புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியாவிற்குள் நுழையும் வளர்ச்சியடைந்த வல்லரசுகள் Poll_c10இந்தியாவிற்குள் நுழையும் வளர்ச்சியடைந்த வல்லரசுகள் Poll_m10இந்தியாவிற்குள் நுழையும் வளர்ச்சியடைந்த வல்லரசுகள் Poll_c10 
10 Posts - 56%
heezulia
இந்தியாவிற்குள் நுழையும் வளர்ச்சியடைந்த வல்லரசுகள் Poll_c10இந்தியாவிற்குள் நுழையும் வளர்ச்சியடைந்த வல்லரசுகள் Poll_m10இந்தியாவிற்குள் நுழையும் வளர்ச்சியடைந்த வல்லரசுகள் Poll_c10 
5 Posts - 28%
mohamed nizamudeen
இந்தியாவிற்குள் நுழையும் வளர்ச்சியடைந்த வல்லரசுகள் Poll_c10இந்தியாவிற்குள் நுழையும் வளர்ச்சியடைந்த வல்லரசுகள் Poll_m10இந்தியாவிற்குள் நுழையும் வளர்ச்சியடைந்த வல்லரசுகள் Poll_c10 
2 Posts - 11%
VENKUSADAS
இந்தியாவிற்குள் நுழையும் வளர்ச்சியடைந்த வல்லரசுகள் Poll_c10இந்தியாவிற்குள் நுழையும் வளர்ச்சியடைந்த வல்லரசுகள் Poll_m10இந்தியாவிற்குள் நுழையும் வளர்ச்சியடைந்த வல்லரசுகள் Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியாவிற்குள் நுழையும் வளர்ச்சியடைந்த வல்லரசுகள் Poll_c10இந்தியாவிற்குள் நுழையும் வளர்ச்சியடைந்த வல்லரசுகள் Poll_m10இந்தியாவிற்குள் நுழையும் வளர்ச்சியடைந்த வல்லரசுகள் Poll_c10 
10 Posts - 56%
heezulia
இந்தியாவிற்குள் நுழையும் வளர்ச்சியடைந்த வல்லரசுகள் Poll_c10இந்தியாவிற்குள் நுழையும் வளர்ச்சியடைந்த வல்லரசுகள் Poll_m10இந்தியாவிற்குள் நுழையும் வளர்ச்சியடைந்த வல்லரசுகள் Poll_c10 
5 Posts - 28%
mohamed nizamudeen
இந்தியாவிற்குள் நுழையும் வளர்ச்சியடைந்த வல்லரசுகள் Poll_c10இந்தியாவிற்குள் நுழையும் வளர்ச்சியடைந்த வல்லரசுகள் Poll_m10இந்தியாவிற்குள் நுழையும் வளர்ச்சியடைந்த வல்லரசுகள் Poll_c10 
2 Posts - 11%
VENKUSADAS
இந்தியாவிற்குள் நுழையும் வளர்ச்சியடைந்த வல்லரசுகள் Poll_c10இந்தியாவிற்குள் நுழையும் வளர்ச்சியடைந்த வல்லரசுகள் Poll_m10இந்தியாவிற்குள் நுழையும் வளர்ச்சியடைந்த வல்லரசுகள் Poll_c10 
1 Post - 6%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவிற்குள் நுழையும் வளர்ச்சியடைந்த வல்லரசுகள்


   
   
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Sun Dec 19, 2010 11:26 pm

வென் தாத்தாவின் (Grandpa Wen) வருகையால் இந்தியப் பெரு முதலாளி வர்க்கம் குதூகலமடைந்துள்ளது. சீனப் பிரதமர் வென் ஜியா பாவ் இந்தியாவிற்கு மேற்கொண்டுள்ள உத்தியோகபூர்வ விஜயத்தின் முதலாம் நாளில், சீனாவின் முக்கிய வங்கிகளான சீன வங்கி, சீன விவசாய வங்கி, சீன கட்டுமான வங்கி, கைத்தொழில் வர்த்தக சீன வங்கி போன்றவை இந்திய நிறுவனங்களோடு செய்த ஒப்பந்தங்களே இந்த குதூகலத்திற்கான காரணமென்று கூறலாம். 16 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான தொலைத் தொடர்பு, இரும்பு உற்பத்தி, உணவு உற்பத்தி போன்ற வர்த்தக துறைகளில் ஏறத்தாள 50 ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.

இந்த வருடத்திற்கான (2010) இருதரப்பு வர்த்தகம், 60 பில்லியன் டொலர்களைத் தாண்டுமென எதிர்பார்க்கப்படுவதாகவும் வருகிற 2015 இற்கிடையில் வருடமொன்றிற்கு இவ்வர்த்தகம் 100 பில்லியன் என்கிற இலக்கினை அடைய வேண்டுமென இவ்விரு நாடுகளும் எதிர்பார்க்கின்றன. 400 பேரடங்கிய வர்த்தக ஜாம்பவான்களோடு இந்தியா சென்றுள்ள சீனப் பிரதமர், சீன அபிவிருத்தி வங்கி ஊடாக இந்தியப் பெரு முதலாளியான அம்பானி குரூப்பிற்கு 4.63 பில்லியன் டொலர்களை அபிவிருத்திக்கான நிதியுதவியாக வழங்க இணங்கியுள்ளார்.

அம்பானியின் ரிலயன்ஸ் பவர் என்கிற பன்னாட்டு நிறுவனத்திற்கு உதவியதோடு, ஐ.சி.ஐ.சி.ஐ. (ICICI) வங்கிக்கு 400 மில்லியன் டொலர்களை வழங்கும் ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டது. அத்தோடு ரிலயன்ஸ் கம்யூனிகேசனுடன் 2 பில்லியன் ஒப்பந்தமும் அடானி குரூப் உடன் 3.63 பில்லியன் டொலர் பெறுமதியான இயந்திர உபகரணங்களுக்கான ஏற்றுமதி ஒப்பந்தமும் இதில் உள்ளடங்கும். இவை தவிர 2.5 பில்லியன் டொலரில் டொவெங் எலெக்ரிக்கும் அபிஜீற் புரஜெக்டும் புதிய ஒப்பந்தமொன்றிலும் சான்டொங்கும் தமிழ்நாடு சக்தி கம்பனியும் 800 மில்லியன் டொலரில் இரு தரப்பு உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டுள்ளது.

இத்தகைய பாரிய முதலீட்டு ஒப்பந்தங்களினூடாக தனது வங்கிக் கிளைகளை இந்தியாவில் திறப்பதற்குரிய விருப்பத்தை சீன அரசு தெரிவித்த விவகாரம் கவனிக்கத்தக்கது. அதாவது சீபா எனப்படும் முழுமையான இரு தரப்பு பொருளாதார உடன்படிக்கையூடாக இலங்கையில் எதனைச் சாதிக்க இந்தியா முற்பட்டதோ, எதனை சீன அரசு, இந்தியாவில் செய்ய எத்தனிக்கிறது என்கிற விடயம், வங்கிக் கிளை திறப்பினூடாக அவதானிக்கக் கூடியதாகவிருக்கிறது.

2002 இல் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களாகவிருந்த இந்திய சீன இரு தரப்பு வர்த்தகமானது, 2010 இல் 60 பில்லியனாக வளர்ச்சியடைந்தாலும் சீனாவிற்குச் சார்பான 24 பில்லியன் வர்த்தக உபரி குறித்தே இந்தியா கவலையடைகிறது. இரும்புத் திரை போட்டு மூடி மறைக்கப்பட்டுள்ள சீனச் சந்தைக்குள் தனது மருந்துப் பொருட்களையும் தகவல் தொழில் நுட்ப உற்பத்திப் பொருட்களையும் கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டுமென்பதே இந்தியாவின் இறுக்கமான வேண்டுகோளாகவிருக்கிறது. சீனாவிற்கான இந்தியாவின் ஏற்றுமதியில் இரும்புத் தாதுக்களும் ஆடைத் துணி வகைகள் மற்றும் செப்பு போன்றவையே முக்கியத்துவம் பெறுகிறது.

அதேபோன்று சீன ஏற்றுமதியில் இயந்திர உபகரணங்கள், இரும்பு, உரம், பட்டு போன்றவை காத்திரமான பங்கினை வகிக்கின்றது. 2005 இற்கு பின்னர் 2010 இல் இந்தியா வந்திருக்கும் சீனப் பிரதமர், இந்தியப் பொருட்களை சீனாவிற்கு ஏற்றுமதி செய்யும் விவகாரங்கள் குறித்து அதிகம் பேசாமல், நாமிருவரும் எதிரியல்ல, நண்பர்கள் என்பது போன்ற உணர்ச்சிவயமான கதையாடல்களை அவிழ்த்து உணர் திறன் மிக்க பாகிஸ்தான் உறவு பற்றியோ அல்லது நீண்டகால எல்லைத் தகராறு குறித்தோ பேசாமல் நாசூக்காகத் தவிர்த்து விட்டார்.

இந்திய சீன ஏற்றுமதி வர்த்தக உறவில் முக்கிய பங்கினை இரும்புத் தாது வகிக்கிறது என்பதனை உலகெங்கும் மூல வளங்களைத் தேடியலைந்து கொண்டிருக்கும் சீனாவிற்கு தெளிவாகப் புரியும். ஒரு ட்ரில்லியன் டொலர் பெறுமதியான கனிம வளப் படிமங்களை தனது பூமியில் புதைத்து வைத்திருக்கும் ஆப்கானி ஸ்தானோடு இரும்புத் தாதினை அகழ்ந்தெடுக்கும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் வரைதான் சீனாவின் இந்திய உறவு பூதாகரமாக்கப்படலாம். சி.எம்.ஜி. என்கிற ஆப்கான் நிறுவனத்தோடு நவம்பர் 2007 இல் செப்பு அகழ்விற்கான ஒப்பந்தமொன்றில் சீனா கைச்சாத்திட்டது.

4 பில்லியன் டொலர் செலவில் 30 வருட குத்தகையின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்ட இந்த ஒப்பந்தம் இதுவரைஅகழ்ந்தெடுக்கப்படாத 88 பில்லியன் டொலர் பெறுமதியான செப்பினை சீனா கையகப்படுத்தலாமென எதிர்வு கூறப்படுகிறது. செப்பிற்கு அடுத்ததாக ஆப்கானிஸ்தானிலுள்ள 2200 மில்லியன் மெட்ரிக் தொன் இரும்புத் தாதுப் படிமங்களை குறி வைக்கிறது சீனா. இதற்கான ஒப்பந்தத்தில் போட்டியிட பல நாடுகள் முன்வந்தாலும் திறைசேரியில் 2.5 ட்ரில்லியன் அமெரிக்க டொலர்களை குவித்து வைத்திருக்கும் சீனாவிற்கே இரும்பு அகழ்விற்கான உரிமம் கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

கனடிய சுரங்கத் தொழில் நிறுவனமான ஹன்டர் டிக்கின்சன் இன் உப தலைவர், றொபேர்ட் சாவர், நியூயோர்க் ரைம்ஸ் பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் பாதுகாப்பு நிலைமை கருதி, நாம் முதலீடு செய்ய விரும்பாத நாடுகளிலும் சீனா முதலீடு செய்ய முன்வருகிறது என்று ஆதங்கப்பட்ட விடயம் கவனிக்கத்தக்கது. அதேவேளை பூமியின் அமைப்பியலை ஆய்வு செய்யும் அமெரிக்க நிறுவனங்களும் பென்டகனும் ஆப்கானின் கனிமவளம் குறித்து பல அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிடுவதை, சீனா பயன்படுத்துவது போல் தெரிகிறது.

ஆகவே கனிமவளப் பசியால், தனது முதலீட்டு ஆக்கிரமிப்புக் கரங்களை உலகெங்கிலும் விரித்து வரும் சீனா, இந்தியாவுடனான வர்த்தக உறவினை வலுப்படுத்த முனைவதில் பல சூட்சுமங்கள் இருக்கின்றன. ஆப்கானிஸ்தானிலிருந்து இரும்புத் தாதினை ஏற்றுமதி செய்யும்வரை இந்தியாவிலிருந்து அதனை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் சீனாவிற்கு உண்டு. இவை தவிர அமெரிக்கா, பிரான்ஸ் நாடுகளுடன் இந்தியா செய்து கொண்ட வர்த்தக உடன்படிக்கைகள், மேற்குலக வலயத்துள் அந்நாட்டினை முடக்கிவிடக் கூடுமென சீனா கவலைப்படுகிறது.

ஆனாலும் அமெரிக்கத் தரப்பிலிருந்து அதியுயர் தொழில் நுட்பத்தையும் நவீன ரக ஆயுதங்களையுமே இந்தியா எதிர்பார்க்கிறது என்கிற விடயத்தை அதிபர் பராக் ஒபாமாவின் 10 பில்லியன் டொலர் ஒப்பந்தங்களினூடாக சீனா புரிந்து கொண்டிருக்கிறது. கடந்த வருடம் நவம்பர் மாதம் 8.58 சதவீதமாகவிருந்த இந்தியாவின் பண வீக்கம், இன்று 7.48 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ள புள்ளி விபரமும் சீனாவின் வங்கிக் கடனுக்கு நம்பகமான உறுதிமொழியை அளித்துள்ளதெனலாம்.

ஐரோப்பிய இந்திய 11 ஆவது உச்சி மாநாடு, சுதந்திர வர்த்தக உடன் பாடுகளிலும் பயங்கரவாத எதிர்ப்புச் செயற்பாடுகளிலும் மட்டுமே கவனம் செலுத்துவதையும் காணலாம். அண்மையில் இந்தியாவிற்கு விஜயம் செய்த ஜீ 20 நாடுகளின் புதிய தலைவரும் பிரெஞ்சு அதிபருமாகிய நிக்கொலாஸ் சாக் கோசி அவர்கள், இரண்டு அணு உலைகளை நிறுவும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட முனைந்துள்ளார். ஒவ்வொன்றும் 1650 ட்தீ மின் உற்பத்தியைக் கொண்ட 6 அணுமின் உலைகளை மகாராஷ்ர மாநிலத்திலுள்ள ஜெய்டப்பூரில் நிறுவிட இரு தரப்பும் இணைந்து திட்டமிட்டுள்ளது.

பிரான்ஸ் அரச நிறுவனமானது அறேவாவும், என்.பீ.சீ.ஐ.எல் எனப்படும் இந்தியா நிறுவனமும் இணைந்து இரண்டு அணுஉலைகளை முதலில் நிர்மாணிக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது குறிப்பிடத்தக்கது. அத்தோடு அடுத்த 15 வருடங்களுள் 90 பில்லியன் டொலர்களை அணு உலை நிர்மாணிப்பிற்கு இந்தியா செலவிட விருப்பதைப் புரிந்து கொண்ட பிரான்ஸும் ரஷ்யாவும் இப்பாரிய சந்தையில் போட்டியிடுகின்றன.

1.1 பில்லியன் சனத் தொகையைக் கொண்ட இந்தியாவின் மின்சாரத் தேவையின் சிறு பகுதியைத் தான், தற்போதுள்ள மின்னணு உலைகள் பூர்த்தி செய்கின்றன. இதில் 14 உலைகள் வர்த்தக ரீதியிலான இயங்கு நிலையிலும் 9 உலைகள் கட்டப்படும் நிலையிலும் இருக்கின்றன. தற்போது 3 சதவீத மின் வழங்கலை கொடுக்கும் அணுசக்தி நிலையங்கள், 2050 ஆண்டளவில் நாட்டின் 25 சதவீத மின்சாரத்தை வழங்குமென இந்தியா நம்பிக்கை கொண்டுள்ளது.

ஆகவே உயர்தொழில் நுட்பம் சார்ந்த பாரிய உபகரண ஒப்பந்தங்களை வளர்ச்சியுள்ள மேற்குலக நாடுகளுடன் மட்டுமே இந்தியா செய்யுமென்பதை சீனா விளங்கிக் கொள்கிறது.

அதேவேளை, மேற்குலகின் நவீன தொழில் நுட்பம் சார்ந்த அறிவியல் வளத்தின் தேவை சீனாவிற்கும் உண்டு என்பதை மறுக்க முடியாது. ஆகவே, சுதந்திர வர்த்தக ஆகவே, சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் மற்றும் கடன் பெறுவதற்காகச் செல்லும் ஐரோப்பிய நாடுகளிடம் சீனா எதை எதிர்பார்க்குமென விளக்கத் தேவையில்லை. இன்று யூரோ நாணயம் புழக்கத்திலுள்ள ஐரோப்பிய நாடுகள் பல பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கித் தவிர்ப்பதைக் காணலாம்.


கிறீஸ் இலிருந்து தொடங்கி, அயர்லாந்துவரை, திறைசேரி வங்குரோத்து நிலையை அடைந்துள்ள இவ்வேளையில் தனது நாட்டின் முறிகளை வாங்குமாறு, போர்த்துக்கல்லின் நிதியமைச்சர் சீனாவிற்குச் சென்றுள்ளார். இவ்வாறு யூரோ வலய நாடுகள், சீனாவிடம் கடன்பட்டு விடுமோ என்கிற அச்சம்,ஜேர்மனிக்கும் பிரான்ஸிற்கும் ஏற்பட்டிருப்பதை, ஐரோப்பிய முறிகளை உருவாக்க வேண்டும் என்கிற முனைப்புகள் சுட்டிக் காட்டுகின்றன.


ஏற்கனவே கிரேக்க தேசத்தின் முறிகளை சீனா வாங்கிக் குவிக்க ஆரம்பித்திருப்பதையிட்டு, ஐரோப்பிய ஒன்றியம் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதேவேளை, 5.1 சதவீதமாக உயர்ந்துள்ள சீனாவின் பண வீக்கமும் 12 விழுக்காடு அதிகரித்துள்ள உணவுப் பொருட்களின் விலையுயர்வும் ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ள சரிவும் சீனாவிற்கு புதிய பொருண்மிய நெருக்கடிகளை உருவாக்குகின்றன.


இந்நிலையில் ஜப்பானிற்கு அடுத்ததாக வளர்ச்சியுறும் நாடான இந்தியாவுடன் வர்த்தக உறவினை பலப்படுத்த சீனா முயல்வதை ஆசிய நாடுகள் உன்னிப்பாக அவதானிக்குமென எதிர்பார்க்கலாம். அதேவேளை, ஜப்பானின் பாரிய கார்ப்பரேட் கம்பனிகள், நாட்டின் வரி விதிப்பினால் அதிருப்தியடைந்த நிலையில் இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். அத்தோடு கொரிய வளைகுடாவில் ஏற்படும் நெருக்கடிகள், அமெரிக்க தென் கொரியா ஜப்பான் உறவில் புதிய படைத்துறை ரீதியிலான நெருக்கத்தை தோற்றுவித்துள்ளது.


ஆகவே, ஆசியாவில் உருவாகும் புதிய பொருளாதார வர்த்தக உறவுகளும் தென் சீனக் கடல் மற்றும் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் ஏற்படும் அமெரிக்கா சார்ந்த படைத்துறை கூட்டணிகளும் புதிய சமநிலையை உருவாக்க முனைவது போல் தெரிகிறது. சீனா இந்திய முரண்பாடுகளை சாதகமாகப் பயன்படுத்தி வரும் இலங்கை போன்ற நாடுகள் இவ்விரு நாடுகளுக்கிடையே தோற்ற முறும் வர்த்தக நலன் சார்ந்த பலமான நெருக்கத்தினால் தனிமைப்படும் வாய்ப்புண்டு. தேசிய இன விடுதலைக்காகப் போராடும் மக்கள் கூட்டம், கவனிக்க வேண்டிய விடயமிது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக