ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம்

+17
பூஜிதா
senthilmask80
கா.ந.கல்யாணசுந்தரம்
T.N.Balasubramanian
கலைவேந்தன்
Raju_007
mmani15646
மோகன்
balakarthik
உதயசுதா
தமிழ்ப்ரியன் விஜி
varsha
தமிழ்நேசன்1981
Aathira
அன்பு தளபதி
krishnaamma
சிவா
21 posters

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் Empty சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம்

Post by சிவா Sun Dec 19, 2010 9:22 pm

மாலை நேரம். வீட்டு வாயிலில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. வீட்டின் உள்ளே... முன் அறையில் தாத்தா ஏதோ புத்தகம் படித்துக் கொண்டிருந்தார். அதிலேயே மூழ்கிப் போயி ருந்த அவரது கவனத்தை, ‘லொட்டு...புட்டு’ என்று ஏதோ சத்தம் திசை திருப்பியது. நிமிர்ந்த தாத்தாவை, முறைத்துப் பார்த்தபடி உள்ளே நுழைந்தான் பேரன்.

புத்தகத்தை மூடி வைத்த தாத்தா, ‘‘காலைக் கழுவிட்டு உள்ளே வா!’’ என்றார் சற்றுக் கறாராக.

‘‘செருப்பு போட்டுக்கிட்டுத்தானே போனேன். வெறுங் காலோடவா போனேன்?’’ என்று முணுமுணுத்தபடியே கால்களைக் கழுவிக் கொண்டு தாத்தாவை நெருங்கினான் பேரன். வெளியில் சுற்றிவிட்டு வந்ததனால் உண்டான வியர்வையும் அடங்கவில்லை; தாத்தாவின் கறார் வார்த்தைகளால் உண்டான வருத்தமும் அடங்கவில்லை அவனுக்கு.

குளிர்சாதனப் பெட்டியில் இருந்து குளிர்ந்த தண்ணீரைக் கொண்டு வந்து, மகனிடம் நீட்டினாள் தாயார்.

‘‘கொஞ்ச நேரம் கழிச்சுக் குடி!’’ என்றார் தாத்தா.

கோபம் பொத்துக் கொண்டு வந்தது பேரனுக்கு.

‘‘பிராணனை வாங்கறியே தாத்தா! உன் காலத்து சமாசாரத்தை எல்லாம் இந்தக் காலத்துல யார் சீண்டுறா? விஞ்ஞானம் எங்கேயோ போய்க்கிட்டிருக்கு. இந்தக் காலத்துல போய்.... உதவாததையெல்லாம் சொல்லிக்கிட்டு...’’ என்று வெடித்தான் பேரன்.

சிரித்தார் தாத்தா. ‘‘உதவாதது எதையும் நம்ம முன்னோர்கள் சொல்லிட்டுப் போகலை. என்ன சொன்னே? விஞ்ஞான வளர்ச்சியா, ஒண்ணு சொல்றேன், கேட்டுக்கோ! அணுவைப் பற்றின சிந்தனைகூடத் தோணாத அந்தக் காலத்துலேயே விஞ்ஞான உண்மைகளை சொன்னவங்க நம்ம பெரியவங்க. அதைப் பத்தி விளக்கமா சொன்னா தான் உனக்குப் புரியும். இந்தா, அதுக்கு முன்னாடி இப்ப தண்ணீரைக் குடி!’’ என்றபடி தண்ணீரை பேரனிடம் நீட்டினார் தாத்தா.

‘இந்தத் தாத்தா பொய் சொல்றாரா? அல்லது ஏதாவது உண்மை இருக்குமா?’ என்ற குழப்பத்துடன் தண்ணீரை வாங்கிக் குடித்த பேரன், ‘‘என்ன தாத்தா சொல்றே? நம்ம பெரியவங்க... விஞ்ஞான உண்மை... அது இதுன்னு என்னென்னவோ சொல்றே? இதெல்லாம் உண்மையா?’’ என்றான்.

தாத்தா நிமிர்ந்து உட்கார்ந்தார். ‘‘நான் சொல்றேன். நீயே தீர்மானிச்சுக்கோ! அணுவைப் பற்றி மேல் நாட்டுக்காரங்க யாரும் யோசிக்காத அந்தக் காலத்துலேயே அதுபத்தின விஷயங்களை நம்ம பெரியவங்க விளக்கமா சொல்லியிருக்காங்க தெரியுமா? கம்பராமாயணத்துலயும் இதுபத்தி ஒரு தகவல் உண்டு. யுத்த காண்டத்துல, ராவணனுக்கு விபீஷணன் யோசனை சொல்றான். அப்ப அவன் ஹிரண்யகசிபுவை பத்திச் சொல்றதைப் படிக்கிறேன், கேளு...

‘எங்கே இருக்கிறான் உன் இறைவன்?’ என்று தன் மகனைப் பார்த்துச் சீறினான் ஹிரண்யகசிபு. பிரஹ்லாதன் பதில் சொன்னான்: ‘சாணிலும் உளன். ஒரு தன்மை அணுவினை சத கூறு இட்ட கோணிலும் உளன்!’

‘அணுவுக்குள் அணுவாக இறைவன் இருக்கிறான்’ என்பதைச் சொல்ற இந்த இடத்துல, அணுவை நூறு(சத) கூறுகளாகச் செய்து, அதில் ஒரு சதவிகித அணுவை ‘கோண்’ என்று, கம்பராமாயணம் குறிப்பிடுது’’ என்ற தாத்தா சற்று நிறுத்தினார்.

பேரன் ஆச்சரியப்பட்டான்.

ஓரக்கண்ணால் அவனது வியப்பை ரசித்தபடி தாத்தா தொடர்ந்தார்: ‘‘பிளக்க முடியாததுன்னு சொல்லப்பட்ட அணுவைப் பிளந்து, ஒரு சதவிகித அணுவுக்கும் தமிழில் பெயர் வெச்சுட்டாங்க அந்தக் காலத்துலயே! ஆனால், எனக்குத் தெரிஞ்சு இன்னிக்கும் ஒரு சதவிகித அணுவுக்கு ஆங்கிலத்தில் பெயர் சூட்டப்படலை. சரி... மேலே சொல்றேன். கம்ப ராமாயணமே, அணுவின் செயல்பாட்டையும் சொல்றது.

போர்க்களத்தில் இந்திரஜித் இறந்து கிடக்கிறான். அவன் தாயார் மண்டோதரி அழுகிறாள். ‘தலை சிறந்த வீரனான உன்னை& இந்திரனையே வென்று இந்திர ஜித் என்று பெயர் பெற்ற உன்னைக் கொன்று விட்டார்களே! அணு ஆயு தத்தை ஏவ, அது ஓடிவந்து வெடித்துச் சிதறி நாசத்தை உண்டாக்கியது போல் இருக்கிறது’ என்கிறாள்.

அந்த வரி: உக்கிட அணு ஒன்று ஓடி உதைத்தது போலும் அம்மா!

எங்கோ ஓரிடத்தில் சுவிட்சை அழுத்தியதும் அணு ஆயுதம் சீறிக் கிளம்பும். குறிப்பிட்ட இடத்தை அடைந்ததும் வெடித்துச் சிதறி நாசத்தை உண்டாக்கறது. இதைத் தான் கம்ப ராமாயணம், ‘உக்கிட அணு ஒன்று ஓடி உதைத்தது போலும் அம்மா!’னு சொல்றது!’’ தாத்தா சற்று நிறுத்தினார்.

பேரன் பெருமூச்சு விட்டான்!

தாத்தா தொடர்ந்தார்: ‘‘இப்போ கால் கழுவுற விஷயத்தைச் சொல்றேன். கவனமா கேள்! நின்றாலும் நடந்தாலும் உட்கார்ந்தாலும் நம்ம கால் மட்டும்தான் தரையில் பட்டுக்கிட்டிருக்கும். இப்படிக் கண்ட இடத்துலயும் அலையுற கால்கள்ல ஏராளமான கிருமிகள் ஒட்டிக்கிட்டிருக்கும். கால் கழுவாம இருந்தா அவ்வளவு கிருமிகளும் கால் களில் உள்ள நகக் கண் வழியா உள்ளே புகுந்து வியாதியை உண்டாக்கும். அதனாலதான் நம்ம பெரியவங்க காலைக் கழுவிட்டு உள்ளே வரச் சொன்னாங்க.

என்னதான் கழுவினாலும் ஒன்றிரண்டு கிருமிகள் கால்களில் ஒட்டிக் கிட்டிருந்தா, என்ன செய்யுறது?

அதுக்காகவே வீட்டு வாசப் படியில் மஞ்சள் பொடியைக் குழைத் துப் பூசி வெப்பாங்க. காலைக் கழுவிட்டு மஞ்சள் பூசின வாசப்படி வழியா உள்ளே நுழைஞ்சா, காலில் மிச்ச மீதி இருக்கும் கிருமிகளும் அழிஞ்சு போயிடுமாம். தலை சிறந்த கிருமி நாசினி மஞ்சள் என்பதை தெரிஞ்சதாலதான் நம்ம பெரியவங்க அப்படி செஞ்சாங்க. இதே போல சாப்பிடறதுக்கு முன் னாலயும் சாப்பிட்ட பிறகும் கால் கழுவறதும் நல்லது. இதனால ஜீரண உறுப்புகள் பலப்படும். ஜீரண சக்தி அதிகரிக்கும். புரிஞ்சுதா?’’ என்றார் தாத்தா.

பிரமிப்பில் இருந்த பேரன் வாயைத் திறந்தான். ‘‘புரிஞ்சுது தாத்தா... புரிஞ்சுது! இதையெல்லாம் உணர்ந்து ஃபாலோ பண்றதாலதான், உங்களை மாதிரி பெரியவங்க வயசானாலும் கரும்பைக் கடிச்சு சாப்பிடுறீங்க. நாங்களோ...’’ என்ற பேரனை இடைமறித்த தாத்தா, ‘‘கரும்பையே ஜூஸாகக் கேட்கறீங்க!’’ என்றார் கலகல சிரிப்புடன்.

‘‘அது போகட்டும் தாத்தா! நான் வீட்டுக்குள்ளே நுழைஞ்சதும், அம்மா தந்த தண்ணீரைக் குடிக்க விடாம, அப்புறமா குடிக்கலாம்னு சொன்னீங்களே, அது ஏன்? சொல்லுங்க!’’ என்றான்.

‘‘இதற்கு உண்டான பதிலைப் பெரிய புராணம் சொல்றது. அதையும் சொல் றேன்’’ என்றார் தாத்தா.

‘‘சேக்கிழார் எழுதினதுதானே?’’ என் றான் பேரன்.

ஆச்சரியப்பட்டார் தாத்தா. ‘‘அடடே... சேக்கிழார் எழுதினதை எல்லாம் சரியாச் சொல்றியே... பரவாயில்லை!’’ எனப் பாராட்டினார்.

‘‘தாத்தா! இந்தக் காலத்துப் பசங்களான எங்களைப் பத்தி தப்பாவே நினைச்சுக்கிட்டிருக்கீங்க போல! கொஞ்சம் கொஞ்சமாவது எங்களுக்கும் தெரியும். மற்றதைத் தெரிஞ்சுக்கிற ஆர்வமும் இருக்கு! ஏற்கும்படி சொல்ல வேண்டியது அனுபவசாலியான பெரியவங்க கடமை! சரி... சரி! நான் கேட்டதுக்குப் பதிலைச் சொல்லுங்க. பாராட்டெல்லாம் அப்புறமா வெச்சுக்கலாம்’’ என்று ஆர்வத்துடன் கேட்டான் பேரன்.

தாத்தா சொன்ன பதில், அடுத்த விஞ் ஞான ஆச்சரியம்!


Last edited by சிவா on Sun Dec 19, 2010 10:02 pm; edited 1 time in total


சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

T.N.Balasubramanian and mayuran89 இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் Empty Re: சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம்

Post by krishnaamma Sun Dec 19, 2010 9:31 pm

தாத்தா சொன்ன விஞ்ஞான ஆச்சரிய த்தை கேட்க நானும் ஆவலாக உள்ளேன் சிவா.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் Empty Re: சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம்

Post by சிவா Sun Dec 19, 2010 9:35 pm

குளியல் அறையில் இருந்து அப்பாவின் கூச்சல் கேட்டது. ‘‘ஏண்டீ... சனியனே... சோப்பை எங்கே வெச்சே?’’

‘‘அங்கயேதான்! இடக் கை பக்கமா பாருங்க... வழக்கமா வெக்கிற செவப்பு டப்பாலதான் வெச்சுருக்கேன். ராத்திரியே புதுசா எடுத்து வெச்சாச்சு!’’ சமையல் அறையில் இருந்து அம்மாவின் பதில் கூச்சல் கேட்டது.

தாத்தா வாயைத் திறந்தார்: ‘‘பேராண்டி... காலையிலேயே உங்க அப்பா, சுப்ரபாதம் சொல்ல ஆரம்பிச்சுட்டான். தொட்டுத் தாலி கட்டின மனைவியை, ‘சனியனே’ங்கறான். உங்கம்மா சனியன்னா, உங்க அப்பா...?’’

‘‘அம்மா மிஸஸ் சனியன்னா, அப்பா மிஸ்டர் சனியன்னுதானே அர்த்தம்?!’’ பேரன்.

தாத்தாவுக்குச் சிரிப்புத் தாங்கவில்லை. ‘‘அப்ப, நீ என்ன... சன் ஆஃப் சனியனா? சரி, சரி... உங்க அப்பன்கிட்ட இருந்து அடுத்த கத்தல் கேக்கும் பாரு!’’ என்று பேரனை அடக்கினார்.

குளியல் அறையில் இருந்து அடுத்த ஒலிபரப்பு துவங்கியது. ‘‘ஏண்டீ... பீடை! தரித்திரம்! துண்டை எங்கே வெச்சுத் தொலைஞ்சே?’’

அடுத்த ஒரு சில நொடிகளில் கத்தல் அடங்கி விட்டதன் காரணமாக, துண்டு குளியலறையில் போய்ச் சேர்ந்து விட்டது என்பது புரிந்தது!

தாத்தா தொடர்ந்தார்: ‘‘கொஞ்ச நேரக் குளியலுக்கே பொறுமை இல்லை. கோபத்தில் குதிக்கிறான்.\ சோப்பு தேய்க்கும்போதே பீடை தரித்திரம்னு சொல்லி, பீடையையும் தரித்திரத்தையும் உடம்புல மொத்தமா தேய்ச்சுக் கிறான். அப்புறம் எப்படி உடம்பும் மனசும் நல்லா இருக்கும்? கொதிப்புதான், B.P-தான். குளிக்கறதுக்கு முன்னாடியே தேவையானதை எடுத்து வெச்சுக்க வேண்டாமா? எங்க தலை முறையில எல்லாம் சாமான்யன் தொடங்கி மகான்கள் வரை, குளிக்கும் முறையே வேற. நான் பக்கத்துல இருந்து பார்த்திருக்கேன். ஸ்வாமி பேரைச் சொல்லிட் டுத்தான் குளிப்பாங்க. அதனால கடைசி வரைக்கும் ஆரோக்கியமா இருந்தாங்க.’’

‘‘அது நல்ல பழக்கம் தாத்தா’’ பேரன்.

‘‘பேரன் நீ சர்டிபிகேட் கொடுத்தா சரிதான். ஒண்ணு சொல்றேன், கேட்டுக்கோ. ஒரு ஆசாமிக்கு தெய்வமே செல்வத்தை அள்ளிக் கொடுக்குதுன்னு வெச்சுப்போம். அவன் மட்டும் கோபக்கார ஆசாமியா இருந்தான்னா தங்காது அத்தனையும் அவன்கிட்டே. எல்லாம் கைநழுவிப் போயிடும். ஓட்டாண்டிதான்!’’ எனச் சொல்லி நிறுத்தினார் தாத்தா.

கோபம் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பது பேரனின் விழிகளில் தெரிந்தது.

‘‘கோபத்தையெல்லாம் விட்டுட்ட ஒருத்தன் தன் வாழ்க்கையில மிகப் பெரிய நல்ல மாற்றங்களைப் பார்க்க முடியும்; உணர முடியும்.’’

‘‘ஏன் தாத்தா... இதையெல்லாம் நீ, எங்க அப்பாவுக்கு, அதுதான் உன் புள்ளைக்கு சொல்லித் தரலியா?’’ என்ற பேரன், தாத்தாவை மலரும் நினைவுகளில் இருந்து மீட்டான்.

‘‘சொல்லிக் கொடுத்ததுனாலதான், குளிக்கும்போது மட்டும் கோபப்படற அளவுக்கு வந்துருக்கு. முன்னாடியெல்லாம் எப்பப் பார்த்தாலும் கோபமாத்தான் இருப்பான். இப்ப எவ்வளவோ பரவா யில்லை. இன்னும் கொஞ்ச நாள்ல இந்தக் கோபத்தையும் விட்டுடுவான். என்ன செய்யறது? இந்தக் காலத்துல, படிக்கற சின்னப் பசங்களுக்குக்கூட, எவ்வளவு கோபம் வருது! அவங்களுக்கு நல்லதையெல்லாம் அடிக்கடி சொல்லிக் கொடுத்து, அரவணைச்சுக் கொண்டு வரணும்’’ என்றார் தாத்தா, தன் மகனை விட்டுக் கொடுக்காமல்!

பேரனும் விடவில்லை. தொலைக்காட்சி மெகா தொடர்களைப் போல, விட்ட இடத்தில் இருந்து பிடித்தான்.

‘‘ஏன் தாத்தா... வெளியில போயிட்டு வந்ததும் தண்ணி குடிக்கக் கூடாதுனு சொன்னியே...!’’

‘‘மறக்கலைடா கண்ணா... மறக்கலை! வெளியில இருந்து வேர்க்க விறுவிறுக்க வீட்டுக்குள்ள நுழைஞ்ச உடனேயே தண்ணீர் குடிக்கக் கூடாது; அதுவும் ஃப்ரிட்ஜ் வாட்டர் கூடவே கூடாது! பதில் சொல்றேன்.

வெளியில இருக்கும் காற்றழுத்தம், சுற்றுப்புறச் சூழ்நிலை முதலானவை வேறு. அதில் இருந்து விடுபட்டு, வீட்டுக்குள்ள நுழையும்போது, அங்க இருக்கற சூழ்நிலை அடியோடு மாறிப் போயிருக்கும். வெளியில இருக்கும் வெப்பம் காற்றழுத்தம், வீட்டுக்குள் இருக்காது. வீட்டுக்குள் நுழைஞ்ச உடனே அங்க இருக்கற சுற்றுப்புறச் சூழ்நிலையை உடம்பு ஏற்றுக் கொள்ளக் கொஞ்ச நேரமாகும். அதுக்குள்ள அவசரப்பட்டு தண்ணியைக் குடிச்சா அதுவும் ஃப்ரிட்ஜ் தண்ணியைக் குடிச்சா, உடம்புல பிரச்னையை உடனடியா உண்டாக்கிடும்.

வீட்டுக்குள்ள நுழைஞ்சு, அங்க இருக்கற சுற்றுப்புற சூழ்நிலைக்கு உடம்பு பக்குவப்பட்ட பிறகு, தண்ணியைக் குடிச்சா பிரச்னை இல்லை. இந்தத் தகவலை ரொம்ப அழகா பெரிய புராணத்துல அப்பூதியடிகள் வெச்ச தண்ணீர்ப் பந்தலைப் பற்றிச் சொல் லும்போது சேக்கிழார் சொல்றார்.

‘வெயில் காலம். மக்களுக்காக வைக்கப் பட்ட தண்ணீர்ப் பந் தல். அளவில் பெரியது. வெளி வெயிலில் இருந்து உள்ளே நுழைந்தவுடன், குளிர்ச் சியாக இருக்கிறது; வெப்பம் போய் விட்டது. நீர் நிறைந்த தாமரைத் தடாகம் போலக் குளிர்ச்சி மிகுந் திருக்கிறது; வளம் பொருந்திய நிழ லைத் தருகிற தண்ணீர்ப் பந்தல்’ என்கிறார் சேக்கிழார்.

‘... தண்ணளித்தாய் உறுவேனில்
பரிவகற்றிக் குளம் நிறைந்த நீர்த்தடம் போல்
குளிர் தூங்கும் பரப்பினதாய்
வள மருவு நிழல் தரு தண்ணீர்ப்பந்தல்’

(பெரிய புராணம்)

இன்றைய விஞ்ஞானமும், வெளியில் இருந்து வீட்டுக்குள் வந்த உடன் தண்ணீர் குடிப்பது அதுவும் ஃப்ரிட்ஜ் தண்ணீர் குடிப்பது மிகமிகக் கெடுதல் என்கிறது’’ என்றார் தாத்தா.

‘‘தாத்தா... என்ன ஆச்சு உனக்கு? திடீர்னு, மேடையில பேசற மாதிரி பேசறே!’’ என்று உலுக்கினான் பேரன்.

‘‘அது ஒண்ணும் இல்லே. நாளைக்கு நம்ம குடியிருப்போர் அசோசியேஷன்ல நான் பேசப் போறேன். அந்த பாதிப்பு இப்பவே வந்தாச்சு. அதனாலதான்...’’ என்றார் தாத்தா.

‘‘என்ன தலைப்புல பேசப் போறே?’’ பேரன்.

‘‘ஸ்கேனிங்னு தலைப்புல’’ தாத்தா.

அப்போது எதிர்பாராத விதமாக உள்ளே நுழைந்த பேத்தி, ‘‘தாத்தா! வயத்துக்குள்ள இருக்கிற கொழந் தைய ஸ்கேன் எடுக்கறது தப்பு. ஏதானும் பேசி வம்புல மாட்டிக்கப் போறே. என்ன பேசப் போறே? சொல்லு பார்க்கலாம்...’’ என்றாள் பேத்தி.

‘‘உங்க கால ஸ்கேனிங் பத்தி அந்தக் காலத்துலயே நம்ம முன் னோர்கள், மானாவாரியா பக்கம் பக்கமா சொல்லி இருக்காங்க. அதைத்தான் சொல்லப் போறேன். என்ன பேசறேன்னு நாளைக்கு அசோசியேஷன் மீட்டிங்குல வந்து கேளு!’’ என்றார் தாத்தா.


சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

mayuran89 இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் Empty Re: சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம்

Post by அன்பு தளபதி Sun Dec 19, 2010 9:38 pm

எங்க தாத்தா தத்தாவுக்கும் தாத்தா அந்த தாத்தாவுக்கும் தாத்தாஇவங்கெல்லாம் புத்திசாலிங்கதான் போலருக்கு
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் Empty Re: சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம்

Post by சிவா Sun Dec 19, 2010 9:45 pm

‘‘சிறப்பு அழைப்பாளரான பெரியவரைப் பேச அழைக்கிறேன்!’’ என்றார் அசோசியேஷன் தலைவர். தாத்தா மேடை ஏறினார். அவருக்கு மாலைபோட்டு, சால்வை போர்த்தி மரியாதை செய்தனர். மாலையையும் சால்வையையும் பேத்தியிடம் கொடுத்த தாத்தா, மைக்கைப் பிடித்தார். பேத்தி, தாத்தாவின் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டாள். தாத்தா கணீரென்று பேசத் தொடங்கினார்.

‘‘மேடையில் இருக்கும் பெரியவர்களும், என் எதிரில் இருக்கும் பெரியவர்களும், அடுத்த தலைமுறைப் பெரி யவர்களான இளைய தலைமுறையினரும் சிறுவர் சிறுமியரும் நல்லா இருக்கணும்! கண்ணதாசன் ஒரு முறை, ‘இளம் வயதுல செய்யக் கூடாததையெல்லாம் செஞ்சு நேரத்தை வீண் பண்ணக் கூடாது. எதைச் செய்யணும்னு உடலும் உள்ளமும் விரும்புதோ அதைச் சரியா செய்யணும். இந்தச் சிந்தனை மட்டும் எனக்கு இளம் வய சுல இருந்திருந்தா, இன்னும் ஏராளமா எழுதி இருப்பேன்’னு வருத்தப்பட்டார். ஒண்ணு ஞாபகம் வெச்சுக்கங்க! உலகத்த மாத்த நம்மால முடியாது. நம்மைத்தான் மாத்திக்கணும். இப்படி மாற்றிக் கொண்டு வெற்றி பெற்றவர்கள்தான் நம்ம முன்னோர்கள். அவர்கள், எல்லாவற்றிலும் சூரப்புலிகள். குறிப்பா சொல்லணும்னா கணக்குல! கணக்குப் போட்டு அவங்க கட்டின தஞ்சாவூர் கோயில் கோபுரமும், ராமேஸ்வரம் கோயில் பிராகாரமும் இன்னிக்கும் அயல்நாட்டுக்காரங்கள பிரமிக்க வெக்குது. அந்தக் காலத்துலயே எப்படி இவ்வளவு கணக்குப் போட்டுக் கட்டினாங்கன்னு ஆச்சரியப்படறாங்க.

‘ஸ்கேனிங்’கற தலைப்புல பேசப் போற நான், தெறம சாலிகளான நம்ம முன்னோர்களைப் பத்தியும், அவங்க சொல்லிட்டுப் போனதப் பத்தியும், மொதல்ல ஸ்கேனிங் பண்ணி உங்களுக்குச் சொல்லப் போறேன். நடைமுறை வாழ்க்கையில தாங்கள் சந்திச்ச அனுபவங்கள எல்லாம் அப்படியே எழுதியும் வெச்சுட்டுப் போயிருக்காங்க நம்ம முன்னோர்கள். அதுல ஏராளமானது இப்ப இல்லங்கிறது வருத்தமான விஷயம். உரை நூல் ஆசிரியர்கள் மேற்கோள் காட்டிச் சொல்லி இருக்கறதுனால, அந்த நூல்களெல்லாம் இருந்துச்சுங்கற அளவுக்கு மட்டும் நமக்குத் தகவல் கெடைச்சிருக்கு. போனது போகட்டும்... இப்ப மீதி இருக்கறதையாவது அடுத்த தலைமுறைக்கு எளிமையா கொண்டு சேர்க்கணும்.

‘அடுத்த வீட்டுப் புள்ள, குறிப்பிட்ட இந்த சப்ஜெக்ட்ல பிரமாதமா படிக்குதே’ங்கற எண்ணத்தோட, நம்ம வீட் டுப் புள்ளைகளையும் அந்த வகுப்பு இந்த வகுப்புனு போட்டு சக்கையா பிழியக் கூடாது. அப்படி செஞ்சா, அந்தப் புள்ளைங்க எதுலயுமே தேறாது. கொழந்தைங்க மேல அக்கறை இருக்கற பெற்றோர்களும், இளைய தலைமுறையும் இப்ப நான் சொல்லப் போற கதையைக் கூர்மையா கேக்கணும்.

ஒரு சிற்பி இருந்தார். சிலை வடிக்கறதுக்காக ஒரு பெரிய்ய்ய பாறையை உளி வெச்சு செதுக்க ஆரம்பிச்சார். நாலஞ்சு சில்லு (உடைந்த பகுதிகள்) கீழ விழுந்த உடனே, அந்தப் பாறையில் அடைபட்டிருந்த அழகான ஒரு தேவதை வெளியில வந்துச்சு. இதைப் பார்த்த நம்ம சிற்பி பிரமிச்சுப் போயிட்டார்! அந்த நேரத்துல தேவதை, ‘எனக்கு விடுதலை கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி. உனக்கு என்ன வேணும்?’ என்றது. சிற்பிக்கு எதைக் கேக்கறதுனு தெரியல. அப்ப தேவதையே இரக்கப்பட்டு, ‘சரி! போகட்டும். இன்னும் ஒரு மணி நேரத்துக்கு உன் மனசுல நீ என்ன நெனச்சாலும் அது அப்படியே நடக்கும். ராஜாவா ஆகணும்னு நினைக்கறியா... நீதான் ராஜா! மிகப் பெரிய மாளிகை வேணும்னு ஆசைப்படறியா? நீதான் மாளிகைக்குச் சொந்தக்காரன். என்ன வேணும்னாலும் நெனச்சுக்க! ஆனா, எல்லாம் ஒரே ஒரு மணி நேரத்துக்குத்தான். அந்த ஒரு மணி நேரம் முடியறப்ப, அதாவது அறுபதாவது நிமிஷத்துல நீ என்னவாக இருப்பாயோ, அப்படியேதான் ஆயுள் முழுக்க இருப்பே’னு சொல்லிட்டு மறைஞ்சது.

நேரம் காலை பதினோரு மணி. வெயில் கொடுமை தாங்க முடியல. வழியும் வியர்வையைத் துடைச்ச சிற்பி, ‘சே! என்ன வெயில்! பூமியில இருந்து வெயிலோட கொடுமையை அனுப விக்கறதுக்குப் பதிலா, இந்த உலகத்தையே ஆட்டிப் படைக்கிற சூரியனா நாம இருந்துடலாம். பிரச்னையே இருக்காது’னு நெனச்சான். அட...! ஆச்சரியம். தேவதை கொடுத்த வரத்தின்படி அவன் சூரியனா மாறினான். ‘எல்லாரையும்விட நாம தான் ஒரு படி மேலே’னு கொஞ்சம் கர்வமாகூட நினைச்சான். மணி பதினொண்ணேகால். சூரியன் வடிவில் இருந்த சிற்பியை ஒரு மேகம் வந்து மூடிச்சு. ‘பச்! சூரியனான நம்மள ஒரு மேகம் வந்து மூடிடுச்சே. சூரியனையே மறைக்கக் கூடிய ஓர் ஆற்றல் இந்த மேகத்துக்கு இருக்குன்னா மேகமாவே இருந்திருக்கலாம்’னு நெனச்சான் சிற்பி. என்ன ஒரு ஆச்சரியம்... அடுத்த கணமே மேகமா மாறினான். ரொம்ப பெருமிதத்தோட வான்வெளியில் மிதந்துட்டிருந்தான்.

மணி பதினொன்றரை. மேகத்துல இருந்து திடீர்னு மழை கொட்ட ஆரம்பிச்சுது. வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுது. மரம் அது, இதுன்னு மிதந்துக்கிட்டு ஓடுது. ‘ஆஹா... இத்தனை ஆக்ரோஷத்தோட சகலத்தையும் புரட்டிப் போடற மழையா நாம இருந்தா இன்னும் நல்லா இருக்குமே’னு சிற்பி நெனச்சான். நினைத்தது நடந்தது. உடனே மழையா மாறினான். மண் வீடு, காரை வீடு, குடிசை வீடுனு எல்லாத்தையும் கவுத்து பெரட்டிக் கிட்டு ஓடுது மழைத் தண்ணி. ஆனா, ஒரே ஒரு பாறைய மட்டும் இந்த மழைத் தண்ணியால ஒண்ணும் பண்ண முடியல. சிற்பி மனசு வேதனப்பட்டுச்சு. ‘இவ்வளவு பெரிய மழைக்கே இந்தப் பாறை அசையாம இருக்குன்னா இதனோட சக்தி, வலி மையான ஒண்ணாத்தான் இருக்கும். மழையா இருக்கறதுக்குப் பதிலா, இந்தப் பாறையா இருந்துருக்கலாம்’னு நெனச்சான். பாறையாக மாறினான். மழை நின்னு போச்சு.

மணி பதினொன்றே முக்கால். வேறொரு சிற்பி வந்து, அந்தப் பாறையைச் செதுக்க ஆரம்பிச்சான். ‘ஆஆஆ... வலிக்குதே... உடம்பெல்லாம் எரி யுதே... என்னமா பொட்டுபொட்டுனு எம் மேல உளியால போட்டுத் தள்றான். தாங்க முடியலடா சாமீ’னு பாறை வடிவில் இருந்த சிற்பி புலம்ப ஆரம்பித்தான். மனசு உடைஞ்சு போனான். ‘சே! பொறுமையே இல்லை எனக்கு. பாறையா இருக்கறதவிட சிற்பியா இருக்கறதே நல்லது. பாறையில அழகா சிலை வடிக்க லாம்’னு நெனச்சான். பழையபடியே சிற்பி ஆனான். மணி, மிகச் சரியாக பன்னிரண்டு. இனிமே அந்த சிற்பி, ஆயுள் முழுவதும்...’’ என்று நிறுத்தினார் தாத்தா.

‘‘பழையபடியே சிற்பி தான்!’’ எனக் கூட்டம் கோரஸாக பதில் அளித்தது. சற்றுச் சிரித்து விட்டு, தாத்தா தொடர்ந்தார்: ‘‘புரிஞ்சா சரி. அந்தச் சிற்பிக்கு, தெய்வமே வரம் தந்தாலும், அடுத்த கட்டத்துக்கு வளர முடியல. இளைய தலைமுறையினரே... உங்களுக்குப் பிடிச்ச ஏதாவது கோர்ஸுல ஜாயின் பண்ணி, நேரத்த வீணாக்காம முழு மூச்சா முயற்சி செஞ்சா, அந்த கோர்ஸுல நீங்கதான் மாஸ்டர். நேரத்த வீணடிக்காம ஒரே மனசோட முயற்சி பண்ணுங்க. அடுத்து, நான் பேசப் போற சப் ஜெக்ட் ஸ்கேனிங்....’’ என்று நிறுத்திய தாத்தா, தனக்கு எதிரில் இருந்த தண்ணீரைக் கொஞ்சம் குடித்தார்.


சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

mayuran89 இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் Empty Re: சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம்

Post by சிவா Sun Dec 19, 2010 9:51 pm

தண்ணீர் குடித்த தாத்தா, சற்று நிதானித்து விட்டுத் தொடர்ந்தார்:

‘‘இது வரையில, முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கைய ‘ஸ்கேன்’ பண்ணிப் பார்த்து, அதனால என்ன லாபம்னு பார்த்தோம். இனிமே, ஸ்கேன் பற்றி முன்னோர்கள் என்ன சொல்லி இருக்காங்கனு பார்க்கலாம். நட்சத்திரங்கள், கிரகங்கள், பூமி, மரம், செடி, கொடினு எல்லாத்தையும் அவங்க ஸ்கேன் பண்ணி இருக்காங்க. இருந்தாலும், இந்தக் காலத்துல ஸ்கேன்னு சொன்னாலே, எல்லாருக்கும் என்ன நினைவுல வரும்?

இப்பல்லாம் கர்ப்பத்துல இருக்கற குழந்தை வளர்ச்சி பற்றி ஸ்கேன் பண்ணித் தெரிஞ்சுக்கறாங்க. ஆனா, இதை இன்னும் விரிவா, அந்தக் காலத்துலயே எழுதி வெச்சிருக்காங்கங் கறதைப் பார்க்கறப்ப ஆச்சரியமா இருக்கு. இந்தத் தகவல்கள் ‘மார்க்கண்டேய புராணம்’ நூல்ல விரிவா இருக்கு. அது என்னனு இப்ப உங்களுக்குச் சொல்றேன்.

அம்மா வயத்துல இருக்கற குழந்தைக்கு, இப்ப வயசு 5 நாளுன்னு வெச்சுப்போம். இங்க ஆரம்பிச்சு, 10வது மாசத்துல பாப்பா பொறக்கற வரைக்கும் நாள் வாரியா, மாச வாரியா குழந்தை எப்படி இருக்கும்னு அதுல சொல்லி இருக்கு.

அம்மா வயத்துல இருக்கற 5 நாள் குழந்தை, வட்டமா நுரை வடிவத்துல இருக்கும். 10 நாட்கள்ல, எலந்தப் பழம் மாதிரி கட்டியான உருவத்துல இருக்கும். அதுக்கு அப்புறமா மாமிசப் பிண்டம் மாதிரி இருக்கும். ஒரு மாசம் ஆனதும், தலை உண்டாகும். 2வது மாசத்துல கை கால் எல்லாம் உண்டாகும். 3வது மாசத்துல நகம், முடி, எலும்பு, தோல், ஆணா பெண்ணாங்கற அடையாளம், காது ஓட்டை, மூக்கு ஓட்டை இதெல்லாம் உண்டாகும். 4வது மாசத்துல தோல், ரத்தம், மாமிசம், மேதஸ், எலும்பு, மஜ்ஜை, சுக்கிலம் அப்படிங்கற ஏழு தாதுக்கள் உண்டாகும். 5வது மாசத்துல பசி, தாகம் உண்டாகும். 6வது மாசத்துல கர்ப்பப் பையால் சுற்றப்பட்டு, அம்மாவோட வயித்துல வலப் பக்கமா ரவுண்டு அடிக்கும்.

7வது மாசத்துல அந்த ஜீவனுக்கு ஞானம் கெடைக்கறது. போன ஜன்மங்களுடைய நினைவு, இப்ப பிறக்க வேண்டிய காரணம், தொடர்பு எல்லாம் புரியறது. அம்மா சாப்பிடற சாப்பாடு, பானங்கள் இதுனால, வயத்துல இருக்கற குழந்தை வளர்றது. அப்போ, வயிற்றில் இருக்கும் குழந்தையின் தொப்புளில் ‘ஆப்யாயனீ’ என்ற நாடி கட்டப்படுகிறது. அதன் மறு முனை தாயின் வயிற்றில் இருக்கும் குடலின் ஓட்டையில் கட்டப்படுகிறது. இந்த நாடி (தொப்புள் கொடி) மூலமாகவே, தாயார் சாப்பிட்டது குடித்தது என அனைத்தும், கருவில் இருக்கும் குழந்தையின் வயிற்றில் போய்ச் சேருகின்றன. அதன் மூலம் குழந்தை வளர்கிறது என்கிறது மார்க்கண்டேய புராணம்.

இப்படி மெள்ள வளர்ற குழந்தை, ஏராளமான புழுக்கள் உண்டாகக் கூடியதும், மலம் மூத்திரம் இதெல்லாம் இருக்கறதுமான குழியில படுத்திருக்கு. ரொம்பவும் சாஃப்டா இருக்கிற அந்தக் குழந்தையோட உடம்பை, அங்க இருக்கற புழுக்கள் எல்லாம் ஒட்டுமொத்தமா கடிக்கறது. குழந்தையால இதைத் தாங்க முடியல. எனவே, அப்பப்ப மயக்கமாயிடறது. அம்மா சாப்பிடுற சாப்பாட்டுல இருக்கற உப்பு, உறைப்பு, கசப்பு, தித்திப்பு இதெல்லாம் அந்தக் குழந்தையை பாதிக்கிறது. ஒரே வேதனைதான். தன்னைச் சுத்தி கர்ப்பப்பை. கர்ப்பப்பையச் சுத்தி, மாலை மாதிரி குடல், வளைஞ்ச முதுகு கழுத்து... வயித்துல தலையை மடிச்சு வெச்சுக்கிட்டு குழந்தை அங்கயே கெடக்கறது. உடம்பை, கொஞ்சம் ஃப்ரீயா அசைக்கக் கூட முடியல. போன பிறவி, அதுக்கு முந்தின பிறவினு... எல்லாப் பிறவியும் அந்தக் குழந்தைக்கு, அப்ப தெரியறது. இந்த நேரம் பார்த்து பிரசவக் காற்று குழந்தையை அங்கயும் இங்கயுமா அலைக்கழிக்கும்.

ஏழாவது மாசத்துல அறிவு உண்டாகி, அம்மா வயத்துல அங்கயும், இங்கயுமா அலையுற குழந்தை நடுங்கும். ரெண்டு கையையும் கூப்பின மாதிரி வெச்சிருக்கும். ‘எப்படா வெளியில வருவேன்’னு சாமிகிட்ட பிரார்த்தனை பண்ணும். 10 மாசம் ஆனதும், குழந்தை வெளிப்பட காரணமா இருக்கற காற்று, குழந்தையைத் தலைகீழா வெளியில தள்ளி விடும். அப்புறம் என்ன... குழந்தை பொறந்தாச்சு. சொந்த பந்தம் எல்லாம் ஆணா பொண்ணானு கேக்கும். ஸ்வீட் குடுக்கும். ஆனா, குழந்தையோ ‘குவாகுவா’னு கத்திக்கிட்டு கிடக்கும்’’ என்று சொல்லிச் சின்ன இடைவெளியை தாத்தா கொடுக்க...

அங்கிருந்தவர்கள் பிரமிப்போடு வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள். தாத்தா படுகம்பீரமாகத் தொடர்ந்தார்.

‘‘குழந்தை பிறந்ததும் ஏன் அப்படிக் கத்தறதுங்கற விளக்கத் தையும், அயல்நாட்டுக்காரங்க ஆச்சரியப்படறதைப் பத்தியும் கொஞ்ச நேரம் போனதுக்கு அப்புறமா சொல்றேன். அதுக்கு முன்னால இவ்வளவு நேரமா பார்த்த தகவல்கள், அதாவது அம்மா வயத்துல இருக்கற குழந்தையோட வளர்ச்சியை5 நாள்ல ஆரம்பிச்சு, அது பொறக்கற வரைக்கும் மார்க்கண்டேய புராணத்துல அற்புதமா சொன்ன அந்த மகான் யாரு தெரியுமா?’’ என்று தாத்தா நிறுத்த, குடியிருப்புவாசிகளும் குழந்தைகளும் இமை கொட்டாமல் தாத்தாவையே பார்த்துக் கொண்டிருந் தனர். ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு தொண்டையைச் செருமிக் கொண்டு தாத்தா ஆரம்பித்தார்.

‘‘இன்றைய விஞ்ஞானமெல்லாம் வியந்து போகிற வகையில் ஒரு கர்ப்பிணியை முழுக்க முழுக்க ஸ்கேன் பண்ணி இது போன்ற பிரமிக்கக் கூடிய தகவல்களை ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே நமக்கெல்லாம் சொன்ன அந்த அவர் டாக்டர் இல்லை... விஞ்ஞானி இல்லை... சாஸ்திரங்களைக் கரைத்துக் குடித்தவர். வேதங்களைத் தன் சுவாசமாகக் கொண்டு வாழ்ந்தவர். அவர் பெயர்.......’’

‘‘சொல்லுங்க தாத்தா... சீக்கிரமா சொல்லுங்க...’’ என்று குழந்தைகள் எழுந்து கூக்குரல் எழுப்பின.


சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

mayuran89 இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் Empty Re: சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம்

Post by Aathira Sun Dec 19, 2010 9:53 pm

ரொம்ப நல்லா இருக்கு சிவா.. இந்த ஸ்கேன் பத்தித்தான் நான் அடுத்த கட்டுரை எழுதலாம் என்று இருந்தேன்.. கம்ப ராமாயணத்துல கோட்டை மதில் சுவர் மேல இயந்திரங்கள் இருக்குமாம். அது எதிரில் வருபவர்கள் என்ன எண்ணத்தோடு வருகிறார்கள் என்பதை படம் பிடித்து காட்டி விடுமாம. நம்ம இலக்கியங்களில் இல்லாத விஷ்யமே இல்லை என்பது சத்தியம். நல்ல இருக்கு. தொடர்ந்து பதிவிடுங்கள் சிவா. ஆமா பெரிய புத்தகமா? இல்ல கட்டுரையா?


சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் Aசும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் Aசும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் Tசும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் Hசும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் Iசும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் Rசும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் Aசும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் Empty Re: சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம்

Post by சிவா Sun Dec 19, 2010 9:56 pm

Aathira wrote:ரொம்ப நல்லா இருக்கு சிவா.. இந்த ஸ்கேன் பத்தித்தான் நான் அடுத்த கட்டுரை எழுதலாம் என்று இருந்தேன்.. கம்ப ராமாயணத்துல கோட்டை மதில் சுவர் மேல இயந்திரங்கள் இருக்குமாம். அது எதிரில் வருபவர்கள் என்ன எண்ணத்தோடு வருகிறார்கள் என்பதை படம் பிடித்து காட்டி விடுமாம. நம்ம இலக்கியங்களில் இல்லாத விஷ்யமே இல்லை என்பது சத்தியம். நல்ல இருக்கு. தொடர்ந்து பதிவிடுங்கள் சிவா. ஆமா பெரிய புத்தகமா? இல்ல கட்டுரையா?

ஹலோ, தனிமடலில் ஒரு கேள்வி கேட்டால் பதில் தரமாட்டீர்களா?

இது மென்னூலாக உள்ளது! யுனிகோடிற்கு மாற்றி இங்கு பதிவிடுகிறேன்! இதை எழுதியது யார் என அறியத்தர முடியுமா அக்கா! மொத்தம் 35 கட்டுரைகள் உள்ளது!


சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

mayuran89 இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் Empty Re: சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம்

Post by சிவா Sun Dec 19, 2010 10:07 pm

கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் வளர்ந்து வரும் குழந்தையின் நிலையை ஸ்கேன் செய்தது போல் மார்க்கண்டேய புராணத்திலும் பாகவத புராணத்திலும் அன்றே சொன்னவர் வியாச பகவான்!” என்று கம்பீரமாகச் சொன்ன தாத்தா, தனது உரையைத் தொடர்ந்தார்:

‘‘நேரம் அதாவது காலத்தைப் பற்றியும், அதை உபயோகிக்க வேண்டியதைப் பற்றியும் ஏற்கெனவே பார்த்தோம். இதுல ஏமாந்து போயிட்டோம்னு வெச்சுக்கங்க... ‘இதெல்லாம் அப்பவே செஞ்சிருந்தா, நல்லா இருந்துருக்குமே. இப்போ, இப்படி அல்லாட வேண்டியிருக்காது’னு பொலம்பிக்கிட்டு இருக்கும் படியா ஆகிப் போயிடும். அந்தந்தக் காலத்துல காரியங் களைச் செய்யலேன்னா, கண்ணீர் விட்டுத்தான் ஆகணும்.

‘எல்லாம் காலம் பண்ற கூத்து’ அப்படினு சொல்லக் கூடாது. காலம் எங்க மாறிச்சு? மரம், செடி, கொடி எல்லாம் அதது, அததுக்கு உண்டான காலத்துலதான் பூத்து, காய்ச்சு, பழுக்குது. விலங்குகள்ல கூட சைவம், சைவமாகத் தான் இருக்கு; அசைவமும் அப்படியேதான் இருக்கு. யானை- அசைவத்துக்கோ, புலி சைவத்துக்கோ மாறி இருக்குதா என்ன? உண்மையில் காலம் மாறிப் போச்சுன்னா, இதுங்க எல்லாம் மாறி இருக்குமே! ஆசை, சோம்பேறித்தனம், அலட்சியம் இதெல்லாம் நம்மைப் புடிச்சு ஆட்டுது. நாமதான் நம்ம ஆசைகளுக்குத் தகுந்தபடி மாறிட்டோம்.

‘காலம் தலைகீழா மாறிப் போச்சு சார். முன்னாடி எல்லாம், வாத்தியார் உட்கார்ந்து பாடம் சொல்லிக் கொடுப்பார். பையன் நின்னுட்டு பாடம் கத்துப்பான். இப்ப வாத்தியார் நின்னுட்டுப் பாடம் சொல்லித் தர்றார். பையன்தான் உக்கார்ந்து கேக்கறான். அப்பல்லாம் மாவு அரைக்கும்போது, குழவி சுத்தும்; ஆட்டுக்கல்லு அங்கேயே அசையாம இருக்கும். இப்ப என்னடான்னா, ஆட்டுக்கல்லே அடியோட சுத்துது. கேட்டா, கிரைண்டர்னு சொல்றாங்க. துணி துவைக்கணுமா அதுக்கு ஒரு மிஷினு, தோச்ச துணியப் புழியணுமா அதுக்கும் மிஷினு. அட! இவ்வளவு ஏன் சார்? முன்னோர்கள் ‘வாக்கிங்’கறத சூப்பரா செஞ்சாங்க. இப்ப பார்த்தா, அதுவும் தலைகீழாப் போயிருச்சு அப்படீனு சொல் றாங்க. நம்ம முன்னோர்கள் காலங் காலையில சூரியன் உதிக்கறதுக்கு முன்னாலேயே எழுந்து, நதியிலயோ, குளத்துலயோ அல்லது கிணத்துலயோ குளிக்கப் போவாங்க. சூரியன் உதிச்ச உடனே, இயற்கையாவே தண்ணியில இருக்கற சக்தி எல்லாம் மறைஞ்சு போயிடும். அதனாலதான் சூரியன் உதிக்கறதுக்கு முன்னாடியே குளிச்சாங்க. தண்ணியில இருக்கற சக்தியும் கெடைச்சுது. அடுத்து, காலையில குளிக்கப் போற இவங்க குளிச்சுட்டு அப்படியே கோயிலுக்கும் போயிட்டு வீட்டுக்கு வருவாங்க. அப்பதான் மெள்ளமா சூரியன் உதிக்கும். அதிகாலை நேரம், நல்ல குளியல், தூய்மையான காத்து இதோட அவங்களுக்குப் பொழுது விடிஞ்சுது. அப்படி இருந்த வாக்கிங், இன்னிக்கு ஏ.சி. ரூமுக்குள்ள கன்வேயர் பெல்ட்டுக்கு மேல ஒரே இடத்துல நடக்குது. அப்புறம் முன்னோர்களுக்கு கெடைச்ச ஆரோக்கியம் நமக்கு எப்படி கிடைக்கும்?

எல்லாத்துலயும் நேரப்படி இருந்த பெரியவங்க, சாப்பாட்டு விஷயத்துலயும் முறையா இருந்தாங்க. சாப்பிடும்போது அவங்க சிந்தனை சாப்பாட்டுலதான் இருந்துச்சு. பேச்சு இல்லாம அமைதியா சாப்பிட்டாங்க. ஆனா, இன்னிக்கு சாப்பிடும்போது கண்டிப்பா டி.வி. பார்க்கணும். சேனல் மாத்தி சேனல் பார்க்கணும். ‘தட்டுல என்ன போடறாங்க, என்ன சாப்பிடறோம்’கற நினைவே இருக்காது. கடைசியில, ‘ச்சே... ஒரு டி.விலயும் ஒண்ணும் உருப்படியா இல்ல!’னு சலிச்சுக்கிட்டே ரிமோட்டைப் போட்டுட்டு சாப்பாட்டுலேர்ந்து எழுந்திருப்போம். ‘இந்த மாதிரி டி.வி. பாத்துட்டே சாப்பிடறது தப்பு, வியாதி வரும்’ அப்படினு அதே டி.விலதான் சொல்றாங்க டாக்டருங்க. சாப்பிடும்போது புத்தி சாப்பாட்டுல இருக்க வேண்டாமா? சாப்பிடும்போது வாழை இலையில சாப் பிட்டா கிழத்தனமோ, நரை திரையோ நம்மை பாதிக்காது. ஆரோக்கியமா இருக்கலாம். வாரம் ஒரு தடவை கறிவேப்பிலை துவை யலை சாதத்துல கலந்து சாப்பிட்டாங்க. இளநரை வராம இருந்தது. அதே மாதிரி கீரை வகைகளை அப்பப்ப சாப்பாட்டுல சேர்த்துச் சாப்பிட்டாங்க. அதனால கண் பார்வை, நரம்புகள் எல்லாம் ஆரோக்கியமா இருந்துச்சு.

இந்தக் காலத்துல பையனுக்குக் கீரையைப் போட்டா, ‘அம்மா, அம்மா! இதெல் லாம் மனுஷன் திங்கறதா? மாடுதான் திங்கும். கொண்டு போய் அப்பாவுக்கு போடு!’ங்கறான். பலன், பத்துப் பதினஞ்சு வயசுலயே ஆரோக்கியம் போயிடுது. சோடா புட்டி கண்ணாடி போடும்படியா ஆயிடுது. சாப்பாட்டுல இன்னும் என்ன டெக்னிக் கெல்லாம் வெச்சிருந்தாங்கய்யா நம்ம தாத்தா பாட்டியெல்லாம்! ஒரு வேளை சாப்பாட்டுக் கும், அடுத்த வேளை சாப்பாட்டுக்கும் நடு வுல அமிர்தமே கெடைச்சாலும் திங்க மாட்டாங்க. எப்ப பார்த்தாலும் மொச்சு மொச்சுனு நொறுக்குத் தீனிய உள்ளே தள்ள மாட்டாங்க. நல்லா சாப்பிட்டுட்டு பஸ்ஸுல ஏறி, இறங்க வேண்டிய இடம் வந்த உடனே இறங்கி, அங்கே இருக்குற ஃபாஸ்ட் ஃபுட் கடையிலேயும் நல்லா ஒரு வெட்டு வெட்டறதெல்லாம் ரொம்ப தப்பு. ஆரோக்கியத்துக்குக் கெடுதல்!

சாப்பிடறது மட்டுமில்லை. அதைத் தயாரிக்கறதுலயும் நுணுக்கமா இருந்த வங்க நம் முன்னோர். உதாரணமா, வடைக்கோ அப்பளத்துக்கோ, அடுப்புல எண்ணெய் வெக்கும்போது அதிகமா வெக்க மாட்டாங்க. பத்து அப்பளம்னா பத்து அப்பளம், இருபது வடைன்னா இருபது வடைதான். அதுக்குத் தேவையான அளவு மட்டுமே எண் ணெயை வெச்சு, சுட்டெடுப்பாங்க. மீதியை அன்னிக்கே துவையல், சாதம் அல்லது சாப்பாட்டுக்குன்னு உபயோகப்படுத்தி டுவாங்க. ஒரு தடவ வெச்ச எண்ணெயை அடுத்த தடவ அடுப்புல ஏத்தி சுட வெக்க மாட்டாங்க. காரணம்? மறுபடியும் சுட வெச்சா அந்த எண்ணெயில செய்யற உணவுப் பண்டங்கள் நம்ம உடம்புக்கு அதிகமான தீங்குகளை உண்டாக்கும்.

இதை இப்ப மருத்துவர்களே சொல்றாங்க!’’ என்ற தாத்தா கொஞ்சம் நிறுத்தினார்.

கூட்டத்திலிருந்து ஒருவர், ‘‘ஐயா! இந்தக் கீரைங்க, கறி வேப்பிலை இதெல்லாம் சாப்பாட்டுல சேக்கறதப் பத்தி, அதாவது அதுக்கெல்லாம் என்னென்ன சக்தி இருக்கறதுன்னு காரணகாரியத்தோட இன்னுங் கொஞ்சம் வெவரமா சொன்னா, இங்கே இருக்கிற இளைய தலைமுறை தெரிஞ்சுக்குவாங்க. அனுபவத்துலயும் கொண்டு வருவாங்க’’ என்றார்.

‘‘இதெல்லாம் அந்தக் காலத்திலேயே ‘வீட்டு வைத்தியம்’கற தலைப்புல ஆனந்த விகடன்ல தொடர்ச்சியா வந்துது. நல்ல ரெஸ்பான்ஸும் இருந்துச்சு. நீங்க கேட்டதுனால ஒண்ணு, ரெண்டு விஷயத்த மட்டும் சொல்றேன்...’’ என்று தாத்தா தொடர... குறித்த நேரம் தாண்டி நிமிடங்கள் மணியாக நழுவுவ தைக் கூட பொருட்படுத்தாமல் அபார்ட்மெண்ட் கூட்டம் அப் படியே அமர்ந்திருந்தது.


சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

mayuran89 இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் Empty Re: சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம்

Post by சிவா Sun Dec 19, 2010 10:25 pm

‘‘சொல்லுங்க! அந்தக் கால ஆனந்த விகடன்ல ‘வீட்டு வைத்தியம்’கற தலைப்புல வந்ததுல, ஒண்ணு ரெண்டாவது சொல்லுங்க!’’ என்று, வந்திருந்த பொதுமக்கள் கேட்டார்கள்.

பெரியவர் சொன்னார்: ‘‘மனுஷனுக்கு எது இருக்குதோ இல்லியோ... ஆரோக்கியம் இருக்கணும். ‘ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வீட்டு வைத்தியம்’கற தலைப்புல ஐம்பது வருஷத்துக்கு முன்னாடியே ஆனந்த விகடன் வழி காமிச்சுருக்கு. ‘கைக் கொழந்தங்கள்லேர்ந்து குடுகுடு கிழவர் வரை, என்னென்ன வியாதி வரும், அது தீர என்ன வழினு தெளிவா, எளிமையா சொல்லி வெச்சிருக்கு.’’

‘‘நேரடியா விஷயத்துக்கு வாங்க தாத்தா... ரொம்ப போரடிக்காதீங்க...’’ _ குழந்தைகள் குரல் எழுப்பின.

‘‘குழந்தைங்களா... உங்களுக்குன்னே ஒரு வைத்திய முறை சொல்றேன். ஸ்கூலுக்குப் போறப்ப வீட்டுல குடுக்கற பாக்கெட் மணியை வெச்சு சாக்லெட், அது இதுன்னு கண்டதையும் வாங்கித் திம்பீங்க. என்னாகும்? ஜலதோஷம் பிடிக்கும். அப்புறம் இருமல். இதைப் பார்த்துட்டு உங்கம்மா சும்மா இருப்பாங்களா? உடனே ஒரு டாக்டர்கிட்டே கூட்டிட்டுப் போவாங்க. ஆனா, அந்தக் காலத்துல எங்க வீட்டுல என்ன செய்வாங்க தெரியுமா? சித்தரத்தைனு ஒரு வேர் இருக்கு. நாட்டு மருந்துக் கடையில கிடைக்கும். அதுல ஒரு சிறு துண்டை எடுத்து வாயில போட்டு அடக் கிக்குவோம். உமிழ்நீரை முழுங்கிக்கிட்டே இருக்கணும். இன்னொண்ணும் செய்வாங்க. சித்தரத்தையோட கொஞ்சம் பனங்கல்கண்டையும் கலந்து கொதிக்க வெச்ச கஷாயம் குடிப்பாங்க. ஜலதோஷம், இருமல் எல்லாம் போயே போச்சு. இதே டைப்புல அதிமதுரம் வேரையும் கொதிக்க வெச்சுக் குடிக்கலாம். இதுபோன்ற வைத்திய முறைகளையெல்லாம் நம் முன்னோர்கள் ஆராய்ந்து கண்டுபிடிச்சாங்க.’’

சட்டென்று எழுந்தான் ஒரு சிறுவன். ‘‘வாஸ்தவம்தான் தாத்தா. நாட்டு மருந்துக் கடையெல்லாம் உங்க காலத்துல நிறைய இருந்துது. அதையே வாங்கி நீங்க சாப்பிட்டுட்டு இருந்தீங்க. இப்ப எங்க காலத்துல இங்லீஷ் மெடிக்கல் ஷாப்தான் அதிகமா இருக்கு தாத்தா...’’ என்றான் சுரத்து இல்லாமல்.

‘‘எல்லாமே இந்தக் காலத்துலயும் இருக்குப்பா. நாமதான் தேடிப் போறதில்லே’’ என்றவர், ‘‘நேரம் ஓடிட்டே இருக்கு. பழங்கால நூல்கள் பெயர்கள்ல சிலதைச் சொல்லி, அதுல அடங்கியிருக்கிற விஞ்ஞான விஷயத் தகவல்களையும் சொல்லி, அஞ்சே நிமிஷத்துல நிறைவு செய்துடறேன்’’ என்ற தாத்தா, வெட்டிவேர் போட்ட மணம் நிறைந்த நீரை ஒரு டம்ளர் குடித்து விட்டு ஆரம்பித்தார்.

‘‘மகாபாரதத்துல, அரக்கு மாளிகைத் தீயிலேர்ந்து தப்பின பஞ்ச பாண்டவர்கள், அந்தண வேஷத்துல போய்க்கிட்டு இருக்காங்க. போற வழியில அங்காபரணன்கற கந்தர்வன், தன் மனைவிகளோட குஷியா ஒரு குளத்துல குளிச்சுக்கிட்டு இருக்கான். அந்தண வேஷத்துல இருந்த பஞ்ச பாண்டவர்களைப் பார்த்ததும், அங்காபரணன் அவங்கள கேலி செய்யறான். மத்தவங்க சும்மா இருப்பாங்க. பீமன் இருப்பானா? அங்காபரணனை அடிக்கக் கௌம்பறான். தர்மர் தடுக்கறார். ‘பீமா! அந்தண வேஷத்துல இருக்கோம். அந்தணர் என்போர் அறவோர். ஆயுதம் எடுக்கக் கூடாது. அமைதியா வா!’ங்கறார்.

அங்காபரணன் மறுபடியும் வம்புக்கு இழுத்தான். இப்ப பீமனோட அர்ஜுனனும் சேந்துக்கிட்டான். ரெண்டு பேருமா போய், அங்காபரணனைப் பின்னி எடுத்துட்டாங்க. அப்ப அங்காபரணன், ‘என்னை அடிக்காதீங்க! விட்டுடுங்க! ஒங்களுக்கு நான் ஒண்ணு தரேன்’னான். ‘என்ன அது?’னு கேட்டாங்க, பீமனும் அர்ஜுனனும். அதுக்கு அங்காபரணன் சொன்ன பதில்தான், நம்மை ஆச்சரியப்பட வைக்குது! ‘இருந்த இடத்தில் இருந்து கொண்டே, எல்லா இடங்களிலும் நடப்பதைப் பார்க்கக் கூடிய ஒரு பொருள் என்னிடம் உள்ளது. அதத் தரேன். அதன் பேர் சாட்சுஸி’னு பதில் சொன்னான்.

‘இருந்த எடத்துலியே இருந்துகிட்டு எல்லா இடங் கள்லேயும் நடக்கறதப் பார்க்கக் கூடிய அந்தப் பொருள் எதுன்னு தெரீதா? அன்னக்கி அதன் பேரு சாட்சுஸி. இன்னக்கி...’’ என்ற தாத்தா கொஞ்சம் நிறுத்தினார். ஒட்டுமொத்தக் கூட்டமும், ‘‘டி.வி! டி.வி!’’ என்று குரல் கொடுத்தது. தாத்தா முகத்தில் பிரகாசம். இந்தக் காலத்துப் புள்ளைங்க ‘‘சூப்பர்! சூப்பர்! இதே வேகத்தோட நம்ம முன்னோர்களின் விஞ்ஞான நூல்களப் பத்தி சொல்றேன். பதிய வெச்சுக்குங்க மனசுல’’ என்றார்.

கூட்டத்தில் இருந்தவர்கள் பாதிக்கு மேல் பேனாவுடன் குறிப்பெடுக்கத் தொடங்கினார்கள். எஞ்சி இருந்தவர்கள் மனதில் பதிய வைத்துக் கொள்வார்கள் போலிருக்கிறது. கூட்டத்தின் ஆர்வத்தைப் பார்த்த தாத்தா தொடர்ந்தார்:

‘‘கி.பி.1000ல் பாஸ்கரபட்டர்ங்கறவர், ‘சரீர பத்மினி’னு ஒரு நூல் எழுதினார். உடல் கூறுகளை பற்றிய நூல் அது. பரத்வாஜ மகரிஷி எழுதின ‘ப்ருஹத்யந்த்ர ஸர்வஸ்வம்’ங்கற நூல்ல விமானத்தைப் பற்றி விரிவா சொல்லி இருக்கு. தண்ணிலேயும், ஆகாயத்திலும் ஓடும் விமானம் ‘குசுமாகரம்’ங்கற பேர்ல சொல்லப்பட்டிருக்கு. ‘அகஸ்திய சம்ஹிதை’ங்கற நூல், விமானத்துலேருந்து குதிக்கறதுக்கு உபயோகப்படற பாராசூட் பத்தி சொல்லி, அதை ‘அவரோஹிணி’ங்கற பேர்ல சொல்லுது. ‘கப்பல்கள்ல பலகைகளை இணைக்கும் போது, இரும்பு ஆணி கொண்டு இணைக்கக் கூடாது. அப்படிச் செய்தால், கடலுக்கு அடியில இருக்கற காந்த மலைச் சிகரங்களால் கப்பலுக்கு ஆபத்து உண்டாகும்’னு சொல்றார் போஜராஜா. ‘யுக்தி கல்பதரு’ங்கற நூல் கப்பல் வகைகளைப் பத்தி நீள, அகல, உயரம் உட்பட விரிவா பேசுது.

‘ப்ருஹத் ஸம்ஹிதை’ (கி.பி.550)ங்கற நூல் அழகு சாதனங்கள், வாசனைத் திரவியங்கள் தயாரிக்கறதப் பத்திச் சொல்லுது. கண்ணுக்கு மை இட்டுக்கற மாதிரி, வெளுத்துப் போன தலைமுடிக்கு கருமை நிறம் (டை) பூசுவது, தலையில பொடுகு இல்லாம இருக்க குறிப்பிட்ட பொடியைப் பயன்படுத்துவது, ஊதுவத்தி, வாசனைப் பொடி என ஏராளமான தகவல்கள் அந்த நூல்ல கிடைக்குது.

அதனால, முன்னோர்கள் எல்லாம் ஏதோ பொழுது போகாம எழுதி வெச்சுட்டுப் போயிட்டாங்கன்னு கேலி பேசாம, அபூர்வமான அந்தத் தகவல்களை இன்னி வரைக்கும் காப்பாத்தி நம்மகிட்ட கொடுத்துட்டுப் போயிருக்கறத நினைக்கணும். அத நாம காப்பாத்தி அடுத்த தலைமுறைக்குச் சேர்க்கணும். அத எல்லாரும் செய்வீங்கங்கற நம்பிக்கையோட, இந்த அளவிலே நான் விடைபெறுகிறேன்!’’ என்று முடித்தார் தாத்தா. அனைவரும் எழுந்து நின்று கைகளைத் தட்டி, தாத்தாவைப் பாராட்டினார்கள். ‘இது எங்க தாத்தாவாக்கும்!’ என்ற பெருமிதம் முகத்தில் பொங்க, தாத்தாவின் கையைப் பிடித்தபடி வீடு திரும்பினாள் பேத்தி.

ஆனால், வீட்டில் ஒரு பெரும் பிரச்னை. அதை வேதம்தான் தீர்த்து வைக்க வேண்டும்!


சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

mayuran89 இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம் Empty Re: சும்மாவா சொன்னாங்க பெரியவங்க..! சுகி.சிவம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum