ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் - 10

+2
கலைவேந்தன்
Aathira
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் - 10 Empty நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் - 10

Post by Aathira Sun Jan 02, 2011 11:22 am

சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -10

நாள்: 02.01.2011 நேரம்: மாலை 6.30 மணி

இடம்: சிவன் பூங்கா, கலைஞர் நகர்
சென்னை 600 078
(கலைஞர் நகர் காவல் நிலையம் எதிரில்)

முன்னிலை
பாலகோபாலன் M.A.
சொற்பொழிவாளர்:

பேராசிரியர்.
முனைவர். P. அண்ணாதுரை
தமிழ்த்துறை
மார் கிரிகோரியஸ் கலை அறிவியல் கல்லூரி,
முகப்பேர், சென்னை.
தலைப்பு:
புறப்பாடல்களில் காணலாகும் சமுதாய மேன்மை.

சங்கத் தேனருந்த வாரீர்!!
பொங்கு தமிழின்பம் காணீர்!!

மேலும் விபரத்திற்கு
http://painthamizhcholai.blogspot.com/

- பொதுச்செயலாளர்.

நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் - 10 Aநெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் - 10 Aநெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் - 10 Tநெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் - 10 Hநெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் - 10 Iநெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் - 10 Rநெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் - 10 Aநெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் - 10 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் - 10 Empty Re: நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் - 10

Post by கலைவேந்தன் Sun Jan 02, 2011 3:25 pm

இலக்கியக்கூடல் இனிதே நிறைவேற எனது மனமார்ந்த பாராட்டுகக்ள் ஆதிரா..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் - 10 Empty Re: நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் - 10

Post by srinihasan Sun Jan 02, 2011 3:52 pm

புத்தம் புது வருடத்தில் நிகழும் இந்த முதல் கூட்டமும் இனிவரும் எல்லா கூட்டமும் தங்கள் சீரிய தலைமையில் இனிதே நடைபெற என் மனமார்ந்த நல்வாழ்த்துகள்.

Last edited by srinihasan on Sun Jan 02, 2011 4:07 pm; edited 1 time in total

இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் - 10 Empty Re: நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் - 10

Post by ரபீக் Sun Jan 02, 2011 4:05 pm

இனிதே நடைபெற என்னுடைய பிரார்தனைகள் அக்கா

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் - 10 Empty Re: நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் - 10

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Sun Jan 02, 2011 9:42 pm

வாழ்த்துக்கள்..ஆதிரா.அக்கா...
வளரட்டும்..தமிழும்...அதனோடு..
உங்களது தமிழ்சேவையும்.. அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் - 10 Friendshipcomment54நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் - 10 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் - 10 Empty பத்தாவது செந்தமிழ் முழக்கத்தின் அறிக்கை....

Post by Aathira Mon Jan 03, 2011 12:18 am

பத்தாவது செந்தமிழ் முழக்கத்தின் அறிக்கை....

நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் பத்தாவது சங்க இலக்கிய செந்தமிழ் முழக்கம் 02/01/11 ஞாயிற்றுக் கிழமை அன்று சென்னை கலைஞர் நகரில் உள்ள சிவன் பூங்காவில் நடைபெற்றது.

திரு தென்னரசு அவர்களால் பாடப்பட்ட தவத்திரு தேன்மொழியார் சுவாமிகளின் குறளுடன் முழக்கம் இனிதே துவங்கியது.

அடுத்ததாக நெய்தலங்கானல் பைந்தமிழ்ச் சோலையின் பொதுச்செயலாளர் ப.பானுமதி, முழக்கத்திற்கு வருகை தந்திருந்த சிறப்புப் பேச்சாளர், சிறப்பு விருந்தினர் உள்ளிட்ட அனைவரையும் முறையாக வரவேற்றார்.

அதைத் தொடர்ந்து இம் முழக்கத்திற்கு முன்னிலை வகித்த திரு பாலகோபாலன்,
இந்த இலக்கிய அமைப்பின் நோக்கத்தையும் சங்கத்தமிழின் மேன்மையையும்
பற்றி சிறு குறிப்பையும் கூறி முழக்கத்தைத் துவக்கி வைத்தார்.

அடுத்ததாகப் சொற்பொழிவு ஆற்றியச் சிறப்புப் பேச்சாளர் , பேராசிரியர். முனைவர். ப. அண்ணாதுரை அவர்கள் சங்ககால மக்கள் குழுவாக வாழ்ந்தாலும், இக்காலம் போன்று இனப் பிரிவின்றி வாழ்ந்தனர். புறவாழ்வில் அவர்களிடம் குடிகொண்ட வீர்ம், அவர்கள் போற்றிய பண்பு அதனால் அக வாழ்விலும் அவர்கள் பெற்ற மேன்மை ஆகியவற்றைப் பாடல்கள் மேற்கோளுடன் விளக்கினார்.ஆங்காங்கு வீரத்துக்குச் சான்றாக புறநானூற்றுப் பாடல்கள் மேற்கோள்களாக எடுத்துக் காட்டினார்..

அடுத்ததாகச் சேலத்தில் இருந்து வருகை புரிந்திருந்த இந்தியன் வங்கியின் முதன்மை மேலாளர் திரு மா. முருகப்பன் அவர்கள் ஒரு சிற்றுரை ஆற்றினார். அவர் பேசுகையில் சங்க இலக்கியத்தில் இளைஞர்களின் மேம்பாட்டுக்கு ஊக்குவிக்கும் பகுதிகள் எங்கெங்கு உள்ளன என்பதை ஆய்ந்து அவற்றைப் பேசினால் இளைஞர்கள் முக்கியமாகச் சிறுவர்கள் தமிழ் மீது ஆர்வம் கொள்வர். தமிழை வளர்ப்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவு இளைய தலைமுறைகளுக்கு சங்க இலக்கியம் எந்த அளவு பயன் தரும் என்பதையும்
சிந்தித்துச் செயல் படுவது நம்து முக்கிய கடமை என்றார்.

அடுத்ததாக பேசிய நிறுவனர், பெரும்புலவர். முனைவர் . சி.வெ. சுந்தரம் அவர்கள்,
நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலை என்று இவ் அமைப்புக்கு பெயர் வைக்கப்பட்ட காரணத்தை விளக்கினார். நெய்தல் நிலத்தின் உரிப்பொருள் இரங்கலும் இரங்கல்
நிமித்தமும். மீன்ப்டிக்கவோ முத்து எடுக்கவோ கடலுக்குச் சென்ற தலைவன்

திரும்பி வர வேண்டுமே என்று இரங்கி நிற்பாள் தலைவி. தமிழை ஆண்ட தமிழர்களை இன்று ஆங்கிலம் ஆண்டுகொண்டு இருக்கிறதே;. இந்நிலை எப்போது மாறும் என்று இரங்கியதாலே இவ் அமைப்புக்கு ’நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலை’ என்று பெயர் வந்தது என்று கூறினார். பைந்தமிழ்ச்சோலையின் செயல்பாடுகள் குறித்தும், அதன் செயற்பாடுகள் வலைப்பூவில் பதிவு செய்யப் படுவது குறித்தும் பேசினார்,

அடுத்ததாக இவ் அமைப்பின் பொதுச்செயலாளர் ப. பானுமதி அவர்களால் சிறப்புரையில் இருந்து சில வினாக்கள் எழுப்பப்பட்டு, சரியான விடை பகர்ந்தவர்களுக்குப் புத்தகங்கள் பரிசாகக் கொடுக்கப் பட்டன.

வினாக்கள்:
1. கெடுக சிந்தை’ என்று தொடங்கும் பாடலை இயற்றியவர் யார்?
2..குறிஞ்சி நிலத்தின் கடவுள் யார்?
3.”ஈன்ற பொழுதினும் பெரிதும் உவந்தனளே” என்ற பாடலை இயற்றியவர் யார்?

பரிசு பெற்றவர்கள்:
1. திருமதி.சந்திரா சிவகுமார்,
2..திருமதி. சிவகாமி இளமதி
4. திருமதி. லட்சுமி சிவகாமி.
4. திரு. தென்னரசு

அடுத்த நிகழ்வாகப் பாவலர் . மா. வரதராசன் புத்தாண்டு வாழ்த்தாக “வார்த்தைகள் அல்ல வாழ்த்துக்கள்” என்ற தலைப்பில் எழுச்சி மிகு கவிதை ஒன்றை படித்தார்.

அடுத்து முறையான நன்றியுரை பேரா.முனைவர். சேதுராமலிங்கம் அவர்களால் வழ்ங்கப்பட்டது.

நிகழ்வின் இனிய இறுதியாக திருமதி. சந்திரா சிவகுமார் அவர்கள் தமிழிசை ஒன்றைப் பாடினார்.

விழாவின் இடையில் வருகை தந்திருந்த அனைவருக்கும் இவ் அமைப்பின் சிறு தொண்டன் (இளவல் பாலாஜி) இன்சுவை பணியங்களை வழ்ங்கினான்.

பொதுச்செயலாளர் ப. பானுமதி அவர்களால் அடுத்த கூட்டத்தின் அறிவிப்பு செய்யப் பட்டது. வந்திருந்த அனைவரிடமும் கையொப்பமும் அலைபேசி எண்களும் பெற்றுக்கொண்ட பின்பு அனைவரும் இனிதே பிரியா விடை பெற்றனர்..

- பொதுச்செயலாளர்.

நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் - 10 Aநெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் - 10 Aநெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் - 10 Tநெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் - 10 Hநெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் - 10 Iநெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் - 10 Rநெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் - 10 Aநெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் - 10 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் - 10 Empty Re: நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் - 10

Post by Aathira Mon Jan 03, 2011 12:32 am

வாழ்த்து சொன்ன கலை, ரபீக், வாசன், சூர்யா அனைவருக்கும் என் மனமர்ந்த நன்றி.
விழா நிறைவாக இருந்தது. மகிழ்ச்சியாக...
நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் - 10 678642 நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் - 10 678642 நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் - 10 154550

நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் - 10 Aநெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் - 10 Aநெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் - 10 Tநெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் - 10 Hநெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் - 10 Iநெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் - 10 Rநெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் - 10 Aநெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் - 10 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் - 10 Empty Re: நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் - 10

Post by Aathira Thu Jan 27, 2011 10:44 pm

வார்த்தைகள் அல்ல வாழ்த்துக்கள்

சிந்திக்கத் தெரிந்த மனிதனின் வாழ்வு
சிரிப்பில் தொடங்கும் ஆதியிலே - அதைத்
தொந்தரவென்று மறந்தவர் வாழ்வு
தோல்வியில் முடியும் பாதியிலே!

சிட்டுகுருவி கொத்தித் திரியும்
சிந்தனைச் சிறிதும் இருக்காது - மனக்
கட்டுப் பாட்டால் வாழும் நமக்குக்
கவலைகள் எதுவும் பிறக்காது!

கண்ணில் தெரியும் கட்சிகள் எல்லாம்
கருத்தில் வைக்கத் தகுந்ததிலை - இங்கு
தன்னைத் தோண்டி உணர்ந்தவர் வாழ்வில்
தன்னலக் கழிவுகள் புகுந்ததிலை!

வாழ்வைத் தேடி வளங்களைத் தேடி
மனான்களை நாடி ஓடாதே - உன்
வாழ்வை அவர்தம் காலடி வைத்து
மறுபடி வாழ்வைத் தேடாதே!

கண்ணை மூடி கனவுகள் காணும்
காலங்கள் போதும் விட்டுவிடு - நீ
உண்மை உணர்ந்து உழைப்பை உணர்ந்து
உலகை உன்கீழ் சுற்றவிடு!

ஞாலம் உன்றன் விரல்நுனியில் இனி
நடப்பவை எல்லாம் நலமாகும் - வரும்
காலம் நமது கைப்பிடியில் நம்
கைகள் இணைந்தால் பலமாகும்!

சொல்லும் செயலும் தெளிவாய் இருந்தால்
தோல்விகள் உன்னை செருங்காது - கருங்
கல்லாய் இருந்தால் கழியும் காலம்
கண்டிப் பாகத் திரும்பாது!

பெரிதாய் எண்ணிச் சேரும் நட்பில்
பிழைகள் இருந்தால் சிறக்காது - நீ
பெரியோர் துணையை ஏற்க மறுத்தால்
பெருமையின் கதவுகள் திறக்காது!

காரிருள் துன்பம் கவிழ்த்திடும் போது
கலங்குதல் வேண்டா விட்டுவிடு - நீ
சூரிய னுக்கே மாற்று விளக்கு
துயர்களைப் பொசுக்கிச் சுட்டுவிடு!

சோர்வாய் இருந்தால் சுண்டெலி யும்உன்
தோளில் தூளி கட்டிவிடும் - உன்
சோர்வால் நாளை சரித்திரம் எழுதும்
சுவடியில் உன்பேர் கெட்டுவிடும்!

அன்பும் பண்பும் அறிவும் இருந்தால்
அவன்பேர் மனிதன் தெரிந்துகொள் - அதை
மன்பதை வாழும் உயிர்களுக் கெல்லாம்
வழ்ங்குவோன் கடவுள் புரிந்துகொள்!

அன்பைக் கூட்டி உயிர்களை நேசி
அதுவே நமக்கு உயிராகும் - அது
இன்பத் திற்கும் துன்பத் திற்கும்
இடையே உள்ள கயிறாகும்!

எழுந்து நின்று முயன்றால் அந்த
இமயம் கூட உனதாகும் - நீ
விழுந்த பிறகும் அழிந்து விடாமல்
விதையாய் நாளை உருவாகும்!

பாவலர். மா. வரதராசன்.

செந்தமிழ் முழக்கத்தில் பாவலர். மா. வரதராசன் அவர்களால் படிக்கப் பட்ட கவிதை.

நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் - 10 Aநெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் - 10 Aநெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் - 10 Tநெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் - 10 Hநெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் - 10 Iநெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் - 10 Rநெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் - 10 Aநெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் - 10 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் - 10 Empty Re: நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் - 10

Post by கலைவேந்தன் Thu Jan 27, 2011 10:51 pm

பாராட்ட வார்த்தைகளில்லை.. மிக அழகிய வாழ்க்கைப்பாடத்தை அழகுத்தமிழில் வழங்கியுள்ளார்.

இங்கே பகிர்ந்தமைக்கு நன்றி ஆதிரா... நலம் தானே...?

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் - 10 Empty Re: நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் - 10

Post by Aathira Thu Jan 27, 2011 10:54 pm

கலை wrote:பாராட்ட வார்த்தைகளில்லை.. மிக அழகிய வாழ்க்கைப்பாடத்தை அழகுத்தமிழில் வழங்கியுள்ளார்.

இங்கே பகிர்ந்தமைக்கு நன்றி ஆதிரா... நலம் தானே...?

மிக்க நன்றி கலை. நான் ரசித்த கவிதை. உடனே தட்டச்சு செய்து போட நேரமினமையால் தாமதம்.

ஒரு வியப்பு என்ன தெரியுமா. இந்த அன்பர் சாதாரனமாகப் பூ கட்டி வியாபாரம் செய்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் - 10 Aநெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் - 10 Aநெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் - 10 Tநெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் - 10 Hநெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் - 10 Iநெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் - 10 Rநெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் - 10 Aநெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் - 10 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் - 10 Empty Re: நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் - 10

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம்
» நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் - 6
» நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம்.
» நெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலையின் சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் - 9
» நெய்தலங்கானல் பைந்தமிழ்ச் சோலையின் - சங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -22

Permissions in this forum:
You cannot reply to topics in this forum