ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி தொடர்

+18
தர்மா
யினியவன்
முரளிராஜா
baskars11
பிஜிராமன்
பிளேடு பக்கிரி
நியாஸ் அஷ்ரஃப்
ANTHAPPAARVAI
Aathira
அன்பு தளபதி
கலைவேந்தன்
பாலாஜி
Thanjaavooraan
கார்த்திக்
ரபீக்
ramesh.vait
உதயசுதா
balakarthik
22 posters

Page 2 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Go down

வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி  தொடர்  - Page 2 Empty வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி தொடர்

Post by balakarthik Mon Dec 20, 2010 11:52 am

First topic message reminder :

முன்குறிப்பு :-
வேலைன்னு வந்துட்டா நான் வெள்ளைக்காரனா மாறிடுவேன்னு சொல்ற மாதிரி, பதிவெழுதுறதுன்னு வந்துட்டா பர்காதத்தா மாறுவதே நம் வழக்கம். பதிவை பொறுத்தவரை எந்த வரையறையும் இல்லாமல் எல்லா அலப்பறையும் கொடுத்து கொண்டுதானிருக்கிறேன். இருந்தாலும் எனது நண்பர் ஒருவர் துறை சார்ந்த விஷயங்கள் தமிழில் அவ்வளவாக இல்லை. எனவே நாம் செய்யும் வேலை தொடர்பான சில விஷயங்களை பகிர்ந்துக் கொள்ளலாமே என்று சொன்னார்.அவருடன் பேசிகொண்டிருந்தபோது கிடைத்த விசயங்களை , என் கருத்துகளையும் கலந்து எழுதலாம் என்று நினைத்திருக்கிறேன் .

இங்கே நான் எழுதிருப்பது , எப்போது வேலை மாற வேண்டும், அதற்கு என்னென்ன செய்யலாம், நல்ல ரெஸ்யும் எப்படி தயாரிப்பது போன்ற பல்வேறு தலைப்புகளில் எனக்கு தெரிந்தவற்றை எந்த மொக்கையோ, நகைச்சுவையோ இல்லாமல் கொஞ்சம் சீரியஸாக அலசலாம். மீண்டும் ஒருமுறை இப்படி ஒரு பதிவெழுத தூண்டிய நண்பருக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்.


நமக்கு கதையினா ரொம்ப புடிக்கும் , எனக்கு கத உடுரதுனா ரொம்ப ரொம்ப புடிக்கும் அதான் கதையுடன் தொடங்கலாமேனுட்டு ஹி ஹி கொசிகாதிங்க இனிமே சீரியசுதான்

அவர் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் டீம் லீடாக வேலை செய்கிறார். வேலையில் படு கெட்டி என கடந்த 5 வருடமாக பெயர் வாங்கியிருக்கிறார். சான்றிதழும் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் அவர் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பதவி உயர்வு மட்டும் கிடைப்பதற்கான அறிகுறியே தெரியவில்லை. அவரின் நண்பன் மூலம் நாங்கள் அறிமுகமானோம். வேலைப் பற்றியே அதிகம் பேசினார். பேச்சுவாக்கில் எப்படியும் இன்னும் 2 வருடங்களில் மேலாளர் ஆகிவிடுவேன் என்றார். அவர் வேலை செய்வது ஒப்பீட்டளவில் சின்ன நிறுவனம் தான். இவர் டீமில் இருக்கும் மேலாளர் நகர்ந்தால்தான் இவருக்கு அந்த சீட் என்பது அவர் பேசியதில் புரிந்தது. காத்திருக்க அவரும் தயாராகவே இருக்கிறார்.

அவர் பரவாயில்லை. மற்றொரு நண்பரின் நிலை இன்னும் மோசம். ஒரு பன்னாட்டு தானியங்கி நிறுவனத்தில் நல்ல வேலையில் இருக்கிறார். இருந்தார் என படித்து விடுங்கள். மனதுக்கு பிடித்த வேலை. கையல்ல, பாக்கெட் நிறைய சம்பளம் என இருந்தவரை சென்ற மாதம் ஆட்குறைப்பில் மேன்ஷனுக்கு அனுப்பி விட்டார்கள். ஆம். வேலைப் போன கஷ்டத்தில அவர் வீட்டுக்குப் போகவில்லை. நண்பர்களின் மேன்ஷனில்தான் இருக்கிறார். அவரது நிறுவனத்தில் ஒரு வாரம் மட்டுமே நேரம் தந்திருக்கிறார்கள் . அதற்குள் வேறு வேலை எப்படி தேடுவது? அவரிடம் அவரது புதிய பயோடேட்டா அப்போது கைவசமோ, கணிணிவசமோ இல்லை. கடைசியாக 3 வருடங்கள் முன்பு தயார் செய்ததுதான் . எப்படியும் ஒரு 15 வருடம் இங்கே இருக்கலாம் என்று முடிவு செய்திருந்ததாக சொன்னார்.

மேற்கண்ட சம்பவங்களில் இந்த இருவர் நீங்கள் தான் என்றால் மேற்கொண்டு தொடருங்கள். நீங்கள் இல்லை என்றால் இன்னொரு முறை படித்து இந்த சூழ்நிலை உங்களுக்கு வரக்கூடுமா இல்லையா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

பெரும்பாலானவர்கள் இருக்கும் வேலையில் பெரிய பிரச்சினை என்று வரும்வரை வேலை மாறுவது பற்றி யோசிப்பதும் இல்லை. அதற்காக தயாராவதும் இல்லை. கடைசிக்கட்ட நெருக்கடியில் கிடைக்கும் இன்னொரு சுமாரான வேலையில் சேர்ந்து பின் அதிலும் அரைமனதுடனே காலம் கழிக்கிறார்கள். வேலை மாற்றம் என்பது தவறேயில்லை, முறையாக இருக்கும் வேலையில் இருந்து மாறினால். எனவே எப்போதும் நம்மை அடுத்த மாற்றத்திற்கு தயாராக வைத்திருப்பது அவசியமாகிறது. ஆங்கிலத்தில் ஒரு பழமொழி ஒன்று சொல்வார்கள் “Love your job. Not your company.Because you never know when it will stop loving you”.

சரி. நம்மை எப்படி தயாராக வைத்திருப்பது? அதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும்? என்ற கேள்விகள் இந்நேரம் உங்களுக்கு எழுந்திருந்தால் மகிழ்ச்சி. நீங்கள் சரியான திசையில் பயணிக்கிறீர்கள். உங்கள் கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் பதில் சொல்லும் முன்பு சில விஷயங்களை உறுதிப்படுத்திவிடுவது நல்லது. எந்தத்துறை வேலையென்றாலும் ஒரு நிறுவனத்தில் குறைந்தது 3 - 5 வருடங்கள் வேலை செய்வது ஒரு ஸ்திரத்தன்மையை கொடுக்கும். அப்படியில்லாமல் அடிக்கடி வேலை மாறுவதை Job hopping என்பார்கள். அது உங்கள் சந்தை மதிப்பை குறைத்துவிடும். ஏதேனும் பிரத்யேக காரணத்தினால் மாறியிருந்தால் வேறு. அடிக்கடி மாறாமால் இருப்பது நல்லது என்பதை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இப்போது கேள்விகளுக்கு வருவோம்.

கீழ்கண்ட கேள்விகளுக்கு உங்களுக்கு நீங்களே பதில் சொல்லிப் பாருங்கள்.

1) அடுத்த 2 வருடங்களில் என்னவாக இருக்க வேண்டும் என்ற திட்டம் ஏதாவது வைத்திருக்கிறீர்களா?

2) கடைசியாக எப்போது உங்கள் Cvஐ புதுப்பித்தீர்கள்?

3 உங்கள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு தெரியுமா? புதியதாக போட்டியாளர்கள் யாரெல்லாம் வந்திருக்கிறார்கள் என்பதை அறீவிர்களா?

4) உலகளவில், தேசிய அளவில் நீங்கள் ஈடுபட்டிருக்கும் துறையின் வளர்ச்சி மதிப்பீடு பற்றி தெரியுமா?

5) உங்கள் பாஸ்போர்ட் காலாவதி தேதி என்ன?

இதற்கான பதில்கள் உங்களை நீங்களே சுயபரிசோதனைக்கு உட்படுத்தத்தான். இதில் 3வது மற்றும் 4வது கேள்விகளுக்கு ஸ்திரமான பதில் தெரியாதவர்கள் இணையம் மூலமாக அல்லது தெரிந்தவர்கள் மூலமாகவோ தகவல் தெரிந்து வைத்திருப்பது நலம் . என்னால் முடிந்தளவு தகவல்கள் நானும் சேகரித்து தருகிறேன்.

மேலும் நம் ஈகரை நண்பர்களும் தங்களுக்கு தெரிந்த / அனுபவங்களை இங்கே பதிவிட்டால் அனைவருக்கும் உபயோகமாக இருக்கும் குறிப்பாக HR துறையில் உள்ள நண்பர்கள் .

பின்குறிப்பு :- இது வெறும் வேலைவாய்பு செய்திகளை மட்டும் சொல்லும் பகுதியாக இல்லாமல் நல்லவேளைக்கு நம்மை தயார்படுத்தும் பகுதியாக இருக்கவேண்டும் என்பதே எனது விருப்பம் அதனால் தான் இந்த பதிவு அன்பு மலர்



Last edited by balakarthik on Tue Dec 28, 2010 5:32 pm; edited 1 time in total


ஈகரை தமிழ் களஞ்சியம் வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி  தொடர்  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down


வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி  தொடர்  - Page 2 Empty Re: வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி தொடர்

Post by Thanjaavooraan Mon Dec 20, 2010 4:02 pm

பயனுள்ள பதிவு, தொடருங்கள் வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி  தொடர்  - Page 2 677196
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

Back to top Go down

வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி  தொடர்  - Page 2 Empty Re: வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி தொடர்

Post by பாலாஜி Mon Dec 20, 2010 4:22 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி  தொடர்  - Page 2 Empty Re: வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி தொடர்

Post by balakarthik Mon Dec 20, 2010 6:17 pm

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி


ஈகரை தமிழ் களஞ்சியம் வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி  தொடர்  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி  தொடர்  - Page 2 Empty Re: வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி தொடர்

Post by கலைவேந்தன் Mon Dec 20, 2010 9:58 pm

சபாஷ்டா தம்பி... ரொம்ப நாளைக்குப் பிறகு அருமையான செய்தி தந்து அசத்திட்டே...

ஆனாலும் ரொம்ப சீரியஸ் பாலாதம்பிக்கு பொருத்தமா இல்லைன்னு தோணுது... சரியா...?


ஜோக்ஸ் அபார்ட்... அருமையான பதிவு பாலா... நன்றி



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி  தொடர்  - Page 2 Empty Re: வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி தொடர்

Post by balakarthik Tue Dec 21, 2010 11:22 am

கலை wrote:சபாஷ்டா தம்பி... ரொம்ப நாளைக்குப் பிறகு அருமையான செய்தி தந்து அசத்திட்டே...

ஆனாலும் ரொம்ப சீரியஸ் பாலாதம்பிக்கு பொருத்தமா இல்லைன்னு தோணுது... சரியா...?


ஜோக்ஸ் அபார்ட்... அருமையான பதிவு பாலா... நன்றி

நன்றி அண்ணா இது போன்ற ஊகங்களால் மேலும் இந்த பதிவை தொடர் பதிவாக ஆக்க தோன்றுகிறது,
எனக்கு தெரிந்தவற்றை நான் ஒருவனே கூறுவதை விட மற்றவர்களும் தங்கள் அனுபவங்களையும், தங்கள் துறை சார்ந்த விசயங்களையும், தாங்கள் சந்தித்த சவால்களையும் அதிலிருந்து வெற்றிகரமாக வெளிவந்ததை பற்றியும் இங்கே பதிந்தால் இன்னும் பல விசயங்களை அனைவரும் அறிந்துகொள்ள முடியும்.

மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவரின் ஊக்கங்களுக்கும் பாராட்டுகளுக்கும் நன்றி கூறி இந்த பதிவை தொடர்கிறேன் நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்


ஈகரை தமிழ் களஞ்சியம் வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி  தொடர்  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி  தொடர்  - Page 2 Empty Re: வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி தொடர்

Post by balakarthik Tue Dec 21, 2010 11:35 am

இன்று நாம் இருக்கும் வேலையை பற்றியும், நிறுவனத்தை பற்றியும் என்னவெல்லாம் தெரிந்துக் கொள்ள வேண்டுமென்று பார்ப்போம்.பொதுவாக நேர்முகத்தேர்வில் கேட்கப்படும் கேள்விகளில் முதன்மையானது “what is your roles & responsibilities?”. இதற்கு பதில் சொல்வது சற்று சிக்கலான விஷயம். இருக்கும் எல்லா வேலையும் நானே செய்கிறேன் என்ற ரீதியில் சொல்வது தவறு. அல்லது நாம் தினமும் செய்யும் வேலைகளை மட்டும் ப‌ட்டிய‌லிடுவ‌தும் தவறு. பிறகெப்படி சொல்லலாம்? ஒரு உதாரணத்தை பார்ப்போம்.

மீண்டும் ஒரு கதை வழி விளக்கம்

அவர் ஒரு உற்பத்தி நிறுவனத்தில் உதவி மேலாளராக பணிபுரிகிறார். அந்நிறுவனம் உற்பத்தித் திறனுக்கு (production techniques) பிரசித்தி பெற்றது. Press Shop என்ற பிரிவில் கிட்டத்தட்ட 100 தொழிலாளர்களுக்கு அவர் மேற்பார்வையாளர். இதே போல் மற்ற இரண்டு ஷிஃப்டுகளுக்கும் இரண்டு மேற்பார்வையாளர்கள் உண்டு. அவரவர் ஷிஃப்ட்டில் நடக்கும் உற்பத்தி, தரம், பாதுகாப்பு(சேஃப்ட்டி) போன்ற‌வ‌ற்றிற்கு அவரவரே பொறுப்பு. ஒருமுறை அவர் ஒரு நேர்முகத்தேர்வுக்கு சென்றார். அது ஒரு பன்னாட்டு தானியங்கி நிறுவனம். தேர்வில் அவரது வேலையைப் பற்றி கேட்ட போது அவரே production, quality, safety, technical upgradation, planning என எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வதாகவும், மற்ற இரண்டு மேற்பார்வையாளர்கள் இவரது சொற்படியே வேலை செய்வதாகவும் சொல்லியிருக்கிறார். ஆனால் அது உண்மையில்லை. இதே வேலைக்கு இவருடன் பணிபுரியும் மற்றொரு மேற்பார்வையாளரும் சென்றிருக்கிறார். அவரிடம் கேட்ட போது அவர் முதலில் தங்கள் நிறுவன Hierarchy ( படிநிலை ) யை சொல்லியிருக்கிறார்.
A )Plant head
B ) Production Manager
C ) Planning Manager
D ) Quality Manager
E ) Safety Manager
F ) Paint Shop Manager
G ) Press Shop - 3 Persons
H ) Assembly - 3 Persons
I ) Tool Room - 2 Persons

இந்த படத்தில் பிரஸ் ஷாப்ப்பில் இருக்கும் மூன்று உதவி மேலாளர்களில் இருவர் தான் அவர்கள் இருவரும் மற்றபடி பிளானிங், தரம், பாதுகாப்பு போன்றவற்றிர்க்கு தனித்தனி மேலாளர்கள் உண்டு. இதை விவரித்த பின் அவருக்கு தன் வேலை குறித்து பேசுவது எளிதானது. தனது வேலையில் அவர் செய்த முக்கியமானவற்றை பட்டியிலிட்டார். அதாவது தான் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை சொல்லாமல், என்னவெல்லாம் செய்தார் என்பதை சொன்னார்.

1) எனது ஷிஃப்ட்டில் 4500 பேனல்கள் உற்பத்தி செய்ய வேண்டும்
(I am responsible for output 4500 panels / shift)

2) எந்தவிதமான விபத்துகளும் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
(I am responsible for zero harm. That is no accident)

3) உற்பத்தியையும், தரத்தையும் கூட்ட, வேண்டியதை செய்ய வேண்டும்.
( I am responsible for improvements which increase productivity and quality)


இப்படி எல்லாம் கதை அளக்காமல் தான் என்னென்ன செய்தோம் என்று சொன்னார்

1) With the help of operators, We have changed the product flow slightly which increased the output by 10% ie, 5000 panels/shift

2) We have a safety track record of 10000 hrs of No accident.

3) Initiated KAIZEN acitivites. Motivated team to implement 52 kaizens in last year. And our team has been awarded for BEST IMPROVEMENT of the year by management.

இதை கேட்கும்போதே தேர்வாளர்களுக்கு எல்லாம் புரிந்துவிடும். எந்த பதிலும் சந்தேகத்துக்கு இடமளிக்கவில்லை. உற்பத்தி எத்தனை சதவீதம் உயர்ந்தது என்று கேட்க கூட விடாமல் அதையும் சொல்லியிருக்கிறார். இது போன்ற பதில்களைத்தான் எதிர்பார்க்கிறார்கள். முடிந்தவரை நாம் என்ன செய்தோம் என்று சொல்கிறோமோ அதன் முடிவை சொல்லிவிட வேண்டும். அவர்கள் கேட்ட பின் சொல்வதில் நம்பிக்கையின்மை வர வாய்ப்பிருக்கிறது. இவர் பேசியதை கவனித்தால் இன்னொரு முக்கியமான விஷயம் புலப்படும். எங்கேயுமே அவர் நான் இதை செய்தேன் என்று சொல்லவில்லை. ஆப்பரேட்டர்கள் உதவியுடன் செய்ததாக சொல்லியிருக்கிறார். குழுவினருடன் இணைந்து KAIZEN செய்ததாக சொல்லியிருக்கிறார். அதாவது Team player என்பதை மறைமுகமாக உணர்த்தியிருக்கிறார். 100 பேரை சமாளிக்க team handling abilities தான் முக்கியம். இந்த வேலைக்கு அடிப்படையே அதுதான். I am team player என்று ரெஸ்யுமேவில் மட்டும் குறிப்பிடாமால், வாயால் சொல்லாமல் நிறுவியிருக்கிறார். ஆக, இவையெல்லாம் முக்கியமான விஷயங்கள். நேர்முகத்தேர்வை எப்படி எதிர் கொள்ள வேண்டும் என்பதை தனியே விரிவாக பார்க்கவிருக்கிறோம்.இங்கே நாம் தெரிந்துக் கொள்ள வேண்டியது, நம் வேலையைப் பற்றி நாம் என்ன சொல்கிறோம், எப்படி சொல்கிறோம் என்பதே.

அடுத்து இவரிடம் கேட்கப்பட்ட அடுத்த கேள்வி அவர் ஏன் இந்த நிறுவனத்தில் சேர விரும்புகிறார் என்பது. இருக்கும் நிறுவனத்தில் ஏதாவது பிரச்சினையா என்றும் கேட்டார்கள். ”ஆட்டோமொபைல் இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் துறை. இப்போது இந்தியா உலகில் ஏழாவது இடத்தில் உள்ளது. 2040க்குள் அது முதல் மூன்று இடங்களுக்கும் சென்றுவிடும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. அதனால் இதற்கு பிரகாசமான எதிர்காலம் நிச்சயம் இருக்கிறது. மேலும் தானியங்கி நிறுவனங்கள் பெரும்பாலும் பன்னாட்டு நிறுவனமாக இருப்பதால் உலகளவில் சிறந்த உற்பத்தி முறையை அவர்கள் கையாள்வார்கள். அதை தெரிந்து கொள்வதில் எனக்கு ஆர்வம் அதிகம். நான் இப்போது வேலை செய்யும் நிறுவனம் நல்ல நிலையில் இருந்தாலும், உற்பத்தி முறைகளில் தானியங்கி நிறுவனங்கள் அளவுக்கு இல்லை. இதுதான் நான் வேலை மாறுவதற்கான முக்கிய காரணங்கள்” என்றார் இவர்.

இதை படிக்கும்போது அவர் சொன்ன காரணங்கள் உங்களுக்கு திருப்தியாக இருந்ததா? ஆம் எனில் இதே போன்று நீங்கள் இருக்கும் துறையின் வளர்ச்சி விகிதம், எதிர்கால திட்டங்கள் குறித்து எவ்வளவு விஷயம் உங்களுக்கு தெரிகிறது என்று யோசித்து பாருங்கள். அதோடு கீழ்கண்ட கேள்விகளுக்கு விடை தேடிக் கொள்ளுங்கள்.

1) உங்கள் நிறுவன ஹையரார்க்கியில் நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்?
2) உங்கள் வேலையின் அடிப்படையான தேவையென்ன?
3) அதற்கு தொழில்நுட்ப ரீதியான தேவைகள் என்ன?
4) அந்த வேலையை திறம்பட செய்யத் தேவையான charecterstics என்ன?
5) உங்கள் வேலையின் KRA, Key result Areas என்ன?
6) இந்த வேலையில் இருந்து ஒரு படி மேலே செல்ல இன்னும் என்னவெல்லாம் உங்களுக்கு தேவை?


மேலும் தொடரும் ............. அன்பு மலர்


ஈகரை தமிழ் களஞ்சியம் வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி  தொடர்  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி  தொடர்  - Page 2 Empty Re: வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி தொடர்

Post by balakarthik Tue Dec 21, 2010 2:32 pm

நம் வாழ்விலும் சரி, நம் வாழ்வில் அன்றாடம் நாம் தொடர்பு பட்டிருக்கும் துறைகளிலும் சரி, சில மிகத்திறமையானவர்களும், நம்மை மெய்சிலிர்க்க வைத்தவர்களும், அர்ப்பணிப்புடன், தனது தொழில் மற்றும் துறைகளில் ஈடுபடுகின்றவர்களும் சில வேளைகளில் அவர்களுக்குரிய அங்கீகாரம் கிடைக்காமல் இருப்பதும், பெருமைப்படவேண்டிய திறமைகள் அவர்களிடம் இருந்தாலும்கூட அவர்கள் உச்சத்திற்கு வரமுடியாதவர்களாக இருப்பதையும் கவனித்துக்கொண்டுதான் இருக்கின்றோம்.
அவன் பாவம், மிகவும் திறமையானவன் அனால் அவனுக்கு அதிஸ்டமில்லையே! என நம்மில் சிலர் உச்சுக்கொட்டிச்சொல்லும் “அதிஸ்டமின்மை” என்ற ஒரு காரணத்தையும், சந்தர்ப்பங்களை தவறவிட்டதனால்த்தான் ஏதோ ஒரு கட்டத்தில் அவன் பின்னுக்குத்தள்ளப்பட்டுள்ளான் என்ற காரணத்தினையும், அவன் “தேவைக்கதிக திறமையுடையவனாக” இருக்கின்றான் அப்படி இருப்பதும் வேலைக்கு உதவாது. என்ற கருத்தினையும், சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு, அந்த சந்தர்ப்ப நிகழ்வுகளுக்கு எற்றவாறு அவன் இயங்க மறந்துவிட்டான் என்ற ஓரளவு நியாமான காரணங்களையும் நாம் கேட்டுக்கொண்டுதான் இருக்கின்றோம்.

சிறந்ததொரு உதாரணத்தை இந்தச்சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்டலாம் என நினைக்கின்றேன். 1979ஆம் ஆண்டு வெளிவந்தபடம் “நினைத்தாலே இனிக்கும்” இந்த படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள் இசையமைத்திருந்தார். இப்போது கேட்டாலும் சொக்க வைக்கும் அந்தப்பாடல்கள் அன்று வெற்றிபெறவில்லை.

அந்த அற்புதமான பாடல்கள் பின்நாட்களில்த்தான் பலராலும் கேட்கப்பட்டன. அன்று அந்தப்பாடல்கள் தோற்றுப்போனதற்க காரணம் என்ன? என்று இசைஞானி இளையராஜா அவர்கள் சொன்ன பதில், அன்று அந்தப்பாடல்கள் தோற்றதற்கு காரணம் விச்சு அண்ணன் 1989ஆம் ஆண்டுக்குரிய பாடல் மெட்டுக்களை 1979ஆம் ஆண்டிலேயே கொடுத்தமைதான் என்று சொல்லியிருந்தார்.
ஆழ்ந்து சிந்தித்துப்பார்த்தால் அந்தக்கருத்து மிகச்சரியானதாகவே இருக்கின்றது.

எனது வாழ்க்கையிலும் நான் சந்தித்த மிகத்திறமையான பலர், உச்சத்திற்கு ஏதோ ஒரு காரணத்தினால் வரமுடியாமல் உள்ளனர். அதேபோல் பல துறைகளிலும் பல சந்தர்ப்பங்களிலும் என்னை மெய் மறக்கச்செய்த நான் சிலிர்த்த, நான் இரசித்த பலர் இன்னும் உச்சத்திற்கு வரமுடியாதவர்களாகவே உள்ளனர்.

ஆகவே நண்பர்களே தோல்வி என்னும சொல்லே தேவையில்லை. தோல்வி என்பது வெற்றிக்கு வழிவகுக்கும் ஒரு நண்பனே! ஆனால் அதை விரோதி என்று தவறாக அடையாளம் காண்கிறீர்கள்.

தோல்வி வந்தவுடன் இனி முடியாது என்று எதிர்மறையாகச் சிந்திப்பவர்களே முயற்சியை நிறுத்திவிடுகிறார்கள். அது தோல்வியாக மாறிவிடுகிறது.

தடையோ, தாமதமோ ஏற்படும்போது, மேலும் முயல்வேன் என்று முடிவு செய்து உழைப்பவர்கள் ஆக்கப்பூர்வமாகச் சிந்திக்கிறார்கள். வெற்றி பெறுகிறார்கள்.

தோல்வி என்பது வெற்றிக்கான பயிற்சியே என்று நீங்கள் உணர வேண்டும். பெரிய இலக்குகளுக்கு மட்டுமல்ல. சாதாரண செயல்களுக்கும் கூட பயிற்சிதான் முழுமையை அல்லது வெற்றியைத் தந்திருக்கிறது.

ஆகவே நாம் எதிர்கொள்ளும் முதல் நேர்முகத்தேர்வில் வெற்றி கிட்டவில்லைஎன்றால் துவண்டுவிடாமல் அங்கே என்னகாரனதிற்காக நமக்கு வேலை கிடைக்கவில்லை என்று சிந்தித்து அந்த தவறை சரி செய்து மீண்டும் முயற்சித்தால் தோல்வி நிரந்தரமானதல்ல, அதைத்துரத்தி விட முடியும் என்னும் ஞானம் உங்களுக்கு வந்துவிடும்.

தோல்வி உங்களைத் துரத்தும் நிலை மாறி, நீங்கள் தோல்வியைத் துரத்தி அடித்து விடுவீர்கள்.

அதன்பின், உங்களுக்கு வெற்றிமேல் வெற்றி வந்து சேரும்.

மேலும் தொடரும் ...... அன்பு மலர் அன்பு மலர் ........


ஈகரை தமிழ் களஞ்சியம் வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி  தொடர்  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி  தொடர்  - Page 2 Empty Re: வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி தொடர்

Post by அன்பு தளபதி Tue Dec 21, 2010 2:48 pm

அட்டகாசம் தொடருங்கள் மேலும் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி  தொடர்  - Page 2 Empty Re: வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி தொடர்

Post by balakarthik Tue Dec 21, 2010 4:53 pm

maniajith007 wrote:அட்டகாசம் தொடருங்கள் மேலும் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி மணி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


ஈகரை தமிழ் களஞ்சியம் வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி  தொடர்  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி  தொடர்  - Page 2 Empty Re: வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி தொடர்

Post by balakarthik Tue Dec 28, 2010 12:46 pm

யானை வரும் முன்னே.. மணியோசை வரும் பின்னே என்பார்கள். உங்களை நேர்முகத்தேர்வுக்கு அழைக்கும் முன்னரே உங்களது ரெஸ்யும் நிறுவனத்தின் கைகளுக்கு சென்றுவிடும். ஆக, உங்களைப் பற்றிய முதல் இம்ப்ரெஷனை ஏற்படுத்தப்போவது நீங்கள் அல்ல. உங்களின் CVதான். எனவே ரெஸ்யும் உங்களைப் பற்றி ஒரு நல்ல எண்ணம் ஏற்படும் வகையில் அமைவது முக்கியம். ரெஸ்யும் எழுதுவது ஒரு கலை. இதை இப்படித்தான் எழுத வேண்டும் என்று வரையறுக்க முடியாது. ஏனெனில் உங்களைப் போலவே அதுவும் தனித்தன்மை வாய்ந்தது. ஆனால் எவையெல்லாம் இருக்க வேண்டும், எதையெல்லாம் செய்யக் கூடாது என்று சொல்லலாம்.

ரெஸ்யும் என்பது நீங்கள் இது வரை செய்து வரும் வேலைகள் பற்றிய பட்டியல் மட்டுமல்ல. அது உங்களைப் பற்றியது. உங்களைப் பற்றி என்னவெல்லாம் தெரிய வேண்டுமோ அவையெல்லாம் அதில் இருக்க வேண்டும். பெரும்பாலும் Resume ஆங்கிலத்திலே எழுதப்படுகிறது என்பதால் அது பற்றிய வார்த்தைகளை ஆங்கிலத்திலே காண்போம்.

1) Contact Information :

Mail id, Mobile number, Landline number இந்த மூன்றும் இருத்தல் அவசியம். official மெயில் முகவரிகளையும், அலுவலக மொபைல் அல்லது லேண்ட்லைன் எண்ணையும் கொடுக்காமல் இருப்பது நல்லது.

2) Job Objective:

இது முக்கியம். நீங்கள் எந்த மாதிரி வேலை எதிர்பார்க்கிறீர்கள், உங்களின் vision எல்லாம் தெளிவாக சொல்லப்பட வேண்டும். முடிந்தவரை வேறு ஒரு ரெஸ்யுமில் இருந்து எடுத்தாளாமல் உங்கள் சொந்த மொழியில் எழுதுங்கள்.

3) Qualification & SKills:

உங்களின் தகுதிகள், திறமைகள் என எல்லாவற்றையும் பட்டியல் இடப்பட வேண்டும். Bulletin formatல் இருந்தால் இடம் மிச்சமாகும். பார்க்கவும் நன்றாக இருக்கும். எந்த வேலைக்கு விண்ணப்பிக்கிறீர்களோ, அது தொடர்பான தகவல்களை முதலில் சொல்லலாம்.

4) Work Experience:

இப்போது இருக்கும் வேலையில் இருந்து தொடங்கி, முந்தைய அனுபவங்கள் பற்றி எழுதுங்கள். Position, Name of the company, Duration, ஆகியவை ஒவ்வொன்றுக்கும் தரப்பட வேண்டும். அந்த வேலையில் உங்களது Responsibilities மட்டும் பட்டியிலிடாமல் அதில் உங்களின் accomplishments என்னவென்று சொல்வதுதான் சரி.

உதாரணத்திற்கு ஒன்றைப் பார்ப்போம். “Redesigning the layout of the shop floor” என்பது ஒரு responsibility என்று வைத்துக் கொள்வோம். அதை இப்படி எழுதலாம் “Transformed a Poor utilized ,inefficient shop floor into a smooth-running operation by totally redesigning the layout; this increased the productivity and saved the company thousands of dollars”. இதையே “Redesigning the layout of the shop floor” என்று எழுதினால் முழுமையாகாது

இரண்டு வேலைகளுக்கு நடுவே இடைவெளி இருந்தால் அதை தெளிவாக குறிப்பிட்டு, காரணத்தையும் சொல்லி விடுவது நல்லது. முடிந்தவரை quantifiable terms ஆக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.

5) Education :

பெரும்பாலானவர்கள் தங்களது கல்லூரி தகவல்களை மட்டுமே தருகிறார்கள். இப்போதெல்லாம் நமது 10வது மதிப்பெண்களை கூட கணக்கில் கொள்கிறார்கள். எனவே இந்த இடத்தில் 10வது முதல், கடைசியாக பயின்ற/பயிலும் பாடம் வரை தெளிவாக சொல்ல வேண்டும். வெளிநாடுகளில் ஏதேனும் பட்டம் வாங்கியிருந்தால், அதை இந்திய படிப்பிற்கு இணையான தகவ்ல்கள் கொண்டு விளக்கப்பட வேண்டும். இந்த டேட்டாக்களை Tabular formatல் தந்தால் படிக்க வசதியாக இருக்கும் . கீழ்கண்ட தகவல்கள் கொடுப்பது நம்பகத்தன்மையை அதிகரிக்கும்

1) Course
2) Joining year & year of passing
3) Marks scored
4) Instituion / Board
5) Specialization
6) Achievements

இந்த 5 பிரிவுகளும் நிச்சயம் இருக்க வேண்டும். இன்னும் நம் வேலைக்கேற்ப பிரிவுகள் சேர்க்கலாம். அதே போல சிலர் பல நிறுவனங்களில் வேலை செய்திருந்தாலும் ஒரே வேலையைத்தான் செய்திருப்பார்கள். அவர்கள் Responsibilitiesஐ மொத்தமாக பட்டியிலிட்டுவிட்டு, Companies worked என்பதை தனியாக சொல்லி விடலாம். ஒவ்வொரு நிறுவனத்திற்கும் தனிப்பட்ட வேலைப் பற்றிய தகவல்களை தர வேண்டியதில்லை. Front office admin, Saftey officers போன்றவர்கள் இந்த மாதிரியான ரெஸ்யும் தயார் செய்யலாம்.

செய்ய வேண்டியவை பார்த்தாயிற்று. இனி செய்யக் கூடாதவை என்னவென்று பார்க்கலாம்.

1) இது உங்களின் ரெஸ்யும். எனவே “ I have worked“ (நான்) என்று எழுதுவது தேவையில்லாதது. எந்த இடத்திலும் இப்படி வரமால் பார்த்துக் கொள்ளுங்கள்.

2) உங்கள் வேலைக்குத் தொடர்பில்லாத Hobbies தேவையே இல்லை. புகைப்படத்துறையில் வேலைக்கு விண்னப்பிக்கிறவர் Photography தொடர்பான Hobby யை சொல்லலாம். மற்றவர்களுக்கு தேவையில்லை.

3) உங்களின் மதம், சாதி சார்ந்த தகவல்களுக்கு ரெஸ்யுமில் இடமில்லை. தேவைப்பட்டால் கேட்கும் போது தரலாம். ஆனால் ரெஸ்யுமில் நிச்சயம் இவை தேவையில்லாத விஷயங்கள்

4) உங்கள் பெயர் Common Name ஆக இருந்தால் பாலினம் குறித்து சொல்ல வேண்டும் அல்லது முதல் பக்கத்திலே Mr.Karthik அல்லது Ms.Kamla என்று சொல்லி விடலாம்.

5) ரெஸ்யும் பார்க்க/படிக்க எளிமையாய் இருக்க வேண்டும். எனவே எழுத்துருக்கள்(Fonts) எளிமையாய் இருக்க வேண்டும். Arial font, 10Pt பொதுவாக பயன்படுத்தப்படும் எழுத்துரு. வரிகளுக்கு இடையேயான இடைவெளி 1.5 ஆக இருந்தால் தெளிவாக இருக்கும். பத்தித்தலைப்புகளை Bold & Underline செய்தால் போதும். அளவைக் கூட்டத் தேவையில்லை.

6) தன்னைப் பற்றி சொல்லிக் கொள்வது எல்லோருக்குமே பிடித்தமான செயல்தான். ஆனால் Innovative, Self Starter, Team Player என்பது போன்ற பொதுவான வார்த்தைகள் காலாவாதியாகி கால் நூற்றாண்டு ஆகிவிட்டது. Linked in blogல் வந்த இந்தப் பதிவு அதைப் பற்றி விரிவாக அலசுகிறது. விருப்புமிருப்பவர்கள் படித்துக் கொள்ளலாம்.

ரெஸ்யூமை அடுத்த வாரத்திற்குள் தயார் செய்து கொள்ளுங்கள். அடுத்த வாரம் எங்கே, எப்படி எல்லாம் வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என்று பார்ப்போம்

தொடரும் .................


ஈகரை தமிழ் களஞ்சியம் வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி  தொடர்  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி  தொடர்  - Page 2 Empty Re: வேலை மாறபோகிறிர்களா -எனர்ஜி தொடர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum