ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 9:20

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 9:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Today at 1:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:11

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:04

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 0:51

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 0:04

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:13

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:40

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:21

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:13

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 20:38

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:34

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:07

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:37

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 18:19

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 4 Oct 2024 - 17:52

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:39

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10

நிகழ்நிலை நிர்வாகிகள்

தர்ஷன் கவிதைகள்

4 posters

Page 7 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Go down

தர்ஷன் கவிதைகள் - Page 7 Empty தர்ஷன் கவிதைகள்

Post by j.tharsan Wed 19 Aug 2009 - 14:26

First topic message reminder :

காதல்


காதல் என்பது பார்வையின் மொழியே
கவிதை என்பது காதலின் மொழியே
கவிதையும் பார்வையும் வார்த்தைகள் பேசுமே
காதலும் நேசமும் உயிரினில் கலக்குமே-இது

காதல் தேசமடா-இங்கு
காதல் ஆட்சியடா-இது
காதல் வாழ்க்கையடா-இங்கு
காதல் சுவாசமடா

காற்றும் இங்கே கவிதை சொல்லுமே
கற்கள் கூட கனிகள் ஆகுமே
கானம் இசைக்கவே பூக்கள் மலருமே
காதலின் ஊடலை நிலவு ரசிக்குமே

இமைகள் அழைக்கவே மௌனம் பேசுமே
இதயம் பேசவே காதல் சிறகடிக்குமே
காதல் ஈர்ப்பிலே உலகம் அசையுமே
காதலர் மூச்சிலே உயிர்கள் பிறக்குமே

உறவு கொள்ளவே இளமை விரும்புமே
உயிரும் தீண்டவே உலகை மறக்குமே
ஒரு நொடி பிரிந்தாலே உள்ளம் வலிக்குமே
ஒரு உயிர் பிரிந்தாலே மறுஉயிர் மடியுமே
j.tharsan
j.tharsan
பண்பாளர்


பதிவுகள் : 104
இணைந்தது : 15/08/2009

Back to top Go down


தர்ஷன் கவிதைகள் - Page 7 Empty Re: தர்ஷன் கவிதைகள்

Post by j.tharsan Wed 19 Aug 2009 - 15:13

அம்மா கவனம்


அம்மா இந்த நாட்கள் எம்முடனேயே முடியட்டும்..
இனி எவரும் இப்படி வாழவேண்டாம் .
இவ்வாறு சாகவேண்டாம்.

உன்வைற்றில் உள்ள என் இளையவனோ இளையவளோ
நான் பட்ட துன்பம் நீபட்ட சிரமத்தை நினைக்கவே கூடாது!
இத் துன்பங்களும் அவர்களை நெருங்கவும் கூடாது!!
நாம் நெருங்க விடவும் கூடாது!

அப்பா இல்லை.இருக்கிறாரோ தெரியவில்லை!
இருந்தாலும் இனி மனிதனாக நடமாடக்கூடியதாக
அவர்கள் விட்டு வைத்துள்ளார்களா தெரியாது...???
ஆமி பிடிச்ச எதிர் வீட்டு மாமா திரும்பி வந்தபோது
அவர் வந்தது எவ்வாறு எனக்கு தெரியும்.!

அம்மா நீ கவனம் அதைவிட உன்னுள் உறங்கும்
என் இளையவர் மிகக்கவனம்.
இப்போ சிங்களவன் இலக்கு பிறக்காத குழந்தைகள் தான்.
அவர்களுக்கு விருப்பம் தமிழ் சிசுவின் கொலையும் தான்.
பதுங்கு குழிக்கு பக்கத்தில் இருந்து கொள் !
வானம் வெறுமையென்று வெளியில் வராதே!!
நிமிர்ந்தும் நடக்காதே.கண்ட உடன் சுடுவார் கயவர்

குழந்தைகளை நேசித்த நேத்தாயின் நாட்டார்.
வயிறுகாய விடாதே அவர்கள் பட்டினியால் துடிப்பார்.
தெரியும் ஒன்றும் இல்லை என்று கஞ்சி தன்னும் குடி
என்னை பற்றி கவலை வேண்டாம்.

மண்தின்று வளரும் மரமாக மாறிவிட்டடோம்
இல்லை மாற்றி விட்டார்.
நஞ்சற்ற கொடி எல்லாம் உணவு
கசப்பான உணவு கூட அமுது
மலம் கலக்கா நீரெல்லாம் குடிநீர்
மொத்தத்தில் காட்டு மரம் கூட கண்டு
அஞ்சும் காட்டு வாசிகளாக்கிவிட்டார்.

அம்மா என் அழுக்கு சட்டை கண்டு கலங்கும்
உன் கண்ணீர் துன்பத்திலும் வற்றாத உன் பாசம்.
சட்டையில் தான் அழுக்கு
இன்னும் என்னில் என் மனத்தில் இல்லை.

கயவர்கள் காலடி பட்ட நிலத்திற்கு நீ போகவிரும்பவில்லை
அதில் எனக்கும் விருப்பம் இல்லை.
இல்லை என்னும் ஒன்றுக்குள் நாம் வாழ்ந்து கொண்டுள்ளோம்
எதுவும் இங்கில்லை பணம் இல்லை பொருள் இல்லை!
மருந்தில்லை உணவில்லை நிம்மதி துளிக்கும் இல்லை!

தூங்கவும் விடவில்லை ஒன்று மட்டும் உள்ளது.
சுற்றவும் சாவும் அழுகையும் அவலமும்!
இது தொடராது தொடர விடவும் மாட்டார் நாம் இதுவரை நம்பியவர்.
உலகத்து உறவுகள் எப்போதும் கைவிடார்
அதுவரை உயிரைப்பிடிப்போம் இல்லை
எம் இறப்பில் எழுதப்படட்டும் பிந்திய ஈழத்தின் அத்தியாயம்...
j.tharsan
j.tharsan
பண்பாளர்


பதிவுகள் : 104
இணைந்தது : 15/08/2009

Back to top Go down

தர்ஷன் கவிதைகள் - Page 7 Empty Re: தர்ஷன் கவிதைகள்

Post by j.tharsan Wed 19 Aug 2009 - 15:14

விடுதலைத் தீயை அணைத்த அன்னை


மேகங்களைத் தொட்டுப்
பார்த்திருக்கிறேன்
மின்னல்கள் கண்களைப்
பறித்ததைப் பார்த்திருக்கிறேன்
சில்லென்ற சில பொழுகளை
களித்திருக்கிறேன்

நெருப்பு வானத்திற்குள் பறந்துவிட்ட
உங்கள் மனவலிமையைப் பார்த்து
விடுதலைத் தீயை அரவணைத்த
அன்னையே
உங்களைப்போல் என் மூச்சுள்ளவரை
உங்கள் நினைவுகளைச் சுமக்க
வைத்தவரில்லை

உங்கள் பிரிவுதனை நினைக்கும்
பொழுதெல்லாம்
என் இதயத் தழும்புகள்
மீண்டும் காயமாகும்

நங்கூரம் பாய்ச்சி நின்றே
அசைய மறுத்த
வல்லரசுப் பெரும் கப்பலின்
பெருநெருப்பினுள்
சிதைந்து நாமிருக்க

மண்ணின் விடுதலை என்ற
அந்த உன்னத விழுமியத்திற்காக

கலப்பையின் முனையை
உடைத்தெறியும்
மண்ணின் வைரம்போல்

மனம் கலங்காது மெய்யுணர்ந்து
கரும்பாறைகளும்
கசிந்து கண்ணீர்மல்க

உண்ணா நோன்பிருந்தே
இமயத்தை ஒருகணம்
அசையவைத்த தாயே

இதயத்துள் நுரைத்தெழுந்த
சுதந்திரத்தாகம்
உப்பி வெடித்துத் தெறிக்க

அந்நியன் ஆக்கிரமிப்பை
அகற்றிட எண்ணி
மண்ணின் விடியலுக்காக
தீராத தாகத்தால்

இந்திய இருதயத்தை ஒருமுறை
சிகிச்சை செய்யப்
புறப்பட்ட உங்களுக்கு
இருதயம் சிக்காமல் போனதால்

மரணத்தை மோதி நொருக்கிட
அகிம்சை என்ற மகுடம்
சூட்டிக்கொண்ட ராதபறவை நீங்கள்

உயிர்மூச்சோடு கலந்து
அதிலோர் வீரசுகம் கண்டு
எவருமே சந்தித்திராத
வரலஈற்றைப் பதித்துக்கொண்ட
அன்னை பூபதித் தாயே

மரணத்தை வரம் கேட்டா
அந்த உச்சித் தவம் நடந்தது
உயிர் தீக்குளிப்பல்லவா நடந்தது

தீக்குளிப்பில் இறங்கியபோது
அந்தத் தீ நாக்குகள் உச்சரித்த
வார்த்தைகள் என்ன?

இருண்டு கிடக்கும்
இதயக் கிழக்குகளில்
விடி சூரியன்களைக் காணவும்

தமிழீழ மக்களின் கண்ணீரை
சந்தோசத்தின் சமிக்கையாக
தரிசிக்கவும் தானே
அகராதி காண முடியாத
அர்த்தமுள்ள யாகம் நடந்தது

பாரதம் புனிதமாக எண்ணிய அகிம்சை

தாயே
உங்களுக்கு மட்டும்
ஏன்? வாய்மூடி மௌனமாகியது!

பேரலையிலும் கலங்காத
உங்கள் மனம்
மாமாங்கேஸ்வரர்
ஆலயமதில்

உண்ணா நோன்பில் புதையுண்டு
வேரோட நினைத்த பொழுதில்

கார்முகிலாக திரண்டு வந்த
மக்கள் விழிகளின் தேசமெங்கும்
பூத்த நீர்ப்பூக்கள்

பாதங்களின் பள்ளங்களில்
விழுகின்ற அளவு
விம்மி வெடித்து நின்றார்களே

பெண்களின் முதலான பெருமாட்டியே
உங்கள் கொள்கையின்
வலிமையை உரசிப் பார்க்க
இயலாதவர்கள் முன்னே

வெள்ளைப் புறாவைப்
பறக்கவைக்க
நினைத்த உங்கள் நினைவுகளே

உங்கள் உயிர் மூச்சாக
உருவெடுத்துப் பறந்து போனதோ
அதனால்தானே
தியாகத் தீயணைந்த அன்று
மயானத்தில் நீதிகள் புதைந்துபோனது

அன்னையே
இங்கே உங்களின்
திருவுருவப் படத்திற்கு
அஞ்சலி செலுத்த
வருகை தந்தோரெல்லாம்

அள்ளிச் சொரிந்த
பூக்களில் உள்ள தேன்களெல்லாம்
கண்ணீராக மாறி நிற்க

எங்கள் மனச் சிறைச்சாலையில்
உங்கள் ஞாபக மெழுகுவர்த்திகள்
எப்போதும் எரிந்து கொண்டிருக்கும்

சூரிய நெருப்பில் நழுவிய துளி
புமியென்றால்
அந்தத் துளியின் இன்னொரு பொறி
தேசியத்தலைவன்

திசைகளெல்லாம் இடம்மாறும்படி
திடுக்கிடவைக்கும் தீரன் காலத்தில்
கிழக்கு ஒருபோதும் இருள் கட்டாது

கருவிலே கயமை கொண்டவர்கள்
கோடி கோடியாக எரி குண்டுகள் வீசினாலும்
அங்குல எலும்பு கூட
அகப்படாது அழித்தொழித்து
வெற்றி காண்பான் என்பதே உண்மை

மரங்களிலிருந்து
கலைந்து பறக்கும் பறவைகளாக
அலைந்து திரியும் மக்கள்
இரக்கமில்லா இரவுகளில்
விம்மிப் புலம்பி
விழிசெத்துக் கிடந்து
வெம்பித் துடித்தழுது
வேதனையில் நனைந்து
வெறுமையை
வயிறு உணர்ந்து பார்க்க

மில்லிக்கிராமில் உணவை அளந்து
மென்று தின்னும்
எங்கள் இனத்தைப் பார்த்தும்

பேசாதிருக்கும் பிரபஞ்சமே
எங்கள் வாழ்கையும்
விரைவில் புத்தகமாகும்
அதற்கு முன்னுரை எழுத
நீங்கள் முன் வருவீர்கள்

தீதறியாத் தாயே
திருவிளக்கின் முடியிருக்கும் ஒளியே

வீரியப் படுத்திய அகிம்சை வழிவந்து
வீச்சாக நாம் வாழ்ந்திட
மூச்சான அன்னை பூபதித் தாயே

விடுதலைத் தீயை அரவணைத்து
நிகரில்லாப் புகழ் தாங்கிய
உங்கள் கனவுகளும் அதுதானே

உங்கள் எண்ணத்தில்
உதித்த தமிழீழத்தின்
பிரசவத்தை யாராலும் தடுக்கமுடியாத :suspect: :suspect: அன்பு மலர்
j.tharsan
j.tharsan
பண்பாளர்


பதிவுகள் : 104
இணைந்தது : 15/08/2009

Back to top Go down

தர்ஷன் கவிதைகள் - Page 7 Empty Re: தர்ஷன் கவிதைகள்

Post by j.tharsan Wed 19 Aug 2009 - 15:16

நெஞ்சமென்னும் ஓர் உறையில்

நெஞ்சம் நிறைய வந்தவளே
உந்தன் முகம் நானும் கண்டேன
தினம் தினம் உந்தன் நிழல்
தொட்டதெடி எந்தன் நெஞ்சில்

காலங்கள் மாதங்கள்
வருடங்கள் கடந்ததெடி
வாழ்க்கையின் துயரத்தில்
வாழ்வதென்ன பாவமெடி
வாழ்ந்திருந்தேன் காத்திருந்தேன்
வந்ததெடி உந்தன் பாதம்

காலைத் தென்றல் வீசிவர
கைபிடித்த சலங்கைகள்
காவியம் பாடிடுமோ
காதலின் வேதனைகள்
காவியமாய் கூடிடுமோ

போனது போகட்டும்
எனைநீ புரிந்திருந்தாய்
உந்தன்குரல் எந்தன் செவியோரம்
பாடிடுமே நீ சிரித்தால்
கேட்டதெடி கேட்குமெடி
காலமெல்லாம் வேதனைகள்
கண்களிலே நீர்த்துளிகள்
j.tharsan
j.tharsan
பண்பாளர்


பதிவுகள் : 104
இணைந்தது : 15/08/2009

Back to top Go down

தர்ஷன் கவிதைகள் - Page 7 Empty Re: தர்ஷன் கவிதைகள்

Post by j.tharsan Wed 19 Aug 2009 - 15:17

என்னடா நீ...!


அவகாசங்கள் தந்திருக்கிறேன் உனக்கு.
தருணங்களைத் தாரை வார்த்துவிட்டு
ஒன்றுமே தெரியாதவன்போல்
அண்ணாந்து வானத்துத் தாரகைகளோடு
கதைபேசியபடி நீ.
பிறகு எதற்கு நான் உனக்கு.
கொலை செய்யவும் தயங்கமாட்டேன்
உன்னை நான்.

சொல்...முதலில் சொல்
நான் உன்னைக் காதலிக்கிறேன் என்று சொல்.
ஒரு போதுமே சொன்னதில்லை
இத்தனை காலங்களில் ஒருமுறையாவது.
முத்தத்தின் சத்தத்தால்
என் அறை நிரப்பும் உனக்கு
என் செவிப்பறை புகுந்து
அன்பே என்று சொல்ல மட்டும்
தயக்கம் ஏன்?

அன்பின் ஆழச் சுவடுகளை
அதிகம் பதித்தவன் நீதான்.
முட்டி மோதி...முட்டி மோதி
மீண்டும் மீண்டும் முனையும் அலையாய்
மனதைத் தந்தவன் நீதானே!

கண்ணுக்குள் கண்டதில்லை உன் காதலை.
கடதாசியில் கண்டதில்லை உன் காதலை.
வார்த்தைகளில் பார்த்ததில்லை.
வரும் குறும் செய்திகளிலும் வருவதில்லை.
என்றபோதும்...நீ
என்னை விட்டு விலகியதும் இல்லை.

காதலின் மொழி தெரியாத
மூடனா நீ...முட்டாளா நீ.
அன்பே...
நீ மட்டும்
இதய இருட்டறைக்குள்
தனியாய் பேசிக்கொண்டால்
எட்டுமா என் செவிவரை.

இனியவனே சொல்.
இனியாவது சொல்.
என் செவியோடு ஒரு முறை சொல்.
நீயே என் இதயம் எனச் சொல்.
நீயே என் உயிரடி என்று சொல்.
சொல்லிவிடு என் செல்வமே.

இதயக் கூட்டைவிட்டு
என் பிராணன் பிரியும் முன்
சொல்லிவிடு.
பிரியமானவனே காத்திருக்கிறேன்.
காத்திருப்பின் அவகாசங்களும்
சில சமயம் தூரமாக முன்!!!


மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
j.tharsan
j.tharsan
பண்பாளர்


பதிவுகள் : 104
இணைந்தது : 15/08/2009

Back to top Go down

தர்ஷன் கவிதைகள் - Page 7 Empty Re: தர்ஷன் கவிதைகள்

Post by j.tharsan Wed 19 Aug 2009 - 15:18

என் இதயமே எங்கே நீ வாழ்கிறாய்....???







என் விழிகளை மூடும் போது
உன் விழிகள் என்னை
வேதனையோடு பார்க்கிறது
நம் பாசத்தின் ஊற்றுக்கள்
பல படிக்கட்டுக்களாகி
பரிணாமம் பெற்றது
பாடசாலையின் நினைவுகளை
பசுமையாக மீட்கிறேன்

நீ பேசிய வார்த்தைகள் ஒவ்வொன்றும்
எவ்வளவு மென்மையானவைகள்
அந்த வார்த்தைகள் ஒவ்வொன்றும்
என்னை வடுக்களாக்கி வதைக்கிறது
நெருப்பாகக் கொதிக்கிறது

நீ பார்த்த பார்வைகள்
என்னை ஏங்கவைத்து
என் இதயத்தை ரணங்களாக்கி
இரத்தம் கசிய வைக்கிறது.

உன் நினைவுகள் ஒவ்வொன்றும்
என் இதயத்தில் பதியவில்லை
பாசத்துடன் இரத்தத்தில் ஓடுகிறது
உன் கூந்தலும் இமைகளும்
கண்களும் கன்னங்களும்
கைவிரல்களும் செயல்களும்
நடையும் பேச்சும்
நாணமும் சிரிப்பும்
உதடும் நாடியும்
உள்ளமும் எண்ணமும்
உன் அங்கங்கள் ஒவ்வொன்றும்
என்னிடம் கதை பேசுகிறது

பிரிவின் துயரத்தை எண்ணி
கண்ணீர் வடிக்கிறது
உன் பாசத்தை சுமந்த நான்
இன்று வேதனையை சுமக்கிறேன்

சேராமையின் வலி என்னை சாகடிக்கிறது
என் இதயமே எங்கே நீ வாழ்கிறாய்?
சேரவேண்டிய நாம் சேராமல் போனது ஏன்?

நீ எங்கே வாழ்கிறாய் என்பது
எனக்கு தெரியாது.....ஆனால்
என் இதயத்தில் நீ வாழ்கிறாய் என்பதும்
உனக்குப் புரியும்.

நான் எங்கே வாழ்கிறேன் என்பது
உனக்குத் தெரியாது.....ஆனால்
உன் இதயத்தில் நான் வாழ்கிறேன் என்பதும்
எனக்குப் புரியும்.

நம் காதலையும் இனிய நினைவுகளையும்
நான் தொலைக்கவில்லை.
ஒவ்வொரு நினைவுகளையும்
நான் பொக்கிசங்களாய் சேர்த்து வைத்திருக்கிறேன்
என் இதயமே எங்கே நீ வாழ்கிறாய்?
j.tharsan
j.tharsan
பண்பாளர்


பதிவுகள் : 104
இணைந்தது : 15/08/2009

Back to top Go down

தர்ஷன் கவிதைகள் - Page 7 Empty Re: தர்ஷன் கவிதைகள்

Post by j.tharsan Wed 19 Aug 2009 - 15:18

உன்னோடு என் உறவு



பலநூறு பல்புகளின் நடுவில்
வெண்ணிலாவே!
உன்னொளியை நான்
உற்றுப் பார்க்கின்றேன்….
ஏனென்று அறிவாயா??

என் வீட்டு முற்றத்தில்
அப்பாவும் அம்மாவும்
அக்கா மகனிற்கு
பால் நிலவே உனைக்காட்டி
பாய் விரித்து சோறூட்டுவார்கள்

கதவுக்கு அருகிலே
கையதை நிலத்திலூன்றி
குப்பிவிளக்கிலே
கொப்பியை புரட்டுவாள் என் தங்கை
மதியே நீ கொடுப்பாய்
பாதி ஒளி அவளுக்கு!

காவலரணிலே காவலிருக்கின்ற
என் அக்கா கடமை செய்ய
நீ துணையிருப்பாய்!

நிசப்த இரவுகளின்
நிலவே உன் வெளிச்சம்
என் அத்தானின்
நெடுந்தூர களப்பயணத்துடனும்!

மின்சாரம் இருப்பதனால்
இந்நாட்டில் ஏசி யும் டிசி யும்
எனக்கு ரொம்பவே இருந்தும்
வட்ட நிலவே……….
உன் வருகைக்காக
காத்திருக்கிறேன்!!!
தவறாமல் வந்துவிடு
என் உறவுகளின்
நிலையினை சொல்லிவிடு.
j.tharsan
j.tharsan
பண்பாளர்


பதிவுகள் : 104
இணைந்தது : 15/08/2009

Back to top Go down

தர்ஷன் கவிதைகள் - Page 7 Empty Re: தர்ஷன் கவிதைகள்

Post by j.tharsan Wed 19 Aug 2009 - 15:20

விதவையான வெள்ளைத்தாள்....!


உண்மைக்குத் திரையும்
பேனாக்களுக்கு
சிறையும் போட்டாயிற்று...!

கைவிலங்குகளில்
தூக்குப் போடும் கரங்கள்.
முகவுரை எழுத முன்னமே
முடிவுரை கேட்கும்
அரசியல்
இப்படித்தான் இங்குள்ள நிலமை ...

எங்கள் தாள்கள்
வெள்ளையாக இருப்பதையே
இவர்கள் விரும்பித் தொலைக்கிறார்கள்
மீறி எழுதினால்
எங்களின் தாலிக்குரியவர்கள்
வெள்ளைச் சேலையிலே உலாவருவார்களென
சபிக்கிறார்கள்.

குற்றங்களைக் காட்டலாம்
ஆனால்
குற்றவாளிகளை சுட்டக்கூடாது
தவறினால்
மைக்குப் பதிலாக
பேனாக்களின் வாய்கள் இரத்தமே சிந்தும்.

கலீலியோ போலவே
சரியானதை பிளையென்று ஏற்க்கும்
பெருந்தன்மை இங்கே தேவையாயிருக்கிறது.
இல்லையெனின்
பேனாவுக்குள்ளே ஊற்றப் பட்டிருக்கும்
உயிர்க் காற்று
வெளியே கசிந்துவிடுகிறது....
j.tharsan
j.tharsan
பண்பாளர்


பதிவுகள் : 104
இணைந்தது : 15/08/2009

Back to top Go down

தர்ஷன் கவிதைகள் - Page 7 Empty Re: தர்ஷன் கவிதைகள்

Post by j.tharsan Wed 19 Aug 2009 - 15:20

சரியான முடிவு!


விடிந்தாலும்
எழுதி
இருண்டாலும்
எழுதி
நின்றாலும்
எழுதி
இருந்தாலும்
எழுதி
எழுதியெழுதி
என் ஆயுள்
காலத்தை
அழகாக்கினேன்

பயணம்
போகும் போதும்
வாசித்து
படுக்கைக்குப்
போகும் போதும்
வாசித்து
கிடைக்கும்
சின்ன ஆறுதல்
நேரத்திலும்
வாசித்து
வாசித்து வாசித்து
என் சுவாசத்தில்
சுகம் உண்டாக்கிக்
கொண்டேன்

மேடையில்
கவிதை சொல்லி
வானொலியில்
கவிதை சொல்லி
போட்டியில்
கவிதை சொல்லி
பேட்டியில்
கவிதை சொல்லி
கவிதை சொல்லிக்
கவிதை சொல்லி
பல இதயங்களில்
இடம் பிடித்தேன்

சமூகத்திற்காகப்
பாடுபட்டு
தேசத்திற்காய்
பாடுபட்டு
காதலுக்காய்
பாடுபட்டு
குடும்பத்திற்காய்
பாடுபட்டு
பாடுபட்டுப்
பாடுபட்டு
எதிலும் பயன்
இல்லாமல்
கடைசியாய்
மருத்துவப் படுக்கைக்கு
வந்து விட்டேன்

இனி
மணி பார்த்து
மாத்திரை போடுவதை
நிறுத்தி விட்டு
இந்த உலகத்திற்கு
நன்றி வணக்கம்
சொல்வது தான்
சரியான முடிவு!
j.tharsan
j.tharsan
பண்பாளர்


பதிவுகள் : 104
இணைந்தது : 15/08/2009

Back to top Go down

தர்ஷன் கவிதைகள் - Page 7 Empty Re: தர்ஷன் கவிதைகள்

Post by j.tharsan Wed 19 Aug 2009 - 15:21

இயேசு பிறந்த நாளில் இத்தனை கொடுமையா?


இயேசு பிறந்த நாளதனில்
இலங்கா இட்ட கொடுமையில்
இயேசு பிறந்த தொழுவத்தில்
இறந்த பசுக்கள் பாருங்கடா
இயேசு வணக்க நேரத்தில்
இன்னும் உலகம் உறக்கத்தில்
இயேசு உதித்தார் மீட்புக்காய்
எங்கள் தமிழர் இறப்புக்காய்..!

கொத்தாய் வீழும் குண்டெறியும்
கொடியர் மகிந்தக் கூட்டத்தார்
நத்தார் பார்த்துக் கொலையெறியும்
நரியர் செயல்கள் போகவில்லை
புத்தி மாந்தன் யோசப்பை
போட்டார் முன்னர் இந்நாளில்
யுத்த ராச பக்சாக்கள்
உமிழும் கொடுமை நீண்டதுவோ?

இலங்கக் கொடுமை நீளுவதோ?
இராச பக்சர் ஆளுவதோ?
கலங்க அடிக்கத் தமிழர்கள்
கதறி நாளும் வீழுவதோ?
மலங்க மலங்க இழுக்கின்றார்
மதத்த படியே கொல்கின்றார்
மலத்தை உண்ணும் தமிழர்கள்
மடியில் வைத்துக் கொல்கின்றார்!

உலகம் எதுவும் வருவதுவாய்
இறந்த பசுவும் காண்கலையே
கலத்தில் இந்தி(ய)க் காட்டெருமை
கக்கம் இருந்தே உசுப்பிவிடும்
பலத்தில் யுத்த பகவானும்
பார்த்துப் பார்த்துக் கொல்லுகிறான்
குலமாய்த் தமிழன் எழுவதொன்றே
கூற்றம் வெல்ல நாளிருக்கும்!
j.tharsan
j.tharsan
பண்பாளர்


பதிவுகள் : 104
இணைந்தது : 15/08/2009

Back to top Go down

தர்ஷன் கவிதைகள் - Page 7 Empty Re: தர்ஷன் கவிதைகள்

Post by j.tharsan Wed 19 Aug 2009 - 15:22

புது வாழ்வு!







சலனங்கள் ஏதுமின்றி எம்
சரித்திரத்தில் இடம் பிடித்து
மரணங்கள் பலவற்றை எம்
மனதுக்குள் விதைத்து விட்டு
விரதங்கள் பல இருந்து
விடிவுகள் பல பெற்று
சிகரங்கள் போல(ப்) பாரில்
சிறப் போடிருந்த வாழ்வை
கரகங்கள் பல ஆடி(க்)
கணப் பொழுதில் அழித்து
திரை போன்ற உன் அலையால் எமை(த்)
தீயிலிட்ட கடலலையே!
பாலகன் யேசு இப்
பாரினில் உதித்து
ஞாலங்கள் சிறக்க
நல் வழி காட்டிட;
ஏர்களைப் பூட்டி
எருமையை விரட்டி(த்)
தேரினை இழுத்து(த்)
தேகங் குளிர்ந்திட(த்)
தீமையை மறந்து
ஊரவர் கூடி எம்
உறவைப் பகிர்ந்ததும் மார்கழியில்!
இத்தனை சிறப்பும் மார்கழியே
இப் பூமி தனில் உனக்கிருக்க
பத்தியம் ஏது மின்றி இப்
பாரினில் உள்ள மக்களின்
சொத்துக்கள் தனை அழித்து(ச்)
சொப்பனம் காண வைத்து
நித்தமும் எம்மவரை
நிராதரவாய் விட்டு விட்டாயே!
'உத்தமர் வல்லவர் நிதம்
உதவிகள் பல புரிந்தும்
செத்துமே போய் சேர்ந்திட்ட உயிர்கள்
செம்மையாய் இங்கு வந்திடுமா???
'மாண்ட உயிர்கள் மேல்
மனதைத் தொட்டுச் சொல்லுங்கள்!
மீண்டும் எம் தேசமதை மிடுக்குடன் ஒளிர வைத்து(ப்)
புதுப் பானை எடுத்துப் பல பொங்கலிட்டு
பூமாலை பல கட்டிப் பூக்கோலம் பல போட்டு(ப்)
புது வாழ்வு வாழ்ந்து
புறங் கூறல் தனை மறந்து
இது போதும் என்று இனிதாக உனக்குணர்த்தி எம்
இதயத்தின் மிடுக்குடன்
இனிதாக உனக்கு எங்கள் உதயத்தை உணர வைப்போம்; இதை
உறுதியாய்(ச்) சொல்லி நிற்போம்!
பண்புடன் நிதம் வாழ்ந்து
பகைமைகள் பல மறந்து
விண்ணினைத் தொடுகின்ற பெரு
விருட்சமாய் வேரூன்றி
மண்ணிலே நல்லவராய் மகிழ்வுடன்
மகிழ்வுடன் நிதம் வாழ்ந்து
சதிரான உன் அலையை(ச்)
சற்றே சிந்திக்க வைத்து(ப்)
புது வாழ்வு வாழ்ந்து; பூமியில்
புத்துயிர் பெற்றெழுவோம்!
j.tharsan
j.tharsan
பண்பாளர்


பதிவுகள் : 104
இணைந்தது : 15/08/2009

Back to top Go down

தர்ஷன் கவிதைகள் - Page 7 Empty Re: தர்ஷன் கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 7 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum