புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கண்களைப் போற்றுதும்! கண்களைப் போற்றுதும்!!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
கண்களைப் போற்றுதும்! கண்களைப் போற்றுதும்!!
[center]
இன்று உலகெங்கும் இனிமையாகக் கேட்டுக்கொண்டு இருப்பது ஒரே மொழி. அனைவருக்கும் பொதுமொழி இந்த ஒரே பொது மொழிக்குச் சாதி தேவையில்லை. மதம் தேவையில்லை, இனம் தேவையில்லை, மொழி தேவையில்லை, ஏன் இம்மொழியைப் பேச வாயே தேவையில்லை. கண்களே போதும். ஆம், அதுதான் காதல் மொழி. கண்கள் நடத்தும் காதல் உரையாடலில் வாய்மொழிக்கு இடமிருக்காது. திருவள்ளுவரும் பார்வை பேசும் காதல் பரிபாஷயின் போது செயல் இழந்து போகும் வாய் மொழயை,
“கண்ணொடு கண்ணிணை நோக்குஒக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனு மில”
என்று கூறுவார்.
காதலை வரவேற்கும் அழகிய தோரண வாயில்கள் கண்கள். அழகாக அசைந்து மூடித்திறக்கும் இமைகள்தான் கதவுகள். ஆம் விழியின் வழியாக இதயம் நுழைந்து உயிரில் கலக்கும் உன்னதமானது காதல். இந்தக் காதல் நாடகத்தில் மன உணர்வுகளைக் காட்சிகளாக அமைப்பது கண்களே. காதல் குறிப்போடு பார்க்கும் முதல் பார்வையே காதல் பரிமாற்றத்திற்கு அரிச்சுவடி. தமிழரின் காதலுக்கு இலக்கணம் கூறிய தொல்காப்பியர் கண்கள் எழுதும் காதல் முன்னுரையை,
“நாட்டம் இரண்டும் அறிவு உடம்படுத்தற்குக்
கூட்டி யுரைக்கும் குறிப்புரை”
என்பார். நாட்டம் என்றால் கண் அல்லது பார்வை என்று பொருள்.
தமிழுக்கு கதி கம்பரும் திருவள்ளுவரும். திருவள்ளுவர் காமத்துப்பாலில் மட்டும் 52 குறட்பாக்களில் கண்கள் பேசும் காதலைப் பற்றிக் கூறுகிறார். கம்பரோ இராமனும் சீதையும் மெய் மறந்து நோக்கிய காதல் பார்வையை,
“கண்ஒடு கண்இணை கவ்வி, ஒன்றை ஒன்று
உண்ணவும், நிலைபெறாது உணர்வும் ஒன்றிட,
அண்ணலும் நோக்கினான்! அவளும் நோக்கினாள்”
என்று படம் பிடிப்பார். இதிலிருந்து கால காலமாகக் கண்கள் காதலுக்குச் செய்து வரும் உதவி நன்கு புரியும். அதிலும் இடக் கண்ணுக்கும் காதலுக்கும் மிக நெருங்கிய தொடர்பு. என் இடது கண்ணும் துடித்தது, உனைக் கண்டேன் இந்நாள் பொன்னாள் என்பாள் காதலி.
“கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும்
திருநுதற்கு இல்லை இடம்”
என்றுரைத்து தன் கண்களின் கருமணியில் உள்ள பாவையை “நீ போய்விடு” என்கிறான் வள்ளுவத் தலைவன், தான் விரும்பும் பாவையாகிய தலைவிக்கு அங்கு இடம் இல்லாததால்.(குறள்-1123)
வள்ளுவர் படைத்த தலைவியோ கண்களை இமைக்க மாட்டேன் என்கிறாள். (குறள்-1129) கண்களுக்கு மை எழுத மாட்டேன் என்கிறாள். (குறள்-1127) இமைத்தாலும் மை எழுதினாலும் தலைவன் கண்களைவிட்டு மறைந்து விடுவான் என்கிறாள். இதனால் பெரும்பாலும் காதலை வளர்ப்பது கண்களே எனலாம். இதுவும் வள்ளுவன் வாய்மொழியே.
“கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்
செம்பாகம் அன்று பெரிது”
காதலுக்கு மட்டுமா? கருணைக்குக் கண்களை விட யார் தாயாக இருக்க முடியும். அருகில் இருக்கும் பிற உறுப்புகள் படும் வேதனைக்குக் கண்ணீர் விட்டு அழுவது கண்களே. இக்கண்களுக்கு ஏதாவது பிரச்சனை வந்தால் அழுவார் யார்?
எங்கோ ஒரு மூலையில யாருக்கோ துன்பம் என்றால் இங்கிருந்து கண் கலங்குகிறதே இதனைத் தான் கண்ணோட்டம் என்று திருவள்ளுவர் கூறுவார்.
ஐம்புலன்களில் அறிவைப் பெற்றுத்தருவதில் கண்களே முதலிடம் பெறுகிறது. கற்றவரைக் கண்ணுடையார் என்றும் கல்லாதவரை முகத்தில் இரண்டு புண்ணுடயார் என்றும் கூறுவதால் கல்வியின் அடையாளம் கண்கள் என்பதை அறியலாம். இதனை அறிவுக்குறியீடு என்றும் கூறலாம்..
கண், ஒரு நோய் அறிவிப்பாளர் (indicator). உடலில் ஏற்பட்டுள்ள நோய்களை அறிவிப்பது கண்களே.. வண்ண ஜாலங்கள் காட்டி நோயைக் காட்டிக் கொடுத்து விடும். சூட்டு நோய் என்றால் செவ்வறி ஓடிய அழகிய கண்கள் ஒரேயடியாகச் சிவந்து பயமுறுத்தி விடும், கண்களில் சீழ் வடிந்து இமைகள் தானே மூடிக் கொள்ளும். காமாலை என்றால் மஞ்சள் நிறமாக மாறி விடும். இரத்தச் சோகை என்றால் கண்கள் வெளுத்து விடும். சோர்வு என்றால் சுமை தாங்காது இமைக் குதிரைகள் அடிக்கடி மூடிப் படுத்துவிடும். சுகம் என்றால் தண்ணீரைக் கண்ணோரம் காட்டும். சோகம் என்றால் வெந்நீரைக் கன்னத்தில் கொட்டும். காதல் என்றால் கண் விழி மேலே போய் சொருகிக் கொள்ளும். கண்ணம்மாவின் காதலை எண்ணிக் களித்த பாரதி,
‘நிலவூறித் ததும்பும் விழிகளும்’
என்று கூறுவது இதற்குச் சாட்சி. (காதலும் ஒரு நோய் தானே) காதலியின் ஒரு பார்வை காதல் நோயை உண்டாக்கும். ஒரு பார்வை காதல் நோய்க்கு மருந்து போடுமாம் சொல்கிறார் திருவள்ளுவர்.
“இருநோக்கு இவள்உண்கண் உள்ளது; ஒருநோக்கு
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து”
முகத்துக்கு அழகு சேர்ப்பதும் கண்தான். அட கொஞ்சும் போது என் கண்ணே, கண்மணியே என்றுதான் கொஞ்சுகிறோம். யாராவது மூக்கே, காதே என்று கொஞ்சியது உண்டா? எல்லாவற்றுக்கும் முந்திக் கொண்டு வந்து, மூக்கு அடிக்கடி உடைபடுவது போல இத்தனை தகுதிகள், பெருமைகள் பெற்றிருக்கின்ற கண் உடைபடுகிறதா பாருங்கள். கண்களுக்கு அணியும் கண்ணாடிக்கு பெயர் சூட்டிக் கொள்வது மூக்காம். இதுக்கு என்னங்க சொல்றீங்க. கண்கள் தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அடக்கமாக முகத்தின் உள்ளே அமைந்து முகத்துக்கு அழகையும் அல்லவா தருகின்றன.
இவ்வளவு முக்கியமான உறுப்பு கண். அதை நாம் சரியாகப் பார்த்துக் கொள்கிறோமா என்றால் அது தான் இல்லை. நம் முன்னோர்களில் எத்தனை பேர் கண்ணாடி அணிந்து இருந்தனர். எத்தனை பேர் காட்ராக்ட் அறுவை சிகிச்சை செய்து கொண்டனர். இப்போது கண்ணாடி இல்லாமல் யாரையும் பார்க்க முடிவதில்லை. முக்கியமாக இளைஞர்களை. அப்படி தப்பித்தவறி சிலரைப் பார்க்க நேர்ந்தால் அவர்கள் கண்களுக்குள் லென்ஸ் பொருத்திக் கொண்டவர்களாகத் தான் இருப்பார்கள். பொன்னாங்காணியை (பொன்னாங்கண்ணி) உணவில் பயன்படுத்தினர். சர்ஜரியில் இருந்து கண்களைக் காப்பாற்றிக் கொண்டார்கள். கண்களைப் பொன் போல
காப்பதனால் இந்தக் கீரைக்குப் பொன்னாங்காணி என்று பெயர் வந்திருக்கலாம்.
மேல நோய்களின் அறிகுறியைக் கண்கள் காட்டும் என்று பார்த்தோம். நோய்களின் அறிகுறியே அன்றி, கண்களுக்கே வரும் நோய்கள் பொதுவாக கண் எரிச்சல், கண்களில் கண்ணீர் வடிதல், (கண்களில் கண்ணீர்தான் வடியும். கங்கை நீரா வடியும் என்று நினைப்பது புரிகிறது), கண் வறண்டு போதல் (dry eye Sintrom), கண்வலி (மெட்ராஸ் ஐ) போன்றவை.
கண் எரிச்சல் தூக்கமின்மை காரணமாகவும், அதிக சூட்டின் காரணமாகவும் வருகிறது. தலையில் நீர் கோத்துக்கொண்டால் கண்ணில் நீர் வடிகிறது. கண் வறண்டு போவது என்பது கண்ணில் இருக்கும் ஈரப்பதம் உலர்ந்து போவது. இமைகளை கொட்டாமல் உற்று உற்று பார்த்து வேலை செய்பவர்களுக்கு இந்நோய் வருகிறது. முக்கியமாக குளிரூட்டப் பட்ட அறையில் அமர்ந்து கணிப்பொறியே கதி என்று இருப்பவர்களுக்கு இந்நோய் வருவதாக ஆய்வு அறிக்கை கூறுகிறது. (கண் கொட்டாமல் உற்று உற்று பார்க்கும் காதலர்களுக்கும், கோபத்துடன் முறைத்து முறைத்துப் பார்க்கும் கணவன் மனைவிக்கும் கூட இந்நோய் வர வாய்ப்பு உள்ளது)
இக்கண் நோய்களுக்கு எல்லாம் மருந்து எள்ளு, கடுக்காய், ஆமணக்கு, வில்வ வேர் ஆகிய நான்கையும் நன்கு இடித்து மெல்லிய துணியில் சிறு ச்¢று பொட்டனமாக மடித்துக் கொண்டு, செக்கில் ஆட்டிய நல்ல எண்ணெயில் இட்டு நன்கு காய்ச்சி இளம்சூட்டில் கண்ணின்மீது ஒற்றடம் கொடுக்க, வெள்ளம் போல வந்த படைகள் சிங்க மன்னனைக் கண்டு, ஓடியது போல, கண் நோய் ஓடி விடுமாம். சிங்க மன்னன் என்பது நரசிங்கப் பெருமாள். பாடல் இதோ,
”எள்ளு கடுக்காயா மணக்கு வில்வவேர் முத்து வெடித்துப் பின்னே
மெள்ளநறுக்கிப் பொட்டனமாய் மிகுந்த யெண்ணெய் காயவைத்து
மெள்ள கண்ணி லொத்திடவே விதனந்தீரும் வேந்தர்சிங்கம்
வெள்ளப் படையை வென்றான் காண்போலே வியாதி வெளியாமே”
இதைவிடவும் எளிய மருந்து மற்றொன்றும் பழம்பாடலில் இருக்கிறது. நன்கு உருக்கிய நல்ல நெய்யில் கொஞ்சம் தவிட்டைப் பிரட்டி நன்கு உருட்டிக் கொண்டு, கண்களின் மீது ஒற்றடம் கொடுக்க வேண்டும். பிறகு புளித்தக் காடியில் (பழைய சோற்றுத் தண்ணீர்)கண்களை நன்கு கழுவ வேண்டும். அதன் பிறகு குளிர்ந்த சந்தனத்தை அரைத்துப் பூச வேண்டும். இப்படி செய்தால் கண்களில் வரும் நோய்கள் எதுவாக இருந்தாலும் இலங்கை மன்னன் இராவணனைக் கண்ட எதிரிப் படைகள் போல பறந்து ஓடுமாம். பாடலைப் பார்ப்போமா.
“நீர் விழுந்து கண்புகைந்து நிரய முகத்தில் அனலாகில்
சேரும் சகத்தின்று நெய்யைச் சேர்ந்தே தவிடுதனில் உருட்டி
வாராங் காடியாற கழுவி வளர்ச் சந்தனத்தை தான்அப்பி
பாரும் இலங்கை சிங்கத்தைக் கண்ட படைபோற் பறந்திடுமே”
முதல் கூறிய மருந்தில் எள்ளு, கடுக்காய், ஆமணக்கு, வில்வவேர் ஆகிய நான்கும் மிக எளிதாகக் கிடைப்பது. செய்முறையும் மிக எளிது. இரண்டாவது மருந்து தவிடு, நெய், சந்தனம், காடி இதுவும் வீட்டில் இருப்பதுதானே. முயற்சி செய்து பார்க்கலாமே? மூக்குக் கண்ணாடியைக் கொஞ்ச வயது ஆன பின்பு பயன்படுத்தலாமே.
மாரல்:
கம்ப்யூட்டராக இருந்தாலும் காதலராக இருந்தாலும் உற்று உற்றுப் பார்ப்பது, முறைத்து முறைத்துப் பார்ப்பது எல்லாம் நோய் நோக்கு.
அவ்வப்போது கண்களை இமைப்பது, கண்களுக்கு ஓய்வு கொடுப்பது, கண்களுக்கு மென்மையாக மசாஜ் செய்வது, தலைக்கு நல்ல எண்ணெய் வைத்து குளிப்பது, நோய் கண்ட போது மேலே சொன்ன மருத்துவத்தைச் செய்வது போன்றவை அந்நோய்க்கு மருந்து. வரட்டா....அடுத்த பதிவில் பார்க்கலாம்...
நன்றி குமுதம் ஹெல்த் ஸ்பெஷல்.

- நட்புடன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
ஆத்மா ஜோதிகா படத்த போட்டு கண்ண உரிட்டின உருட்டப் பாத்து
மிரண்டு ஆதிரா நீங்க கண்களைப் போற்று போற்றுன்னு
போற்றச் சொல்லி நல்ல செய்திகளை
நயம்பட சொன்னது நன்று...
உற்று உற்று பார்க்காதே
உருத்த உருத்தப் பார்க்காதேன்னு
நல்ல மெஸ்சேஜ் வேற சொல்லிட்டீங்க...

நட்புடன் - வெங்கட்
- நட்புடன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
வெகு சீக்கிரம் ஜன்னல் கம்பிகளைஇளமாறன் wrote:எனக்கென்னவோ இது காதலை வாழ வைக்க கண்களின் உதவிகள் என்பது போல தான் கட்டுரை இருக்கிறது
கண்களுக்கு நல்ல பயிற்சி வேண்டுமா எதிர் வீட்டு ஜன்னலை பாருங்கள்
என்ன வேண்டியது தான் - நடத்துங்க இளமாறன்...
நட்புடன் - வெங்கட்
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
நட்புடன் wrote:வெகு சீக்கிரம் ஜன்னல் கம்பிகளைஇளமாறன் wrote:எனக்கென்னவோ இது காதலை வாழ வைக்க கண்களின் உதவிகள் என்பது போல தான் கட்டுரை இருக்கிறது
கண்களுக்கு நல்ல பயிற்சி வேண்டுமா எதிர் வீட்டு ஜன்னலை பாருங்கள்
என்ன வேண்டியது தான் - நடத்துங்க இளமாறன்...
நட்புடன் தங்கள் அனுபவத்தை பகிர்ந்தமைக்கு நன்றி
சரியாச் சொன்னீங்க வெங்கட். புள்ள ஒன்னும் புரியது அலையுது பாருங்க..நட்புடன் wrote:வெகு சீக்கிரம் ஜன்னல் கம்பிகளைஇளமாறன் wrote:எனக்கென்னவோ இது காதலை வாழ வைக்க கண்களின் உதவிகள் என்பது போல தான் கட்டுரை இருக்கிறது
கண்களுக்கு நல்ல பயிற்சி வேண்டுமா எதிர் வீட்டு ஜன்னலை பாருங்கள்
என்ன வேண்டியது தான் - நடத்துங்க இளமாறன்...
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
பார்த்தாலும் தப்பு பார்க்கவிட்டாலும் தப்பாAathira wrote:சரியாச் சொன்னீங்க வெங்கட். புள்ள ஒன்னும் புரியது அலையுது பாருங்க..நட்புடன் wrote:வெகு சீக்கிரம் ஜன்னல் கம்பிகளைஇளமாறன் wrote:எனக்கென்னவோ இது காதலை வாழ வைக்க கண்களின் உதவிகள் என்பது போல தான் கட்டுரை இருக்கிறது
கண்களுக்கு நல்ல பயிற்சி வேண்டுமா எதிர் வீட்டு ஜன்னலை பாருங்கள்
என்ன வேண்டியது தான் - நடத்துங்க இளமாறன்...
கண்களுக்கு என்ன தான் வலிக்காம பயிற்சி கொடுப்பது
- நட்புடன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
கண்ண மூடிட்டு கும்பகர்ணன் மாதிரி தூங்கிடுங்கஇளமாறன் wrote:பார்த்தாலும் தப்பு பார்க்கவிட்டாலும் தப்பாAathira wrote:சரியாச் சொன்னீங்க வெங்கட். புள்ள ஒன்னும் புரியது அலையுது பாருங்க..நட்புடன் wrote:வெகு சீக்கிரம் ஜன்னல் கம்பிகளைஇளமாறன் wrote:எனக்கென்னவோ இது காதலை வாழ வைக்க கண்களின் உதவிகள் என்பது போல தான் கட்டுரை இருக்கிறது
கண்களுக்கு நல்ல பயிற்சி வேண்டுமா எதிர் வீட்டு ஜன்னலை பாருங்கள்
என்ன வேண்டியது தான் - நடத்துங்க இளமாறன்...
கண்களுக்கு என்ன தான் வலிக்காம பயிற்சி கொடுப்பது
தலைல வென்னீர கொட்டுற வர - என்னை பாட்டில பக்கத்துல
வெச்சுக்கோங்க - என்ன தேச்சு குளிச்சா நல்லதுன்னு சொல்லி இருக்காங்க...
நட்புடன் - வெங்கட்
எண்ணெய் பாட்டிலைப் பக்கத்துல வெச்சிக்கிட்டாவே க்ண்ணுக்கு நல்லதா வெங்கட்?நட்புடன் wrote:கண்ண மூடிட்டு கும்பகர்ணன் மாதிரி தூங்கிடுங்கஇளமாறன் wrote:பார்த்தாலும் தப்பு பார்க்கவிட்டாலும் தப்பாAathira wrote:சரியாச் சொன்னீங்க வெங்கட். புள்ள ஒன்னும் புரியது அலையுது பாருங்க..நட்புடன் wrote:வெகு சீக்கிரம் ஜன்னல் கம்பிகளைஇளமாறன் wrote:எனக்கென்னவோ இது காதலை வாழ வைக்க கண்களின் உதவிகள் என்பது போல தான் கட்டுரை இருக்கிறது
கண்களுக்கு நல்ல பயிற்சி வேண்டுமா எதிர் வீட்டு ஜன்னலை பாருங்கள்
என்ன வேண்டியது தான் - நடத்துங்க இளமாறன்...
கண்களுக்கு என்ன தான் வலிக்காம பயிற்சி கொடுப்பது
தலைல வென்னீர கொட்டுற வர - என்னை பாட்டில பக்கத்துல
வெச்சுக்கோங்க - என்ன தேச்சு குளிச்சா நல்லதுன்னு சொல்லி இருக்காங்க...
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Aathira wrote:எண்ணெய் பாட்டிலைப் பக்கத்துல வெச்சிக்கிட்டாவே க்ண்ணுக்கு நல்லதா வெங்கட்?நட்புடன் wrote:கண்ண மூடிட்டு கும்பகர்ணன் மாதிரி தூங்கிடுங்கஇளமாறன் wrote:பார்த்தாலும் தப்பு பார்க்கவிட்டாலும் தப்பாAathira wrote:சரியாச் சொன்னீங்க வெங்கட். புள்ள ஒன்னும் புரியது அலையுது பாருங்க..நட்புடன் wrote:வெகு சீக்கிரம் ஜன்னல் கம்பிகளைஇளமாறன் wrote:எனக்கென்னவோ இது காதலை வாழ வைக்க கண்களின் உதவிகள் என்பது போல தான் கட்டுரை இருக்கிறது
கண்களுக்கு நல்ல பயிற்சி வேண்டுமா எதிர் வீட்டு ஜன்னலை பாருங்கள்
என்ன வேண்டியது தான் - நடத்துங்க இளமாறன்...
கண்களுக்கு என்ன தான் வலிக்காம பயிற்சி கொடுப்பது
தலைல வென்னீர கொட்டுற வர - என்னை பாட்டில பக்கத்துல
வெச்சுக்கோங்க - என்ன தேச்சு குளிச்சா நல்லதுன்னு சொல்லி இருக்காங்க...
தினமும் என்னை தேய்ச்சு குளிச்சா சிவலோக பிரமோஷன் உடனடியாக கிடைக்குமாம்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» புத்தகம் போற்றுதும் விமர்சனம் நூல் : புத்தகம் போற்றுதும் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி, மதுரை. எழுத்தாக்கம் கவிஞர் ச. கோபிநாத்

» புத்தகம் போற்றுதும் விமர்சனம் ! நூல் : புத்தகம் போற்றுதும் ! ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் கொள்ளிடம் காமராஜ்!
» கண்களைப் பாதுகாக்க
» கண்களைப் பேணும் காய்கறிகள்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2