ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:02 am

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Today at 8:00 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Today at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Today at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Today at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:00 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Yesterday at 7:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:55 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:18 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:50 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Yesterday at 1:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Aug 18, 2024 11:34 pm

» கருத்துப்படம் 18/08/2024
by mohamed nizamudeen Sun Aug 18, 2024 10:31 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

» மைக்ரோ கதை!
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:23 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:22 pm

» தலைக்கு பேன் பார்க்க சொல்றா…!
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:20 pm

Top posting users this week
ayyasamy ram
நான்கு நற்செய்திகளின் அடிப்படையில் இயேசுவின் வாழ்க்கைச் சுருக்கம் Poll_c10நான்கு நற்செய்திகளின் அடிப்படையில் இயேசுவின் வாழ்க்கைச் சுருக்கம் Poll_m10நான்கு நற்செய்திகளின் அடிப்படையில் இயேசுவின் வாழ்க்கைச் சுருக்கம் Poll_c10 
heezulia
நான்கு நற்செய்திகளின் அடிப்படையில் இயேசுவின் வாழ்க்கைச் சுருக்கம் Poll_c10நான்கு நற்செய்திகளின் அடிப்படையில் இயேசுவின் வாழ்க்கைச் சுருக்கம் Poll_m10நான்கு நற்செய்திகளின் அடிப்படையில் இயேசுவின் வாழ்க்கைச் சுருக்கம் Poll_c10 
mini
நான்கு நற்செய்திகளின் அடிப்படையில் இயேசுவின் வாழ்க்கைச் சுருக்கம் Poll_c10நான்கு நற்செய்திகளின் அடிப்படையில் இயேசுவின் வாழ்க்கைச் சுருக்கம் Poll_m10நான்கு நற்செய்திகளின் அடிப்படையில் இயேசுவின் வாழ்க்கைச் சுருக்கம் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான்கு நற்செய்திகளின் அடிப்படையில் இயேசுவின் வாழ்க்கைச் சுருக்கம்

3 posters

Go down

நான்கு நற்செய்திகளின் அடிப்படையில் இயேசுவின் வாழ்க்கைச் சுருக்கம் Empty நான்கு நற்செய்திகளின் அடிப்படையில் இயேசுவின் வாழ்க்கைச் சுருக்கம்

Post by கவிக்காதலன் Sun Dec 12, 2010 11:24 pm

இயேசுவின் வாழ்க்கை வரலாறு பற்றிய செய்திகளை அறிந்துகொள்ள முக்கிய ஆதார ஏடுகளாக இருப்பவை நான்கு நற்செய்தி நூல்கள் ஆகும். இவை கிறித்தவ விவிலியத்தின் பகுதியாகிய புதிய ஏற்பாட்டில் அடங்கியுள்ளன. அவை தரும் செய்திகளின் சுருக்கம் இதோ:

1. இயேசுவின் பிறப்பு முன்னறிவிக்கப்படுகிறது (மத்தேயு, மாற்கு)
2. மரியா என்னும் கன்னிப்பெண்ணிடமிருந்து இயேசு பிறந்தார். மரியாவின் கணவர் யோசேப்பு இயேசுவின் வளர்ப்புத் தந்தை ஆவார். இயேசு யூத குலத்தில் பிறந்தார். "இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார்" என்னும் செய்தி இடையர்களுக்கு வழங்கப்பட்டது (லூக்கா 2:11).
3. சிறுவயதிலேயே இயேசு ஞானம் மிகுந்தவராகக் காணப்பட்டார். அவர் தம் பெற்றோருக்குப் பணிந்திருந்தார் (லூக்கா 2:39-40).
4. வயது வந்தவுடன் இயேசு யோர்தான் ஆற்றில் யோவானிடம் திருமுழுக்கு (ஞானஸ்நானம்) பெற்றார். பின் பாலைநிலம் சென்று 40 நாள் நோன்பிருந்தார். இதன் போது அலகை (சாத்தான்) அவரை சோதித்தது. இயேசு அலகையின் சோதனைகளை முறியடித்து வெற்றிகொண்டார்.
5. பின்னர் இயேசு மக்களுக்குப் போதிக்க தொடங்கினார். "காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது. மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்" என்று இயேசு போதித்தார் (மாற்கு 1:14-15). இயேசு உவமைகள் மூலம் பேசினார். பல புதுமைகளையும் அரும்செயல்களையும் செய்தார்.
6. ஓய்வுநாள், தூய்மைச் சடங்குகள் ஆகிய யூத சமயப் பழக்கங்களையும், யூதமதத் தலைவர்களையும் இயேசு கடுமையாக விமர்சித்தார். தாம் கடவுள் பெயரால் பேசுவதாகவும், கடவுளே தம் தந்தை என்றும், அவரிடமிருந்தே தாம் வந்ததாகவும் இயேசு கூறினார். இயேசுவின் போதனையை ஏற்க மறுத்த யூத சமயத் தலைவர்கள் அவரைக் கொலை செய்ய வகை தேடினர். பல சூழ்ச்சிகளைச் செய்து தோல்விகண்டனர். மக்கள் இயேசுவோடு இருந்தபடியால் அவரைக் கைது செய்யப் பயந்தனர்.
7. இயேசுவின் 12 திருத்தூதர்களுள் (அப்போஸ்தலர்) ஒருவரான யூதாசு இஸ்காரியோத்து யூத மதத தலைவர்களின் சூழ்ச்சிப் பிடியில் சிக்கி இயேசுவை 30 வெள்ளிக் காசுகளுக்குக் காட்டிக் கொடுக்க முன்வருகின்றார்.
8. இயேசு கடைசி இரா உணவைத் தம் திருத்தூதர்கள் பன்னிருவரோடு (யூதாசு உட்பட) உண்கிறார். தம் சீடரின் காலடிகளைக் கழுவுகின்றார். "ஆண்டவரும் போதருமான நான் உங்கள் காலடிகளைக் கழுவினேன் என்றால் நீங்களும் ஒருவர் மற்றவருடைய காலடிகளைக் கழுவக் கடமைப்பட்டிருக்கிறீர்கள்" என்று தம் சீடர்களுக்கு அறிவுறுத்துகிறார் (யோவான் 13:14).
9. பின்னிரவில் ஒலிவ மலை என்று அழைக்கப்படும் கெத்சமனித் தோட்டத்தில் இறைவேண்டல் செய்து கொண்டிருக்கும் போது யூதாசு யூத மதத் தலைவர்களுடனும் கோவில் காவல் தலைவர்களுடனும் வந்து இயேசுவை முத்தமிட்டுக் காட்டிக் கொடுக்கிறார்.
10. யூதர் அப்போது உரோமைப் பேரரசின் பெயரால் ஆளுநராகவிருந்த பொந்தியு பிலாத்து முன்னால் இயேசுவைக் கொண்டு சென்றார்கள். பிலாத்து, இயேசு குற்றமற்றவர் எனக் கண்டு அவரை விடுவிக்க முயன்றாலும், யூதருக்கும் அரசுக்கும் பயந்து இயேசுவைச் சிலுவையில் அறையக் கட்டளையிடுகிறார்.
11. இயேசு சிலுவையில் அறையப்பட்டார். மூன்று மணி நேரம் சிலுவையில் தொங்கி வேதனைப்பட்ட இயேசு, "எல்லாம் நிறைவேறிற்று" (யோவான் 19:30) என்று கூறித் தலைசாய்த்து உயிர்விட்டார்.
12. கல்லறையில் அடக்கப்பட்ட இயேசு மூன்று நாள்கள் கழித்து சாவை வென்று உயிர்பெற்றெழுந்தார். சீடர்களுக்குப் பன்முறை தோன்றினார்.
13. இறுதியில், சீடர்களை அணுகி, "விண்ணுலகிலும் மண்ணுலகிலும் அனைத்து அதிகாரமும் எனக்கு அருளப்பட்டிருக்கிறது. எனவே நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவு வரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்" (மத்தேயு 28:18-20) என்று கூறி, விண்ணேறிச் சென்றார்.
14. இயேசுவின் வரலாற்றையும் போதனையையும் எடுத்துக் கூறுகின்ற நற்செய்தி நூல்கள் எதற்காக எழுதப்பட்டன என்பதை யோவான் நற்செய்தியாளர் தம் நூலின் இறுதியில் கீழ்வருமாறு குறிப்பிடுகிறார்: "இயேசுவே இறைமகனாகிய மெசியா என நீங்கள் நம்புவதற்காகவும், நம்பி அவர் பெயரால் வாழ்வு பெறுவதற்காகவுமே இந்நூலில் உள்ளவை எழுதப் பெற்றுள்ளன" (யோவான் 20:31).


[center]நானோ பேனாவால் கவிதை எழுதுகிறேன்... நீயோ உன் கண்களால்...


அன்புடன்...
கவிக்காதலன் [அவள் கவிஞனாக்கினாள் என்னை... நான்கு நற்செய்திகளின் அடிப்படையில் இயேசுவின் வாழ்க்கைச் சுருக்கம் 154550 ]
கவிக்காதலன்
கவிக்காதலன்
பண்பாளர்


பதிவுகள் : 189
இணைந்தது : 20/12/2009

http://www.anishj.co.cc

Back to top Go down

நான்கு நற்செய்திகளின் அடிப்படையில் இயேசுவின் வாழ்க்கைச் சுருக்கம் Empty Re: நான்கு நற்செய்திகளின் அடிப்படையில் இயேசுவின் வாழ்க்கைச் சுருக்கம்

Post by மஞ்சுபாஷிணி Fri Mar 04, 2011 11:55 pm

அருமையான பதிவுக்கு அன்பு நன்றிகள் நண்பரே....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நான்கு நற்செய்திகளின் அடிப்படையில் இயேசுவின் வாழ்க்கைச் சுருக்கம் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

நான்கு நற்செய்திகளின் அடிப்படையில் இயேசுவின் வாழ்க்கைச் சுருக்கம் Empty Re: நான்கு நற்செய்திகளின் அடிப்படையில் இயேசுவின் வாழ்க்கைச் சுருக்கம்

Post by கலைவேந்தன் Sat Mar 05, 2011 12:05 am

நான் சென்ற வாரம் தான் த ஸ்டோரி ஆஃப் ஜீசஸ் என்னும் தமிழ் மொழிமாற்றுப்படம் பார்த்தேன். அதில் இயேசுவைப்பற்றிய முழு வரலாறு அருமையாகத் தொகுக்கப்பட்டு உள்ளது.

அதே போல் த பாஸ்ஸன் ஆஃப் ஜீசஸ் என்றொரு படம். அதில் இயேசுவின் இறுதிக் காலம் மிகவும் உருக்கமான முறையில் காட்டப்பட்டுள்ளது.

இந்த இரண்டு படங்களுமே அனைவரும் கண்டிப்பாக காண வேண்டிய் படங்கள்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

நான்கு நற்செய்திகளின் அடிப்படையில் இயேசுவின் வாழ்க்கைச் சுருக்கம் Empty Re: நான்கு நற்செய்திகளின் அடிப்படையில் இயேசுவின் வாழ்க்கைச் சுருக்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum