ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம்

+17
பூஜிதா
senthilmask80
கா.ந.கல்யாணசுந்தரம்
T.N.Balasubramanian
கலைவேந்தன்
Raju_007
mmani15646
மோகன்
balakarthik
உதயசுதா
தமிழ்ப்ரியன் விஜி
varsha
தமிழ்நேசன்1981
Aathira
அன்பு தளபதி
krishnaamma
சிவா
21 posters

Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 2 Empty சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம்

Post by சிவா Sun Dec 19, 2010 9:22 pm

First topic message reminder :

மாலை நேரம். வீட்டு வாயிலில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. வீட்டின் உள்ளே... முன் அறையில் தாத்தா ஏதோ புத்தகம் படித்துக் கொண்டிருந்தார். அதிலேயே மூழ்கிப் போயி ருந்த அவரது கவனத்தை, ‘லொட்டு...புட்டு’ என்று ஏதோ சத்தம் திசை திருப்பியது. நிமிர்ந்த தாத்தாவை, முறைத்துப் பார்த்தபடி உள்ளே நுழைந்தான் பேரன்.

புத்தகத்தை மூடி வைத்த தாத்தா, ‘‘காலைக் கழுவிட்டு உள்ளே வா!’’ என்றார் சற்றுக் கறாராக.

‘‘செருப்பு போட்டுக்கிட்டுத்தானே போனேன். வெறுங் காலோடவா போனேன்?’’ என்று முணுமுணுத்தபடியே கால்களைக் கழுவிக் கொண்டு தாத்தாவை நெருங்கினான் பேரன். வெளியில் சுற்றிவிட்டு வந்ததனால் உண்டான வியர்வையும் அடங்கவில்லை; தாத்தாவின் கறார் வார்த்தைகளால் உண்டான வருத்தமும் அடங்கவில்லை அவனுக்கு.

குளிர்சாதனப் பெட்டியில் இருந்து குளிர்ந்த தண்ணீரைக் கொண்டு வந்து, மகனிடம் நீட்டினாள் தாயார்.

‘‘கொஞ்ச நேரம் கழிச்சுக் குடி!’’ என்றார் தாத்தா.

கோபம் பொத்துக் கொண்டு வந்தது பேரனுக்கு.

‘‘பிராணனை வாங்கறியே தாத்தா! உன் காலத்து சமாசாரத்தை எல்லாம் இந்தக் காலத்துல யார் சீண்டுறா? விஞ்ஞானம் எங்கேயோ போய்க்கிட்டிருக்கு. இந்தக் காலத்துல போய்.... உதவாததையெல்லாம் சொல்லிக்கிட்டு...’’ என்று வெடித்தான் பேரன்.

சிரித்தார் தாத்தா. ‘‘உதவாதது எதையும் நம்ம முன்னோர்கள் சொல்லிட்டுப் போகலை. என்ன சொன்னே? விஞ்ஞான வளர்ச்சியா, ஒண்ணு சொல்றேன், கேட்டுக்கோ! அணுவைப் பற்றின சிந்தனைகூடத் தோணாத அந்தக் காலத்துலேயே விஞ்ஞான உண்மைகளை சொன்னவங்க நம்ம பெரியவங்க. அதைப் பத்தி விளக்கமா சொன்னா தான் உனக்குப் புரியும். இந்தா, அதுக்கு முன்னாடி இப்ப தண்ணீரைக் குடி!’’ என்றபடி தண்ணீரை பேரனிடம் நீட்டினார் தாத்தா.

‘இந்தத் தாத்தா பொய் சொல்றாரா? அல்லது ஏதாவது உண்மை இருக்குமா?’ என்ற குழப்பத்துடன் தண்ணீரை வாங்கிக் குடித்த பேரன், ‘‘என்ன தாத்தா சொல்றே? நம்ம பெரியவங்க... விஞ்ஞான உண்மை... அது இதுன்னு என்னென்னவோ சொல்றே? இதெல்லாம் உண்மையா?’’ என்றான்.

தாத்தா நிமிர்ந்து உட்கார்ந்தார். ‘‘நான் சொல்றேன். நீயே தீர்மானிச்சுக்கோ! அணுவைப் பற்றி மேல் நாட்டுக்காரங்க யாரும் யோசிக்காத அந்தக் காலத்துலேயே அதுபத்தின விஷயங்களை நம்ம பெரியவங்க விளக்கமா சொல்லியிருக்காங்க தெரியுமா? கம்பராமாயணத்துலயும் இதுபத்தி ஒரு தகவல் உண்டு. யுத்த காண்டத்துல, ராவணனுக்கு விபீஷணன் யோசனை சொல்றான். அப்ப அவன் ஹிரண்யகசிபுவை பத்திச் சொல்றதைப் படிக்கிறேன், கேளு...

‘எங்கே இருக்கிறான் உன் இறைவன்?’ என்று தன் மகனைப் பார்த்துச் சீறினான் ஹிரண்யகசிபு. பிரஹ்லாதன் பதில் சொன்னான்: ‘சாணிலும் உளன். ஒரு தன்மை அணுவினை சத கூறு இட்ட கோணிலும் உளன்!’

‘அணுவுக்குள் அணுவாக இறைவன் இருக்கிறான்’ என்பதைச் சொல்ற இந்த இடத்துல, அணுவை நூறு(சத) கூறுகளாகச் செய்து, அதில் ஒரு சதவிகித அணுவை ‘கோண்’ என்று, கம்பராமாயணம் குறிப்பிடுது’’ என்ற தாத்தா சற்று நிறுத்தினார்.

பேரன் ஆச்சரியப்பட்டான்.

ஓரக்கண்ணால் அவனது வியப்பை ரசித்தபடி தாத்தா தொடர்ந்தார்: ‘‘பிளக்க முடியாததுன்னு சொல்லப்பட்ட அணுவைப் பிளந்து, ஒரு சதவிகித அணுவுக்கும் தமிழில் பெயர் வெச்சுட்டாங்க அந்தக் காலத்துலயே! ஆனால், எனக்குத் தெரிஞ்சு இன்னிக்கும் ஒரு சதவிகித அணுவுக்கு ஆங்கிலத்தில் பெயர் சூட்டப்படலை. சரி... மேலே சொல்றேன். கம்ப ராமாயணமே, அணுவின் செயல்பாட்டையும் சொல்றது.

போர்க்களத்தில் இந்திரஜித் இறந்து கிடக்கிறான். அவன் தாயார் மண்டோதரி அழுகிறாள். ‘தலை சிறந்த வீரனான உன்னை& இந்திரனையே வென்று இந்திர ஜித் என்று பெயர் பெற்ற உன்னைக் கொன்று விட்டார்களே! அணு ஆயு தத்தை ஏவ, அது ஓடிவந்து வெடித்துச் சிதறி நாசத்தை உண்டாக்கியது போல் இருக்கிறது’ என்கிறாள்.

அந்த வரி: உக்கிட அணு ஒன்று ஓடி உதைத்தது போலும் அம்மா!

எங்கோ ஓரிடத்தில் சுவிட்சை அழுத்தியதும் அணு ஆயுதம் சீறிக் கிளம்பும். குறிப்பிட்ட இடத்தை அடைந்ததும் வெடித்துச் சிதறி நாசத்தை உண்டாக்கறது. இதைத் தான் கம்ப ராமாயணம், ‘உக்கிட அணு ஒன்று ஓடி உதைத்தது போலும் அம்மா!’னு சொல்றது!’’ தாத்தா சற்று நிறுத்தினார்.

பேரன் பெருமூச்சு விட்டான்!

தாத்தா தொடர்ந்தார்: ‘‘இப்போ கால் கழுவுற விஷயத்தைச் சொல்றேன். கவனமா கேள்! நின்றாலும் நடந்தாலும் உட்கார்ந்தாலும் நம்ம கால் மட்டும்தான் தரையில் பட்டுக்கிட்டிருக்கும். இப்படிக் கண்ட இடத்துலயும் அலையுற கால்கள்ல ஏராளமான கிருமிகள் ஒட்டிக்கிட்டிருக்கும். கால் கழுவாம இருந்தா அவ்வளவு கிருமிகளும் கால் களில் உள்ள நகக் கண் வழியா உள்ளே புகுந்து வியாதியை உண்டாக்கும். அதனாலதான் நம்ம பெரியவங்க காலைக் கழுவிட்டு உள்ளே வரச் சொன்னாங்க.

என்னதான் கழுவினாலும் ஒன்றிரண்டு கிருமிகள் கால்களில் ஒட்டிக் கிட்டிருந்தா, என்ன செய்யுறது?

அதுக்காகவே வீட்டு வாசப் படியில் மஞ்சள் பொடியைக் குழைத் துப் பூசி வெப்பாங்க. காலைக் கழுவிட்டு மஞ்சள் பூசின வாசப்படி வழியா உள்ளே நுழைஞ்சா, காலில் மிச்ச மீதி இருக்கும் கிருமிகளும் அழிஞ்சு போயிடுமாம். தலை சிறந்த கிருமி நாசினி மஞ்சள் என்பதை தெரிஞ்சதாலதான் நம்ம பெரியவங்க அப்படி செஞ்சாங்க. இதே போல சாப்பிடறதுக்கு முன் னாலயும் சாப்பிட்ட பிறகும் கால் கழுவறதும் நல்லது. இதனால ஜீரண உறுப்புகள் பலப்படும். ஜீரண சக்தி அதிகரிக்கும். புரிஞ்சுதா?’’ என்றார் தாத்தா.

பிரமிப்பில் இருந்த பேரன் வாயைத் திறந்தான். ‘‘புரிஞ்சுது தாத்தா... புரிஞ்சுது! இதையெல்லாம் உணர்ந்து ஃபாலோ பண்றதாலதான், உங்களை மாதிரி பெரியவங்க வயசானாலும் கரும்பைக் கடிச்சு சாப்பிடுறீங்க. நாங்களோ...’’ என்ற பேரனை இடைமறித்த தாத்தா, ‘‘கரும்பையே ஜூஸாகக் கேட்கறீங்க!’’ என்றார் கலகல சிரிப்புடன்.

‘‘அது போகட்டும் தாத்தா! நான் வீட்டுக்குள்ளே நுழைஞ்சதும், அம்மா தந்த தண்ணீரைக் குடிக்க விடாம, அப்புறமா குடிக்கலாம்னு சொன்னீங்களே, அது ஏன்? சொல்லுங்க!’’ என்றான்.

‘‘இதற்கு உண்டான பதிலைப் பெரிய புராணம் சொல்றது. அதையும் சொல் றேன்’’ என்றார் தாத்தா.

‘‘சேக்கிழார் எழுதினதுதானே?’’ என் றான் பேரன்.

ஆச்சரியப்பட்டார் தாத்தா. ‘‘அடடே... சேக்கிழார் எழுதினதை எல்லாம் சரியாச் சொல்றியே... பரவாயில்லை!’’ எனப் பாராட்டினார்.

‘‘தாத்தா! இந்தக் காலத்துப் பசங்களான எங்களைப் பத்தி தப்பாவே நினைச்சுக்கிட்டிருக்கீங்க போல! கொஞ்சம் கொஞ்சமாவது எங்களுக்கும் தெரியும். மற்றதைத் தெரிஞ்சுக்கிற ஆர்வமும் இருக்கு! ஏற்கும்படி சொல்ல வேண்டியது அனுபவசாலியான பெரியவங்க கடமை! சரி... சரி! நான் கேட்டதுக்குப் பதிலைச் சொல்லுங்க. பாராட்டெல்லாம் அப்புறமா வெச்சுக்கலாம்’’ என்று ஆர்வத்துடன் கேட்டான் பேரன்.

தாத்தா சொன்ன பதில், அடுத்த விஞ் ஞான ஆச்சரியம்!


Last edited by சிவா on Sun Dec 19, 2010 10:02 pm; edited 1 time in total


சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

T.N.Balasubramanian and mayuran89 இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down


சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 2 Empty Re: சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம்

Post by சிவா Sun Dec 19, 2010 10:32 pm

வள்ளுவர் ஊசி... நீ கொஞ்சம் யோசி!

அசோசியேஷன் மீட்டிங்கில் இருந்து வீடு திரும்பிய தாத்தாவை, மிகவும் பெருமிதத்தோடு பின்தொடர்ந்தாள் பேத்தி. வீட்டுக் குள் நுழையும்போது ஒரே கூச்சல்; குழப்பம். தாத்தா வின் பின்னால் பதுங்கியபடியே பின்தொடர்ந்தாள் பேத்தி. தாத்தாவின் மருமகள் கண்கள் சிவக்க, வீட்டின் உள்ளே கத்திக் கொண்டிருந்தாள்.

தாத்தாவும் பேத்தியுமாக உள்ளே நுழைவதைப் பார்த்தவுடன் வேகமாக அவரை நெருங்கி, ‘‘நீங்க ஊருக்கெல்லாம் சொல்றது அப்புறமா இருக்கட்டும். மொதல்ல உங்க பேத்தியையும் பேரனையும் சரி பண்ற வழியப் பாருங்க!’’ என்றாள் மருமகள்.

நாற்காலியில் அமர்ந்த தாத்தா, ‘‘ஏம்மா! இன்னிக்கி என்ன இவ்வளவு கோவம்? என்ன ஆச்சு?’’ என்றார்.

கண்களால் மகளை முறைத்த மருமகள், ‘‘இன்னிக்கி ஸ்கூலுக்கு கொடுத்தனுப்பின சாப்பாட்ட, வேணும்னே கீழ கொட்டிட்டு வந்துருக்கா’’ என்றாள் கடுகடுப்பாக. ‘‘சோத்தக் கொட்டினானு சொல்றியே... உனக்கு எப்படித் தெரியும்?’’ என மருமகளிடம் கேட்டார்.

‘‘அவ சாப்பிட்டிருந்தா, டப்பா க்ளீனா இருந்திருக் குமே... சோத்தக் கொட்டற அன்னிக்கெல்லாம் டப்பாவக் கழுவ மாட்டா’’ எனப் பதில் வந்தது எரிச்சலுடன். தாத்தா உடனே பேத்தியைப் பார்த்து, ‘‘அம்மா சொல்றதெல்லாம் உண்மைதானா?’’ என்று கேட்டார். உணவைக் கீழே கொட்டியதை ஒப்புக் கொண்டாள் பேத்தி.

‘‘ஏம்மா! சோத்தக் கீழே கொட்டலாமா? உலகத்துல இருக்கற அத்தன பேரும் நாயாப் பாடுபடுறது, இந்த ஒரு வா(ய்) சோத்துக்குத் தானேம்மா. சோறே கெடைக்காம பல பேரு கஷ்டப்படும்போது, நீ அதக் கொட்டலாமா?’’ என்றார் தாத்தா பொறுமையாக.

‘‘இனிமே கொட்ட மாட்டேன் தாத்தா! ப்ராமிஸ்’’ என்றாள் பேத்தி.

அவள் தலையை மென்மையாகத் தடவிக் கொடுத்தார் தாத்தா.

‘‘கொழந்த! நீ மட்டும் இல்ல. பல பேரு இப்படித்தான் சோத்த வீணாக்கறாங்க. இப்படிப் பண்ணக் கூடாதுன்னு வேதமும் உபநிடதங்களும் எவ்வளவோ சொல்லுது!’’

‘‘என்னது... சாப்பாட்டப் பத்தி அதுலல்லாம் சொல்லி இருக்குதா? சொல்லு தாத்தா!’’ _ பேத்தி ஆர்வமானாள்.

‘‘விரதங்கள்னு நாம பலதைச் சொன்னாலும் ஒரு முக்கியமான விரதம், நம்ம பல பேருக்குத் தெரியாது. சாப்பாட்டப் பழிக்கக் கூடாது; அதுவே ஒரு விரதம்னு தைத்திரிய உபநிடதத்துல பிருகுங்கறவருக்கு அவங்க அப்பா சொல்லிருக்கார். சாப்பிடும்போது அதப் பழிக்கறது, குத்தம் சொல்றது, இதெல்லாம் ஆரோக்கியத்துக்குக் கெடுதல். ‘இந்த சாப்பாடு நல்லது செய்யும்; பலம் கொடுக்கும்; மனசத் தூய்மையா வெச்சுக்கும்’னு முழு நம்பிக்கை வெச்சு, சந்தோஷமா சாப்பிடணும்.

சாப்பாட்டப் பத்திச் சொல்லி, அதோட முக்கி யத்தைச் சொல்லிப் படிப்படியாப் போய், பிரம்மதத்துவம் வரைக்கும் அந்த முனிவர் சொல்லியிருக்கார். ‘அன்னம் ந பரிசக்ஷீத தத்வரதம்’னு வேற சொல்றார். ‘சாப்பாட்ட எறியக் கூடாது. இது விரதம்’ங்கறார். சூப்பர் சாப்பாடா இருந்தாக்கூட ஆசையில அளவுக்கு மிஞ்சிப் போட்டுக்கிட்டு, அப்பறமா சாப்பிட முடியலைனு தூர எறியக் கூடாது. ‘உனக்காக மட்டும் உணவை உண்டாக்கினா போறாது. நாட்டுக்குப் பயன்படுற மாதிரி உணவை ஏராளமா உண்டு பண்ணு’னு அந்த முனிவர் சொல்லி இருக்கார். ‘அன்னம் பஹி குர்வீத தத் வ்ரதம்’ங்கறார். இத விடப் பெருசான ஒரு பொருளாதார உபதேசம் கெடையவே கெடையாது. இதுவரையில உபநிடதம் என்ன சொல்றதுனு சொன்னேன். வா! இனிமேல வள்ளுவர் கிட்டப் போகலாம்’’ என்றார் தாத்தா.

‘‘வள்ளுவரா? சாப்பாட்டைப் பத்தியா?’’ என்ற பேத்தி முகத்தில் ஆச்சரியம் காட்டினாள்.

‘‘ஆமா. வள்ளுவர்தான். அவர் எப்ப சாப்பிட உட்கார்ந்தாலும் ஒரு சின்ன கிண்ணத்துல தண்ணி யும், ஒரு ஊசியும் வெச்சுக்கிட்டு உட்காருவாராம். அது எதுக்குன்னு, அவர் மனைவி வாசுகி ஒரு நாள்கூடக் கேட்டதில்ல. அந்தம்மாவோட கடை சிக் காலம் வந்திடுச்சு. இன்னும் கொஞ்ச நேரத்துல அந்தம்மா செத்துப் போகப் போறாங்க. கண்ணுல நீரோட வள்ளுவர், வாசுகி பக்கத்துலயே இருக்கார். அப்ப அந்தம்மா, ‘ஏங்க! சாப்பிடும்போது, ஒரு கிண்ணத்துல தண்ணியும் ஊசியும் வெச்சுக்கிட்டு உட்காருவீங்களே... அது எதுக்குங்க?’னு கேட்டாங்க.

‘வாசுகி! நீ சாப்பாடு போடும்போது, ஏதாவது சோத்துப் பருக்கை கீழே சிந்தினா, அத ஊசியால குத்தி எடுத்து, கின்ணத்து தண்ணியில சுத்தம் பண்ணி எடுத்துக்கலாம்னுதான் வெச்சுருந்தேன். அதுக்குத் தான் தினமும் நீ வேலையே வைக்கறதில்லையேம்மா!’னு வள்ளுவர் தழுதழுத்துகிட்டே சொன்னாராம். உணவு மேல வள்ளுவருக்கு இருந்த அக்கறை மட்டுமில்ல... கணவன் மனைவி எவ்வளவு ஒத்துமையா இருந்துருக்காங்க அப்படீங்கறதும் இதுலேர்ந்து தெரியுது பாரு!’’

தாத்தா சொல்வதை இமை கொட்டாமல் கவ னித்தாள் பேத்தி. மருமகளின் கோபமும் சற்று தணிந்திருந்தது. அருகே அமர்ந்து அவளும் கவனிக்க ஆரம்பித்தாள்.

‘‘நாம எல்லோரும் மகாபாரதத்து பக்கம் போயிட்டு வரலாமா? கர்ணன் பெரிய கொடை வள்ளல்ங்கிறது தெரியும். அவன் எல்லா தானமும் குடுத்தான். அன்னதானம் மட்டும் செய்யல. அதனால அவன் மேலுலகத்துல கஷ்டப்பட்டதாகவும், அன்னதானம் செய்யறதுக்காக மறுபடியும் பூமியிலேயே வந்து சிறுத்தொண்ட நாயனாரா பொறந்தான்னும் சொல் வாங்க. வியாசரோ, வில்லிபாரதமோ சொல்லாத இந்தத் தகவல், சிறுத்தொண்ட நாயனார் கதையில் இருக்கு.

இப்ப வா! வேதம் என்ன சொல்லியிருக் குன்னு பாக்கலாம். வேதம் நமக்கு ஆசீர் வாதம் பண்ணும்போது முக்கியமா ரெண்டு பாக்கியங்களைப் பத்திச் சொல்லுது. ‘அன்னவான் அன்னாதோபவதி’ங்குது. அதாவது, அன்னத்தை நெறய உடையவனா இருக்கணும். அத அனுபவிக்கற பாக்கியமும் அவனுக்கு இருக்கணும்ங்கறது எளிமையான விளக் கம். பல பேருக்கு சாப்பாட்டுக்கே வழி இருக்காது; பல பேர்கிட்ட ஏராளமா இருந்தாலும் வியாதியாலோ அல்லது வேற ஏதாவது காரணத்தாலயோ சாப்பிட முடியாம போகும். இந்தக் குறையே இல்லாம இருக்கணும்னுதான் வேதம் ஆசீர் வாதம் பண்ணுது.

இப்ப சொல்லு! சாப்பாட்டு விஷயத்துல வேதம் சொன்ன தீர்வு புரிஞ்சுதா? ஒழுங்கா இருப்பியா?’’ என்றார் தாத்தா.

‘‘நல்லா புரிஞ்சுது தாத்தா! இனிமே ஒரு பருக்கை கூட சோத்த வீணாக்க மாட்டேன்!’’ என்றாள் பேத்தி.

தாத்தா, மருமகள் பக்கம் திரும்பினார். ‘‘இது வரைக்கும் உன் பொண்ணுக்கு சொல்லியாச்சு அதுவும் நல்ல விதமா. அவ கொழந்த. ஆனா நீ கோவத்துல கொழந்தையைத் திட்டறே; மிரட்டறே. பெத்த குழந்தையை இப்பிடித் திட்டறியே, இது என்ன நியாயம்? உங்க கால விஞ்ஞானப்படியும் இது தப்புங்கறது தெரியலியா? ‘விஞ்ஞானம் சொன்னாலும் கேக்க மாட்டேன்; இதிகாச புராணம் சொன்னாலும் கேக்க மாட்டேன்’னா என்ன செய்யறது?’’

‘‘விஞ்ஞானமா?’’ என்று மருமகள் ஆச் சரியமாகப் பார்க்க... தொடர்ந்து தாத்தா தன் மருமகளுக்கு விளக்கினார். மருமகள் மட்டும் அல்ல; நாமும் வியப்போம்.


சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

mayuran89 இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 2 Empty Re: சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம்

Post by சிவா Sun Dec 19, 2010 10:41 pm

மூக்கு குத்திக் கொள்வது எதற்காக?

பேத்தியைத் திட்டிய மருமகளைத் தன் எதிரில் உட்கார வைத்த தாத்தா மெள்ளப் பேச்சை ஆரம்பித்தார்: ‘‘ஏம்மா! உன் குழந்தைகள ‘நாசமாப் போ’னு திட்டறியே! அப்படி ஆனா உனக்கு சந்தோஷமா? நெனச்சுப் பாரு! நீ இதே மாதிரி சின்ன வயசுல ரகள பண்ணினப்போ, உங்க அப்பா அம்மா என்ன சொல்லித் திட்டினாங்க?’’ என்றார்.

சில விநாடிகள் யோசித்த மருமகள், ‘‘நாசமத்துப் போக அப்படினு திட்டினதா ஞாபகம்’’ என்றாள். ‘‘சரியாத்தான் சொல்றே! கோபத்துலகூட ‘நாசம் அற்றுப் போகணும்’னுதான் பெரியவங்க வாழ்த்தா சொல்லுவாங்க. ஏன் அப்படிப் பண்ணினாங்க? யோசிச்சுப் பாரு! வீட்டுக்கு வீடு சுவர்ல லட்சுமி படம் வரைஞ்சு வெச்சு அல்லது சாமி படங்கள்லாம் வெச்சு பூஜை செய்யறோம். அமங்கலமா பேசலாமா? ஒவ்வொரு வீட்டுலயும் கிரகலட்சுமி, கண்ணுக்குத் தெரியாம இருப்பா. நீ சொல்ற எந்த ஒரு வார்த்தையும் ‘அப்படியே பலிக்கட்டும்!’னு அந்த கிரகலட்சுமி ஆசீர்வாதம் பண்ணுவா!’’ என்ற தாத்தாவை இடை மறித்தாள் மருமகள்.

‘‘எப்படி?’’

‘‘இதுக்கெல்லாம் உனக்கு லேபரட்டரில பிப்பெட்டு பியூரெட்டு வெச்சா காமிக்க முடியும்? இருந்தாலும், உனக்குப் புரியற மாதிரி சொல்றேன். செல்போன் வெச்சிருக்கியா?’’ தாத்தா.

‘‘இருக்கே.’’ மருமகள்.

‘‘ஏம்மா, நீ எங்க இருந்தாலும் உன்னப் பிடிச்சு உங்கூடப் பேச முடியுதுல்ல?’’

‘‘ஆமா. செல்போன்ல அது சர்வ சாதாரணம்.’’

‘‘நீ குடுத்த உன் நம்பரை வெச்சு எப்படி உன்னப் பிடிக்க முடியுதோ, அதே மாதிரிதான் நீ சொன்ன வார்த்தைகளில் உள்ள அதிர்வை வெச்சு, கிரக லட்சுமியும் உன்னப் பிடிக்கும்னு சாஸ்திரம் சொல்லுது!’’ என்றார் தாத்தா நிதானமாக.

‘‘புரியுது. இனிமே அமங்கலமா பேசமாட்டேன்’’ என்றபடி ஆவி பறக்க சாதமும் கம கமக்கும் ரசமும் கொண்டு வந்து தாத்தாவுக்குப் பரிமாறத் தயாரானாள் மருமகள்.

மற்றொரு நாள்... பக்கத்து வீட்டு அம்மா தன் மகளுடன் வந்தாள். ‘‘ஏங்க பெரியவரே! எங்க வூட்டுல எல்லாரும் தவறாம மூக்குக் குத்திக்குவோம்; காதும் குத்திக்குவோம். எந்த நேரத்துல இதப்பெத்தேனோ தெரீல. நீங்களாச்சும் இது புத்தில படறா மாதிரி சொல்லுங்க!’’ என்று முறையிட்டாள்.

பெண் குழந்தையை ஒரு முறை பார்த்தார் தாத்தா.

‘‘என்ன தாத்தா இது? இந்தக் காலத்துல போய் மூக்கக் குத்திக்க, மூஞ்சியக் குத்திக்கனு சொல்லிக்கிட்டு! நாங்க ஒண்ணும் முச்சூடா மாட்டோம்னு சொல்லலியே. அதுக்கு பதிலா ஆர்ட்டிஃபீஷியலா ‘டப்ஸ்’ விக்கறாங்க! அதை வாங்கி மாட்டிக்கிட்டா என்ன தப்பு?’’ எனக் கேட்டாள் சிறுமி.

‘‘இரும்மா... இரும்மா! நீ பாட்டுக்கு இதுக்கு பதிலா அது, அதுக்கு பதிலா இதுன்னு போய்க்கிட்டே இருக்காத. ஏற்கெனவே வாழை இலைக்கு பதிலா, பிளாஸ்டிக்ல வாழை இலை, குங்குமத்துக்கு பதிலா ஸ்டிக்கர் பொட்டுன்னு போய், மாவிலைத் தோரணம்கூட பிளாஸ்டிக்ல வந்தாச்சு. நல்லவேள. விபூதி, திருமண்ணெல்லாம் இன்னும் பிளாஸ்டிக்ல வரல. இப்ப உன் பிரச்னைக்கு வா. காரணங்கள் சொல்றேன், கேட்டுக்க.

பெண்ணோட மூச்சுக் காத்துக்கு, ஆண்களோட மூச்சுக் காத்த விட பவர் அதிகம். சக்தி அதாவது ஸ்டெமினா அதிகம். அந்த மூச்சுக் காத்து முழுசா எதிர்ல இருக்கவங்க மேல படக் கூடாது. அதுனாலதான் மூக்குத்திங்கறதப் போட்டு, அதை கண்ட்ரோல் பண்ணி வெக்கிறாங்க. அப்படி மூக்குத்திய ஒரிஜினலா தங்கத் துலயே போட்டுக்கிட்டதுனால, ஆரோக்கியமா இருந்தாங்க. இன்னிக்கி அதுக்கு பதிலா செயற்கை டப்ஸ் வந்துடுச்சு. இந்த செயற்கை நகை மூக்குலியோ, காதுலியோ போய்ப் புடிச்சுக்கிட்டு இருக்குமே தவிர, ஒரிஜினலோட பவர் இதுக்குக் கிடையாது. அது மட்டுமில்ல... டூப்ளிகேட் நகை மூக்குலியோ, காதுலியோ ‘நச்’சுனு புடிச்சுக்கிட்டு இருக்கறதால, அங்க ரத்த ஓட்டமும் தடைபட வாய்ப்பு இருக்கு இல்லியா?!’’

கேட்டுக் கொண்டிருந்த பக்கத்து வீட்டுச் சிறுமி படபடத்தாள்: ‘‘அதெல்லாம் சரி தாத்தா. ஆரோக்கியம்ங்கறது எல்லாருக்கும் பொதுதானே. அப்ப ஏன் ஆம்பளைங்களும் காது குத்திக்கக் கூடாது?’’

அவளைத் தட்டிக் கொடுத்த தாத்தா, ‘‘பொடிசு! பொடிசு! இந்தக் காலத்துக் கொழந்தயா இருந்தாலும், நீயும் என் ரூட்டுலியேதான் வர்ற. வா! அதயும் உனக்குப் புரியும்படியா பாக்கலாம். ஆம்பளைங்களும் காது குத்திக்கிட்டுத்தாம்மா இருந்தாங்க. இப்ப என் காதப் பாரு!’’ என்று தன் காதுகளை ஆட்டிக் காட்டினார். காது குத்திய துவாரம் அங்கு இருந்தது.

‘‘நானும் நீயும் சேந்து இந்த உலகத்த அப்படியே திருத்திட முடியுமா என்ன? நாம ஒழுங்கா இருந்துட்டுப் போவோமே குழந்தே... என்ன சொல்ற?’’ தாத்தா.

‘‘கரெக்ட் தாத்தா. மேல சொல்லுங்க!’’ சிறுமி.

‘‘நானும் ‘மேல’ (Male) பத்திதாம்மா ஃபீமேல்கிட்ட சொல்லிக்கிட்டுருக்கேன்...’’ தாத்தா.

வாய் விட்டுச் சிரித்து விட்டாள் சிறுமி.

‘‘காது குத்தறது, மூக்கு குத்தறதெல்லாம், அந்தக் காலத்துலியே நம்ம பாட்டன் பூட்டனெல்லாம் அனுபவபூர்வமா சொன்ன அக்குபிரஷர் வைத்தியம்மா. இத, சுமார் பதினஞ்சு வருஷங்களுக்கு முன்னால முரளிதர்ங்கற ஈரோடு டாக்டர் அனுபவபூர்வமாவே சொல்லிருக்காரு. சின்னப் புள்ளைங்க பல பேர அவர் கிட்ட வைத்தியம் பாக்கக் கூட்டிக்கிட்டு வந்தாங்க. எல்லாத்துக்கும் ஒரே ஒரு பிராப்ளம்தான். அடிக்கடி ஜன்னி வருதுங்கறதுதான் அது. அனுபவசாலியான அந்த டாக்டர், அத்தனை கொழந்தைங்களுக்கும் முறைப் படி காது குத்த வச்சாரு. தன் நேரடிப் பார்வையிலேயே வெச்சு சோதனயும் செஞ்சாரு. ரிசல்ட் என்னாச்சு தெரி யுமா? அந்தக் கொழந்தைங்களுக்கு அதுக்கு அப்பறமா ஜன்னியே வரல. போயே போச்சு! இட்ஸ் கான்’’ என்று சிரித்தார் தாத்தா.

‘‘நாளைக்கே நான் மூக்குக் குத்திக்கறேன் தாத்தா. தாங்க்ஸ்!’’ என்று சொல்லிக் கொண்டு அங்கிருந்து கிளம்பினாள் சிறுமி.

அவள் தாயார், ‘‘இப்ப நீங்க சொன்னதக் கேட்டதுக்கு அப்பறம்தான், எனக்கே விவரமா தெரியுது. நான்கூட அப்பப்ப காதுல, மூக்குல இருக்கறத கழட்டி கழட்டி வெச்சுருவேன். இனிமே அப்படிப் பண்ண மாட்டேன்’’ என்று தன் காதைத் தடவியவள், ‘‘ஐயையோ! என் தோட்டைக் கழட்டி எங்கியோ வெச்சுட்டேன். ரெண்டு பவுனு’’ என்று கத்தியபடியே வெளியே பாய்ந்தாள்.

மருமகள் பக்கம் திரும்பிய தாத்தா, ‘‘உன் வீட்டுக் காரன் ஆபீஸ்ல ஏதோ ‘ஆண்டு மலர்’ போடப்போறாங்களாம். ‘மலை ஏர்றது எதுக்காக?’னு நாலு பக்கம் எழுதித் தரச் சொன்னான். சாப்பிட்டுட்டு, அத எழுதி வெச்சுட்டு கடை வீதி வரை போகணும்!’’ என்றார்.

‘‘தாத்தா! மலை ஏர்றதுக்கு எத்தன ஆக்ஸிஜன் சிலிண்டர் கொண்டு போவணும்? எத்தன ஷ¨ கொண்டு போவணும்னு எழுதப் போறியா?’’ என்று கேட்டாள் படுத்திருந்த பேத்தி, போர்வையை விலக்கியபடி. ‘‘வாண்டு! வாண்டு! வாயப் பாரு! எழுதி வெச்சுரு வேன். காலையில பாத்துத் தெரிஞ்சுக்க!’’ என்ற தாத்தா எழுதத் தயாரானார்.


சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

mayuran89 இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 2 Empty Re: சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம்

Post by தமிழ்நேசன்1981 Sun Dec 19, 2010 10:49 pm

சிவா wrote:
Aathira wrote:ரொம்ப நல்லா இருக்கு சிவா.. இந்த ஸ்கேன் பத்தித்தான் நான் அடுத்த கட்டுரை எழுதலாம் என்று இருந்தேன்.. கம்ப ராமாயணத்துல கோட்டை மதில் சுவர் மேல இயந்திரங்கள் இருக்குமாம். அது எதிரில் வருபவர்கள் என்ன எண்ணத்தோடு வருகிறார்கள் என்பதை படம் பிடித்து காட்டி விடுமாம. நம்ம இலக்கியங்களில் இல்லாத விஷ்யமே இல்லை என்பது சத்தியம். நல்ல இருக்கு. தொடர்ந்து பதிவிடுங்கள் சிவா. ஆமா பெரிய புத்தகமா? இல்ல கட்டுரையா?

ஹலோ, தனிமடலில் ஒரு கேள்வி கேட்டால் பதில் தரமாட்டீர்களா?

இது மென்னூலாக உள்ளது! யுனிகோடிற்கு மாற்றி இங்கு பதிவிடுகிறேன்! இதை எழுதியது யார் என அறியத்தர முடியுமா அக்கா! மொத்தம் 35 கட்டுரைகள் உள்ளது!
இந்த புத்தகம் என்னிடம் உள்ளது சிவாண்ணா! பட்டாபி என்று போட்டுள்ளது. பட்டாபி யார் என்றுதான் தெரியல. இது விகடன்ல தொடரா வந்தது
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 2 Empty Re: சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம்

Post by சிவா Sun Dec 19, 2010 10:52 pm

தமிழ்நேசன்1981 wrote:
இந்த புத்தகம் என்னிடம் உள்ளது சிவாண்ணா! பட்டாபி என்று போட்டுள்ளது. பட்டாபி யார் என்றுதான் தெரியல. இது விகடன்ல தொடரா வந்தது

வணக்கம் நேசன்! இதை எழுதியவர் திரு சுகி சிவம் அவர்கள்!


சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

mayuran89 இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 2 Empty Re: சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம்

Post by சிவா Sun Dec 19, 2010 10:57 pm

‘இருக்கிற பொக்கிஷங்களையாவது காப்பாற்றுங்களேன்!’

விடிந்ததும் விடியாததுமாக எல்லோ ரும் அவரவர் வேலையைப் பார்த் துக் கொண்டிருந்தார்கள்.

‘‘அப்பா, எங்க ஆபீஸ் மலருக்காக மலைகளின் மகிமையைப் பற்றிக் கேட்டிருந்தேனே! எழுதியாச்சா?’’ என்று கேட்டான் பிள்ளை.

‘‘எழுதியாச்சுரா! ஆபீஸ் போகும்போது வாங்கிக் கிட்டுப் போ!’’ என்றார் பெரியவர்.

‘‘சரியா எழுதிருக்கியா? சாதாரணமா பேசற நடையிலதானே எழுதியிருக்க?’’ என்று கொக்கி போட்டான் பிள்ளை.

‘‘சந்தேகப் பிராணி... சந்தேகப் பிராணி! இடுப்புல இருக்கற பேண்ட்டையே நம்பாதவன் நீ. எல்லாம் சரியாத்தான் எழுதியிருக்கேன் போ!’’ என்று சிரித்தார் பெரியவர்.

‘‘கோவிச்சுக்காதப்பா! எங்க ஆபீஸ்ல போடற மலரை, திருவண்ணாமலையில் ரிலீஸ் பண்ணப் போறாங்க. அங்க பாமர மக்களும், படிச்சவங்களுமா ஏராளமா கும்பலா இருப்பாங்க. எல்லாருக்கும் புரிய வேண்டாமா? அதுக்குத்தான் கேட்டேன். நீ எழுதியிருக்கறத, சும்மா அப்பிடியே ஒரு அவுட்லைன் மாதிரி சொல்லேன்’’ என்று கேட்டான் பிள்ளை.

‘‘மலைகள்ல எல்லாம் ஒரு சாமிய வச்சு, அந்த மலை மேல மக்கள் ஏறி பூஜை செய்யணும்னு முன்னோர்கள் ஏற்பாடு பண்ணி வெச்சதே முழுசா, ஆரோக்கியத்துக்குத்தான். ஆனா, இப்ப என்னடான்னா... எல்லா மலையிலயும் உச்சி வரைக்கும் கார், ஸ்கூட்டர்னு எல்லாம் போகுது. ப்ச்! என்னத்த செய்யிறது? வயசான வங்க, நோயாளிங்க அப்பிடிப் போனா பரவாயில்ல. எளம் வயசுப் புள்ளங்களும் நடுத்தர வயசுக்காரங்களும்கூட இப்ப அப்பிடிப் போறாங்க! இப்ப நான் சொல்றதக் கேட்டு தெம்பு இருக்கறவங்க, மலை மேல நடந்து ஏறினாங்கன்னு வெச்சுக்க. ஆரோக்கியம் கெடைக்கும். மலை மேல சுத்தமான காத்து. அத சுவாசிக்கற துனால உடம்பு ஆரோக்கியமா இருக்கு. மலை ஏறுறதுனால உடம்புல இருக்குற கெட்டது எல் லாம் வேர்வையா வெளியில போயிடுது. ஊளச் சதையெல்லாம் கரைஞ்சு போவுது. உடம்புக்குள்ள இருக்கிற நுரையீரல், நாடி நரம்பெல்லாம் ஸ்ட்ராங்கா ஆவுது. கோளாறு இல்லாம சூப்பரா வேல செய்யிது. அஜீரணம்ங்கறது போயி, நல்லா பசி எடுக்குது.

மனசுக்கு எதமா இருக்குற மலைக் காத்து, உடம்பக் குளுமையா வெக்குது. மலைமேல ஏறுறதால மூச்சு வாங்கறோம். நுரையீரல் க்ளீனா வேல செய்யிது. தூய்மையான பிராண வாயுவை நாம காத்துல இருந்து உள்ள இழுத்துக்கறோம். கெட்ட காத்து வெளியில போயிடுது. மாத்திரை, மருந்து, ஆப்ரேஷனுக்கெல்லாம் சைடு எஃபெக்ட்ஸ் உண்டு. வேற மாதிரியான விளைவுகள் கூட உண்டாகலாம். ஆனா, நான் சொல்றதுல பக்க விளைவுகள் எதுவும் கிடையாது. மலையில இருக்கற பல விதமான மூலிகைக் காத்து ஆரோக்கியத்தைக் கொடுக்குமே தவிர, பிரச்னை பண்ணாது. அது மாத்திரம் இல்ல. அந்தந்த மலைமேல இருக்குற சாமி விக்கிரகத்துக்கு அபிஷேகம் செஞ்ச தீர்த்தத்தைக் குடிச்சா, நல்லா குழந்தை பிறக்கும்னு சொல்வாங்க.

உதாரணமா திருச்செங்கோடுங்கற ஊர்ல மலைமேல இருக்குற அர்த்தநாரீஸ்வரருக்கு அபி ஷேகம் பண்ணின தீர்த்தம், இந்தக் குழந்தை வரத்துக்குப் பெரிய பிரசாதம். அங்க இருக்குற அர்த்தநாரீஸ்வரர் விக்கிரகம் நவபாஷாணத்தால ஆனது. குழந்தைச் செல்வம் இல்லாத ஏராள மானவங்க, திருச்செங்கோடு மலை மேல ஏறி, அர்த்தநாரீஸ்வரரோட தீர்த்தப் பிரசாதம் சாப்பிட் டுக் குழந்தை பெத்து இருக்காங்க.

பழநி மலையிலயும் இதே மாதிரிதான். நாள் பூரா அந்த நவபாஷாண முருகருக்கு அபிஷேகம் பண்ணிப் பிரசாதம் தந்தாங்க. நல்ல பலன் கெடச் சுது!’’ என்ற தாத்தாவை மறித்தாள் இந்த முறை பிள்ளைக்கு பதிலாக அவன் மனைவி.

‘‘அப்பா! தடங்கலுக்கு வருந்துகிறோம். பழநியில இப்பல்லாம் முந்தி மாதிரி, எப்பப் பாத்தாலும் அபிஷேகம் நடக்கறது இல்ல!’’ என்றாள்.

தாத்தாவின் முகம் சற்று வாடியது. ‘‘அம்மா! மருமகளே! என்ன செய்யறது? முன்னோர்கள் குடுத்த இந்த மாதிரியான அற்புத பொக்கிஷங்களை எல்லாம் கொஞ்சங் கொஞ்சமாப் பாழாக்கிட்டோம். இருக்கறதயாவது பத்திரமா காப்பாத்தலாம்னுதான், என்னை மாதிரி ஆட்கள் அங்கங்க, அப்பப்ப கத்திக்கிட்டு இருக்கறோம். இந்த வயசுல என்னால வேற என்ன செய்ய முடியும்?’’ என்றார்.

‘‘சரிப்பா! சரிப்பா! மலைங்களைப் பத்தியெல்லாம் சொல்லிக்கிட்டு வந்தீங்க. திருவண்ணாமலையப் பத்தி ஒண்ணுமே சொல்லலியே?’’ என்றாள் மருமகள்.

‘‘அதப் பத்தித் தனியா சொல்லணும்மா? அதுனாலதான் அதக் கடைசியா வெச்சுக்கிட்டேன்!’’ என்ற தாத்தா தொடர்ந்தார்:

‘‘மத்த மலையில எல்லாம், எல்லாரும் ஏறலாம். திருவண்ணாமலை மலை மேல அப்பிடி ஏறக் கூடாது. ஏன்னாக்க, அது அக்கினி மலை. அதை நிரூபணம் செய்யற மாதிரி, இன்னிக்கும் என்னதான் மழை பெஞ்சாலும் மத்த மலைங்கள மாதிரி மலையிலேர்ந்து தண்ணி கீழ வழிஞ்சு ஓடாது. பொட்டுத் தண்ணிகூட கீழ வழியாது. திருவண்ணாமலையில கிரிவலம்தான் முக்கியம். அப்பிடி கிரிவலமா போறப்ப, சும்மா ஏதோ ஜாலி ட்ரிப் போவுற மாதிரி போவக் கூடாது. வலம் வரும்போது நிதானமாத்தான் நடக்கணும். கைகளைப் பக்க வாட்டுல இஷ்டம் போல வீசி ஆட்டிக்கிட்டே போவக் கூடாது. அமைதியா போவணும். ஏன்னாக்க, இன்னிக்கும் நம்ம கண்ணுக்குத் தெரியாம, ஏராளமான சித்த புருஷர்கள் உலாவிக்கிட்டு இருக்காங்க. அவுங்களுக்கு நாம இடைஞ்சல் பண்ணக் கூடாது’’ என்றார் தாத்தா.

‘‘அப்பா! நீ சொன்னதை எல்லாம் அப்பிடியே இதுல எழுதி இருக்கியா?’’ என்று கேட்டான் பிள்ளை.

‘‘அப்பிடியே எழுதி இருக்கேன்... கவலப்படாதே’’ என்றார் தாத்தா.

ஸ்கிரிப்டை எடுத்துக் கொண்டு சந்தோஷமாக வெளியேறினான் பிள்ளை.


சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

mayuran89 இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 2 Empty Re: சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம்

Post by தமிழ்நேசன்1981 Sun Dec 19, 2010 10:59 pm

பட்டாபி என்பது சுகி.சிவம் அவர்களின் புனைப்பெயரா? அண்ணா!
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 2 Empty Re: சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம்

Post by சிவா Sun Dec 19, 2010 11:09 pm

தமிழ்நேசன்1981 wrote:பட்டாபி என்பது சுகி.சிவம் அவர்களின் புனைப்பெயரா? அண்ணா!

அப்படித்தான் இருக்க வேண்டும்! அங்கு ஓரிடத்தில் கீழ்கண்டவாறு உள்ளது பாருங்கள்!

சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 2 2010-111


சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 2 Empty Re: சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம்

Post by varsha Mon Dec 20, 2010 7:37 am

அருமை

சுகி சிவம் அவர்களின் அதனை புத்தகமும் அருமை

ஒவொரு முறை வாசிக்கும் போதும் புதிதாய் ஓன்று தோன்றும்
varsha
varsha
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Back to top Go down

சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 2 Empty Re: சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம்

Post by தமிழ்ப்ரியன் விஜி Mon Dec 20, 2010 9:45 am

‘கடுகைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டிக் குறுகத் தரித்த குறள்’ - என்று முதலில் புகழ்ந்தவர் இடைக்காடர்.

அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டிக் குறுகத் தரித்த குறள் - என்று மாற்றியவர் ஔவையார்



நம் முன்னோர்கள் அறிவியலுடன் கொண்ட
ஆன்மிகத்தை நமபினர்கள் என்பது எக்காலத்திலும்
மறக்க முடியாது ......




நன்றி அருமையான பதிவுகள் ....
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 2 Empty Re: சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம்

Post by தமிழ்ப்ரியன் விஜி Mon Dec 20, 2010 9:54 am

Aathira wrote:ரொம்ப நல்லா இருக்கு சிவா.. இந்த ஸ்கேன் பத்தித்தான் நான் அடுத்த கட்டுரை எழுதலாம் என்று இருந்தேன்.. கம்ப ராமாயணத்துல கோட்டை மதில் சுவர் மேல இயந்திரங்கள் இருக்குமாம். அது எதிரில் வருபவர்கள் என்ன எண்ணத்தோடு வருகிறார்கள் என்பதை படம் பிடித்து காட்டி விடுமாம. நம்ம d]]இலக்கியங்களில் இல்லாத விஷ்யமே இல்லை என்பது சத்தியம்[/b]. நல்ல இருக்கு. தொடர்ந்து பதிவிடுங்கள் சிவா. ஆமா பெரிய புத்தகமா? இல்ல கட்டுரையா?

சியர்ஸ் சியர்ஸ்
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் - Page 2 Empty Re: சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum