ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரையரங்குகள் இல்லை: 25 திரைப்​ப​டங்​கள் முடங்​கும் அபா​யம்

3 posters

Go down

திரையரங்குகள் இல்லை: 25 திரைப்​ப​டங்​கள் முடங்​கும் அபா​யம் Empty திரையரங்குகள் இல்லை: 25 திரைப்​ப​டங்​கள் முடங்​கும் அபா​யம்

Post by krishnaamma Thu Dec 16, 2010 2:28 pm

சென்னை, டிச.15: தியேட்டர்கள் கிடைக்காததால் 25-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை திரையிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அரசியல் பின்னணி உள்ளவர்கள் விநியோகஸ்தர்களாக மாறியது, அதைத் தொடர்ந்து அவர்கள் சினிமா தயாரிப்புகளிலும் இறங்கியதால் சிறு, குறு தயாரிப்பாளர்கள் தங்களின் திரைப்படங்களை வெளியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது தெரிந்த விஷயம்தான்.

இதுதவிர மீடியாக்களின் ஆதரவு உள்ள படங்களை வாங்குவதற்கு திரையரங்க அதிபர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதுவும் சிறு தயாரிப்பாளர்களை பாதித்துள்ளது.

கடந்த ஐந்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு 150-க்கும் மேற்பட்ட படங்கள் இந்த ஆண்டு வெளியாகியுள்ளன. இதில் மீடியாக்களின் ஆதரவு இல்லாததால், தரமாக இருந்தும், சில குறைந்த பட்ஜெட் படங்கள் ஓரிரு நாளில் திரையரங்கத்தில் இருந்து தூக்கப்பட்டுள்ளன. தமிழ் சினிமாவின் நம்பகமான படைப்பாளிகளின் படங்களும் இதில் அடங்குவதுதான் சோகம்.

மானியம் கிடைக்குமா? குறைந்தபட்சம் 8, அதிகபட்சமாக 25 என பிரிண்டுகள் போடப்பட்டு வெளியிடப்பட்டிருந்தால் அவை சிறிய தயாரிப்புப் படங்களாகக் கருதப்படும். இந்தப் படங்களுக்கு | 7 லட்சம் அரசு மானியம் வழங்கப்படுகிறது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக சிறிய தயாரிப்பு படங்களுக்கு இந்த தொகை வழங்கப்படவில்லை. ஆனாலும், கிடைத்துவிடும் என்கிற நம்பிக்கையில் தயாரிப்பாளர்கள் உள்ளனர்.

இதனால் டிசம்பர் முடிவதற்குள் இந்த ஆண்டு மானியப் பட்டியலில் தங்களது படங்களைச் சேர்க்க தயாரிப்பாளர்கள் முனைப்புக் காட்டி வருகின்றனர். அப்போதுதான், நடப்பு ஆண்டுக்கான மானியத் தொகை கிடைக்கும்.

ஜனவரி 1-ம் தேதி படத்தை வெளியிட்டாலும் அது அடுத்த ஆண்டுக்கான மானியப் பட்டியலில் சேர்ந்து விடும்.

சன் பிக்சர்ஸின் "எந்திரன்' படம் சுமார் 400-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் திரையிடப்பட்டது. அப்போது, சிறிய தயாரிப்புப் படங்களை வெளியிட முடியாத நிலை உருவானது. அதற்கு பின் வந்த காலங்களில் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட "மைனா', தயாநிதி அழகிரி வெளியிட்ட "வ குவாட்டர் கட்டிங்', "ரத்த சரித்திரம்' ஆகிய படங்கள் திரையரங்குகளை ஆக்கிரமித்துக் கொண்டன.

இதனால் 25-க்கும் மேற்பட்ட படங்களை ரிலீஸ் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

பொங்கல் பண்டிகைக்கு சன் பிக்சர்ஸின் "ஆடுகளம்' உள்ளிட்ட பெரிய படங்கள் திரைக்கு வர காத்திருப்பதாலும், அதைத் தொடர்ந்து உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவுள்ளதாலும் இந்த ஆண்டிலேயே படங்களை வெளியிட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டனர்.

இதன் விளைவாக "சித்து ப்ளஸ் 2', "விருதகிரி', "மந்திரப்புன்னகை' உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகி உள்ளன. கடந்த 20 நாள்களில் இந்த 10 படங்கள் திரைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், சசிகுமாரின் இயக்கத்தில் உருவாகியுள்ள "ஈசன்', கமல்ஹாசன் நடித்துள்ள "மன்மதன் அம்பு', "பவானி', "நெல்லு', 'அரிது அரிது' உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட படங்கள் அடுத்த சில நாள்களில் வெளியாகும் எனத் தெரிகிறது.

"ஈசன்', "மன்மதன் அம்பு' ஆகிய பெரிய படங்கள் திரைக்கு வரவிருப்பதால், இப்போதும் சிறிய படங்களுக்கு தியேட்டர்கள் கிடைக்காத நிலை உருவாகி உள்ளது. இருந்தும் குறைந்த எண்ணிகையில் தியேட்டர்கள் கிடைத்தாலே போதும் என படத்தை வெளியிட தயாரிப்பாளர்கள் முன் வந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தவிக்குது "தா'... "தா' என்ற படத்துக்கு தியேட்டர்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதால், அதை மறுவெளியீடு செய்ய அதன் தயாரிப்பாளர்கள் முடிவெடுத்துள்ளனர். பத்திரிகைகளில் விமர்சனம் வந்த நிலையில் கடந்த இரு நாள்களுக்கு முன்பே பல தியேட்டர்களில் படம் நிறுத்தப்பட்டுள்ளது.

நவீன கேமரா தொழில்நுட்பத்தில் தயாரான "சனிக்கிழமை சாயங்காலம் 5 மணி', விஜயகாந்தின் "விருதகிரி' ஆகிய படங்கள் குறைந்த எண்ணிக்கையிலான தியேட்டர்களிலேயே ரிலீஸ் செய்யப்பட்டுள்ளன.

""20 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் இருக்கிறேன். எத்தனையோ படங்களுக்கு பண உதவி செய்து வெளியீட்டுக்கு உதவியிருக்கிறேன். ஆனால் இப்போது ஒரு படம் எடுத்து விட்டு அதை வெளியிட முடியாமல் காத்திருக்கிறேன். தியேட்டர்கள் குறைந்த எண்ணிக்கையிலே கிடைத்தன. கொஞ்சம் அதிக எண்ணிக்கையில் தியேட்டர் கிடைத்த பின் வெளியிடலாம் என காத்திருந்ததால் கையில் இருந்த தியேட்டர்களும் போய் விட்டன. இந்த ஆண்டுக்குள் வெளியிட வேண்டுமென நினைக்கிறேன். ஆனால் இன்னும் சில நாள்களில் பெரிய படங்கள் வெளியாக உள்ளதால், என்ன செய்வதென்று தெரியவில்லை'' என்று பிரபல சினிமா பைனான்சியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

திரையரங்குகள் இல்லை: 25 திரைப்​ப​டங்​கள் முடங்​கும் அபா​யம் Empty Re: திரையரங்குகள் இல்லை: 25 திரைப்​ப​டங்​கள் முடங்​கும் அபா​யம்

Post by krishnaamma Thu Dec 16, 2010 2:38 pm

டிவி ல போட வேண்டியது தான். அது தான் இப்ப வெல்லாம்

Order your பிலிம் நு வருதே!


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

திரையரங்குகள் இல்லை: 25 திரைப்​ப​டங்​கள் முடங்​கும் அபா​யம் Empty Re: திரையரங்குகள் இல்லை: 25 திரைப்​ப​டங்​கள் முடங்​கும் அபா​யம்

Post by அன்பு தளபதி Thu Dec 16, 2010 3:10 pm

அடுத்த படியா கேடி சகோதரர்கள் (கே-கலாநிதி, டி-தயாநிதி)மற்றும் தளபதி மகன் அஞ்சாநெஞ்சன் அருமை புதல்வன் இவங்களே திரையரங்குகளை கட்டி தங்கள் படத்தை வெளியிடுவார்கள் போஸ்டர் ஓட்ற வேலைகூட சொந்தங்களை வச்சி செஞ்சி சொத்து சேர்ப்பாங்க பாருங்க
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

திரையரங்குகள் இல்லை: 25 திரைப்​ப​டங்​கள் முடங்​கும் அபா​யம் Empty Re: திரையரங்குகள் இல்லை: 25 திரைப்​ப​டங்​கள் முடங்​கும் அபா​யம்

Post by krishnaamma Sat Dec 18, 2010 1:50 pm

maniajith007 wrote:அடுத்த படியா கேடி சகோதரர்கள் (கே-கலாநிதி, டி-தயாநிதி)மற்றும் தளபதி மகன் அஞ்சாநெஞ்சன் அருமை புதல்வன் இவங்களே திரையரங்குகளை கட்டி தங்கள் படத்தை வெளியிடுவார்கள்
போஸ்டர் ஓட்ற வேலைகூட சொந்தங்களை வச்சி செஞ்சி சொத்து சேர்ப்பாங்க பாருங்க

அதுக்கெல்லாம் தான் free யாக கழக கண்மணிகள் இருக்கங்களே? ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

திரையரங்குகள் இல்லை: 25 திரைப்​ப​டங்​கள் முடங்​கும் அபா​யம் Empty Re: திரையரங்குகள் இல்லை: 25 திரைப்​ப​டங்​கள் முடங்​கும் அபா​யம்

Post by balakarthik Sat Dec 18, 2010 1:59 pm

அப்போ என்னமாதிரி நெட்டுல பாக்குற ஆளுங்களுக்கு கொண்டாட்டமுனு சொல்லுங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் திரையரங்குகள் இல்லை: 25 திரைப்​ப​டங்​கள் முடங்​கும் அபா​யம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

திரையரங்குகள் இல்லை: 25 திரைப்​ப​டங்​கள் முடங்​கும் அபா​யம் Empty Re: திரையரங்குகள் இல்லை: 25 திரைப்​ப​டங்​கள் முடங்​கும் அபா​யம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum