ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரு கொரியாவில் அணு ஆயுத குறைப்பு மீண்டும் 6 நாடுகள் பேச வாய்ப்பில்லை

Go down

இரு கொரியாவில் அணு ஆயுத குறைப்பு மீண்டும் 6 நாடுகள் பேச வாய்ப்பில்லை Empty இரு கொரியாவில் அணு ஆயுத குறைப்பு மீண்டும் 6 நாடுகள் பேச வாய்ப்பில்லை

Post by சிவா Thu Dec 30, 2010 8:18 am

சியோல் : "இரு கொரிய நாடுகளுக்கிடையிலான அணு ஆயுதக் குறைப்பு விவகாரத்தை பேச்சு வார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள முடியும்' என தென்கொரிய அதிபர் லீ மியுங் பாக் தெரிவித்துள்ளார். எனினும், மீண்டும் ஆறு நாடுகள் பேச்சு வார்த்தை துவங்கக் கூடிய சாத்தியம் குறைவு தான் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். வடகொரியா, 2012க்குள் அணு ஆயுத வல்லரசாக வளரத் திட்டமிட்டுள்ளது. அதற்கு அடிப்படை தேவையான அணுகுண்டு தயாரிப்பதற்கு யுரேனியம் செறிவூட்டலில் அது தற்போது ஈடுபட்டு வருகிறது. ஏற்கனவே இரண்டு முறை அணுகுண்டு பரிசோதனை செய்த வடகொரியா, அடுத்தாண்டில் மூன்றாவது முறையும் அணுகுண்டு பரிசோதனையில் ஈடுபடப்போவதாக சமீபத்தில் தென்கொரியப் பத்திரிகை ஒன்று தெரிவித்திருந்தது.

இந்நிலையில், நேற்று தென்கொரிய வெளியுறவுக் கொள்கையை வெளியிட்டு பேசிய அந்நாட்டு அதிபர் லீ மியுங் பாக் கூறியதாவது: வடகொரியா தனது அணு ஆயுதங்களை அகற்றுவது குறித்த விவகாரத்தை, ஆறு நாடுகள் பேச்சு வார்த்தை மூலம் தீர்க்க முடியும் என்று நான் நம்புகிறேன். அதேநேரம், தென்கொரியா தனது போர் ஒத்திகைகளை கைவிடாது. கொரிய தீபகற்பத்தில் அமைதி நிலவுவது ஒன்று தான் முன்னேற்றத்திற்கு வழி. என்றாலும், அதை வெறும் ராஜதந்திர நடவடிக்கைகளால் மட்டும் சாதித்து விட முடியாது. வட மற்றும் தென்கொரியாக்களுக்கு இடையிலான பேச்சு வார்த்தை மூலம் அமைதியை நிலைநாட்டவும் முடியும். இவ்வாறு பாக் தெரிவித்துள்ளார்.

ஆறு நாடுகளின் நிலை: "ஆறு நாடுகள் பேச்சு வார்த்தையோ அல்லது இரு கொரிய நாடுகளுக்கிடையிலான பேச்சு வார்த்தையோ நடப்பதற்கு பெரும்பான்மையும் வாய்ப்பில்லை. அப்படி நடந்தாலும், வடகொரியாவின் அணு ஆயுதக் குறைப்பு என்பது அதில் இடம் பெறாது' என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இரு கொரிய நாடுகள், சீனா, ரஷ்யா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய ஆறு நாடுகள் இவ்விவகாரத்தை வெவ்வேறு கோணங்களில் இருந்து அணுகுகின்றன என்கின்றனர் அவர்கள். வடகொரியா, தனது அணு ஆயுதங்களை எவ்வழியிலாவது அதிகரிக்கவே முயல்கிறது. தென்கொரியா: தென்கொரியாவைப் பொருத்தவரை, முன் நிபந்தனைகளுடன் பேச்சு வார்த்தைக்கு சம்மதிக்க அது தயாராக உள்ளது. தனது யுரேனிய செறிவூட்டலை சர்வதேச விதிகளுக்கு கட்டுப்பட்டு வடகொரியா செய்ய வேண்டும் என்பது அந்த நிபந்தனைகளில் ஒன்று.

சீனா: வடகொரியாவுக்கு நெருங்கிய நட்பு நாடு மற்றும் நிதியுதவி அளிக்கும் நாடு என்ற வகையில், சீனாவும், பேச்சு வார்த்தையை வலியுறுத்தி வருகிறது. சர்வதேச அணுசக்தி ஏஜன்சி பிரதிநிதிகள், அணு உலைகளைப் பார்வையிட வடகொரியா அனுமதிக்க வேண்டும் என்றும் கூறுகிறது. ஆனால், தனக்கருகில் இன்னொரு அணு ஆயுத வல்லரசை அது விரும்பவில்லை. "வடகொரியா அழிந்தால், லட்சக்கணக்கான மக்கள் சீனாவுக்குள் அகதிகளாக வருவர். இரு கொரியாவும் இணையும். அதுவே நமக்கு நல்லது' என்று சீனா கருதுகிறது.

அமெரிக்கா: வடகொரியா தனது அணு ஆயுதங்களைக் குறைத்தால் ஒழிய பேச்சு வார்த்தைக்கு சாத்தியமே இல்லை என்று அமெரிக்கா கூறி வருகிறது. இவ்விவகாரத்தில் சீனா உறுதியான முடிவு எடுக்க வேண்டும் என்று கூறுகிறது. ஜனவரி 19ம் தேதி அமெரிக்காவுக்கு வர உள்ள சீன அதிபர் ஹூ ஜிண்டாவோ உடன் இது பற்றி பேச்சு வார்த்தை நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜப்பான்: அமெரிக்க மற்றும் தென்கொரிய நாடுகளின் கருத்தையே ஜப்பானும் வழி மொழிகிறது. ஆனால், பேச்சு வார்த்தைக்கு இணங்கும்படி வடகொரியாவை வலியுறுத்துகிறது.

ரஷ்யா: முன் நிபந்தனை எதுவும் இல்லாமல் பேச்சு வார்த்தை நடக்க வேண்டும் என, ரஷ்யா கூறி வருகிறது. சீனாவைப் போலவே தனது எல்லைக்கருகில் ஒரு அணு ஆயுத வல்லரசு உருவாவதை ரஷ்யாவும் விரும்பவில்லை.

தினமலர்!


இரு கொரியாவில் அணு ஆயுத குறைப்பு மீண்டும் 6 நாடுகள் பேச வாய்ப்பில்லை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics
» அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் 50 நாடுகள் கையெழுத்து வல்லரசு நாடுகள் எதிர்ப்பு
» ரசாயன ஆயுத தாக்குதல் தொடர்பாக சர்வதேச நீதி விசாரணை வேண்டும் அரபு நாடுகள் வலியுறுத்தல்
» மீண்டும் போர் ஒத்திகை: அச்சத்தில் மேற்குலக நாடுகள்
» இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் நாடுகள் மீண்டும் இணையும்: ராம் மகாதேவ்
»  அமெரிக்க படை வருவதால் கொரியாவில் பதட்டம், போர் வெடிக்குமா?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum