Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காம நோய்க்குக் கண்கண்ட மருந்து...
+12
சாந்தன்
தாமு
கலைவேந்தன்
அப்புகுட்டி
அன்பு தளபதி
ராஜா
Tamilzhan
உதயசுதா
Thanjaavooraan
சிவா
ரபீக்
Aathira
16 posters
Page 3 of 5
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
காம நோய்க்குக் கண்கண்ட மருந்து...
First topic message reminder :
காமநோய்க்குக் கண்கண்ட மருந்து...
இன்று வலைத்தளத்தில் கண்ட ஒரு செய்தி. இல்லை.இல்லை.. பரவலாகப் பல வலைத்தளங்களில் பல்வேறு தலைப்பின் கீழ் உலா வந்து கொண்டிருக்கின்ற செய்தி இது. உங்கள் பார்வைக்காக.
சுவிட்சர்லாந்தின் ஜூரிஜ்பல்கலைக் கழகத்தின் டாக்டர் வீட்டிசன் 51 இணையர்களிடம் நடத்திய ஆய்வின் முடிவு இது. வாரத்தில் ஒரு சில முறைகளாவது தம் துணையைக் கட்டி அணைப்பது, முத்தமிடுவது, உடலுறவு கொள்வது ஆகிய இவற்றால் மன அழுத்தம் குறைகிறது என்கிறது இவ்வாய்வு.
ஒருவர்ஒருவரை அன்பாக நடத்தும் தம்பதிகளுக்கு மன
அழுத்ததிற்குக் காரணமான கார்டிசல் என்ற ஹார்மோன் குறைவாகச் சுரக்கின்றது என்று கண்டறியப் பட்டுள்ளது.
இதைத்தான் நம் நவரச நாயகன் அன்றே படம்போட்டுக் கூறிவிட்டாரே என்று சிந்திப்பது புரிகிறது.
அப்படி என்ன புதிய செய்தியை இவர்கள் கண்டறிந்து விட்டனர்.”இதெல்லாம் எங்கள் தமிழுக்கும் தமிழர்களுக்கும் ரொம்பப்பழசு” என்று ஜீரிஜ் பல்கலைக் கழகத்திற்குக் கேட்கின்ற அளவில் கத்த வேண்டும் போல இருக்கிறது. என்றோ தமிழன் கண்டறிந்தவையெல்லாம் இன்று ஆய்வின் முடிவு என்று கூறி எக்காளமிட்டு வரும் இது போன்ற பல்கலைக் கழகங்களுக்கு யார் செப்புவது?
கட்டிப் பிடித்து அகற்ற அப்படி என்ன மனநோய் தம்பதிகளுக்குவருகிறது? அதற்கு என்ன காரணம்? ஒருவரை ஒருவர் விட்டு அகன்று சென்று கொண்டிருப்பதே இந்தமனநோய்க்குக் காரணம் என்கிறது அன்று முதல் இன்று வரை தோன்றி வளர்ந்துள்ள அறத்துடன் மருத்துவமும் பேசும் எங்கள் தமிழ் இலக்கியம்.
சங்க காலத்தில் நிலங்களைக் குறிஞ்சி, முல்லை,மருதம், நெய்தல், பாலை என்று ஐவகையாகப் பிரித்து இருந்தனர். இவை ஒவ்வொன்றிற்கும் முதல்பொருள் என்று நிலத்தையும் காலத்தையும் குறிப்பிட்டு இருந்தனர். அதைல் குறிஞ்சி மலைப்பகுதியையும், முல்லைக் காட்டுப் பகுதியையும், மருதம் வயல் பகுதியையும், நெய்தல் கடல் பகுதியையும், பாலை வறண்ட பாலை நிலத்தையும் குறிக்கும்.
இந்த ஐவகை நிலங்களுக்கு உரிப்பொருள் என்று ஒவ்வொன்றைச்சுட்டி இருந்தனர். உரிப்பொருள் என்பது அந்தந்த நிலத்து மக்களின் வாழ்வியல். குறிஞ்சிக்குகுளிர் பாங்கான மலைப்பகுதியாதலால் அங்கு தலைவனும் தலைவியும் கூடுவர். எனவே ’புணர்தல்’ என்றும், முல்லையில் கூடிக்களித்த அவர்கள் திருமணம்புரிந்து நிலையாக குடிபுகுந்து இல்லறம் நடத்துவர்.
ஆதலால் ’இருத்தல்’ என்றும், மருதம் அப்படி நிலையாக அன்புடன் இல்லறம் நடத்துகையில் கூடல் சிறக்க ஏதுவான ஊடல் நிகழும். எனவே ’ஊடல்’ என்றும், நெய்தல் நிலத்தில் பிழைப்பு கருதி மீன் பிடிக்கவோ, முத்து எடுக்கவோகடலில் சென்ற தலைவன் வருகைக்காக கவலைப் பட்டுக் கொண்டிருப்பாள் தலைவி. அதனால் ’இரங்கல்‘ என்றும், பாலை நிலம் வறண்ட பூமி. அங்கு பிழைக்க வழியின்றி பொருள் ஈட்டுவதற்காகத் தலைவியை விட்டுத் தலைவன் பிரிந்து செல்வான். அதனால் அங்கு ’பிரிதல் ‘ என்றும் உரிப்பொருளை ஆக்கி இருந்தனர்.
பாலைத் திணையில் அமைந்த பாடல்கள்பெரும்பாலும் மனநோயாளியாக மாறிய தலைவி கூற்றுப் பாடல்களாக அமைந்திருப்பதைக் காணலாகிறது.மனவியல் வல்லுநராகத் திகழ்ந்த தமிழ்ர்கள் நோய், நோக்குக் காரணம், அதைத் தீர்க்கும் மருந்து என்னென்ன என்பதை இலக்கியம் படைத்துள்ளனர்.
சங்க இலக்கியத்தில் ‘பசலை நோய் ‘ என்று ஒரு நோய் அறிமுகப்படுத்தப் பட்டிருக்கும். பசலை என்பது உணவு,உறக்கம் செல்லாது காதலனையே சிந்தித்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஏற்படும் நோய். ஏன்நமக்கே கூட சரியான உணவும், போதிய உறக்கமும் இல்லாவிட்டால் நாளடைவில் விழி குழிவெய்தி,மேனி இளைத்து, கருத்துப் போவது இயற்கை. இந்தக் கரிய நிறத்தையே பசலை என்றனர் சங்கத்தமிழர்.நம் மேனி கருத்து இளைப்பதற்கும் காதலரின் மேனி கருப்புக்கும் என்ன வேறுபாடு என்றால்அவர்களது ஆற்றா நோய். அதாவது காதலனைத் தவிர வேறு மருந்தால் குணப்படுத்த முடியாத நோய்.மற்றது உண்டு, உறங்கிக் குணப்படுத்திக் கொள்ளக்கூடிய நோய். இது காதலித்து, பிரிவுத்துயரைஅனுபவத்தவருக்கு நன்கு புரியும். இதற்கு நீர் இறைக்காத கேணியின் நீரின் மீது படர்ந்துஇருக்கும் பாசியைப் போன்று என்று விளக்குகிறது ஒரு சங்கப் பாடல்.
“ஊருண் கேணி யுண்குறைத் தொக்க
பாசி யற்றே பசலை காதலர்
தொடு வழித் தொடு வழி நீங்கி
விடுவுழி விழுவுழி பரத்த லானே”
சரி காதல் என்பது நோயா? என்று புருவங்களைஉயர்த்துவது புரிகிறது. ஆம் நோய்தான். நோயும் மருந்து இரண்டும் ஆவது காதல். அதனால்தான்திருவள்ளுவரும்
நன்கு தேய்த்து வைத்த வெள்ளி, பித்தளைப்பாத்திரங்களின் மீது நாளடைவில் பசுமை ஏறுவது போல தங்கம் போல ஒளிவிடும் மங்கையின் நிறம்மங்கி ஒளி குன்றக் காரணம் காதல் நோய்.இதைத் திருவள்ளுவர் பத்துப் பாக்களில் கூறியுள்ளார். சான்றுக்கு, “காம நோயையும் பசலை நிறத்தையும் கைமாறாக எனக்களித்து, என் அழகையும் நாணத்தையும் என்னிடமிருந்து பெற்றுக் கொண்டார் ” என்று தலைவி கூறுவது. குறள் இதோ,
“சாயலும் நாணும அவர்கொண்டார் கைம்மாறா
நோயும் பசலையும் தந்து“
மற்றொன்று, “ அதோ பார் என் காதலர் பிரிந்துசெல்கின்றார். இதோ பார் என் மேனியில் பசலை நிறம் வந்து படர்கின்றது“ என்று தலைவி பசலைநோய் வந்து கொண்டிருப்பதை படம் பிடிப்பாள். குறள் பின்வருவது.
“உவக்காண்எம் காதலர்செல்வார் இவக்காணென்
மேனி பசப்பூர் வது“
மற்றொன்று வேண்டுமென்றாலும் இருக்கின்றது. இது இன்னும் சுவையானது. ”விளக்கு மறைவினைப் பார்த்துக்கவியக் காத்திருக்கிற இருளைப் போல, தலைவனுடைய தழுவதலின் சோர்வைப் பார்த்து என் உடலைத்தழுவ, பசலைக் காத்திருக்கிறது” என்று தலைவி வருந்துவது. இந்தக் குறளையும் பார்க்க.
“விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன்
முயக்கற்றம் பார்க்கும் பசப்பு”
அதுமட்டுமா? ”புள்ளிக்கிடந்த (தழுவிக் கிடந்த)தலைவி சற்று அகன்ற போது பசலை நிறம் அள்ளிக்கொண்டது போல வந்து பரவிவிட்டதே” என்றெல்லாம் தலைவியைப் புலம்பவைத்ததென்றால் அது நோய்தானே? இது நாகரிகமாகக் காதலை அதிகம் வெளிக்காட்ட விரும்பாத தலைவியின் புலம்பல். இன்னும் சங்கப்பெண்டீர் பலரின் இந்நோய்க்கான புலம்பலை பாருங்கள். என் உயிர்மிகச்சிறிது காமமோ பெரிது என்று ஒருத்தி “ உயிர்த்தவ சிறிது; காமமோ பெரிது” , “அது கொள் தோழி காம நோயே” என்று ஒருத்தி, ”நோய் தந்தனனே தோழி” என்று ஒருத்தி, ”வெண்ணெய் உணங்கல் போல பரந்தன்றுஇந்நோய்”என்று ஒருத்தி அதாவதுவெண்ணெய் உருகினால் வழிந்து பரவுவது போல உடல் முழுவதும் பசலையைப் பரவச் செய்ததாம்,
“சொல்லரு கொடுநோய்க் காமக் கனலெரி” என்று பெருங்கதைக் கூறும் காமநோய்க்குக் காரணி காதலன்றோ? ’உள்ள நோய்’, ’வசா நோய்’ ‘இன்னா வெந்நோய்’, ’ஆனனா நோய்’, ’ஈடும்மை நோய்’, ‘துஞ்சா நோய்’, என்றெல்லாம் கடுமையாயகச் சுட்டப்படுகிற இந்நோய்க் கண்ட மகளிர் சங்ககாலத்தில் அதிகமாகவே காணப்பட்டுள்ளனர். இவையெல்லாம் நாகரிகமாகக் காதலை அதிகம் வெளிக்காட்ட விரும்பாத தலைவியின் புலம்பல்கள்.
ஒரு சங்கத்தலைவி கிட்டத்தட்ட ஹிஸ்டீரியாபோலவே அலறிக்கொண்டு, தலையில் முட்டிக்கொண்டு, மார்பில் அடித்துக் கொண்டு, ஐயோ! எந்நோயைஅறியாது உலகோர் எல்லாம் நிம்மதியாகத் தூங்குகின்றனரே என்று புலம்பிக்கொண்டு, காட்டு வழிகளிலெல்லாம் அலைந்து திரிகிறாள் என்றால் இந்நோயின் கொடுமையை இதைவிட தத்துரூபமாகக்காட்ட முடியுமா என்று வியக்கத்தான் வேண்டியுள்ளது.
“முட்டுவேன் கொல் தாக்குவேன்கொல்
ஓரேன் யானுமோர் பெற்றி மேலிட்டு
ஆசுஒல்லெனக் கடவுவேன் கொல்
அலமரல் அசைவளி அலைப்பவென்
உயவு நோயறியாது துஞ்சும்உளர்க்கே”
மெல்ல மெல்ல உயிரைப் போக்கும் மன நோய்இக்காம நோய். இந்நோய்க்கு மருந்து கண்டு பிடிக்கப்பட்டது எக்காலத்தில்? நோயைக் கூறுவதுடன்தம் கடன் முடிந்து விட்டது என்று எண்ணுபவன் அல்லன் தமிழன். அந்நோய்க்கு மருந்தும் கூறி விடும் நோய்தீர்க்கும் மருத்துவன் அவன்.
இந்நோய்க்கு பிற மருந்தில்லை அவனைத் தவிர என்பதை,
”மருந்துபிறி தில்லையவர்மணந்த மார்பே” என்று கூறியுள்ளது அன்றே தமிழ் மருத்துவ ஆய்வு அன்றே. இதை இன்றுதான்நிருபித்து உள்ளது ஜூரிஜ் பலகலைக்கழகம்.
உடலில் தோன்றும் வெவ்வேறு நோய்களுக்குவெவ்வேறு மருந்துகள் இருக்க காதல் நோய்க்கு மட்டும் மருந்து காதலனே என்கிறது தமிழ்இலக்கியம். இதோ,
“பிணிக்கு மருந்து பிறமன்அணியிழை
தன்நோய்க்குத் தானே மருந்து”
இதைவிடச் சான்று தேவையா? தமிழன் மருத்துவத்தில் கைதேர்ந்தவன் என்பதை அறிய. அம்மருத்துவமும் எவ்வாறு இருக்க வேண்டுமாம்..
”பிரிந்தோர் புணர்க்கும்பண்பின்
மருந்தும் உண்டோ”
பிரிந்தவர் கூடிப் புணர்வதை விட சிறந்த மருந்து வேறுஉண்டா என்கிறது இச்சங்கப்பாடல். இதனினும் மேலாய் அப்புணர்ச்சியும் எப்படி இருக்க வேண்டும் என்று வள்ளுவ மருத்துவன் கூறுவதைப் பார்க்கலாமா?
”வீழும் இருவர்க்கு இனிதே வளியிடைபோழப் படாஅ முயக்கு”
காற்றுக்குகூடஇடம் கொடாது முயங்க வேண்டும் என்று தெய்வப்புலவர் அன்றே கூறியுள்ளதும் இதனால்தான். (வளி - காற்று, முயக்கு - அணைப்பு).
இன்னும் கூறப்போனால் சங்கத்தமிழன் காதலுக்குமுக்கியத்துவம் கொடுத்தது நலமான ஒரு சமுதாயத்தைக் காணவே என்று நாம் உறக்கக் கூறிக் கொள்ளலாம் பெருமையுடன்.. எம் ஆதித்தமிழன் சிறந்த மன நல மருத்துவனே..
இதையெல்லாம் புரிந்து கொள்ளாமல் ஹிஸ்டீரியா என்று கூறி மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்று பணப்பையைக் கரைப்பதை விடுத்து காதல் புரிந்தவரின் மனப்பையை அன்பால் நிறையுங்கள், நம் முன்னோர் கூறியுள்ளதைப் போல... நீங்களும் மகிழலாம்... துணையும் நலம் பெறலாம்.
நன்றி குமுதம் ஹெல்த்.
ஆதிரா.

Last edited by Aathira on Thu Dec 16, 2010 12:57 am; edited 2 times in total
Re: காம நோய்க்குக் கண்கண்ட மருந்து...
அது பழைய போட்டோ , அதுதான் அப்படி ...... [/quote]ராஜா wrote:
நல்லா பண்றாங்கய்யா காமெடி ஹையோ ஹய்யோ
Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Re: காம நோய்க்குக் கண்கண்ட மருந்து...
Tamilzhan wrote:
ஆமாம் அது அவர் பழைய போட்டோ இதுதான் அவருடைய புது போட்டோ..!
ஓ அவரா(ளா) ராஜா
Re: காம நோய்க்குக் கண்கண்ட மருந்து...
தல இத எங்க பிடிச்சிங்க , ஜூமைராவுலயா ???Tamilzhan wrote:
ஆமாம் அது அவர் பழைய போட்டோ இதுதான் அவருடைய புது போட்டோ..!
Re: காம நோய்க்குக் கண்கண்ட மருந்து...
பதிவு மிகவும் அருமை
அத்தோடு தொடர்ந்து வந்த அரட்டையும் அருமை வாழ்த்துக்கள் நன்றி அம்மணி.

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: காம நோய்க்குக் கண்கண்ட மருந்து...
அப்புகுட்டி wrote:பதிவு மிகவும் அருமை
அத்தோடு தொடர்ந்து வந்த அரட்டையும் அருமை வாழ்த்துக்கள் நன்றி அம்மணி.
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: காம நோய்க்குக் கண்கண்ட மருந்து...
மிக்க நன்றி அப்பு.. அரட்டை...ம்ம்ம்ம் கலை சார் வர்ராங்க...அப்புகுட்டி wrote:பதிவு மிகவும் அருமை
அத்தோடு தொடர்ந்து வந்த அரட்டையும் அருமை வாழ்த்துக்கள் நன்றி அம்மணி.
Re: காம நோய்க்குக் கண்கண்ட மருந்து...
நன்றி அக்கா
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Re: காம நோய்க்குக் கண்கண்ட மருந்து...
அப்புகுட்டி wrote:பதிவு மிகவும் அருமை
அத்தோடு தொடர்ந்து வந்த அரட்டையும் அருமை வாழ்த்துக்கள் நன்றி அம்மணி.
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» உணர்ச்சிகளே உடல் நோய்க்குக் காரணம்.
» கண்கண்ட தெய்வமே
» பார்வைக் கோளாறுக்கு கண்கண்ட தெய்வம்
» மருந்து வாங்கும் போது கவனிக்க வேண்டியவைஈ மருந்து கட்டுப்பாட்டு அலுவலகம் விளக்கம்
» காலாவதி மருந்து விற்பனை செய்த 4 நிறுவனங்களின் உரிமம் ரத்து - மருந்து துறை அதிகாரிகள் அதிரடி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum