ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 22:49

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 22:46

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:42

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:36

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 20:39

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 20:23

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:08

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:14

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:07

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:48

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 17:42

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:33

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:42

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 16:29

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:07

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:53

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:09

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:42

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:40

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 13:34

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 13:32

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 13:31

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:53

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:51

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 0:39

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 0:37

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri 14 Jun 2024 - 23:23

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri 14 Jun 2024 - 18:15

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 14:30

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:29

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:28

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:27

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:24

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:21

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 11:12

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 11:10

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 11:07

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 0:12

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu 13 Jun 2024 - 22:43

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu 13 Jun 2024 - 20:23

நிகழ்நிலை நிர்வாகிகள்

" சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் !

+18
சிவனாசான்
அகிலன்
subramaniansivam
ஜாஹீதாபானு
தர்மா
யினியவன்
பூவன்
balakarthik
ராஜு சரவணன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
அசுரன்
மாணிக்கம் நடேசன்
அருண்
சாந்தன்
சிவா
ராஜா
உதயசுதா
krishnaamma
22 posters

Page 14 of 15 Previous  1 ... 8 ... 13, 14, 15  Next

Go down

" சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் ! - Page 14 Empty " சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் !

Post by krishnaamma Tue 28 Dec 2010 - 17:33

First topic message reminder :

இந்த திரி இல் , எல்லாவிதமான "Side Dishes" அதாவது டிபனுக்கு தொட்டுக்கொள்பவற்றை பார்போம். இவைகளை இட்லி, தோசை , உப்ப்மா சப்பாத்தி மற்றும் பூரி கு தொட்டுக்கொள்ளல்லாம். முதலில் வட கறி செய்வது எப்படி என் பார்ப்போம்.


Last edited by krishnaamma on Thu 12 May 2016 - 15:04; edited 3 times in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


" சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் ! - Page 14 Empty Re: " சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் !

Post by krishnaamma Fri 22 May 2015 - 23:59

சரவணன் wrote:இதெல்லாம் உண்மையிலேயே மாமிதான் செய்ராலா? அல்லது மாமா செஞ்சு வச்சத இவர் போட்டோ எடுத்து இங்கே போட்டுகொள்கிறாரா தெரியவில்லை.....!

மாமா நீங்கதான் செய்றேல்னு நான் நெனக்கிறேன்....வாழ்க உங்கள் தொண்டு! " சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் ! - Page 14 1571444738 " சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் ! - Page 14 103459460

மேற்கோள் செய்த பதிவு: 1138088

மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி ..................... குதூகலம் குதூகலம் குதூகலம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

" சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் ! - Page 14 Empty கத்திரிக்காய் தக்காளி கொஸ்து

Post by krishnaamma Sun 24 May 2015 - 11:46

தேவையானவை :

விதை இல்லாத பிஞ்சு கத்திரிக்காய் - 5 - 6 (பொடியாக நறுக்கவும்)
தக்காளி - 2 (விதை எடுத்து பொடியாக நறுக்கவும் )
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
பூண்டு - 4 பற்கள்
மிளகாய் பொடி - 1 டீஸ்பூன்
மஞ்சள் பொடி - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
புளிபேஸ்ட் - 1 டீ ஸ்பூன்

செய்முறை:

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் விட்டு, கடுகு, சீரகம், பூண்டு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
பின்னர் அதில் கத்திரிக்காய் மற்றும் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாக வதக்கவும்.
பின்பு அதில் உப்பு, மிளகாய் பொடி மற்றும் மஞ்சள் பொடி சேர்த்து கிளறி, பின் புளிபேஸ்ட் சேர்த்து சிறிது நேரம் வதக்கி இறக்கினால், கத்திரிக்காய் தக்காளி கொஸ்து ரெடி!!! புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

" சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் ! - Page 14 Empty சுட்ட கத்தரிக்காய் கொத்ஸு

Post by krishnaamma Sun 24 May 2015 - 12:23

சுட்ட கத்தரிக்காய் கொத்ஸு

தேவையானவை:

ஒபர்ஜினி என்று சொல்லப்படும் குண்டு கத்தரிக்காய் 1 பெரியது
புளி பேஸ்ட் 1 டீ ஸ்பூன்
மிளகாய் வற்றல் 4 - 5
எண்ணை 4 டீ ஸ்பூன்
கடுகு 1/ 2 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு 1/2 ஸ்பூன்
கருவேப்பிலை கொஞ்சம்
உப்பு தேவையான் அளவு
பெருங்காயபொடி 1/4 ஸ்பூன்

செய்முறை.

கத்தரிக்காயை அலம்பி துடைத்து, அதன் மேலே கொஞ்சம் எண்ணெய் தவடவும்.
காஸ் அடுப்பில், மெல்லிய தணலில் நன்றாக சுட்டுக்கொள்ளவும்.
எல்லா பக்கமும் நன்கு வேகணும்.
பக்கத்தில் ஒரு பேசினில் தண்ணி வைத்துக்கொண்டு, சுட்ட கத்தரிக்காயை அதில் போடவும்.
ஆறினதும் தோலை எடுக்கவும்.
நன்கு பிசைந்து வைத்துக்கொள்ளவும்.
புளி பேஸ்ட் மற்றும் உப்பு போட்டு, கொஞ்சம் தண்ணிர் விட்டு கரைக்கவும்.
வாணலி இல் அல்லது இலுப்பக்கரண்டி இல் கடுகு, உளுந்து, பெருங்காயபொடி, கறிவேப்பிலை தாளித்து இதன் மீது கொட்டவும்.
அருமையான சுட்ட கத்தரிக்காய் கொத்சு ரெடி.
அரிசி உப்புமாவுடன் ரொம்ப நல்லா இருக்கும்.

குறிப்பு: உப்புமா கொழுக்கட்டைக்கும் இது நல்லா இருக்கும் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

" சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் ! - Page 14 Empty Re: " சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் !

Post by krishnaamma Thu 12 May 2016 - 15:02

DOWNLOAD

" சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்" டவுன்லோட் லிங்க் இங்கே ! புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

" சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் ! - Page 14 Empty Re: " சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் !

Post by Hari Prasath Thu 12 May 2016 - 15:47

எங்கள் வீட்டில் விறகு அடுப்பில் சுட்டு இதை செய்வார்கள் அம்மா...சுவையாக இருக்கும்



அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
avatar
Hari Prasath
தளபதி

தளபதி

பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

Back to top Go down

" சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் ! - Page 14 Empty Re: " சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் !

Post by krishnaamma Fri 13 May 2016 - 14:10

Hari Prasath wrote:எங்கள் வீட்டில் விறகு அடுப்பில் சுட்டு இதை செய்வார்கள் அம்மா...சுவையாக இருக்கும்
மேற்கோள் செய்த பதிவு: 1206763

விறகு அடுப்பு, கரி அடுப்பில் சுட்டாலே சுவை தனி தான் ஹரி புன்னகை.............. சூப்பருங்க


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

" சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் ! - Page 14 Empty கத்தரிக்காய் கொத்ஸு!

Post by krishnaamma Thu 4 Oct 2018 - 22:36

சிதம்பரம் மக்களுக்கு கத்திரிக்காய் கொஸ்து மிகவும் பிடித்த ஒரு உணவாகும், இட்லி மற்றும் தோசைக்கும் இதை சேர்த்து உண்ணும் பழக்கம் உண்டு. அதை செய்யும் முறையை இங்கு பார்க்கலாம் புன்னகை 

கத்தரிக்காய் கொத்ஸு.

தேவையான சாமான்கள்:

பிஞ்சு கத்தரிக்காய் — கால் கிலோ 
புளி — ஒரு எலுமிச்சை அளவு அல்லது 2 டீ ஸ்பூன் 
மஞ்சள் பொடி — ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை — கொஞ்சம்
கொத்ஸு பொடி — 5 டீஸ்பூன் (செய்முறை கீழே கொடுத்துள்ளேன் புன்னகை )
நல்லெண்ணெய் – 5 டேபிள்ஸ்பூன்
கடுகு — 1 டீஸ்பூன்
வெல்லம் (துருவியது) — 1/2 டீஸ்பூன்
உப்பு


கொத்ஸு பொடிக்கு வேண்டிய சாமான்கள்:


கொத்தமல்லி விதை — 3 டேபிள்ஸ்பூன்
சீரகம் — 1/2 டீஸ்பூன்
துவரம்பருப்பு — 2 டேபிள்ஸ்பூன்
வெந்தயம் – 1/4 டீஸ்பூன்
கட்டிப் பெருங்காயம் – கொஞ்சம் (எண்ணெயில் பொரித்துக் கொள்ளவும்)
அல்லது அரை டீ ஸ்பூன் பெருங்காய பொடி போட்டுக்கொள்ளலாம்.
சிகப்பு வர மிளகாய் — 5



ஒரு வாணலியில், எண்ணெய் விடாமல், மேலே உள்ள பொருட்களை , ஒவ்வொன்றாக போட்டு, வறுத்து, ஆறினதும் கொஞ்சம் 'கரகர'ப்பாக அரைத்துக் கொள்ளவும்.


கொத்ஸு செய்முறை:


ஒரு கப் தண்ணீரில் புளியை போட்டு ஊறவிடவும்.
கத்தரிக்காய்களை நீள வாட்டில் நறுக்கவும்; தண்ணீரில் போடவும்.
ஒரு வாணலியில் நல்லெண்ணெய் 1 டேபிள்ஸ்பூன் ஊற்றி, கடுகு போடவும்.
கடுகு வெடித்தவுடன், கத்தரிக்காயை போடவும். கறிவேப்பிலை போடவும்.
கத்தரிக்காய் 5 நிமிஷங்கள் வதங்கட்டும்.


அதற்குள், ஊறிய புளியை எடுத்து, தண்ணீர் சேர்க்காமல், பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளவும். 
புளிச்சாற்றில் பாதியை கத்தரிக்காயுடன் சேர்க்கவும்.
3 அல்லது 4 டீஸ்பூன் கொத்ஸு பொடியை போட்டு, நன்கு கலக்கவும்.
உப்பு போடவும்.
மீதியுள்ள நல்லெண்ணெயையும் ஊற்றவும்.
மர கரண்டியால் கத்தரிக்காய்களை சுமாராக மசிக்கவும்.
கொத்ஸுவை கொஞ்சம் சுவைத்துப் பார்த்து, உப்பு, காரம், புளிப்பு எது குறைகிறதோ,அதை இப்போது சரிசெய்து கொள்ளவும்.
வெல்லம் போடவும்.
1/2 கப் தண்ணீர் ஊற்றி 4-5 நிமிஷங்கள் கொதிக்க விடவும்.
நன்கு கொதித்து, எண்ணெய் பிரியும்போது, அடுப்பை அணைத்து விடலாம்.
அவ்வளவுதான், அருமையான கத்தரிக்காய் கொத்ஸு ரெடி.
இந்த கொத்ஸுவை இட்லி, தோசை, சப்பாத்தியுடன் கூட சேர்த்து சாப்பிடலாம். 
ஒரு வாரம் வரை கெடாது.


குறிப்பு: புளி பேஸ்ட் போடுவதானால், கத்தரிக்காய் கொஞ்சம் வதங்கியதும், புளி பேஸ்ட் மற்றும் ஒரு தம்ளர் தண்ணீர் விடணும் புன்னகை சரியா? 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

" சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் ! - Page 14 Empty வேர்கடலை சட்னி !

Post by krishnaamma Sat 10 Jul 2021 - 22:23

வேர்கடலை சட்னி !

இது தோசை இட்லி மற்றும் உப்புமாக்கு தொட்டுக்கொள்ள நன்றாக இருக்கும்.

தேவையானவை:

1 கப் வேர்கடலை
1 டேபிள் ஸ்பூன் எண்ணை
1 டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு
1 டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பு
2 - 4 பச்சை மிளகாய்
10 - 15 பல் பூண்டு
ஒரு நெல்லிக்காய் அளவு  புளி (அலம்பி,ஊறவைத்துக் கொள்ளவும்) அல்லது 1/2 ஸ்பூன் புளி பேஸ்ட்
உப்பு தேவையான அளவு

தாளிக்க:

கடுகு உளுத்தம் பருப்பு
2 சிவப்பு மிளகாய்
கொஞ்சம் கறிவேப்பிலை

செய்முறை:

ஓரு வாணலியில் வேர்கடலையை போட்டு வறுக்கவும்.
நன்றாக வறுக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை, தோலை உரிக்க வரும் அளவிற்கு வறுத்தால் போதுமானது.
வறுத்த வேர்கடலையை ஒரு தட்டில் கொட்டி வைத்துக் கொள்ளுங்கள்.
அதே வாணலியில் எண்ணைவிட்டு, பருப்புகள், பச்சை மிளகாய் மற்றும் பூண்டைப் போட்டு நன்கு வறுக்கவும்.
தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.
வேர்கடலை ஆறியதும், மிக்சியில் போட்டு அதை நன்கு பொடித்துக் கொள்ளவும்.
அது நன்கு பொடிந்ததும், உப்பு மற்றும் வறுத்து வைத்துள்ள பருப்புகளையும் போட்டு, ஊற வைத்துள்ள புளியையும் போட்டு நல்லா மையாக அரைக்கவும்.
ருசி பார்த்து அரைத்ததை கிண்ணியில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
தாளிக்கும் கரண்டியில் துளி எண்ணை விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு மட்டும் மிளகாய் வற்றல், கறிவேப்பிலை போட்டு தாளித்து வேர்கடலை சட்னி மீது கொட்டவும்.
அவ்வளவு தான் அருமையான வேர்கடலை சட்னி தயார்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

" சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் ! - Page 14 Empty Re: " சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் !

Post by krishnaamma Tue 10 Aug 2021 - 22:41

ஹோட்டல் போல தேங்காய் சட்னி!

தேவையானவை:

1 கப் தேங்காய் துருவல்
5 - 6 சின்ன வெங்காயம்
2 -3 பச்சை மிளகாய்
1 டேபிள் ஸ்பூன் பொட்டுக்கடலை
உப்பு

தாளிக்க:

கடுகு, உளுத்தம் பருப்பு 1 ஸ்பூன்
பெருங்காயப் பொடி கொஞ்சம்
துளி எண்ணை
கறிவேப்பிலை

செய்முறை:

அரைக்க கொடுத்துள்ள பொருட்கள் எல்லாவற்றையும் போட்டு நன்கு அரைக்கவும்.
அதில் தாளிக்க கொடுத்த பொருட்களை கொண்டு தாளித்து கொட்டவும்.
அவ்வளவு தான், சுவையான, ஹோட்டலைப் போன்ற தேங்காய் சட்னி தயார்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

சிவா and aanmeegam இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

" சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் ! - Page 14 Empty வடை கறி

Post by krishnaamma Wed 23 Mar 2022 - 23:04

வடை கறி - இது ஒரு அற்புதமான சைட் டிஷ்... எங்களின் வீட்டில் படு பிரசித்தம். எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும். அதன் செய்முறையை இங்கு பார்க்கலாம்.

தேவையானவை:

200 Gms. கடலை பருப்பு
250 Gms. தக்காளி
500 Gms. பெரிய வெங்காயம்
250 Gms. எண்ணை
4 ஸ்பூன் நெய் + எண்ணை ( தாளிக்க)
50 Gms. பூண்டு
25 Gms. சோம்பு
50 Gms. பொட்டுக்கடலை
25 Gms. இஞ்சி
25 Gms. கசகசா (optional)
1/2 தேங்காய்
2 கிராம்பு
2 ஏலக்காய்
5 பச்சை மிளகாய்
2 பட்டை
உப்பு
1 ஸ்பூன் மஞ்சள் பொடி

செய்முறை:

க்டலை பருப்பை அலசி ஒரு 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.
பிறகு பாதி அளவு சோம்பு கொஞ்சம் உப்பு போட்டு சற்று 'கரகர' ப்பாக அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணை விட்டு சின்ன சின்ன பக்கோடாக்கள் போல போடவும்.
நல்ல பவுன் கலரில் எடுக்கவும். இதுவே சாப்பிட அருமையாக இருக்கும் ஜாலி ஜாலி ஜாலி
எல்லா மாவையும் இப்படி போட்டு எடுத்து வைத்துக் கொள்ளவும்.
கொஞ்சம் ஆறினதும் பக்கோடாக்களை பிய்த்து வைத்துக் கொள்ளவும்.
மற்ற எல்லா பொருட்களையும் (சோம்பைத் தவிர) மிஸியில் அரைத்துக் கொள்ளவும்.
மற்றுமொரு வாணலியில் நெய் + எண்ணை விட்டு, பாக்கி உள்ள சோம்பை தாளிக்கவும்.
அரைத்து வைத்ததைக் கொட்டவும்.
உப்பு போட்டு நன்கு கொதிக்க விடவும்.
அவ்வப்போது கிளறி விடவும்.
மசாலா நன்கு வதங்கி எண்ணை பிரியும் போது, பிய்த்து வைத்துள்ள பகோடாக்களை போடவும்.
அடுப்பை சின்னதாக்கி கிளறவும்.
2 - 3 டம்ளர் தண்ணீர் விடவும்; நன்கு கிளரவும்.
அவை எல்லாம் ஒன்றாக சேர்ந்து கொதிக்கட்டும்.
இபொழுது அடுப்பிலிருந்து இறக்கி விடலாம்.
அருமையான 'வடகறி' தயார்.
இது இட்லிக்கு மட்டும் அல்லாது பூரி பரோட்டாவுக்கும் தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

" சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் ! - Page 14 Empty Re: " சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"- வெஜிடபிள் கடாய் பனீர் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 14 of 15 Previous  1 ... 8 ... 13, 14, 15  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum