புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Today at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்டார்ட்... கேமரா ஆக்ஷன் Poll_c10ஸ்டார்ட்... கேமரா ஆக்ஷன் Poll_m10ஸ்டார்ட்... கேமரா ஆக்ஷன் Poll_c10 
81 Posts - 68%
heezulia
ஸ்டார்ட்... கேமரா ஆக்ஷன் Poll_c10ஸ்டார்ட்... கேமரா ஆக்ஷன் Poll_m10ஸ்டார்ட்... கேமரா ஆக்ஷன் Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
ஸ்டார்ட்... கேமரா ஆக்ஷன் Poll_c10ஸ்டார்ட்... கேமரா ஆக்ஷன் Poll_m10ஸ்டார்ட்... கேமரா ஆக்ஷன் Poll_c10 
9 Posts - 8%
mohamed nizamudeen
ஸ்டார்ட்... கேமரா ஆக்ஷன் Poll_c10ஸ்டார்ட்... கேமரா ஆக்ஷன் Poll_m10ஸ்டார்ட்... கேமரா ஆக்ஷன் Poll_c10 
4 Posts - 3%
sureshyeskay
ஸ்டார்ட்... கேமரா ஆக்ஷன் Poll_c10ஸ்டார்ட்... கேமரா ஆக்ஷன் Poll_m10ஸ்டார்ட்... கேமரா ஆக்ஷன் Poll_c10 
1 Post - 1%
viyasan
ஸ்டார்ட்... கேமரா ஆக்ஷன் Poll_c10ஸ்டார்ட்... கேமரா ஆக்ஷன் Poll_m10ஸ்டார்ட்... கேமரா ஆக்ஷன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்டார்ட்... கேமரா ஆக்ஷன் Poll_c10ஸ்டார்ட்... கேமரா ஆக்ஷன் Poll_m10ஸ்டார்ட்... கேமரா ஆக்ஷன் Poll_c10 
273 Posts - 45%
heezulia
ஸ்டார்ட்... கேமரா ஆக்ஷன் Poll_c10ஸ்டார்ட்... கேமரா ஆக்ஷன் Poll_m10ஸ்டார்ட்... கேமரா ஆக்ஷன் Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
ஸ்டார்ட்... கேமரா ஆக்ஷன் Poll_c10ஸ்டார்ட்... கேமரா ஆக்ஷன் Poll_m10ஸ்டார்ட்... கேமரா ஆக்ஷன் Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஸ்டார்ட்... கேமரா ஆக்ஷன் Poll_c10ஸ்டார்ட்... கேமரா ஆக்ஷன் Poll_m10ஸ்டார்ட்... கேமரா ஆக்ஷன் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஸ்டார்ட்... கேமரா ஆக்ஷன் Poll_c10ஸ்டார்ட்... கேமரா ஆக்ஷன் Poll_m10ஸ்டார்ட்... கேமரா ஆக்ஷன் Poll_c10 
18 Posts - 3%
prajai
ஸ்டார்ட்... கேமரா ஆக்ஷன் Poll_c10ஸ்டார்ட்... கேமரா ஆக்ஷன் Poll_m10ஸ்டார்ட்... கேமரா ஆக்ஷன் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஸ்டார்ட்... கேமரா ஆக்ஷன் Poll_c10ஸ்டார்ட்... கேமரா ஆக்ஷன் Poll_m10ஸ்டார்ட்... கேமரா ஆக்ஷன் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஸ்டார்ட்... கேமரா ஆக்ஷன் Poll_c10ஸ்டார்ட்... கேமரா ஆக்ஷன் Poll_m10ஸ்டார்ட்... கேமரா ஆக்ஷன் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஸ்டார்ட்... கேமரா ஆக்ஷன் Poll_c10ஸ்டார்ட்... கேமரா ஆக்ஷன் Poll_m10ஸ்டார்ட்... கேமரா ஆக்ஷன் Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஸ்டார்ட்... கேமரா ஆக்ஷன் Poll_c10ஸ்டார்ட்... கேமரா ஆக்ஷன் Poll_m10ஸ்டார்ட்... கேமரா ஆக்ஷன் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்டார்ட்... கேமரா ஆக்ஷன்


   
   
Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sat Oct 25, 2008 2:29 am

ஆர்.மணிமாலா


வீட்டிலேயே மேக்கப் போட்டு தயாராகி விட்டாள் அவந்திகா சின்னத் திரையில் கொடிகட்டி பறக்கும் பிரபலமான நடிகை அவள் முகம் காட்டாத சீரியலே இல்லை.
நிகு நிகுவென்ற உயரத்தில் உருவி விட்டாற்போல் வாளிப்பான உடல் வாகு. லென்ஸின் உபயத்தால் இன்னும் கவர்ச்சியை கூட்டிய விழிகள்.

வேணி... எல்லாம் ரெடியா? இந்தா இதையும் கார்ல வச்சிடு பனிரெண்டு வயது டச்சப் கேர்ளிடம் மேக்கப் பெட்டியை கொடுத்தாள்.

சட்டென அவளின் இரண்டு கண்களும் மென்மையாகப் பொத்தப்பட்டன. ஒரு மென்மையான பூங்கொத்தின் பாரம் அவள் முதுகில் படர்ந்து அழுத்தியது.

அவந்திகாவின் உடம்பெங்கும் ஒரு சிலிர்ப்பு.

ஆகாஷ்.. மை டியர் மேக்கப் கலைஞ்சிடும் செல்லம்

என்றபடி அவன் கைகளை விடுத்து முன்னே இழுத்து மடியில் அமர்த்திக் கொண்டாள்.

ஆகாஷ் ஏழுவயது சிறுவன். கொழு கொழுவென்று அழகாய் இருந்தான்.

ஷூட்டிங் கிளம்பிட்டியா மம்மி?

ஆகாஷ் கண்ணா உனக்கு எத்தனை முறை சொல்லியிருக்கேன்? மம்மின்னு கூப்பிடாதே... சித்தின்னு சொல்லுன்னு...

அப்ப... நீ மம்மியில் லையா?

அந்த கேள்வி அவளுக்கு வலித்தது.

கேள்வி கேட்டா எனக்குப் பிடிக்காதுன்னு உனக்குத் தெரியாதா? நான் சொல்றதை கேக்கப் போறியா இல்லையா? குரலில் கொஞ்சம் கடுமையை சேர்த்துக் கொண்டாள்.

ஆகாஷின் முகம் வாடிப் போனது.

ச... சரி...மம்... ஸாரி.. .சித்தி என்று கூறிவிட்டு அவளிடமிருந்து தன் னைப் பிடுங்கிக் கொண்டு சென்றாள்.

என்ன ஆகாஷ்?

எனக்கு ஸ்கூலுக்கு டயமாய் டுச்சு... சி...சித்தி திரும்பிப் பாராமலே கூறி விட்டு நடந்தான்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sat Oct 25, 2008 2:29 am

துளிர்க்க முயன்ற கண்களை சிமிட்டி உள்ளிழுத்துக் கொண்டாள். மேக்கப் கலைந்து விடக் கூடாதே

மேடம்... என்றபடி வந்து நின்றார் மேனேஜர் நவீன்.

என்ன நவீன்?

இதை கொஞ்சம் படிச்சுப் பாருங்க ஒரு வார இதழை நீட்டினார்.

நெருப்பு வார இதழ். பிரபல மான முன்னணி பத்திரிகை. ஆள் வோரின் எதிர்கட்சியாக தன்னைப் பற்றிய ஒருவித பயத்தை தோற்றுவித்திருக்கும் பத்திரிகை.

நெற்றி சுருங்க... அதை படித்துப் பார்த்தவளின் முகம் சடுதியில் கொப்பு ளங்களாய் வியர்த்தன.

இதுவரை ரகசியமாய் பாது காத்து வைத்துக்கொண்டிருந்த அவளின் கடந்த கால வேதனைகள், ஏமாற்றங்கள்.... அனைத்தும் எதுகை மோனையோடு, சுவைக்காக சேர்க்கப்பட்ட கற்பனை சம்ப வங்களோடு, அச்சில் அரங்கேறியிருந்தன. அவளின் குடும்ப பின்னணி, திருமணமாகாதவள் என்ற போர்வையோடு ஏழு வயது குழந்தையோடு வாழ்ந்துக்கொண்டிருக்கும் திரைமறைவு வாழ்க்கை. வாய்ப்புக்காக அவள் எத்தனை முறை கற்பை இழந்தாள் என்ற புள்ளி விபரத்தோடு நாட்டிற்கு மிகத் தேவையான விஷயங்களை அள்ளித் தெளித்திருந்தார்கள்.

இதயம் குமுற... அணைமீறி கன்னத்து பவுடரை கலைத்தது கண்ணீர்

அவந்திகா ஷூட்டிங் ஸ்பாட் போவதற்குள்ளாக நு}று முறையாவது அவள் செல்போன் கதறியிருக்கும்.

அத்தனையும் நெருப்பு இதழில் வந்த அவள் மேட்டர் குறித்துதான் துக்கம் விசாரித்தார்கள். மிக சிரமப்பட்டு... நான்கு பேரை சந்தோஷப்படுத்தி.. இரண்டாவது கதாநாயகியாக பெற்றிருந்த சினிமா வாய்ப்பும் இதன் காரணமாக கைநழுவிப் போய் விட்டது. திருமணமானவள் என்பதே பெரிய மைனஸ் பாய்ண்ட் இந்த அழகில் ஏழு வயது குழந்தைக்கு அம்மா என்றால்... என் படம் அவ்வளவுதான் என்று மனசாட்சியின்றி அவளை தூக்கி எறிந்துவிட்டார்கள்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sat Oct 25, 2008 2:30 am

ஏனிப்படி எழுதுகிறார்கள்? இதனால் அவர்களுக்கென்ன பயன்? ஒவ்வோர் இதயத்திற்கும் தனியான சுமையும் வேதனையும் உண்டு. வயிற்றுப் பிழைப்புக்காக எங்களில் பலர் மரக்கட்டைகளாய் செத்துப் பிழைப்பது... இவர் களுக்கு கேலியாய் இருக்கிறது. ஒரு நடிகைக்கு நல்ல வாழ்க்கை அமைவது சிம்மசொப்பனம் மாதிரி. மாதவியின் வாழ்க்கை இந்த பத்திரிகையால்தானே விவாகரத்தில் முடிந்தது? வந்தனா அளவுக்கதிகமாய் தூக்க மாத்திரைகளை உட்கொண்டு... சாவின் விளிம்புவரை சென்று மீண்ட தன் காரணமும் நெருப்பு பத்திரிகை தானே?

சென்ற வாரம் அந்த பத்திரிகையிலிருந்து பேட்டி எடுக்க ராமு என்ற நிருபர் அவளை தேடி வந்தார். அந்தப் பத்திரிகையைப் பற்றி நல்ல அபிப்ராயம் இல்லாததால் பேட்டி கொடுக்க மறுத்தாள். நல்ல விதமாய் எழுத வேண்டு மென்றால் பணம் கொடு இல்லாவிட்டால்... பத்திரிகையில் கன்னா பின்னாவென்று எழுதி விடுவோம் என்று கிட்டத்தட்ட மிரட்டுவார்கள். பணம் கொடுத்து தப்பிய தலைகள் நிறைய அவந்திகா பேட்டி தர மறுத்ததால்.... எங்க கிட்டேயே மோதறியா? அடுத்த வாரமே உன்னை கதறவைக்கிறோமா இல்லையா பார்? என்று சவால் விட்டுப்போனவன் சொன்னபடி எழுதியும் விட்டான்.

ஷூட்டிங்கிலும் வரிசையாய் கேள்வி மேல் கேள்விகள். தளர்ந்துப் போய் விட்டாள் அவந்திகா.

ரிலாக்ஸ் அவந்தி நீ தைரியமானவ... நீயே இப்படி உடைஞ்சு போனா எப்படி? சக ஆர்ட்டிஸ்ட் ஆர்த்தி ஆறுதல் கூறினாள்.

வேறென்னப் பண்ணமுடியும் ஆர்த்தி? கணிசமாய் வாய்ப்புகள் குறையப்போகுது. எதற்காக இப்படி நம்வயிற்றில் அடிக்கிறார்கள்? பத்திரிகை தர்மம்னா என்னன்னுத் தெரியாமலேயே பத்திரிகை நடத்தறாங்களே நாட்டை தெளிவுப்படுத்தறதையும், மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த றதையும்விட்டு... நம்ம சோத்துல மண்ணள்ளிப்போடறது எந்தவகையில் நியாயம்?

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sat Oct 25, 2008 2:30 am

அந்த பத்திரிகை ஆசிரியரை சும்மாவிடக்கூடாது அவந்திகா ஏதாவது பண்ணியே ஆகணும்

நாம என்ன பண்ணிட முடியும்?

நல்ல காலம் வருமா, வரு மான்னு ஏங்கிக்கிட்டு இருக்கறதுல பயனில்லே. நாம் iதரியமா துள்ளி எழுந்தா... நாமே அந்த நல்ல காலத்தை உண் டாக்கிட முடியும்

என்ன சொல்ல வர்றே ஆர்த்தி? புரியாமல் பார்த்தாள்.

சொல்றேன் பூனைக்கு மணி கட்டலாம்னு சொல்றேன். இவர் மிஸ்டர் தினேஷ். வேலிங்கற குடும்ப பத்திரிகை ரிப்போர்ட்டர். ரொம்ப நல்லவர். இவரை மாதிரி நல்ல பத்திரிகைகாரங்க நிறைய பேர் இருக்காங்க. ஆனா, நெருப்பு மாதிரியான பத்திரிகை ஆட்களால எல்லாரையும் நாம சந்தேகமாக தான் பார்த்துக் கிட்டிருக்கோம். இவர் நமக்கு நல்லா ஐடியா தருவார்

ஹலோ... மேடம் என்ற தினேஷ் இளைஞனாய் இருந்தான். முகத்தில் கனிவும், கண்ணியமும் இருந்தது.

ஹலோ...

பரஸ்பர அறிமுகத்திற்குப்பின் தெளிவாய் பேச ஆரம்பித்தான் தினேஷ்.

சமுதாயத்தை மாற்ற வேண்டியவர்கள் சில சமயம் சமுதாயத்தின் தண்டனைக்கு ஆளாக வேண்டியவர்களாய் இருக்கிறார்கள். எடிட்டர் சுந்தரலிங்கம் உங் களை மாதிரியான நடிகைகளின் வேதனைகளை விலை பேசி... குளிர் காய்ந்துக்கொண்டிருக்கிறார். அப்படிப்பட்டவரை பணத்தாலோ, சட்டத்தாலோ ஒன்றும் பண்ணிவிட முடியாது. பலம் பொருந்திய நு}று கைகளைவிட ஒரு நல்ல மூளையே போதும் நான் சொல்றதை கவனமா கேட்டுக்குங்க... அவன் சொல்ல... சொல்ல... அவந்திகாவின் முகம் தெளிவடைந்தது.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sat Oct 25, 2008 2:30 am

இரவு பதினோரு மணி

எடிட்டர் சுந்தரலிங்கத்தின் கார் அவந்திகாவின் வீட்டு போர்டி கோவில் வந்து உயிர்விட்டது. சுற்று முற்றும் பார்த்தபடி படி யேறிய சுந்தரலிங்கத்திற்கு ஐப்பது வயதிற்குள் இருக்கும். ஆனால் டிப்டாப்பான உடையும். பயிற்சி யால் கட்டுக்கோப்பாக இருந்த உடம்பும், நடையின் சுறுசுறுப்பும், நாற்பதுக்குமேல் மதிப்பிட தோன்றவில்லை.

சுந்தரலிங்கம் திறமையும், சாமர்த்தியமும் மிக்கவர் அரசியல் உட்பட பலதரப்பட்ட வி.ஐ.பி.க்களின் சாக்கடையை குடைந்து புழுக்;களை சேகரித்து அவர்களை மிரட்டி கட்டு கட்டாய் பணம் பறித்து.... இப்படித்தான் பணக்காரரானார்.... பத்திரிகைகாரரானார். அவரை வீழ்த்தக்கூடிய ஒரே ஆயுதம் அழகான பெண்கள்.

ஹலோ... வாங்க... வாங்க சார் முகத்தில் பரபரப்பை கூட்டி சந்தோஷமாய் வரவேற்ற அவந்திகா வாசல் கதவை தாளிட்டாள்.

வீட்லே யாருமில்லையே

அதான் எழுதிட்டீங்களே... என்பையன் மட்டும் தான் இருக்கிறான். தூங்கறான். வேலைக்காரி உட்பட எல்லாரையும் அனுப்பிட்டேன். உள்ளே வாங்க

பெட்ரூமிற்கு அழைத்துச் சென்றாள்.

ஸ்க்ரின்ல பார்க்கறதை விட நேர்லே இன்னும் சிக்குன்னு இருக்கே... அவள் தோளில் கைவைத்தவருக்கு அவசரம் இருந்தது.

இப்படி பத்திரிகையிலே எழுதி என்னை கஷ்டப்படுத்திட்டீங்களே சார் அவர் இழுத்த இழுப்புக்கு வளைந்து கொடுத்த படி...

நீ முன்னாடியே இந்த மாதிரி புத்திசாலித்தனமா நடந்துக்கிட்டி ருந்தா... நீ கஷ்டப்பட்டிருக்க மாட்டே சரி... இப்ப என்ன ஆகிப்போச்சு. அடுத்த வாரமே மறுப்பு அறிக்கை மாதிரி வெளியிட்டுடலாம். எல்லாரோட தலை விதியும் என் பேனாவுலதானே இருக்கு? அப்பப்ப... இப்படி என்னை கவனிச்சுக்க.. சீரியல்ல சம்பாதிக்கறதைவிட அதிகமா தர்றேன்... யப்பா.. குழந்தை பெத்த உடம்பா இது? இப்பதான் சமைஞ்சவ மாதிரி... ஆவேசமாய் அணைத்தார். அவந்திகாவின் எலும்புகள் நொறுங்கின.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sat Oct 25, 2008 2:30 am

அரைமணி நேரம் கடந்தது. களைத்து... மல்லாந்து படுத்திருந்தார். சுந்தரலிங்கம். கலைந்த ஆடைகளை சரிசெய்து கொண்டிருந்தாள் அவந்திகா.

என்னங்க?

ம்....

மறுப்பு அறிக்கை வெளியிட்டுரு வீங்கயில்லே?

கண்டிப்பா அவள் கூத்தலுக்குள் விரல்களை அலையவிட்டார்.

நீங்களாவது பரவாயில்லை. பெரிய பத்திரிகையோட எடிட்டர். ஆனா, நேத்து முளைச்ச பத்திரிகை காரனெல்லாம் போன் பண்ணி... உன்னைப்பத்தி இதை எழுதுவேன். அதை எழுது வேன்னு மிரட்டறான். பணம் கேக்கறான். என்ன பண்றதுன்னே தெரியலே...

புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக்குதா? சும்மாவிடாதே நடு ரோட்ல இழுத்து வச்சு செருப்பால அடி நான் இருக்கேன் உனக்கு... பார்த்துக்கலாம். வரட்டுமா? மறுபடி எப்ப? கண்ணடித்து கேட்டார்.

சீக்கிரமே... என்று சிரித்த படி வழியனுப்பி வைத்தாள்.

அங்கு நடந்தவை அனைத்தும் அவருக்கேத் தெரியாமல் ஆடி யோவிலும், வீடியோவிலும் பதிவாகிக் கொண்டிருந்தன... ரகசியமாய்

ஒருவன் நன்றாக முன்னால் தாண்டிக்குதிக்க வேண்டும் என்றால் அதற்காகப் பின்னாலும் போகத்தான் வேண்டும் என்பதை அவந்திகா உணர்ந்திருந்தாள்.

நீதியின் அழகைக் வெளிக் கொணர ஒரே வழி அநீதியின் அசிங்கத்தை காட்டுவதுதான்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sat Oct 25, 2008 2:31 am

அவந்திகா பிரஸ் மீட்டிற்கு ஏற்பாடு செய்திருந்தாள். சுந்தர லிங்கம் தினேஷ் உட்பட அனை வரும் வந்திருந்தனர்.

அவந்திகா... தொண்டையை செருமிக் கொண்டு பேச ஆரம்பித்தாள். பத்திரிகை கேமராவும், தனியார் சேனல்களின் வீடியோவும் அவளை பதிவு செய்து கொண் டிருந்தன.

உணர்ச்சிகரமாய் பேசிக்கொண்டிருந்தாள்.

.....ஆகவே... சகோதரர்களே... நாங்கள் யார்? உங்களில் ஒருத்தி உங்கள் தாயைப்போல், சகோதரியைப் போல்.... நாங்களும் பெண்தான் உங்கள் தாய் பின்னாலும் ஒரு ரகசியம் இருக்கும். உங்கள் மனைவி பின்னாலும் ஒரு ரகசிய வாழ்க்கை இருக்கும். ஆனால் அவர்களை காப் பாற்ற பாசமான நீங்கள் இருக்கிறீர்கள். ஆனால், எங்களை நாங்கள் தான் காப்பாற்றிக் கொள்ள வேண் டும். எங்களுக்கும் இதயம் இருக் கிறது. அதற்குள் ஆயிரம் ஆசைகள் இருக்கிறது. ஏக்கங்கள் இருக்கிறது. நிரந்தரமாய்... நம்மை உட்கார வைத்து சாப்பாடு போட ஒரு அன்பான துணை நமக்கில்லையே என்ற வேதனையோடு நாங்கள் கேமரா முன் சிரித்துக் கொண்டிருக்கிறோம். எங்களை பத்திரிகை யல்லவா வாழ வைக்க வேண்டும்? ரகசியங்களை வெளியிடுவோம் என்று மிரட்டி.. ஒன்று எங்கள் சாப்பாட்டில் கை வைக்கிறீர்கள். மிரட்டலுக்கு பயந்து பணிந்தால் எங்கள் உடம்பில் கை வைக்கிறீர்கள். இதுவா பத்திரிகை தர்மம்? இப்படியெல்லாம் எங்கள் கண்ணீரை பணமாக்கி சாப்பிடுவதற்கு பதில்... வேறெதையாவது திங்கலாமே

பத்திரிகையாளர் கூட்டத்திலிருந்து கூச்சல் எழுந்தது.

அநாகரிகமாக பேச வேண்டாம் ஒட்டு மொத்த பத்திரிகையாளர்களை அவமதித்ததற்கு மன்னிப்பு கேளுங்கள் ஒருவர் ஆவேசமாய் பேசினார்.

அவசரப்படாதீர்கள் நான் ஒட்டு மொத்தமாய் எல்லோரையும் பழி கூற வில்லை. உங்களில் உள்ள ஒருசில புல்லுருவிகளை

யாரென்று குறிப்பிட்டு சொல்லலாமே..

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sat Oct 25, 2008 2:31 am

நிச்சயமாக அதுவும் ஆதாரத்துடன். அந்த ஆதாரங்களை எல்லா சேனல்களுக்கும் பத்தி ரிகைகளுக்கும் அனுப்பி வைத்திருக்கிறேன். அந்த நாயை தண்டிக்க நான் கையாண்ட முறை தவறுதான் ஆனால் என் மனசை போலவே உடம்பும் பலமுறை பலரால் குதறப்பட்டு விட்டது. அதனால் மறுபடி என்னை நான் அசிங்கப்படுத்திக் கொண்டேன். அதைப் பார்த்த பிறகாவது எங்களை சகோதரியாக நினைத்து வாழ விடுவீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது

என்னிடம் கேவலமாக நடந்துக்கொண்ட, என்னிடம் மட்டுமல்ல... என்னைப்போன்ற பாவப்பட்ட பிறவிகள் நிறைய பேரிடம் பேனாவை வைத்து மிரட்டி கொண்டிருக்கிற அந்த ஆளை உங்களுக்கு இப்போது அடையாளம் காட்டப்போகிறேன். இந்த மகத்தான ஐடியாவை எனக்கு தந்ததே மிக உன்னதமான ஒரு மனிதர்தான்

சுந்தரலிங்கம் பெருமிதமாய் அவளைப்பார்த்து புன்னகைத்தார்.

அவந்திகா குறுநகையுடன் அவரை நோக்கிச்சென்றாள்.

அடுத்த கணம்.. .யாரும் எதிர்பார்க்காத அந்த கணத்தில் தன் ஹை ஹீல்ஸை கழற்றி பளாரென அவர் கன்னத்தில் அடித்தாள்.

அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்க... நிலை குலைந்துப் போனார் சுந்தர லிங்கம்.

புலன்கள் பழுதானால் விளைவுகளும் பழுதாகிவிடும்.

முள்ளை முள்ளால் எடுப்பது போல்.. அறிவை அறிவால் வென் றால் அவந்திகா

ஆடியோ கேஸட்டில் சுந்தர லிங்கம் அவந்திகாவிடம் பேசிய டெலிபோன் உரையாடல்கள், மற்றும் அவள் வீட்டில் பேசிய உரையாடல்கள் அங்கே ஒலிப் பரப்பாகிக்கொண்டிருக்க... அவமானத்தில், ஆறடி உயர உடம்பு அரையடியாக குன்றிப் போய் நின்றிருந்தார் சுந்தர லிங்கம்.

அறிவுள்ள பெண் தீப்பந்தம் மாதிரி தலைகீழாகப்பிடித்தாலும் அது மேல் நோக்கியே சுடர்விடும். அவள் நினைத்தால் அலை கடலையும் புரட்டிப்போடுவாள்.

அவந்திகா கம்பீரமாய் தன் காரை நோக்கி நடந்தாள்.

கூட்டத்தோடு கூட்டமாக நின்றிருந்த தினேஷ் மனதிற்குள் பாராட்டினான்.

சபாஷ்... சதோதரி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக