உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» இலவசங்கள் என்பதும் ஒருவகை லஞ்சமே.by mohamed nizamudeen Yesterday at 8:33 pm
» மூன்றரை கி.மீ. நீள சரக்கு ரயில்!
by mohamed nizamudeen Yesterday at 8:32 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 18/08/2022
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm
» சென்னையில் பிங்க் நிற பேருந்து மீது கல்வீச்சு: மாணவர்கள் அட்டகாசம்!
by T.N.Balasubramanian Yesterday at 8:20 pm
» பிரியாணியின் விலை 75 பைசா!
by mohamed nizamudeen Yesterday at 8:14 pm
» 'இந்திய உயிர் ஈட்டுறுதி இணையம்' என்பது என்ன?
by T.N.Balasubramanian Yesterday at 8:14 pm
» 250 கூடுதல் பேருந்துகள்!
by mohamed nizamudeen Yesterday at 8:11 pm
» சென்னை வங்கி நகைக்கொள்ளையில் இன்ஸ்பெக்டருக்கும் தொடர்பா? அதிர்ச்சி தகவல்!
by T.N.Balasubramanian Yesterday at 8:00 pm
» மத்திய அரசை வியந்து பாராட்டிய ஏர்டெல் நிறுவனர்: காரணம் இது தான்
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» இரட்டை இலையை முடக்கவேண்டும்
by T.N.Balasubramanian Yesterday at 5:03 pm
» உலகின் மாசடைந்த நகரங்கள்: டில்லி முதலிடம், கோல்கட்டா 2வது இடம்
by T.N.Balasubramanian Yesterday at 4:49 pm
» வரலாற்றில் இடம்பெற ஈஸியா ஒரு வழி...
by T.N.Balasubramanian Wed Aug 17, 2022 8:47 pm
» குளிரிரவில் தேனிலவு
by T.N.Balasubramanian Wed Aug 17, 2022 8:43 pm
» மின்கம்பியில் குருவிகள்
by T.N.Balasubramanian Wed Aug 17, 2022 8:10 pm
» எல்லோரும் ஒன்னாவோம் --OPS
by T.N.Balasubramanian Wed Aug 17, 2022 6:14 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Wed Aug 17, 2022 3:17 pm
» தேனிலவு தித்திக்க... திகட்டாத 10 இடங்கள்
by ayyasamy ram Tue Aug 16, 2022 8:02 pm
» காலமெனும கடத்தல்காரன்...!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:47 pm
» வெற்றி என்பது தொடர் முயற்சியின் விளைவுகளே!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:33 pm
» "பொன்னியின் செல்வன்" ட்ரெய்லரை முதல்வர் ஸ்டாலின் வெளியிடுகிறார்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:28 pm
» ஆங்கிலம் ஒரு ஆபத்தான மொழி…!
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 6:47 pm
» வித்தியாசமான விருந்து
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:26 pm
» பிறர்நலம் பேணிய பெருந்தகை
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:24 pm
» தோல் நலத்தைப் பாதுகாக்க…
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:07 pm
» எமோஜி- இணையதள தொடர் விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:05 pm
» ’தி ரேபிஸ்ட்’ படத்தின் இயக்குநருக்கு விருது
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:59 pm
» கவர்ச்சி உடையில் நயன்தாரா
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:58 pm
» விஜய் இடத்தில் அஜீத்
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:57 pm
» போனதும் வந்ததும்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:44 pm
» சமையல் & வீட்டுக் குறிப்புகள்
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:24 pm
» கவுனி அரிசி இனிப்பு
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:22 pm
» லால்சிங் தத்தா – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:19 pm
» கடாவர் – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:18 pm
» முதுமை எல்லார்க்கும் பொதுமை – தி.வே.விஜயலட்சுமி
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:17 pm
» ஈர நிலங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:28 pm
» அமைதிக்கான காந்தியப் பண்பாடுகள்
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:24 pm
» தில்லி செங்கோட்டையில் பறந்த முதல் தேசியக் கொடி
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:21 pm
» கை வலிச்சா இதை தடவுங்க,..!
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:18 pm
» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:17 pm
» நமக்கு வாழ்க்கை - கவிதை
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:04 pm
» சுதந்திர தின இனிய காலை வணக்கங்கள்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:01 pm
» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm
» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm
» வான தேவதையின் வண்ணப்புருவங்கள்! - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:26 pm
» மௌன திராட்சை ரசம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:25 pm
» தினம் ஒரு மூலிகை - செவ்வள்ளி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:54 pm
» சினி செய்திகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:52 pm
» சுதந்திரத் திருநாள் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:23 pm
» கவுனி அரிசி லட்டு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:20 pm
» கவுனி அரிசி அல்வா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:18 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
| |||
sncivil57 |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Rajana3480 |
| |||
selvanrajan |
| |||
lakshmi palani |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
" சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் !
+18
சிவனாசான்
அகிலன்
subramaniansivam
ஜாஹீதாபானு
தர்மா
யினியவன்
பூவன்
balakarthik
ராஜு சரவணன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
அசுரன்
மாணிக்கம் நடேசன்
அருண்
சாந்தன்
சிவா
ராஜா
உதயசுதா
krishnaamma
22 posters
" சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் !
First topic message reminder :
இந்த திரி இல் , எல்லாவிதமான "Side Dishes" அதாவது டிபனுக்கு தொட்டுக்கொள்பவற்றை பார்போம். இவைகளை இட்லி, தோசை , உப்ப்மா சப்பாத்தி மற்றும் பூரி கு தொட்டுக்கொள்ளல்லாம். முதலில் வட கறி செய்வது எப்படி என் பார்ப்போம்.

Last edited by krishnaamma on Thu May 12, 2016 1:34 pm; edited 3 times in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: " சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் !
மேற்கோள் செய்த பதிவு: 1206763Hari Prasath wrote:எங்கள் வீட்டில் விறகு அடுப்பில் சுட்டு இதை செய்வார்கள் அம்மா...சுவையாக இருக்கும்
விறகு அடுப்பு, கரி அடுப்பில் சுட்டாலே சுவை தனி தான் ஹரி

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
கத்தரிக்காய் கொத்ஸு!
சிதம்பரம் மக்களுக்கு கத்திரிக்காய் கொஸ்து மிகவும் பிடித்த ஒரு உணவாகும், இட்லி மற்றும் தோசைக்கும் இதை சேர்த்து உண்ணும் பழக்கம் உண்டு. அதை செய்யும் முறையை இங்கு பார்க்கலாம்
கத்தரிக்காய் கொத்ஸு.
தேவையான சாமான்கள்:
பிஞ்சு கத்தரிக்காய் — கால் கிலோ
புளி — ஒரு எலுமிச்சை அளவு அல்லது 2 டீ ஸ்பூன்
மஞ்சள் பொடி — ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை — கொஞ்சம்
கொத்ஸு பொடி — 5 டீஸ்பூன் (செய்முறை கீழே கொடுத்துள்ளேன்
)
நல்லெண்ணெய் – 5 டேபிள்ஸ்பூன்
கடுகு — 1 டீஸ்பூன்
வெல்லம் (துருவியது) — 1/2 டீஸ்பூன்
உப்பு
கொத்ஸு பொடிக்கு வேண்டிய சாமான்கள்:
கொத்தமல்லி விதை — 3 டேபிள்ஸ்பூன்
சீரகம் — 1/2 டீஸ்பூன்
துவரம்பருப்பு — 2 டேபிள்ஸ்பூன்
வெந்தயம் – 1/4 டீஸ்பூன்
கட்டிப் பெருங்காயம் – கொஞ்சம் (எண்ணெயில் பொரித்துக் கொள்ளவும்)
அல்லது அரை டீ ஸ்பூன் பெருங்காய பொடி போட்டுக்கொள்ளலாம்.
சிகப்பு வர மிளகாய் — 5
ஒரு வாணலியில், எண்ணெய் விடாமல், மேலே உள்ள பொருட்களை , ஒவ்வொன்றாக போட்டு, வறுத்து, ஆறினதும் கொஞ்சம் 'கரகர'ப்பாக அரைத்துக் கொள்ளவும்.
கொத்ஸு செய்முறை:
ஒரு கப் தண்ணீரில் புளியை போட்டு ஊறவிடவும்.
கத்தரிக்காய்களை நீள வாட்டில் நறுக்கவும்; தண்ணீரில் போடவும்.
ஒரு வாணலியில் நல்லெண்ணெய் 1 டேபிள்ஸ்பூன் ஊற்றி, கடுகு போடவும்.
கடுகு வெடித்தவுடன், கத்தரிக்காயை போடவும். கறிவேப்பிலை போடவும்.
கத்தரிக்காய் 5 நிமிஷங்கள் வதங்கட்டும்.
அதற்குள், ஊறிய புளியை எடுத்து, தண்ணீர் சேர்க்காமல், பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளவும்.
புளிச்சாற்றில் பாதியை கத்தரிக்காயுடன் சேர்க்கவும்.
3 அல்லது 4 டீஸ்பூன் கொத்ஸு பொடியை போட்டு, நன்கு கலக்கவும்.
உப்பு போடவும்.
மீதியுள்ள நல்லெண்ணெயையும் ஊற்றவும்.
மர கரண்டியால் கத்தரிக்காய்களை சுமாராக மசிக்கவும்.
கொத்ஸுவை கொஞ்சம் சுவைத்துப் பார்த்து, உப்பு, காரம், புளிப்பு எது குறைகிறதோ,அதை இப்போது சரிசெய்து கொள்ளவும்.
வெல்லம் போடவும்.
1/2 கப் தண்ணீர் ஊற்றி 4-5 நிமிஷங்கள் கொதிக்க விடவும்.
நன்கு கொதித்து, எண்ணெய் பிரியும்போது, அடுப்பை அணைத்து விடலாம்.
அவ்வளவுதான், அருமையான கத்தரிக்காய் கொத்ஸு ரெடி.
இந்த கொத்ஸுவை இட்லி, தோசை, சப்பாத்தியுடன் கூட சேர்த்து சாப்பிடலாம்.
ஒரு வாரம் வரை கெடாது.
குறிப்பு: புளி பேஸ்ட் போடுவதானால், கத்தரிக்காய் கொஞ்சம் வதங்கியதும், புளி பேஸ்ட் மற்றும் ஒரு தம்ளர் தண்ணீர் விடணும்
சரியா?

சிவா likes this post
வேர்கடலை சட்னி !
வேர்கடலை சட்னி !
இது தோசை இட்லி மற்றும் உப்புமாக்கு தொட்டுக்கொள்ள நன்றாக இருக்கும்.
தேவையானவை:
1 கப் வேர்கடலை
1 டேபிள் ஸ்பூன் எண்ணை
1 டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு
1 டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பு
2 - 4 பச்சை மிளகாய்
10 - 15 பல் பூண்டு
ஒரு நெல்லிக்காய் அளவு புளி (அலம்பி,ஊறவைத்துக் கொள்ளவும்) அல்லது 1/2 ஸ்பூன் புளி பேஸ்ட்
உப்பு தேவையான அளவு
தாளிக்க:
கடுகு உளுத்தம் பருப்பு
2 சிவப்பு மிளகாய்
கொஞ்சம் கறிவேப்பிலை
செய்முறை:
ஓரு வாணலியில் வேர்கடலையை போட்டு வறுக்கவும்.
நன்றாக வறுக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை, தோலை உரிக்க வரும் அளவிற்கு வறுத்தால் போதுமானது.
வறுத்த வேர்கடலையை ஒரு தட்டில் கொட்டி வைத்துக் கொள்ளுங்கள்.
அதே வாணலியில் எண்ணைவிட்டு, பருப்புகள், பச்சை மிளகாய் மற்றும் பூண்டைப் போட்டு நன்கு வறுக்கவும்.
தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.
வேர்கடலை ஆறியதும், மிக்சியில் போட்டு அதை நன்கு பொடித்துக் கொள்ளவும்.
அது நன்கு பொடிந்ததும், உப்பு மற்றும் வறுத்து வைத்துள்ள பருப்புகளையும் போட்டு, ஊற வைத்துள்ள புளியையும் போட்டு நல்லா மையாக அரைக்கவும்.
ருசி பார்த்து அரைத்ததை கிண்ணியில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
தாளிக்கும் கரண்டியில் துளி எண்ணை விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு மட்டும் மிளகாய் வற்றல், கறிவேப்பிலை போட்டு தாளித்து வேர்கடலை சட்னி மீது கொட்டவும்.
அவ்வளவு தான் அருமையான வேர்கடலை சட்னி தயார்.

ஹோட்டல் போல தேங்காய் சட்னி!
தேவையானவை:
1 கப் தேங்காய் துருவல்
5 - 6 சின்ன வெங்காயம்
2 -3 பச்சை மிளகாய்
1 டேபிள் ஸ்பூன் பொட்டுக்கடலை
உப்பு
தாளிக்க:
கடுகு, உளுத்தம் பருப்பு 1 ஸ்பூன்
பெருங்காயப் பொடி கொஞ்சம்
துளி எண்ணை
கறிவேப்பிலை
செய்முறை:
அரைக்க கொடுத்துள்ள பொருட்கள் எல்லாவற்றையும் போட்டு நன்கு அரைக்கவும்.
அதில் தாளிக்க கொடுத்த பொருட்களை கொண்டு தாளித்து கொட்டவும்.
அவ்வளவு தான், சுவையான, ஹோட்டலைப் போன்ற தேங்காய் சட்னி தயார்.

சிவா and aanmeegam like this post
வடை கறி
வடை கறி - இது ஒரு அற்புதமான சைட் டிஷ்... எங்களின் வீட்டில் படு பிரசித்தம். எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும். அதன் செய்முறையை இங்கு பார்க்கலாம்.
தேவையானவை:
200 Gms. கடலை பருப்பு
250 Gms. தக்காளி
500 Gms. பெரிய வெங்காயம்
250 Gms. எண்ணை
4 ஸ்பூன் நெய் + எண்ணை ( தாளிக்க)
50 Gms. பூண்டு
25 Gms. சோம்பு
50 Gms. பொட்டுக்கடலை
25 Gms. இஞ்சி
25 Gms. கசகசா (optional)
1/2 தேங்காய்
2 கிராம்பு
2 ஏலக்காய்
5 பச்சை மிளகாய்
2 பட்டை
உப்பு
1 ஸ்பூன் மஞ்சள் பொடி
செய்முறை:
க்டலை பருப்பை அலசி ஒரு 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.
பிறகு பாதி அளவு சோம்பு கொஞ்சம் உப்பு போட்டு சற்று 'கரகர' ப்பாக அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணை விட்டு சின்ன சின்ன பக்கோடாக்கள் போல போடவும்.
நல்ல பவுன் கலரில் எடுக்கவும். இதுவே சாப்பிட அருமையாக இருக்கும்

எல்லா மாவையும் இப்படி போட்டு எடுத்து வைத்துக் கொள்ளவும்.
கொஞ்சம் ஆறினதும் பக்கோடாக்களை பிய்த்து வைத்துக் கொள்ளவும்.
மற்ற எல்லா பொருட்களையும் (சோம்பைத் தவிர) மிஸியில் அரைத்துக் கொள்ளவும்.
மற்றுமொரு வாணலியில் நெய் + எண்ணை விட்டு, பாக்கி உள்ள சோம்பை தாளிக்கவும்.
அரைத்து வைத்ததைக் கொட்டவும்.
உப்பு போட்டு நன்கு கொதிக்க விடவும்.
அவ்வப்போது கிளறி விடவும்.
மசாலா நன்கு வதங்கி எண்ணை பிரியும் போது, பிய்த்து வைத்துள்ள பகோடாக்களை போடவும்.
அடுப்பை சின்னதாக்கி கிளறவும்.
2 - 3 டம்ளர் தண்ணீர் விடவும்; நன்கு கிளரவும்.
அவை எல்லாம் ஒன்றாக சேர்ந்து கொதிக்கட்டும்.
இபொழுது அடுப்பிலிருந்து இறக்கி விடலாம்.
அருமையான 'வடகறி' தயார்.
இது இட்லிக்கு மட்டும் அல்லாது பூரி பரோட்டாவுக்கும் தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும்.

வெஜிடபிள் கடாய் பனீர் !
வெஜிடபிள் கடாய் பனீர் !
இது ஒரு அருமையான சைட் டிஷ்... பொதுவாக ஹோட்டலுக்கு போகும் யாரும் முதலில் ஆடர் செய்வது இதுவாகத்தான் இருக்கும்
இதை ஹோட்டலைவிட அருமையாக நாமே செய்ய முடியும். அதை எப்படி என்று இங்கு பார்க்கலாம் 
தேவையானவை:
இஞ்சி 2 டேபிள் ஸ்பூன்
பூண்டு 15 -20 பற்கள்
மிளகு 1 டீ ஸ்பூன்
சீரகம் 1 டீ ஸ்பூன்
ஏலம் 5 - 6
கிராம்பு 5 - 6
பிரிஞ்சி இலை 1
பட்டை 2 துண்டு
உருளை கிழங்கு & காரட் 1 கப்
வெங்காயம் 1/2 - 1
தக்காளி 1
குடைமிளகாய் 1
முந்திரி 10 -12 அல்லது ஃப்ரெஷ் கிரீம்
வாணலியில் எண்ணை விட்டு மிளகு, சீரகம், இஞ்சி பூண்டு போட்டு வதக்கவும்.
அடுத்து தக்காளி மற்றும் வெங்காயம் போடவும்.
நன்கு வதங்கியதும் ஒரு தட்டில் கொட்டி, தனியே வைக்கவும்.
வேறு ஒரு உருளி இல் எண்ணை விட்டு பிரிஞ்சி இலை, பட்டை போட்டு வதக்கவும்.
நறுக்கி வைத்துள்ள உருளைகிழங்கு மற்றும் காரட்டை போடவும்.
நன்கு கிளறவும்.
கொஞ்சமாக தண்ணீர் சேர்க்கவும்.
அது வெந்ததும் குடை மிளகாய் மற்றும் வெங்காயம் சேர்க்கவும்.
கிளறி விடவும். அது பாட்டுக்கு வேகட்டும்.
மறுபுறம், வறுத்து வைத்ததை, முந்திரியுடன் சேர்த்து நன்கு அரைக்கவும்.
மீண்டும் வாணலி இல் எண்ணை விட்டு மிளகாய் பொடி போட்டு வதக்கவும்.
அரைத்து வைத்ததை கொட்டவும்.
தனியா பொடி போடவும்.
வேண்டுமானால் தண்ணீர் விடவும்.
அடுப்பை சின்னதாக்கவும்; அது கொஞ்சம் தொதிக்கட்டும்.
கொஞ்சம் கொதித்ததும் நன்கு கிளறிவிட்டு, அதில் மஞ்சள் பொடி காய்ந்த வெந்தயக் கீரை மற்றும் கொஞ்சம் உப்பு போடவும்.
அதற்குள் பனீரை துண்டங்களாக்கவும்.
அதன் மேல் மிளகாய் பொடி மற்றும் எலுமிச்சை சாறு உப்பு போடு கிளறி வைக்கவும்.
வாணலியில் கொஞ்சம் எண்ணை விட்டு பனீரை நன்கு வதக்கவும்.
அதை அதிகம் கிளராமல் பொறுமையாக பொரிக்கவும்.
நன்கு பொறிந்ததும், வெந்த காய் மேல் இதையும் கொட்டி கிளறி விடவும்.
மெல்ல கிளறவும்.
எல்லாமாக சேர்ந்து கொதிக்க ஆரம்பித்ததும் கொத்துமல்லி தூவி இறக்கவும். அருமையான, வெஜிடபிள் கடாய் பனீர் தயார்.
இது சப்பாத்தி, பரோட்டா மற்றும் 'நான்' வகைகளுக்கு தொட்டுக் கொள்ள மிகவும் நன்றாக இருக்கும்.
குறிப்பு: காய் நறுக்கும் போது, குடைமிளகாய்யையும், வெங்காயத்தையும் கொஞ்சம் பெரிய துண்டங்களாக நறுக்கவும். பெரிய பெரிய இதழ்களாக உள்ள வெங்காயத்தை தனியே வைத்துக் கொண்டு, மீதியை அரைக்க எடுத்துக் கொள்ளவும். கடைசியில் இவைகளை வெந்த காய்களுடன் சேர்ப்பதால், 'கருக்' என வெந்து, பார்க்கவும் மஞ்சள் படிந்து எண்ணையுடன் அழகாக இருக்கும்
வாணலியில் மிளகாய் பொடி போட்டு வதக்கும் போது ஜாக்கிரதையாக வதக்க வேண்டும், கொஞ்சம் ஏமாந்தால் தீந்து விடும்
ஆனால் அது தான் வெஜிடபிள் கடாய் பனீர் மீது மிதந்து கொண்டு பார்க்க 'ஜெவஜெவ' என்று அழகாக இருக்கும்

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|