புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமதர்மம் - கவியரசு கண்ணதாசன் Poll_c10சமதர்மம் - கவியரசு கண்ணதாசன் Poll_m10சமதர்மம் - கவியரசு கண்ணதாசன் Poll_c10 
85 Posts - 77%
heezulia
சமதர்மம் - கவியரசு கண்ணதாசன் Poll_c10சமதர்மம் - கவியரசு கண்ணதாசன் Poll_m10சமதர்மம் - கவியரசு கண்ணதாசன் Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
சமதர்மம் - கவியரசு கண்ணதாசன் Poll_c10சமதர்மம் - கவியரசு கண்ணதாசன் Poll_m10சமதர்மம் - கவியரசு கண்ணதாசன் Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
சமதர்மம் - கவியரசு கண்ணதாசன் Poll_c10சமதர்மம் - கவியரசு கண்ணதாசன் Poll_m10சமதர்மம் - கவியரசு கண்ணதாசன் Poll_c10 
4 Posts - 4%
Anthony raj
சமதர்மம் - கவியரசு கண்ணதாசன் Poll_c10சமதர்மம் - கவியரசு கண்ணதாசன் Poll_m10சமதர்மம் - கவியரசு கண்ணதாசன் Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
சமதர்மம் - கவியரசு கண்ணதாசன் Poll_c10சமதர்மம் - கவியரசு கண்ணதாசன் Poll_m10சமதர்மம் - கவியரசு கண்ணதாசன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமதர்மம் - கவியரசு கண்ணதாசன் Poll_c10சமதர்மம் - கவியரசு கண்ணதாசன் Poll_m10சமதர்மம் - கவியரசு கண்ணதாசன் Poll_c10 
250 Posts - 77%
heezulia
சமதர்மம் - கவியரசு கண்ணதாசன் Poll_c10சமதர்மம் - கவியரசு கண்ணதாசன் Poll_m10சமதர்மம் - கவியரசு கண்ணதாசன் Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
சமதர்மம் - கவியரசு கண்ணதாசன் Poll_c10சமதர்மம் - கவியரசு கண்ணதாசன் Poll_m10சமதர்மம் - கவியரசு கண்ணதாசன் Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
சமதர்மம் - கவியரசு கண்ணதாசன் Poll_c10சமதர்மம் - கவியரசு கண்ணதாசன் Poll_m10சமதர்மம் - கவியரசு கண்ணதாசன் Poll_c10 
8 Posts - 2%
prajai
சமதர்மம் - கவியரசு கண்ணதாசன் Poll_c10சமதர்மம் - கவியரசு கண்ணதாசன் Poll_m10சமதர்மம் - கவியரசு கண்ணதாசன் Poll_c10 
5 Posts - 2%
Anthony raj
சமதர்மம் - கவியரசு கண்ணதாசன் Poll_c10சமதர்மம் - கவியரசு கண்ணதாசன் Poll_m10சமதர்மம் - கவியரசு கண்ணதாசன் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
சமதர்மம் - கவியரசு கண்ணதாசன் Poll_c10சமதர்மம் - கவியரசு கண்ணதாசன் Poll_m10சமதர்மம் - கவியரசு கண்ணதாசன் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
சமதர்மம் - கவியரசு கண்ணதாசன் Poll_c10சமதர்மம் - கவியரசு கண்ணதாசன் Poll_m10சமதர்மம் - கவியரசு கண்ணதாசன் Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சமதர்மம் - கவியரசு கண்ணதாசன் Poll_c10சமதர்மம் - கவியரசு கண்ணதாசன் Poll_m10சமதர்மம் - கவியரசு கண்ணதாசன் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
சமதர்மம் - கவியரசு கண்ணதாசன் Poll_c10சமதர்மம் - கவியரசு கண்ணதாசன் Poll_m10சமதர்மம் - கவியரசு கண்ணதாசன் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமதர்மம் - கவியரசு கண்ணதாசன்


   
   
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sat Dec 25, 2010 8:10 pm

ஏழை ஏழையாகவே இருப்பது, அவன் தலையெழுத்து’ என்று இந்து மதம் சொல்கிறதா?

ஏழை முயற்சி செய்து முன்னுக்கு வரக் கூடாதென்று இந்து மதம்
தடுக்கிறதா? `பணக்காரன் தேவைக்குமேல் சொத்து வைத்திருப்பதை இந்து மதம்
அனுமதிக்கிறதா?’ இல்லை!

தர்மம் சரியாக விநியோகிக்கப்படவேண்டும் என்பதே இந்து மதத்தின் சாரம்.

கடந்த நூற்றாண்டுகளில் பணக்காரர்களாக இருந்தவர்கள், தங்கள் சுயநலத்துக்காக ஏழ்மையைத் `தலைவிதி’ என்றார்கள்.
ஏழைக்கு இறைவன் கொடுத்த அளவு மற்றவர்களோடு சம அளவுதான்.
ஆனால், ஏழையின் அளவைப் பணக்காரர்கள் பங்கிட்டுக் கொண்டார்கள்.
ஏழ்மை என்பது நிரந்தரமாக இருக்குமானால், அது இறைவன் விதித்த விதியாக இருக்கலாம்.

எப்போது ஏழையும் பணக்காரனாக வாய்ப்பிருக்கிறதோ, அப்போது அந்த வாய்ப்புகள் தடுக்கப்பட்டவன்தான் ஏழையாக இருக்கிறான் என்று அர்த்தம்.

`பேராசைக்காரர்கள் மோட்சத்துக்குப் போவதில்லை’ என்று இந்து மதம் கூறுகிறது.

ஒருவனது அறிவை இறைவன் நிர்ணயிக்கலாம்; ஆனால் பொருளை அவன் நிர்ணயிப்பதில்லை.
`ஏழ்மை என்பது இறைவனால் நிர்ணயிக்கப்பட்டது அல்ல’ என்று இந்து மதம் அறுதியிட்டுக் கூறுகிறது.
அந்தக் கால உபன்யாசகர்கள் இதுபற்றி என்ன சொன்னார்களோ, எனக்குத் தெரியாது.

ஆனால், இந்தக் காலத்தில் இந்துமதத் தத்துவங்களை லௌகீக
வாழ்க்கைக்கு உகந்த வகையில் விமர்சிக்கும் காஞ்சி ஆச்சார்ய சுவாமிகளே,
அதனைத் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்.


தெளிவான சமதர்மமே இந்துமதத்தின் நோக்கம் என்பதை அவர்கள் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்.
பொருளாதார சமதர்மத்தையே அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
அவர்களது கருத்தை, அவர்களது வார்த்தைகளிலேயே அப்படியே தருகிறேன்.
இது யாரோ ஒரு துறவியின் பேச்சு என்று அப்போது படிக்காமல் இருந்தவர்கள், இப்போது படியுங்கள்.

அவர்கள் சொல்கிறார்கள்:
“ஸாயா தோயம் வஸநம் அஸநம்”
ஸாயா என்றால் நிழல்; தோயம் என்பது ஜலம்;
`வஸநம்’ என்பது உடுத்திக் கொள்கிற வஸ்திரம்; `அஸநம்’ என்றால் ஆகாரம்.
மனுஷர்களுடைய மானம், உயிர் இரண்டையும் காப்பாற்றிக்கொள்ள, இந்த நான்கும் மிகவும் அவசியமானவை.

நிழல் கொடுப்பது இந்தப் பூமிதான். பூமியிலிருந்து மண்,
கல், சுண்ணாம்பு எல்லாவற்றையும் பெற்றுக்கொண்டு வீடு கட்டிக் கொள்கிறோம்.
பூமியிலிருந்து ஜலம் வருகிறது. ஆகாரம், பூமியிலிருந்துதான் கிடைக்கிறது.
வஸ்திரமும் பூமியிலிருந்து வரும்படியான பருத்தியினால்தான் கிடைக்கிறது.
முடிந்த முடிவில், நாம் `பூமி’யில்தான் மறைந்து போகிறோம். நமக்குத்
தேவையானவற்றை எல்லாம் பூமிதான் கொடுக்கிறது, என்றாலும், `பூமி’யில் இருந்து
கிடைக்கும்படியான பொருள்களில், நமக்கு மிகவும் குறைச்சலாக எவ்வளவு
வேண்டுமோ அவ்வளவுதான் உபயோகப்படுத்திக் கொள்ளவேண்டும். மானத்தைக்
காப்பாற்றிக்கொள்ள ஆடை கட்டிக்கொள்ளவேண்டும். நமக்கு ஒரு வருஷத்திற்குக்
குறைந்தது எவ்வளவு ஆடை வேண்டுமோ அவ்வளவுதான் உபயோகப்படுத்திக்
கொள்ளவேண்டும். இந்த விஷயத்தில்தான் நாம் கவனம் செலுத்துவதில்லை.


ஆடை எதற்கு? மானத்தைக் காத்துக் கொள்வதற்காக, அதற்கு நல்ல
கெட்டித் துணியாக, பருத்தி ஆடையாக இருந்தால் போதும். பகட்டாக இருக்க
வேண்டும் என்பதற்காக மிக விலை உயர்ந்த ஆடைகளை அணிந்து கொண்டால், பட்டுத்
துணிகளை அணிந்து கொண்டால், மற்றவர்கள் கவுரவமாக நினைப்பார்கள் என்று தப்பாக
எண்ணிக் கொண்டு, அவ்வாறு செய்கிறோம். அதனால், மானத்தையும் மறைப்பதாக
நினைக்க முடியாது. `பாருடா எவ்வளவு இறுமாப்பு’ என்றுதான்
பார்க்கிறவர்களுக்குத் தோன்றும்.

இந்த விஷயத்தில் குடும்பம் செலவழிக்கிற பணத்தைக் கணக்கெடுத்தால், அந்தக்
குடும்பத்தில் உள்ளவர்களுக்கு மானத்தைக் காத்துக்கொள்ளத் தேவைப்படும் துணி
போக, பாக்கியை வைத்துக்கொண்டு, ஐந்து குடும்பங்களுக்கு வேண்டிய துணியைக்
கூட சப்ளை பண்ணலாம். இரண்டாவது, பட்டுப்புடவை என்று வாங்குகிறார்களே
தவிர, அதனால் பாவம் நிறைய வருகிறது. பட்டுப்புடவை, பட்டு வேஷ்டி இவற்றால்
எத்தனை ஜீவன்களுக்கு ஹிம்சை ஏற்படுகிறது? செலவு அதில் அபாரமாக ஆகிறது.
அஹிம்சை அஹிம்சை என்று சொல்லிக்கொண்டு மாமிசமே சாப்பிடுவது இல்லை என்று
நாம் சொல்லிக் கொள்கிறோம். ஆனால் கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், நமக்கு
இந்தப் பட்டுப்புடவை, பட்டு வேஷ்டி இவற்றினால் வருகிற பாவம் மாமிசம்
சாப்பிடுகிறவர்களுக்குக் கூட வராது.

ஓர் ஆடோ இரண்டு ஆடோ அங்கே உயிரை இழக்கின்றன என்றால், இங்கே கணக்கு வழக்கு
இல்லாத ஜீவன்களுக்கு ஹிம்சை ஏற்பட்டு வருகிறது. கூடிய வரைக்கும் நாம்
உடுத்திக் கொள்கிற வஸ்திரம் ஹிம்சை இல்லாத வஸ்திரமாக இருக்கவேண்டும்.
கெட்டியான வஸ்திரமாகவும், சாதாரண ஜனங்கள் எல்லாம் உடுத்திக்
கொள்ளும்படியானதாகவும் இருக்க வேண்டும்.


மக்களுடைய வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவேண்டும் என்பதற்காக,
அரசாங்கத்தார் அநேக திட்டங்களைப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். நாட்டிலும்
தரித்திரம் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டிருக்கிறது. வாழ்க்கைத்தரம்
உயர்வது என்றால் ஒருவன் இரண்டு வேளை காப்பி சாப்பிடுவது, நான்கு வேளையாக
வேண்டும்; இரண்டு வேஷ்டி வைத்துக் கொண்டிருப்பவன் இருபது வேஷ்டி வைத்துக்
கொள்ளவேண்டும் என்கிற அபிப்பிராயம் வளர்ந்தால், அது பெரிய தப்பு.
வாழ்க்கைத் தரம் உயர்வது என்று சொல்லிக்கொண்டு வாழ்க்கைத் தேவைகள்
நாளுக்குநாள் மனுஷர்களுக்கு அதிகமாகிக் கொண்டே போனால், நாட்டில்
தரித்திரம்தான் மிஞ்சும்.


மனுஷ்யர்களுக்கு மானம், உயிர் இரண்டையும் காப்பாற்றிக்
கொள்ள மிக மிக அத்தியாவசியமானவை எவையோ அவை நாட்டில் உள்ள அத்தனை
ஜனங்களுக்கும் கிடைக்கவேண்டும். அதற்குத்தான் திட்ட ஒழுங்கு எல்லாம்
வேண்டும். அப்படி வாழவேண்டுமானால், வசதி உள்ளவர்கள்கூட, நாட்டில்
இருக்கும்படியான பரம ஏழை எப்படி வசிக்கிறானோ அப்படி வசிக்கப் பிரயத்தனம்
பண்ணவேண்டும். சவுகரியம் இருக்கிறவர்களும்கூடத் தங்களிடம் பணம் இருக்கிறது
என்று தேவைக்குமேல் அதிகமான வசதிகளைப் பெருக்கிக் கொள்ள முடியாமல் இருக்க
வேண்டும்.


வசதி இருக்கிறது என்று இவர்கள் பண்ணுகிற காரியங்கள்
எல்லாம், அபரிக்ரகம் என்பதற்கு விரோதம்தான். இந்தத் தோஷம் வந்துவிட்டால்
ஈசுவரானுக்ரகம் கிடையாது. மனுஷ்ய ஜென்மம், பிரயோஜனம் உள்ளதாக ஆக
வேண்டுமானால், நமக்கு எவ்வளவு தேவையோ அதற்கு மேல் ஓர் இம்மிகூட
விரும்பக்கூடாது. வசதி இருக்கிறது என்றால், அதைக்கொண்டு கஷ்டப்படுகிற இதர
குடும்பங்களுக்கு அந்தக் குறைச்சலான வசதியைக்கூடப் பெற முடியாதவர்களுக்கு
உதவி செய்வதுதான் புண்ணியம். இதுதான் அவனுக்கு மோட்சத்தை அளிக்கும்.


இது தெரியாமல், வசதி இருக்கிறவர்கள், தேவைக்கு மேல்
பட்டுப்புடவை, பட்டு வேஷ்டி என்கிற தோஷத்தை அதிகமாக இப்போது பண்ணிக்
கொண்டிருக்கிறது, ஒரு பக்கம்; அந்தச் சமயம் இவர்களைப் பார்த்து வசதி
இல்லாதவர்களும் கூட கடன் வாங்கியாவது அவற்றை வாங்கவேண்டும் என்று
கடனாளியாகி அநேக உபத்திரவங்களுக்கு உள்ளாகி வருகிறார்கள்.

பட்டுப்புடவையைப் போலத்தான் வைர ஆபரணங்களில் உள்ள ஆசை. இதில் போடுகிற பணம் வீண்.
`கந்யாம் கநக ஸம்பந்தாம்’ என்று பெண்ணைக் கொடுக்கும்போது
`ஸ்வர்ணம்’ கொடுப்பது என்கிற வழக்கம் இருந்திருக்கிறது. தங்கத்தில் போடுகிற
பணமாவது பிரயோஜனப்படுகிறது. வைரத்தில் பிரயோஜனம் இல்லை. உபத்திரவம்
இருக்கிறது.


ஐம்பது வருஷங்களுக்கு முன்னால் எல்லாம் யாரும் காப்பி
சாப்பிட்டது இல்லை. குடிசையில்தான் இருந்தார்கள். காதில் பனை ஓலைதான்
போட்டுக் கொண்டிருந்தார்கள். கேழ்வரகுக் கூழோ, கஞ்சியோதான்
சாப்பிட்டார்கள். ஏழைகளோ, பணக்

காரர்களோ எல்லோரும் ஒரே மாதிரியாகத்தான் இருந்தார்கள்.
நாம் பட்டுத்துணி உடுப்பது இல்லை. காப்பி குடிப்பது இல்லை என்று சங்கல்பம்
செய்துகொண்டு விட்டால் இப்போது ஒரு குடும்பத்துக்குச் செலவாகிறதைக் கொண்டு,
ஐந்து குடும்பங்கள் வாழ முடியும்.

தேவையை எவ்வளவுக்கு எவ்வளவு அதிகப்படுத்திக் கொள்கிறோமோ, அவ்வளவுக்கு
அவ்வளவு சாந்தி ஏற்படாது, சவுக்கியம் ஏற்படாது. தரித்திரம், துக்கம்
எல்லாந்தான் உண்டாகும்.

பட்டுப் புடவையில் காசு போடவில்லை என்றால், காப்பிக்
கொட்டையில் காசு போடவில்லை என்றால், எல்லாக் குடும்பங்களும் முன்னுக்கு
வந்துவிடும். குடும்ப சவுகரியத்திற்காக மட்டும் சொல்லவில்லை.
பட்டுப்புடவையினால் வருகிற பாவங்கள் நமக்கு இல்லை என்றால், மோட்சத்திற்குச்
சிரமங்களே இல்லாமல் போகும். அஷ்டாங்க யோகத்தின் முதல் அங்கமே அஹிம்சை,
அபரிக்ரகம் இவை எல்லாம்தான். ஒரு பிராணிக்குக்கூட நம்மால் ஹிம்சை உண்டாகக்
கூடாது.

நம்முடைய தேவைக்கு மேல் ஒரு துரும்பைக்கூட, வசதி இருக்கிறது, பணம்
இருக்கிறது என்பதற்காக வாங்கிக்கொள்ளக் கூடாது. பணம் இருக்கிறது என்றால்,
இன்னும் சில குடும்பங்களுக்கு உதவி செய்யலாம். இப்படிச் செய்தால்தான்,
செய்வதற்குப் பிரயத்தனமாவது செய்தால்தான் சீக்கிரத்திலே பிரம்ம
சாட்சாத்காரத்தைப் பெற முடியும். அஷ்டாங்க யோகத்தின் முதல்படியே இதுதான்.
முதல் படியை மிதிக்காமல் மேல்படிக்குப் போக முடியாது என்பதற்காக இதைச்
சொன்னேன்.
நன்றி-கண்ணதாசன்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக