புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மக்கள் வரிப்பணம் பல நூறு கோடி ரூபாய் பாழ் : மெத்தனமே காரணம் Poll_c10மக்கள் வரிப்பணம் பல நூறு கோடி ரூபாய் பாழ் : மெத்தனமே காரணம் Poll_m10மக்கள் வரிப்பணம் பல நூறு கோடி ரூபாய் பாழ் : மெத்தனமே காரணம் Poll_c10 
21 Posts - 70%
heezulia

6 Posts - 20%
viyasan

1 Post - 3%
mohamed nizamudeen

வேல்முருகன் காசி

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மக்கள் வரிப்பணம் பல நூறு கோடி ரூபாய் பாழ் : மெத்தனமே காரணம் Poll_c10மக்கள் வரிப்பணம் பல நூறு கோடி ரூபாய் பாழ் : மெத்தனமே காரணம் Poll_m10மக்கள் வரிப்பணம் பல நூறு கோடி ரூபாய் பாழ் : மெத்தனமே காரணம் Poll_c10 
213 Posts - 42%

203 Posts - 40%

26 Posts - 5%
Dr.S.Soundarapandian
மக்கள் வரிப்பணம் பல நூறு கோடி ரூபாய் பாழ் : மெத்தனமே காரணம் Poll_c10மக்கள் வரிப்பணம் பல நூறு கோடி ரூபாய் பாழ் : மெத்தனமே காரணம் Poll_m10மக்கள் வரிப்பணம் பல நூறு கோடி ரூபாய் பாழ் : மெத்தனமே காரணம் Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu
மக்கள் வரிப்பணம் பல நூறு கோடி ரூபாய் பாழ் : மெத்தனமே காரணம் Poll_c10மக்கள் வரிப்பணம் பல நூறு கோடி ரூபாய் பாழ் : மெத்தனமே காரணம் Poll_m10மக்கள் வரிப்பணம் பல நூறு கோடி ரூபாய் பாழ் : மெத்தனமே காரணம் Poll_c10 
8 Posts - 2%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மக்கள் வரிப்பணம் பல நூறு கோடி ரூபாய் பாழ் : மெத்தனமே காரணம்

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Mon Dec 13, 2010 11:24 am

குடிநீருக்காக சென்னையில் மக்கள்பட்ட கஷ்டம், கொஞ்சநஞ்சமல்ல. நகரின் குடிநீர் பற்றாக்குறையை போக்க, ஒரே வழி பல ஆயிரம் கோடி ரூபாயை கொட்டி, எங்காவது வெகு தூரத்தில் இருந்தாவது தண்ணீரை கொண்டு வர வேண்டுமென திட்டமிட்டது அரசு. அந்த திட்டத்தில் உருவானது தான், தெலுங்கு கங்கை, வீராணம் குடிநீர், கடல் நீரை குடிநீராக்கும் திட்டங்கள்.

இத்திட்டங்களுக்கு அரசு, பல கோடி ரூபாயை செலவு செய்துள்ளது. ஆனால், அதன் மூலம் பெறப்படும் தண்ணீரை முறையாக பயன்படுத்துகிறதா என்றால், இல்லை என்றே பதில் வருகிறது.சென்னையில் இருந்து 400 கி.மீ., தூரத்தில், ஆந்திராவில் உள்ள கிருஷ்ணா நதியில் இருந்து, திறந்த கால்வாய் மூலம் சென்னைக்கு குடிநீர் கொண்டு வரும் திட்டம் தான், தெலுங்கு கங்கை கால்வாய் திட்டம்.இந்த திட்டப்படி, மழை காலத்திலேயே தெலுங்கு கங்கை திட்டத்தில் இருந்து, சென்னைக்கு அதிகளவில் கிருஷ்ணா நீர் பெறப்படுவதால், மழைநீரையும், கிருஷ்ணா நீரையும் சேமித்து வைக்க முடியாமல், ஆண்டுக்கு பல டி.எம்.சி., நீர் கடலில் கலந்து வீணாகிறது.சென்னைக்கான குடிநீர் தேவை, ஆண்டுக்கு 15 டி.எம்.சி., பருவமழையின் கிடைக்கும் மழைநீர் பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம், போரூர் உள்ளிட்ட ஏரிகளில் சேமிக்கப்பட்டு, பயன்படுத்தப்படுகிறது.சென்னை அக்டோபர், நவம்பர், டிசம்பரில் பருவமழையை பெறுகிறது.

இந்த மாதங்களில் சென்னைக்கு குடிநீர் வழங்கும் அனைத்து ஏரிகளும் நிரம்பி, வழிகின்றன. உபரி நீர் கால்வாய்கள் வழியாக கடலுக்கு சென்று விடுகிறது.தெலுங்கு கங்கை திட்டத்தின் மூலம், ஆண்டுக்கு 12 டி.எம்.சி., கிருஷ்ணா நீர் பெறப்படுகிறது. இதற்கான அட்டவணைப்படி, ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலகட்டத்தில் நான்கு டி.எம்.சி., நீரும், ஜூலை முதல் அக்டோபர் வரையிலான கால கட்டத்தில் எட்டு டி.எம்.சி., நீரும் கிடைக்கிறது.கிருஷ்ணா நீர் அதிகபட்சமாக நீர் பெறப்படும் அக்டோபரில், பருவமழை பெய்வதால், சென்னைக்கு குடிநீர் வழங்கும் நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பியிருக்கும். இந்நிலையில், அதே காலகட்டத்தில் எட்டு டி.எம்.சி., கிருஷ்ணா நீரையும் பெறுவதால், அது பயனற்றதாகி விடுகிறது.

அக்டோபரில் இருந்து சென்னைக்கு வரும் கிருஷ்ணா நீர், பூண்டி ஏரியில் சேமிக்கப்படுகிறது. பூண்டி ஏரி நிரம்பிய பின், அங்கிருந்து கால்வாய்கள் மூலமாக, செம்பரம்பாக்கம் மற்றும் செங்குன்றம் ஏரிகளுக்கு, கிருஷ்ணா நீர் அனுப்பப்படுகிறது. ஏற்கனவே, பருவமழை காரணமாக நிரம்பியிருக்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் ஏரியில் கிருஷ்ணா நீரை சேமிக்க முடிவதில்லை.கடந்தாண்டு இதே காலகட்டத்தில், நான்கு டி.எம்.சி., கிருஷ்ணா நீர் பூண்டிக்கு வந்து சேர்ந்தது. ஆனால், "நிஷா' புயல் காரணமாக பருவமழை தீவிரமடைந்ததால், அதிகமான மழை பெய்தது. இதனால், சேமித்து வைக்கப்பட்டிருந்த கிருஷ்ணா நீருடன், மழைநீரும் சேர்ந்து வெளியேறி, வீணாக கடலில் கலந்தது. இந்த வகையில், கடந்த ஆண்டு மட்டும் 40 டி.எம்.சி., கிருஷ்ணா மற்றும் மழைநீரை பயன்படுத்த முடியாமல் போய் விட்டது.

இந்த ஆண்டும், கிருஷ்ணா நீர் சேமித்து வைக்கப்பட்ட செம்பரம்பாக்கம், பூண்டி, புழல் ஏரிகள் திறந்து விடப்பட்டுள்ளன. தண்ணீர் வீணாக கடலில் போய் கலக்கிறது. இவ்வாறு ஒவ்வொரு ஆண்டும், கிருஷ்ணா நீர் வீணாவதற்கு, சென்னைக்கு பருவமழை கிடைக்கும் காலங்களிலேயே கிருஷ்ணா நீரையும் பெறுவது தான் காரணம்.மழை காலத்திலேயே கிருஷ்ணா நீர் கிடைப்பதால், கிடைக்கும் நீரை சேமிக்க முடிவதில்லை. மேலும், ஒப்பந்தப்படி பெற வேண்டிய 12 டி.எம்.சி., நீரையும் முழுவதுமாக பெற முடிவதில்லை. எனவே, சென்னைக்கு கிருஷ்ணா நீரை பெறும் கால அட்டவணையில், மாற்றங்களை செய்ய வேண்டியது அவசியம்.தற்போது, முதற்கட்டமாக ஜனவரி முதல் ஏப்ரல் வரையில் நான்கு டி.எம்.சி., நீர், ஜூலை முதல் அக்டோபர் வரையில் எட்டு டி.எம்.சி., நீர் என்ற அட்டவணையை மாற்றி, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை கிருஷ்ணா நீரை பெற வேண்டும்.தடுப்பணைகள் மூலம் மழைநீரை சேமிக்கலாம்

சென்னையை சுற்றி ஓடும் அடையாறு, பாலாறு, ஆரணி, கொற்றலை மற்றும் கூவம் ஆறுகளில் தடுப்பணைகள் அமைப்பதன் மூலம், ஆண்டுக்கு 50 டி.எம்.சி., நீரை சேமிக்க முடியுமென கணக்கிடப்பட்டுள்ளது.

அடையாறு: ஒவ்வொரு மழை காலத்திலும், அடையாறு ஆற்றில் மழைநீர் பெருக்கெடுத்தோடி, வீணாக கடலில் கலக்கிறது. மேலும், செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பும் போது வெளியேற்றப்படும் நீரும், இந்த ஆற்றின் வழியாக ஓடி கடலை அடைகிறது.அடையாறு ஆற்றில் நந்தம்பாக்கம், மணப் பாக்கத்தில் தடுப்பணைகள் கட்டப்பட்டன. விமான நிலைய விரிவாக்கத்திற்காக மணப்பாக்கம் தடுப்பணை அகற்றப்பட்டது. அடுத்த கட்டமாக அனகாபுத்தூர், கவுல்பஜார் ஆகிய இடங்களில் தடுப்பணைகள் கட்ட வேண்டும். இத்திட்டத்தை நிறைவேற்றினால், கூடுதலாக மழைநீரை சேமிக்க முடியும்.

பாலாறு: மழை காலத்தில் மட்டுமே நீரோட்டம் காணப்படும் பாலாறு ஆற்றில், அங்குள்ள மணல் படுகைகள் மழைநீரை சார்ஜ் செய்து வைத்து கொண்டு, கோடை காலங்களில் வெளிப்படுத்துகின்றன. இதனால், பாலாறு ஆற்றில் இருந்து, ஆண்டு முழுவதும் குடிநீர் கிடைக்கிறது.கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர், பாலாறு ஆற்றின் குறுக்கே கட்டப்படுவதாக இருந்த தடுப்பணைகள் திட்டம் செயல்படுத்தப்படவில்லை. இதனால், பாலாறு ஆற்றில் ஓடும் மழைநீர் கடலில் கலந்து வீணாகிறது. பழைய சீவரம், வெண்குடி உள்ளிட்ட பல இடங்களில் பாலாறு ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டப்பட்டால், பல டி.எம்.சி., நீரை சேமிக்க முடியும்.

ஆரணி, கொற்றலை: கடந்த 2005ம் ஆண்டு, மழைக்காலத்தில் 18 நாட்கள் அணை திறக்கப்பட்டு, கொற்றலை ஆறு வழியாக உபரி நீர் வெளியேற்றப்பட்டது. கிட்டத்தட்ட, 8,351 மில்லியன் கன அடி நீர் கடலுக்கு சென்று வீணானது. அதே ஆண்டில் ஆரணி ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.இந்த நீரும் கடலுக்கு தான் சென்றது. ஆரணி ஆற்றின் குறுக்கே, ஊத்துக்கோட்டை - பெரியபாளையம் இடையில் தடுப்பணைகள் அமைத்தால், மழைநீரை சேமிக்க முடியும்.

கூவம்: பாலாறு ஆற்றில் இருந்து வெளியேறும் உபரி நீர் கேசாவரம் என்ற இடத்தில் பிரியும் கூவம், கொற்றலை ஆறுகள் மூலம் கடலில் கலக்கிறது. பேரம்பாக்கம், கடம்பத்தூர், ஜமீன் கொரட்டூர், பருத்திப்பட்டு, திருவொற்றியூர் வழியாக கூவம் ஆறு, சென்னை நகருக்குள் புகுந்து வங்க கடலில் கலக்கிறது. இந்த இடங்களில் தடுப்பணைகள் அமைப்பதன் மூலம், கடலில் கலந்து வீணாகும் ஏராளமான மழைநீரை சேமிக்கவும், நிலத்தடி நீர் மட்டத்தை பாதுகாக்கவும் முடியும்.

சென்னை ஏரிகள் தூர்வாரப்படுமா?சென்னைக்கு ஆண்டுதோறும் 30 டி.எம்.சி., அளவிற்கு மழை கிடைக்கிறது. இதில், 15 டி.எம்.சி., என்ற அளவில் தான் பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம், போரூர் ஆகிய ஏரிகளில் நீர் சேமிக்க முடிகிறது. கூடுதலாக கிடைக்கும் மழைநீர் மற்றும் கிருஷ்ணா நீரை சேமிக்க வழியில்லை.இந்த ஏரிகளை ஒவ்வொரு ஆண்டும், தூர்வாரி, ஆழப்படுத்தி, பராமரித்தால் ஆண்டுக்கு 20 டி.எம்.சி., நீரை சேமிக்க முடியும். ஆனால், சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளை தூர்வாரி, பராமரிப்பது என்பதை பொதுப்பணித் துறை ஒட்டு மொத்தமாக மறந்து விட்டது.குறிப்பாக, கிருஷ்ணா நீர் வந்து சேரும் பூண்டி ஏரியின் பராமரிப்பு குறைவாகவே உள்ளது. இந்த ஏரியில் பராமரிப்பு பணி நடந்து, பல ஆண்டுகளாகி விட்டதால், அங்குள்ள ஷட்டர்கள் பழுதாகியுள்ளன. இதனால், அவசர காலங்களில் நீர் திறந்து விடுவதில் சிக்கல் ஏற்படுகிறது.

கண்டு கொள்ளாத அதிகாரிகள், அரசியல்வாதிகள் :அளவுக்கு அதிகமாக தண்ணீர் கிடைக்கும் போதும், அதை சேமிக்க எந்த ஏற்பாட்டையும் செய்யாமல் அதிகாரிகளும், ஆட்சி செய்யும் அரசியல்வாதிகளும் மெத்தனப்போக்கையே கையாண்டு வருகின்றனர்.தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டால், அப்போது மட்டும் ஏதாவது தற்காலிக மாற்று ஏற்பாடுகளை செய்து நிலையை சமாளிக்கின்றனர். எதிர்கால சிந்தனையுடன், நீண்ட கால திட்டம் எதையும் தீட்டாததால், ஒவ்வொரு ஆண்டும் மக்களின் வரிப்பணம் பல கோடி ரூபாய் வீணாகிறது.இதெற்கெல்லாம் தீர்வு வருமா என, ஏங்குவதை தவிர மக்களுக்கு வேறு வழியில்லை.

வேண்டாம் என மறுக்கும் அவலம் : ஒவ்வொரு ஆண்டும், "இப்போது எங்களுக்கு கிருஷ்ணா நீர் தேவையில்லை. கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நீரை திறந்து விட வேண்டாம்' என, அதிகாரிகள் கேட்டு கொள்ளும் சூழ்நிலையில் உருவாகிறது. இதனால், சென்னைக்கு கிடைக்க வேண்டிய கிருஷ்ணா நீர் அளவை முழுமையாக பெற முடியாமல் போகிறது.

புதிய ஏரிகளை உருவாக்க வேண்டும் :தெலுங்கு கங்கா திட்டத்தின் கீழ், போத்திரெட்டிபாடு முதல் கடப்பா அருகே உள்ள சோமசீலா வரையில், கால்வாயின் வழிநெடுகிலும் மூன்று பிரமாண்டமான செயற்கை ஏரிகள் அமைக்கப்பட்டுள்ளன. வெளுகோடு என்ற இடத்தில், 17 டி.எம்.சி., கொள்ளளவு கொண்ட, ஒரு செயற்கை ஏரி உருவாக்கப்பட்டுள்ளது.இதனால், மழை காலத்தில், கிருஷ்ணா நதியில் இருந்து கிடைக்கும் உபரி நீர் வீணாகாமல் சேமிக்கப்படுகிறது. ஆனால், தமிழகத்தின் நிலைமையோ வேறு. 2006ல் பருவமழை நன்றாக இருந்தது. இதனால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் உள்ள அனைத்து ஏரிகளும் நிரம்பின. தரைமட்ட அளவிலேயே உள்ள இந்த ஏரிகள் நிரம்பி மறுகால் சென்றன.இந்த உபரிநீரும் வழக்கம் போல் கடலுக்கு சென்றது. இந்நிலையில், மழை காலத்தில் கிடைக்கும் மழைநீரை சேமிக்க, செயற்கை ஏரிகளை அமைக்க வேண்டியது அவசியம்.

ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவின் பழந்தண்டலம், எருமையூர், திருமுடிவாக்கம், திருநீர்மலை, கவுல்பஜார் உள்ளிட்ட பல பகுதிகளில், ஆயிரக்கணக்கான ஏக்கர் அரசு புறம்போக்கு நிலங்கள் பரந்து விரிந்து கிடக்கின்றன.இவற்றில் பல தனியார் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளன. இவற்றில் குறிப்பிட்ட சில பகுதிகளை தேர்ந்தெடுத்து, அங்கு தலா மூன்று டி.எம்.சி., கொள்ளளவு கொண்ட செயற்கை ஏரிகள் பல அமைக்கலாம். முந்தைய தி.மு.க., ஆட்சியின் போது, திருநீர்மலை அருகே ஒரு செயற்கை ஏரியை உருவாக்கும் திட்டம் தீட்டப்பட்டது.இதற்கான இடத்தை, அப்போது பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்த துரைமுருகன் நேரில் பார்வையிட்டார். இதுகுறித்த அறிக்கை சட்டசபையிலும் வைக்கப்பட்டது. ஆனால், ஏதோ ஒரு காரணத்திற்காக அருமையான அந்த திட்டம் செயல்படுத்தப்படவில்லை. செயற்கை ஏரி திட்டத்திற்கு ஆகும் செலவு மிகவும் குறைவு.நிலம் கையகப்படுத்தும் பிரச்னையும் இல்லை. சென்னையை சுற்றி, வாய்ப்புள்ள இடங்களில் செயற்கை ஏரிகளை உருவாக்குவதன் மூலம், மழை காலத்தில் கடலில் கலந்து வீணாகும் நீரை சேமிக்க முடியும். கிருஷ்ணா நீரையும் சிந்தாமல், சிதறாமல் பயன்படுத்த முடியும்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக