ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 10:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:05 pm

» கருத்துப்படம் 09/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:54 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Yesterday at 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Yesterday at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Yesterday at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Yesterday at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Yesterday at 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Sep 08, 2024 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈழ அன்னையின் சீற்றம் (இது கனவா?)

4 posters

Go down

ஈழ அன்னையின் சீற்றம் (இது கனவா?) Empty ஈழ அன்னையின் சீற்றம் (இது கனவா?)

Post by kirikasan Mon Dec 13, 2010 6:31 pm

இதன்கதை சுருக்கம்.

காலையில் கண் விழித்து வெளியே வருகிறேன். தமிழீழ அன்னை காலை வேளையில்
மௌனமாக துயரத்தை தாங்காமல் நடனமாடிக் கொண்டிருக்கிறாள். அப்போது மக்களின்
மரண ஓலம் கேட்கிறது. அன்னையின் நடனம் ஆவேசமாகிறது. கோபம் மிகுதியில் ”பொறுத்து
போதும் முன்னால் வா”, என கூப்பிடுகிறாள். ஒரு மன்னன் தலைவன் வெளியே வருகிறான்.
”நேர்மை காத்தது போதும். பகையை அழித்துவிடு” என்கிறாள். போர் எழுகிறது. என்னைப்பார்த்து
ஈழம் காக்க வேண்டும். கண் விழித்து எழு என்கிறாள். ( மறைந்த கருத்து இதுகனவா?)

கிரிகாசன்


என்னதொரு சத்தம் கேட்டுக் கண்விழிக்கின்றேன்
இதயமது படபடக்க துயில் கலைகின்றேன்
பின்னிலவு சாளரத்தின் உள்ளே வந்துமே
பொன்னொளியை என்னருகே பிய்த்து வைத்தது
வெண்ணொளியில் பெண்ணொருத்தி வெளியினிலாட
வேல்விழியாள் அழகுரூப சுந்தரிதன்னை
தண்ணொளியில் துள்ளியாடும் தோற்றமும்கண்டே
தங்கமகள் யாரறியத் தாவி எழுந்தேன்

எட்டிநடைபோட்டுமுற்றம் ஏகியபோது
இளையவளோ கண்டுமௌனம் இழையவிருந்தாள்
தட்டியொரு தாளமிட்டு தென்றல் இசைக்க
தளிர்மலராள் கொடியசையும் தன்மையிலாடும்
வட்டமெனும் தோகைவிரித்தாடு மயிலாய்
வான்நிலவில் மின்னும் எழில் தன்னில் மறந்தேன்
கிட்டவந்து ஆடுமவள் கோலம் காணவே
கேள்வியின்றி யாரிவளோ காண விழைந்தேன்

சுற்றி யெங்கும் பூமலர்கள் சுந்தரவாசம்
சுழலும்விரி தென்றல்கொண்டு சென்றிடும் வேகம்
சற்று ஒளி சிதறக் கீழை சரிவெடு வானில்
சார்ந்துறைந்த நீள்படர்வெண் முகிலதின்கோலம்
வெற்று நீலக்கருமையூடு விரைகின்ற பறவை
விடியல்வேளை கண்டுமகிழ் வானது பொங்க
பொற்சிலையாள் பெண்ணிவளோ பொங்கிஆடிடும்
புதுமையேது என்றவளைப் பேசவிழைந்தேன்

தேன் மொழியாம் தேகமிசை தேர்ந்தவள் காணும்
தேர் அசையும் இடையில்வளை யாபதிபூண்டும்
நான்அகங்கள் நூறும் இன்னும்நாற்புற நூறும்
நல்மணிமே கலையுடனே நங்கையில்காணும்
பொன்னணிகள் கண்டிவளோ பூந்தமிழ்தேகம்
பொலிந்தவளாம் என்னபெயர் என்று வியந்தேன்
பின்னும் சடை கன்னங்கரு கூந்தல் விரித்த
பெண்ணவளோ அன்னைதமிழ் ஈழம் நானென்றாள்

வற்றிவாடிக் கண்கள் நீரும் வழிந்ததுபோலும்
வெண்ணிலாவை ஒத்தமுகம் இருண்டதுபோலும்
சுற்றி நின்ற தேகம் நோகச் செய்ததுபோலும்
சுந்தரியோ வாடி ஏதோ சொல்ல விழைந்தாள்
கற்றபாடம் போதும்அன்பு கண்ணிய மெல்லாம்
கடையிலென்னவிலை என்றோதும் இவ்புவிமீதில்
பெற்றபிள்ளை தாயை அப்பன் விட்டொழிந்தோமே
பேசரிய பொற்குலத்தைப் பாழடித்தோமே

நேர்மை பார்த்த நெஞ்சைக்கீறி நஞ்சுபோடவும்
நினைவிழந்து துடிதுடிக்க படமெடுக்கவும்
கூர்மை கொண்டகத்தியாலே குத்திஆடியும்
கொல்பவரைப் பாவமென்று கொல்ல அஞ்சினோம்
பார்வைதன்னில் குருடரென்று பாவிஎண்ணியே
பாலகரைத் தானும்விட்டு வைக்கவில்லையே
வார்த்தை பொங்க துடிதுடித்து வஞ்சியானவள்
வந்தகீத போர்ப்பறைக்குத் துள்ளிஆடினாள்


பகுதி 2
(தந்தன தானன தந்தன தானன
தந்தன தானனனா - தன)

கொட்டிய மேளமும் சத்தமெழுந்திட
கோதைசுழன் றெழவே - ஒரு
வட்டம டித்துயிர் பட்டகொடுந்துயர்
வாடித் துடித்தலற...
தட்டிந டஞ்செயும் பொற்திரு பாதங்கள்
தாங்கி அனலெரிய - அதில்
சொட்டிச் சிவப்பென ரத்தங் கசிந்திட
சுற்றிநடம் பயின்றாள்...

விழிகள் தீயிட மொழிசொல்தேவதை
விரைந்து நடமிடவே - பெரு
ஒளிகள் பொறிபடநிலமும் தடதட
வெனவெ பொடியெழவே...
மழைகொள் இடியென மனதும் துடித்திட
மங்கை குதித்தனள்காண் - கால்
தளதள வென்று சதங்கை கலீரிட
தாவி நடம் பயின்றாள்...

வீறொடு கோபமும் வீரமெ ழுந்திட
வேகச்சுழல் புயலாய் - பெரும்
நீறுஎ ரித்திட நேரும் விழிக்கனல்
நிலையொடு கொடும்பார்வை...
ஆறுகு தித்திடும் ஆகமணிக்கொடி
ஆடிச் சினத்திடவே - அவள்
ஊறு விளைத்திட சீறும்புலிக்கெனும்
கோபமெடுத்திருந்தாள் ...

சித்தம் கொதித்தவள் செய்யு நடந்தனை
சுற்றி நின் றாடுகையில் - குரல்
கத்தி அழிந்துமே செத்திடு மோலங்கள்
காதினில் கேட்டதடா..
ரத்த வெறியெடு தீயகொடுஞ்செயல்
புத்தரைப் போற்றுபவர் - உடல்
குத்திஅழித்திடக் கொன்றிடு மெம்மவர்
கூக்குரல் நெடிதெழுவே

வைத்தநெ ருப்பினில் வெந்த இரும்பினை
வார்த்தது காதிலென - நெடும்
கத்தி எடுத்துக் கிழித்துபோல் நெஞ்சு
பட்ட பெரும்துயரோ..
பித்துப் பிடித்தவள் போல நின்றாடிட
ரத்தினச் செவ்விழியாள் - அவள்
வைத்தஅடி தனை வைத்தபடி ஒரு
கற்சிலையாய் உறைந்தாள்

சுற்றிஎ ழும்பிய தூசிஅடங்கிட
முத்த தமிழீழமகள் - அவள்
முற்றிப் பெருத்தது இத்தருணம் இனி
முன்னே எழுந்திடென்றாள்...
சற்றுத் தயங்கிட என்னையழைத்தனள்
என்று மயங்கிவிட - ஒளி
சுற்றிஅடர் பெருஞ்சூரியக் குஞ்செனச்
சோதி விரிந்ததடா..

இத்தனைகால மிழைத்த கொடுஞ்செயல்
அத்தனையும் பொறுத்தேன் - குறை
செத்தவனாய்க் கிடந்தேன் தமிழா இனி
விட்டு எழுந்துவிடு...
புத்தனின் வம்சம் புரிந்திடுமத்தனை
குற்றம் கொலைநிறுத்த - அவை
சத்தியம் நீதி அறம் தனைமீளவும்
சற்று எழுப்பிவிடு..

கெட்டது பூமியும் கேடுபெருத்தது
கள்ளரும் காடையரும் - புவி
விட்டதுபோதும் விரைந்திடு எம்மினம்
வேகுது வெந்தணலில்...
கட்டிஉணர்வினை மற்ற இனம்தனை
காத்து இருந்ததெல்லாம் . எமை
வெட்டிஅழித்திட பக்கதுணை இனி
வேண்டாம்விட்டுவிடு...

வல்லவன் மட்டு மெனப்புவி கொள்வது
வைத்த கொடும்வழக்கு - ஒரு
நல்லவ னாகி நலிந்து சரிந்தது
நம்பிழை தான்உணரு..
கொல்லுமிக் கூட்ட மழித்திடு கூடிடு
சொல்லு தமிழ்மகற்கு - நீ
இல்லையெனும்குறை தீர எழுந்திடு
ஏறிடுஆதவனே..

என்ன வியப்பொரு கண்ணைப் பறித்திடு
மின்னல் ஒளிக்குழம்பு - பெரு
மன்னன் அவன் ஒளியூடு எழுந்தொரு
மாமலையாய் நடந்தான்..
பின்னை இருந்ததுபோதும் இனிப்பகை
வென்று முடித்து விடு - உன
தன்னை தமிழ் இவள்மண்ணின் உரித்திவள்
ஆணையிட்டேன் தொடர்வாய்..

சொன்ன கணத்தினில் மன்னன்கரம்தனில்
சின்னது விரலசைய - உடன்
மின்னிவெடித்தொரு மேகமுடைந்தது
போலமுழக்கமுடன்..
என்னவியப்பது எழுந்துவிரைந்தது
இன்னொரு போர்செறிவு - படை
பின்னிஉடைத்தது பகைவர்நிலத்தினில்
புகைய பெரும் நெருப்பு...

வண்ண மத்தாப்புகள் வானில் பொழிந்தன
வாரி மழையெனவே - பெரும்
விண்ணு மதிர்ந்திட வேகமெடுத்தொரு
போரும் நடந்ததுவே..
கண்ணை விழித்தவள் என்னைக் குறித்துமே
கனவினை விட்டெழுந்து - எம்
மண்ணினை மக்களை காத்திடு என்றனள்
மங்கை, விழித்தெழுந்தேன்..


Last edited by kirikasan on Sat Dec 18, 2010 3:49 pm; edited 5 times in total
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

ஈழ அன்னையின் சீற்றம் (இது கனவா?) Empty Re: ஈழ அன்னையின் சீற்றம் (இது கனவா?)

Post by ANTHAPPAARVAI Mon Dec 13, 2010 6:56 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஈழ அன்னையின் சீற்றம் (இது கனவா?) Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

ஈழ அன்னையின் சீற்றம் (இது கனவா?) Empty Re: ஈழ அன்னையின் சீற்றம் (இது கனவா?)

Post by அன்பு தளபதி Mon Dec 13, 2010 8:24 pm

சந்தம் நிறைந்த அழகு கவிதை சொற்களில் படரும் கோபம் அழகு
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

ஈழ அன்னையின் சீற்றம் (இது கனவா?) Empty Re: ஈழ அன்னையின் சீற்றம் (இது கனவா?)

Post by kirikasan Mon Dec 13, 2010 8:37 pm

நன்றி உறவுகளே!

இன்று பலர்மனதில் காணும் கனவை நானும் காணுகிறேன்! அது கனவா தெரியவில்லை!
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

ஈழ அன்னையின் சீற்றம் (இது கனவா?) Empty Re: ஈழ அன்னையின் சீற்றம் (இது கனவா?)

Post by Thanjaavooraan Wed Dec 15, 2010 1:32 pm

கொட்டிய மேளமும் சத்தமெழுந்திட
கோதைசுழன் றெழவே - ஒரு
வட்டம டித்துயிர் பட்டகொடுந்துயர்
வாடித் துடித்தலற...
தட்டிந டஞ்செயும் பொற்திரு பாதங்கள்
தாங்கி அனலெரிய - அதில்
சொட்டிச் சிவப்பென ரத்தங் கசிந்திட
சுற்றிநடம் பயின்றாள்...


அருமையான சந்தம்....

எழுந்திடும் போர்முரசு
உங்கள்
எழுத்தினில் ஒலிக்கிறது
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

Back to top Go down

ஈழ அன்னையின் சீற்றம் (இது கனவா?) Empty Re: ஈழ அன்னையின் சீற்றம் (இது கனவா?)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum