றியே தீருவது என்கிற ஒரு கொள்கை முடிவை தற்போதைய தி.மு.க. கையில் எடுத்துள்ளது. ஆனால், இப்படி ஒரு திட்டத்தை அறிவித்த 'நேரமும், காலமும்'தான் விமர்சனத்திற்கு உரியதாக இருக்கிறது. இப்போதைய தி.மு.க. நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் சட்டமன்ற தேர்தலை சந்திக்கிறபோது அவர்கள் வெளியிட்ட தேர்தல் அறிக்கையிலே இந்தத் திட்டம் இடம் பெற்றிருக்கவில்லை. அப்போது இலவசமாக இரண்டு ஏக்கர் நிலம், வண்ணத் தொலைக்காட்சி பெட்டி, இலவச எரிவாயு அடுப்புடன் கூடிய இணைப்பு உள்ளிட்ட இதர பொதுவான திட்டங்கள் மட்டும்தான் இடம்பெற்றிருந்தது. ஆனால் அந்தத் தேர்தல் அறிக்கையிலே இல்லாத, அறிவிக்கப்படாத ஒரு புதிய திட்டம் இந்த 'வீடு வழங்கும் திட்டம்.'

இது மத்திய சர்க்காரின் நிதி உதவியுடன் நடைபெறுகிற திட்டம்
, அதனால் இதன் மொத்த அனுகூலங்களும் எங்களைத்தான் சாரும் என்று காங்கிரஸ்காரர்களும், இல்லை, இல்லை எது எப்படி இருந்தாலும் இதனை நாங்கள் தான் நடைமுறைப் படுத்துகிறோம் அதனால் இதன் அருமை பெருமைகள் அனைத்தும் எங்களைத்தான் சாரும் என்று தி.மு.க.காரர்களும் தங்களுக்குள் பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருக்கிற நிலைமையில் மிகுந்த எதிர்பார்ப்போடு மக்கள் முன் வந்திருக்கிறது இந்த வரலாற்று சிறப்பு மிக்க திட்டம்!

ஏற்கனவே
, 'நாங்கள் இவற்றை எல்லாம்இலவசமாக வழங்குவோம்' என்று சொல்லி ஒரு பட்டியல் வெளியிட்டு, அந்தப் பட்டியலின் மீது மேடை போட்டு, வீதி தோறும் முழக்கமிட்டு, தேர்தலைச் சந்தித்து, அதிலும் தனிப் பெரும்பான்மை அற்றுப் போய் இதர தோழமைக் கட்சிகளின் கூட்டணியில் சட்டமன்றத்தை பிடித்து, பிரதான எதிர்கட்சியிடம் காலமெல்லாம் 'மைனாரிட்டி சர்க்கார்' என்கிற ஏச்சையும், பேச்சையும் சந்தித்துக் கொண்டிருக்கிற இந்த நிலைமையிலே மீண்டும் ஒரு இலவச திட்டத்தை அறிவிக்க வேண்டியதன் அவசியம் என்ன?

அதே போல்
, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட இலவச திட்டங்களே பல்வேறு பகுதிகளில் பல்வேறு விதமாக நடைமுறைப்படுத்தப்பட்டு, மக்களிடம் ஒரு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிற நிலையில் இப்போது அறிவிக்கப்பட்டிருக்கிற இந்தத் திட்டத்தின் அவசர - அவசியம்தான் - என்ன?

ஒன்றுமில்லை... அது வரவிருக்கிற
அடுத்த தேர்தல்தான்..

ஒரு பக்கம் இந்தத் திட்டத்தை ஆறு ஆண்டுகளில் நிறைவு செய்யப் போவதாக அரசு அறிவித்திருந்தாலும், வரப்போகிற தேர்தலை மனதில் வைத்தே இவர்கள் இதனை தீவிரமாக செயல்படுத்த முனைந்திருக்கிறார்கள் என்பதும் தெள்ளத் தெளிவாகத் தெரிய வருகிறது. தமிழகத்தில் உள்ள குடிசை வீடுகளில் மொத்தம் இருபத்தொருலட்சம் வீடுகளை கான்கிரீட் வீடுகளாக தரம் உயர்த்த அரசு திட்டம் வகுத்துள்ளது. அதிலே முதல் கட்டமாக இந்த ஆண்டில் மட்டும் மூன்று லட்சம்வீடுகளுக்கான பயனாளிகளுக்கு ஆணைகள் வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

இது இவர்கள் கடைபிடிக்கும் வழக்கமான நடைமுறைதான் என்றாலும்
, இப்போது புதியதாக ஒரு நடைமுறையைக் கையாண்டு வருகிறார்கள். அது என்னவென்றால் எத்தனை பயனாளிகள் என்றாலும் பரவாயில்லை, 'அனைவருக்குமே நாங்கள் எங்கள் கைகளாலேதான் ஆணைகள்வழங்குவோம்', என்று துணை முதல்வர் உள்ளிட்ட மந்திரிகள் அனைவருமே இந்த நடைமுறையை ஒருசேரக் கடைபிடிக்கிறார்கள். ஒரு ஒன்றியத்திற்கு சுமாராக ஆயிரத்து ஐநூறு அல்லது இரண்டாயிரம் பயனாளிகள் என்று வைத்துக் கொண்டால் ஒரு நாள் முழுக்க இந்த அரசு விழா நடத்தப்படுகிறது. இது ஒரு அரசு விழா மேடையாக மட்டும் இல்லை, தேர்தல் பிரச்சார மேடையாகவும் இவர்களுக்குப் பயன்பட்டுக் கொண்டிருக்கிறது.

ஏற்கனவே மந்திரி பிரதானிகள் செய்து கொண்டிருக்கிற
'தலையாயபணிகளுக்கு'
நடுவே இது போன்ற விழாக்களுக்கும் நேரம் ஒதுக்கி மக்களைச் சந்தித்து இந்த அரசு விழா மேடைகளை தேர்தல் பிரச்சார மேடைகளாக்கி வருகிறார்கள். இந்த பயனாளிகள் தேர்வு செய்வதிலேயே பல்வேறு தகிடுதத்தங்கள் நடைபெற்றிருந்தாலும், விழா மேடை அருகே அந்தப் பயனாளி வரும்போது தி.மு.க. அனுதாபியாக அவரை மாற்றுகின்ற முயற்சி வெகு ஜோராக நடைபெறுகிறது. இது ஒரு அப்பட்டமான தேர்தல் பிரச்சாரம் என்பதை நாம் இங்கே உறுதியாகச் சொல்லியாக வேண்டும்.


சரி
, போகட்டும் இது 'அவர்கள்' கொண்டு வந்திருக்கிற திட்டம், இதனை எந்த விதத்திலாவது 'அவர்கள்' விளம்பரப்படுத்தி ஆதாயம் தேடிக் கொள்ளட்டும், அது நமக்கு ஒரு பெரிய பிரச்சினை இல்லை, அதை தேர்தல் முடிவுகள் தீர்மானிக்கப்போகிறது. ஆனால் இந்த வரலாற்று சிறப்பு மிக்க திட்டம் நடைமுறையில்ஏற்படுத்தியிருக்கிற சிக்கல்களை அவ்வாறு விட்டுவிட இயலவில்லை.

அதாவது, ஒரு வீடு கட்டுவது என்பது இன்றைய நிலைமையில் சந்திரனுக்கு ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் விடுவதைவிட அதிக ஆபத்து நிறைந்ததாக இருக்கிறது. குறிப்பாக வீட்டை கட்டுவதற்கு உரிய கட்டுமானப் பொருட்களை ஏற்பாடு செய்வதில் இருந்து நாம் தொடங்கலாம். மணல், செங்கல், ஜல்லி, சிமெண்ட், இரும்பு உள்ளிட்ட மூலப் பொருட்கள் இல்லாமல் இம்மியளவு வேலை கூட இந்த கட்டுமானத் தொழிலில் நடைபெறாது, இது உங்களுக்கே தெரியும்.

ஆனால் இந்த மூலப்பொருட்கள் ஒவ்வொன்றிற்கும், அதனை உரிய காலத்தில் ஏற்பாடு செய்வதற்கும் அந்த வீட்டை கட்டுகிறவர் படுகிற பாடு இருக்கிறதே, அது பெரும் பாடாக இருக்கிறது. சாதாரணமாக சொந்த செலவில் வீடு கட்டுகிறவர்களே மேற்படி கட்டுமானப் பொருட்களுக்கு மலை மேல் ஏறி பல்டியடித்துக் கொண்டிருக்கிற அசாதாரணமான சூழ்நிலையில் இப்போது அரசு சார்பாக புதியதாக மூன்று லட்சம் வீடுகளைக் கட்டப் போகிறவர்கள் கதி என்ன ஆவது?

இந்தப் பிரச்சினையின் தீவிரத்தை இப்போது வீடு கட்டத் தொடங்கி இருக்கிற பயனாளிகள் எல்லாருமே உணரத் தொடங்கி விட்டனர். அதாவது, முதலில் நாம் மணலில் இருந்து தொடங்குவோம். ஆறு மாதங்களுக்கு முன்னர் ரூபாய் ஆயிரம் முதல் ஆயிரத்து இருநூறு வரை விற்கப்பட்ட ஒரு டிராக்டர் மணல், இப்போது இரண்டாயிரம் ரூபாய்க்கும் அதற்கு மேலாகவும் விற்கப்படுகிறது. அதே நேரத்தில் சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக ஆங்காங்கே இவர்கள் ஏற்கனவே மணல் கொள்ளை நடத்தி வந்த 'மணல் குவாரிகள்' சார்ந்த நீர் நிலைகள் பலவற்றில் தண்ணீர் ஓடிக் கொண்டிருப்பதால் இப்போது மணல் அள்ளுவதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் வீடு கட்டுவதற்கு போதிய மணல் கிடைக்காமல் அவதிப்பட வேண்டியுள்ளது.

அடுத்தது, செங்கல். இதற்கும் ஏறத்தாழ அதே நிலைமைதான். சொல்லப் போனால் இந்த செங்கல் கதை பெரிய அலிபாபா கதை போன்றது. செங்கல் சூளைகளுக்கு அந்தந்த பகுதிகளிலே உள்ள கிராமப்புற ஏரிகளில்தான் மண் எடுப்பது வழக்கம். சாதாரண காலங்களிலேயே இந்த ஏரிகளில் மண் எடுப்பது என்பது மிக சிக்கலானது. இப்போது மழை பெய்து பெரும்பாலான ஏரிகள் நீர் நிரம்பியும், நிரம்பாமலும், சேரும் குட்டையுமாகக் காட்சியளிக்கிறது. இந்த நேரத்தில் எடுக்கப்படுகிற மண் ஈரம் கலந்து இருப்பதால் சரிவர செங்கல் அறுக்க முடியாமால் சூளை உரிமையாளர்கள் அவதிக்கு உள்ளாகின்றனர். அறுக்கப்படுகிற செங்கல்கள் செவ்வக வடிவில் இருந்தால் மட்டுமே உரிய விலைக்காவது விற்க முடியும், ஈரம் அதிகமாக இருந்தால் செங்கல்லை உரிய வடிவத்தில் அறுக்க முடியாது. அதுபோக சூளைகளுக்குப் பயன்படுத்துவதற்கு காய்ந்த விறகுகள் கிடைக்காமல் ஈர விறகுகள் பயன்படுத்தப்படுவதால் புகை மூட்டம் உண்டாகி செங்கல்லில் கருமை நிறம் படிவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த நடைமுறை சிக்கல்களினால் செங்கற்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுப் போய் ஆறு மாதங்களுக்கு முன்னர் 2.50 ரூபாய் விற்ற ஒரு செங்கல், இப்போது 5.00 ரூபாய் முதல் 6.00 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

அடுத்தபடியாக ஜல்லி கற்கள் மற்றும் பில்லை கற்களுக்கு வருவோம். ஒரு யூனிட் ஜல்லியின் விலையை இவர்கள் இப்போது இரண்டு மடங்காக்கி இருக்கிறார்கள். பில்லை கற்களை எடுத்துக் கொண்டால் கொஞ்ச நாள் முன்பு வரை 5.00 ரூபாய் விற்ற பில்லை கல் இப்போது 10.00 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

இதெல்லாம் போக
, சிமெண்டு, இரும்பு, கதவு - ஜன்னல் ஆகியவற்றை அரசு சார்பாக வழங்குவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதிலே என்னவெல்லாம் கூத்துக்கள் நடைபெறும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. மாதந்தோறும் வழங்கப்படுகிற ரேஷன் பொருட்களிலேயே கண்ணம் வைத்துக் கொள்ளை அடித்துக் கொண்டிருக்கும் அதிகாரிகள் இந்த கட்டுமானப் பொருட்களைத்தானா விட்டுவைக்கப் போகிறார்கள். இதிலும் ஏகப்பட்ட உள்ளடி வேலைகள் நடைபெறுகிறது.

இங்கே சிமெண்டு விலையும், இரும்பு விலையும் எப்போது ஏறுகிறது, எப்போது இறங்குகிறது என்று யாராலும் உறுதியாகச் சொல்ல முடியாது. இப்போது ஒரு கிலோ இரும்பின் விலை ரூ. 36.00. மூன்று மாதங்களுக்கு முன்னால் ரூ. 32.00ஆக இருந்தது. இன்னும் மூன்று மாதங்கள் கழித்து ரூ. 40.00ஆகக் கூட மாறினாலும் யாரும் கேள்வி கேட்க முடியாது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த 'வீடு வழங்கும்' திட்டத்தின் பயனாளி ஒருவன் எப்படி தான் கட்டுகிற வீட்டை வெற்றிகரமாக கட்டி முடிக்கப் போகிறானோ, அது இந்த சர்க்காருக்கே வெளிச்சம். மேலும் ஒரு பயனாளிக்கு அதிகபட்சமாக ரூ. 75,000 மட்டுமே இந்த திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது. இந்தத் தொகையை வைத்துக் கொண்டு மேலே சொல்லப்பட்ட சிக்கல்களை எல்லாம் ஒருவன் அனுபவித்து தனக்கு கான்கிரீட் வீடு கட்டிக் கொள்கிறான் என்றால், அதுதான் உண்மையிலே அவன் வாழ்நாளிலேயே செய்த ஆகப்பெரிய சாதனையாக இருக்கும் என்பதில் நமக்கு எந்த சந்தேகமும் இல்லை.

இந்த கட்டுமானப் பொருட்களின் விலை ஏற்றம் ஒருபுறம் இருந்தாலும் கட்டட வேலை செய்வதற்கு கொத்தனார்கள் கிடைப்பது குதிரைக் கொம்பாக இருக்கிறது. ஊர்ப்புறங்களில் இருந்த கொஞ்ச நெஞ்ச கொத்தனார்களும் கூலி அதிகம் கிடைக்கிறதே என்று நகர்ப்புறங்களுக்கு சென்று விட்ட நிலையில் இங்கே இருக்கிற குறைந்தபட்ச ஆட்களைக் கொண்டுதான் இந்தப் பயனாளிகளும் தங்கள் வீடுகளைக் கட்டிக் கொள்ளவேண்டிய நிலையில் இருக்கிறார்கள். கூலியும் ஒரே நிலையில் இருப்பதில்லை. ஊருக்கு ஏற்ற மாதிரி, சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரி கூலி நிர்ணயிக்கப்படுகிறது.

ஆக, கட்டுமானப் பொருட்களின் எக்ஸ்பிரஸ் வேகத்திலான விலை ஏற்றம், கூலி உயர்வு பிரச்சினைகள், பருவ நிலை மாற்றங்கள் இவற்றில் எல்லாம் தடுக்கி விழுந்து எழுந்து ஒரு பயனாளி தன்னுடைய வீட்டை கட்டி முடிப்பதற்கு சர்க்கார் நிர்ணயித்திருக்கிற தொகை என்பது பாதியளவு கூடக் காணாது. இந்த திட்டத்தின் மூலம் வீடற்றுக் கிடக்கிறஏழைகள் ஒரே இரவுக்குள் வீடு பெற்றுமகிழ்ச்சி அடைந்து விடுவார்கள் என்று யாராவதுநம்பினால் அவர்களைத் தவிர அப்பாவி யாரும் இருக்க முடியாது.

எந்த நேரத்திலும் தேர்தல் நெருங்கி விடலாம் என்பதை கருத்தில் கொண்டு, பணிகளை விரைவுபடுத்துங்கள் என்று அவ்வப்போது அதிகாரிகள் வந்து எச்சரித்துக் கொண்டே இருக்கின்றனர். அந்தப் பயனாளி என்னதான் செய்வான் பாவம், சித்தெறும்புக்கு கிடைத்த வெல்லக்கட்டி கதையாகிவிட்டது அவனுடைய நிலைமை. தூக்கிக் கொண்டும் சுற்ற
முடியாது
, விட்டுவிட்டும் செல்ல முடியாது.

ஒருவேளை வரப்போகிற தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் தொடர்ந்து இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுமா? இந்தக் கேள்வி வேறு அவ்வப்போது அவன் கண்முன்னே வந்து போகிறது. ஒருவேளை தங்களுக்கு சர்க்கார் வழங்கியிருக்கிற தொகையை நம்பி, அவனும் கொஞ்சம் கைக்காசைப் போட்டு வீட்டு வேலையை ஆர்வமாகத் தொடங்கி இருக்கிற பயனாளி இறுதியில் கடனாளி ஆகாமல் தப்பித்துக் கொண்டால் பெரிய விஷயம்!

நிலைமை இவ்வாறு இருக்க, தமிழக சர்க்காரின் துணை முதல்வர் ஒருபக்கம் 'கலைஞர் அரசின் நலத்திட்டங்களைப் பார்த்து அமெரிக்க அதிபர் ஒபாமாவே வியப்பு எய்துகிறார்' என்று பேசி வருகிறாராம்!

இந்த வரலாற்று சிறப்பு மிக்க திட்டத்திற்கான விழாக்கள் தோறும் ஒரு மந்திரி என்னடாவென்றால் தமிழ்நாட்டிற்கே 'கலைஞர் நாடு' என்று பெயர் மாற்றினாலும் தகும் என்றும் பேசி வருகிறார். ஆமாம், ஆமாம்... கலைஞர் நாடு என்றும் மாற்றலாம், 'கடனாளி நாடு' என்றும் மாற்றலாம்.

ஓலைக் குடிசையிலாவது அந்தப் பயனாளி வேட்டி - சட்டையோடு வாழ்ந்திருப்பான்.
அவனுக்கு கான்கிரீட் வீட்டைக் கட்டிக் கொடுத்து அவனுடைய அரைக் கோவணத்தையும் உருவி விட்டால் நாடு வெளங்கும்!



"கலைஞர் வீடு வழங்கும் திட்டம் 2010 - 2016" Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

"கலைஞர் வீடு வழங்கும் திட்டம் 2010 - 2016" Empty Re: "கலைஞர் வீடு வழங்கும் திட்டம் 2010 - 2016"

Post by venkatesan1985 Mon Jan 03, 2011 3:11 pm

அருமை,அருமை,உண்மையின் பிம்பம் இக்கட்டுரை.
venkatesan1985
venkatesan1985
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 35
இணைந்தது : 05/12/2010

http://archakarkural.forumta.net

Back to top Go down

"கலைஞர் வீடு வழங்கும் திட்டம் 2010 - 2016" Empty Re: "கலைஞர் வீடு வழங்கும் திட்டம் 2010 - 2016"

Post by பூஜிதா Mon Jan 03, 2011 5:22 pm

இந்த தேர்தலில் மக்கள் என்ன முடிவு எடுப்பார்கள் என்று தெரிந்தால் தான் இந்த திட்டத்தை 6 ஆண்டுகளில் செயல்படுத போவதாக கூறுகிறார்கள் நாம் இவர்களுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும்.....


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

"கலைஞர் வீடு வழங்கும் திட்டம் 2010 - 2016" Empty Re: "கலைஞர் வீடு வழங்கும் திட்டம் 2010 - 2016"

Post by உதயசுதா Mon Jan 03, 2011 5:40 pm

கண்டிப்பா அடுத்து வர்ற கட்சி அரசு கஜானாவுல பணம் இல்லாம தவிக்கணும்ன்னு ஒரு கொள்கை முடிவோடுதான் கிழ முதல்வர்
செயல் பட்டு கொண்டு இருக்கிறார். இனி அடுத்து ஆட்சிக்கு வந்து தமிழ்நாட்டை சுரண்டாத அளவுக்கு மக்கள் இவருக்கு பாடம்
காத்துக் கொடுக்க வேண்டும் செய்வார்களா?


"கலைஞர் வீடு வழங்கும் திட்டம் 2010 - 2016" U"கலைஞர் வீடு வழங்கும் திட்டம் 2010 - 2016" D"கலைஞர் வீடு வழங்கும் திட்டம் 2010 - 2016" A"கலைஞர் வீடு வழங்கும் திட்டம் 2010 - 2016" Y"கலைஞர் வீடு வழங்கும் திட்டம் 2010 - 2016" A"கலைஞர் வீடு வழங்கும் திட்டம் 2010 - 2016" S"கலைஞர் வீடு வழங்கும் திட்டம் 2010 - 2016" U"கலைஞர் வீடு வழங்கும் திட்டம் 2010 - 2016" D"கலைஞர் வீடு வழங்கும் திட்டம் 2010 - 2016" H"கலைஞர் வீடு வழங்கும் திட்டம் 2010 - 2016" A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

"கலைஞர் வீடு வழங்கும் திட்டம் 2010 - 2016" Empty Re: "கலைஞர் வீடு வழங்கும் திட்டம் 2010 - 2016"

Post by வேணு Mon Jan 03, 2011 6:28 pm

உதயசுதா wrote:கண்டிப்பா அடுத்து வர்ற கட்சி அரசு கஜானாவுல பணம் இல்லாம தவிக்கணும்ன்னு ஒரு கொள்கை முடிவோடுதான் கிழ முதல்வர்
செயல் பட்டு கொண்டு இருக்கிறார். இனி அடுத்து ஆட்சிக்கு வந்து தமிழ்நாட்டை சுரண்டாத அளவுக்கு மக்கள் இவருக்கு பாடம்
காத்துக் கொடுக்க வேண்டும் செய்வார்களா?
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்


போற்றுவார் போற்றட்டும் .....
புழுதி வாரி தூற்றுவோர் தூற்றட்டும் ....
-கவியரசர்
வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010

http://onlinehealth4wealth.blogspot.com

Back to top Go down

"கலைஞர் வீடு வழங்கும் திட்டம் 2010 - 2016" Empty Re: "கலைஞர் வீடு வழங்கும் திட்டம் 2010 - 2016"

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum