ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகம் சூடேறுகிறது

+2
சபீர்
சிவா
6 posters

Go down

உலகம் சூடேறுகிறது Empty உலகம் சூடேறுகிறது

Post by சிவா Thu Aug 20, 2009 6:15 pm

நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இவ்வுலகம் தினந்தோறும் சூடேறிக் கொண்டிருக்கிறது என்றால் வியப்பாக இருக்கும். உலகம் சூடேறுகிறது என்றால் உலகத்தின் சராசரி வெப்பநிலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்வது ஆகும். இயற்கை காரணிகளாலோ மனிதன் செயல்பாடுகளாலோ உலகம் சூடேறுகிறது.

பூமியின் மேற்பரப்பிலிருந்து சுமார் 500 கிலோமீட்டர் வரை வளிமண்டலம் வியாபித்துள்ளது. இம் மண்டலத்தில் பல்வேறு வகையான வாயுக்கள் உள்ளன. நாம் வாழும் பூமியில் உள்ள வளிமண்டலம் எப்போதும் சூரியனிலிருந்து குறிப்பிட்ட வெப்பநிலையைத் தக்க வைத்துக்கொண்டு மீதமுள்ள வெப்பத்தை அகச்சிவப்பு கதிர்களின் வடிவில் வெளியேற்றி விடும். இவ் விளைவிற்கு பெயர்தான் பசுங்கூட விளைவு (Green house effect) ஆகும். இவ்வாறு குறிப்பிட்ட வெப்பநிலையைத் தக்கவைக்காவிடில் உலகம் உறைந்து விடும். சூரியனிலிருந்து வளிமண்டலத்திற்கு நுழையும் வெப்பத்தில் 70% கிரகிக்கப்படுகிறது. மீதமுள்ள 30% அகச் சிவப்புக் கதிர்களாக மீண்டும் வளியை விட்டு விண்வெளிக்கே செல்கிறது. நாம் வாழ்வதற்கு ஓரளவு மிதமான வளிமண்டல வெப்ப சமநிலையைப் பாதுகாப்பது இவ்வாயுக்களே.

ஆனால் தற்போது வளிமண்டலத்திலிருந்து விண்வெளிக்குத் திரும்பிச் செல்லும் வெப்பநிலையின் அளவு குறைந்து பசுங்கூட வாயுக்கள் அந்த வெப்பத்தை மேலும் தேக்கிக் கொள்கின்றன. இதனால் வெப்ப சம நிலை பாதிக்கப்பட்டு வளிமண்டலத்தின் வெப்பம் அதிகரிக்கிறது. இதனால் தற்போது பல்வேறு இயற்கை மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டுள்ளன. கடந்த நூறு ஆண்டுகளில் கடல் மட்டத்தின் சராசரி அளவு 10 - 20 செ.மீ. அளவு உயர்ந்துள்ளது. அடுத்த நூறு ஆண்டுகளில் மேலும் 9 - 80 செ.மீ. அளவு உயரும் என்று கணித்துள்ளனர். அலாஸ்காவில் உள்ள பனிப்பாறைகள் தொடர்ந்து உருகிக் கொண்டேயிருக்கின்றன. சட்லெஜ் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் பக்ரா அணைக்கட்டு எப்போதுமே நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறது. ஆர்க்டிக் கடல் பகுதியில் பனிப் பாறைகளின் தடிமன் 29 சதத்திற்கு மேலாகக் குறைந்துவிட்டது. 1953-க்குப் பிறகு எவரெஸ்ட் சிகரத்தில் உள்ள கும்பு பனிப்பாறைகள் 5 கி.மீ. நீளத்திற்கு உருகியுள்ளன. இச் செயல்களால் கடல் மட்டம் தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கிறது. பசிபிக் பெருங்கடலில் உள்ள சில தீவுகள் இந்தியப் பெருங்கடலில் உள்ள மாலத்தீவின் பல பகுதிகள் மொரீஷியஸ் தீவின் சில பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயத்தில் உள்ளன. பிஜி நாட்டின் கடற்கரை ஆண்டுதோறும் ஓர் அடி அளவு குறைந்து கொண்டே வருகிறது.

அண்டார்டிகாவில் 33 சதம் பென்குயின் பறவைகளின் எண்ணிக்கை குறைந்தும் தென் அமெரிக்கக் காடுகளில் இருந்து 20 வகைக்கும் மேற்பட்ட தவளை மற்றும் தலைப்பிரட்டை இனங்கள் அழிந்தும் உள்ளன. கடந்த ஐம்பது ஆண்டுகளில் உலகின் சிறந்த பவளப் பாறைகள் 25மூ-க்கும் மேலாக அழிந்துள்ளன. 1990 முதல் 2002 வரை உள்ள ஆண்டுகளில் 1998 2001 மற்றும் 2002 ஆகிய மூன்று ஆண்டுகள் கடந்த 143 ஆண்டுகளில் அதிக அளவு ஆண்டு சராசரி வெப்பநிலையைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சிகளுக்கெல்லாம் வளிமண்டலம் தொடர்ந்து வெப்பமடைந்து கொண்டே செல்வதுதான் காரணம். வெப்பநிலை உயர்ந்து கொண்டே செல்வதால் நீர்ச் சுழற்சியில் மாறுபாடு வறட்சி மற்றும் புயல் போன்ற பருவநிலை மாற்ற நிகழ்வுகள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. வெப்பநிலையினால் பரவக்கூடிய நோய்கள் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. நீர்த்தேக்கங்களில் உப்பு நீர் கலப்பதால் குடிநீர் நிலைகள் பயனற்றதாகி விடுகின்றன. குளிர்காலம் குறைந்து கோடை காலம் நீண்டு கொண்டே செல்லவும் வாய்ப்பு உள்ளது. தற்போது உலகின் 600 கோடி மக்கள்தொகையில் 200 கோடிக்கும் அதிகமானவர்கள் கடற்கரையின் 100 கி.மீ. தொலைவிற்கு உள்ளேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். புயல்களாலும் பெரும் வெள்ளத்தாலும் கடலின் மட்டம் உயர்வதால் கடற்கரையோர மக்கள் பாதிப்படைகின்றனர்.

பசுங்கூட வாயுக்கள் எவ்வாறு வெப்பத்தை அதிகரிக்கின்றன? தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் வாயுவான கார்பன் - டை - ஆக்ûஸடு கடந்த நூறு ஆண்டுகளில் 27% அதிகரித்துள்ளது. குறிப்பாக வளர்ந்து வரும் நாடுகளின் அதிகத் தொழில் செயல்களால் இவ்வாயு வெளியாகிறது. இவ் வாயுவிற்கு அடுத்தபடியாக மீத்தேன் வாயு வளிமண்டல சூடேற்றத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. கடந்த நூறு ஆண்டுகளில் மீத்தேன் அளவு 145% உயர்ந்துள்ளது. பசுங்கூட விளைவில் 10 - 20% மீத்தேன்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலகம் சூடேறுகிறது Empty Re: உலகம் சூடேறுகிறது

Post by சிவா Thu Aug 20, 2009 6:15 pm

பங்கு உள்ளது குறிப்பிடத்தக்கது. தொழிற்சாலைகளிலிருந்தும் நெல்வயல்களிலிருந்தும்இ நிலக்கரி சுரங்கங்களிலிருந்தும் மீத்தேன் வாயு அதிக அளவில் உண்டாகிறது.

வளியின் வெப்பநிலை உயர்வால் பாதிப்புகள் பல இருந்தாலும் நன்மைகள் சிலவும் உள்ளது. வளியில் கார்பன் - டை - ஆக்ûஸடின் அளவு அதிகரிப்பதால் தாவரங்களில் நிகழும் ஒளிச்சேர்க்கை நன்கு நடைபெறுவதால் உற்பத்தி பெருகும். கூடுதல் மழைப்பொழிவு சில சமயங்களில் ஏற்படுவதால் வேளாண்மைக்குப் பயனளிக்கிறது. ஆயினும் வளிமண்டல வெப்ப உயர்வால் நன்மைகளைவிட தீய விளைவுகளே அதிகம்.

இதனால் பசுங்கூட வாயுக்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற உணர்வு உலக நாடுகள் அனைத்திற்கும் தோன்ற ஆரம்பித்துள்ளது. நம் இந்திய அரசும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 1987 கியாட்டோ மாநாட்டு (Kyoto Protocol) ஒப்பந்தத்தின்படி ஒவ்வொரு நாடும் தாம் வெளியிடும் பசுங்கூட வாயுக்களின் அளவைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. 1990 ஆண்டு எந்த அளவு பசுங்கூட வாயுக்களின் அளவு இருந்ததோ அந்த அளவே 2000ம் ஆண்டிலும் வெளியிட வேண்டும் என்று 1992-ல் ரியோ - டி - ஜெனிரோவில் நடந்த புவி உச்சி மாநாட்டில்(Earth Summit)முடிவு செய்யப்பட்டது.

மாநாடுகள் அவற்றின் தீர்மானங்கள் மட்டுமே பிரச்சினைகளைத் தீர்க்காது. அரசாங்கம் தனிப்பட்ட கவனம் செலுத்தினால்தான் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும். மாசுபடும் செயல்பாடுகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும். மக்கள்தொகைக் கட்டுப்பாட்டையும் மனத்தில் கொள்ள வேண்டும். அதிக அளவில் மரங்களை நட வேண்டும். இயற்கை வளங்களைத் தகுந்த முறையில் பயன்படுத்தி உற்பத்தித் திறனை அதிகப்படுத்த வேண்டும். மக்களுக்கு சுற்றுசூழல் பற்றிய கல்வியை அளிக்க வேண்டும். பசுங்கூட வாயுக்களின் அளவுகளைத் துல்லியமாக அறிய தொழில்நுட்பம் வளர வேண்டும். மீண்டும் புதுப்பிக்கக்கூடிய குறைந்த மாசுபாடுடன் அதிக ஆற்றல் கொண்ட மூலங்களான சூரிய சக்தி காற்றாலை நில வாயு போன்றவற்றை அதிக அளவில் பயன்படுத்த அரசு முன்வர வேண்டும். பொருளாதாரக் கொள்கைகள் சுற்றுப்புறச் சூழலை மனத்தில் கொண்டு இயற்றப்பட வேண்டும். தொழிற்சாலைகளில் எரிபொருள்களை எரிக்கும்போது ஏராளமான மாசுபொருள்கள் வெளியாவதைத் தடுக்க புதுமையான தொழில்நுட்பங்களைக் கொணர தொழில்நுட்ப வல்லுநர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும். வளர்ந்த நாடுகள் தொழில் புரட்சிக்குப் பின்னர் தொழில் வளர்ச்சியால் நன்கு முன்னேறிக் கொண்டிருக்கின்றன. உலகில் கார்பன் - டை - ஆக்ûஸடு வெளியாகும் நாடுகளின் சதவீதத்தைக் கணக்கிட்டால் அமெரிக்க ஐக்கிய நாடுகள்தான் அதிகம் வெளியிடுகிறது.

உலகின் மற்ற நாடுகளுக்கு யோசனைகளையும் சட்ட திட்டங்களையும் அறிவிக்கும் அமெரிக்கா மாசுப்பொருட்களைக் குறைக்க வேண்டும் என்று கூறும் கியாட்டோ ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத செயல் ஊருக்கு மட்டும்தான் உபதேசம் தனக்கு அல்ல என்பதை குறிப்பதாக உள்ளது.

இன்றைய சேமிப்பு தான் நாளைய தேவைக்குப் பயனளிக்கும். அதுபோல நம் சுற்றுச்சூழலை இன்று நாம் பேணிக் காத்தால்தான் நாளை நம் சந்ததியினருக்கு அது பயனளிக்கும் என்பதில் ஐயமில்லை.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலகம் சூடேறுகிறது Empty Re: உலகம் சூடேறுகிறது

Post by சபீர் Mon Jun 07, 2010 12:47 pm

இன்றைய சேமிப்பு தான் நாளைய தேவைக்குப்
பயனளிக்கும். அதுபோல நம் சுற்றுச்சூழலை இன்று நாம் பேணிக் காத்தால்தான்
நாளை நம் சந்ததியினருக்கு அது பயனளிக்கும் என்பதில் ஐயமில்லை
உலகம் சூடேறுகிறது 453187 உலகம் சூடேறுகிறது 453187 உலகம் சூடேறுகிறது 453187

நல்லதொருவிளக்கம் தந்துள்ளீர்கள் சகோதரா நன்றி




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

உலகம் சூடேறுகிறது Empty Re: உலகம் சூடேறுகிறது

Post by ரபீக் Mon Jun 07, 2010 1:06 pm

சுற்றுசுழல் பாதுகாப்பை மிக அருமையா பதிவு செய்திர்கள் ,நன்றி
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

உலகம் சூடேறுகிறது Empty Re: உலகம் சூடேறுகிறது

Post by கோவை ராம் Mon Jun 07, 2010 2:05 pm

உலகின் கடைசி மரம் வெட்டப்படும் வரை
உலகின் கடைசி நதி விஷமாகும் வரை
உலகின் கடைசி மீன் பிடிபடும் வரை
உலகின் கடைசி உனவு விஷமாகும் வரை
மனிதனுக்கு பனத்தை உன்ன முடியாது
என்பது புரியாது
அதுவரை காத்திருக்க வேன்டுமா?
மனித குலமே விழிதெழு.
ராம்
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Back to top Go down

உலகம் சூடேறுகிறது Empty Re: உலகம் சூடேறுகிறது

Post by ப்ரியா Mon Jun 07, 2010 2:11 pm

சபீர் wrote:இன்றைய சேமிப்பு தான் நாளைய தேவைக்குப்
பயனளிக்கும். அதுபோல நம் சுற்றுச்சூழலை இன்று நாம் பேணிக் காத்தால்தான்
நாளை நம் சந்ததியினருக்கு அது பயனளிக்கும் என்பதில் ஐயமில்லை
உலகம் சூடேறுகிறது 453187 உலகம் சூடேறுகிறது 453187 உலகம் சூடேறுகிறது 453187

நல்லதொருவிளக்கம் தந்துள்ளீர்கள் சகோதரா நன்றி
சியர்ஸ் சியர்ஸ் நன்றி நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

உலகம் சூடேறுகிறது Empty Re: உலகம் சூடேறுகிறது

Post by அன்பு தளபதி Mon Jun 07, 2010 2:20 pm

உலகம் தன்னை காப்பாற்றி கொள்ளும் அதை காண இந்த மனித இனம்தான் இருக்காது
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

உலகம் சூடேறுகிறது Empty Re: உலகம் சூடேறுகிறது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum